LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

பார்வை வரம் தருவாயா ?

ஒரு வினாடி ஒரே வினாடி
உன் பார்வையில் விழுந்தால் போதும்
உருகும் இமயப்பனிமலை
சுருங்கும் வான பெருவரை
விழிகளா அவைகள்
எதிரியின் கரம் இருந்து புறப்படும் ஏவுகணைகள்
துளைக்கமுடியாத
பெரு வரைகளையும் துகள் துகளாக்கும்
என் இதயம் எம்மாத்திரம் கண்ணே
அன்றே பல்லாயிரம் துகளாகி விட்டது
ஒன்று சேர்க்க உ ன் அருகாமை வேண்டுமடி
அன்றேல் முடிந்து விடும் என் யாக்கை
மலர்கள் உன்னை பார்க்கும் வரை என்னை
மயக்கத்தில் ஆழ்த்தியது
மங்கையே உன்னை பார்த்த பின்போ
மயக்கம் என்ற சொல்லே மயங்கி வீழ்ந்தது
முழு நிலவிடம் நான் மோகம் கொண்டதுண்டு
முகில் இளைப்பாறும் முகத்தழகி
உன் முகம் பார்த்த பின்போ-
மோகம் என்ற சொல்லே
உன் முகத்தை வசீகரித்து கொண்டது
தென்றலை முன்பு நான் காதலித்ததுண்டு
தேன்மொழியே உன் சொல் கேட்டபின்
தென்றலும் எனக்கு கசந்ததடி
தேடாமல் வந்தாய்
என் விழி முன் நின்றாய் இன்று
தேடியும் காணாமல் போனாய்
வாலிபம் நகர்ந்து வயோதிகம் வந்து
வாழ்க்கையின் மையம் சேர்ந்தும்
கனவுகளில் உன்னை தேடி களைத்து போகிறது
வருவாயா கண்மணி
வந்துன் பார்வை வரம் தருவாயா

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விடை தெரியாமல்.. விடை தெரியாமல்..
வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை
புத்தரின் புன்னகை புத்தரின் புன்னகை
தேநீர் நேரம் தேநீர் நேரம்
ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன் ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்
வர்ணஜாலம் வர்ணஜாலம்
நிழலாடும்  நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன் நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்
நேர்நின்றால்  இருக்கமாட்டீர் - பாவலர்  கருமலைத்தமிழாழன் நேர்நின்றால் இருக்கமாட்டீர் - பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.