LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைந்த நாள்

இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற பின்பு, மொழிவழி மாநிலங்கள் அமைந்திட வேண்டும் என்ற குரல் நாடு முழுக்க கிளம்பியது.

மத்திய அரசு இதனை அனுமதிக்க மறுத்து, மாநில எல்லைகள் மறுசீரமைப்பு ஆணையம் அமைத்தும், தமிழ்நாட்டுக்கும், ஆந்திரத்துக்கும் பொதுத் தலைநகராக சென்னை மாநகரை ஆக்கலாம் என்றும், தட்சிணப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மேற்குப் பிரதேசம், கிழக்குப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என இந்தியாவை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம் என்று திசை திருப்பியும் மொழிவழி மாநில கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்தது.

இதனை எதிர்த்து மொழிவழி மாநிலம் அமைய வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், சி.பா.ஆதித்தனார், பொதுஉடைமைச் சிற்பி ஜீவா, சங்கரலிங்கனார், கா.அப்பாத்துரையார், தமிழவேள் பி.டி.ராஜன், நேசமணி என எண்ணற்ற தலைவர்கள் ஓரணியில் திரண்டு போராடினார்கள். குமரி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 18 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

பீகார், ஒடிசா, மராட்டியம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என நாட்டின் பல மாநிலங்களிலும் மொழிவழி மாநிலக் கோரிக்கை வலுப்பெற்று போராட்டமாக உருப்பெற்றது.

இவ்வளவு கடுமையான போராட்டத்துக்குப் பிறகு பெங்களூரூ, கோலார், திருப்பதி, சித்தூர், தேவிகுளம், பீர்மேடு, நெடுமங்காடு, நெய்யாற்றங்கரை ஆகிய பகுதிகளை அண்டை மாநிலங்களுக்கு நாம் பறிகொடுத்தோம்.

இந்த வேதனை ஒரு பக்கம் இருப்பினும் இந்திய அரசு, இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு மொழிவழி மாநிலங்களை அறிவித்த மகிழ்ச்சிக்குரிய நாள் இது என்பதில் ஐயமில்லை.

நம் பகுதிகளைப் பாதுகாத்து, தமிழ்நாடு என்று அமைக்க உயிர் நீத்த உத்தமர்களுக்கும், போராடி சிறை சென்ற தியாகிகளுக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளில் வணக்கம் செலுத்துவோம்.

மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நாளை கர்நாடகம், ஆந்திரம், கேரளம், ஒடிசா ஆகிய மாநில அரசுகளே விழா எடுத்துக் கொண்டாடுகிறது. அதனைப் போல தமிழக அரசும் மொழிவழி மாநிலம் அமைந்த நாளை அரசு விழாவாகவே கொண்டாட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைப்போம்.

-வைகோ

by Swathi   on 31 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அரசியல் பேசுங்கள் ! அரசியல் பேசுங்கள் !
இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ): இட ஒதுக்கீடு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும் (FAQ):
பெரியாரும்,சிவாஜியும் ! பெரியாரும்,சிவாஜியும் !
நான் பார்த்த தமிழகத் தலைவர்கள் நான் பார்த்த தமிழகத் தலைவர்கள்
சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா? சி.என். அண்ணாதுரையின் கோரிக்கையை போப் ஆண்டவர் ஏற்றாரா?
ஏன் இப்படி ஆனோம்...? ஏன் இப்படி ஆனோம்...?
ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர்  சாவித்திரி கண்ணன் ஜெயகாந்தனும், கலைஞரும்! -எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்
‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம் ‘அப்பா’ என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.