|
||||||||
சிலும்பல்கள் |
||||||||
உன்வரையில் இந்த
அத்திமரம் பூக்கவில்லை சகோதரி.
வருந்துகிறேன்.
நீ வாழ உத்தரிப்பேன்.
தள்ளி இருந்தேனும் உன் நலத்தில் கண்வைப்பேன்.
விருப்பமென்றால் தொடர்ந்தும் பழகு.
நான் அண்ணன் தம்பி உறவென்று நெசவடித்த
நமது உறவெல்லாம்
நெடுநாட் பழக்கத்தில் நீண்டதுதான்.
ஓராண்டா?
இல்லை, ஒன்றோடு இன்னும் ஒன்றைக் கூட்டுகின்ற
நெடிய காலகட்டம்.
கிட்டத்தட்ட கழுதைக்கு ஒருவயதைக்
கூட்டிக் காட்டுகின்ற எல்லை.
நினைத்துப் பார்த்தால் இனிப்பாயும் இருக்கிறது.
வசந்தகாலத்து நிழல்வாகைக் கொப்பொன்று
பெயர்ந்து விழுந்ததுபோல்
உன்னை நினைத்தால்தான் மனச்சோர்வு எழுகிறது.
இப்போது கேள்.
நான் வருவேன், எங்கே?
அலுவல் தளத்திற்கு.
நீ தலையில் பூச்சூடி இருக்கின்ற
சில காலைப் பொழுதுகளில்
நான் வருவேன், எனது
கடமை நினைப்புக்கு.
உனக்கு குண்டுமல்லிகைப் பூவாசம் கொண்டுவந்து
நானெங்கே தந்தேன்?
காற்றுக்குப் பறக்கும்
உனது கொட்டான் கூந்தலிலே ஒருமயிராய் மாறி
நானெங்கே சிக்குவைத்தேன்?
நீயேன் கற்பனையில் மணங்குடித்தாய் என் ஈரல் கொழுந்தே?
இந்தக் கவிஞனுக்கு இப்படியாய்
தொல்லைகள் சங்கடங்கள்
எல்லாமே உண்டேதான்.
என்றாலும் உன் பெயரால் இதயம் நோவெடுக்கும்.
நெருஞ்சி குத்தியதாய் ஒரு சொட்டு கூடித்தான்
அதிலே வலியிருக்கும்.
மடைச்சி! என் பிரிய மடைச்சி!
ஈர்க்கும் இல்லாமல் பசையும் இல்லாமல்
வெறும் தாள் ஒட்டி நூலில்லாப் பட்டம்
நீயேற்ற நினைத்தாலும் அது நடத்தல் சாத்தியமோ?
இதோ என்னுடைய உள்ளத்தை எட்டிப்பார்.
இதற்குள் உன் பிரிவு,
நீ அடிக்கடி சொண்டு நீட்டுகின்ற பொய்க் கோபம்,
எல்லாம் இருக்கின்ற அந்தஸ்தை நோட்டமிடு.
என் இரத்தம் தவறுதலாய் தீ வளர்த்துக் கொண்டதையும்
மன்னிக்க முடியும்தான்.
உன்வரையில் இந்த அத்திமரம் பூக்கவில்லை சகோதரி. வருந்துகிறேன். நீ வாழ உத்தரிப்பேன். தள்ளி இருந்தேனும் உன் நலத்தில் கண்வைப்பேன். விருப்பமென்றால் தொடர்ந்தும் பழகு.
நான் அண்ணன் தம்பி உறவென்று நெசவடித்த நமது உறவெல்லாம் நெடுநாட் பழக்கத்தில் நீண்டதுதான். ஓராண்டா? இல்லை, ஒன்றோடு இன்னும் ஒன்றைக் கூட்டுகின்ற நெடிய காலகட்டம். கிட்டத்தட்ட கழுதைக்கு ஒருவயதைக் கூட்டிக் காட்டுகின்ற எல்லை.
நினைத்துப் பார்த்தால் இனிப்பாயும் இருக்கிறது. வசந்தகாலத்து நிழல்வாகைக் கொப்பொன்று பெயர்ந்து விழுந்ததுபோல் உன்னை நினைத்தால்தான் மனச்சோர்வு எழுகிறது.
இப்போது கேள். நான் வருவேன், எங்கே? அலுவல் தளத்திற்கு. நீ தலையில் பூச்சூடி இருக்கின்ற சில காலைப் பொழுதுகளில் நான் வருவேன், எனது கடமை நினைப்புக்கு. உனக்கு குண்டுமல்லிகைப் பூவாசம் கொண்டுவந்து நானெங்கே தந்தேன்? காற்றுக்குப் பறக்கும் உனது கொட்டான் கூந்தலிலே ஒருமயிராய் மாறி நானெங்கே சிக்குவைத்தேன்? நீயேன் கற்பனையில் மணங்குடித்தாய் என் ஈரல் கொழுந்தே?
இந்தக் கவிஞனுக்கு இப்படியாய் தொல்லைகள் சங்கடங்கள் எல்லாமே உண்டேதான். என்றாலும் உன் பெயரால் இதயம் நோவெடுக்கும். நெருஞ்சி குத்தியதாய் ஒரு சொட்டு கூடித்தான் அதிலே வலியிருக்கும்.
மடைச்சி! என் பிரிய மடைச்சி! ஈர்க்கும் இல்லாமல் பசையும் இல்லாமல் வெறும் தாள் ஒட்டி நூலில்லாப் பட்டம் நீயேற்ற நினைத்தாலும் அது நடத்தல் சாத்தியமோ? இதோ என்னுடைய உள்ளத்தை எட்டிப்பார். இதற்குள் உன் பிரிவு, நீ அடிக்கடி சொண்டு நீட்டுகின்ற பொய்க் கோபம், எல்லாம் இருக்கின்ற அந்தஸ்தை நோட்டமிடு.
என் இரத்தம் தவறுதலாய் தீ வளர்த்துக் கொண்டதையும் மன்னிக்க முடியும்தான்.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|