368 அங்கட் பிசைந்தகட் டெழுபசித் தழன்முழுகி யழுபுலிக் குருளையுண்ண - வன்பினின் சுவைநனி பழுத்துவட் டெறியுமமு தனையபால் வெள்ளமருளுந், திங்கட் கொழுந்தணி பிரானெனப் பரசமைய சிங்கப் பறழ்க்குவயிறு - தேக்கியெதிர் கொள்ளவின் பாலருளு மம்மைநின் சேடியர்கள் சூழநின்று, வெங்கட் கடுங்கொலைய வேழக் குழாத்தையிகல் வெற்புக் குழாத்தொடுங்கீழ் - மேலுற வுருட்டித் திரைக்கைகொடு பொன்னுமழன் மின்னுமணி யுந்தரளமும், பொங்கக் கொழித்துச் செழித்துச் சுழித்துவரு பொன்னிநீ ராடியருளே - பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (1)
369 முற்றுங் கயற்றொகுதி கட்குடைந் திரியுமிள மோட்டாமை புறவடிக்கு - முன்னிலா தோடும்வியல் வால்வளை களங்கண்டு முரிதரும் வராலலவனு, மற்றுங்கணைக்கான் முழந்தா ளினைக்கண்டு மறுகுமென் றுரைசெய்தமர - மாதர்கொண் டாடவவர் தொகுதிநடு நின்றுநல மருவுமலை யரையன்மகணீ, பற்றுங் குலைக்கண்வளர் கந்திகள் கழுத்திறப் பாகற் பழங்கள்கிழியப் - பந்திவளர் தேமாங் கனிக்குலை முறிந்திடப் பரிதிமணி வயிரமுத்தம், பொற்றிரைக் கையாலெடுத்தெறிந் தார்த்துவரு பொன்னிநீ ராடியருளே - பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (2)
370 திருமலர்க் கார்க்குழ லவிழ்ந்துசை வலமெனத் திகழ்தரக் குழையடர்ந்து - செறிகட் கருங்குவளை செங்குவளை பூப்பநகை செய்யொளியின் முழுகியாங்குக், குருமலர் முருக்கிதழ் விளர்ப்பநுழை நுண்ணிடைக் கொடிதுவண் டொசியவமரர் - கோற்றொடி மடந்தைமார் மொய்ப்பவடி யாருளங் குடிகொண் டிருக்குமம்மே, வெருவவரு வெம்புலியை யம்புலியின் மோதியுகண் மீனையம் மீனின்மோதி - வெள்ளைக் களிற்றொடு கருங்களிறு முட்டவியன் விண்ணத் தெடுத்தெறிந்து, பொருகட லகட்டைக் கிழித்துச் சுழித்துச்செல் பொன்னிநீ ராடியருளே - பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (3)
371 தண்ணற வொழுக்கிமக ரந்தஞ் சிதர்ந்தசெந் தாமரை மலர்க்கானினுட் - டாவில்பொற் புடைநடைக் கன்னியன் னப்பெடை தயங்குவது போலுமெழில்சே, ரொண்ணிற வுடுக்கண நடுப்பொலியும் வெண்ணில வுடுத்தெழுந் திங்கள்போலு - முறுதுணைச் சேடியர்கள் சூழநடு நின்றிமய வுயர்வரைத் தோன்றுபிடியே, மண்ணிறை யிரப்பவொரு முனிவாய் நுழைந்துசெவி வருகங்கை போலாதுவிண் - வளரிறை யிரப்பவொரு முனிகமண் டலநின்று வார்ந்தளவி லுயிர்வளர்த்துப், புண்ணியம் பூத்துலகி லெஞ்ஞான்று மன்னிச்செல் பொன்னிநீ ராடியருளே - பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (4)
372 கயல்பாய் கருங்கட் டுணைச்சேடி மார்களிரு கைமருங் குறநின்றுசெங் - கமலக்கை யானினது திருமேனி வருடவொளி காட்டரிச னப்பொடியுமெல், லியல்பாய் நறுங்குங்கு மப்பொடியு நானமு மிழுக்குதக ரமுநனியளைஇ - யேர்பெறக் குடைதோறு மம்மணமு மம்மைநின் னியற்கைமண முந்தழைப்ப, முயல்பாய் பனித்துண்ட மாலைப் பிராற்கிகலி முன்வந்த தென்றுவெங்கண் - மூரித் தடக்கைமத வானையை யுருட்டிவிட மூண்டெழத் தந்ததென்று, புயல்பாய் நெடுங்கடலை மோதியதி லிட்டுமகிழ் பொன்னிநீ ராடியருளே - பொன்னியல் சிறந்தவெயின் மன்னிய வுறந்தைமயில் பொன்னிநீ ராடியருளே. (5)
வேறு.
373 அம்ம வடுக்கற் பொறையாற்றா தம்ம வோவென் றரற்றுமிடை யயில்வே லனுக்கி யம்பலைக்கு மங்கண் மடவார் பயில்பொழிற்கண் விம்மு கருக்கொள் குயினதிர்ந்து விரியுஞ் சினையை மடக்கியதன் மீது தவழ்த லைந்தருக்கள் விதிர்ப்ப வடர்ப்ப தாலுமெரி தும்மு நுதிவாட் பகையுடன்மேற் றோற்ற முடைய தாலுநெடுஞ் சுரர்கோ னூர்தி தனைநிறுவித் துனிசெய் யாமற் றகைதல் பொரூஉம் பொம்மல் வளஞ்சே ருறந்தைநகர்ப் பொன்னே புதுநீ ராடுகவே புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (6)
374 களிமிக் குடன்று வீரமணங் கல்லிற் கமழ வினனுடலக் கடறு புகுந்து திறல்வானங் கலந்து சூர்மெல் லியர்ப்புணரு மொளிமிக் கவர்போல் வாளைதம்மி லுடன்று நடுமண் டபத்தூணத் துலவாப் புலவு மணநாற வுரிஞி யெழுந்து குலைக்கமுகி லளிமொய்த் தொளிர்தே னடைகீறி யதன்வாய்ப் புகுந்து வான்யாற்றை யணுகிப் பன்மீ னொடுகலவி யன்பிற் புணர்ந்து விளையாடும் புளினத் தடஞ்சேர் திருவுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (7)
375 வருந்தி யுயிர்த்த வேற்றைநனி வருத்தம் புரியும் படையைநெடு மாலோர் பிறப்பி லாதரித்த வலிய பகைகண் டவன்முன்னோ னிருந்த திணையிற் புகுந்துபகை யியற்றல் போலம் மான்மனையா ளில்லைக் கறித்துக் குதட்டிமக னெடுக்கும் படைக்கா டுழக்கியுயி ரருந்து நமனை யடர்த்தவரு ளறிந்தெம் மான்பொற் சடைக்கடுக்கை யமருந் திணையுட் புகாதுகவை யடிய பிணர்க்கோட் டிணைமேதி பொருந்து மருதத் திருவுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (8)
376 உலகத் துயிர்கட் குணவாக்கி யுணவு மாகு மிதிற்கந்த முறாதென் பார்முன் தோன்றியசேய்க் கொருபேர் கந்த னெனலறியார் பலரு ம·து நிற்கநமைப் பரிக்குங் குணத்தான் மிகுகந்தம் பரப்ப லாமென் றுனிக்குமுதம் பங்கே ருகமே முதன்மலரா வலர்முத் தரும்பி மரகதங்காய்த் தடர்செம் பவளம் பழுத்துமிழு மந்தண் கந்திப் பொழினடுவ ணாவிப் புனற்கு மிக்கமணம் புலர்தற் கரிதாய்ச் செயுமுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (9)
377 அங்கண் வருக்கைக் கனிவிரலா லகழ வகழக் குழிந்தாழ்ந்த வதுகண் டுட்சென் றொருகடுவ னவிருஞ் சுளைகொண் டெழும்வேலை தெங்கிற் கவியொன் றுகுத்தபழஞ் செறிந்தவ் வழிமாற் றிடக்குருகுச் சிலம்போ வெனவுட் டிகைத்தனைத் தெளிந்து நீக்கி வெளிவந்து தங்கு பிலத்து ணின்றுவழி தகைகற் சிதறி வந்திளைய தம்பி யொடும்போர் பொருதான்போற் றாயக் கடுவ னொடும்பொருஞ்சீர்ப் பொங்கர் மலிந்த திருவுறந்தைப் பொன்னே புதுநீ ராடுகவே புனிதற் குடன்முன் னான்கானாய் பொன்னிப் புதுநீ ராடுகவே. (10)
|