LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-59

4.059.திருஅவளிவணல்லூர் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர். 
தேவியார் - சவுந்தரநாயகியம்மை. 
568 தோற்றினா னெயிறு கவ்வித்
தொழிலுடையரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச்
சிக்கெனத்தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி
வெடுவெடுத் தெழுந்தவன்றன்
ஆற்றலை யழிக்க வல்லா
ரவளிவ ணல்லூராரே.
4.059.1
தீத்தொழிலை உடைய இராவணன் கோபத்தால் தன் பற்கள் உதட்டைக் கவ்வ வெகுட்சியடைந்த போது அவன் கோபத்தைத் தணிக்க வேண்டித் தேரோட்டி உறுதியாகக் கோபத்தை விடுக்குமாறு சொல்ல, தற்பெருமை உடையவனாகிக் கயிலையைப் பெயர்க்க விரைந்து எழுந்த அவனுடைய ஆற்றலை அழித்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
569 வெம்பினா ரரக்க ரெல்லா
மிகச்சழக்காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில்
சிக்கெனச்சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி
நன்மையான்மிக்கு நோக்கி
அம்பினா லழிய வெய்தா
ரவளிவ ணல்லூராரே.
4.059.2
இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்தசெயல் பெரிய குற்றமாயிற்று. ஆதலால் அச் செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நன்மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்டினாராக, 'நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்' என்று விரும்பி நோக்கி, இராமபிரான் அம்பினால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமானாவார்.
570 கீழ்ப்படக் கருத லாமோ
கீர்த்திமையுள்ள தாகில்
தோட்பெரு வலியி னாலே
தொலைப்பனான்மலையை யென்று
வேட்பட வைத்த வாறே
விதிர்விதிர்த்தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கா
ரவளிவ ணல்லூராரே.
4.059.3
புகழாந் தன்மை என்மாட்டு இருக்குமாயின் எந்நிலையிலும் அப்புகழ் கீழ்ப்பட நினைக்கலாமோ? 'என் தோள் வலிமையாலே இம்மலையை இடம் பெயர வைக்கிறேன்' என்று தன் விருப்பம் நிறைவேற இராவணன் செயற்பட்ட அளவிலே அவன் நடுநடுங்கி விழுந்து அடியவனாகுமாறு கருதி விரலால் அழுத்திய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
571 நிலைவலம் வல்ல னல்ல
னேர்மையைநினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன்
சீரிய கயிலைதன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத்
தாக்கினான்றன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தா
ரவளிவ ணல்லூ ராரே.
4.059.4
நிலைத்த வெற்றியை அடையவல்லவன் அல்லனாய், நேர்மையை நினைக்காமல், வில்லின் வெற்றியைக் கொண்ட செல்வராய தம்முடைய கயிலைமலையைத் தலைகளின் வலிமையை நினைத்துப் பெயர்க்க முற்பட்ட இராவணனை அன்று உடல் வருந்திச் குலையக் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
572 தவ்வலி யொன்ற னாகித்
தனதொருபெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று
மிகப்பெருந்தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழி(ய்)யாற்
சிரம்பத்தாலெடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லா
ரவளிவ ணல்லூராரே.
4.059.5
குறைந்த வலிமையை உடையவனாய் இருந்தும், செருக்கினாலே தன்னை உண்மையான வலிமை உடையவன் என்று கருதி மிகப் பெரிய தேரை ஊர்ந்து சென்று சிவந்த கொடிய கூர்மையான விழிகளால் கயிலையை நோக்கித் தன் பத்துத் தலைகளாலும் அதனைத் தூக்க முற்பட்ட இராவணனுடைய வலிமையைப் போக்கிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
573 நன்மைதா னறிய மாட்டா
னடுவிலா வரக்கர்கோமான்
வன்மையே கருதிச் சென்று
வலிதனைச்செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக்
கருதித்தா னெடுத்துவாயால்
அம்மையோ வென்ன வைத்தா
ரவளிவ ணல்லூராரே.
4.059.6
நியாய உணர்வில்லாத இராவணன் தனக்கு நன்மையாவது இன்னது என்று அறிய இயலாதவனாய், தன் உடல் வலிமையையே பெரியதாகக் கருதித் தன் வலிமையைச் செயற்படுத்த முற்பட்டு, கல்லாந் தன்மையுடைய மலையை ஓடிச்சென்று தூக்கமுற்பட்டு வருந்தி, வாயினால் அம்மையோ என்று அலற வைத்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகிறார்.
574 கதம்படப் போது வார்கள்
போதுமக்கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்
சிக்கெனத்தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி
வன்மையான்மிக்குநோக்க
அதம்பழத் துருவு செய்தா
ரவளிவ ணல்லூராரே.
4.059.7
'சிவபெருமான் வெகுளும் வகையில் அவனை எதிர்த்துச் செயற்படுபவர்கள் அழிந்து விடுவார்கள் என்ற எண்ணத்தால் இதற்கு முன் எல்லாச் செயல்களிலும் வெற்றியையே அடைந்த தாங்கள் தோல்வி தரக்கூடிய இச்செயலைத் தவிர்த்து விடுங்கள்' என்ற தேரோட்டி சொல்லை மதியாது செருக்குக் கொண்ட மனத்தினனாய்த் தன் உடல் வன்மையால் கயிலையைப் பெயர்க்க மிகவும் முயல, அவ்விராவணன் உடம்பை அத்திப்பழம் போலச் சிவந்தும் குழைந்தும் நசிந்தும் போகுமாறு செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
575 நாடுமிக் குழிதர் கின்ற
நடுவிலாவரக்கர் கோனை
ஓடுமிக்கென்று சொல்லி
யூன்றினானுகிரி னாலே
பாடிமிக் குய்வ னென்று
பணியநற் றிறங்கள்காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டா
ரவளிவ ணல்லூராரே.
4.059.8
பலநாடுகளிலும் சுற்றித் திரிந்த நியாய உணர்வில்லாத இராவணனை இவ்விடத்தை விட்டு விரைந்தோடு என்று அதட்டிக் கால்விரல் நகத்தினாலே அவனை ஊன்ற, நசுங்கிய அவன் மிகுதியாகப் பாடி உயிர் பிழைப்பேன் என்று எண்ணி பாடிப் பணிய அவனுக்குப் பலநன்மைகளைச் செய்தவராய்ப் படமெடுத்து ஆடும் பாம்புகளை மிகுதியாக அணிந்தவராகிய பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
576 ஏனமா யிடந்த மாலு
மெழிறரு முளரியானும்
ஞானந்தா னுடைய ராகி
நன்மையையறிய மாட்டார்
சேனந்தா னிலாவ ரக்கன்
செழுவரை யெடுக்க வூன்றி
ஆனந்த வருள்கள் செய்தா
ரவளிவ ணல்லூ ராரே.
4.059.9
பன்றி வடிவெடுத்துப் பூமியைத் தோண்டிச் சென்ற திருமாலும், அழகிய தாமரையில் உறையும் பிரமனும் ஞானம் உடையவராய்த் தமக்கு நன்மை எது என்று அறியமாட்டாதவராய் இருந்தனர். பருந்துபோலப் பல இடங்களிலும் உலாவும் தன்மையை உள்ள இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க அவனை அழுத்திப் பின் அவனுக்கு மகிழ்ச்சி தரும் அருள்களைச் செய்த பெருமான் அவளிவணல்லூரில் உறைகின்றார்.
577 ஊக்கினான் மலையை யோடி
யுணர்விலாவரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே
தலைபத்துந்தகர வூன்றி
நோக்கினா னஞ்சத் தன்னை
நோன்பிறவூன்று சொல்லி
ஆக்கினா ரமுத மாக
வவளிவ ணல்லூராரே.
4.059.10
ஓடிச் சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அறிவில்லாத இராவணனைக் கால்விரலால் அழுத்திப் பத்துத்தலைகளும் நொறுங்கச் செய்து அவன் அஞ்சுமாறு அவனுடைய நோன்பின் பயன்களுங் கெட நோக்கிய பெருமான் பின் அவனை அழுத்தியதால் ஏற்பட்ட துயரைப் போக்கி அமுதம் போல் உதவி அவனை அழியாமற் காத்தார் அவளிவணல்லூரார்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.