LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-70

4.070.திருநனிபள்ளி 
திருநேரிசை 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - நற்றுணையப்பர். 
தேவியார் - பர்வதராசபுத்திரி. 
679 முற்றுணை யாயி னானை
மூவர்க்கும் முதல்வன் றன்னைச்
சொற்றுணை யாயி னானைச்
சோதியை யாத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி
யுள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலு
நனிபள்ளி யடிக ளாரே.
4.070.1
நனிபள்ளிப் பெருமான் முதல் துணைவராய், மூவர்க்கும் தலைவராய், வேதத்துக்கு இணையானவராய்ச் சோதி வடிவமான தம்மை விரும்பி நன்கு உணர்ந்து உள்ளம் நெகிழ்ந்து உள்ளத்தில் பக்தி ஊறுதலால் நீராய் உருகிக் கண்ணீர்பெருக்கும் அடியவர்களுக்குப் பெரிய துணையாபவராய் உள்ளார்.
680 புலர்ந்தகால் பூவு நீரங்
கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயி னூலால்
வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை யரைய னாக்கிச்
சீர்மைக ளருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த
நனிபள்ளி யடிக ளாரே.
4.070.2
அழகு விளங்கும் சோலைகளால் சூழப்பட்ட நனிபள்ளிப்பெருமான், பொழுது விடிந்த அளவில் பூவும் அபிடேக தீர்த்தமும் கொண்டு திருவடியை வணங்க இயலாத பிறப்பினதாகையாலே, பெருமானைச் சுற்றி வலமாக வந்து தன் வாயிலிருந்து சுரக்கும் நூலினாலே வட்டமாகப் பந்தலை அமைத்து வழிபட்ட சிலந்தியை அரசனாக்கி, எல்லா நலன்களையும்அருளிய ஆற்றலுடையவராவர்.
681 எண்பதும் பத்து மாறு
மென்னுளே யிருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக்
கலக்கநா னலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை
செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த
நனிபள்ளி யடிக ளாரே.
4.070.3
செண்பகம், விளங்கும் புன்னை, செழித்து ஓங்கி வளர்ந்த குரவம் வேங்கை இவை கலந்து காணப்படும் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளிப் பெருமானே! 96 தத்துவ தாத்துவிகங்களும் என் உடம்பினுள்ளே நிலையாக இருந்து சிறிதும் கண்ணோட்டமின்றி என்னைக் கலக்கவே அடியேன் துன்பத்தாற் சீர்குலைந்தேன்.
682 பண்ணினார் பாட லாகிப்
பழத்தினி லிரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக்
கருத்தொடு கற்ப மாகி
எண்ணினா ரெண்ண மாகி
யேழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைக டீர்ப்பார்
நனிபள்ளி யடிக ளாரே.
4.070.4
நனிபள்ளிப்பெருமான் பண் அமைந்த பாடலாகவும், பழத்தின் சுவையாகவும், கண்ணிற் பொருந்திய பார்வையாகவும், கருத்தில் அமைந்த காதல் நினைவாகவும், எண்ணுகின்றவருடைய எண்ணமாகவும் ஏழுலகங்களாகவும் தம்மைச் சரணமாக அடைந்த அடியவர்களுடைய வினைகளைப் போக்குபவராகவும் உள்ளார்.
683 துஞ்சிருள் காலை மாலை
தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதி னாளு
மரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பாற்சோ றாக்கி
வழக்கிலா வமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார்
நனிபள்ளி யடிக ளாரே.
4.070.5
இருள் நீங்கும் காலையிலும் மாலையிலும் பெருமானுக்கும் தமக்கும் உள்ள உறவை மறக்காமல் திருவைந்தெழுத்தை ஓதினால், நாடோறும் சிவனடிக்கண் அன்பு பெருகி வளரும். அத்தகைய அன்பு வளருவதன் பேறாக செய்யும் வஞ்சனையால் பாற்சோற்றை நஞ்சுடன் கலந்து சமைத்து நல்ல வழக்கம் இல்லாத சமணர்கள் கொடுத்த அந்த நஞ்சை அமுதமாக்கி அருளினார் திருநனிபள்ளியடிகள்.
684 செம்மலர்க் கமலத் தோனுந்
திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பா
னாழியா னகழ்ந்துங் காணான்
நின்மல னென்றங் கேத்து
நினைப்பினை யருளி நாளும்
நம்மல மறுப்பர் போலு
நனிபள்ளி யடிக ளாரே.
4.070.6
செந்தாமரைப் பூவிலுள்ள பிரமன் திருமுடியைக் காணவும், சக்கரத்தை ஏந்திய திருமால் அகழ்ந்தும், தாமரை போன்ற பாதங்களைக் காணவும், இயலாதாராய்த் தம்மைக் களங்கமற்றவர் என்று போற்றும் எண்ணத்தை அவர்களுக்கு வழங்கி நம்முடைய களங்கங்களையும் போக்குபவர் நனிபள்ளி அடிகளார்.
685 அரவத்தால் வரையைச் சுற்றி
யமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்று
மாலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் மடிய ராகி
வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார்
நனிபள்ளி யடிக ளாரே.
4.070.7
மந்தரம் என்ற மத்திலே வாசுகி என்ற பாம்பைக் கடை கயிறாகச் சுற்றித் தேவரும் அசுரரும் பேரொலி செய்து கடைந்த போது தோன்றிய நஞ்சத்தை அமுதாக உண்டவராய், தம் அடியவருடன் கலந்து என்றும் தம் அடிமையில் நீங்குதல் இல்லாத அவர்களை நரகத்தில் வீழாமல் காப்பவராய் உள்ளார் நனிபள்ளி அடிகளார்.
686 மண்ணுளே திரியும் போது
வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன்
புழுப்பொதி பொள்ள லாக்கை
4.070.8
இவ்வுலகினில் சுற்றித் திரியும் போது பல குற்றங்கள் ஏற்படுகின்றன. புண்ணினுள்ளே பல துவாரங்களை உடையதாய்ப் புழுக்கள் உள்ளே மறைந்திருக்கும் பலதுளைகளை உடைய உடம்பு...
687 பத்துமோ ரிரட்டி தோளான்
பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோ ரிரட்டி தோள்கள்
படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப்
பரிந்தவற் கருள் கொடுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்து
நனிபள்ளிப் பரம னாரே.
4.070.9
பக்தர்கள் முன் நின்று துதித்துப் புகழும் நனிபள்ளிப் பெருமான் இருபது தோள்களை உடைய இராவணன் தன் பெருமையைப் பரக்கச் சொல்லிக் கயிலைமலையைப் பெயர்க்க முற்பட, இருபது தோள்களை உடைய அவன் உடல் வருந்துமாறு திருவடி விரல் ஒன்றனை ஊன்றிப் பின் அவன் தன் பத்து வாய்களாலும் இசைப் பாடல்களைப் பாட அவனுக்கு அருள் செய்தவர் ஆவர்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.