LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- எட்டுத்தொகை

நற்றிணை-4

76. பாலை
வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
வருந்தாது ஏகுமதி- வால் இழைக் குறுமகள்!- 5
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!  
தூய கலன்களை யணிந்த இளமடந்தாய்!; இந்த மெல்லிய பெரிய பழிச்சொல்லைத் தூற்றுதலையுடைய நினது ஊரின்கண் உள்ள புன்னையின் காம்பிற்ற மலர் மிகுதியாக வுதிர்ந்ததனாலே தேன் மணம் வீசுகின்ற புலவினையுடைய கழிக்கரைச் சோலையின்; மிக்க மணலிலே நடந்து இப்பொழுது கற்கள் பதிதலாலே சிவந்த நின்னுடைய மெல்லிய அடிகள் வருந்தாதிருத்தற்பொருட்டு; வருகின்ற மழை பெய்யாதொழிந்த வெளிய நிறத்தையுடைய விசும்பினின்று விழுகின்ற நுண்ணிய துளிகளும் இல்லையாகிய; காற்றுச் சுழன்று வீசும் அழகிய காட்டு நெறியகத்து ஆலமரத்தின் நிழலிலே தங்கி இளைப்பாறி; அஞ்சுமிடங் காணினும் ஆங்கு அஞ்சாது மற்றும் எவ்வெவ் விடத்தே தங்கவேண்டினும் அவ்வவ்விடத்தே தங்கிச் சிறிதும் வருத்தமுறாமல் ஏகுவாயாக !; 
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது. - அம்மூவனார் 
77. குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்
அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்றுமன்னே- நெஞ்சே!- செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் 5
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்
ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், 10
திதலை அல்குல், குறுமகள்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.  
நெஞ்சே ! சிவந்த வேர்களையுடைய கிளைகடோறும் தூங்கும் பழங்கள் மிக்க பலாவின் சுளைகளையுடைய முன்றிலின்கண் மனையோளானவள்; இரவில் நெருங்கி விழுகின்ற வெளிய அருவியின் ஒலியைக் கேட்டு உறங்காநிற்கும் பேரூரல்லாத (சிலவாய) சேரிகளையுடைய சீறூரின்கண்ணே; கைவல் வினைஞன் வாளரத்தா லராவிய வளைந்த அழகிய ஒளியையுடைய வளையும் அகன்ற தொடியும் அணிந்த முன்னங்கையையும்; ஒள்ளிய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும் இளமையையுமுடைய நம் காதலியின் குவளைபோன்ற மையுண்ட கண்களின் மகிழ்ச்சியையுடைய இளம் பார்வையானது; மலை போன்ற யானைமீது ஏறி நடத்திச்சென்று புலையனால் முழக்கப்படும் பெரிய துடியானது ஒலிக்க வேற்றுநாட்டிற் புகுந்து அப்பகைவரது கடத்தற்கரிய அரணை அழித்து அயாவுயிர்த்தாற்போல; நம்மை இவள் பால் மிகச்செலுத்தாநின்றது; ஆதலின் இவள் உடன்பட்டுக் கூறுங்காறும் நீ முயன்று வருந்தாதே கொள் !; 
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது. - கபிலர் 
78. நெய்தல்
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, 5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;
கேட்டிசின்- வாழி, தோழி!- தெண் கழி
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல் உற அறியா, 10
உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!  
தோழீ ! வாழி ! தௌ¤ந்த கழியின்கண்ணுள்ள நீரிடத்துப் பெருமை வாய்ந்த தேர் உருளின் உள்வாயளவு அமுங்கப் பெறினும் பறவை பறந்து சென்றாற்போன்ற பொன்னாற் செய்யப்பட்ட கலமுதலியவற்றை யுடைய மனஞ்செருக்கிய குதிரை; தேர்ப்பாகன் தன் தாற்றுக்கோலாலே தூண்டப்பட்டறியாத பரவிய கடனீர்ச் சேர்ப்பனது தேரின் மணியொலிக்குங் குரலைக் கேட்பாயாக !; கொல்லுந் தன்மையுள்ள சுறாமீன் இயங்குகின்ற ஒள்ளிய நிறத்தையுடைய பெரிய கழியிடத்து மலர்ந்த நீலமணி போன்ற நெய்தலின் கரியமலர் நிறையுமாறு; புன்னையின் பொன் போன்ற நுண்ணிய தாதுபரக்கும்; வீழூன்றிய அடியையுடைய தாழைமலர் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; துன்பம் வந்து மேன்மேல் வருத்துகின்ற ஆதித்த மண்டிலம் மறையும் மாலைப் பொழுதில்; காமநோய் மிகுதலானாகிய மிக்க துன்பத்தினின்றும் நாம் இனி இங்கு உய்ந்து வாழ்துங்காண் !; 
வரைவு மலிந்தது. - கீரங்கீரனார் 
79. பாலை
'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ,
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் 5
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?'
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று- 
அம்ம! வாழி, தோழி!- 
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? 10
தோழீ வாழி ! இதனைக் கேட்பாயாக !; ஈங்கையின் மூடியிருக்கின்ற தேன் துளி மிகத்திரளும் (புதிய) மலர்களானவை; கூரையையுடைய நல்ல மனையின்கணுள்ள குறிய தொடியையுடைய மகளிர் தம் முன்றிலின் மணலிடத்து விளையாடுதற்கிட்ட கழங்குபோலக் கற்பாறையின்மேல் உதிர்ந்து பரவாநிற்கும்; அழகு பொருந்திய மக்கள் இயங்குதற்கு அரிய கவர்த்த நெறியிலே; பிரிந்து போயினீ ரெனினும் இப்பருவத்து வந்து எம்மைக் கூடி முயங்கியுறைய வேண்டியிருக்க; எம்மைக் கூடியிருந்த நீவிர் இப்பொழுது பிரிந்து போதற்கு நினைந்திருப்பதினுங்காட்டில் அரிய கொடுமை பிறிதுமொன்றுண்டோ? என்று நாம் அவர்பாற் சென்று கூறி; நமது விருப்பத்தைச் சொல்லுகிற்போம்; சொல்லாதிருப்பின் அவர் அகலினும் அகன்று போவார்காண் !; அங்ஙனம் அகல்வாராயின் திண்ணமாக என்னுயிருக்கே ஏதம் வந்துற்றது; ஆதலின் நாம் நேரிற் கூறி நிறுத்துவதன்றி நம் காதலருடைய செலவை வேறெத்தகைய சூழ்ச்சியாலே தவிர்க்கிற்போம்? ஆராய்ந்துகாண் !; 
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கண்ணகனார் 
80. மருதம்
'மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன், இவன்' என, 5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.  
தொழுவத்துள்ள அகன்ற தலையையுடைய கார் எருமையின் மிக இனிய பால் நிரம்பக் கறந்துகொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்து நிறுத்திவிட்டு; ஊரிலுள்ள மாடு மேய்க்கும் இளஞ் சிறுவர்கள் அவ் வெருமைகளின் மீதேறிக்கொண்டு தனியே மேய்த்து வருதற் கேகாநிற்கும் பெரிய இருள் நீங்கும் விடியற் காலத்து, விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் இவன் தந்தனன் என விருப்பத்தோடு வந்து உடுக்குந் தழையும் சூடுமாலையும் இவன் தந்தான் என்று; கலன் அணிந்த ஆயத்தொடு தகுதியுடைய நாணம் தன்னை வளைக்கப்பட்டு; என்னைப் பெறுமாறு தான் எடுத்துக்கொண்ட நோன்பின் பயனாகத் தைத்திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விளமகளே யான் உற்ற நோயை நீக்கும் மருந்தாயமைந்துள்ளாள்; அவளல்லது பிறிதொரு மருந்து இல்லைகாண் !; 
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது. - பூதன்தேவனார் 
81. முல்லை
இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,
பூண்கதில்- பாக!- நின் தேரே: பூண் தாழ் 5
ஆக வன முலைக் கரைவலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன் நகை காண்கம்!- 
உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே. 10
பாகனே வலிய வாளையுடைய நம்மரசன் மிக்க பகையைத் தணித்து விட்டனன் இங்கு இனிக் காரியமில்லை; (அகன்ற) பெரிய நிலம் குழியும்படி தங்காலாலே கொட்டி நடந்து விரைந்து நேராக ஓடுகின்ற களைப்பில்லாத வலிய கால்களையுடைய அரசரால் நன்கு மதிக்கப்படுகின்ற மாட்சிமைப்பட்ட நடைத் தொழிலையுடைய குதிரையை; கொய்யு மயிரையுடைய பிடரியிற் கட்டிய மணிகள் ஒலிப்ப நின் தேரிலே பூட்டிச் செலுத்துவாயாக !; பூண்கள் தாழ்ந்த மார்பிலுள்ள அழகிய கொங்கை முகட்டிலே கண்ணீர் தெறித்து விழும்படியாக அழதனளாகியுறையும்; அழகிய மாமை நிறத்தை யுடைய காதலி எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய் அட்டிற் சாலை புகுந்து விருந்துணவை வருந்தி யமைத்துக் களைப்படைந்துடைய மகிழ்ச்சியோடமைந்த இனிய நகையைக் கண்டு மகிழ்வோமாக !; 
வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது. - அகம்பல்மால் ஆதனார் 
82. குறிஞ்சி
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- 5
போகிய நாகப் போக்கு அருங் கவலை,
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,
கோள் நாய் கொண்ட கொள்ளைக் 10
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.  
யான்கொண்ட காமநோயும் அதனாலாய மெய்யின் தளர்ச்சியும் ஒழியுமாறு முயங்கிக் கிடந்த சிறப்புற்ற மூங்கில் போலும் அழகமைந்த தோளையுடையையாதலின் நல்ல நடையையுடைய கொடிச்சீ !; போகிய நாகப் போக்கு அருங் கவலை உயர்ந்த நாகமரங்களையுடைய செல்லுதற்கரிய கவர்த்த வழியினிடத்திலே; சிறிய கண்ணும் பெரிய சீற்றமுமுடைய ஆண்பன்றி; சேற்றில் உழலுதலானே அச்சேறு பூசப்பெற்ற கரிய முதுகு புழுதி படிந்திருப்ப அப் புழுதியுடனே விளங்கச் சென்று; சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் விழுந்துபட்டதாக; அங்ஙனம் படுதலும் வாரை அழித்து மொய்த்தனவாய்க் கொன்று நாய்கள் பற்றிக் கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை அவை கொண்டு போகாதபடி; கானவர் சென்று அவற்றை விலக்கிப் பன்றி யிறைச்சியைக் கொணரா நிற்கும்; சிறு குடியின்கண்ணே; முருகவேளைக் கலந்துடன் சென்ற வள்ளிநாச்சியாரைப்போல நீ என்னுடன் வருகின்றனையோ?; நின் வடிவின் ஒளி கண்ணில் வீசுதலானே யான் நின்னை நோக்கலாற்றல் ஆகாதேனாயினேன் அதனால் வேறொன்றனையும் எண்ணாதே கொள்; 
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது. - அம்மூவனார்
83. குறிஞ்சி
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், 5
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.  
எமது ஊர்முகத்தின் ஒள்ளிய பொய்கைத் துறையருகிலே பருத்த கடவுள் ஏறியிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து, உடன் உறை பழகிய தேயா வளைவாய்த் தௌ¢ கண் கூர் உகிர் வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை எம் மருகு ஒருசேர உறைதலானே பழக்கமுற்ற தேயாத வளைந்த வாயையும் தௌ¤ந்த கண்ணையும் கூரிய உகிரையும் உடைய வாயாகிய பறையோசையாலே பிறரை வருத்தாநிற்கும் வலிமை மிக்க கூகையே !; யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு, நின்னை விரும்பி நிரம்பக் கொடாநிற்பேம்; எம்பால் அன்பிற் குறைவு படாத கோட்பாட்டுடனே எம் காதலர் வருதலை விரும்பி யாம் இரவிலே துயில் கொள்ளாது உள்ளம் சுழன்று வைகும் பொழுது; யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக நின் கடிய குரலை எடுத்துக் குழறி எம்மை வருத்தாதே கொள் ! 
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது. - பெருந்தேவனார் 
84. பாலை
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,
திதலை அல்குலும் பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே,
பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், 5
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம்
ஏகுவர் என்ப, தாமே- தம்வயின் 10
இரந்தோர் மாற்றல் ஆற்றா
இல்லின் வாழ்க்கை வல்லாதோரே.  
தம்பால் வந்திரந்தவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவரது நசையை ஒழித்தற்கரிய இல்வாழ்க்கையிலே பயின்றறியாத நந் தலைவர்; என் கண்ணையும் தோளையும் தண்ணிய நறிய கூந்தலையும் திதலை பரந்த அல்குலையும் பலபடியாகச் சிறப்பித்துக் கூறி; நேற்றைப் பொழுதிலும் இங்குள்ளவராயிருந்தார், அது கழிந்தது; இற்றைப்பொழுது பெரிய நீர்ப்பரப்பை ஒத்த வெளிய பேய்த்தேரை, மரங்கள் இல்லாத நீண்டவிடத்தில் மான்கூட்டம் நீரென விரும்பிச் செல்லாநிற்கும்; மண்ணாற் செய்து சுடப்பட்ட தயிர்த்தாழியில் மத்தாற் கலக்கப்பட்டபோது வெப்பம் மிக்குழி நன்கு திரளாது சிதறிக்கிடந்த வெண்ணெய் போன்ற உப்புப் பூத்த களரையுடைய; ஓமை மரங்கள் நெருங்கிய காட்டகத்து வெயில் நிலைபெற்றிருந்த வெம்மையுடைய செல்லுதற்கரிய பாலையிலே; தாம் தமியராய்ச் செல்லுவர் என உழையர் கூறாநிற்பர்; யான் எங்ஙனம் ஆற்றுகிற்பேன், 
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது. 
85. குறிஞ்சி
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், 5
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி
வாரற்கதில்ல- தோழி!- சாரல்
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் 10
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே!  
தோழீ ! அழகிய குவளை மலர்போன்ற குளிர்ச்சியையுடைய நின் கண்களினின்று தௌ¤ந்த நீர் மிக வடிந்து விழவும் மூங்கிலை யொத்த பருத்த தோளிலணிந்த ஏனைய கலன்களை வெற்றி கொள்ளும் வளை நெகிழ்ந்து விழவும், அவற்றை நோக்கிப் பழிகூறும் இப்பழைய வூர் மிக அலர் தூற்றுமாயினும்; மலைச்சாரலிலே கானவன் எய்து கொணர்ந்த முட்பன்றியின் கொழுவிய தசைத் துண்டத்தைத் தேன் மணங்கமழும் கூந்தலையுடைய கொடிச்சி மகிழ்ந்தேற்றுக் கொண்டு; காந்தள் மிக்க சிறு குடியுலுள்ளார் பலர்க்கும் பகுத்துக் கொடாநிற்கும் உயர்ந்த மலை நாட்டையுடைய நங்காதலன் நின்பாலுள்ள விருப்பத்தாலே; குறுகிய வரிகளையுடைய கரிய புலிக்கு அச்சமுற்று விரைந்து செல்லாத நடையையுடைய தன்கன்றைப் பிடியானை ஆண்டு நின்று காத்துத் தங்காநிற்கும்; நீங்குதற்கரிய இருண் மிக்க கண்டார்க்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்ற சிறிய நெறியின் கண்ணே வாராதொழிவானாக; 
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது. - நல்விளக்கனார் 
86. பாலை
அறவர், வாழி- தோழி! மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த 5
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே!  
தோழீ, வீரர் கையிலுள்ள வேற்படைபோல விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய சிவதை வெள்ளி வட்டிலைப் போல மலரா நிற்கும் கடிய முன்பனியையுடைய அற்சிரக்காலத்து; நாம் நடுங்குமாறு பிரிந்து பின்பு; அழகு பொருந்தக் கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக்கற்களை இட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதக மென்னும் அணிபோன்ற வடிவினவாகி; பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலர; ஈங்கையின் நல்ல தளிர்கள் கண்டார்க்கு விருப்பம் வருமாறு நுடங்கா நிற்கும் முதிராத இளவேனிற் காலத்து; இன்று நம்மைக் கருதி வந்தாராகலின் நம் தலைவர் அறநெறி தவறுநரல்லர் காண்; அவர் நெடுங்காலம் வாழ்வாராக !; 
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. - நக்கீரர் 
87. நெய்தல்
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப் 5
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.  
தோழீ! அத்தலைவரது நாட்டின்கணுள்ள பெரிய அடியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்து அவற்றின் பராகம் கடலின் துறையிடத்து மேய்கின்ற இப்பியின் ஈரிய புறத்து மிக விழாநிற்கும்; சிறு குடியிலுள்ள பரதவர் மகிழும் மகிழ்ச்சியையும் பெரிய தண்ணிய கழிக்கரையிலுள்ள சோலையையும் நான் நினைந்த அப் பகற்பொழுதின்கண்ணே; ஊரின் உள்ளதாய மாமரத்திலிருக்கின்ற முட்போன்ற எயிற்றினையுடைய வெளவால் உயர்ந்தவொரு கிளையிற் சென்று பற்றித் தூங்கா நின்று துயிலுற்ற பொழுதிலே; தனக்குக் கிட்டப்பெறாத வெல்லும் போரையுடைய சோழர் குடியிற் பிறந்த ஆர்க்காட்டின் உளனாகிய அழிசி என்பவனது பெரிய காட்டின்கண் உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவுகண்டாற் போல யானும் அவரொடு முயங்கினதாகக் கனவுகாண; அவ்வின்பமெல்லாம் விழித்தவுடன் ஒழிந்து போயிற்று மன் ! 
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது. - நக்கண்ணையார்
88. குறிஞ்சி
யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை?
வருந்தல்; வாழி!- தோழி!- யாம் சென்று
உரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- 5
தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,
கண்ணீர் அருவியாக
அழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. 10
தோழீ ! நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ எதன்பொருட்டு மயங்குகின்றனை ? அவ்வண்ணம் வருந்தாதே கொள்! நீடுவாழ்வாயாக !; இத்துன்பத்தை அவர்பால் நாம்¢ சென்று கூறிவிட்டு வருதும் என்னுடன் எழுவாயாக! புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாங்கு உருகி உகுதல் அஞ்சுவல் பொருந்திய அலைகளையுடைய கடல் நீரால் விளைந்த உப்புக் குவடு மழையின்கண் அகப்பட்டாற் கரைந்தொழிதல் போல நீ உள்ளம் உருகியொழிதலுக்கு யான் அஞ்சா நிற்பேன்; தம் தலைவன் நம்மிடத்துச் செய்த கொடுமையை நினைந்து; அவருடைய பழங்கள் உதிர்கின்ற குன்றுகள்; நம்பாற் பெரிதும் அன்புடைமையாலே தம் வருத்தத்தை அடக்கிக் கொள்ள மாட்டாதே தங்கண்ணீர் அருவியாகப் பெருகும்படி அழாநிற்கும்; அதனை உவ்விடத்தே பாராய் ! அவர் மட்டும் இரங்குபவர் அல்லர்; 
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - நல்லந்துவனார் 
89. முல்லை
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழை
அழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே- தோழி!- வாரா
வன்கணாளரோடு இயைந்த 10
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!  
தோழீ ! கீழ்க்காற்றுச் செலுத்துகையினாலே ஆகாயத்திற் செறிவுற்று அலையிலுள்ள பிசிர்போல மலையினுச்சியை விருப்பத்தோடு ஏறி; ஒழுங்காக அமைந்து நிறைவுற்ற நிரம்பிய சூலையுடைய கரிய மேகம்; மிக்க மழையைப் பெய்தொழிந்த மழை அழிந்த கார்ப்பருவத்தின் இறுதியில்; மிக்க முன்பனிப் பருவத்தில் மயிர்கள் அமைந்த உழுந்தின் அகன்ற இலைகளெல்லாம் சிதையும்படி வீசி; நம்மை விட்டு நீங்காது நாள்தோறும் வருத்துகின்ற அன்பு செய்யாத வாடைக் காற்றானது; இதுகாறும் வாராதிருந்த வன்கண்மையுடைய தலைவரோடு ஒருபடியாயமைந்த துன்பத்தைச் செய்யும் மாலைப் பொழுதையும் வருத்தத்தையும் முற்பட விட்டுக்கொண்டு; பருமம் பூண்ட யானையானது தன் அயர்ச்சியாலே பெருமூச்சு விட்டாற்போல அவர் வந்த பிறகு இன்னும் வாராநிற்குமோ ? அங்ஙனம் வந்தாலும் யாதொரு தீங்கையுஞ் செய்யாதுகாண் !; 
'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. - இளம் புல்லூர்க் காவிதி 
90. மருதம்
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா,
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர, ஓடி, 5
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள்,
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,
நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா 10
நயன் இல் மாக்களொடு கெழீஇ,
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே!  
கூத்தயர்கின்ற விழாவின் ஒலியையுடைய இம்மூதூரின்கண்ணே ஆடைகளை ஆராய்ந்து கழுவுந்தன்மையிற் பெரிதும் தன் கை ஒழியாத வறுமையில்லாத ஆடையொலிப்பவள்; இரவிலே தோய்த்த சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று; கரிய பனைநாரினாலே திரித்த கயிற்றைப் பிணித்துத் தொங்கவிட்ட வூசலிலேறிப் பூப்போல் உண்கண்களையுடைய தன் ஆயத்தார் அதனை ஆட்டவுந் தான் ஆடாளாய், அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் அழுது மீளுகின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்தன்மையிற் குறைவுபட்ட சிலவாய வளைகளை யணிந்த பரத்தையாகிய பெதும்பைப் பருவத்தாள் ஓரிளமகளை; மீட்டும் ஊசலாடுகிற மிக்க தொழிலின் ஆரவாரத்திற் செய்யாத; விருப்பமற்ற மக்களொடு சேர்ந்து; இவ்வேந்தனது அவைக்களந்தான் பயனின்மையுடையதாயிரா நின்றது; இது மிக்க வியப்பு; அவளை ஆடச் செய்திருந்தால் அவள் ஊடாள்; தலைமகனும் அவளை நீங்கான்; ஆண்டு அவள் ஊடினமையால் இறைமகன் இங்கு வந்தான் போலும்; இனி இங்கு வாரா தொழிவானாக !; 
தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது. - அஞ்சில் அஞ்சியார் 
91. நெய்தல்
நீ உணர்ந்தனையே- தோழி!- வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், 5
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய,
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் 10
கடு மாப் பூண்ட நெடுந் தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?  
தோழீ ! மலர்கள் உதிரும்படி புன்னை பூத்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய; ஓசை முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலின் கண்ணே துழாவித் தன் பெடையோடு ஒருசேரச் சென்று இரையைத் தேடுகின்ற நீண்ட காலையுடைய நாரை; மெல்லிய சிவந்த சிறிய கட்கடையையுடைய சிறிய மீன்களைப் பிடித்து, மேலோங்கிய கிளையின்மேலுள்ள கூட்டின்கணிருந்து தாயைக் கூவியழைக்கின்ற தன் பிள்ளையின் வாயிற்படக் கொடுக்கின்ற; கடற்கரைச் சோலையையும் (அழகிய) கொல்லையையும் கெடாத வளவிய மிக்க உணவையும் பெரிய நல்ல கொடையையுமுடைய நமது சிறுகுடி யெங்கும் பொலிவு பெற; புள் ஒலித்தாற்போன்ற சுழற்சியையுடைய பெரிய ஒலியையுடைய மணிகள் பிணைத்த மாலையணிந்த கடிதாகச் செல்லுங் குதிரைபூட்டிய நெடிய தேரின்மேல்; நீண்ட கடற்கரைத் தலைவனாகிய நம் காதலன் பகற் பொழுதிலே பலருங் காண இங்கு வருவதனை; நீ உணர்ந்தனையோ ?; இங்ஙனம் வெளிப்படையின் வருதலானே வரைவு கருதி வந்தனன் போலும்; 
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது. - பிசிராந்தையார் 
92. பாலை
உள்ளார்கொல்லோ- தோழி!- துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் 5
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!  
தோழீ ! முதுவேனிற்காலத்து வருந்திய நடையையுடைய ஓந்தியாகிய வழலை தன் துணையோடு வரிகளையுடைய மரலின் இளமடல் போல வாட்டமுற்று அவ்விடத்திற் கிடத்தலையுடைய; வறட்சியுற்ற குன்றத்துச்சியின் பக்கத்திலுள்ள வேட்டுவச்சேரியை அடுத்த அகன்ற வாயையுடைய கிணற்றினின்று; பயனைத் தருகின்ற ஆனிரை யுண்ணுமாறு எடுத்து வைத்த தௌ¤ந்த நீர்ப்பத்தரைப் புல்லிய தலையையுடைய இளம்பிடி தன் கன்றுடனே நீர் உண்ண வேண்டி; அப்பத்தரின் வாயை மூடிய விற்பொறியை முறித்துப் போகட்டு அவற்றை உண்பித்துச் செல்லாநிற்கும் கொல்லுந் தொழிலையுடைய களிற்றொருத்தலையுடைய சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்; தாம் சென்றிறுத்த விடத்தும் நம்மைக் கருதினாரில்லைபோலும்; அவர் திறத்து வருந்தியாவதென் ? 
பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது. 
93. குறிஞ்சி
'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள் அருவி மாலையின் இழிதர,
கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! 5
செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,
நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் 10
மயிர்க் கண் முரசினோரும் முன்
உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.  
கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர; சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாட எக்காலத்தும் சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப் பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே !; யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக ! நின் வாழ்நாள் நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் பக்கங்கள்¢ மறையப் பூண்ட திருந்திய கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ்ந்த கொங்கைகள் நாண் துன்புறுத்தலாலே வருத்தமுற்ற பழங்கண்கொண்ட பசலையையும் உடையன ஆதலால்; ஒலிக்கின்ற குரலையுடைய மயிர் சீவாத தோல் போர்த்த இடமகன்ற நின் மணமுரசொலி கேட்டலினாலே நம்மைக் காதலன் வரையவந்தனன் போலும் என்று கருதா நிற்கும் அந்நாள் அளவைக்குள்; இவளுக்கு உயிர் இருக்கும்படியான குறியைக் காணுதல் இனிப் பெறுதற்கரிய தொன்றாகுங்காண்; 
வரைவு கடாயது. - மலையனார் 
94. நெய்தல்
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி- 
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் 5
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்- தோழி!- தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே!  
தோழி ! காமநோயானது நிலைகுலைத்தலாலே கலக்கமுற்ற வலியழிந்த பொழுதில் அன்போடு வந்து அருகிலிருந்து நயமொழி கூறி ஆற்றுவித்தல் ஆண்மகனுக்குரிய சிறந்த பண்பாகும், அங்ஙனம் யான் காமநோயால் வருந்திய பொழுது நம் காதலன் அருகு வந்திருந்து ஆற்றினானுமல்லன்; கைத்தொழில் வல்ல கம்மியன் அழகு பொருந்தக் கழுவித் தூய்மை செய்யாத பசிய முத்து தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல; யானும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கி என் பெண் தன்மையாலே தகைத்துக்கொள்ளும்படியாக; அலராமற் குவிந்த பூங்ககொத்துக்களையுடைய புன்னையின் கண்ணே புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்தலான் மலர்ந்த கடற்கரைத் தலைவனாகிய; முன்னமே அவன்பால் ஆர்வமுடையேனாக வேண்டி அவனது மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ ? 
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - இளந்திரையனார் 
95. குறிஞ்சி
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,
அதவத் தீம் கனி அன்ன செம் முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, 5
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. 10
பக்கத்திலே குழலொலிப்பப் பலவாச்சியங்களு முழங்க ஆடுகின்ற கழைக்கூத்தி நடந்த முறுக்குண்ட புரியை யுடைய வலிய கயிற்றின் மீது; இனிய அத்திப் பழம் போன்ற சிவந்த முகத்தையும் பஞ்சுபோன்ற தலையையுமுடைய குரங்கினது வலிய குட்டி பற்றித் தூங்காநிற்ப; அதனைக் கண்ட குறச்சாதியாரின் இளமகார் பெரிய பாறையின்கணுள்ள மூங்கிலின்மேல் விசைத்து எழுந்து ஏறி நின்று தாளங் கொட்டாநிற்கும் அந்தக் குன்றின் இடத்துளதாகும்; கொழுவிய காவற்காடு சூழ்ந்த சீறூர்; என்னாற் காதலிக்கப்பட்ட நறுமணங் கமழுங் கூந்தலையுடைய கொடிச்சி அச் சீறூரின் கண் இருப்பவளாவாள்; அவளாலே பிணிப்புண்ட என்னெஞ்சமும் அக் கொடிச்சியின் கையகத்ததாயிராநின்றது; அவள் இரங்கி விடுத்தாலன்றி என்னெஞ்சம் பிறரால் விடுவித்தற்கும் இயலாதாகுங்காண்; 
தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது. - கோட்டம்பலவனார் 
96. நெய்தல்
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்,
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,
புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 5
துவரினர் அருளிய துறையே; அதுவே,
கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,
தமியர் சென்ற கானல்' என்று ஆங்கு
உள்ளுதோறு உள்ளுதோறு உருகி, 10
பைஇப் பையப் பசந்தனை பசப்பே.  
தோழீ ! நறு மணம் கமழ்கின்ற பூவையுடைய ஞாழலின் சிறந்த மலரும் புன்னையின் சிறந்த மலரும் உதிர்ந்து பரவி நெருங்கிய வெளிய மணற்பரப்பினொருபால்; என்னைப் புதுவதாக இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த சோலை இதுவே என்றும்; பொலிவு பொருந்திய கடலில் நம்மோடு நீராடி என் முதுகிலே தாழ்ந்திருண்ட விளங்கிய ஐம்பாலாக வகுக்கும் கூந்தலைப் பிழிந்து துவட்டினராயருளிய துறை உதுவே என்றும்; வளைந்த தண்டு உயர்ந்த நீண்ட காம்புடைய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழையை அழகுபெற எனக்கு உடுப்பித்துத் தமியராய்ச் சென்றுவிட்ட கழிக்கரைச் சோலை அதுவே யென்றும்; அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளமுருகி மெல்ல மெல்லப் பசப்பை மேற்கொண்டு பசந்து காட்டினை; இனி எவ்வாறுய்குவாய்?; 
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது. - கோக்குளமுற்றனார் 
97. முல்லை
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
அதனினும் கொடியள் தானே, 'மதனின் 5
துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே.  
தோழீ ! நெடுங்காலம் முன்னுண்டாகி ஆழ்ந்த பெரிய புண்ணின் வாய் நிணங் காயாத துன்பத்தையுடைய மார்பினிடத்தில் வேற்படையைக் குற்றிப்பாய்ச்சினாற் போல; என் அருகிலிருந்து பிரியாதனவாய் வருந்திக் கூவுங் குயிலினுங் காட்டில் நன்றாகத் தௌ¤ந்த நீர் கெழுமி வருகின்ற யாறு மிகக் கொடியதாயிரா நின்றது; அழகுடைய பஞ்சு போன்ற மேலே புறவிதழையுடைய பசிய குருக்கத்திமலருடனே விரவிய சிறு சண்பக மலரையும் விலைக்குக் கொள்ளீரோ ? என்று; அம்மலர்களை இட்டு வைத்தலால் வண்டுகள் சூழ்கின்ற கடகப் பெட்டியைக் கைக்கொண்டு திரியாநிற்கும்; சோலையின்கணுள்ள உழுதுண்ணு மாக்களின் ஒப்பற்ற இளமகளாவாள்தான்; அவ் யாற்றினுங்காட்டில் மிகக் கொடியளாயிராநின்றாள்; இங்ஙனமாகையில் யான் எவ்வாறு ஆற்றியுய்குவன் ? 
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது. - மாறன் வழுதி 
98. குறிஞ்சி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, 5
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- 10
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!  
முள்ளம் பன்றியின் முட்போன்ற பருத்த மயிரையுடைய பிடரும் சிறிய கண்ணும் வயலிற் சென்றுண்ணும் விருப்பமுமுடைய பன்றி; உயர்ந்த மலையிடத்துள்ள இடமகன்ற தினைக் கொல்லையிலே சென்று மேயும் பொருட்டுப் பெரிய இயந்திரமமைந்த புழைவழியிலே சென்று புகும்பொழுது; தாழாது விரைந்து நல்ல பக்கத்திலிருந்து பல்லியடித்தலும் அதனை அறிந்து ஆங்குச் சென்றால் ஊறு நிகழும் என்று அஞ்சி; மெல்ல மெல்லப் பின்னே மீண்டுவந்து தன் கல்முழையிலுள்ள பள்ளியிடத்தே தங்காநிற்கும்; மலைநாடனே ! எந்தையாலே பாதுகாக்கப்படுகின்ற காவலையுடைய அகன்ற மாளிகையிடத்துத் துஞ்சாமற் காக்குங் காவலர்தாம் சிறிது அயர்ந்திருக்கும் பருவமறிந்து; நீ இரவின்கண் வந்து முயங்கிச் செல்லும் அதனினும் காட்டில் நாள்தோறும் நீ வரும் நெறியின் ஏதத்தைக் கருதுவதனாலே துயிலப் பெறாது என்கண்ணும் கொடிதாயிராநின்றது; அன்றியும் நின்பாற் சென்று வாராத என்பால் அன்பற்ற என்னெஞ்சமும் கொடிதாயிராநின்றது காண் !; 
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது. - உக்கிரப் பெருவழுதி 
99. முல்லை
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தௌத்த பருவம் காண்வர
இதுவோ?' என்றிசின்- மடந்தை!- மதி இன்று, 5
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- 
பிடவமும், கொன்றையும் கோடலும்- 
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. 10
மடந்தாய்! தண்ணிதாகிய நீர்மை முற்றும் இல்லாத சென்று கடக்க முடியாத நீண்ட நெறியில்; வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் வீசுகின்ற வெப்பத்தாலே நோக்குவார் அஞ்சும்படியாக நடுக்கத்தைச் செய்யும் கொடிய காட்டின்கண்ணே சென்ற காதலர்; தாம் வருவேமென்று அழகு பொருந்தத் தௌ¤யக் கூறிய பருவம் இதுதானோ ? என்று வினவாநின்றனை, இஃதன்று; அறிவில்லாது பருவகாலத்தை மறந்து கடனீரையுண்டதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை நோக்கி இது கார்காலமென மறதியுற்றவுள்ளத்துடனே; அறியா தனவாய்ப் பிடவுங் கொன்றையுங் காந்தளும் இன்னும் பலவும்; அஃறிணையாகிய அறிவில்லாப் பொருள்களாதலின் மிக மலர்ந்துவிட்டன; அவற்றைக் கண்டு நீ கார்காலமென மயங்காதேகொள் !; 
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது. - இளந்திரையனார் 
100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல் 5
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் 10
மண் ஆர் கண்ணின் அதிரும்,
நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.  
தோழீ ! பெரிய உகிரையுடைய கார்காலத்து உலாவுங் கொக்கினது கூரிய மூக்குப்போன்ற ஆழ்ந்த நீரின் முளைத்த ஆம்பற் பூவையுடைய; தண்ணிய துறையையுடைய ஊரன் நெய்ம் மணங் கமழ்கின்ற என் கூந்தலைப் பற்றி யீர்த்து வைத்து என் கையிலுள்ள வெளிய கோற்றொழிலமைந்த ஒளியையுடைய வளையைக் கழற்றிக் கோடலினாகிய பூசலாலே; ஊர்முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக் கொண்டு வருகின்ற இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மையுடைய மலையமான் திருவோலக்கத்தின் முன்பு; வேற்று நாட்டிருந்து வந்த பெரிய இசையையுடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வதுபோலும் அதிர்ச்சியோடு; நன்மையை மேற்கொள்ளும் அவன் தான் நடுங்கிய வருத்தத்தையுற்ற நிலையை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலாலே யான் நகாநிற்பேன்காண் !; 
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது. - பரணர்

76. பாலை
வருமழை கரந்த வால் நிற விசும்பின்நுண் துளி மாறிய உலவை அம் காட்டுஆல நீழல் அசைவு நீக்கி,அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,வருந்தாது ஏகுமதி- வால் இழைக் குறுமகள்!- 5இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னைவீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்கானல் வார் மணல் மரீஇ,கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!  
தூய கலன்களை யணிந்த இளமடந்தாய்!; இந்த மெல்லிய பெரிய பழிச்சொல்லைத் தூற்றுதலையுடைய நினது ஊரின்கண் உள்ள புன்னையின் காம்பிற்ற மலர் மிகுதியாக வுதிர்ந்ததனாலே தேன் மணம் வீசுகின்ற புலவினையுடைய கழிக்கரைச் சோலையின்; மிக்க மணலிலே நடந்து இப்பொழுது கற்கள் பதிதலாலே சிவந்த நின்னுடைய மெல்லிய அடிகள் வருந்தாதிருத்தற்பொருட்டு; வருகின்ற மழை பெய்யாதொழிந்த வெளிய நிறத்தையுடைய விசும்பினின்று விழுகின்ற நுண்ணிய துளிகளும் இல்லையாகிய; காற்றுச் சுழன்று வீசும் அழகிய காட்டு நெறியகத்து ஆலமரத்தின் நிழலிலே தங்கி இளைப்பாறி; அஞ்சுமிடங் காணினும் ஆங்கு அஞ்சாது மற்றும் எவ்வெவ் விடத்தே தங்கவேண்டினும் அவ்வவ்விடத்தே தங்கிச் சிறிதும் வருத்தமுறாமல் ஏகுவாயாக !; 
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது. - அம்மூவனார் 

77. குறிஞ்சி
மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்பெருந் துடி கறங்கப் பிற புலம் புக்கு, அவர்அருங் குறும்பு எருக்கி, அயா உயிர்த்தாஅங்குஉய்த்தன்றுமன்னே- நெஞ்சே!- செவ் வேர்ச்சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின் 5சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்ஊறலஞ் சேரிச் சீறூர், வல்லோன்வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளைஅகன் தொடி செறித்த முன்கை, ஒள் நுதல், 10திதலை அல்குல், குறுமகள்குவளை உண்கண் மகிழ் மட நோக்கே.  
நெஞ்சே ! சிவந்த வேர்களையுடைய கிளைகடோறும் தூங்கும் பழங்கள் மிக்க பலாவின் சுளைகளையுடைய முன்றிலின்கண் மனையோளானவள்; இரவில் நெருங்கி விழுகின்ற வெளிய அருவியின் ஒலியைக் கேட்டு உறங்காநிற்கும் பேரூரல்லாத (சிலவாய) சேரிகளையுடைய சீறூரின்கண்ணே; கைவல் வினைஞன் வாளரத்தா லராவிய வளைந்த அழகிய ஒளியையுடைய வளையும் அகன்ற தொடியும் அணிந்த முன்னங்கையையும்; ஒள்ளிய நெற்றியையும் தித்தி படர்ந்த அல்குலையும் இளமையையுமுடைய நம் காதலியின் குவளைபோன்ற மையுண்ட கண்களின் மகிழ்ச்சியையுடைய இளம் பார்வையானது; மலை போன்ற யானைமீது ஏறி நடத்திச்சென்று புலையனால் முழக்கப்படும் பெரிய துடியானது ஒலிக்க வேற்றுநாட்டிற் புகுந்து அப்பகைவரது கடத்தற்கரிய அரணை அழித்து அயாவுயிர்த்தாற்போல; நம்மை இவள் பால் மிகச்செலுத்தாநின்றது; ஆதலின் இவள் உடன்பட்டுக் கூறுங்காறும் நீ முயன்று வருந்தாதே கொள் !; 
பின்னின்ற தலைவன்நெஞ்சிற்கு உரைத்தது. - கபிலர் 

78. நெய்தல்
கோட் சுறா வழங்கும் வாள் கேழ்இருங் கழிமணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, 5நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்;கேட்டிசின்- வாழி, தோழி!- தெண் கழிவள் வாய் ஆழி உள் வாய் தோயினும்,புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மாவலவன் கோல் உற அறியா, 10உரவு நீர்ச் சேர்ப்பன், தேர்மணிக் குரலே!  
தோழீ ! வாழி ! தௌ¤ந்த கழியின்கண்ணுள்ள நீரிடத்துப் பெருமை வாய்ந்த தேர் உருளின் உள்வாயளவு அமுங்கப் பெறினும் பறவை பறந்து சென்றாற்போன்ற பொன்னாற் செய்யப்பட்ட கலமுதலியவற்றை யுடைய மனஞ்செருக்கிய குதிரை; தேர்ப்பாகன் தன் தாற்றுக்கோலாலே தூண்டப்பட்டறியாத பரவிய கடனீர்ச் சேர்ப்பனது தேரின் மணியொலிக்குங் குரலைக் கேட்பாயாக !; கொல்லுந் தன்மையுள்ள சுறாமீன் இயங்குகின்ற ஒள்ளிய நிறத்தையுடைய பெரிய கழியிடத்து மலர்ந்த நீலமணி போன்ற நெய்தலின் கரியமலர் நிறையுமாறு; புன்னையின் பொன் போன்ற நுண்ணிய தாதுபரக்கும்; வீழூன்றிய அடியையுடைய தாழைமலர் கமழ்கின்ற கடற்கரையிலுள்ள சோலையின்கண்ணே; துன்பம் வந்து மேன்மேல் வருத்துகின்ற ஆதித்த மண்டிலம் மறையும் மாலைப் பொழுதில்; காமநோய் மிகுதலானாகிய மிக்க துன்பத்தினின்றும் நாம் இனி இங்கு உய்ந்து வாழ்துங்காண் !; 
வரைவு மலிந்தது. - கீரங்கீரனார் 

79. பாலை
'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ,கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் 5பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?'என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று- அம்ம! வாழி, தோழி!- யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? 10
தோழீ வாழி ! இதனைக் கேட்பாயாக !; ஈங்கையின் மூடியிருக்கின்ற தேன் துளி மிகத்திரளும் (புதிய) மலர்களானவை; கூரையையுடைய நல்ல மனையின்கணுள்ள குறிய தொடியையுடைய மகளிர் தம் முன்றிலின் மணலிடத்து விளையாடுதற்கிட்ட கழங்குபோலக் கற்பாறையின்மேல் உதிர்ந்து பரவாநிற்கும்; அழகு பொருந்திய மக்கள் இயங்குதற்கு அரிய கவர்த்த நெறியிலே; பிரிந்து போயினீ ரெனினும் இப்பருவத்து வந்து எம்மைக் கூடி முயங்கியுறைய வேண்டியிருக்க; எம்மைக் கூடியிருந்த நீவிர் இப்பொழுது பிரிந்து போதற்கு நினைந்திருப்பதினுங்காட்டில் அரிய கொடுமை பிறிதுமொன்றுண்டோ? என்று நாம் அவர்பாற் சென்று கூறி; நமது விருப்பத்தைச் சொல்லுகிற்போம்; சொல்லாதிருப்பின் அவர் அகலினும் அகன்று போவார்காண் !; அங்ஙனம் அகல்வாராயின் திண்ணமாக என்னுயிருக்கே ஏதம் வந்துற்றது; ஆதலின் நாம் நேரிற் கூறி நிறுத்துவதன்றி நம் காதலருடைய செலவை வேறெத்தகைய சூழ்ச்சியாலே தவிர்க்கிற்போம்? ஆராய்ந்துகாண் !; 
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கண்ணகனார் 

80. மருதம்
'மன்ற எருமை மலர் தலைக் காரான்இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு,ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,தழையும் தாரும் தந்தனன், இவன்' என, 5இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,தைஇத் திங்கள் தண் கயம் படியும்பெருந் தோட் குறுமகள் அல்லது,மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.  
தொழுவத்துள்ள அகன்ற தலையையுடைய கார் எருமையின் மிக இனிய பால் நிரம்பக் கறந்துகொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்து நிறுத்திவிட்டு; ஊரிலுள்ள மாடு மேய்க்கும் இளஞ் சிறுவர்கள் அவ் வெருமைகளின் மீதேறிக்கொண்டு தனியே மேய்த்து வருதற் கேகாநிற்கும் பெரிய இருள் நீங்கும் விடியற் காலத்து, விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் இவன் தந்தனன் என விருப்பத்தோடு வந்து உடுக்குந் தழையும் சூடுமாலையும் இவன் தந்தான் என்று; கலன் அணிந்த ஆயத்தொடு தகுதியுடைய நாணம் தன்னை வளைக்கப்பட்டு; என்னைப் பெறுமாறு தான் எடுத்துக்கொண்ட நோன்பின் பயனாகத் தைத்திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விளமகளே யான் உற்ற நோயை நீக்கும் மருந்தாயமைந்துள்ளாள்; அவளல்லது பிறிதொரு மருந்து இல்லைகாண் !; 
சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது. - பூதன்தேவனார் 

81. முல்லை
இரு நிலம் குறையக் கொட்டிப்பரிந்தின்றுஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவிகொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,பூண்கதில்- பாக!- நின் தேரே: பூண் தாழ் 5ஆக வன முலைக் கரைவலம் தெறிப்பஅழுதனள் உறையும் அம் மா அரிவைவிருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇயமுறுவல் இன் நகை காண்கம்!- உறு பகை தணித்தனன், உரவு வாள் வேந்தே. 10
பாகனே வலிய வாளையுடைய நம்மரசன் மிக்க பகையைத் தணித்து விட்டனன் இங்கு இனிக் காரியமில்லை; (அகன்ற) பெரிய நிலம் குழியும்படி தங்காலாலே கொட்டி நடந்து விரைந்து நேராக ஓடுகின்ற களைப்பில்லாத வலிய கால்களையுடைய அரசரால் நன்கு மதிக்கப்படுகின்ற மாட்சிமைப்பட்ட நடைத் தொழிலையுடைய குதிரையை; கொய்யு மயிரையுடைய பிடரியிற் கட்டிய மணிகள் ஒலிப்ப நின் தேரிலே பூட்டிச் செலுத்துவாயாக !; பூண்கள் தாழ்ந்த மார்பிலுள்ள அழகிய கொங்கை முகட்டிலே கண்ணீர் தெறித்து விழும்படியாக அழதனளாகியுறையும்; அழகிய மாமை நிறத்தை யுடைய காதலி எமக்கு விருந்து செய்யும் விருப்பினளாய் அட்டிற் சாலை புகுந்து விருந்துணவை வருந்தி யமைத்துக் களைப்படைந்துடைய மகிழ்ச்சியோடமைந்த இனிய நகையைக் கண்டு மகிழ்வோமாக !; 
வினை முற்றிய தலைவன்தேர்ப்பாகற்கு உரைத்தது. - அகம்பல்மால் ஆதனார் 

82. குறிஞ்சி
நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்தவேய் வனப்புற்ற தோளை நீயே,என் உயவு அறிதியோ, நல் நடைக் கொடிச்சி!முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல, நின்உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே- 5போகிய நாகப் போக்கு அருங் கவலை,சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇ,கோள் நாய் கொண்ட கொள்ளைக் 10கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே.  
யான்கொண்ட காமநோயும் அதனாலாய மெய்யின் தளர்ச்சியும் ஒழியுமாறு முயங்கிக் கிடந்த சிறப்புற்ற மூங்கில் போலும் அழகமைந்த தோளையுடையையாதலின் நல்ல நடையையுடைய கொடிச்சீ !; போகிய நாகப் போக்கு அருங் கவலை உயர்ந்த நாகமரங்களையுடைய செல்லுதற்கரிய கவர்த்த வழியினிடத்திலே; சிறிய கண்ணும் பெரிய சீற்றமுமுடைய ஆண்பன்றி; சேற்றில் உழலுதலானே அச்சேறு பூசப்பெற்ற கரிய முதுகு புழுதி படிந்திருப்ப அப் புழுதியுடனே விளங்கச் சென்று; சுருக்குவார் வைத்த வெறும் பிளப்பில் விழுந்துபட்டதாக; அங்ஙனம் படுதலும் வாரை அழித்து மொய்த்தனவாய்க் கொன்று நாய்கள் பற்றிக் கொண்ட மிகுதிப்பட்ட தசைகளை அவை கொண்டு போகாதபடி; கானவர் சென்று அவற்றை விலக்கிப் பன்றி யிறைச்சியைக் கொணரா நிற்கும்; சிறு குடியின்கண்ணே; முருகவேளைக் கலந்துடன் சென்ற வள்ளிநாச்சியாரைப்போல நீ என்னுடன் வருகின்றனையோ?; நின் வடிவின் ஒளி கண்ணில் வீசுதலானே யான் நின்னை நோக்கலாற்றல் ஆகாதேனாயினேன் அதனால் வேறொன்றனையும் எண்ணாதே கொள்; 
தோழியிற்புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது. - அம்மூவனார்

83. குறிஞ்சி
எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇயகடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல், 5எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்துஞ்சாது அலமரு பொழுதின்,அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே.  
எமது ஊர்முகத்தின் ஒள்ளிய பொய்கைத் துறையருகிலே பருத்த கடவுள் ஏறியிருக்கும் முதிய மரத்தின் மீதிருந்து, உடன் உறை பழகிய தேயா வளைவாய்த் தௌ¢ கண் கூர் உகிர் வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை எம் மருகு ஒருசேர உறைதலானே பழக்கமுற்ற தேயாத வளைந்த வாயையும் தௌ¤ந்த கண்ணையும் கூரிய உகிரையும் உடைய வாயாகிய பறையோசையாலே பிறரை வருத்தாநிற்கும் வலிமை மிக்க கூகையே !; யாம் யாட்டினிறைச்சியுடனே ஆய்ந்தமைத்த நெய்யைக் கலந்த வெள்ளிய சோற்றினை வெள்ளெலியின் சூட்டிறைச்சியோடு சேரவிட்டு, நின்னை விரும்பி நிரம்பக் கொடாநிற்பேம்; எம்பால் அன்பிற் குறைவு படாத கோட்பாட்டுடனே எம் காதலர் வருதலை விரும்பி யாம் இரவிலே துயில் கொள்ளாது உள்ளம் சுழன்று வைகும் பொழுது; யாவரும் அஞ்சி விழித்துக் கொள்ளும்படியாக நின் கடிய குரலை எடுத்துக் குழறி எம்மை வருத்தாதே கொள் ! 
இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது. - பெருந்தேவனார் 

84. பாலை
கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,திதலை அல்குலும் பல பாராட்டி,நெருநலும் இவணர் மன்னே! இன்றே,பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், 5சுடுமண் தசும்பின் மத்தம் தின்றபிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்னஉவர் எழு களரி ஓமை அம் காட்டு,வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருஞ் சுரம்ஏகுவர் என்ப, தாமே- தம்வயின் 10இரந்தோர் மாற்றல் ஆற்றாஇல்லின் வாழ்க்கை வல்லாதோரே.  
தம்பால் வந்திரந்தவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அவரது நசையை ஒழித்தற்கரிய இல்வாழ்க்கையிலே பயின்றறியாத நந் தலைவர்; என் கண்ணையும் தோளையும் தண்ணிய நறிய கூந்தலையும் திதலை பரந்த அல்குலையும் பலபடியாகச் சிறப்பித்துக் கூறி; நேற்றைப் பொழுதிலும் இங்குள்ளவராயிருந்தார், அது கழிந்தது; இற்றைப்பொழுது பெரிய நீர்ப்பரப்பை ஒத்த வெளிய பேய்த்தேரை, மரங்கள் இல்லாத நீண்டவிடத்தில் மான்கூட்டம் நீரென விரும்பிச் செல்லாநிற்கும்; மண்ணாற் செய்து சுடப்பட்ட தயிர்த்தாழியில் மத்தாற் கலக்கப்பட்டபோது வெப்பம் மிக்குழி நன்கு திரளாது சிதறிக்கிடந்த வெண்ணெய் போன்ற உப்புப் பூத்த களரையுடைய; ஓமை மரங்கள் நெருங்கிய காட்டகத்து வெயில் நிலைபெற்றிருந்த வெம்மையுடைய செல்லுதற்கரிய பாலையிலே; தாம் தமியராய்ச் செல்லுவர் என உழையர் கூறாநிற்பர்; யான் எங்ஙனம் ஆற்றுகிற்பேன், 
பிரிவிடை ஆற்றாளாய தலைவி தோழிக்குச் சொல்லியது. 

85. குறிஞ்சி
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், 5ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறிவாரற்கதில்ல- தோழி!- சாரல்கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடுகாந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் 10ஓங்கு மலை நாடன், நின் நசையினானே!  
தோழீ ! அழகிய குவளை மலர்போன்ற குளிர்ச்சியையுடைய நின் கண்களினின்று தௌ¤ந்த நீர் மிக வடிந்து விழவும் மூங்கிலை யொத்த பருத்த தோளிலணிந்த ஏனைய கலன்களை வெற்றி கொள்ளும் வளை நெகிழ்ந்து விழவும், அவற்றை நோக்கிப் பழிகூறும் இப்பழைய வூர் மிக அலர் தூற்றுமாயினும்; மலைச்சாரலிலே கானவன் எய்து கொணர்ந்த முட்பன்றியின் கொழுவிய தசைத் துண்டத்தைத் தேன் மணங்கமழும் கூந்தலையுடைய கொடிச்சி மகிழ்ந்தேற்றுக் கொண்டு; காந்தள் மிக்க சிறு குடியுலுள்ளார் பலர்க்கும் பகுத்துக் கொடாநிற்கும் உயர்ந்த மலை நாட்டையுடைய நங்காதலன் நின்பாலுள்ள விருப்பத்தாலே; குறுகிய வரிகளையுடைய கரிய புலிக்கு அச்சமுற்று விரைந்து செல்லாத நடையையுடைய தன்கன்றைப் பிடியானை ஆண்டு நின்று காத்துத் தங்காநிற்கும்; நீங்குதற்கரிய இருண் மிக்க கண்டார்க்கு அச்சத்தைத் தோற்றுவிக்கின்ற சிறிய நெறியின் கண்ணே வாராதொழிவானாக; 
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது. - நல்விளக்கனார் 

86. பாலை
அறவர், வாழி- தோழி! மறவர்வேல் என விரிந்த கதுப்பின் தோலபாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்கை வல் வினைவன் தையுபு சொரிந்த 5சுரிதக உருவின ஆகிப் பெரியகோங்கம் குவி முகை அவிழ, ஈங்கைநல் தளிர் நயவர நுடங்கும்முற்றா வேனில் முன்னி வந்தோரே!  
தோழீ, வீரர் கையிலுள்ள வேற்படைபோல விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய சிவதை வெள்ளி வட்டிலைப் போல மலரா நிற்கும் கடிய முன்பனியையுடைய அற்சிரக்காலத்து; நாம் நடுங்குமாறு பிரிந்து பின்பு; அழகு பொருந்தக் கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக்கற்களை இட்டிழைத்த பொன்னாலாகிய சுரிதக மென்னும் அணிபோன்ற வடிவினவாகி; பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலர; ஈங்கையின் நல்ல தளிர்கள் கண்டார்க்கு விருப்பம் வருமாறு நுடங்கா நிற்கும் முதிராத இளவேனிற் காலத்து; இன்று நம்மைக் கருதி வந்தாராகலின் நம் தலைவர் அறநெறி தவறுநரல்லர் காண்; அவர் நெடுங்காலம் வாழ்வாராக !; 
குறித்த பருவத்தின்வினைமுடித்து வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. - நக்கீரர் 

87. நெய்தல்
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல்ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டுநெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,அது கழிந்தன்றே- தோழி!- அவர் நாட்டுப் 5பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னைதுறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே.  
தோழீ! அத்தலைவரது நாட்டின்கணுள்ள பெரிய அடியையுடைய புன்னையின் குளிர்ந்த அரும்புகள் மலர்ந்து அவற்றின் பராகம் கடலின் துறையிடத்து மேய்கின்ற இப்பியின் ஈரிய புறத்து மிக விழாநிற்கும்; சிறு குடியிலுள்ள பரதவர் மகிழும் மகிழ்ச்சியையும் பெரிய தண்ணிய கழிக்கரையிலுள்ள சோலையையும் நான் நினைந்த அப் பகற்பொழுதின்கண்ணே; ஊரின் உள்ளதாய மாமரத்திலிருக்கின்ற முட்போன்ற எயிற்றினையுடைய வெளவால் உயர்ந்தவொரு கிளையிற் சென்று பற்றித் தூங்கா நின்று துயிலுற்ற பொழுதிலே; தனக்குக் கிட்டப்பெறாத வெல்லும் போரையுடைய சோழர் குடியிற் பிறந்த ஆர்க்காட்டின் உளனாகிய அழிசி என்பவனது பெரிய காட்டின்கண் உள்ள நெல்லிப்பழத்தின் இனிய புளிச்சுவையைத் தான் பெற்றதாகக் கனவுகண்டாற் போல யானும் அவரொடு முயங்கினதாகக் கனவுகாண; அவ்வின்பமெல்லாம் விழித்தவுடன் ஒழிந்து போயிற்று மன் ! 
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது. - நக்கண்ணையார்

88. குறிஞ்சி
யாம் செய் தொல் வினைக்கு எவன்பேதுற்றனை?வருந்தல்; வாழி!- தோழி!- யாம் சென்றுஉரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்குஉருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்- 5தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது,கண்ணீர் அருவியாகஅழுமே, தோழி! அவர் பழம் முதிர் குன்றே. 10
தோழீ ! நாம் செய்த பழவினை அங்ஙனமாயிருக்க அதனை ஆராயாது நீ எதன்பொருட்டு மயங்குகின்றனை ? அவ்வண்ணம் வருந்தாதே கொள்! நீடுவாழ்வாயாக !; இத்துன்பத்தை அவர்பால் நாம்¢ சென்று கூறிவிட்டு வருதும் என்னுடன் எழுவாயாக! புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாங்கு உருகி உகுதல் அஞ்சுவல் பொருந்திய அலைகளையுடைய கடல் நீரால் விளைந்த உப்புக் குவடு மழையின்கண் அகப்பட்டாற் கரைந்தொழிதல் போல நீ உள்ளம் உருகியொழிதலுக்கு யான் அஞ்சா நிற்பேன்; தம் தலைவன் நம்மிடத்துச் செய்த கொடுமையை நினைந்து; அவருடைய பழங்கள் உதிர்கின்ற குன்றுகள்; நம்பாற் பெரிதும் அன்புடைமையாலே தம் வருத்தத்தை அடக்கிக் கொள்ள மாட்டாதே தங்கண்ணீர் அருவியாகப் பெருகும்படி அழாநிற்கும்; அதனை உவ்விடத்தே பாராய் ! அவர் மட்டும் இரங்குபவர் அல்லர்; 
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - நல்லந்துவனார் 

89. முல்லை
கொண்டல் ஆற்றி விண்தலைச்செறீஇயர்,திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழைஅழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5அகல் இலை அகல வீசி, அகலாதுஅல்கலும் அலைக்கும் நல்கா வாடை,பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,இன்னும் வருமே- தோழி!- வாராவன்கணாளரோடு இயைந்த 10புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே!  
தோழீ ! கீழ்க்காற்றுச் செலுத்துகையினாலே ஆகாயத்திற் செறிவுற்று அலையிலுள்ள பிசிர்போல மலையினுச்சியை விருப்பத்தோடு ஏறி; ஒழுங்காக அமைந்து நிறைவுற்ற நிரம்பிய சூலையுடைய கரிய மேகம்; மிக்க மழையைப் பெய்தொழிந்த மழை அழிந்த கார்ப்பருவத்தின் இறுதியில்; மிக்க முன்பனிப் பருவத்தில் மயிர்கள் அமைந்த உழுந்தின் அகன்ற இலைகளெல்லாம் சிதையும்படி வீசி; நம்மை விட்டு நீங்காது நாள்தோறும் வருத்துகின்ற அன்பு செய்யாத வாடைக் காற்றானது; இதுகாறும் வாராதிருந்த வன்கண்மையுடைய தலைவரோடு ஒருபடியாயமைந்த துன்பத்தைச் செய்யும் மாலைப் பொழுதையும் வருத்தத்தையும் முற்பட விட்டுக்கொண்டு; பருமம் பூண்ட யானையானது தன் அயர்ச்சியாலே பெருமூச்சு விட்டாற்போல அவர் வந்த பிறகு இன்னும் வாராநிற்குமோ ? அங்ஙனம் வந்தாலும் யாதொரு தீங்கையுஞ் செய்யாதுகாண் !; 
'பொருள் முற்றி மறுத்தந்தான்' எனக் கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. - இளம் புல்லூர்க் காவிதி 

90. மருதம்
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,உடையோர் பன்மையின் பெருங் கை தூவா,வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்தபுகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடுவாடா மாலை துயல்வர, ஓடி, 5பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள்,அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள்ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா 10நயன் இல் மாக்களொடு கெழீஇ,பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே!  
கூத்தயர்கின்ற விழாவின் ஒலியையுடைய இம்மூதூரின்கண்ணே ஆடைகளை ஆராய்ந்து கழுவுந்தன்மையிற் பெரிதும் தன் கை ஒழியாத வறுமையில்லாத ஆடையொலிப்பவள்; இரவிலே தோய்த்த சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று; கரிய பனைநாரினாலே திரித்த கயிற்றைப் பிணித்துத் தொங்கவிட்ட வூசலிலேறிப் பூப்போல் உண்கண்களையுடைய தன் ஆயத்தார் அதனை ஆட்டவுந் தான் ஆடாளாய், அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் அழுது மீளுகின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்தன்மையிற் குறைவுபட்ட சிலவாய வளைகளை யணிந்த பரத்தையாகிய பெதும்பைப் பருவத்தாள் ஓரிளமகளை; மீட்டும் ஊசலாடுகிற மிக்க தொழிலின் ஆரவாரத்திற் செய்யாத; விருப்பமற்ற மக்களொடு சேர்ந்து; இவ்வேந்தனது அவைக்களந்தான் பயனின்மையுடையதாயிரா நின்றது; இது மிக்க வியப்பு; அவளை ஆடச் செய்திருந்தால் அவள் ஊடாள்; தலைமகனும் அவளை நீங்கான்; ஆண்டு அவள் ஊடினமையால் இறைமகன் இங்கு வந்தான் போலும்; இனி இங்கு வாரா தொழிவானாக !; 
தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது. - அஞ்சில் அஞ்சியார் 

91. நெய்தல்
நீ உணர்ந்தனையே- தோழி!- வீ உகப்புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடுஉடங்கு இரை தேரும் தடந் தாள் நாரைஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன், 5மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய,புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் 10கடு மாப் பூண்ட நெடுந் தேர்நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?  
தோழீ ! மலர்கள் உதிரும்படி புன்னை பூத்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய; ஓசை முழங்குகின்ற குளிர்ச்சியையுடைய கடலின் கண்ணே துழாவித் தன் பெடையோடு ஒருசேரச் சென்று இரையைத் தேடுகின்ற நீண்ட காலையுடைய நாரை; மெல்லிய சிவந்த சிறிய கட்கடையையுடைய சிறிய மீன்களைப் பிடித்து, மேலோங்கிய கிளையின்மேலுள்ள கூட்டின்கணிருந்து தாயைக் கூவியழைக்கின்ற தன் பிள்ளையின் வாயிற்படக் கொடுக்கின்ற; கடற்கரைச் சோலையையும் (அழகிய) கொல்லையையும் கெடாத வளவிய மிக்க உணவையும் பெரிய நல்ல கொடையையுமுடைய நமது சிறுகுடி யெங்கும் பொலிவு பெற; புள் ஒலித்தாற்போன்ற சுழற்சியையுடைய பெரிய ஒலியையுடைய மணிகள் பிணைத்த மாலையணிந்த கடிதாகச் செல்லுங் குதிரைபூட்டிய நெடிய தேரின்மேல்; நீண்ட கடற்கரைத் தலைவனாகிய நம் காதலன் பகற் பொழுதிலே பலருங் காண இங்கு வருவதனை; நீ உணர்ந்தனையோ ?; இங்ஙனம் வெளிப்படையின் வருதலானே வரைவு கருதி வந்தனன் போலும்; 
தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது. - பிசிராந்தையார் 

92. பாலை
உள்ளார்கொல்லோ- தோழி!- துணையொடுவேனில் ஓதி பாடு நடை வழலைவரி மரல் நுகும்பின் வாடி, அவணவறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் 5பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர,வில் கடிந்து ஊட்டின பெயரும்கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!  
தோழீ ! முதுவேனிற்காலத்து வருந்திய நடையையுடைய ஓந்தியாகிய வழலை தன் துணையோடு வரிகளையுடைய மரலின் இளமடல் போல வாட்டமுற்று அவ்விடத்திற் கிடத்தலையுடைய; வறட்சியுற்ற குன்றத்துச்சியின் பக்கத்திலுள்ள வேட்டுவச்சேரியை அடுத்த அகன்ற வாயையுடைய கிணற்றினின்று; பயனைத் தருகின்ற ஆனிரை யுண்ணுமாறு எடுத்து வைத்த தௌ¤ந்த நீர்ப்பத்தரைப் புல்லிய தலையையுடைய இளம்பிடி தன் கன்றுடனே நீர் உண்ண வேண்டி; அப்பத்தரின் வாயை மூடிய விற்பொறியை முறித்துப் போகட்டு அவற்றை உண்பித்துச் செல்லாநிற்கும் கொல்லுந் தொழிலையுடைய களிற்றொருத்தலையுடைய சுரத்தின்கண்ணே சென்ற தலைவர்; தாம் சென்றிறுத்த விடத்தும் நம்மைக் கருதினாரில்லைபோலும்; அவர் திறத்து வருந்தியாவதென் ? 
பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது. 

93. குறிஞ்சி
'பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,வரை வெள் அருவி மாலையின் இழிதர,கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!' எனப்பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட! 5செல்கம்; எழுமோ; சிறக்க, நின் ஊழி!மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள்,நல்கூர் நுசுப்பின், மெல் இயல், குறுமகள்பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்தியபழங்கண் மாமையும் உடைய; தழங்கு குரல் 10மயிர்க் கண் முரசினோரும் முன்உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அருங்குரைத்தே.  
கிளைதொறுந் தேனிறால் தொடுத்தன தூங்காநிற்பப் பெரிய பழங்கள் குலைகுலையாகப் பழுக்க வரையின்கணுள்ள வெளிய அருவி மாலை போல இழிந்துவர; சாரலிலுள்ள கொல்லைகள்தோறும் வரகுசாமை முதலாகிய பதினறு வகைக் கூலமும் விதைக்கப்பட்டுப் பொலிய; நாட எக்காலத்தும் சிறுகுன்றுகள் பொருந்திய இவ்வெற்பு வளப்பமுடையதென்று அதனைவிட்டுப் பிரிந்துசெல்பவர் இரங்கா நிற்கும் பெரிய மலைநாடனே !; யாம் செல்லுகின்றோம் எழுந்து போவாயாக ! நின் வாழ்நாள் நீடுவாழ்வதாக! மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத்தோள் நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள் பக்கங்கள்¢ மறையப் பூண்ட திருந்திய கலன்களையுடைய முன்பு பருத்த தோளையும் நுணுகிய இடையையும் மெல்லிய சாயலையும் உடைய இவ்விளமகளுடைய; பூண் தாழ்ந்த கொங்கைகள் நாண் துன்புறுத்தலாலே வருத்தமுற்ற பழங்கண்கொண்ட பசலையையும் உடையன ஆதலால்; ஒலிக்கின்ற குரலையுடைய மயிர் சீவாத தோல் போர்த்த இடமகன்ற நின் மணமுரசொலி கேட்டலினாலே நம்மைக் காதலன் வரையவந்தனன் போலும் என்று கருதா நிற்கும் அந்நாள் அளவைக்குள்; இவளுக்கு உயிர் இருக்கும்படியான குறியைக் காணுதல் இனிப் பெறுதற்கரிய தொன்றாகுங்காண்; 
வரைவு கடாயது. - மலையனார் 

94. நெய்தல்
நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி- கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅமண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப் 5புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்என்ன மகன்கொல்- தோழி!- தன்வயின்ஆர்வம் உடையர் ஆகி,மார்பு அணங்குறுநரை அறியாதோனே!  
தோழி ! காமநோயானது நிலைகுலைத்தலாலே கலக்கமுற்ற வலியழிந்த பொழுதில் அன்போடு வந்து அருகிலிருந்து நயமொழி கூறி ஆற்றுவித்தல் ஆண்மகனுக்குரிய சிறந்த பண்பாகும், அங்ஙனம் யான் காமநோயால் வருந்திய பொழுது நம் காதலன் அருகு வந்திருந்து ஆற்றினானுமல்லன்; கைத்தொழில் வல்ல கம்மியன் அழகு பொருந்தக் கழுவித் தூய்மை செய்யாத பசிய முத்து தனது மிக்க ஒளியை மறைத்துக் காட்டினாற்போல; யானும் புணர்ச்சியால் நிகழ்ந்த மிக்க நலனைப் புலப்படாமல் அரிதாகத் தாங்கி என் பெண் தன்மையாலே தகைத்துக்கொள்ளும்படியாக; அலராமற் குவிந்த பூங்ககொத்துக்களையுடைய புன்னையின் கண்ணே புலவு நாற்றத்தையுடைய நீர் தெறித்தலான் மலர்ந்த கடற்கரைத் தலைவனாகிய; முன்னமே அவன்பால் ஆர்வமுடையேனாக வேண்டி அவனது மார்பால் வருத்தமுற்ற என் இயல்பை அறியாத காதலன் என்ன மகன் எனக் கூறப்படுவானோ ? 
தலைமகன்சிறைப்புறமாக, தலைவி, தோழிக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது. - இளந்திரையனார் 

95. குறிஞ்சி
கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,அதவத் தீம் கனி அன்ன செம் முகத்துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, 5குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்குன்றகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;சீறூரோளே, நாறு மயிர்க் கொடிச்சி;கொடிச்சி கையகத்ததுவே, பிறர்விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே. 10
பக்கத்திலே குழலொலிப்பப் பலவாச்சியங்களு முழங்க ஆடுகின்ற கழைக்கூத்தி நடந்த முறுக்குண்ட புரியை யுடைய வலிய கயிற்றின் மீது; இனிய அத்திப் பழம் போன்ற சிவந்த முகத்தையும் பஞ்சுபோன்ற தலையையுமுடைய குரங்கினது வலிய குட்டி பற்றித் தூங்காநிற்ப; அதனைக் கண்ட குறச்சாதியாரின் இளமகார் பெரிய பாறையின்கணுள்ள மூங்கிலின்மேல் விசைத்து எழுந்து ஏறி நின்று தாளங் கொட்டாநிற்கும் அந்தக் குன்றின் இடத்துளதாகும்; கொழுவிய காவற்காடு சூழ்ந்த சீறூர்; என்னாற் காதலிக்கப்பட்ட நறுமணங் கமழுங் கூந்தலையுடைய கொடிச்சி அச் சீறூரின் கண் இருப்பவளாவாள்; அவளாலே பிணிப்புண்ட என்னெஞ்சமும் அக் கொடிச்சியின் கையகத்ததாயிராநின்றது; அவள் இரங்கி விடுத்தாலன்றி என்னெஞ்சம் பிறரால் விடுவித்தற்கும் இயலாதாகுங்காண்; 
தலைமகன் பாங்கற்கு, 'இவ்விடத்து இத்தன்மைத்து' என உரைத்தது. - கோட்டம்பலவனார் 

96. நெய்தல்
'இதுவே, நறு வீ ஞாழல் மா மலர்தாஅய்,புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 5துவரினர் அருளிய துறையே; அதுவே,கொடுங் கழி நிவந்த நெடுங் கால் நெய்தல்அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇ,தமியர் சென்ற கானல்' என்று ஆங்குஉள்ளுதோறு உள்ளுதோறு உருகி, 10பைஇப் பையப் பசந்தனை பசப்பே.  
தோழீ ! நறு மணம் கமழ்கின்ற பூவையுடைய ஞாழலின் சிறந்த மலரும் புன்னையின் சிறந்த மலரும் உதிர்ந்து பரவி நெருங்கிய வெளிய மணற்பரப்பினொருபால்; என்னைப் புதுவதாக இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த சோலை இதுவே என்றும்; பொலிவு பொருந்திய கடலில் நம்மோடு நீராடி என் முதுகிலே தாழ்ந்திருண்ட விளங்கிய ஐம்பாலாக வகுக்கும் கூந்தலைப் பிழிந்து துவட்டினராயருளிய துறை உதுவே என்றும்; வளைந்த தண்டு உயர்ந்த நீண்ட காம்புடைய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழையை அழகுபெற எனக்கு உடுப்பித்துத் தமியராய்ச் சென்றுவிட்ட கழிக்கரைச் சோலை அதுவே யென்றும்; அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளமுருகி மெல்ல மெல்லப் பசப்பை மேற்கொண்டு பசந்து காட்டினை; இனி எவ்வாறுய்குவாய்?; 
சிறைப்புறமாகத்தோழி தலைவிக்கு உரைப்பாளாய் வரைவு கடாயது. - கோக்குளமுற்றனார் 

97. முல்லை
அழுந்து படு விழுப் புண் வழும்பு வாய்புலராஎவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்கு,பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;அதனினும் கொடியள் தானே, 'மதனின் 5துய்த் தலை இதழ பைங் குருக்கத்தியொடுபித்திகை விரவு மலர் கொள்ளீரோ?' எனவண்டு சூழ் வட்டியள் திரிதரும்தண்டலை உழவர் தனி மட மகளே.  
தோழீ ! நெடுங்காலம் முன்னுண்டாகி ஆழ்ந்த பெரிய புண்ணின் வாய் நிணங் காயாத துன்பத்தையுடைய மார்பினிடத்தில் வேற்படையைக் குற்றிப்பாய்ச்சினாற் போல; என் அருகிலிருந்து பிரியாதனவாய் வருந்திக் கூவுங் குயிலினுங் காட்டில் நன்றாகத் தௌ¤ந்த நீர் கெழுமி வருகின்ற யாறு மிகக் கொடியதாயிரா நின்றது; அழகுடைய பஞ்சு போன்ற மேலே புறவிதழையுடைய பசிய குருக்கத்திமலருடனே விரவிய சிறு சண்பக மலரையும் விலைக்குக் கொள்ளீரோ ? என்று; அம்மலர்களை இட்டு வைத்தலால் வண்டுகள் சூழ்கின்ற கடகப் பெட்டியைக் கைக்கொண்டு திரியாநிற்கும்; சோலையின்கணுள்ள உழுதுண்ணு மாக்களின் ஒப்பற்ற இளமகளாவாள்தான்; அவ் யாற்றினுங்காட்டில் மிகக் கொடியளாயிராநின்றாள்; இங்ஙனமாகையில் யான் எவ்வாறு ஆற்றியுய்குவன் ? 
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது. - மாறன் வழுதி 

98. குறிஞ்சி
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றிஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறிநூழை நுழையும் பொழுதில், தாழாதுபாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, 5மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,இரவின் வரூஉம் அதனினும் கொடிதே- 10வைகலும் பொருந்தல் ஒல்லாக்கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!  
முள்ளம் பன்றியின் முட்போன்ற பருத்த மயிரையுடைய பிடரும் சிறிய கண்ணும் வயலிற் சென்றுண்ணும் விருப்பமுமுடைய பன்றி; உயர்ந்த மலையிடத்துள்ள இடமகன்ற தினைக் கொல்லையிலே சென்று மேயும் பொருட்டுப் பெரிய இயந்திரமமைந்த புழைவழியிலே சென்று புகும்பொழுது; தாழாது விரைந்து நல்ல பக்கத்திலிருந்து பல்லியடித்தலும் அதனை அறிந்து ஆங்குச் சென்றால் ஊறு நிகழும் என்று அஞ்சி; மெல்ல மெல்லப் பின்னே மீண்டுவந்து தன் கல்முழையிலுள்ள பள்ளியிடத்தே தங்காநிற்கும்; மலைநாடனே ! எந்தையாலே பாதுகாக்கப்படுகின்ற காவலையுடைய அகன்ற மாளிகையிடத்துத் துஞ்சாமற் காக்குங் காவலர்தாம் சிறிது அயர்ந்திருக்கும் பருவமறிந்து; நீ இரவின்கண் வந்து முயங்கிச் செல்லும் அதனினும் காட்டில் நாள்தோறும் நீ வரும் நெறியின் ஏதத்தைக் கருதுவதனாலே துயிலப் பெறாது என்கண்ணும் கொடிதாயிராநின்றது; அன்றியும் நின்பாற் சென்று வாராத என்பால் அன்பற்ற என்னெஞ்சமும் கொடிதாயிராநின்றது காண் !; 
இரவுக்குறி வந்து ஒழுகும்தலைவனைத் தோழி வரைவு கடாயது. - உக்கிரப் பெருவழுதி 

99. முல்லை
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்தாம் வரத் தௌத்த பருவம் காண்வரஇதுவோ?' என்றிசின்- மடந்தை!- மதி இன்று, 5மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழைபொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- பிடவமும், கொன்றையும் கோடலும்- மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. 10
மடந்தாய்! தண்ணிதாகிய நீர்மை முற்றும் இல்லாத சென்று கடக்க முடியாத நீண்ட நெறியில்; வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் வீசுகின்ற வெப்பத்தாலே நோக்குவார் அஞ்சும்படியாக நடுக்கத்தைச் செய்யும் கொடிய காட்டின்கண்ணே சென்ற காதலர்; தாம் வருவேமென்று அழகு பொருந்தத் தௌ¤யக் கூறிய பருவம் இதுதானோ ? என்று வினவாநின்றனை, இஃதன்று; அறிவில்லாது பருவகாலத்தை மறந்து கடனீரையுண்டதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை நோக்கி இது கார்காலமென மறதியுற்றவுள்ளத்துடனே; அறியா தனவாய்ப் பிடவுங் கொன்றையுங் காந்தளும் இன்னும் பலவும்; அஃறிணையாகிய அறிவில்லாப் பொருள்களாதலின் மிக மலர்ந்துவிட்டன; அவற்றைக் கண்டு நீ கார்காலமென மயங்காதேகொள் !; 
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது. - இளந்திரையனார் 

100. மருதம்
உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர்மாரிக் கொக்கின் கூரல் அன்னகுண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின்வான் கோல் எல் வளை வெளவிய பூசல் 5சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின்மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப்பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் 10மண் ஆர் கண்ணின் அதிரும்,நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே.  
தோழீ ! பெரிய உகிரையுடைய கார்காலத்து உலாவுங் கொக்கினது கூரிய மூக்குப்போன்ற ஆழ்ந்த நீரின் முளைத்த ஆம்பற் பூவையுடைய; தண்ணிய துறையையுடைய ஊரன் நெய்ம் மணங் கமழ்கின்ற என் கூந்தலைப் பற்றி யீர்த்து வைத்து என் கையிலுள்ள வெளிய கோற்றொழிலமைந்த ஒளியையுடைய வளையைக் கழற்றிக் கோடலினாகிய பூசலாலே; ஊர்முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக் கொண்டு வருகின்ற இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மையுடைய மலையமான் திருவோலக்கத்தின் முன்பு; வேற்று நாட்டிருந்து வந்த பெரிய இசையையுடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வதுபோலும் அதிர்ச்சியோடு; நன்மையை மேற்கொள்ளும் அவன் தான் நடுங்கிய வருத்தத்தையுற்ற நிலையை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலாலே யான் நகாநிற்பேன்காண் !; 
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது. - பரணர்

by Swathi   on 29 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.