LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-92

4.092.திருவையாறு 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். 
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை. 
883 சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச்
சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன
மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன
பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடுமை யாற
னடித்தலமே.
4.092.1
பாம்பினைத் திருமேனியில் சுற்றி அணிந்து மாலையில் தோன்றும் வளர்பிறைப் பக்கத்துப் பிறைச் சந்திரனை அணிந்து கூத்து நிகழ்த்தும் ஐயாறனுடைய திருவடிகள் நம் உள்ளத்தால் உள்ளவாறு சிந்திப்பதற்கு அரியனவாய், அவன் அருளாலே தியானிக்கும் மெய்ஞ்ஞானியருக்கு மேம்பட்டுச் சிறந்த தேன்போன்ற இனிமையை முன்னர்க்கொடுத்து, அவர்கள் உயிரைப் பிணித்து நின்ற பழவினைகளைப் போக்கி அவர்களுக்கு முத்திப் பேற்றினை வழங்குவனவாகும்.
884 இழித்தன வேழேழ் பிறப்பு மறுத்தன
வென்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன
போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக்
கீழமுன்சென்
றழித்தன வாறங்க மானவை யாற
னடித்தலமே. 
4.092.2
வேதங்களின் ஆறு அங்கங்களின் வடிவான ஐயாறன் அடித்தலங்கள் - ஒரு பிறப்பின் வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழுபிறப்புக்கள் மக்கள், தேவர், நரகர், விலங்கு, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற ஏழுவகைப் பிறப்பினுள் எப்பிறப்பாயினும் அறுவறுக்கத்தக்க அப்பிறவிப் பிணியைப் போக்குவனவாய், அடியேன் உள்ளத்தே இன்பத்தைப் பொழிவனவாய், போரிடுவதில் வல்ல கூற்றுவனை உதைத்தனவாய், தக்கனுடைய மேம்பட்ட வேள்வியை அழித்தனவாய், தம்மை வழிபடும் அடியவர்களுக்குக் கீழான பிறவிகளை முற்பட்டு முயன்று அழித்தனவாய் உள்ளன.
885 மணிநிற மொப்பன பொன்னிற மன்னின
மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன
காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து
விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை யாற
னடித்தலமே. 
4.092.3
ஐயாறன் அடித்தலங்கள் மாணிக்தத்தைப் போலவும் பொன்னைப் போலவும் மின்னலைப் போலவும் அடியவர்கள் விரும்புகின்ற நிறத்தோடும் ஒளியோடும் விளங்குவனவாய், கயிலைமலையில் உள்ளனவாய், அன்பு செய்யத் தக்கனவாய், நல்லொழுக்கத்துடன் இறைபணியைத் தொடர்ந்து செய்யும் அடியவர்களுக்கு அணியனவாய்த் தேவர்களுக்குத் தொலைவில் உள்ளனவாய் இருக்கின்றன.
886 இருடரு துன்பப் படல மறைப்பமெய்ஞ்
ஞானமென்னும்
பொருடரு கண்ணிழந் துண்பொரு ணாடிப்
புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக் கொடுநர
கக்குழிநின்
றருடரு கைகொடுத் தேற்றுமை யாற
னடித்தலமே. 
4.092.4
ஐயாறன் அடித்தலங்கள் இருளைத் தரும் துன்பத்திரை மறைக்க மெய்ஞ்ஞானம் என்னும் பார்வையை இழந்த, நுகர்தற்குரிய பொருள்களைத் தேடிப் பற்றுக்கோட்டினை இழந்த குருடர்களும் தம்மைப் போற்றுமாறு கொடிய நரகமாகிய குழியில் இருந்து அவர்களை அருளாகிய கைகளைக் கொடுத்து வெளியேற்றி முத்தி நிலத்தின் கரைக்கண் சேர்ப்பன.
887 எழுவா யிறுவா யிலாதன வெங்கட்
பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன மாநர
கக்குழிவாய்
விழுவா ரவர்தம்மை வீழ்ப்பன மீட்பன
மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கவை யாற
னடித்தலமே.
4.092.5
ஐயாறன் அடித்தலங்கள் - தமக்குத் தோற்றமும் முடிவும் இல்லனவாய் நம்முடைய நோய்களைப் போக்கத்தவறாத மருத்தின் தன்மையவாய் நரகக்குழியில் தம் வினைப்பயனால் விழும் உயிர்களை வினை நுகர்ச்சிக்காக விழச்செய்து பின் கருணையினால் கரையேற்றுவனவாய், மேம்பட்ட அன்பினால் உள்ளம் உருகி அழுபவர்களுக்கு அமுதங்களாக உள்ளன.
888 துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட
தொண்டர் தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன
மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப்
பொய் பொருந்தா
அன்பர்க் கணியன காண்கவை யாற
னடித்தலமே. 
4.092.6
ஐயாறன் அடித்தலங்கள் அடியார்களைத் துன்பக் கடலைக் கடத்த உதவும் தோணியின் செயலைச் செய்வனவாய் இன்பமாகிய கரையிலே கொண்டு சேர்ப்பனவாய் மாற்று அறிய முடியாத வலியற்ற பொன்போல ஒளிவீசுவனவாய்ப் பொய்ப் பொருள்களிடத்துப் பற்றற்ற மெய்யடியார்களுக்கு அணியனவாய் உள்ளன.
889 களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு
காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் னின்றவிப் பத்தரைக்
கோதில்செந்தேன்
தௌத்துச் சுவையமு தூட்டி யமரர்கள்
சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற
னடித்தலமே.
4.092.7
ஐயாறன் அடித்தலங்கள் அடியார்குழாத்தோடு மகிழ்ந்து அன்பால் ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியோடு காவிரியில் நீராடித் தொழுது தம் முன் நின்ற அடியார்களை மேம்பட்ட செந்தேனைத் தௌயச் செய்து அத்தேனை அமுதோடு உண்பித்துத் தேவர்கள் சூழ்ந்து வழிபடும் பெரிய செல்வத்தை அவர்களுக்கு வழங்கி எப்பொழுதும் செல்வன்கழல் ஏத்தும் செல்வத்தை இடையறாது நுகரும் வாய்ப்பினை நல்குவன.
890 திருத்திக் கருத்தனைச் செவ்வே நிறுத்திச்
செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளொடுத் தோச்சி
மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட்
டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்துமை யாற
னடித்தலமே. 
4.092.8
விரும்பிச் சிறந்த தவத்தினை உடையவர்கள் துதிக்கும் ஐயாறனுடைய திருவடிகள் உள்ளத்தைப் பிற பொருட்கண் செல்லாமல் திருத்தம் பெறச் செய்து அதனைச் சிவபெருமான் திருவடிகளிலேயே பதித்து, தொடர்ந்து, அதனை அடக்கி உடலை யோகத்தால் வருத்தி, நறுமணம் கமழும் ஒளி பொருந்திய மலர்களை எடுத்து உயர்த்தித் திருவடிகளில் தூவி எம்பெருமான் பக்கல் அடைந்து உடல் விருத்தி உயிர் விருத்தி ஆகிய இரண்டற்கும் முயலும் ஆற்றல் உடையவர்களுக்கு வீட்டுலகில் இடம் பெறுவதற்குப் பட்டிகையில் பெயர்ப்பதிவு செய்துவிடும்.
891 பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப்
பரந்துபல்பேய்
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக்
குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வைய நௌய
நிணப்பிணக்காட்
டாடுங் திருவடி காண்கவை யாற
னடித்தலமே. 
4.092.9
ஐயாறன் அடித்தலங்கள், ஒலிக்கும் பறண்டை மொந்தை என்ற இசைக்கருவிகள் ஆரவாரம் செய்யப் பலபேய்களும் நாற்புறமும் பரவி முழவு முதலியவற்றின் குவிந்து கவிழ்ந்த மார்ச்சனை இடத்தில் ஒலியை எழுப்ப, குறுநரிகள் வேய்ங்குழல் போல ஒலிக்கப் பூமி அதிர்ச்சி தாங்காமல் நௌய, கொழுப்பு உருகும் பிணங்களை உடைய சுடுகாட்டில் கூத்து நிகழ்த்து வனவாம்.
892 நின்போ லமரர்க ணீண்முடி சாய்த்து
நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன
பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட விலையு
முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளு மையனை யாற
னடித்தலமே.
4.092.10
ஆகமப்படி செய்யும் முறைகளை அறியாத அடியேனைப் போன்றவர்கள் பறித்துச் சமர்ப்பித்த இலைகளையும் மொட்டுக்களையும் எல்லாம் அழகிய பூக்களாக ஏற்கும் ஐயாறன் உடைய திருவடிகள் தேவர்கள் நீண்ட முடிகளைச் சாய்த்து வணங்கிச் சமர்ப்பித்த புதிய பூக்களைத் துகைத்து எம்பெருமானைப் போலப் பவள நிறத்தால் சிறந்து விளங்குவன.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.