|
|||||
மென்பொருளால் தமிழ் மொழியை மேன்மேலும் மெருகேற்றுபவருக்கு விருது |
|||||
மென்பொருளால் தமிழ் மொழியை மேன்மேலும் மெருகேற்றுபவருக்கு விருது
இலக்கணத்தால் தமிழ் மொழியை வளர்ப்பவர்களுக்கு மத்தியில், இன்றைய இளம் தலைமுறையினர்களுக்காக இணையத்தால் தமிழ் மொழியை வளர்ப்பவர்
மதுரையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர் ‘நீச்சல்காரன்’ என்ற சே. ராஜாராமன் அவர்கள் ஆவார். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர் நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து பிழைதிருத்தி மென்பொருளை உருவாக்கியுள்ளார். இவர் தமிழக அரசிற்காக 2018ல் ‘தமிழிணைய பிழைதிருத்தி’ என்ற புது மென்பொருளை உருவாக்கித் தந்து, இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
பன்னாட்டு இதழான வலைத்தமிழின் ஆசிரியர் குழு உறுப்பினராகச் செயல்பட்டு வரும் இவர், தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளுள் ஒருவராகவும் உள்ளார். ‘நாவி’ என்ற சந்திப்பிழை திருத்தி, ‘ஓவன்’ எழுத்துரு மாற்றி, ‘சுளகு’ சொல்லாய்வுக் கருவி, ‘வாணி’ எழுத்துப் பிழைதிருத்தி மற்றும் ‘பேச்சி’ இயந்திர மொழிபெயர்ப்புக் கருவி எனும் பல செயலிகளை இலவசமாக இணையம் வழி வெளியிட்டுள்ளார். இதற்கென இவர் பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். இந்நிலையில் மென்பொருளால் தமிழ்மொழியை மேன்மேலும் மெருகேற்றுபவரான இவருக்கு 2019ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மென்பொருளால் தமிழ் மொழியை மேன்மேலும் மெருகேற்றுபவருக்கு விருது இலக்கணத்தால் தமிழ் மொழியை வளர்ப்பவர்களுக்கு மத்தியில், இன்றைய இளம் தலைமுறையினர்களுக்காக இணையத்தால் தமிழ் மொழியை வளர்ப்பவர்
இவர் ஏற்கனவே கனடாவில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதான இலக்கியத்தோட்ட விருதுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மென்பொருள்களை வடிவமைப்பதிலும், தமிழில் அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். |
|||||
by Lakshmi G on 22 Jan 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|