LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

நினைவுகள் ..

எனது

சோகங்கள்கூட

சோகச் சட்டை

போட்டுத் திரிகின்றன ...


சந்தோசம்

என் வீட்டுக் கதவைத்தவிற

எல்லாக் கதவுகளையும்

தட்டிவிட்டுப் போகிறது ...


உன் வார்த்தைகள்

இதயம் முழுவதும்

வியாபித்துக் கொண்டு

ஓயாது குத்திக் கிழிக்கின்றன ...


புறக்கணிக்கப் பட்டதன்

காரணம் தேடித் தேடி

துவண்டுபோய்

அடியற்ற மரமாய்

சாய்ந்து கிடக்கிறது

என் அன்பு சாம்ராஜ்யம் ...


ஆரவாரமாய்

திரிந்த

என் மனசு

கண்டிப்போய்

அடக்கம் செய்யப்படவேண்டிய

சவமாய்

அழுகிறவர்களை

வேடிக்கை பார்க்கிறது .....


சோகம் தணியாது

கைக்குட்டை துணையோடும்

ஓயாது கண்ணீரோடும்

நடந்து போகிறேன் ..


போகிற வழியில்

பாதிகட்டிய

பழங்கால கட்டிடம்

ஒன்று

என்னைப் பார்த்து

கை கொட்டிச் சிரிக்கிறது ...


பாதி தூங்கி

மீதி தூங்கும் முன்

நானும் நீயும்

கை கோர்த்துத் திரிந்த

காலங்கள்

என்

நினைவு மூட்டைகளை

கட்டவிழ்த்துக்கொண்டு

படுக்கை விட்டு

என்னை எழுப்புகிறது ..


எல்லோரும்

தூங்கிப்போக

தூங்காத நம் நினைவுகள்

என் தலையணை

நனைக்கின்றன ...


வழிகிற

ஒவ்வொரு கண்ணீரும்

உன் மீது

நான் கொண்டிருக்கும்

உறுதியான அன்பை

நினைவு படுத்துகிறது ....


என்னைப் போலவே

தூங்காத

அந்தச் சூரியனும்

துயில் கலைந்து

முகம் துடைக்கிறது ....


எனக்காக

இல்லாத

இந்தப் பொழுது

புலர்கிறது ...


இப்படித்தான்

சமீபகாலமாய்

என் இரவுகள் ...


வாழ்ந்தாக

வேண்டும் ...


வாழ்க்கையின்

நியதி ...


நிச்சயமாய்

உன்னைக் காரணம்

சொல்லிவிட மாட்டேன் ...


நானும்

அழிக்கவே முடியாத

உன் நினைவுகளின்

வெப்பமும் ...

-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விடை தெரியாமல்.. விடை தெரியாமல்..
வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை
புத்தரின் புன்னகை புத்தரின் புன்னகை
தேநீர் நேரம் தேநீர் நேரம்
ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன் ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்
வர்ணஜாலம் வர்ணஜாலம்
நிழலாடும்  நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன் நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்
நேர்நின்றால்  இருக்கமாட்டீர் - பாவலர்  கருமலைத்தமிழாழன் நேர்நின்றால் இருக்கமாட்டீர் - பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.