|
||||||||
எம் ஜி ஆர் - ஒரு சகாப்தம் !! |
||||||||
![]() ”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போரட்டமாகவே இருக்கிறுது!”
இப்படிச் சொன்னவர், காலம் சென்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!
இதை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்வ சாதாரணமாக, பேச்சோடு பேச்சாகச் சொன்னார். ஆனால், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள்தாம் எத்தனை எத்தனை!
‘எம்.ஜி.ஆர்!’ என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?
அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் எத்தனை! இந்நன்னாளில் எம்.ஜி.ஆர்-ன் வாழ்க்கை பாதை ஒரு சிறப்பு கண்ணோட்டம்....
பிறப்பு: எம் ஜி ஆர் அவர்கள் ஜனவரி 17,1917ம் வருடம் கண்டி என்னும் இடத்தில் பிறந்தார். தந்தை பெயர் கோபாலமேணன், தாயார் சத்தியபாமா ஆவார். 3-ம்
வகுப்பு வரை படித்துள்ளார்.இவருடைய கலை அனுபவம் 7 வயது முதல் தொடங்கியது.1924 முதல் 1963 வரை 40 வருடங்கள், நாடகத்தில் இவர்
அனுபவமிக்கவர்.காங்கிரஸ் வாழ்க்கை:இதுவே முதன் முதலாக இருந்த இயக்கம் ஆகும்.தேசியவாதியாக இருந்தமையால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து
பணிபுரிந்தார்.தி.மு.க:திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் 6 ஆண்டுகள்
பணியாற்றினார். அதன் தலைவரான அண்ணா எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்தார். எம்.ஜி.ஆரும் அண்ணாவை தலைவனாக ஏற்றுக் கொண்டு
செயல்பட்டார்.இவர் 1950 முதல் 1972 வரை தி.மு.காவில் இருந்தார்.நட்பு:கருணநிதியும் எம்.ஜி.ஆரும் திரைத்துறையிலும், அரசியலிலும் நண்பர்களாக
இருந்தார்கள். அண்ணா மறைந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர் பதவியை கருணாநிதியை ஏற்குமாறு
கேட்டுக் கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முரசொலி மாறனை சமாதானப்படுத்தி, கருணாநிதியை முதல்வராக்கினார்.அ.தி.மு.க:கட்சியில் ஏற்பட்ட
முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் தி.மு.க கட்சியிலிருந்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பின் சுற்றுபயணம்
மேற்கொண்டு மக்களின் ஆதரவை எம்.ஜி.ஆர் கணித்தார்.1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர்
ஆரம்பித்தார். அந்தப் பெயரே அண்ணாவை எத்தனை தூரம் எம்.ஜி.ஆர் நேசித்தார் என்று காட்டியது. பின்பு எல்லாமாநிலங்களிலும் அக்கட்சி
வளர்ந்தமையால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்றேற்றக் கழமாக மாற்றப்பட்டது.எஸ்.எம்.துரைராஜ், குழ.செல்லயா,
சௌந்திரபாண்யன்,ஜி.ஆர்.எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர். எம்.ஜி.ஆர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக
இருந்தமையால் உறுப்பினர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.மேலும் கட்சித்தாவல் தடைசட்டம் அப்போது பிறப்பிக்கப்படவில்லை என்பதால் எண்ணற்ற
பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டசபை உறுப்பினர்களும் தொடர்ந்து இணைந்தார்கள். அதில் பாவலர் முத்துசாமியை கழகத்தின் முதல்
அவைத்தலைவராக எம்.ஜி.ஆர் நியமித்தார்.அண்ணா திராவிட முன்றேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளர் பதவியில் 16 ஆண்டுகள் இருந்தார்.தமிழக முதல்
அமைச்சர்:1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப்பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார்.மக்களின்
நிலையைக் கண்டு இலவச திட்டங்களை அதிகம் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். மக்களின் நலன் கருதி இத்திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும்
தொலைநோக்குப் பார்வையோடு இல்லாத திட்டங்கள் என்றே அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்,இலவச
வேட்டி சேலை திட்டம், இலவசப் பல்பொடி, இலவசக் காலணி, குடிசைக்கு ஒரு மின்விளக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம், வறட்சிக் காலத்தில்
லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் முதலியவை இவர் நடைமுறைப்படுத்தின திட்டங்கள் ஆகும்.செல்வாக்கு:இவர் கடவுள் நம்பிக்கையற்ற
நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும்,
இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.இது அவருக்கு மக்கள்
மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.வகித்த முக்கிய பதவிகள்:தமிழ்நாடு சிறு சேமிப்பு திட்டம் துணை தலைவர் 1967 தமிழ்நாடு சட்ட
மேலவை உறுப்பினர் 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் 5 முறை 1967, 1972, 1977, 1980 மற்றும் 1984 தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர்
மற்றும் செயலாளர். திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளராக 6 ஆண்டுகள் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளராக 16 ஆண்டுகள் தமிழக முதல்
அமைச்சராக மூன்று முறை - 1977, 1980, 1984. மறைவு:எம் ஜி ஆர் அவர்கள் டிசம்பர் 24,1987ம் வருடம் இறந்தார்."நான் ஏன் பிறந்தேன்? ஆனந்த விகடனில்
எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய "எனது வாழ்க்கை
பாதையிலே"தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் மக்கள் இருக்கிறார்கள்.
பிறப்பு:
எம் ஜி ஆர் அவர்கள் ஜனவரி 17,1917ம் வருடம் கண்டி என்னும் இடத்தில் பிறந்தார். தந்தை பெயர் கோபாலமேணன், தாயார் சத்தியபாமா ஆவார். 3-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.இவருடைய கலை அனுபவம் 7 வயது முதல் தொடங்கியது.1924 முதல் 1963 வரை 40 வருடங்கள், நாடகத்தில் இவர் அனுபவமிக்கவர்.
காங்கிரஸ் வாழ்க்கை:
இதுவே முதன் முதலாக இருந்த இயக்கம் ஆகும்.தேசியவாதியாக இருந்தமையால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணிபுரிந்தார்.
தி.மு.க:
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் 6 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் தலைவரான அண்ணா எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்தார். எம்.ஜி.ஆரும் அண்ணாவை தலைவனாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்.இவர் 1950 முதல் 1972 வரை தி.மு.காவில் இருந்தார்.
நட்பு:
கருணநிதியும் எம்.ஜி.ஆரும் திரைத்துறையிலும், அரசியலிலும் நண்பர்களாக இருந்தார்கள். அண்ணா மறைந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர் முதல்வர் பதவியை கருணாநிதியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முரசொலி மாறனை சமாதானப்படுத்தி, கருணாநிதியை முதல்வராக்கினார்.
அ.தி.மு.க:
கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் தி.மு.க கட்சியிலிருந்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பின் சுற்றுபயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை எம்.ஜி.ஆர் கணித்தார். 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். அந்தப் பெயரே அண்ணாவை எத்தனை தூரம் எம்.ஜி.ஆர் நேசித்தார் என்று காட்டியது. பின்பு எல்லா மாநிலங்களிலும் அக்கட்சி வளர்ந்தமையால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்றேற்றக் கழமாக மாற்றப்பட்டது.எஸ்.எம்.துரைராஜ், குழ.செல்லயா, சௌந்திரபாண்யன்,ஜி.ஆர்.எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர்.
எம்.ஜி.ஆர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தமையால் உறுப்பினர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.மேலும் கட்சித்தாவல் தடைசட்டம் அப்போது பிறப்பிக்கப்படவில்லை என்பதால் எண்ணற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டசபை உறுப்பினர்களும் தொடர்ந்து இணைந்தார்கள். அதில் பாவலர் முத்துசாமியை கழகத்தின் முதல் அவைத்தலைவராக எம்.ஜி.ஆர் நியமித்தார்.அண்ணா திராவிட முன்றேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளர் பதவியில் 16 ஆண்டுகள் இருந்தார்.
தமிழக முதல் அமைச்சர்:
1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப்பெற்று தமிழக முதல் அமைச்சர் பதவியில் இருந்தார்.மக்களின் நிலையைக் கண்டு இலவச திட்டங்களை அதிகம் செயல்படுத்தினார் எம்.ஜி.ஆர். மக்களின் நலன் கருதி இத்திட்டங்கள் தொடங்கப்பட்டிருந்தாலும் தொலைநோக்குப் பார்வையோடு இல்லாத திட்டங்கள் என்றே அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்,இலவச வேட்டி சேலை திட்டம், இலவசப் பல்பொடி, இலவசக் காலணி, குடிசைக்கு ஒரு மின்விளக்கு பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் முதலியவை இவர் நடைமுறைப்படுத்தின திட்டங்கள் ஆகும்.
வகித்த முக்கிய பதவிகள்:
தமிழ்நாடு சிறு சேமிப்பு திட்டம் துணை தலைவர் 1967 தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் 1962 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் 5 முறை 1967, 1972, 1977, 1980 மற்றும் 1984 தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் மற்றும் செயலாளர். திராவிட முன்னேற்ற கழகம் பொருளாளராக 6 ஆண்டுகள் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளராக 16 ஆண்டுகள் தமிழக முதல் அமைச்சராக மூன்று முறை - 1977, 1980, 1984.
மறைவு:
எம் ஜி ஆர் அவர்கள் டிசம்பர் 24,1987ம் வருடம் இறந்தார்."நான் ஏன் பிறந்தேன்? ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய "எனது வாழ்க்கை பாதையிலே"தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் மக்கள் இருக்கிறார்கள். |
||||||||
M.G.R | ||||||||
by Swathi on 20 Aug 2012 0 Comments | ||||||||
Tags: புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் MG Ramachandran MGR Puratchi Thalaivar | ||||||||
|
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|