|
||||||||
பசலை நோய் - கன்றும் உண்ணாது கலத்தினும் படாது (குறுந்தொகை) |
||||||||
மீண்டுமொரு சங்க இலக்கியப் பாடலுடன் வாசகர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
காதலரிடையே 'பிரிவும், பிரிதல் நிமித்தமும்' ஆக ஏற்படும் பெரும் துயரத்தையும் குறிப்பிடுவது பாலைத் திணையாகும். தலைவியின் கூற்று – பிரிவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. தலைவனுடன் கூடியிருந்த நாட்கள் மெல்ல மெல்ல நினைவில் மறைந்து, மனதில் துயரம் குடிகொண்டதோடு, பொருளீட்டச் சென்ற தலைவன் நெடுநாளாகியும் தன்னைக் காண வராததால் மேனியில் பசலை நோய் படர்ந்து தான் வருந்துவதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள். ‘’கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பா னிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை யுணீஇயர் வேண்டும் திதலை யல்குலென் மாமக் கவினே’’ கலம் – பால் கறக்கும் பாத்திரம்; நல் ஆன் – நல்ல பசு தீம் பால் – சுவையான பால், உக்காங்கு – சிந்துதல்/விழுதல் என்னைக்கும் – என் `ஐ`க்கும் – காதலன் பசலை – மேனி வெளிறிய நிறத்துடன் தோற்றமளிப்பது உணீ இயர் – தன்னை உட்கொள்ளும்; திதலை – தேமல் அல்குல் – இடை (இவ்விடத்தில் பெண்களின் இடை என்று பொருள்படும்) மாமை – மாந்தளிர் நிறம்; கவின் – அழகு
|
||||||||
by varun on 24 Nov 2016 3 Comments | ||||||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|