LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழர்களின் கண்டுபிடிப்புகள் Print Friendly and PDF

காற்று இல்லாமல் காற்றாலையை இயக்க முடியும் : சேலத்து இளைஞர் கண்டுபிடிப்பு

சேலம் இளைஞர் அசத்தல் கண்டுபிடிப்பு, காற்று இல்லாமல் மின்சாரம் தயாரிப்பு.

"காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,” என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.காற்று இருந்தால் தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்க முடியும் என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கிராமத்து விசைத்தறி தொழிலாளி, நம்மிடம் பெருமையுடன் கூறினார்.

இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது:சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. வாழ்க்கையில் பெயர் சொல்லும் வகையில் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே இருந்தது.சில ஆண்டுக்கு முன், 25 மூலிகைகளை கொண்டு கூந்தல் பவுடர் தயார் செய்தேன். பின்னர், வேகத்தடையை தாண்டி வாகனங்கள் செல்லும் போது, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கண்டுபிடித்தேன்.தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன்.

இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது.

என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும். காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும். ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும்.

இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது. நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது.ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்டவேண்டும். நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

by Swathi   on 21 Jun 2014  7 Comments
Tags: Power Without Air   காற்று இல்லாமல் மின்சாரம்                 
 தொடர்புடையவை-Related Articles
காற்று இல்லாமல் காற்றாலையை இயக்க முடியும் : சேலத்து இளைஞர் கண்டுபிடிப்பு காற்று இல்லாமல் காற்றாலையை இயக்க முடியும் : சேலத்து இளைஞர் கண்டுபிடிப்பு
கருத்துகள்
22-May-2019 01:35:47 அதிபர். said : Report Abuse
காண்டாக்ட் 9150015155
 
04-Feb-2016 06:53:18 v .radhika said : Report Abuse
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் சார்
 
13-Jan-2016 03:44:27 karthik said : Report Abuse
What doing media ?please focus and enrage similar think
 
28-Mar-2015 08:17:29 ப.அப்துல் காதர் said : Report Abuse
விஸ்வநாதன் அவர்களுடைய மொபைல் நம்பர் வேண்டும் என்னுடைய நம்பர் 9944774587
 
11-Oct-2014 09:55:50 jeeva said : Report Abuse
ப்ளீஸ் கால் மீ
 
04-Oct-2014 15:02:12 பாலகிருஷ்ணன் P said : Report Abuse
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
 
09-Sep-2014 11:06:03 mani said : Report Abuse
இந்த தளம் சிறப்பாக உள்ளது வலை தமிழுக்கு நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.