LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-91

4.091.திருவையாறு 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். 
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை. 
873 குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக்
குறுவித்தநோய்
உறுவித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா
னுகந்தருளி
அறிவித்த வாறடி யேனையை யாற
னடிமைக்களே
செறிவித்தவாதொண்ட னேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே.
4.091.1
என் முன்னைய குற்றமாகிய வினைகள் இப்பிறப்பில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டி என்னைக்குறுகச் செய்தன. அங்ஙனம் வினைப்பயனாக வந்த நோய்கள் என்னால் பொறுக்கும் அளவினவாய் அல்லாதபடி மிகுவிக்கப்பட்டன. அந்நிலையில் யான் உற்ற நோயாகிய வினைப்பயனைப் போக்க ஐயாறன் திருவுள்ளம்பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டுகள் செய்யுமாறு அறிவித்துத் தன் பொன்போன்ற திருவடிக்கீழ், பொருந்துமாறு தொண்டனாக செய்த செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றி வேறு யாதாக இருத்தல் கூடும்?
874 கூர்வித்த வாகுற்ற நோய்வினை காட்டியுங்
கூர்வித்தநோய்
ஊர்வித்த வாவுற்ற நோய்வினை தீர்ப்பா
னுகந்தருளி
ஆர்வித்த வாறடி யேனையை யாற
னடிமைக்களே
சேர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே.
4.091.2
என் முன்னைய குற்றமாகிய வினைகள் இம்மையில் எனக்கு அவற்றின் பயனாகிய நோயினைக் காட்டித் துயரை மிகுவித்தன. அங்ஙனம் வந்த நோய்கள் என்னைத் தவறான வழியில் செல்லச் செய்தன. அந்த நிலையில் அடியேன் உற்ற நோயைத் தீர்க்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டுகளில் பொருத்துவித்துத் தன் பொன்னடிக் கீழ்த் தொண்டனாகச் சேருமாறு ஐயாறன் செய்த செயலுக்குக் காரணம் அவன் கருணையேயன்றிப் பிறிதில்லை. 
875 தாக்கின வாசல மேவினை காட்டியுந்
தண்டித்தநோய்
நீக்கின வாநெடு நீரினின் றேற
நினைந்தருளி
ஆக்கின வாறடி யேனையை யாற
னடிமைக்களே
நோக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே. 
4.091.3
என் முன்னைய வினை என்னைத் தண்டித்தற்கு உரிய சூலை நோயால் தாக்கியது. பின் சமணர்களின் வஞ்சனைச் செயல்களைக் காட்டி என் உயிரைப் போக்க முற்பட்டது. அந்நிலையில் ஐயாறன் என்னைக் கடலினின்றும் கரையேறச் செய்யவேண்டும் என்று திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத் தொண்டு செய்ய அடியேனை வழுக்களைந்து கொண்டு திருவடிக் கீழ்த் தொண்டனாகச் செய்த செயல் நிர்ஹேதுக கிருபையாலாகியதே.
876 தருக்கின நான்றக வின்றியு மோடச்
சலமதனால்
நெருக்கின வாநெடு நீரினின் றேற
நினைந்தருளி
உருக்கின வாறடி யேனையை யாற
னடிமைக்களே
பெருக்கின வாதொண்டனேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே. 
4.091.4
நான் வினைப் பயனைத் தாங்கும் ஆற்றலில்லேனாய்த் தடுமாறி ஓடுமாறு செருக்குற்ற என் முன்னைவினை வஞ்சனையாக என்னை நெருக்க அடியேனைத் துன்பக் கடலிலிருந்து கரையேறச் செய்யத் திருவுள்ளம் பற்றி ஐயாறன் தன் அடிமைத் தொண்டில் உருகச் செய்து அடியேனைத் தன் பொன்னடிக் கீழ் தொண்டனாக மேம்படுத்திய செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும்.
877 இழிவித்த வாறிட்ட நோய்வினை காட்டி
யிடர்ப்படுத்துக்
கழிவித்த வாகட்ட நோய்வினை தீர்ப்பான்
கலந்தருளி
அழிவித்த வாறடி யேனையை யாற
னடிமைக்களே
தொழுவித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே. 
4.091.5
என் முன்னைவினை எனக்கு நோயைக் காட்டி என்னை நிலையிலிருந்து இறங்கச் செய்து துன்புறுத்தி உயிரைப் போக்க முற்பட்ட அளவில், ஐயாறன் அடியேனுடைய துயரம் போக்கித் தன் திருவடிக்கண் தொண்டனாகக் தன்னைத் தொழுமாறு செய்த செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவேயாகும்.
878 இடைவித்த வாறிட்ட நோய்வினை காட்டி
யிடர்ப்படுத்து
உடைவித்த வாறுற்ற நோய்வினை தீர்ப்பா
னுகந்தருளி
அடைவித்த வாறடி யேனையை யாற
னடிமைக்களே
தொடர்வித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே.
4.091.6
என் முன்னைவினை எனக்கு நோயைத் தந்து வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தி உயிரைப் போக்கும் நிலையினதாக. ஐயாறன் அடியேனுக்குத் துயரம் தந்த வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி, அடியேனைத் தன் அடிமைத் தொண்டில் சேர்த்துத் தன் திருவடிக்கண் தொண்டனாகத் தொடர்ந்து பணி செய்யுமாறு செய்த செயல் அவனுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவே யாகும்.
879 படக்கின வாபட நின்றுபன் னாளும்
படக்கினநோய்
அடக்கின வாறது வன்றியுந் தீவினை
பாவமெல்லா
மடக்கின வாறடி யேனையை யாற
னடிமைக்களே
தொடக்கினவா தொண்டனேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே.
4.091.7
என் முன்னை வினை பலநாளும் துயருறுமாறு என்னைத் தாழ்த்தி நோயினால் என்னைச் செயலற்றவன் ஆக்கிய நிலையில் ஐயாறன் அடியேனுடைய வினைப்பயனாகிய பாவங்களை எல்லாம் செயலற்றன ஆக்கித் தன் அடிமைத் தொண்டில் அடியேனைத் திருப்பித் தன் பொன்னடித் தொண்டனாகத் தொடக்கி, திருத்தொண்டு செய்யுமாறு செய்த செயல் அவன் கருணையின் விளைவேயாம்.
880 மறப்பித்த வாவல்லை நோய்வினை காட்டி
மறப்பித்தநோய்
துறப்பித்த வாதுக்க நோய்வினை தீர்ப்பா
னுகந்தருளி
இறப்பித்த வாறடி யேனையை யாற
னடிமைக்களே
சிறப்பித்த வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே. 
4.091.8
என் முன்னை வினை எனக்கு நோயைக் காட்டி என் அறிவு நிறைவு ஓர்ப்பு கடைப்பிடி என்பனவற்றை மறக்கச்செய்ய, அங்ஙனம் மறக்கச் செய்த நோய் என் உயிர் உடலைத் துறக்கச்செய்ய முற்பட்ட நேரத்தில் ஐயாறன் அடியேனுடைய வினையைப் போக்கத் திருவுள்ளம் பற்றி அடியேனைத் தன் அடிமைத் தொண்டில் ஈடுபட்டுப் பண்டைத் துயரங்களைக் கடக்கச் செய்து, தன் திருவடிக்கண் தொண்டனாகுமாறு சிறப்பித்த செயல் அவன் கருணையின் விளைவேயாகும்.
881 துயக்கின வாதுக்க நோய்வினை காட்டித்
துயக்கினநோய்
இயக்கின வாறிட்ட நோய்வினை தீர்ப்பா
னிசைந்தருளி
அயக்கின வாறடி யேனையை யாற
னடிமைக்களே
மயக்கின வாதொண்ட னேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே.
4.091.9
என் முன்னை வினை எனக்கு நோயைத் தந்து சோர்வடையச் செய்ய, அந்நோய் தான் விரும்பியபடி அடியேன் உடலைச் செயற்படுத்த அந்நிலையில் ஐயாறன் அடியேனுடைய நோயையும் அதற்குக் காரணமான வினையையும் தீர்க்கத் திருவுள்ளம் பற்றித் தன் அடிமைத் தொண்டில், அடியேனை நோயிலனாக ஈடுபடுத்தித் தன் பொன்னடித் தொண்டனாகத் தன் திருத்தொண்டில் கலக்குமாறு செய்த செயல் அவன் கருணையின் விளைவேயாகும்.
882 கறுத்துமிட் டார்கண்டங் கங்கை சடைமேற்
கரந்தருளி
இறுத்துமிட் டாரிலங் கைக்கிறை தன்னை
யிருபதுதோள்
அறுத்துமிட் டாரடி யேனையை யாற
னடிமைக்களே
பொறுத்துமிட் டார்தொண்ட னேனைத்தன் பொன்னடிக்
கீழெனையே.
4.091.10
ஐயாற்றெம் பெருமானார் நீலகண்டராய், கங்காதரராய், இராவணன் இருபது தோள்களையும் நெரித்தவராய், அடியேனைத் தம் அடிமைத் தொண்டில் வேற்றுப் பணிகளை அறுத்து அதன் கண்ணேயே ஈடுபடுமாறு செய்தவராய்த் தம் பொன்னடிக்கீழ் அடியேன் தொண்டனாகுமாறு அடியேனுக்கு ஆதாரமாக அமைந்துவிட்டார். இதற்குக் காரணம் என்னை? அப்பெருமானுடைய காரணம் பற்றாக் கருணையின் விளைவே அடியேனை அப்பெருமானுடைய திருத்தொண்டில் ஈடுபடுத்தியது.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.