LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

ராணுவ முகாமிலிருந்து கடிதங்கள்...

1

அன்பே நந்தா,

இன்று காலைதான் வந்து சேர்ந்தோம்.
பிரச்சினை இல்லை.
மடியில்
ரை·பிளை இறுகப் பற்றியிருந்ததில்
தூக்கமுமில்லை.
கனவுகள்!
மிகவும் பயங்கரம்
திடீரென விழிப்பு.

ரயில் நிலையத்தில்
நீயும் மாமியும் அழுத அழுகையில்
நானுமே பயந்தேன்.
ஆனால்,
அனைவரும் எனக்குச் சொன்னதுபோல
வடக்கு
அப்படி ஒன்றும் பயங்கரமாகத்
தொ¢யவில்லை.
எங்கும் போலவே
கடைகள், தெருக்கள்,
வாகன நொ¢சல்.
மனிதர்கள்தான் எமைப் பார்ப்பதேயில்லை.
தற்செயலாகப் பார்க்கிறபோதும்
அவர்கள் எல்லோரது கண்களினு¡டும்
ஏதோ ஒன்று;

இனம் பு¡¢யாத ஓர் உணர்வு
என்னவாயிருக்கும் அது
என எனக்குப் பு¡¢யவே இல்லை.

நாங்கள் தனித் தனியாகச்
செல்வது இயலாது என்பதை
நீ அறிவாய் அல்லவா?
இரண்டு கவச வாகனங்கள்,
வேறும் ஐ£ப்புகள் இரண்டு,
அல்லது மூன்று,
ட்ரக் ஒன்று
இவற்றில் குறைந்தது
ஜம்பது பேராவது ஒன்றாய்ச் செல்வோம்.
அது,
உண்மையிலேயே ஒரு
அணிவகுப்புத்தான்...
சுதந்திரதின விழாவில்
பார்த்திருப்பாயே
அப்படித்தான்.
ஆனால், ஒரேயரு வித்தியாசம்:
சுதந்திர தினத்து அணிவகுப்பில்
எங்களுக்கு சுதந்திரம் இருந்தது
துப்பாக்கிகளுக்கு குண்டுகள் இல்லை.
இங்கோ,
துப்பாக்கிகளுக்கு வேண்டுமான அளவு
குண்டுகள்;
ஆனால், சுதந்திரம் இல்லை...

2

இன்று முழுவதும் மிகுந்த அலைச்சல்
பனை மரங்களுடாக வளைந்து வளைந்து
செல்லும் தெருக்களில்
(அவை மிக மோசம்)
கவச வாகனம் குலுங்கக் குலுங்க
இடுப்பு எலும்பெல்லாம்
பிறகு ஒரே வலி.
மத்தியானம்
வயல் வெளிகளுக்கு நடுவிலிருந்த
ஒரு கிராமத்தில்
மூன்று கொழுத்த ஆடுகள் சுட்டோம்.
இளைஞர்கள் இல்லை;
பெண்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
முகாமுக்கு மீள்கிற பாதிவழியில்
மேஐருக்கு¡¢ய சிகரெட் வாங்க
மறந்து போனதை
ஒருவன் ஞாபகப்படுத்தவும்,
பிறகென்ன?
அணிவகுப்பாக அவ்வளவு பேரும்
நகருக்குத் திரும்ப நேர்ந்தது!

3

இன்று,
எதி¡¢வீரவும் சந்திரசிறியும்
மூன்று தமிழரைச் சுட்டுக் கொன்றனர்.
'நெருக்கடி மிகுந்த தெருவில்
திடீரென இவர்கள் ஓடிச் சென்றதால்,
கலவரமுற்றுச் சுட்டுவிட்டேன்'
என்று சந்திர சொன்னான்ரு பிறகு,
விசாரணையின்றியே
இரண்டுபேரையும்
கொழும்புக்கு அனுப்பினர்
இடமாற்றம்தான்.
(கொடுத்து வைத்தவர்கள்)
. . .
யாரையாவது சுட்டால்
அல்லது
சனங்கள்மீது தாக்குதல் நிகழ்த்தினால்
வீடுகளைப் பற்றவைத்தால்
உடனடியாக மாற்றம் கிடைக்கிறது.(?)
. . .
நேற்றும் ஜந்துபேர்
உடனடியாக மாற்றம் பெற்றனர்.
நான் வந்ததிலிருந்து
மொத்தமாக ஜம்பது பேராவது
திரும்பி விட்டனர்;
எப்போது எனக்கு மாற்றம் வருமோ
நான் அறியேன்.

4

இன்றும் புதிதாக நு¡றுபேர்
எங்கள் முகாமுக்கு வந்தனர்.
சின்னப் பயல்கள்;
மீசைகூட அரும்புதான்.
இயந்திரத் துவக்கை இயக்குவதிலோ
திறமையும் குறைவு.
. . .
இப்போதெல்லாம்
பகலில் அலைந்து தி¡¢ந்த பின்னரும்
இரவில் தூக்கம் பிடிப்பதேயில்லை.

நீண்ட நாளாயிற்று
உன்னை நேரே பார்த்து.
விடுமுறை என்பது நினைக்கவே
இயலாதது...
. . .

5

நேற்று இரவு,
எமது பி¡¢வின் பதின்மூன்றுபேரை
'அவர்கள்' கொன்றனர்.
குறி பிசகாத குண்டு வெடிப்பின் பின்
சுற்றி வளைத்தன இயந்திரத் துவக்குகள்.
நாங்கள்,
எவருமே இதனை எதிர்பார்க்கவில்லை.
தலைமை முகாமுடன் வானொலித் தொடர்பு
இடையறாமல் இருந்தும்,
இருட்டினுள் யமனின்
இருப்பை மீற
ஒன்றுமே இயலாது போயிருக்க வேண்டும்.

அடுத்தநாட் காலை
எந்தத் தெருவிலும் சனங்கள் இல்லை.
கடைகள் இல்லை.
அர்த்தம் தொ¢யாமல் ஓர் அமைதி
என்ன தேசம் இது?

இப்போதெல்லாம்
இரவு மிகவும் கொடூரம் மிக்கது.
நிலவொளி படர்கையில்
நிழல்கள் அசைவதும்
பெயர் தொ¢யாத பறவைகள்
திடீரென அலறுவதும்
பகல் வரும்வரையில் நரகம்தான்.
. . .
அப்புறம்,
உடனடியாக மாற்றம் கேட்ட
எமதுபி¡¢வு நேற்றுத் தெருவில்
இறங்கிற்று...
எத்தனைபேரைச் சுட்டுத் தீர்த்தது
என்ற விபரம் சா¢யாகத் தொ¢யாது.
ஜம்பது அல்லது அறுபது என்று
மேஐர் நினைக்கிறார்.

6

அன்பே நந்தா...

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது
நாளை எனக்கு இடமாற்றம்!
கடவுளுக்கு நன்றி.
இன்று கடைசித் தடவையாக
நகருக்குச் சென்றேன்.
அப்படி ஒன்றும் பயங்கரமாகத்
தொ¢யவில்லை.
முன்பு போலவே கடைகள், தெருக்கள்...
ஆனால் மனிதர்கள்தான்
முன்பு போலவும்
எம்மைப் பார்ப்பதேயில்லை...

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.