விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, விஜய் அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த புதிய தகவல்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருப்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போது இருந்தே ஆரம்பமாகிவிட்டன.
அழகிய தமிழ் மகன் போல இந்தப் படத்துக்கும் ரஹ்மான் தான் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படம், குறைந்த பொருட்செலவுடன் குறுகிய காலத்தில் தயாரிக்கப்படுகிற படம் என்பதால் ரஹ்மானால் இந்தக் குழுவில் இடம்பெறமுடியவில்லை. தற்போது தமிழ் சினிமாவின் பரபரப்பான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் விஜய் 60 படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் குறுகிய காலத்தில், கபாலி, விஜய் 60, வட சென்னை என பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
|