|
|||||
புதிய தொழில் நுட்பத்தில் 100 ஆண்டு பழமையான கோயிலை நகர்த்தி உயர்த்த திட்டம்! |
|||||
குடியாத்தத்தில் 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் கோயிலை ஒரு அடி உயர்த்தி, 7 அடி பின் நோக்கி நகர்த்தும் பணியை தொடங்கி உள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மயானக்கொள்ளை பிரசித்தி பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இக்கோயில் சாலையைவிட பள்ளத்தில் உள்ளது. இதன் கார ணமாக மழைக் காலங்களில் மழைநீர் வெள்ளமாகக் கோயிலுக்குள் புகுந்துவிடும். இதனால் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்படும்.
எனவே, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கோயிலை உயர்த்தியும் முழுமையாக பின்நோக்கி நகர்த்தியும் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டது.
இந்தப் பணி முடிந்ததும் கோயி லுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் கோயிலை உயர்த்திப் பின்நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் ஒரு வாரத்தில் 7 அடிக்கு கோயிலை பின்நோக்கி நகர்த்த திட்டமிட்டுள்ளனர்.
குடியாத்தத்தில் 100 ஆண்டுகள் பழமையான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழில் நுட்பத்தில் கோயிலை ஒரு அடி உயர்த்தி, 7 அடி பின் நோக்கி நகர்த்தும் பணியை தொடங்கி உள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாழையாத்தம் பஜார் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. இக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் மயானக்கொள்ளை பிரசித்தி பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்துவர். இக்கோயில் சாலையைவிட பள்ளத்தில் உள்ளது. இதன் கார ணமாக மழைக் காலங்களில் மழைநீர் வெள்ளமாகக் கோயிலுக்குள் புகுந்துவிடும். இதனால் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, நவீன தொழில்நுட்ப உதவியுடன் கோயிலை உயர்த்தியும் முழுமையாக பின்நோக்கி நகர்த்தியும் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டது. இந்தப் பணி முடிந்ததும் கோயி லுக்கு கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கோயிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் கோயிலை உயர்த்திப் பின்நோக்கி நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 1 அடி வீதம் ஒரு வாரத்தில் 7 அடிக்கு கோயிலை பின்நோக்கி நகர்த்த திட்டமிட்டுள்ளனர். |
|||||
by on 17 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|