LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

நான்காம் திருமுறை-93

4.093.திருவையாறு 
திருவிருத்தம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர். 
தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை. 
893 மலையார் மடந்தை மனத்தன வானோர்
மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன
நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல
கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தவை யாற
னடித்தலமே.
4.093.1
தேவருலகத்தை வழங்கும், அலையோடு கூடிய நீரை உடைய காவிரி தென்புறத்தில் சூழ்ந்துள்ள ஐயாறன் அடித்தலங்கள் பார்வதியின் மனத்தனவாய், தேவர்களின் முடிகள் விளங்குவதனால் நிலையாகத் தம்மிடம் பொருந்தி யிருப்பனவாய், வழிபட்டு நிற்பவரால் மதிக்கப்படுவனவாய், இவ்வுலகின் கீழ்மையில் ஈடுபடும் புல்லிய பிறவியைப் போக்குவன ஆகும். 
894 பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன
போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன
பொன்னனையாள்
சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண்
கிணித்திரளும்
அலம்புந் திருவடி காண்கவை யாற
னடித்தலமே.
4.093.2
ஐயாறன் அடித்தலங்கள் அப்பொழுது அலர்ந்த பொற்றாமரைமலர்கள் போல்வனவாய், தம்மை வழிபடுபவர் தனித்து வருந்தும்போதும் வருத்தத்தைப் போக்கும் துணையாவனவாய், பொன் போன்ற ஒளியையுடைய பார்வதியின் சிலம்பும் பாடகமும் கிண்கிணியும் தம்மிடையே ஒலிப்பனவாகும்.
895 உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன
வோதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை யுடையன
காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந்
தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கவை யாற
னடித்தலமே.
4.093.3
ஐயாறன் அடித்தலங்கள் தமக்கு உதவுவார் இல்லாது தனித்து வருந்துபவர்களுக்கு மேம்பட்ட துணையாவனவாய், சிவாகமங்களை ஓதி அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறிந்த சான்றோர்கள் முன்நின்று துதிக்கும் பெருமை உடையனவாய், தம்மை விரும்பும் ஆற்றல் உடையவர்களுக்கு மேம்பட்ட ஞானஒளி வடிவமான வீட்டுலகை அளிப்பனவாய் ஏனைய பொருள்பற்று அற்றாருக்குக் கிட்டுதற்குச் சிறந்த பொருளாய் உள்ளனவாம்.
896 வானைக் கடந்தண்டத் தப்பான் மதிப்பன
மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன
வுத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன
நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கவை யாற
னடித்தலமே.
4.093.4
ஐயாறன் அடித்தலங்கள் தேவருலகையும் தாண்டி அதற்கு அப்பாலும் மதிக்கப்படுவனவாய், மந்திரங்களால் வழிபடுகின்றவர்களுடைய பிறவித்துயரைப் போக்கி உய்தி பெற அவர்களை அடிமையாகக் கொண்டு பேரின்பம் நல்குவனவாய், மேம்பட்ட சான்றோர்களுக்கு ஞானஒளியாய் அவர்கள் உள்ளத்தே தோன்றுவனவாய், பார்வதி அஞ்சுமாறு பெருமான் யானையைத் தோல் உரித்த காலை அந்த யானையின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள உதவியனவாய் உள்ளன.
897 மாதிர மானில மாவன வானவர்
மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின
வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன துன்பறத்
தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கவை யாற
னடித்தலமே.
4.093.5
ஐயாறன் அடித்தலங்கள் வானுலகும் மண் உலகும் ஆவனவாய்த் தேவர்களின் உச்சியின் மீது பொருந்துவன வாய், மென்மையான கழலும் விரும்பத்தக்க கச்சும் கட்டப்பட்டன வாய், கொடிய தருமராசரின் தூதர்களை ஓடச் செய்வனவாய், உலகத் துன்பங்கள் தீரத்தொண்டராய் அடிமைப் பணி செய்பவருக்குத் தாங்கும் பொருளாய் உள்ளன.
898 பேணித் தொழுமவர் பொன்னுல காளப்
பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை
யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம் போன்று
வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்குமை யாற
னடித்தலமே.
4.093.6
ஐயாறன் அடித்தலங்கள், விரும்பித் தொழும் அடியவர்கள் மேம்பட்ட வீட்டுலகத்தை ஆளுமாறு மிக்க அருளினாலே ஏணிப்படி போன்று ஏறிச் செல்லக் கூடிய வழியை அமைத்துக் கொடுத்து, தேவர்கள் முடிக்கு அணியத்தக்க மாணிக்கம், மரகதம், வைரம், தூய பொன் இவற்றை ஒத்து இருப்பனவாம்.
899 ஓதிய ஞானமும் ஞானப் பொருளு
மொலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு மாவன
விண்ணுமண்ணும்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன
தூமதியோ
டாதியு மந்தமு மானவை யாற
னடித்தலமே.
4.093.7
ஆதியும், அந்தமும் ஆகிய ஐயாறன் அடித்தலங்கள் வேதஆகமங்களை ஓதியதனால் பெற்ற அபர ஞானமும், ஞானப் பொருளாகிய பரஞானமும், ஒலியால் மேம்பட்ட அந்தணர்கள் ஓதும் வேதமும், வேதத்தை ஒட்டிச் செய்யப்படும் வேள்வியும் தேவருலகமும் இந்நிலவுலகமும் அக்கினியும் சிவந்த ஒளியை உடைய சூரியனும் தூயமதியும் ஒப்பனவாய ஒளிப்பொருளுமாக உள்ளன.
900 சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை
சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார் வளைக்கரங்
கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண்
காந்தளொண்போ
தணங்கு மரவிந்த மொக்குமை யாற
னடித்தலமே. 
4.093.8
ஐயாறன் அடித்தலங்கள் தேமல் படர்ந்த முன்பகுதியை உடைய இணையான தனங்களை உடைய பாவை போன்ற பார்வதி சுரும்பும் வண்டும் அழகுசெய்யும் கூந்தலை உடையவளாய் வளையல்களை அணிந்த கைகளைக் குவித்து நின்று வணங்கும் போதும் தடவிக்கொடுக்கும் போதும் காந்தட்பூவால் அழகுசெய்யப்பட்ட தாமரைப் பூக்களை ஒத்திருக்கின்றன. காந்தட்பூ - பார்வதிகைகள், தாமரை - பெருமான் திருவடிகள்.
901 சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித்
தொண்டர்துன்னும்
நிழலா வனவென்றும் நீங்காப் பிறவி
நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ கால
வனங்கடந்த
அழலா ரொளியன காண்கவை யாற
னடித்தலமே. 
4.093.9
ஐயாறன் அடித்தலங்கள் கலக்குகின்ற துயராகிய வெப்பம், தாக்கும் போது கைத்தொண்டு செய்யும் அடியவர்களுக்குப் பொருந்தும் நிழலானவையாய், ஒரு பொழுதும் நீங்காத பிறவி எடுக்கும் செயலைப் போக்கி, விடுத்து நீங்காத வினைகளை அப்புறப்படுத்துவனவாய்க் காலம் என்னும் காட்டினை எரித்து வென்ற தீயின் நிறைந்த ஒளியை உடையன.
902 வலியான் றலைபத்தும் வாய்விட்டலற
வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண்
ணோர்கண்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும்
பலரிகழ
அலியா நிலைநிற்கு மையனை யாற
னடித்தலமே.
4.093.10
நம் தலைவனாகிய ஐயாறனுடைய திருவடிகள் வலிமையை உடைய இராவணனின் தலைகள் பத்தும் வாய்விட்டு அலறுமாறு மலையால் அவனை அழுத்தி, குறையாக வலிமையை உடைய கூற்றுவனை உதைத்து, தேவர்கள் காண அவர்கள் முன்னே பிச்சை வழங்கும் வீட்டுவாயில்களை நோக்கிப் பல நாளும் பலரும் இகழுமாறு ஆண்மை நிலைக்கு ஏலாத அலியாம் நிலைக்கு உரிய செயல்களைச் செய்யும் இயல்பின.

by C.Malarvizhi   on 19 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.