LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-86

4.086.திருவொற்றியூர் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர். 
தேவியார் - வடிவுடையம்மை. 
822 செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்றுசெருவெண்
கொம்பொன்
றிற்றுக் கிடந்தது போலு மிளம்பிறை
பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச்
சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்கு மாலொற்றி
யூரனுக்கே.
4.086.1
யானயைக் கொன்று அதன் தோலைப் போர்வைக்காகக் கொண்ட காலத்தில் போரிடுகின்ற அதனுடைய வெண்மையான தந்தம் ஒன்று ஒடிந்து கிடந்ததுபோல அமைகின்றது. அதனைச் சுற்றிப் பாம்பு கிடத்தல் தந்தத்துக்கிடுங் கிம்புரிப் பூண் போலாகிறது. திருநுதலில் உள்ள நெற்றிக்கண்அத்தந்தத்திலிருந்து தெறித்த முத்தினை யொப்பதாகின்றது திருவொற்றியூர்ப் பெருமானிடத்து.
823 சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற்றொண்
டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி
யலைகொண்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம்
பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை
யுத்தமனே.
4.086.2
கடலின் வளமான அலைகள் சங்குகளிலுள்ள முத்துக்களைக் கொண்டு மணம் வீசும் கரைகளிலே ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே! நீ கேட்பதற்குத் திருச்செவிசார்த்துவாயாகில் அடியேன் கூற நினைக்கும் செய்தி ஒன்று உளது. அஃதாவது உனக்கு அடிமைகளாய் வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டே வாளா இருக்கும் நீ இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாதுவழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய்?
824 பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க
பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை யிளந்திங்கள்
சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க மணிந்து
குலாயசென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை
யுத்தமனே.
4.086.3
பரந்து வருகின்ற அலைகளை உடைய கங்கை நீர் பாய்ந்து சிதறும்படிக்கான வன்மையதாயப் பலவாக உள்ள சடைத் தொகுதி மீது பாம்போடு பிறையையும் கொன்றை குரவம் கோங்கம் ஆகியவற்றின் நறுமலர்களையும் அணிந்து விளங்கும் திருமுடியினனாய்க் கடல் அலைகள் கடல்படு பொருள்களை மோதிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கின்ற திருஒற்றியூரில் வீற்றிருக்கும் உத்தமனே!
825 தானகங் காடரங் காக வுடையது
தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை யிற்பலி
கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி யூருறை
வாரவர்தாம்
தானக மேவந்து போனகம் வேண்டி
யுழிதர்வரே.
4.086.4
உள்ளிடமெல்லாந் தேன்மணங் கமழுந் திருவொற்றியூரில் உறையும் பெருமான் தான் ஆடரங்காகக் கொள்வதும் காடு. தன்னை அடைந்தார் இடும் பலியை ஏற்பதும் உள்ளுரத் தசையின் முடை நாற்றம் வீசும் தலையோட்டில். அவர் தானாகவே வீடு வீடாக வந்து உணவு வேண்டித் திரிபவரும் ஆவார்.
826 வேலைக் கடனஞ்ச முண்டுவெள் ளேற்றொடும்
வீற்றிருந்த
மாலைச் சடையார்க் குறைவிட மாவது
வாரிகுன்ற
ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி
யருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரையெப் போதுந்
தொழுமின்களே.
4.086.5
கடலிற் தோன்றிய நஞ்சை உண்டு இருண்ட கண்டத்துடன்வெள்ளை இடபத்தை ஊர்ந்தருளும், அந்தி செவ்வானம் போன்ற சடையினரான சிவபெருமானுக்கு உறைவிடமாவது வருவாய் குறையாத (ஆலைக்) கரும்புகளோடு செந்நெல்லும் மிகும் வயல்களைச் சூழ்ந்து சோலைகள் விளங்கப்பெறுவதுமான திருவொற்றியூர். அதனை எப்பொழுதுமே தொழுமின்கள்.
827 புற்றினில் வாழு மரவுக்குந் திங்கட்குங்
கங்கையென்னும்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு கண்ணிக்குஞ்
சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி
யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை யான்றன்
விரிசடையே.
4.086.6
இடப வாகனத்தை உடையவனாய், தன்னைப் பற்றிச்சான்றோர்கள் பேசும் பொருள்சேர் புகழுரை தாங்குபவனாய் ,என்னைத் தன் விருப்பப்படி விற்பதற்கும் உரிமை உடைய அடியவனாகக் கொண்டவனாய் ஒற்றியூரை உறைவிடமாக உடைய சிவபெருமானுடைய விரிந்த சடை, புற்றில் வாழும் பாம்புக்கும், பிறைச் சந்திரனுக்கும், கங்கை என்ற பெயரை உடைய, சிறிய இடுப்பை உடைய நங்கைக்கும், ஒற்றைப் பூந்தொடையாகிய முடிமாலைக்கும் இருப்பிடமாகும்.
828 இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை
யிமயமென்னும்
குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக்
கூறிட்டநா
ளன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும்
பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை
யுத்தமனே.
4.086.7
இவ்வுலகில் முழுக்கண் உடையவர்களே காணப்படுகின்றனரே யன்றி அரைக்கண் உடையவர் ஒருவரும் இரார். ஆனால், இமவான் என்று போற்றப்படும் மலைத் தலைவனுக்கு வளர்ப்புமகளாகக் கிட்டிய நல்ல மேன்மையை உடைய பார்வதிக்கு உடம்பைச் செம்பாதியாகப் பங்கிட்டுக் கொடுத்த காலத்திலே தன் முக்கண்களில் செம்பாதியான ஒன்றரைக் கண்கள் அவளுக்காயினதால். மீதியுள்ள ஒன்றரைக் கண்ணனாகவேயுள்ளார் திருவொற்றியூரில் உறையும் உத்தமனாம் எம்பெருமான்.
829 சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந்
துதைந்திலங்கு
பெற்றிகண் டான்மற்றி யாவருங் கொள்வர்
பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் கைவிட்
டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம்
வேதியனே.
4.086.8
வேதத்தால் பரம் பொருள் என்று போற்றப்படும் ஒற்றியூர்ப் பெருமானே! வண்டுகள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு யாழ் போல ஒலிக்கும் பூஞ்சோலைகளும் பெருமரச்சோலைகளும் செறிந்து விளங்கும் உன் ஒற்றியூரின் சிறப்பினை நோக்கினால் அதனை யாவரும் விலைகொடுத்து வாங்கிக் கொள்வர். அது கருதி நீ ஒற்றியாகப் பெற்று அனுபவிக்கும் இவ்வொற்றியூரையும் பிறரிடம் விற்று அதனைக் கைவிட எண்ணுதியேல் அது ஏற்புடையதன்று. இதனை ஒத்த சிறப்பான இருப்பிடம் பிறிது யாதுமில்லை என்பதனைத் தெரிந்து கொள்வாயாக.
830 சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை
பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன செய்தி
யுலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று
கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன செய்யுமித்
தீவினையே.
4.086.9
என் தீவினையே! திருவொற்றியூர்ப் பெருமான் என்றும் பிரியாது என் உள்ளத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டுள்ளான். அவ்வாறாக, நீ என்னை, அடியொற்றித் திரிந்து கொண்டிருப்பதால் நீ சாதிக்கப் போவதென்ன? நான் செல்லிடமெல்லாம் அடியொற்றித் திரிந்து தனக்கு வேட்டை வாய்க்காமையால் ஆத்திரமுற்று பல்லையும் நாவையும் மென்று கொண்டு சோக மிகுதியாற் கண் குழிந்து கால் தெற்றித் தானேசோர்ந்திருப்பதைவிட இத்தீவினையால் எனக்கெதிர் எதுவும் நேர்தற்கிடமின்றாம்.
831 அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவ
முறுவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி
பருமணிசேர்
கங்கைக்கு வேலை யரவுக்குப் புற்றுக்
கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி யூரர்
திருமுடியே.
4.086.10
திருவொற்றியூர்ப் பெருமான் திருமுடியானது அழகிய தேனை உடைய கொன்றை மலருக்கு, முல்லை நிலக்காடு ஆகவும் (உத்தமமான ஆடவர் உடலில் இயல்பாகவே முல்லைப் பூவின் மணம் கமழும். குறுந்தொகை - 193) சிரிக்கும் தலைமாலையாயிருந்து சிரிக்குங் கபாலங்களுக்குச் சுடுகாடாகவும், பருத்த இரத்தினக் கற்களை அலைத்து வரும் கங்கைக்கு அது சென்று சேரும் கடலாகவும், பாம்புக்கு அதன் உறைவிடமான புற்றாகவும், பிறைக்கு அஃது உலவும் வானமாகவும் உள்ளதாகும்.
832 தருக்கின வாளரக் கன்முடி பத்திறப்
பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப் பிறப்பறுத்
தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடிக்
கடைந்தநஞ்சைப்
பருக்கினவா றென்செய்கே னொற்றி யூருறை
பண்டங்கனே.
4.086.11
ஒற்றியூரிலே உறைகின்ற பண்டரங்கக் கூத்தனான பெருமான் செருக்குக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலால் நெரித்தொடுக்கினது போலவே அடியேனுடைய பிறப்பையும் போக்கி அடியேனை அடிமையாகக் கொள்ளவல்லவன். நெருங்கி நின்ற தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அவனையே பருகுமாறு செய்த வினை இருந்தவாறென்? ஆ! என் செய்கேன் நான்!

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.