LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

பொன்னூசற் பருவம்

378     கதிர்விரவு வயிரக் கொழுங்கா னிறீஇப்பிரபை கஞல்பவள விட்டமிட்டுக்
      கங்குலை மழுக்குநித் திலவடம் பூட்டிக் கதிர்த்துலகம் யாவும்விற்க,
வதியுமா ணிக்கச் செழும்பலகை சேர்த்துநறு மலர்பெய்து மறையின்முடியை -
      மானப் புனைந்தமைத் தினிதினர மாதர்கள் வணங்கிநிற் கின்றனர்களால்,
மதிபக வெழுங்கவி ழிண்ர்ச்சூதம் வென்றுமருண் மாயச் சிலம்புகொன்று -
      மாமயி னாடவிவரு மைந்தரோ ரிருவரை மகிழ்ந்தெடீஇ வேறுவேறு,
புதியபொற் றொட்டிலிட் டாட்டும் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே-
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.     (1)

379     வதிவுற்ற வெண்பனி துவன்றியொரு வெள்ளிமால் வரையென விளங்குமிமய -
      வரைவா யரிந்தெடுக் கும்பளிங் கனையநீர் வாய்ந்ததண் சுனையகத்து,
நிதியொத்த பூந்துணர்க் கொன்றையஞ் சிறுகாய் நிகர்த்தவரு வார்க்கருப்பை -
      நேரிணை யெயிற்றுமுட் டாட்டா மரைத்தொட்டி னிலையசைந் தாடலேய்ப்ப,
மதிசத்தி யாய்விந்து வாய்மனோன் மணியாய் மகேசையா யுமையாய்த்திரு -
      மகளாய்நல் வாணியா யின்னும்வே றாயிறை வருக்கியைய நின்றுயிர்க்குப்,
பொதிவுற்ற மலவிரு ளொளித்தின்ப மருள்புனிதை பொன்னூச லாடியருளே-
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.     (2)

380     சீதமா மலர்வதியு மிகுளைமா ரிருவருஞ் சேர்ந்துபொன் னூசலாடித்
      திகழ்வதென நின்றிருக் கண்கள்பொற் றேடுறு செழுங்கா தளாவியாடத்
தாதளா வியநறுந் தாமரை யிருக்குநின் நன்னெழில் விளக்கியாங்குத்
      தளிர்புரை நின்கர தலங்குடி புகுந்தவேர் தரும்பசுங் கிள்ளையாட
வேதன்மா லறியாத நாதனார் வாமத்து வீற்றிருக் கின்றதாலவ்
      வித்தகர் முடிக்கொன்றை யீன்றகனி யொருபால் விளங்கிக் கிடத்தலொத்துப்
போதளாய் நிறைகருங் கூந்தற் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே-
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.     (3)

381     செங்கேழ் மணிப்பலகை நடுவணீவதிதன்முன் றிருவால வாய்ச்செழியர் கோன் -
      றீதற வுஞற்றுசெந் தீநடு வெழுந்தவத் திருவந் தெரித்துநிற்பச்,
சங்காழி தங்கிய குடங்கையா னெடுநறுஞ் சததள மலர்ப்பொகுட்டிற் -
      றங்குவோ னிற்றைவரை நாடியுங் காணரிய தம்பிரான் கழிதலை யெடீஇக்,
கொங்கார் கதுப்பினர்கள் பாலிரந் தானெனுங் கூற்றினுக் கையமெய்தக் -
      குலவுமொரு முப்பத் திரண்டறமு மோங்கவருள் கூர்ந்துகரை கொன்றிரைத்துப்,
பொங்கோத வேலையுல குய்யப் புரிந்தபெண் பொன்னூச லாடியருளே-
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.     (4)

382     ஓங்கொளிநம் மகிழ்நனார் தாமரை யிருக்கைகொண் டியோகத் திருந்தவந்நா -
      ளுற்றபல் லுயிரெலா முறுபோக மில்லா துணங்குத லறிந்துவானோர்,
வீங்குமயல் புரிதரத் தூண்டவந் தானைநுதல் வெந்தழலி னாற்கனற்றி -
      மேவுமரு ளாற்பின்பு நம்மைப் புணர்ந்தின்ப மிகுமுயிர்க் கருளினாரால்,
நீங்கியி· தின்னுமொரு காலக் குணங்கொள்ளி னீடின் புயிர்க்கருளவே -
      ணினைவுஞ் செயானியா மேமயல் புரிந்திடுவ நேர்ந்தெனக் கொண்டதொப்பப்,
பூங்கணை கருப்புவிற் றாங்கியகை யம்பிகை பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.     (5)

383     எண்ணுதற் கரியபல புவனப் பரப்பெலா மினிதுதரம் வைத்துயிர்த்து -
      மிளமுலைகள் சரியாது கண்கள்குழி யாதுமல ரேந்துகூந் தலும்விளர்ப்பை,
யண்ணுத லறாதிளமை நீங்காது கன்னியே யாகியெஞ் ஞான்று முண்ணெக் -
      கள்ளூறு மன்புடைய வடியருக் கமுதூறி யானந்த மாகுமம்மே,
கண்ணுத லுடைப்பரம யோகியுழை யொன்றுசெங் கைக்கொண் டிருத்தல்போலக் -
      கதிர்வரவு கோற்றொடி புனைந்துதளிர் வென்றழகு காட்டுமங் கைத்தலத்திற்,
புண்ணியக் கிளியொன்று கொண்டபரி பூரணீ பொன்னூச லாடியருளே -
பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.     (6)

384     ஒருவார் பெருந்தூ ணகட்டைக் கிழித்துரறி யோங்கிரணி யப்பெயரினோ -
      னுடல்வகிர்ந் தெழுநர மடங்கல்வலி செற்றெழுந் துலவுபிர ணவகளிறும்விண்,
டருவாளி வேண்டமுனி குண்டிகை கவிழ்த்துநதி தந்தவொரு கோட்டுமோட்டுத் -
      தவழ்கடாக் களிறுங்கை வளருங் கரும்பினைத் தக்கவுண வாம்வழக்கால்,
வெருவாது கவரவரு மென்றும· தன்றியும் வேழமென் பெயர்பெற்றதால் -
      வெகுளுமென வெண்ணிய மவைகூட் டுணுங்கால் விலக்கத் தரித்ததேபோற்,
பொருபாச மங்குசங் கொண்டபரி பூரணீ பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.     (7)

385     தேங்கொளிய வெள்ளித் தசும்புடைந் தாலெனத் திகழ்முகை யுடைந்துமலருஞ் -
      செறிவெள் ளிதழ்த்தா மரைப்பனுவ லாட்டிபொற் றிருவூசல் பாடியாட,
வாங்குகழை விற்குமர னைத்திரு குளநடு வயங்குகட் டாமரையினான் -
      மாட்டிய பிரான்றுகிர் பழுத்தனைய சடைமுடி வயங்கத் துளக்கியாட,
வோங்குவரை மீதுநரல் வேயுகுத் திடுமுத்த மொளிர்தல்போற் பொம்மன்முலைமே -
      லொழுகெழிற் றோள்புனைந் தவிர்முத்த மாலைதாழ்ந் துலவிவில் வீசியாடப்,
பூங்கொடி மருட்டுநுண் ணிடையாட வம்மைநீ பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.     (8)

386    பேழ்வாய்த் தரக்கரவு பயிறலா லுடைதலை பெருந்தழ லிருத்தலாற்றேன் -
      பெய்யிதழி யுழையுறைத லாற்கமட மோடறல் பிறங்கலாற் சுரிவளைவிடம்,
வாழ்வாய தாற்குறிஞ் சித்திணைமு னைந்திணையு மன்னுதன் னுட லமைத்த -
      மகிழ்நனே போலிடை மடங்கறோள் வேய்கற்பு வாரழல் முலைக்கோங்குமை,
சூழ்வார் குழற்கான் றிருக்குமான் பொற்கவுட் டூயநீர் நிலைவில்வேழஞ் -
      சுடர்படைச் சங்குநகை முத்தமிவை முதலாத் தொகுத்துரு வமைத்தவம்மே,
போழ்வாய்ந்த மாவடுக் கண்ணெம் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.     (9)

387     தாவிலொளி மீனுமணி நூபுரம் விராவுபொற் றாமரைத் தாளுமருணன் -
      றன்னிளங் கதிரொத்த செம்பட் டுடுத்தித் தயங்குமே கலைநுணிடையு,
மாவிய னறுந்தளிர் மருட்டிவர தாபயம் வழங்குசெங் கையுமெய்ஞான -
      மடைதிறந் தொழுகுமிரு கொங்கையு மிலங்குதிரு மங்கலச் சங்கமிடறுங்,
காவிநிகர் கருணைபொழி விழியுமூத் தணிகவின் காட்டுநா சியும்வள்ளைநேர் -
      கதிர்மணித் தோடுடைக் காதுமிள மூரலுங் கமலமுக மும்பொலிதரப்,
பூவின்மட வார்பரவு காந்திமதி யம்மைநீ பொன்னூச லாடியருளே -
      பூந்தட நிலாவுபொழில் வாய்ந்தவுறை யூரிறைவி பொன்னூச லாடியருளே.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.