LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஏழாம் திருமுறை-79

7.079.திருப்பருப்பதம் 
பண் - நட்டபாடை 
திருச்சிற்றம்பலம் 
"இத்தலம் வடநாட்டிலுள்ளது. இது ஸ்ரீசைலம் என்றும் மல்லிகார்ச்சுனம் என்றும் பெயர்பெறும்." 
சுவாமிபெயர் - பருவதநாதர். 
தேவியார் - பருவதநாயகியம்மை. 
802 மானும்மரை இனமும்மயி
லினமுங்கலந் தெங்கும்
தாமேமிக மேய்ந்துதடஞ்
சுனைநீர்களைப் பருகிப்
பூமாமர முரிஞ்சிப்பொழி
லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழற்றுயில்
சீபர்ப்பத மலையே.
7.079.1
மான்களின் கூட்டமும், மரைகளின் கூட்டமும், மயில்களின் கூட்டமும் எங்கும் பொருந்தித் தம்விருப்பப்படியே தமக்குரிய உணவுகளைத் தேடி உண்டு, பெரிய சுனைகளில் உள்ள நீரைக் குடித்து, பூத்த பெரிய மரங்களில் உராய்ந்து அவற்றின் செறிவூடே சென்று, தேமாமரச் சோலையின் நிழலில் உறங்குகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை. 
803 மலைச்சாரலும் பொழிற்சாரலும்
புறமேவரும் இனங்கள்
மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட
மலங்கித்தம களிற்றை
அழைத்தோடியும் பிளிறீயவை
அலமந்துவந் தெய்த்துத்
திகைத்தோடித்தம் பிடிதேடிடுஞ்
சீபர்ப்பத மலையே.
7.079.2
குறவர்கள் தங்கள் மலைப்பக்கங்கட்கும் சோலைப் பக்கங்கட்கும் அப்பாற்பட்ட இடங்களினின்றும் வருகின்ற யானைகளைப் பற்றித் தங்கள் மலையிடத்துக் கொணர்ந்து பிணித்து வைத்து அவைகளைத் துன்புறுத்தி உணவை உண்பிக்க, அதனைக் கண்ட பெண் யானைகள் தமது ஆண் யானைகளும் அவர்களால் பற்றப்படுங்கொல் என மனங்கலங்கி அவைகளை அழைத்து ஓடவும், அதனையறியாமல் அவ்வாண் யானைகள் தம் பெண் யானைகள் அவர்கள் கையகப்பட்டனகொல் என மருண்டு பிளிறுதலைச் செய்து, பல இடங்களில் திரிந்து அவைகளைக் காணாது இளைத்துவந்து, மீளவும் செய்வதறியாது திகைத்து அவைகளைத் தேடி ஓடுகின்ற, 'திருப் பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை. 
804 மன்னிப்புனங் காவல்மட
மொழியாள்புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்துகவைக்
கோலிக்கதிர் கொய்ய
என்னைக்கிளி மதியாதென
எடுத்துக்கவ ணொலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய
சீபர்ப்பத மலையே.
7.079.3
தினைப் புனத்தின் காவலையுடைய இளமைச் சொற்களையுடைய குறமகள் அங்குத் தங்கி அப்புனத்தைக் காத்திருக்குங்கால், இளம் பெண்போலும் கிளி வந்து, கிளைத்த தாளின்கண் உள்ள கதிர்களைக் கவர, அதனைக் கண்டு அவள், 'இக்கிளி என்னை மதியாதுபோலும்' என்று சினந்து, கவணை எடுத்து அதனாற் கல்லை, ஓசையுண்டாக வீச, அவ்வழகிய நல்ல கிளி, தன் எண்ணம் மாறி வெளியேறுகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை. 
805 மய்யார்தடங் கண்ணாள்மட
மொழியாள்புனங் காக்கச்
செவ்வேதிரிந் தாயோவெனப்
போகாவிட விளிந்து
கய்பாவிய கவணான்மணி
எறியஇரிந் தோடிச்
செவ்வாயன கிளிபாடிடுஞ்
சீபர்ப்பத மலையே.
7.079.4
மை பொருந்திய பெரிய கண்களையுடையவளும், இளமையான சொற்களையுடையவளும் ஆகிய குறமகள் தினைப்புனத்தைக் காத்தற் பொருட்டுப் பலவிடத்தும் நன்றாகத்திரிந்து 'ஆயோ' என்று சொல்லி ஓட்டவும், போகாது விடுதலினாலே வருந்தி, கையிற் பொருந்திய கவணால் மணியாகிய கல்லை வீச, சிவந்த வாயினை யுடைய கிளி அஞ்சி ஓடி ஒலிக்கின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை. 
806 ஆனைக்குலம் இரிந்தோடித்தன்
பிடிசூழலில் திரியத்
தானப்பிடி செவிதாழ்த்திட
அதற்குமிக இரங்கி
மானக்குற அடல்வேடர்கள்
இலையாற்கலை கோலித்
தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ்
சீபர்ப்பத மலையே.
7.079.5
ஆண் யானைகளின் கூட்டம், தனது பெண் யானைகளின் கூட்டம், சாரலிற் பல இடங்களிலும் சென்று திரிதலினால் அதனைக் காணாது, தேடி ஓட, சென்ற இடங்களில் அப்பெண் யானைகளின் கூட்டமும் ஆண் யானைகளின் கூட்டத்தைக் காணாது அதன் குரலோசையைக் கேட்டற் பொருட்டுச் செவி தாழ்த்து நிற்க, அந் நிலைக்கு மிக இரங்கி, வீரத்தை உடைய குறவர்களாகிய, வெற்றி பொருந்திய வேடர்கள், இலைகளால் கல்லை செய்து அமைத்து, அவைகளில் தேனைப் பிழிந்து வார்த்து, அப்பெண்யானைக் கூட்டத்திற்கு இனிதாக ஊட்டுகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை. 
807 மாற்றுக்களி றடைந்தாய் என்று
மதவேழங்கை யெடுத்து
மூற்றித்தழ லுமிழ்ந்தும்மதம்
பொழிந்தும்முகஞ் சுழியத்
தூற்றத்தரிக் கில்லேனென்று
சொல்லிஅய லறியத்
தேற்றிச்சென்று பிடிசூளறுஞ்
சீபர்ப்பத மலையே.
7.079.6
மதத்தை உடைய ஆண்யானை ஒன்று தன் பெண் யானையை, 'நீ மற்றோர் ஆண்யானையைச் சார்ந்தது என்' என்று சொல்லிக் கையை உயர எடுத்துச் சினம் மிகுந்து, கண்களினின்றும் நெருப்புப் பொறியைச் சிதறி, மதநீரைப் பொழிந்து முகத்தைச் சுளிக்க, அதனைக் கண்ட பெண்யானை, 'நீர் இவ்வாறு அடாப் பழி சொல்லித் தூற்றின் உயிர் தரிக்கலாற்றேன்' என்று, அயலறியத் தனது தவறின்மையைச் சூளறுத்துக் காட்டி அவ்வாண்யானையைத் தௌயப்பண்ணி அதனை அடைகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே எங்கள் சிவபெருமானது மலை. 
808 அப்போதுவந் துண்டீர்களுக்
கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டால்எமை
எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில்
என்றோடிஅக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி
சீபர்ப்பத மலையே.
7.079.7
தினைப்புனத்தைக் காக்கின்ற, கிண்ணம் போலும், உயர்ந்து தோன்றும், இளமையான தனங்களையுடைய குறமகள், தினையை உண்ண வந்த கிளிகளைப் பார்த்து, 'முன்னே வந்து தினையை உண்ட உங்களுக்கு இரங்கி, உங்களை அதட்டாது அப்போது வாளா இருந்தேன்; ஆயினும், நீவிர் இடையறாது வந்து தினையை உண்டால் எங்களை, எங்கள் உறவினர் வெகுள மாட்டார்களோ? ஆதலின் இப்போது உமக்குச் செய்யத் தக்க செயல் இதுதான்' என்று சொல்லி, அவைகளைக் கவணால் எறிகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபெருமானது மலை. 
809 திரியும்புரம் நீறாக்கிய
செல்வன்றன கழலை
அரியதிரு மாலோடயன்
றானும்மவ ரறியார்
கரியின்னின மோடும்பிடி
தேனுண்டவை களித்துத்
திரிதந்தவை திகழ்வாற்பொலி
சீபாப்பத மலையே.
7.079.8
களிற்றியானைகளின் கூட்டத்தோடும் பிடியானைகளின் கூட்டம் தேனை உண்டு, பின், அவ் விருகூட்டங்களும் களித்துத் திரிதருகின்ற அழகு விளங்குதலால் பொலிவெய்திய திருப்பருப்பத மலையில், வானத்தில் திரிகின்ற முப்புரங்களை நீறாகச் செய்த செல்வனாகிய சிவபெருமானது திருவடிகளை, ஏனையோர்க்கு அரிய திருமாலும், பிரமனும் ஆகிய அவர்தாமும் காணமாட்டார். 
810 ஏனத்திரள் கிளைக்கஎரி
போலமணி சிதற
ஏனல்லவை மலைச்சாரலிற்
றிரியுங்கர டீயும்
மானும்மரை இனமும்மயில்
மற்றும்பல வெல்லாம்
தேனுண்பொழில் சோலைமிகு
சீபர்ப்பத மலையே.
7.079.9
மலைச் சாரலில் பன்றியின் கூட்டம் நிலத்தை உழ, அவ்விடத்தினின்றும் நெருப்புப் போல மாணிக்கங்கள் வெளிப்பட, அவற்றைக் கண்டு, தினைக்கூட்டத்தையுடைய மலைச்சாரலை விடுத்து ஓடிய கரடியும், மானும், மரைக் கூட்டமும், மயிலும், மற்றும் பலவும் ஆகிய எல்லாம் பின்பு தேனை உண்டு களிக்கின்ற பூஞ்சோலைகளும், பிற சோலைகளும் மிகுந்திருக்கின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை. 
811 நல்லாரவர் பலர்வாழ்தரு
வயல்நாவல வூரன்
செல்லலுற வரியசிவன்
சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன
தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைசெல வுயர்வானகம்
ஆண்டங்கிருப் பாரே.
7.079.10
துன்பம் உறுதல் இல்லாத சிவபெருமானது திருப்பருப்பத மலையை, நல்லவர் பலர் வாழ்வதும், வயல்களையுடையதுமான திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், யாவரது துன்பமும் தீருமாறு பாடிய இத்தமிழ்ப் பாமாலைகளைப் பாட வல்லவர்கள், சிறிது காலம் செல்லும் அளவிலே உயர்ந்த விண்ணுலகத்தை ஆண்டு அங்கு இருப்பர். 

by C.Malarvizhi   on 24 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.