- எளிமையான, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என அறியப்படும் தமிழ்நாடு முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73.
- உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. கணிதம், காந்திய சிந்தனை ஆகிய படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றார்.
- தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்றவர் ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா
- அரசு காரில் பயணம் செய்வதை தவிர்த்தே வந்தார். சென்னை மின்சார ரயில் வண்டியில் எளிய மக்களோடு எளிய குடிமகனாக பயணம் செய்தார்.
- தேர்தலில் தொழில்நுட்பத்தை புகுத்தியவர்.
- தமிழ்நாடு தேர்தல்களில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தியவர்
- தமிழ்நாட்டில் உள்துறை செயலாளராகவும், மாநில திட்டக் குழுவின் உறுப்பினராகவும் செயலாளராகவும் பணிபுரிந்து இருக்கிறார்.
- தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கியவர் என்று போற்றப்படுகிறார் நரேஷ் குப்தா.
- மக்கள் அனைவரிடம் எளிமையாக பழகும் தன்மை கொண்டவரான இவர், காந்தியவாதியாக அறியப்படுகிறார்.
- திமுக மற்றும் அதிமுக ஆட்சிகாலத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்த நரேஷ் குப்தா, 2 முதலமைச்சர்களுடன் நெருக்கம் பாராட்டாமல் இருந்து வந்தார்.
- தேர்தல் கட்டுப்பாட்டு காலங்களில் மாவட்ட ஆட்சியர்களையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் பணியிட மாற்றம் செய்யும் முறையை முதலில் அறிமுகப்படுத்தியவர் நரேஷ் குப்தாதான்.
- வாக்கு சதவீதத்தை எஸ்.எம்.எஸ் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கும் முறையை தொடங்கினார். பதற்றமான வாக்குச்சாவடிகளை அடையாளம் காணும் உத்தியை உருவாக்கினார்.
- வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை கண்காணிப்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை 2009-ம் ஆண்டே தேர்தலில் புகுத்தினார் நரேஷ் குப்தா.
- இவர் சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார்.
|