LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-20

7.020.திருக்கோளிலி 
பண் - நட்டராகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கோளிலிநாதர். 
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை. 
199 நீள நினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே.
7.020.1
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, வாள்போலுங் கண்களையுடைய மடவாளாகிய என் இல்லாள் தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதிமெலிந்து வருந்தாதபடி குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன். அவைகளை அவள்பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆளில்லை; அடியேன், எஞ்ஞான்றும் உன்னையே நினைத்து நாள்தோறும் வணங்குந் தொழிலை உடையேன்; வேறு யாரை வேண்டுவேன்! அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள். 
200 வண்டம ருங்குழலாள் உமை
நங்கைஓர் பங்குடையாய்
விண்டவர் தம்புரமூன் றெரி
செய்தஎம் வேதியனே
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே அவை
அட்டித் தரப்பணியே.
7.020.2
வண்டுகள் விரும்பும் கூந்தலையுடையவளாகி, 'உமை' என்னும் நங்கையை ஒருபாகத்தில் உடையவனே, பகைமை கொண்டவர்களது முப்புரத்தை எத்த எங்கள் அந்தணனே, தௌந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, உலகெலாம் ஆகியவனே, அடியேன் குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்தில் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; ஆதலின், அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளை யிட்டருள். 
201 பாதிஓர் பெண்ணைவைத்தாய் பட
ருஞ்சடைக் கங்கை வைத்தாய்
மாதர்நல் லார்வருத்தம் மது
நீயும் அறிதியன்றே
கோதில் பொழில்புடைசூழ் குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை
அட்டித் தரப்பணியே.
7.020.3
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, எல்லார்க்கும் முன்னவனே, யாவர்க்கும் மருட்கையைத் தரத்தக்க செயல்களைச் செய்ய வல்லவனே, நீ, உன் திருமேனியில் பாதியிற்றானே, 'உமை' என்னும் ஒரு மாதராளை வைத்தாய்; அதுவன்றி, விரிந்த சடையின்கண், 'கங்கை' என்னும் மற்றொரு மாதராளையும் வைத்தாய்; ஆதலின், நீயும் நற்பண்புடைய பெண்டிர் தம் வாழ்க்கை முட்டுற்றவிடத்து அடையும் வருத்தத்தினது தன்மையை நன்குணர்வாயன்றே? அதனால் உன்னை வேண்டுகின்றேன்; அடியேன் குற்றம் இல்லாத சோலைகள் புடைசூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அவைகளை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள். 
202 சொல்லுவ தென்உனைநான் தொண்டை
வாய்உமை நங்கையைநீ
புல்கி இடத்தில்வைத்தாய்க் கொரு
பூசல்செய் தார்உளரோ
கொல்லை வளம்புறவிற் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன
அல்லல் களைந்தடியேற் கவை
அட்டித் தரப்பணியே.
7.020.4
திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, உன்னிடம் நான் எடுத்துச் சொல்ல வேண்டுவது என் உளது? நீ, கொவ்வைக்கனிபோலும் வாயினையுடைய, 'உமை' என்னும் நங்கையை முன்பு மணந்து, பின்பு இடப்பாகத்திலே வைத்தாய்; அது காரணமாக உன்னை ஒரு தூற்றுதல் செய்தார் எவரேனும் உளரோ? இல்லை ஆதலின், எனக்கு நீ என் இல்வாழ்க்கைக்கு உரியதனைச் செய்தாலும் உன்னைத் தூற்றுவார் ஒருவரும் இல்லை. அடியேன், சில நெற்களை, கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலம் சூழ்ந்த குண்டையூரிற் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அடியேனுக்கு அந்த அல்லலை நீக்கி, அவற்றை அங்குச் சேர்த்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள். 
203 முல்லை முறுவலுமை ஒரு
பங்குடை முக்கணனே
பல்லயர் வெண்டலையிற் பலி
கொண்டுழல் பாசுபதா
கொல்லை வளம்புறவிற் றிருக்
கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்தடியேற் கவை
அட்டித் தரப்பணியே.
7.020.5
முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே, சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே, கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, அடியேன், குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. ஆதலின் அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி, அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள். 
204 குரவம ருங்குழலாள் உமை
நங்கைஓ பங்குடையாய்
பரவை பசிவருத்தம் மது
நீயும் அறிதியன்றே
குரவம ரும்பொழில்சூழ் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை
அட்டித் தரப்பணியே.
7.020.6
குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய 'உமை' என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே, பாம்பைக் கட்டியுள்ளவனே, திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே, நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்கவேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித்துன்பத்தையும் அறிவாயன்றே? அவள் பொருட்டு, அடியேன், குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை அவள் பாற்சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள். 
205 எம்பெரு மான்உனையே நினைந்
தேத்துவன் எப்பொழுதும்
வம்பம ருங்குழலாள் ஒரு
பாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகைசூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அன்பது வாய்அடியேற் கவை
அட்டித் தரப்பணியே.
7.020.7
மணம் பொருந்திய கூந்தலையுடைய உமையவளை ஒருபாகத்தில் விரும்பி வைத்துள்ளவனே, செம்பொன்னாலியன்ற மாளிகைகள் நிறைந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே, அடியேன் குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. எம் தலைவனாகிய உன்னையே எப்பொழுதும் நினைந்து துதிக்கும் தொழிலுடையேன் யான்; வேறுயாரை வேண்டுவேன்! என்னிடத்து அன்புடையையாய், அவற்றை அங்குச் சேர்த்து உதவ. நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள். 
206 அரக்கன் முடிகரங்க ளடர்த்
திட்டஎம் மாதிப்பிரான்
பரக்கும் அரவல்குலாள் பர
வையவள் வாடுகின்றாள்
குரக்கினங் கள்குதிகொள் குண்டை
யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்
இரக்கம தாய்அடியேற் கவை
அட்டித் தரப்பணியே.
7.020.8
இராவணனது தலைகளையும், கைகளையும் நெரித்திட்ட எங்கள் முதற்கடவுளே, திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே. அகன்ற அல்குலையுடையாளாகிய என் இல்லாள் பரவை தன் வாழ்க்கையை நடத்தமாட்டாது மெலிகின்றாள்; அவள் பொருட்டு, அடியேன், சோலைகளில் குரங்குக் கூட்டங்கள் குதித்து விளையாடுகின்ற குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை அவள்பால் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; நீ இரக்கமுடையையாய், அடியேன் பொருட்டு அவற்றை அங்குச் சேர்த்து உதவ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள். 
207
பண்டைய மால்பிரமன் பறந்
தும்மிடந் தும்மயர்ந்தும்
கண்டில ராய்அவர்கள் கழல்
காண்பரி தாயபிரான்
தெண்டிரை நீர்வயல்சூழ் திருக்
கோளிலி எம்பெருமான்
அண்டம தாயவனே யவை
அட்டித் தரப்பணியே.
7.020.9
முற்காலத்திலே உன் அளவைக்காணப் புகுந்த திருமாலும் பிரமனும் அன்னமாய் விண்ணிற்பறந்து ஓடியும், ஏனமாய் மண்ணைப் பிளந்து நுழைந்தும் தங்களால் ஆமளவும் முயன்றும் அதனைக் காணாதவர்களேயாக, இன்றும் நின் திருவடி அவர்களால் காணுதற்கு அரிதேயாய கடவுளே, தௌந்த அலைகளையுடைய நீரையுடைய வயல்கள் சூழ்ந்த திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம்பொருமானே, எல்லா உலகமும் ஆனவனே, அடியேன், குண்டையூரிலே சில நெல்லுப் பெற்றேன்; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை; அவற்றை அங்குச் சேர்த்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
208 கொல்லை வளம்புறவிற் றிருக்
கோளிலி மேயவனை
நல்லவர் தாம்பரவுந் திரு
நாவல வூரனவன்
நெல்லிட ஆட்கள்வேண்டி நினைந்
தேத்திய பத்தும்வல்லார்
அல்லல் களைந்துலகில் அண்டர்
வானுல காள்பவரே.
7.020.10
கொல்லையினது வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் விரும்பியிருக்கின்ற பெருமானை, நல்லவர்கள் துதிக்கின்ற திருநாவலூரான், தனக்கு நெல் எடுக்க ஆட்களைத் தருமாறு வேண்டி, மனம் பொருந்திப் பாடிய இப்பத்துப் பாடல்களையும் பாடவல்லவர், இம்மையில் தங்கட்கு உள்ள இடர்களை நீக்கி, அம்மையிலும் தேவர்கட்கு மேலாய மேலுலகத்தை ஆள்வார்கள். 

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.