LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழர்களின் கண்டுபிடிப்புகள் Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவின் 'இளம் அறிஞர் விருது' பெறும் தமிழ் பெண் இராஜலட்சுமி நந்தகுமார் -வாழ்த்துகள்

அமெரிக்காவின் 'இளம் அறிஞர் விருது' பெறும் தமிழ் பெண் இராஜலட்சுமி நந்தகுமார் -வாழ்த்துகள்

அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் எனும் மாணவி, அமெரிக்காவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும், "2018 Marconi Society paul Baran young Scholar"இளம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் மதுரை டிவிஎஸ். லக்ஷ்மி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து பின்பு கிண்டி தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை முடித்து, மைக்ரோசாப்ட் ஆய்வகத்தில் பெங்கலூரில் பணிபுரிந்து தற்போது ஆராய்ச்சி மேற்படிப்பை வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவருகிறார்.

இவரது ஆய்வில், நீரில் மூழ்கிய பொருள்களை ஒலி அலைகளைக் கொண்டு கண்டு பிடிக்கும் "சோனார்"தொழில் நுட்பத்தை ஸ்மார்ட் போனில் பயன் படுத்துவது தொடர்பானவற்றையும்,மற்றும் இவர் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவரது உடலைத் தொடாமலேயே ஸ்மார்ட் போன் மூலம் அவரகளது உடலில் ஏற்படும் செயல்பாடுகளை எளிதில் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தைக் ராஜலட்சுமி கண்டுபிடித்துள்ளார்.

இவரது கண்டு பிடிப்பு மருத்துவம் மற்றும் தொழில் நுட்பஉலகுக்கு உதவிகரமாக இருக்கும் என்கின்றனர் வல்லுனர்கள்.

இவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து தமிழ் இளைஞர்களுக்கு இவரது கண்டுபிடிப்பு குறித்து அறிமுகப்படுத்தி ஊக்குவிக்க வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல தமிழ்ச்சங்கங்கள் ஆர்வமாக உள்ளன.

வலைத்தமிழ் சார்பாக வாழ்த்துகள் .. இராஜலட்சுமி ...

Ms Nandakumar, a Ph.D.Student, Networks and Mobile Systems lab, University of Washington, native of Madurai, Tamil Nadu , has created a technology that turns an ordinary smartphone into an active sonar system capable of detecting physiological activities, such as movement and respiration, without requiring physical contact with the device.

by Swathi   on 12 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மென்பொருளால் தமிழ் மொழியை மேன்மேலும் மெருகேற்றுபவருக்கு விருது மென்பொருளால் தமிழ் மொழியை மேன்மேலும் மெருகேற்றுபவருக்கு விருது
ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்றும் ரோபோ - மதுரை ஆசிரியரின் கண்டுபிடிப்பு !! ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை காப்பாற்றும் ரோபோ - மதுரை ஆசிரியரின் கண்டுபிடிப்பு !!
காற்று இல்லாமல் காற்றாலையை இயக்க முடியும் : சேலத்து இளைஞர் கண்டுபிடிப்பு காற்று இல்லாமல் காற்றாலையை இயக்க முடியும் : சேலத்து இளைஞர் கண்டுபிடிப்பு
வாகனங்களுக்கு இனி டீசல் தேவையில்லை ! நாகை மாணவர்கள் கண்டுபிடித்த மாற்று எரிபொருள் !! வாகனங்களுக்கு இனி டீசல் தேவையில்லை ! நாகை மாணவர்கள் கண்டுபிடித்த மாற்று எரிபொருள் !!
காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜின் :  கடலூர் மாணவன் கண்டுபிடிப்பு !! காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜின் : கடலூர் மாணவன் கண்டுபிடிப்பு !!
வாகன விபத்துகளை குறைக்க டூவீலரில் 3 ஜி கருவி : சிவகங்கை மாணவரின் அறிய கண்டுபிடிப்பு !! வாகன விபத்துகளை குறைக்க டூவீலரில் 3 ஜி கருவி : சிவகங்கை மாணவரின் அறிய கண்டுபிடிப்பு !!
காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க உதவும் சாப்ட்வேர் !! சென்னிமலை கார்த்திகேயனின் புதிய கண்டுபிடிப்பு !! காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க உதவும் சாப்ட்வேர் !! சென்னிமலை கார்த்திகேயனின் புதிய கண்டுபிடிப்பு !!
தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு - கே.ஆர். ஸ்ரீதர் தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு - கே.ஆர். ஸ்ரீதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.