LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-68

4.068.திருவாலங்காடு 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர். 
தேவியார் - வண்டார்குழலியம்மை. 
659 வெள்ளநீர்ச் சடையர்போலும்
விரும்புவார்க் கௌயர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங்
குகப்பவர்க் கன்பர் போலும்
கள்ளமே வினைக ளெல்லாங்
கரிசறுத் திடுவர்போலும்
அள்ளலம் பழனை மேய
வாலங்காட் டடிக ளாரே.
4.068.1
வயல்களில் சேறு நிரம்பிய பழையனூரை அடுத்த திருவாலங்காட்டுப் பெருமான் கங்கை சூடிய சடையினராய், விரும்புபவர்களுக்கு எளியவராய், உள்ளத்திலே இறை தியானத்தால் நெகிழ்ச்சியுற்று மகிழும் அடியவர்பால் அன்பராய், நுகர்வோர் காரணம் உணராத வகையில் நுகர்விக்கும் இரு வினைகளின் மாசுகளைப் போக்குபவர் ஆவார்.
660 செந்தழ லுருவர் போலுஞ்
சினவிடை யுடையர்போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு
மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற்ப ழனை
மல்கிய வள்ளல் போலும்
அந்தமி லடிகள் போலு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.2
ஆலங்காட்டு அடிகளார் செந்தழல் நிறத்தவராய், கோபம் உடைய காளையை உடையவராய், வெண்ணீற்றைத் திருமேனியில் அணிபவராய், தென்றல் வீசும் சோலைகளை உடைய பழையனூரில் உறையும் வள்ளலாராய்த் தமக்கு ஒரு காலத்தும் இறுதியில்லாத பெருமானாய் உள்ளார்.
661 கண்ணினாற் காம வேளைக்
கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கண் மூன்று
மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப்
பைம்பொழிற் பழனை மேய
அண்ணலா ரெம்மை யாளு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.3
நம்மை அடிமை கொள்ளும் ஆலங்காட்டுப் பெருமான் நெற்றிக்கண்ணால் கருவேள் ஆகிய மன்மதனைத் தீயினால் சாம்பலாகுமாறு விழித்தவரும், பகைவருடைய மும்மதில் களும் தீக்கு இரையாகுமாறு சிரித்தவரும், பண்ணுக்குஏற்ப ஒலிக்கும் முழாவின் ஒலி நீங்காததும், சோலைகளை உடையதுமான பழையனூரில் விரும்பித்தங்கிய தலைவரும் ஆவார்.
662 காறிடு விடத்தை யுண்ட
கண்டரெண் டோளர் போலும்
தூறிடு சுடலை தன்னிற்
சுண்ணவெண் ணீற்றர் போலும்
கூறிடு முருவர் போலுங்
குளிர்பொழிற் பழனைமேய
ஆறிடு சடையர் போலு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.4
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரைச் சேர்ந்த, கங்கை சூடிய ஆலங்காட்டுப் பெருமான் கொல்லுகின்ற விடத்தை உண்ட கழுத்தினராய், எட்டுத் தோளினராய்த் தூறுகள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டு வெள்ளிய சாம்பலைப் பூசியவராய்ப் பார்வதிக்காக இடப்பாகத்தைப் பிரித்துக் கொடுத்துப் பார்வதிபாகராம் உருவினராய் உள்ளார்.
663 பார்த்தனோ டமர் பொருது
பத்திமை காண்பர்போலும்
கூர்த்தவா யம்பு கோத்துக்
குணங்களை யறிவர்போலும்
பேர்த்துமோ ராவ நாழி
யம்பொடுங் கொடுப்பர் போலும்
தீர்த்தமாம் பழனை மேய
திருவாலங் காட னாரே.
4.068.5
பழையனூரையடுத்த, பாவத்தைப் போக்கும் தூய்மையை உடைய ஆலங்காட்டுப் பெருமான் பார்த்தனோடு போரிட்டு அவனுடைய பக்தியைக் கண்டவராய், கூர்மையான நுனியை உடைய அம்புகளைக் கோத்து அவன் குணங்களை அறிந்தவராய்ப் பின்னும் ஒரு அம்புப் புட்டிலை அத்திரத்தோடு அவனுக்கு வழங்கியவராய் உள்ளார்.
664 வீட்டினார் சுடுவெண் ணீறு
மெய்க்கணிந் திடுவர் போலும்
காட்டினின் றாடல் பேணுங்
கருத்தினையுடையர் போலுங்
பாட்டினார் முழவ மோவாப்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினா ரரவந் தன்னை
யாலங்காட் டடிக ளாரே.
4.068.6
ஆலங்காட்டுப் பெருமான் இறந்தவர்களைக் கொளுத்திய சாம்பலை உடலில் பூசியவராய்ச் சுடுகாட்டிலிருந்து கூத்தாடுதலை விரும்பும் கருத்தினை உடையவராய்ப் பாம்பினை ஆட்டுபவராய்ப் பாடுதலை உடையவராய், முழாவின் ஒலி நீங்காததும், பசுமையான சோலைகளை உடையதுமான பழையனூரை விரும்பி உறைகின்றார்.
665 தாளுடைச் செங் கமலத்
தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ
வுதைசெய்த நம்பர் போலும்
கோளுடைப் பிறவி தீர்ப்பார்
குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.7
குளிர்ந்த சோலைகளை உடைய பழையனூரை அடுத்த ஆலங்காட்டுப் பெருமான் தண்டினை உடைய செங்கமலப்பூப் போன்ற பெருமை பொருந்திய திருவடிகளை உடையவராய், தனக்கு உயிர்வாழ வேண்டிய நாள்கள் இன்னும் பலவாக உடைய இயமன் அழியுமாறு உதைத்த, நம்மால் விரும்பப்படும் தலைவராய், யாம் வினைவயத்தாற் கொள்ளுதற்குரிய பிறவிகளைப் போக்குபவராய் நம்மை அடிமையாகக்கொள்ளும் தலைவராக உள்ளார்.
666 கூடினா ருமை தனோடே
குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச்
சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம்
பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண
வாலங்காட் டடிக ளாரே.
4.068.8
பசுமையாகிய சோலைகளை உடைய பழையனூரை விரும்புபவராகிய ஆலங்காட்டுப் பெருமான் காதற் குறிப்புடைய வேடத்தைக் கொண்டு பார்வதி பாகராகிக் கங்கையைச் சூடி அதன் பெருக்கைக் குறைத்த சடையினராய்ச் சாமவேதம் பாடினவராய்க் காளிதேவி காண ஆடிய பெருமானாராவார்.
667 வெற்றரைச் சமண ரோடு
விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்
குணங்களை யுகப்பர் போலும்
பெற்றமே யுகந்தங் கேறும்
பெருமையை யுடையர் போலும்
அற்றங்க ளறிவர் போலு
மாலங்காட் டடிக ளாரே.
4.068.9
ஆலங்காட்டு அடிகளார் ஆடையற்ற சமணர்களோடு விலைமதிப்புடைய ஆடைகளைப் போர்க்கும் புத்தர்கள் பேசும் ஒன்றும் பாதியுமாகிய சொற்களை ஏற்றுக் கொள்ளாத சிவனடியார்களுடைய குணங்களை விரும்பியவராய், விரும்பிக் காளையை வாகனமாகக் கொள்ளும் பெருமையை உடையவராய்ப் பிறர் அறியாதவாறு மறைத்துச் செய்யும் பாவங்களை அறியும் ஞானமுடையவராய் உள்ளார்.
668 மத்தனாய் மலையெ டுத்த
வரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலா
லூன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும்
பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வா
ராலங்காட் டடிக ளாரே.
4.068.10
ஆலங்காட்டுப் பெருமான் செருக்குற்றவனாய்க் கயிலையைப் பெயர்த்த இராவணனைக் கைகளோடு தளருமாறு விரலை ஊன்றிப் பின் அவனுக்கு அருள் செய்தவராய், பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்ப்பவராய், பசுமையான சோலைகளை உடைய பழையனூரை விரும்பி உறையும் தலைவராய் நம்மை அடிமை கொள்பவராய் உள்ளார்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.