LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-66

4.066.திருநாகேச்சரம் 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சண்பகாரண்ணியேசுவரர். 
தேவியார் - குன்றமுலைநாயகியம்மை. 
639 கச்சைசேர ரரவர் போலுங்
கறையணி மிடறர்போலும்
பிச்சைகொண் டுண்பர்போலும்
பேரரு ளாளர்போலும்
இச்சையான் மலர்கள் தூவி
யிரவொடுபகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர்போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.1
திருநாகேச்சுரத்துப் பெருமான், பாம்புக் கச்சை உடையவராய், நீலகண்டராய், பிச்சை எடுத்து உண்பவராய், பேரருளாளராய், விருப்போடு பூக்களைத் தூவி இரவும் பகலும் தம்மை விரும்பி வழிபடுபவர்களுக்கு இனியராய் உள்ளார்.
640 வேடுறு வேட ராகி
விசயனோ டெய்தார்போலும்
காடுறு பதியர் போலுங்
கடிபுனற் கங்கைநங்கை
சேடெறி சடையர் போலுந்
தீவினை தீர்க்கவல்ல
நாடறி புகழர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.2
திருநாகேச்சுரத்துப் பெருமான் வேடன் உருவில் வந்து அருச்சுனனோடு அம்பு எய்து பொருதவராய், சுடுகாட்டை இருப்பிடமாகக் கொண்டவராய், நறுமணம் கமழும் கங்கையாகிய நங்கையை, பெருமையை வெளிப்படுத்தும் சடையில் அடக்கியவராய், தீவினையைத் தீர்க்க வல்லவராய், அதனால் உலகறிந்த புகழை உடையவராய் உள்ளார்.
641 கற்றுணை வில்ல தாகக்
கடியரண் செற்றார்போலும்
பொற்றுணைப் பாதர் போலும்
புலியதளுடையர் போலும்
சொற்றுணை மாலை கொண்டு
தொழுதெழுவார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.3
திருநாகேச்சுரத்துப் பெருமான் மலையையே தமக்குத் துணையான வில்லாகக் கொண்டு காவல் அமைந்த முப்புரங்களை அம்பு எய்து அழித்தவராய், பொன்னுக்கு ஒப்பான திருவடிகளை உடையவராய், புலித்தோல் ஆடையராய், வேதத்துக்குச் சமமான பாமாலைகளைக் கொண்டு தொழுது வழிபடுபவர்க்கெல்லாம் மேம்பட்ட துணைவராவார்.
642 கொம்பனாள் பாகர் போலுங்
கொடியுடைவிடையர் போலும்
செம்பொனா ருருவர் போலுந்
திகழ்திருநீற்றர் போலும்
எம்பிரா னெம்மை யாளு
மிறைவனே யென்றுதம்மை
நம்புவார்க் கன்பர்போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.4
பார்வதி பாகராய். காளை எழுதிய கொடியினராய், செம்பொன் போன்ற நிறத்தினராய், விளங்கும் திருநீற்றினராய், எம் பெருமானே! எம்மை அடிமை கொள்ளும் இறைவனே! என்று தம்மை விரும்பும் அடியார்களுக்கு அன்பராய் உள்ளார்.
643 கடகரி யுரியர் போலுங்
கனன்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும்
பாரிடம் பலவுங்கூடிக்
குடமுடை முழவ மார்ப்பக்
கூளிகள் பாட நாளும்
நடநவி லடிகள் போலும்
நாகவீச் சரவ னாரே.
4.066.5
யானைத்தோலைப் போர்த்தவராய், கனல் வீசும் மழுப்படையை ஏந்தியவராய், படம் எடுக்கும் பாம்பினை இடையில் கட்டியவராய், பூதங்கள் பலவும் கூடிக் குடமுழாவை ஒலிப்பப் பேய்கள் பாட நாடோறும் கூத்து நிகழ்த்தும் தலைவராய் உள்ளார் திருநாகேச்சுரப் பெருமான்.
644 பிறையுறு சடையர் போலும்
பெண்ணொருபாகர் போலும்
மறையுறு மொழியர் போலும்
நான்மறையவன்ற னோடும்
முறைமுறை யமரர் கூடி
முடிகளால்வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.6
திருநாகேச்சுரப் பெருமான் பிறைதங்கும் சடையினராய்ப் பார்வதிபாகராய், வேதங்களை ஓதுபவராய், திருமாலோடும் பிரமனோடும் தேவர்கள் முறையாகக்கூடித் தம் தலைகளால் வணங்கும் தேனைப்போல விரும்பத்தக்க திருவடிகளை உடையவராய் உள்ளார்.
645 வஞ்சகர்க் கரியர் போலும்
மருவினோர்க்கௌயர் போலும்
குஞ்சரத் துரியர் போலுங்
கூற்றினைக்குமைப்பர் போலும்
விஞ்சைய ரிரிய வன்று
வேலைவாய்வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.7
திருநாகேச்சுரத்துப் பெருமான் வஞ்சகர்களுக்கு அரியராய், தம்மை விரும்பிய அடியவர்களுக்கு எளியராய், யானைத்தோலைப் போர்த்தவராய், கூற்றுவனை ஒறுத்தவராய், தேவர்கள் அஞ்சி ஓடுமாறு கடலில் தோன்றிப் பரவிய விடம் அணிகண்டராய் உள்ளார்.
646 போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர்போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடியாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
பருப்பதவில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
நாகவீச்சசரவ னாரே.
4.066.8
திருநாகேச்சுரத்துப் பெருமான் இன்பம் நிறைந்த காளியின் கொங்கைகளைத் தழுவும் புனிதராய், விரைந்து செல்லும் காளையை உடையவராய், வெண்ணீறணிந்த திருமேனியின் ஒருபாகமாகத் திருமாலை உடையவராய, மேருமலையாகிய வில்லையும், பாம்பாகிய நாணையும் உடையவராய் உள்ளார்.
647 கொக்கரை தாளம் வீணை
பாணிசெய்குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
மாதரை மையல்செய்யும்
நக்கரை யுருவர் போலும்
நாகவீச்சரவ னாரே.
4.066.9
திருநாகேச்சுரத்துப் பெருமான் கொக்கரை, தாளம், வீணை எனும் இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்தும் இளையராய், சங்கு மணியை இடையில் அணிபவராய், ஐந்து தலைகளை உடைய பாம்பினை ஆட்டுபவராய், திருவக்கரைத் திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவராய், பெண்களை மயக்கும் திகம்பரவடிவினராய் உள்ளார்.
648 வின்மையாற் புரங்கண் மூன்றும்
வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையா லமரர் தங்க
டலைவர்க்குந்தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான்
வலியினைத்தொலைவித் தாங்கே
நன்மையா லளிப்பர் போலும்
நாகவீச் சரவ னாரே.
4.066.10
திருநாகேச்சுரத்துப் பெருமான் தம் வில்லாற்றலால் மும்மதில்களையும் தீக்கு இரையாக்கியவராய், தம் பண்பினாலே தேவர்களுடைய தலைவர்களுக்கும் தலைவராய், தன் உடல் வலிமையாலே கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனது வலிமையைப் போக்கி அவ்விடத்திலேயே அவனுக்கு நன்மை ஏற்படும் வகையில் அருள் செய்தவராவார்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.