LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-64

4.064.திருவீழிமிழலை 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வீழியழகர். 
தேவியார் - சுந்தரகுசாம்பிகை. 
619 பூதத்தின் படையர்பாம்பின்
பூணினர் பூணநூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட்
கொழுந்தர்நஞ்சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த வோசைக்
கேள்வியர்வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.1
பூதத்தின் படையினராய், பாம்பாகிய அணிகளை உடையவராய், பூணூலை அணிந்தவராய், குளிர்ச்சி, மிகுந்த பிறையைச் சூடியவராய், விடம் பொருந்திய கழுத்தினராய், பாடலோடு பொருந்திய ஓசைச் சிறப்பை உடைய வேதம் ஓதுபவராய், வேள்வியை ஆள்பவராய் வேதத்தின் பொருளராய் வீழிமிழலையில் விகிர்தராம் இயல்புள்ள சிவபெருமான் விளங்குகிறார்.
620 காலையிற் கதிர்செய் மேனி
கங்குலிற்கறுத்த கண்டர்
மாலையில் மதியஞ் சேர்ந்த
மகுடத்தர்மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல
வண்ணித்திட்டடியார்க் கென்றும்
வேலையி னமுதர் வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.2
காலை ஞாயிற்றின் ஒளியை உடைய திருமேனிய ராய், இரவு இருள் போலக் கறுத்த கழுத்தினராய், மாலையில் தோன்றும் பிறையணிந்த சடை முடியினராய், தேனும் பாலும் கரும்பின் பாகும் கடலில் தோன்றும் அமுதமும் போல அடியவர்களுக்கு இனிப்பை நல்குபவராய் வீழிமிழலையில் உள்ள விகிர்தனார் விளங்குகிறார்.
621 வருந்தின நெருந லின்றாய்
வழங்கின நாளராற்கீழ்
இருந்துநன் பொருள்க ணால்வர்க்
கியம்பினரிருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பாற்
பொய்யராமவர்கட் கென்றும்
விருந்தினர் திருந்து வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.3
நாளை, நேற்று, இன்று என்னும் முக்காலத்தும் இருப்பவராய், ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மேம்பட்ட செய்திகளை முனிவர் நால்வருக்கு இயம்பியவராய், திருமாலோடும் பிரமனோடும் பொருந்தியவராய், தம்மை மறந்து தம்மிடம் பொய்யாக நடந்து கொள்பவருக்குத் தம்மை உள்ளவாறு அறிய இயலாத புதியவராய் வீழிமிழலை விகிர்தர்விளங்குகிறார்.
622 நிலையிலா வூர்மூன் றொன்ற
நெருப்பரிகாற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங்
கொண்டவர்தேவர் தங்கள்
தலையினாற் றரித்த வென்புந்
தலைமயிர்வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.4
எங்கும் இயங்கிக் கொண்டிருந்த மும்மதில்களை அக்கினி, திருமால், வாயு இவர்களை உறுப்பாகக் கொண்ட அம்பு, மலையாகிய வில், பாம்பாகிய நாண் இவற்றைக் கொண்டு அழித்தவராய்த் தேவர்களின் தலைமாலையும், தலைமயிராலாகிய பஞ்சவடி என்னும் பூணூலும் அணிந்தவராய், யாரும் விலை மதித்தற்கில்லாத வேடத்தை உடையவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார்.
623 மறையிடைப் பொருளர் மொட்டின்
மலர்வழி வாசத்தேனர்
கறவிடைப் பாலி னெய்யர்
கரும்பினிற்கட்டியாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப்
பிணையல்சேர்சடையு ணீரர்
விறகிடைத் தீயர் வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.5
வேதத்தின் விழுமிய பொருளாக உள்ளவராய், அரும்பு பூக்கும்போது வெளிப்படும் மணமுடைய தேனாகியவராய், கறக்கும் பசுவின் பாலில் கரந்து எங்கும் பரந்திருக்கும் நெய் போன்றவராய், கரும்புச்சாற்றின் கட்டிபோன்று இனியராய், பிறை, பாம்பு, கொன்றைமாலை இவற்றைத் தரித்த சடையில் கங்கை நீரை ஏற்றவராய், விறகிடை மறைந்து பரந்திருக்கும் தீப்போலக் கரந்து எங்கும் பரந்தவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார்.
624 எண்ணகத் தில்லை யல்ல
ருளரல்ல ரிமவான்பெற்ற
பெண்ணகத் தரையர்காற்றிற்
பெருவலியிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரி
னால்வர்தீயதனில் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.6
எண்ணும் எண்ணத்திலே இல்லாதவரும் அல்லராய், உள்ளவரும் அல்லராய், பார்வதி பாகராய், விண்ணில் ஒலிப்பண்பினராய்க் காற்றில் ஒலி ஊறு என்ற இரு பண்பினராய், தீயிடை ஒலி ஊறு ஒளி என்ற மூன்று பண்பினராய், நீரிடை ஒலிஊறு ஒளி சுவை என்ற நாற்பண்பினராய், மண்ணில் ஒலி ஊறு ஒளி சுவை நாற்றம் என்ற ஐந்து பண்பினராய் வீழிமிழலை விகிர்தனார் உள்ளார்.
625 சந்தணி கொங்கை யாளோர்
பங்கினார்சாம வேதர்
எந்தையு மெந்தை தந்தை
தந்தையு மாயவீசர்
அந்தியோ டுதய மந்த
ணாளரா னெய்யால்வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.7
சந்தனத்தை அணிந்த தனங்களை உடைய பார்வதி பாகர், சாமதேவர், அடியேனுக்குத் தந்தையாராகவும் பாட்டனாராகவும் முப்பாட்டனாராகவும் உள்ளவர். காலை சந்தியிலும் மாலை அந்தியிலும் அந்தணாளர்கள் நெய்யால் வேள்வி செய்யும் விரும்பத் தக்க தீயின் உருவர் என இவ்வாறு வீழிமிழலை விகிர்தனார் உள்ளார்.
626 நீற்றினை நிறையப் பூசி
நித்தலா யிரம்பூக்கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று
குறையக்கண்ணிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி
யவன்கொணர்ந்திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.8
திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்தகாலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில்தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவியகோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார்.
627 சித்திசெய் பவர்கட்கெல் லாஞ்
சேர்விடஞ்சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம்
பறிப்பவ ரிறப்பிலாளர்
முத்திசெய் பவள மேனி
முதிரொளிநீல கண்டர்
வித்தினின் முளையர் வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.9
சித்தியை விரும்புவார்தாம் தாம் சேர்விடஞ் சென்றுகூட வைத்தும் பத்தி செய்பவர்களின் பாவத்தை விலக்கியும் பக்குவர்க்கு முத்தி வழங்கியும் அருள்பவர் பவளம்போல் மேனியும் ஒளியின் முதிர்ந்த நீலகண்டரும் வித்தின் முளைபோல் வாருமாய் உள்ள திருவீழிமிழலை விகிர்தனாரே.
628 தருக்கின வரக்கன் றேரூர்
சாரதி தடை நிலாது
பொருப்பினை யெடுத்த தோளும்
பொன்முடிபத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு
நினைந்தடிபரவத் தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர்வீழி
மிழலையுள்விகிர்த னாரே.
4.064.10
செருக்குற்ற இராவணன் தன் தேரைச் செலுத்திய சாரதி தடுத்ததனை மனங்கொள்ளாது கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட தோள்களும் அழகிய பத்துத் தலைகளும் புண்ணாகுமாறு சிவபெருமானால் நெரிக்கப்பட்டு, அலறி, மறுபடி அவன் அன்போடு நினைந்து சிவபெருமான் திருவடிகளைத் துதிக்க, அவனுக்கு வீழிமிழலை விகிர்தனராகிய அப்பெருமான் தம்முடைய வாளினை விருப்பத்தோடு வழங்கினார்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.