LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

நொண்டிச் சிந்து

எண்சீர் அடிகள் இரண்டோர் எதுகையாய் 
ஐந்தாம் சீர்தொறும் மோனை அமைந்து
நான்மை நடையுடன் நாலாஞ் சீரில்
தனிச்சொல் தழுவி இனித்திட நடப்பது
நொண்டிச் சிந்தென நுவலப் படும்.
கருத்து : இரண்டு எண்சீரடிகள் ஓர் எதுகையால் தொடுக்கப்பட்டு, ஒவ்வோர் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்து, நான்மை என்னும் தாள நடையுடன், நான்காம் சீரில் தனிச்சொல் அமைந்து, செவிக்கு இன்பம் நல்கி நடப்பது சிந்துப் பாடலில் நொண்டிச் சிந்து என்று வழங்கப்படும். 
விளக்கம் : களவாடியதனால் தண்டனையாகக் கால் வாங்கப்பட்டு, நொண்டியாகிப் போன கள்வனின் கதையை நொண்டி நாடகம் என்ற பெயரால் இவ்வகைப் பாடலாக எழுதும் பழக்கம் சென்ற நூற்றாண்டுகளில் இருந்து வந்தது. இந்நாடகத்தில் நொண்டியானவன் பாடும் சிந்துப் பாடல் வகை என்பதனால் இதற்கு நொண்டிச் சிந்து என்று பெயர் வந்தது என்று கருதப்படுகிறது. 
நொண்டிச் சிந்தின் அடிகள் ஓர் ஆதிதால வட்டணையில் அடங்குமாறு எண்சீர்க் கழிநெடிலடிகளாக இருக்கும். ஒவ்வொரு சீரும் நான்மை நடைக்கு ஏற்றவாறு அமைந்திருக்க்கும். நாலாம் சீரின் இடத்தில் தனிச்சொல் பெற்றிருக்கும். ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரிலும் மோனை அமைந்திருக்கும். 
காட்டு
சேண்தொடு மாமலையும் - நதிகளும்
செறிந்துபல் வளங்களும் நிறைந்துமிகு
மாண்புறு நன்னாடாம் - வண்டுறை
வாவிசூழ் நாவலந் தீவுதனில்
(திரு.நொ.நா.ப. 7)
இந்த நான்மை நடைப் பாடலில் சேண்தொடு என்று தொடங்கி நிறைந்து மிகு என்று முடியும் முதலடியிலும், மாண்புறு என்று தொடங்கி தீவுதனில் என்று முடியும் இரண்டாம் அடியிலும் எட்டெட்டு சீர்களும், ஐந்தாம் சீர்களில் ‘செறிந்து’ ‘வாவி’ என மோனையும், நாலாம் சீர்களாக ‘நதிகளும்’ ‘வண்டுறை’ எனும் தனிச்சொற்களும் வந்துள்ளதை உணரலாம். 
எண்சீர் அடிகள் இரண்டு ஓரெதுகையாய் வரும் என்றதனால் பெரும்பாலும் ஈரடிக்கண்ணிகள் நொண்டிச்சிந்தில் வரும் என்பது பெறப்படுகிறது. நொண்டிச் சிந்துகளில் சிறுபான்மையாக ஓரடிக் கண்ணிகளும், நாலடிக் கண்ணிகளும் வருதலுண்டு. எடுத்துக் காட்டுகளை 34ஆம் நூற்பாவுரையில் காண்க. 
36.
நாலசைத் தனிச்சொல் நடுவே மடுத்தலும்
ஐந்தாஞ் சீரிலும் ஏழாஞ் சீரிலும்
எதுகை பெறுதலும் எழில்மிகத் தருமே!
கருத்து : நொண்டிச் சிந்துகளில் நாலாம் சீராக நடுவே வரும் தனிச்சொல் நாலசைச்சீராக அமைவதும், ஒவ்வோரடியின் ஐந்தாம் சீரிலும், ஏழாம் சீரிலும், எதுகை ஒன்றி வருவதும் அப்பாடலுக்கு மிகுந்த அழகைத் தரும். 
காட்டு
சேண்தொடு மாமலையும் - நதிகளும்
செறிந்துபல் வளங்களும் நிறைந்துமிகு
மாண்புறு நன்னாடாம் - வண்டுறை
வாவிசூழ் நாவலந் தீவுதனில் 
(திரு.தொ.நா.ப. 7)
இப்பாடலில் முதலடியின் நாலாம் சீராக வந்த தனிச்சொல்லும், ஜிரண்டாம் அடியின் நாலாம் அடியின் நாலாம் சீராக வந்த தனிச்சொல்லும், ‘நதிகளும்’ எனவும், ‘வண்டுறை’ எனவும் நாலசை மூவகைச் சீர்களாக உள்ளதையும், முதலடியின் ஐந்தாம், ஏழாம் சீர்கள் செறிந்து - நிறைந்து என்று எதுகை பெற்றும், இரண்டாம் அடியின் ஐந்தாம் ஏழாம் சீர்கள் வாவி - தீவு என்று எதுகைபெற்று வந்துள்ளதையும் காணலாம். சித்தராரூடம் என்ற நொண்டிச் சிந்து நூலில், பெரும் பாலும் மூவசை, நாலசைச் சொற்கள் தனிச் சொல்லாக வருகின்றன. இன்றைய நொண்டிச் சிந்துகளில் தனிச் சொற்கள் பெரும்பாலும் ஈரசைச் சொற்களாக உள்ளன. ஓரசைச் சொற்கள அருகி வருகின்றன. 
காட்டு
அத்தின புரமுண் டாம் - இவ்
வவனியி லேயதற் கிணையிலை யாம்
பத்தியில் வீதிக ளாம் - வெள்ளைப்
பனிவரை போற்பல மாளிகை யாம்
முத்தொளிர் மாடங்க ளாம் - எங்கும்
மொய்த்தளி சூழ்மலர்ச் சோலைக ளாம்
நத்தியல் வாவிக ளாம் - அங்கு
நாடும்இ ரதிநிகர் தேவிக் ளாம்
(பா.வி. ப. 361)
இதில் ‘வெள்ளை’, ‘எங்கும்’, ‘அங்கு’ என ஈரசைச் சொற்கள் பெரும்பாலும் தனிச் சொற்களாக உள்ளன. ‘இவ்’ என்னும் ஓரசைச் சொல் அருகி வந்தது. 

by Swathi   on 20 Dec 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
23-Jul-2019 14:05:05 Swetha getzihal said : Report Abuse
Saathira peyin thanmaigalaga barathiyar koorum karuthu
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.