நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். இத்தலத்தில் சனிபகவான் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில்
காட்சியளிக்கிறார்.சுற்றிலும் வயல் வெளிகள் இருக்க, அதன் மத்தியில் அமைந்த கோயில் இது. கோயில் முகப்பில் ஐந்து காகங்கள் பூட்டிய தேரில், சனீஸ்வரர்
வருவது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சன்னதி முன் மண்டபத்தில் மேல்புறம் வாகனத்துடன் கூடிய நவக்கிரகங்கள் ஓவிய வடிவில் உள்ளனர். சுவாமி
பல்லாண்டுகளாக சன்னதி இல்லாமல் இருந்ததன் அடிப்படையில், தற்போதும் சனீஸ்வரர் சன்னதியில் மேற்கூரை கிடையாது. காற்று, மழை, வெயில் அனைத்தும்
சனீஸ்வரர் மீது விழும்படியாக சன்னதி அமைந்துள்ளது. இவருக்கு சிவனுக்கு உகந்த வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு.சனிக்கிழமைகளில் சனி ஓரை
நேரத்தில் சனீஸ்வரருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படும். பின், கோபூஜையுடன், விசேஷ யாகசாலை பூஜை நடக்கும். காணும் பொங்கல் பண்டிகையன்று
இவருக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கும்.சனீஸ்வரரின் தந்தை சூரியபகவான். இவரே, இங்கு தீர்த்தமாக இருக்கிறார். கோயில் அருகேயுள்ள வயலின் மத்தியில்
பாஸ்கர தீர்த்தம் உள்ளது.
நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானை, சிலை வடிவில் தரிசித்திருப்பீர்கள். இத்தலத்தில் சனிபகவான் யந்திரம் பொறித்த, சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். சுற்றிலும் வயல் வெளிகள் இருக்க, அதன் மத்தியில் அமைந்த கோயில் இது. கோயில் முகப்பில் ஐந்து காகங்கள் பூட்டிய தேரில், சனீஸ்வரர் வருவது போன்ற சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
சன்னதி முன் மண்டபத்தில் மேல்புறம் வாகனத்துடன் கூடிய நவக்கிரகங்கள் ஓவிய வடிவில் உள்ளனர். சுவாமி பல்லாண்டுகளாக சன்னதி இல்லாமல் இருந்ததன் அடிப்படையில், தற்போதும் சனீஸ்வரர் சன்னதியில் மேற்கூரை கிடையாது. காற்று, மழை, வெயில் அனைத்தும் சனீஸ்வரர் மீது விழும்படியாக சன்னதி அமைந்துள்ளது. இவருக்கு சிவனுக்கு உகந்த வில்வத்தால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
சனிக்கிழமைகளில் சனி ஓரை நேரத்தில் சனீஸ்வரருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படும். பின்,கோபூஜையுடன், விசேஷ யாகசாலை பூஜை நடக்கும். காணும் பொங்கல் பண்டிகையன்று இவருக்கு 108 பால்குட அபிஷேகம் நடக்கும்.சனீஸ்வரரின் தந்தை சூரியபகவான். இவரே, இங்கு தீர்த்தமாக இருக்கிறார். கோயில் அருகேயுள்ள வயலின் மத்தியில் பாஸ்கர தீர்த்தம் உள்ளது. |