ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கபாலி திரைப்படம் விரைவில் சென்சார் செய்யப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளது.
இந்நிலையில் ரஜினியும், ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரபல மலேசிய தயாரிப்பாளர் Mohd Rafeezi அவர்கள் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், The Chini Saga என்ற படத்தில் ரஜினிகாந்த், ஜாக்கிசான் ஆகிய இரண்டு சூப்பர் ஸ்டார்களும் நடிக்கவுள்ளதாகவும் இவர்களுடன் பாலிவுட்டின் பிரபல நடிகை சோனம் கபூர் அவர்களும் இணையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட் காரணமாக தாமதமான இப்படம் தற்போது 20 மில்லியன் ரிங்கிட் பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|