LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-89

4.089.திருநெய்த்தானம் 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர். 
தேவியார் - வாலாம்பிகையம்மை. 
853 பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம
ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு
தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது
நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த் தானத்
திருந்தவனே. 
4.089.1
காவிரியாற்றங்கரையில் அமைந்த நெய்த்தானத்தை உகந்தருளியிருக்கும் பெருமானே! பூமியில் ஆலகால விடத்தால் தாக்கப்பட்ட பல உயிர்களுக்கும் தேவருலகிலுள்ள தேவர்களுக்கும் அருள் செய்து, கரிய கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டருளிய நீ, பல ஊர்களையும் அடைந்து இவ்வுலகில் பிச்சை உணவை ஏற்பதை நாங்கள் அறியோம்.
854 தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின்
றிருச்சடைமேல்
பாய்ந்த கங்கைப் புனல்பன் முகமாகிப்
பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி
யேற்குரைநீ
ஏந்திள மங்கையு நீயும்நெய்த் தானத்
திருந்ததுவே.
4.089.2
தேய்ந்து விளங்கும் பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர் பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும், ஆராய்ந்து விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும் நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.
855 கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன்
னார்மதின்மேல்
சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல்
லாமறியும்.
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி
யின்கரைமேல்
சென்றடைந் தார்வினை தீர்க்கும்நெய்த் தானத்
திருந்தவனே.
4.089.3
குடகுமலையிலே தோன்றி எல்லோரும் அடைந்து நீராடுமாறு பெருகியோடும். குளிர்ந்த சோலைகளை இரு மருங்கிலும் கொண்ட, காவிரியின் கரைமேல் உன்னை வந்து அடைந்தவர்களுடைய தீ வினைகளைப் போக்கும் நெய்த்தானப் பெருமானே! நீ சென்று சேர்ந்து போரிட்டுக் கொன்று அழிக்கும் கூற்றுவனாய்ப் பகைவர் மதில்களை அடைந்து செயற்பட்டுப் போரிட்டு அவற்றை அழித்த செயலை உலகமெல்லாம் நன்றாக அறிந்துள்ளது.
856 கொட்டு முழவர வத்தொடு கோலம்
பலவணிந்து
நட்டம் பலபயின் றாடுவர் நாக
மரைக்கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற
சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த் தானத்
திருந்தவனே. 
4.089.4
ஒலிக்கின்ற முழவின் ஓசையோடு பல வேடங்களைப் புனைந்து பல கூத்துக்களை அடிக்கடி ஆடுபவரும், பாம்பினை இடையில் இறுகக்கட்டியவரும், சிட்டர்க்காக மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு அழித்த வில்லை உடையவரும், ஆகிய சிவபெருமான் நெய்த்தானத்தில் தமக்கு விருப்பமான பார்வதியோடு விரும்பி இருப்பவராவார்.
857 கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங்
கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண்
ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர்
பான்மகிழ்ந்தான்
நின்மல னாட னிலயநெய்த் தானத்
திருந்தவனே. 
4.089.5
கொய்யப்பட்ட கொன்றை மலர், திருத்துழாய், வன்னி, ஊமத்தம்பூ, வில்வம் ஏனைய சிறந்த மலர்கள் இவற்றை அணிந்த விரிந்த சடைத் தொகுதியையுடைய தேவர் தலைவனாய், கருமை பரவிய நீல நிறத்தை உடையவளாய்க் கருங்கண்களை உடைய பார்வதி பாகனாய் உள்ள களங்கம் அற்ற தூயோனாகிய சிவபெருமான், தன் ஆடல்களுக்கு அரங்கமாக அமைந்த நெய்த்தானத்தில் இருப்பவனாவான்.
858 பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச்
சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப்
படைநடுவே
போந்தார் புறவிசை பாடவு மாடவுங்
கேட்டருளிச்
சேர்ந்தா ருமையவ ளோடுநெய்த் தானத்
திருந்தவனே.
4.089.6
நெய்த்தானத்தில் இருக்கும் சிவபெருமான் பூக்களை வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையை வளைத்துச் சடைக்கண் அணிந்து, விரைவு மிக்குப் பொருந்திய காளையினை ஏறி ஊர்ந்து பூதப்படைகள் பலவற்றின் நடுவே செல்பவராய்ப் புறத்தே அடியார்கள் பாடும் பாடல்களைக் கேட்டு ஆடல்களைக் கண்டு பார்வதியோடும் இணைந்து உறைகின்றார்.
859 பற்றின பாம்பன் படுத்த புலியுரித்
தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி
யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன் சூல
மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத்
திருந்தவனே.
4.089.7
பாம்பினைப் பற்றியவனாய், புலித்தோலை உடையாக உடுத்தவனாய், எல்லா வலிமைகளும் நிறைந்த மூன்று மதில்களையும் தீ மூட்டி அழித்தவனாய்ப் பூதப்படையால் சூழப்பட்டவனாய்ச் சூலம், முழு, மான் எனும் இவற்றை ஏந்தியவனாய் நம் தீவினைகளை அழித்து ஒழிப்பவனாய்ச் சிவபெருமான் நெய்த்தான நகரில் உறைகின்றான்.
860 விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட
முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன் னார்மதின்
மூன்றுடனே
எரித்த சிலையின னீடழி யாதென்னை
யாண்டுகொண்ட
தரித்த வுமையவ ளோடுநெய்த் தானத்
திருந்தவனே. 
4.089.8
விரித்த சடையினனாய், தேவர்கள் தலைவனாய், விடத்தை உண்டு அடக்கிய கழுத்தினனாய், தான் உரித்த யானைத் தோலைப் போர்த்தவனாய், பகைவரின் மதில்கள் மூன்றனையும் எரித்த வில்லினனாய், தன் பெருமைக்குக் குறைவு வாராத வகையில் அடியேனை அடிமையாகக் கொண்டவனாய் உள்ளவன், தன் உடம்பில் பாதியாகக் கொண்ட பார்வதியோடு நெய்த்தானத்தில் உறைகின்ற பெருமானாவான்.
861 தூங்கான் றுளங்கான் துழாய்கொன்றை துன்னிய
செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை
தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து
தியக்கறுத்து
நீங்கா னுமையவ ளோடுநெய்த் தானத்
திருந்தவனே. 
4.089.9
தாமதம் செய்யாமல் விரைவு உடையவனாய், திருத்துழாயும் கொன்றையும் பொருந்திய சிவந்த சடையின்மீது கைக்கொண்ட பாம்பு பிறை எனும் இவற்றைக் கங்கையோடு அணிந்தவனாய், பகைவருடைய முப்புரங்களையும் தீக்கு இரையாகுமாறு அம்பு செலுத்தி அசுரர்களால் மற்றவருக்கு ஏற்பட்ட சோர்வினைப் போக்கி என்றும் நீங்காதிருக்கும் பெருமான் பார்வதியோடு நெய்த்தானத்திருந்தவனே யாவன்.
862 ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதி
றீயம்பினால்
மாட்டிநின் றானன்றி னார்வெந்து வீழவும்
வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவொர்
வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத்
திருந்தவனே. 
4.089.10
செல்வம் நிலைபெற்ற நெய்த்தானப் பெருமான் வானில் நிலவிப் போரிட்ட மும்மதில்களையும் தீயாகிய அம்பினால் எரித்துப் பகைவர்கள் வெந்து போகும்படி தீயினால் அழித்து அக்காட்சியைத் தேவர்கள் காணச் செய்து விரைந்து வானினின்றும் இறங்கிய சினத்தை உடைய பெரிய கங்கை பாய்வதற்கு நீண்ட சடைக் கற்றைகளுள் ஒன்றனைக் காட்டி நின்ற பெருமான் திருநெய்த்தானத் திருந்தவனே யாவான்.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.