LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சைவ சித்தாந்த சாத்திரம்

சிவஞான சித்தியார் பகுதி -1

 

பரபக்கம்
நூல்
காப்பு
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு 
தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள், 
உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத், 
திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே. 1
மங்கல வாழ்த்து
சிவபெருமான்
ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி 
அருள்ஞான மூர்த்தியாய் அகிலம் ஈன்ற, 
மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் 
மகுடசூ ளாமணியாய் வையம் போற்றப், 
பாதிமதி யணிபவளச் சடைகள் தாழப் 
படரொளிஅம் பலத்தாடும் பரனார் பாதத், 
தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத் 
தளராத பேரன்பு வளரா நிற்பாம்.
2
சத்தி
ஈசனருள் இச்சைஅறி வியற்றல் இன்பம்.
இலயமொடு போகமதி கார மாகித், 
தேசருவம் அருவுருவம் உருவ மாகித் 
தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப், 
பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் 
அவைய ளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்(டு), 
ஆசகலும் அடிய ருளத் தப்பனுட னிருக்கும் 
அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.
3
விநாயகக் கடவுள்
இயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றல் 
இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித், 
தயங்குபேர் ஔ¤யாகி எங்கு நின்ற 
தலைவனார் மலைமாது தன்னோ டாடிப், 
பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு 
பாதப் பரியதொரு நீள் கோட்டுப் பெரிய பண்டிக், 
கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் 
கருத்திலுற விருத்திமிகக் காதல் செய்வாம்.
4
சுப்பிரமணியக் கடவுள்
அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் 
தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை, 
திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் 
சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம், 
பொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையில்
பூநீர்கொண் டோவாது போற்றும் அடி யார்கள், 
கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந் தன் 
கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம்.
5
மெய்கண்டதேவ நாயனார்
பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன் 
ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக், 
கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங் 
கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன், 
விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் 
மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன், 
புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் 
எப்போதும் போற்றல் செய்வாம்.
6
அவையடக்கம்
மாலயன்மா மறைஅறியா ஆதி மார்க்கம் 
வையகத்தா கமம்வேத மற்று முள்ள, 
நூலையெலாம் உணர்ந்திறைவன் கழலே 
நோக்கு நோன்மைஅருந் தவர்முன்யான் நுவலு மாறு, 
வேலையுலா வுந்திரைகள் வீசி யேறி 
வேறேழு மொன் றாகி நின்ற போது, 
சாலவுமான் குளப்பிடியிற் றங்கி நின்ற 
சலமதுதா னேரென்னுற் தன்மைத் தாலோ.
7
நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் 
நேயமொடு தாம் பயந்த புதல்வர் வாயில், 
கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும்
குறிப்பரிதா யிடினுமிகக் குலவிப் போற்றி, 
மாடு நமக் கிதுவென்று கொண்டு வாழ்வர் 
அதுபோல மன்னு தமிழ்ப் புலமை யோரென், 
பாடுகவிக் குற்றங்கள் பாரார் இந்நூல்
பாராட்டா நிற்பர் அருட் பரிசி னாலே.
8
நூற்சிறப்பு 
சுத்தவடி வியல்பாக வுடைய சோதி 
சொல்லியஆ கமங் களெலாஞ் சூழப் போயும், 
ஒத்துமுடி யுங்கூட ஓரி டத்தே ஒருபதிக்குப்
பலநெறிக ளுளவா னாற்அ£ற், 
பித்தர்குண மதுபோல ஒருகா லுண்டாய்ப் 
பின்னொருகால் அறிவின்றிப் பேதை யோராய்க், 
கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர் 
கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.
9
நூற்கதிகாரியும் நூல்வழியும் நூற்பெயரும்
போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே 
பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல, 
ஏதுநெறி யெனுமவர்கட் கறிய முன்னா 
ளிறைவனரு ணந்திதனக் கியம்ப நந்தி, 
கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக் குவல 
யத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு, 
தீதகல எமக் களித்த ஞான நூலைத் 
தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே.
10
நூற்கருத்து
இறைவனையும் இறைவனால் இயம்பு நூலும்
ஈண்டளவும் பொருளியல்பும் வேண்டுஞ் செய்தி, 
முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லா 
மூதுலகில் எமக்கியன்ற முயற்சி யாலே, 
சிறையுலவும் புனல்நிலவித் தோன்றும் பேய்த்தேர்ச் 
செய்கைபோ லுண்டாய பொய்கொள் மார்க்கத் 
துறைபலவுங் கடாவிடையாற் சொல்லிப் போக்கித் 
துகள்தீர இந்நூலிற் சொல்ல கிற்பாம்.
11
1. உலகாயுதன் மதம் (12 -63)
இந்திர புரோகிதன் இயம்பும்ஒரு நூலின் 
தந்திர மெனாதறிவி னோட்ருளி லாமல் 
சந்தணை புயத்துமண மாலைகள் தயங்க 
உந்தியுல கத்திலுல காயத னுரைப்பான். 12
ஈண்டளவை காட்சிமன மாதிஇரு மூன்றாய் 
வேண்டும்அனு மானமுத லானபல வேண்டா
பூண்டபொருள் பூதமவை புகழ்கடின சீதந் 
தீண்டரிய வெம்மைசல னத்தினொடு சேர்வே. 13
சாற்றுபெய ரானவை தலம்புனல் கனற்பின் 
காற்றுமென லாம்இவை கலந்தகுண மோதின் 
நாற்றம்இர தம்உருவம் நற்பரிச மாகும் 
போற்றுமிவை நித்தஇயல் பாமிவை புணர்ப்பே. 14
ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும் 
வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற் 
புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம் 
இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே.
15
பூதமதின் ஒன்றுபிரி யப்புலன் இறக்கும் 
நீதியினின் நிற்பன நடப்பனவும் முற்போல் 
ஓதும்வகை யாகிஉறு காரியம் உலந்தால் 
ஆதியவை யாம்இதனை யறிவதறி வாமே. 16
இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று 
செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ 
ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித் 
தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே. 17
சேய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி 
எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன் 
மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில் 
ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ. 18
மாய்ந்துபின் வயலி லிட்ட வைதழை பலிக்கு மாபோல் 
ஏய்ந்திடும் கன்ம மென்னில் இட்டிடத் திசையும் மேனி 
ஓய்ந்துவந் தவரை உண்ணப் பண்ணுஞ்சோ£ றுதரத் தற்றால் 
வாய்ந்திடும் மலம் வயிற்றிற் கொண்டிடும் வழக்கு வைத்தாய்.
19
உருவமும் உணர்வும் செய்தி ஒத்திரா கன்மம் என்னின் 
மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண் டாகி 
வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன் மதியி லாதாய் 
பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே.
20
இன்பொடு துன்ப மெல்லாம் எய்துவ கன்ம மென்னில் 
நன்புனல் சந்த னாதி நணுகவும் அணுக வொண்ணா 
மின்பொலி அழலி னோடு மேவுவ நன்மை தீமை 
என்செய்த தியம்பி டாய்நீ இவையெலாம் இயல்ப தாமே. 21
காயத்தின் குணம தன்றிக் கண்டதான் மாவுண் டாயின் 
மாயத்திற் சொல்லி டாதே மனமுதல் ஆறி னுக்கும் 
நேயத்த தாக வேண்டும் அன்றியே நிகழ்த்து முண்மை 
தேயத்தின் முயற்கொம் பெல்லை செப்பு வோர்செய் தியாமே. 22
அருவமே இறைவ னாகில் அறிவின்றா காய மாகும் 
உருவமே யென்னிற் பூதக் கூட்டத்தில் ஒருவ னாகும் 
மருவிய இரண்டுங் கூடி நிற்பவன் என்னின் மண்மேல் 
இருவிசும் பொருகல் லேந்தி நிற்குமோ இயம்பி டாயே. 23
பூதத்தே அன்ன மாகி அன்னத்தால் உடம்பு புத்தி 
பேதித்தே மனமு மாகிப் பிரிந்தமை திருந்த இன்று 
வேதத்தே யுரைக்க என்னோ மேதினி யோர்க ளெல்லாம் 
கேதத்தே வீழ்ந்து வேறு நெறியல் கேட்கு மாறே. 24
போகத்தை மண்ணிற்கண்டு விட்டுப்போய் விண்ணிற்கொள்ள 
மோகத்த ராகி அல்லல் முயன்றுழல் மூட ரெல்லாம் 
தாகத்தில் தண்ணீ கண்டு விட்டுப்போய்த் தண்ணீர் கேட்டுச் 
சோகித்தே உண்ண வெண்ணித் துயருறு வார்க ளந்தோ. 25
வாழவே வல்லை வாமி வலக்கைதா வென்னு யிர்க்குத் 
தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய் 
கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே 
சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றி னாயே. 26
ஈசனார் அயனார் மாலோ டிந்திரன் தெரிவை மார்பாற் 
பேசொணா வகைக ளெல்லாஞ் செய்தன்றோ பெரியயோரானா£ 
ஆசையால் அவர்போல் நாமும் ஆகவே வேண்டு மாயின் 
வாசமார் குழலா ரோடும் வல்லவா கூடி வாழ்மின். 27
தையலார் ஊட லாடத் தாமவ ரோடுங் கூடிச் 
செய்யதா மரையை வென்ற சீறடி செம்பஞ் சூட்டி 
மெய்யெலாம் பாதஞ் சூடும் வேடத்தார் மெய்யிற் கூடா 
மையல்மா னுடர்பொய் மார்க்க வேடத்தே மாய்கின் றாரே. 28
வாசமார் குழலி னார்கள் மணிஅல்குல் தடத்தே மூழ்கி 
நேசமார் குமுதச் செவ்வாய் அமுதினை நிறைய உண்டு 
தேசுலா மணிமென் தோள்மேற் சேர்ந்துவீற் றிருந்திடாதே 
மாசுலா மனத்தோரெல்லாம் மறுமைகொண் டழிவர் மன்னோ. 29
மதிநிலா நுதலா ரோடு மணிநிலா முன்றி லேறி 
முதிர்நிலா வெறிப்பச் செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப மொய்த்த 
கதிர்நிலா வடங்கொள் கொங்கைக் கண்கள்மார் பகலமூழ்கும் 
புதுநிலா வியநன் போகம் விடுவர்புன் சமயத் தோரே. 30
ஊடுவ துணாவ துற்ற கலவிமங் கையரை யுள்கி 
வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின் 
கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை பேயாய் 
நீடுவ தின் முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர். 31
வீட்டினை உளதென் றோடி மெலிவதிங் கென்னை வீடு 
காட்டினோர் கண்டோர் கேட்டோர் கரியவை உண்டேல் காட்டீர் 
நாட்டினில் அரச னாணைக் கிசையவே நடந்து நாளும் 
ஈட்டிய பொருள்கொண் டிங்கே இன்பத்துள் இசைந்தி டீரே. 32
உலகாயதன்மத மறுதலை
உள்ள தாவது கண்ட தென்றுரை கொண்ட தென்னுல கத்துநீ, 
பிள்ளை யாய்வளர் கின்ற நாளுனைப் பெற்ற தாயொடு தந்தையைக், 
கள்ள மேபுரி கால னாருயி ருண்ண வின்றொரு காளையாய், 
மௌ¢ள வேயுள ரென்று கொண்டு விரும்பு மாறு விளம்பிடே. 33
இடித்து மின்னி இருண்டு மேக மெழுந்த போதிது பெய்யுமென், 
றடுத்த தும்அகில் சந்த முந்தி அலைத்து வார்வுனல் ஆறுகொண், 
டெடுத்து வந்திட, மால்வ ரைக்க ணிருந்து கொண்டல் சொரிந்த தென்று, 
முடித்த தும்இவை காட்சி யன்றனு மான மென்று மொழிந்திடே. 34
காண்ட லோஅநு மான மாவதும் காட்சி மன்னதும் காட்சியேல்,
பூண்ட பூத உடம்பி னுள்எழு போத மென்கொடு கண்டனை, 
மாண்ட வாயின் மனங்கொள் ஞான முணர்ந்த தும்அநு மானமென், 
றீண்டு பூத மியைந்த திவ்வுடன் என்ப தென்பிர மாணமே. 35
பழுதி லாமறை கண்ட நூல்பழு தின்றி யுண்டது பாரின்மேன், 
மொழிவர் சோதிட முன்னி யின்னது முடியு மென்பது முன்னமே, 
அழிவி லாதது கண்ட னம்அவை யன்றி யுஞ்சில ஆகமங்களின், 
எழுதி யோர்படி என்று கொண்டிரு நிதியெ டுப்பதும் எண்ணிடே. 36
பூத மானவை நித்த மென்று புகன்ற தென்னை உருக் களாய், 
ஆத லோடழி வாகு மாதலி னாக்கு வோரவர் வேண்டிடும், 
காத லோடு கடாதி மண்கொ டியற்று வோருளர் கண் டனம், 
சீத நீரி லெழுந்த கொப்புள் நிகழ்ந்த மாருதச் செய்கையே. 37
நீரின் வந்தெழு கொப்புள் நீரது வாயெ ழும்நிகழ் பூதமும் 
ஓரின் வேறுணர் வாயெ ழாஅவை பூத மாகி உதித்திடும் 
தேரின் நூறடை காய்செ றிந்தவை சேர வேறு சிவப்பெழும் 
பாரி னிற்பிரி யாது புந்தி பழிப்பு டம்பு கிடக்கவே. 38
கூறு சேர்வையின் வந்த போது சிவப்பெனும் குணம் ஒன்றுமே, 
வேறு வேறு புலன்கு ணங்கள் உடற்கண் வந்து விளைந்ததென், 
நூறு காயடை கூடும் வேறொரு வன்ந னாலென நோக்கிநீ, 
தேறு பூத செயற்கும் வேண்டும் ஒருத்த னென்று தௌ¤ந்திடே. 39
ஆன ஐம்பொறி உண்டி நித்திரை அச்சம் மைதுனம் ஆதியாய், 
ஊனில் வந்திடு முன்பி லாதவை யென்று ரைக்கின் உலூதைபோல், 
வானின் வந்திடும் மாதர் ஆண்அலி யாகி மானுடர் ஆதியாய், 
யோனி பன்மையும் இன்று பூதம் உறும்பு ணர்ச்சியொர் தன்மையே. 40
ஐந்து நான்கொரு மூன்றி ரண்டுடன் ஒன்ற தாய்உட லங்களின், 
வந்தி டாவுணர் விந்தி யங்களும் வன்ன பன்மையும் இன்மையாம், 
புந்தி யோடிய வன்ன போக குணங்கள் பூத புணர்ச்சிதான், 
தந்தி டாதிவை பேத மாயிட வந்த வாவினை தந்தவா. 41
அறிவு பூதம தென்னில் வேறு புறத்த தறிந்தமை கண்டடிலம் 
செறிவு தான்உ டலத்தெ னில்சவ மான போதுடல் பேதருமோ 
குறிகொ ளாதுடல் வாயுவானது கூடி டாமையின் என்னின்நீ 
பிறித ராதுயிர் நிற்க ஞானம் உறக்க மென்பிற வாததே. 42
அறிவு டற்குண மென்னில் ஆனைய தததி அந்தம் எறும்பதா 
உறுமு டற்பெரி தான வற்றில் உதித்தி டும்பெரி தாகவே 
சிறுவு டற்செறி ஞான மும்சிறி தாயி டும்பரி ணாமமும் 
பெறுமு டற்சிறி தாவ தென்பெரி தாவதென்சில பேசிடே. 43
போத மம்மெலி வவகி யும்மலி பூத மானவை கூடலிற் 
பேத மோடு பெருத்து டற்கள்சிறுத்த பெற்றிமை என்றிடின் 
ஓது டற்பெரி தான வுஞ்சிறி தாயி டாசிறி தானவும் 
நீதி யிற்பெரி தாயி டாமுனம் உள்ள தன்மையின் நீடுமே. 44
இயல்பு காண்இவை யென்னில் வேறிசை பெண்ணோ டாணிரு தன்மையாஞ், 
செயல்கொ ளாஇவர் செய்தி காரண மாக வந்து செனிப்பதென், 
இயல்ல தாமுடல் பூத காரிய மாவ தும்மில்ஆஆ யாகுமால், 
மயல தாம்பிஆஆ யாலொ ருத்தன் வகுத்த தன்மையின் வந்ததே. 45
கார ணம்அவை யென்ற தென்னை கடாதி போல்நிகழ் காரியம், 
நேர ணைந்து சமைந்து நின்றிடும் என்ப தும்அது நேர்கிலோம், 
போர ணைந்திடு மொன்றொ டொன்று பொருந்து மாகில் வருந்தியும், 
நீர ணைந்தொரு தீயி னின்றது கண்ட தாயின் நிகழ்த்திடே. 46
பூத மேவு புணர்ச்சி யேபுரி காய காரண மாகுமேல் 
காதல் ஆணொடு பெண்ணும் மேவு புணர்ச்சி ககரண மாவதெ 
ஆதி யேஉல கத்தில் ஆணொடு பெண்ணு மாயணை காரியம்(ன்) 
நாதன் நாயகி யோடு கூடி நயந்த காரணம் என்பரே. 47
கந்தம் வெம்மை கலந்தி டும்புனல் கன்மம் என்செய்த தென்றனை 
சந்த னந்தழல் சார நீரிரு தன்மை யுற்றிடு மாறதோர் 
தந்த கன்மம் இரண்ட ணைந்து தருஞ்சு கத்தொடு துக்கமும் 
சிந்தி யாஎழு சீவ னுற்றிடும் அஅறு டற்கிலை தேறிடே. 48
இன்பம் எய்தி இருந்து நீவினை இல்லை இங்கியல் பென் றிடில், 
துன்பம் எய்திடு வானென் மற்றிது சொல்லி டாய் சொல வல்லையேல், 
முன்பு செய்திடு கன்ம மென்றறி கன்ம மும்முதல் வன்னறிந், 
தன்பி னாலுறு விக்கு மப்பயன் ஆங்க மைப்பொ டநாதியே. 49
அநாதி யேலமை வின்றெ னின்மல மாஆஆ கன்மம் அணுச்சிவன் 
அநாதி கன்மம் அணுக்கள் செய்ய அறிந்து கன்மம் உடற்செயா 
அநாதி காரிய மாமு டற்கள் அசேத னம்மணை யாவறிந்(து) 
அநாதி யாதி அமைக்க வேண்டும் அமைப்பி னோடும் அநாதியே. 50
காணொ ணாகர ணங்க ளுக்குயிர் கண்டி டாமையின் இன்றெனில் 
காணு மோகடங் கண்ட கண்ணினைக் கண்டு நிற்பதுங் கண்ணதே 
காணொ ணாதுயிர் தானு மிப்படி கண்டி டுங்கர ணங்களைக் 
காணொ ணாகர ணங்க ளுக்குயி ருண்மை யாவதுங் கண்டிடே. 51
அங்கி யானது தானு மொன்றை அணைந்து நின்று நிகழ்ந்திடும் 
பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடா(து) 
எங்கு மார்தயி லத்தை யுண்டெழு தீப மான தெரிந்திடும் 
அங்க தாம்உடல் நின்று கன்மம் அருந்தி யாருயி ராவதே. 52
அறிவு தானுட லத்தின் வேறது வாயி றந்து பிறந்திடின் 
அறிவு முன்புள திங்கு வந்தும் அறிந்தி டாமைய தின்றெனின் 
அறிவை யோகன வத்து நீநன வத்தை அன்று தரத்திருந் 
தறியு மவ்வறி வோம யட்ககறி வாத லாலறி யாதுகாண். 53
இறந்தி டும்அறி வேபி றந்திடு மென்ப திங்கிசை யாதெனின், 
உறங்கி டும்பொழு தின்றி நின்றுணர் விங்கு தித்திடு மாறதோர், 
பிறந்த இவ்வுடல் போக வேறுடல் பின்பு வந்தமை பேசிடின், 
மறந்தி டுங்கன வத்தின் வேறு டல் வந்த வாறு மதித்திடே. 54
கரணம் வாயு விடத்த டங்க அடங்கி வந்தெழு காரியம் 
மரண மான விடத்து மற்றிவை மாய்ந்து பின்பு வருஞ்செயல் 
கிரண மார்கலை கெட்டு திப்ப இறப்பி னோடு பிறப்பையும் 
தரணி யோர்கள் மதிக்கு ரைப்ப ருயிர்க்கு மிப்படி சாற்றிடே. 55
பூத மானவை காரி யங்கள் பொலிந்து மன்னி அழிந்திடும் 
ஆத லால்ஒரு நாதன் இங்குளன் என்ற றிந்துகொள் ஐயனே 
பேத மான கடாதி மண்ணினில் வந்த வாறு பிடித்திடில் 
போதி லாத குலால னால்வரு செய்கை யென்று குறிப்பரே. 56
வேதன் நாரணன் ஆர ணம்மறி யாவி ழுப்பொருள் பேதைபால், 
தூத னாயிரு கால்ந டந்திடு தோழன் வன்னம செய் தொண்டனுக்(கு), 
ஆத லாலடி யார்க ளுக்கௌ¤ யான டிக்கம லங்கள்நீ, 
காத லாலணை ஈண்டன் வேண்டின இம்மை யேதருங் கண்டிடே. 57
பொன்கு லாவு மணிக்க லன்கள் மலம்பு கில்கை பொருந்திடா, 
மின்கு லாம்இடை யார்கள் தாமுல கத்தின் வேட்கை விடும்பொருள், 
புன்பு லால்மல மூத்தி ராதி பொசிந்து நாறு புலைக்கலம், 
என்கொ லாமிவர் மேல்வி ழுந்த திவற்றின் என்பெற எண்ணியே. 58
தோலி ரத்தம் இறைச்சி மேதை யெலும்பு மச்சை சுவேதநீ 
ராலெ டுத்த முடைக்கு ரம்பை அழுத்தி னோடு புழுக்குழாம் 
நூலொ ழுக்கிடு கோழை ஈரல் நுரைக்கு மூத்திர பாத்திரம் 
சேல டர்த்தகண் ணார்க ளென்பது தேர்ம லத்திரள் திண்ணமே. 59
ஆசை யுற்றுழல் சூக ரங்கள் அசுத்த மேவி அளைந்துதின் 
றேசு கித்தன வாயி டுஞ்சுகம் ஏழை யோடுறும் இன்பம் நீ 
மாச தற்றொளிர் நித்த சுத்த வளந்த ருஞ்சுக வாரிகாண் 
ஈச னுக்கடி மைத்தி றத்தின் இசைந்து நாம்பெறும் இன்பமே. 60
குரோத மேகுண மாயி ருந்தவர் சாந்தி நன்மை குறிக்கொளார் 
அராக மேயணை வார்க ளாசை அறுத்த இன்பம் அறிந்திடார் 
பராவு தேவர் பராவு தூய பராப ரன்அடி பற்றிநீ 
விராவு மெய்யில் விடாத இன்பம் விளைந்திடும் இதுமெய்ம்மையே. 61
காம மாதி குணங்க ளைச்சுக மென்று கொண்டனை காதலால் 
தூம மாரழல் அங்கி சீத மலிந்த போது சுகந்தரும் 
நாம மார்தரு சீதம் வெம்மை நலிந்த பேபது தருஞ்சுகம் 
சேச மாகிய இன்ப மாமிகு தெய்வ நன்னெறி சேரவே. 62
படிக்கு நூல்கள் சிவாக மம்பசு பாசமொடு பதித்திறம், 
எடுத்தி யம்புவ தீசன் வார்கழ லேத்தி டுந்தொழி லென்றுமே, 
விடுத்தி டும்பொருள் காம மாதிகள் வேண்டி டும் பொரு ளீண்டருள், 
முடித்து மும்மலம் விட்டு நின்மல னோடு நின்றிடன் முத்தியே. 63
2. சௌத்திராந்திகன் மதம் (64-134)
நீதியார் வேத நூலின் நெறியலா அறங்கள் நாளும் 
ஓதியோர் ஐந்து சீலம் உடையராய் உடல மூடிப் 
போதிநீள் மரத்தின் மேவும் புத்தர்நால் வரினும் வைத்துச் 
சாதிதான் இலாத கொள்கைச் சௌத்திராந் திகன்முன் சாற்றும். 64
முழுதுணர்ந் துலகிற் கோறல் முதற்செயல் முணிந்து மற்றும் 
பழுதிலா அருளி னாலே பரதுக்க துக்க னாதித் 
தொழுதுவா னவரும் போற்றத் தொல்பிட கங்க ளான 
வழுவிலா கமங்கள் சொன்ன மாதவன் நநத னாவான். 65
மருவிய அளவை காட்சி மானமென் றிரண்டி வற்றறல் 
கருதிய பொருள்கள் ஞான ஞேயமாய்க் கணத்திற் பங்கம் 
வருமுரு அருவம் வீடு வழக்கென நான்க தாதித் 
தருமவை ஒறி ரண்டாய்த் தான்விரிந் தெட்டி னாமே. 66
உருஇயல் பூத மோடங் குபாதாய ரூப மாகும் 
அருஇயல் சித்தம் கன்மம் என்றிரண் டாகும் வீட்டின் 
மருவியல் குற்றம் கந்த மெனவழங் கிடும்வ ழக்கின் 
இருஇயல் உள்ள தோடங் கில்லதாம் இயம்புங் காலே. 67
மண்புனல் அனல்கால் பூதம் வலிகந்தம் இரதம் வன்னம் 
எண்டரும் உபாதா யம்தா னிவைஇரு நான்குங் கூடி 
உண்டொரு பொருளு ரூபம் உறுபுலன் உபாங்க மோடக் 
கண்டது சித்தம் கன்மம் நன்றுதீ தென்றட காணே. 68
குற்றவீ டராக மாதி குணங்களைக் குறைதத லாகும் 
மற்றவீ டுருவ மாதி ஐந்தையு மாய்த் லாகும் 
சொற்றருந் தொகைதொ டர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய் 
உற்றிடும் வழக்கி ரண்டும் ஒன்றுமூன் றாகி ஆறாம். 69
ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி ஐந்தும் கூடி 
வருபவ னென்று ரைத்தல் தொகையுண்மை வழக்க தாகும் 
உருவமங் காதி யாய ஐந்தையும் ஒருவன் இன்று 
தருவது தொகையினின்மை வழக்க தாஞ்சாற் றுங்காலே. 70
காரண காரி யத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின் 
சோர்வறத் தோன்றும் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை 
ஓர்தரின் ஒருவ னேஎக் காலத்தம் உள்ளா னென்று 
தேர்வது தொடர்ச்சியின்மை வழக்கதாம் செப்புங்காலே. 71
தோன்றிய பொருள்க ளெல்லாம் நாசமாம் என்று சொல்லும் 
மாற்றமுன் னுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை 
போற்றிய பொருள்கண் கட்குப் போனது அஅ£ல்மு திர்ந்து 
வேற்றுமைப் பட்ட தென்கை மிகுத்துரை இல்வழக்கே. 72
உள்வழக் கில்வ ழக்குள் ளதுசார்ந்த உள்வ ழக்கோ(டு) 
உள்ளது சார்ந்த இன்மை வழக்குடன் இன்மை சார்ந்த 
உள்வாக் கின்மை சார்ந்த இல்வழக் கென்றோ ராறாம் 
உள்வழக்குள துண்டென்கை முயற்கோடின் றில்வழக்கே. 73
உணர்வுசார்ந் துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை 
உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த இன்மை 
உணர்வுமுன் பின்றித் தோன்றல் இல்லது சார்ந்த வுண்மை 
உணரினில் லதுசா ரின்மை உள்ளங்கை உரோம நாணே. 74
சொன்னநால் வகையு மின்றிச் சொல்லிடும் பொருள்க ளெல்லாம் 
என்னையோ அறிகி லோம்பித் தேறியோ வானம் ஆன்மா 
மன்னுகா லங்கடிக்கு மனமுடன் வாக்கி றந்திட்(டு) 
உன்னுமோர் இறையும் உண்டென் றுரைப்பது நித்த மன்றே. 75
ஈங்குவவன் செயற்கு வாரா இயம்பிய பொருள்க ளெல்லாம் 
தாங்குவான் உளதே யென்னில் தரித்திடா தருவ மாதல் 
ஓங்குவான் ஓசைக் ககதி யெனிலதங் குருவின் கூட்டம் 
நீங்குவா னின்றி எங்கும் நின்றதேல் எங்கு மின்றே. 76
போதமுண் டுயிர்கட் கென்னில் வாயிலைம் புலனும் நூலும் 
ஆய்தலின் றொட்டுத் தீட்டுக் கலப்பினில் அறியு மென்னில் 
ஏதமுண் டிரவிற் பச்சை சிவப்புடன் ஏய்ந்த போது 
கேதநின் றென்னோ என்னும் ஐயமுன் கிடத்த லாலே. 77
அறிந்திடா வாயி லின்றேல் அறிவின்றாம் ஐந்தும் பற்றி 
அறிந்திடும் அறிவுண் டென்னில் ஐந்தினும் அறிவொன் றாக 
அறிந்திட வேண்டும் சார்பின் அறிந்திடு மென்னில் உன்னை 
அறிந்திலோம் புத்த னென்றிங் கழகிது சொன்ன வாறே. 78
ஞானஞே யங்க ளன்றி ஞாதிரு என்று சொல்ல 
ஆனதிங் கறிவேவ அன்றோ அன்றெனில் அவனி போலும் 
தாதிங் கறிவே என்னில் சமைந்திடு நன்ப ருப்புப் 
போனக மதற்குத் தானே கறியெனப் புகன்ற தாமே. 79
உயிரினை அருவ தென்னில் உருவுடன் உற்று நில்லா(து) 
உயிரினை உருவ தென்னில் உடலினில் உடல டங்கா(து) 
உயிரினை அணுவ தென்னில் உடல்பல துவார மோடும் 
உயிரினை நித்த மென்னில் உணர்வுத யாந்த மின்றே. 80
எங்குமாய் நின்ற தான்மா என்றிடின் எங்கும் இன்றாம் 
தங்கிடு நிறைவு தத்தம் சரீரங்கள் தோறு மென்னின் 
மங்கிடும் உடலத் தோடே வடிவினில் ஓரிடத்தே 
அங்கது நின்ற தென்னில் அடிமுடி அறிவின் றாமே. 81
சாற்றிய காலம் இங்குத் தங்கிய வாறி தென்னை(னில்) 
தோற்றுவித் தளித்துப் போக்கும் தொழிலவை கால மென் 
போற்றிய பொருளில் புக்குப் பிணங்கிடும் பொருட்பின் இன்றாம் 
தேற்றிய இல்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே. 82
எனக்குநீ கிழக்கி ருந்தா யாகின்மேற் கென்றா யென்பால் 
எனக்குமேற் கிருந்தான் என்பாற் கிழக்கென இயம்புந் திக்குத் 
தனக்குநாம் கொள்வ தெப்பால் சாற்றிடாய் இல்ல ழக்குத் 
தனக்குள தாகும் உண்மை தானில தாகு மன்றே. 83
உலகினைப் படைத்தான் என்றாய் ஒருவனிங் குள்ள தாயின் 
உலகினைப் படைக்க வேண்டா இல்லையேல் படைக்க வொண்ணா(து) 
உலகினுக் குபாதா நந்தான் உள்ளதாய்க் காரி யத்தாம் 
உலகினைப் படைக்கில் அங்கும் உளதில தாவ துண்டே. 84
உள்ளது கடாதி போல உதிப்பித்தான் என்று ரைக்கின் 
மௌ¢ளவே யெங்கு நின்று விதித்தனன் உலகின் மீது 
வள்ளல் தான்நின்றா னென்னில் வந்ததாம் உலக முன்னே 
தள்ளிடா தெங்கு நிற்கின் எங்குமுன் தந்த தாமே. 85
இல்லது கருணை யாலே இயற்றினன் இறைவன் என்னில் 
கொல்லரி உழுவை நாகங் கூற்றமுங் கொண்டு தோற்ற 
வல்லவன் கருணை யென்னோ வலியினால் வேண்டிற் றெல்லாம் 
பல்கவே படைத்தா னாயிற் பித்தரைப் பணிந்தி டாயே. 86
பெறுவதிங் கென்பபடத்துப் பெற்றது விளையாட் டென்னில் 
சிறுமழ விறைய தாகும் செய்திடும் கன்மத் தென்னின் 
உறுபெருங் கன்மஞ் செய்வோர் முன்புள ராவ ருண்மை 
அறிவுறின் ஞால மெல்லாம் அநாதியென் றறிந்தி டாயே. 87
உருவொடு நின்றா னென்னின் உருவமுன் படைத்தார் வேண்டும் 
உருவவன் இச்சை யென்னில் உலகெலாம் இச்சை யாகும் 
உருவுல கத்து ளோர்கட் குறுவது கன்மா லென்னின் 
உருவுடை யோர்கட் கெல்லாம் உற்றது கன்மத் தாமே. 88
அருவெனில் பவத்தி னின்றும் எடுத்திடான் ஆகா சம்போல் 
மருவினன் நிழல்போ லென்னின் மருவினோர்க் காகும்மாட்சி 
பெருகிய அறிவுண் டென்று பேசிடின் நேசத் தோடும் 
கருதிட உருவம் வேண்டும் இல்லையேற் கருத லின்றே. 89
எங்கள்நூல் அநாதி யயக இறைவனுண் டென்னு மென்னின் 
உங்கள்நூல் உரைப்பா ரின்றி ஓதுவ தழகி தாகும் 
அங்கவன் தன்ஆஆ நூல்கொண் டறிந்தனம் அவனைக் கொண்டே 
இங்குநூல் அறிந்தோ மென்னில் ஈதோராச் சரிய மாமே. 90
உற்றெழு மரங்க ளாதி உயிரின்றிப் பூத ரூபம் 
பற்றியிப் பாரின் மீது பாங்கினாற் பலவு மாகிப் 
புற்றொடு மயிர்கொம் பாதி போலவே தோன்றி மாயும் 
மற்றுள யோனி கட்குப் பயனென வழங்கு மன்றே. 91
கொண்றிட லாகா தென்றும் கொன்றவை கொண்டு நாளும் 
தின்றிட லாகு மண்ணோ டொத்திடும் செத்த வெல்லாம 
ஒன்றிய வாச மூட்டி உண்ணுநீர் வைத்த வர்க்கோ 
சென்றுநின் றுண்ட வர்க்கோ புண்ணியம் செப்பி டாயே. 92
ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும் 
தாங்குபா வனைவிஞ் ஞானம் தாமிவை ஐந்துங் கூடிப் 
பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம் 
அங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்தி யின்பம். 93
அழித்திடும் அராக மாதி அகற்றிநல் லறங்கள் பூரித்(து) 
இழித்திடும் புலன்கள் போக்கி இன்பொடு துன்பம் வாட்டிப் 
பழித்திடாப் பழுதில் வாழ்க்கை எட்டையும் பாரித் தெல்லாம் 
ஒழித்திடு ஞான சீலம் சமாதியின் உறுதி யாமே.

பரபக்கம்

நூல்

காப்பு
ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன் நால்வாய் ஐங் கரத்தன் ஆறு தருகோட்டம் பிறையிதழித் தாழ்சடையான் தரும்ஒரு வாரணத்தின் தாள்கள், உருகோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவுபகல் உணர்வோர் சிந்தைத், திருகோட்டும் அயன்திருமால் செல்வமும்ஒன் றோஎன்னைச் செய்யும் தேவே. 1
மங்கல வாழ்த்து
சிவபெருமான்
ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி அருள்ஞான மூர்த்தியாய் அகிலம் ஈன்ற, மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுடசூ ளாமணியாய் வையம் போற்றப், பாதிமதி யணிபவளச் சடைகள் தாழப் படரொளிஅம் பலத்தாடும் பரனார் பாதத், தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம்.2
சத்தி
ஈசனருள் இச்சைஅறி வியற்றல் இன்பம்.இலயமொடு போகமதி கார மாகித், தேசருவம் அருவுருவம் உருவ மாகித் தேவியுமாய்த் தேசமொடு செல்வ மாகிப், பேசரிய உயிரையெலாம் பெற்று நோக்கிப் பெரும்போகம் அவைய ளித்துப் பிறப்பினையும் ஒழித்திட்(டு), ஆசகலும் அடிய ருளத் தப்பனுட னிருக்கும் அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.3
விநாயகக் கடவுள்
இயம்புநூல் இருந்தமிழின் செய்யு ளாற்றல் இடையூறு தீர்ந்தினிது முடிய வேண்டித், தயங்குபேர் ஔ¤யாகி எங்கு நின்ற தலைவனார் மலைமாது தன்னோ டாடிப், பயந்த ஐங் கரநாற்றோள் முக்கண்இரு பாதப் பரியதொரு நீள் கோட்டுப் பெரிய பண்டிக், கயந்தன்அடிக் கமலங்கள் நயந்து போற்றிக் கருத்திலுற விருத்திமிகக் காதல் செய்வாம்.4
சுப்பிரமணியக் கடவுள்
அருமறைஆ கமம்அங்கம் அருங்கலைநூல் தெரிந்த அகத்தியனுக் கோத்துரைக்கும் அருட்குருவாங் குருளை, திருமறைமா முனிவர்முனி தேவர்கள்தந் தேவன் சிவனருள் சேர் திருமதலை தவநிலையோர் தெய்வம், பொரும்அறையார் கழல்வீரர் வீரன் கையில்பூநீர்கொண் டோவாது போற்றும் அடி யார்கள், கருமறையா வகையருளிக் கதிவழங்குங் கந் தன் கழலிணைக ளெஞ்சிரத்திற் கருத்தில் வைப்பாம்.5
மெய்கண்டதேவ நாயனார்
பண்டைமறை வண்டாற்றப் பசுந்தேன் ஞானம் பரிந் தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக், கண்டஇரு தயகமல முகைக ளௌ¢ளலாங் கண்திறப்பக் காசினிமேல் வந்தஅருட் கதிரோன், விண்டமலர்ப் பொழில்புடைசூழ் வெண்ணெய் மேவு மெய்கண்ட தேவன்மிகு சைவ நாதன், புண்டரிக மலர் தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்.6
அவையடக்கம்
மாலயன்மா மறைஅறியா ஆதி மார்க்கம் வையகத்தா கமம்வேத மற்று முள்ள, நூலையெலாம் உணர்ந்திறைவன் கழலே நோக்கு நோன்மைஅருந் தவர்முன்யான் நுவலு மாறு, வேலையுலா வுந்திரைகள் வீசி யேறி வேறேழு மொன் றாகி நின்ற போது, சாலவுமான் குளப்பிடியிற் றங்கி நின்ற சலமதுதா னேரென்னுற் தன்மைத் தாலோ.7
நீடுபுகழ் உலகுதனில் மைந்தர் மாதர் நேயமொடு தாம் பயந்த புதல்வர் வாயில், கூடுமொழி மழலையொடு குழறி ஒன்றும்குறிப்பரிதா யிடினுமிகக் குலவிப் போற்றி, மாடு நமக் கிதுவென்று கொண்டு வாழ்வர் அதுபோல மன்னு தமிழ்ப் புலமை யோரென், பாடுகவிக் குற்றங்கள் பாரார் இந்நூல்பாராட்டா நிற்பர் அருட் பரிசி னாலே.8
நூற்சிறப்பு 
சுத்தவடி வியல்பாக வுடைய சோதி சொல்லியஆ கமங் களெலாஞ் சூழப் போயும், ஒத்துமுடி யுங்கூட ஓரி டத்தே ஒருபதிக்குப்பலநெறிக ளுளவா னாற்அ£ற், பித்தர்குண மதுபோல ஒருகா லுண்டாய்ப் பின்னொருகால் அறிவின்றிப் பேதை யோராய்க், கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர் கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.9
நூற்கதிகாரியும் நூல்வழியும் நூற்பெயரும்
போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல, ஏதுநெறி யெனுமவர்கட் கறிய முன்னா ளிறைவனரு ணந்திதனக் கியம்ப நந்தி, கோதிலருட் சனற்குமா ரற்குக் கூறக் குவல யத்தின் அவ்வழியெங் குருநாதன் கொண்டு, தீதகல எமக் களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே.10
நூற்கருத்து
இறைவனையும் இறைவனால் இயம்பு நூலும்ஈண்டளவும் பொருளியல்பும் வேண்டுஞ் செய்தி, முறைமைகளும் பெத்தமொடு முத்தி யெல்லா மூதுலகில் எமக்கியன்ற முயற்சி யாலே, சிறையுலவும் புனல்நிலவித் தோன்றும் பேய்த்தேர்ச் செய்கைபோ லுண்டாய பொய்கொள் மார்க்கத் துறைபலவுங் கடாவிடையாற் சொல்லிப் போக்கித் துகள்தீர இந்நூலிற் சொல்ல கிற்பாம்.11

1. உலகாயுதன் மதம் (12 -63)
இந்திர புரோகிதன் இயம்பும்ஒரு நூலின் தந்திர மெனாதறிவி னோட்ருளி லாமல் சந்தணை புயத்துமண மாலைகள் தயங்க உந்தியுல கத்திலுல காயத னுரைப்பான். 12
ஈண்டளவை காட்சிமன மாதிஇரு மூன்றாய் வேண்டும்அனு மானமுத லானபல வேண்டாபூண்டபொருள் பூதமவை புகழ்கடின சீதந் தீண்டரிய வெம்மைசல னத்தினொடு சேர்வே. 13
சாற்றுபெய ரானவை தலம்புனல் கனற்பின் காற்றுமென லாம்இவை கலந்தகுண மோதின் நாற்றம்இர தம்உருவம் நற்பரிச மாகும் போற்றுமிவை நித்தஇயல் பாமிவை புணர்ப்பே. 14
ஒத்துறு புணர்ச்சியின் உருக்கள்பல வாகும் வைத்துறு கடாதிபல மண்ணின்வரு மாபோற் புத்திகுண நற்பொறி புலன்களிவை யெல்லாம் இத்தில்வரும் நீரினில் எழுங்குமிழி ஒத்தே. 15
பூதமதின் ஒன்றுபிரி யப்புலன் இறக்கும் நீதியினின் நிற்பன நடப்பனவும் முற்போல் ஓதும்வகை யாகிஉறு காரியம் உலந்தால் ஆதியவை யாம்இதனை யறிவதறி வாமே. 16
இப்படி யன்றிக் கன்மம் உயிர்இறை வேறுண் டென்று செப்பிடும் அவர்க்கு மண்ணோர் செய்திடுங் குற்ற மென்னோ ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித் தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே. 17
சேய்திடும் கன்ம மெல்லாம் செய்தவர் தம்மைப் பற்றி எய்திடு மென்னில் இங்கே மாய்ந்திடும் ஏய்வ தெங்ஙன் மெய்தரு தூலங் கெட்டுச் சூக்கமாய் மேவு மென்னில் ஐயனே தீபம் போனால் அதனொளி யாவ துண்டோ. 18
மாய்ந்துபின் வயலி லிட்ட வைதழை பலிக்கு மாபோல் ஏய்ந்திடும் கன்ம மென்னில் இட்டிடத் திசையும் மேனி ஓய்ந்துவந் தவரை உண்ணப் பண்ணுஞ்சோ£ றுதரத் தற்றால் வாய்ந்திடும் மலம் வயிற்றிற் கொண்டிடும் வழக்கு வைத்தாய். 19
உருவமும் உணர்வும் செய்தி ஒத்திரா கன்மம் என்னின் மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண் டாகி வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன் மதியி லாதாய் பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே. 20
இன்பொடு துன்ப மெல்லாம் எய்துவ கன்ம மென்னில் நன்புனல் சந்த னாதி நணுகவும் அணுக வொண்ணா மின்பொலி அழலி னோடு மேவுவ நன்மை தீமை என்செய்த தியம்பி டாய்நீ இவையெலாம் இயல்ப தாமே. 21
காயத்தின் குணம தன்றிக் கண்டதான் மாவுண் டாயின் மாயத்திற் சொல்லி டாதே மனமுதல் ஆறி னுக்கும் நேயத்த தாக வேண்டும் அன்றியே நிகழ்த்து முண்மை தேயத்தின் முயற்கொம் பெல்லை செப்பு வோர்செய் தியாமே. 22
அருவமே இறைவ னாகில் அறிவின்றா காய மாகும் உருவமே யென்னிற் பூதக் கூட்டத்தில் ஒருவ னாகும் மருவிய இரண்டுங் கூடி நிற்பவன் என்னின் மண்மேல் இருவிசும் பொருகல் லேந்தி நிற்குமோ இயம்பி டாயே. 23
பூதத்தே அன்ன மாகி அன்னத்தால் உடம்பு புத்தி பேதித்தே மனமு மாகிப் பிரிந்தமை திருந்த இன்று வேதத்தே யுரைக்க என்னோ மேதினி யோர்க ளெல்லாம் கேதத்தே வீழ்ந்து வேறு நெறியல் கேட்கு மாறே. 24
போகத்தை மண்ணிற்கண்டு விட்டுப்போய் விண்ணிற்கொள்ள மோகத்த ராகி அல்லல் முயன்றுழல் மூட ரெல்லாம் தாகத்தில் தண்ணீ கண்டு விட்டுப்போய்த் தண்ணீர் கேட்டுச் சோகித்தே உண்ண வெண்ணித் துயருறு வார்க ளந்தோ. 25
வாழவே வல்லை வாமி வலக்கைதா வென்னு யிர்க்குத் தோழனீ யுன்னை யொப்பார் சொல்லிடி னில்லை கண்டாய் கோழைமா னுடர்தீ தென்னுங் கொலைகள வாதி கொண்டே சூழும்வார் குழலார் மொய்ப்பச் சுடரெனத் தோன்றி னாயே. 26
ஈசனார் அயனார் மாலோ டிந்திரன் தெரிவை மார்பாற் பேசொணா வகைக ளெல்லாஞ் செய்தன்றோ பெரியயோரானா£ ஆசையால் அவர்போல் நாமும் ஆகவே வேண்டு மாயின் வாசமார் குழலா ரோடும் வல்லவா கூடி வாழ்மின். 27
தையலார் ஊட லாடத் தாமவ ரோடுங் கூடிச் செய்யதா மரையை வென்ற சீறடி செம்பஞ் சூட்டி மெய்யெலாம் பாதஞ் சூடும் வேடத்தார் மெய்யிற் கூடா மையல்மா னுடர்பொய் மார்க்க வேடத்தே மாய்கின் றாரே. 28
வாசமார் குழலி னார்கள் மணிஅல்குல் தடத்தே மூழ்கி நேசமார் குமுதச் செவ்வாய் அமுதினை நிறைய உண்டு தேசுலா மணிமென் தோள்மேற் சேர்ந்துவீற் றிருந்திடாதே மாசுலா மனத்தோரெல்லாம் மறுமைகொண் டழிவர் மன்னோ. 29
மதிநிலா நுதலா ரோடு மணிநிலா முன்றி லேறி முதிர்நிலா வெறிப்பச் செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப மொய்த்த கதிர்நிலா வடங்கொள் கொங்கைக் கண்கள்மார் பகலமூழ்கும் புதுநிலா வியநன் போகம் விடுவர்புன் சமயத் தோரே. 30
ஊடுவ துணாவ துற்ற கலவிமங் கையரை யுள்கி வாடுவ தடியில் வீழ்ந்து வருந்துவ தருந்த வம்பின் கூடுவ துணர்வு கெட்டுக் குணமெலாம் வேட்கை பேயாய் நீடுவ தின் முத்தி யித்தில்நின் றார்கள் முத்தர். 31
வீட்டினை உளதென் றோடி மெலிவதிங் கென்னை வீடு காட்டினோர் கண்டோர் கேட்டோர் கரியவை உண்டேல் காட்டீர் நாட்டினில் அரச னாணைக் கிசையவே நடந்து நாளும் ஈட்டிய பொருள்கொண் டிங்கே இன்பத்துள் இசைந்தி டீரே. 32
உலகாயதன்மத மறுதலை
உள்ள தாவது கண்ட தென்றுரை கொண்ட தென்னுல கத்துநீ, பிள்ளை யாய்வளர் கின்ற நாளுனைப் பெற்ற தாயொடு தந்தையைக், கள்ள மேபுரி கால னாருயி ருண்ண வின்றொரு காளையாய், மௌ¢ள வேயுள ரென்று கொண்டு விரும்பு மாறு விளம்பிடே. 33
இடித்து மின்னி இருண்டு மேக மெழுந்த போதிது பெய்யுமென், றடுத்த தும்அகில் சந்த முந்தி அலைத்து வார்வுனல் ஆறுகொண், டெடுத்து வந்திட, மால்வ ரைக்க ணிருந்து கொண்டல் சொரிந்த தென்று, முடித்த தும்இவை காட்சி யன்றனு மான மென்று மொழிந்திடே. 34
காண்ட லோஅநு மான மாவதும் காட்சி மன்னதும் காட்சியேல்,பூண்ட பூத உடம்பி னுள்எழு போத மென்கொடு கண்டனை, மாண்ட வாயின் மனங்கொள் ஞான முணர்ந்த தும்அநு மானமென், றீண்டு பூத மியைந்த திவ்வுடன் என்ப தென்பிர மாணமே. 35
பழுதி லாமறை கண்ட நூல்பழு தின்றி யுண்டது பாரின்மேன், மொழிவர் சோதிட முன்னி யின்னது முடியு மென்பது முன்னமே, அழிவி லாதது கண்ட னம்அவை யன்றி யுஞ்சில ஆகமங்களின், எழுதி யோர்படி என்று கொண்டிரு நிதியெ டுப்பதும் எண்ணிடே. 36
பூத மானவை நித்த மென்று புகன்ற தென்னை உருக் களாய், ஆத லோடழி வாகு மாதலி னாக்கு வோரவர் வேண்டிடும், காத லோடு கடாதி மண்கொ டியற்று வோருளர் கண் டனம், சீத நீரி லெழுந்த கொப்புள் நிகழ்ந்த மாருதச் செய்கையே. 37
நீரின் வந்தெழு கொப்புள் நீரது வாயெ ழும்நிகழ் பூதமும் ஓரின் வேறுணர் வாயெ ழாஅவை பூத மாகி உதித்திடும் தேரின் நூறடை காய்செ றிந்தவை சேர வேறு சிவப்பெழும் பாரி னிற்பிரி யாது புந்தி பழிப்பு டம்பு கிடக்கவே. 38
கூறு சேர்வையின் வந்த போது சிவப்பெனும் குணம் ஒன்றுமே, வேறு வேறு புலன்கு ணங்கள் உடற்கண் வந்து விளைந்ததென், நூறு காயடை கூடும் வேறொரு வன்ந னாலென நோக்கிநீ, தேறு பூத செயற்கும் வேண்டும் ஒருத்த னென்று தௌ¤ந்திடே. 39
ஆன ஐம்பொறி உண்டி நித்திரை அச்சம் மைதுனம் ஆதியாய், ஊனில் வந்திடு முன்பி லாதவை யென்று ரைக்கின் உலூதைபோல், வானின் வந்திடும் மாதர் ஆண்அலி யாகி மானுடர் ஆதியாய், யோனி பன்மையும் இன்று பூதம் உறும்பு ணர்ச்சியொர் தன்மையே. 40
ஐந்து நான்கொரு மூன்றி ரண்டுடன் ஒன்ற தாய்உட லங்களின், வந்தி டாவுணர் விந்தி யங்களும் வன்ன பன்மையும் இன்மையாம், புந்தி யோடிய வன்ன போக குணங்கள் பூத புணர்ச்சிதான், தந்தி டாதிவை பேத மாயிட வந்த வாவினை தந்தவா. 41
அறிவு பூதம தென்னில் வேறு புறத்த தறிந்தமை கண்டடிலம் செறிவு தான்உ டலத்தெ னில்சவ மான போதுடல் பேதருமோ குறிகொ ளாதுடல் வாயுவானது கூடி டாமையின் என்னின்நீ பிறித ராதுயிர் நிற்க ஞானம் உறக்க மென்பிற வாததே. 42
அறிவு டற்குண மென்னில் ஆனைய தததி அந்தம் எறும்பதா உறுமு டற்பெரி தான வற்றில் உதித்தி டும்பெரி தாகவே சிறுவு டற்செறி ஞான மும்சிறி தாயி டும்பரி ணாமமும் பெறுமு டற்சிறி தாவ தென்பெரி தாவதென்சில பேசிடே. 43
போத மம்மெலி வவகி யும்மலி பூத மானவை கூடலிற் பேத மோடு பெருத்து டற்கள்சிறுத்த பெற்றிமை என்றிடின் ஓது டற்பெரி தான வுஞ்சிறி தாயி டாசிறி தானவும் நீதி யிற்பெரி தாயி டாமுனம் உள்ள தன்மையின் நீடுமே. 44
இயல்பு காண்இவை யென்னில் வேறிசை பெண்ணோ டாணிரு தன்மையாஞ், செயல்கொ ளாஇவர் செய்தி காரண மாக வந்து செனிப்பதென், இயல்ல தாமுடல் பூத காரிய மாவ தும்மில்ஆஆ யாகுமால், மயல தாம்பிஆஆ யாலொ ருத்தன் வகுத்த தன்மையின் வந்ததே. 45
கார ணம்அவை யென்ற தென்னை கடாதி போல்நிகழ் காரியம், நேர ணைந்து சமைந்து நின்றிடும் என்ப தும்அது நேர்கிலோம், போர ணைந்திடு மொன்றொ டொன்று பொருந்து மாகில் வருந்தியும், நீர ணைந்தொரு தீயி னின்றது கண்ட தாயின் நிகழ்த்திடே. 46
பூத மேவு புணர்ச்சி யேபுரி காய காரண மாகுமேல் காதல் ஆணொடு பெண்ணும் மேவு புணர்ச்சி ககரண மாவதெ ஆதி யேஉல கத்தில் ஆணொடு பெண்ணு மாயணை காரியம்(ன்) நாதன் நாயகி யோடு கூடி நயந்த காரணம் என்பரே. 47
கந்தம் வெம்மை கலந்தி டும்புனல் கன்மம் என்செய்த தென்றனை சந்த னந்தழல் சார நீரிரு தன்மை யுற்றிடு மாறதோர் தந்த கன்மம் இரண்ட ணைந்து தருஞ்சு கத்தொடு துக்கமும் சிந்தி யாஎழு சீவ னுற்றிடும் அஅறு டற்கிலை தேறிடே. 48
இன்பம் எய்தி இருந்து நீவினை இல்லை இங்கியல் பென் றிடில், துன்பம் எய்திடு வானென் மற்றிது சொல்லி டாய் சொல வல்லையேல், முன்பு செய்திடு கன்ம மென்றறி கன்ம மும்முதல் வன்னறிந், தன்பி னாலுறு விக்கு மப்பயன் ஆங்க மைப்பொ டநாதியே. 49
அநாதி யேலமை வின்றெ னின்மல மாஆஆ கன்மம் அணுச்சிவன் அநாதி கன்மம் அணுக்கள் செய்ய அறிந்து கன்மம் உடற்செயா அநாதி காரிய மாமு டற்கள் அசேத னம்மணை யாவறிந்(து) அநாதி யாதி அமைக்க வேண்டும் அமைப்பி னோடும் அநாதியே. 50
காணொ ணாகர ணங்க ளுக்குயிர் கண்டி டாமையின் இன்றெனில் காணு மோகடங் கண்ட கண்ணினைக் கண்டு நிற்பதுங் கண்ணதே காணொ ணாதுயிர் தானு மிப்படி கண்டி டுங்கர ணங்களைக் காணொ ணாகர ணங்க ளுக்குயி ருண்மை யாவதுங் கண்டிடே. 51
அங்கி யானது தானு மொன்றை அணைந்து நின்று நிகழ்ந்திடும் பங்கி யாதுயிர் தானு மிப்படி பற்றி யல்லது நின்றிடா(து) எங்கு மார்தயி லத்தை யுண்டெழு தீப மான தெரிந்திடும் அங்க தாம்உடல் நின்று கன்மம் அருந்தி யாருயி ராவதே. 52
அறிவு தானுட லத்தின் வேறது வாயி றந்து பிறந்திடின் அறிவு முன்புள திங்கு வந்தும் அறிந்தி டாமைய தின்றெனின் அறிவை யோகன வத்து நீநன வத்தை அன்று தரத்திருந் தறியு மவ்வறி வோம யட்ககறி வாத லாலறி யாதுகாண். 53
இறந்தி டும்அறி வேபி றந்திடு மென்ப திங்கிசை யாதெனின், உறங்கி டும்பொழு தின்றி நின்றுணர் விங்கு தித்திடு மாறதோர், பிறந்த இவ்வுடல் போக வேறுடல் பின்பு வந்தமை பேசிடின், மறந்தி டுங்கன வத்தின் வேறு டல் வந்த வாறு மதித்திடே. 54
கரணம் வாயு விடத்த டங்க அடங்கி வந்தெழு காரியம் மரண மான விடத்து மற்றிவை மாய்ந்து பின்பு வருஞ்செயல் கிரண மார்கலை கெட்டு திப்ப இறப்பி னோடு பிறப்பையும் தரணி யோர்கள் மதிக்கு ரைப்ப ருயிர்க்கு மிப்படி சாற்றிடே. 55
பூத மானவை காரி யங்கள் பொலிந்து மன்னி அழிந்திடும் ஆத லால்ஒரு நாதன் இங்குளன் என்ற றிந்துகொள் ஐயனே பேத மான கடாதி மண்ணினில் வந்த வாறு பிடித்திடில் போதி லாத குலால னால்வரு செய்கை யென்று குறிப்பரே. 56
வேதன் நாரணன் ஆர ணம்மறி யாவி ழுப்பொருள் பேதைபால், தூத னாயிரு கால்ந டந்திடு தோழன் வன்னம செய் தொண்டனுக்(கு), ஆத லாலடி யார்க ளுக்கௌ¤ யான டிக்கம லங்கள்நீ, காத லாலணை ஈண்டன் வேண்டின இம்மை யேதருங் கண்டிடே. 57
பொன்கு லாவு மணிக்க லன்கள் மலம்பு கில்கை பொருந்திடா, மின்கு லாம்இடை யார்கள் தாமுல கத்தின் வேட்கை விடும்பொருள், புன்பு லால்மல மூத்தி ராதி பொசிந்து நாறு புலைக்கலம், என்கொ லாமிவர் மேல்வி ழுந்த திவற்றின் என்பெற எண்ணியே. 58
தோலி ரத்தம் இறைச்சி மேதை யெலும்பு மச்சை சுவேதநீ ராலெ டுத்த முடைக்கு ரம்பை அழுத்தி னோடு புழுக்குழாம் நூலொ ழுக்கிடு கோழை ஈரல் நுரைக்கு மூத்திர பாத்திரம் சேல டர்த்தகண் ணார்க ளென்பது தேர்ம லத்திரள் திண்ணமே. 59
ஆசை யுற்றுழல் சூக ரங்கள் அசுத்த மேவி அளைந்துதின் றேசு கித்தன வாயி டுஞ்சுகம் ஏழை யோடுறும் இன்பம் நீ மாச தற்றொளிர் நித்த சுத்த வளந்த ருஞ்சுக வாரிகாண் ஈச னுக்கடி மைத்தி றத்தின் இசைந்து நாம்பெறும் இன்பமே. 60
குரோத மேகுண மாயி ருந்தவர் சாந்தி நன்மை குறிக்கொளார் அராக மேயணை வார்க ளாசை அறுத்த இன்பம் அறிந்திடார் பராவு தேவர் பராவு தூய பராப ரன்அடி பற்றிநீ விராவு மெய்யில் விடாத இன்பம் விளைந்திடும் இதுமெய்ம்மையே. 61
காம மாதி குணங்க ளைச்சுக மென்று கொண்டனை காதலால் தூம மாரழல் அங்கி சீத மலிந்த போது சுகந்தரும் நாம மார்தரு சீதம் வெம்மை நலிந்த பேபது தருஞ்சுகம் சேச மாகிய இன்ப மாமிகு தெய்வ நன்னெறி சேரவே. 62
படிக்கு நூல்கள் சிவாக மம்பசு பாசமொடு பதித்திறம், எடுத்தி யம்புவ தீசன் வார்கழ லேத்தி டுந்தொழி லென்றுமே, விடுத்தி டும்பொருள் காம மாதிகள் வேண்டி டும் பொரு ளீண்டருள், முடித்து மும்மலம் விட்டு நின்மல னோடு நின்றிடன் முத்தியே. 63

2. சௌத்திராந்திகன் மதம் (64-134)
நீதியார் வேத நூலின் நெறியலா அறங்கள் நாளும் ஓதியோர் ஐந்து சீலம் உடையராய் உடல மூடிப் போதிநீள் மரத்தின் மேவும் புத்தர்நால் வரினும் வைத்துச் சாதிதான் இலாத கொள்கைச் சௌத்திராந் திகன்முன் சாற்றும். 64
முழுதுணர்ந் துலகிற் கோறல் முதற்செயல் முணிந்து மற்றும் பழுதிலா அருளி னாலே பரதுக்க துக்க னாதித் தொழுதுவா னவரும் போற்றத் தொல்பிட கங்க ளான வழுவிலா கமங்கள் சொன்ன மாதவன் நநத னாவான். 65
மருவிய அளவை காட்சி மானமென் றிரண்டி வற்றறல் கருதிய பொருள்கள் ஞான ஞேயமாய்க் கணத்திற் பங்கம் வருமுரு அருவம் வீடு வழக்கென நான்க தாதித் தருமவை ஒறி ரண்டாய்த் தான்விரிந் தெட்டி னாமே. 66
உருஇயல் பூத மோடங் குபாதாய ரூப மாகும் அருஇயல் சித்தம் கன்மம் என்றிரண் டாகும் வீட்டின் மருவியல் குற்றம் கந்த மெனவழங் கிடும்வ ழக்கின் இருஇயல் உள்ள தோடங் கில்லதாம் இயம்புங் காலே. 67
மண்புனல் அனல்கால் பூதம் வலிகந்தம் இரதம் வன்னம் எண்டரும் உபாதா யம்தா னிவைஇரு நான்குங் கூடி உண்டொரு பொருளு ரூபம் உறுபுலன் உபாங்க மோடக் கண்டது சித்தம் கன்மம் நன்றுதீ தென்றட காணே. 68
குற்றவீ டராக மாதி குணங்களைக் குறைதத லாகும் மற்றவீ டுருவ மாதி ஐந்தையு மாய்த் லாகும் சொற்றருந் தொகைதொ டர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய் உற்றிடும் வழக்கி ரண்டும் ஒன்றுமூன் றாகி ஆறாம். 69
ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி ஐந்தும் கூடி வருபவ னென்று ரைத்தல் தொகையுண்மை வழக்க தாகும் உருவமங் காதி யாய ஐந்தையும் ஒருவன் இன்று தருவது தொகையினின்மை வழக்க தாஞ்சாற் றுங்காலே. 70
காரண காரி யத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின் சோர்வறத் தோன்றும் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை ஓர்தரின் ஒருவ னேஎக் காலத்தம் உள்ளா னென்று தேர்வது தொடர்ச்சியின்மை வழக்கதாம் செப்புங்காலே. 71
தோன்றிய பொருள்க ளெல்லாம் நாசமாம் என்று சொல்லும் மாற்றமுன் னுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை போற்றிய பொருள்கண் கட்குப் போனது அஅ£ல்மு திர்ந்து வேற்றுமைப் பட்ட தென்கை மிகுத்துரை இல்வழக்கே. 72
உள்வழக் கில்வ ழக்குள் ளதுசார்ந்த உள்வ ழக்கோ(டு) உள்ளது சார்ந்த இன்மை வழக்குடன் இன்மை சார்ந்த உள்வாக் கின்மை சார்ந்த இல்வழக் கென்றோ ராறாம் உள்வழக்குள துண்டென்கை முயற்கோடின் றில்வழக்கே. 73
உணர்வுசார்ந் துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த இன்மை உணர்வுமுன் பின்றித் தோன்றல் இல்லது சார்ந்த வுண்மை உணரினில் லதுசா ரின்மை உள்ளங்கை உரோம நாணே. 74
சொன்னநால் வகையு மின்றிச் சொல்லிடும் பொருள்க ளெல்லாம் என்னையோ அறிகி லோம்பித் தேறியோ வானம் ஆன்மா மன்னுகா லங்கடிக்கு மனமுடன் வாக்கி றந்திட்(டு) உன்னுமோர் இறையும் உண்டென் றுரைப்பது நித்த மன்றே. 75
ஈங்குவவன் செயற்கு வாரா இயம்பிய பொருள்க ளெல்லாம் தாங்குவான் உளதே யென்னில் தரித்திடா தருவ மாதல் ஓங்குவான் ஓசைக் ககதி யெனிலதங் குருவின் கூட்டம் நீங்குவா னின்றி எங்கும் நின்றதேல் எங்கு மின்றே. 76
போதமுண் டுயிர்கட் கென்னில் வாயிலைம் புலனும் நூலும் ஆய்தலின் றொட்டுத் தீட்டுக் கலப்பினில் அறியு மென்னில் ஏதமுண் டிரவிற் பச்சை சிவப்புடன் ஏய்ந்த போது கேதநின் றென்னோ என்னும் ஐயமுன் கிடத்த லாலே. 77
அறிந்திடா வாயி லின்றேல் அறிவின்றாம் ஐந்தும் பற்றி அறிந்திடும் அறிவுண் டென்னில் ஐந்தினும் அறிவொன் றாக அறிந்திட வேண்டும் சார்பின் அறிந்திடு மென்னில் உன்னை அறிந்திலோம் புத்த னென்றிங் கழகிது சொன்ன வாறே. 78
ஞானஞே யங்க ளன்றி ஞாதிரு என்று சொல்ல ஆனதிங் கறிவேவ அன்றோ அன்றெனில் அவனி போலும் தாதிங் கறிவே என்னில் சமைந்திடு நன்ப ருப்புப் போனக மதற்குத் தானே கறியெனப் புகன்ற தாமே. 79
உயிரினை அருவ தென்னில் உருவுடன் உற்று நில்லா(து) உயிரினை உருவ தென்னில் உடலினில் உடல டங்கா(து) உயிரினை அணுவ தென்னில் உடல்பல துவார மோடும் உயிரினை நித்த மென்னில் உணர்வுத யாந்த மின்றே. 80
எங்குமாய் நின்ற தான்மா என்றிடின் எங்கும் இன்றாம் தங்கிடு நிறைவு தத்தம் சரீரங்கள் தோறு மென்னின் மங்கிடும் உடலத் தோடே வடிவினில் ஓரிடத்தே அங்கது நின்ற தென்னில் அடிமுடி அறிவின் றாமே. 81
சாற்றிய காலம் இங்குத் தங்கிய வாறி தென்னை(னில்) தோற்றுவித் தளித்துப் போக்கும் தொழிலவை கால மென் போற்றிய பொருளில் புக்குப் பிணங்கிடும் பொருட்பின் இன்றாம் தேற்றிய இல்வ ழக்குத் திரவியத் தியல்பி னாமே. 82
எனக்குநீ கிழக்கி ருந்தா யாகின்மேற் கென்றா யென்பால் எனக்குமேற் கிருந்தான் என்பாற் கிழக்கென இயம்புந் திக்குத் தனக்குநாம் கொள்வ தெப்பால் சாற்றிடாய் இல்ல ழக்குத் தனக்குள தாகும் உண்மை தானில தாகு மன்றே. 83
உலகினைப் படைத்தான் என்றாய் ஒருவனிங் குள்ள தாயின் உலகினைப் படைக்க வேண்டா இல்லையேல் படைக்க வொண்ணா(து) உலகினுக் குபாதா நந்தான் உள்ளதாய்க் காரி யத்தாம் உலகினைப் படைக்கில் அங்கும் உளதில தாவ துண்டே. 84
உள்ளது கடாதி போல உதிப்பித்தான் என்று ரைக்கின் மௌ¢ளவே யெங்கு நின்று விதித்தனன் உலகின் மீது வள்ளல் தான்நின்றா னென்னில் வந்ததாம் உலக முன்னே தள்ளிடா தெங்கு நிற்கின் எங்குமுன் தந்த தாமே. 85
இல்லது கருணை யாலே இயற்றினன் இறைவன் என்னில் கொல்லரி உழுவை நாகங் கூற்றமுங் கொண்டு தோற்ற வல்லவன் கருணை யென்னோ வலியினால் வேண்டிற் றெல்லாம் பல்கவே படைத்தா னாயிற் பித்தரைப் பணிந்தி டாயே. 86
பெறுவதிங் கென்பபடத்துப் பெற்றது விளையாட் டென்னில் சிறுமழ விறைய தாகும் செய்திடும் கன்மத் தென்னின் உறுபெருங் கன்மஞ் செய்வோர் முன்புள ராவ ருண்மை அறிவுறின் ஞால மெல்லாம் அநாதியென் றறிந்தி டாயே. 87
உருவொடு நின்றா னென்னின் உருவமுன் படைத்தார் வேண்டும் உருவவன் இச்சை யென்னில் உலகெலாம் இச்சை யாகும் உருவுல கத்து ளோர்கட் குறுவது கன்மா லென்னின் உருவுடை யோர்கட் கெல்லாம் உற்றது கன்மத் தாமே. 88
அருவெனில் பவத்தி னின்றும் எடுத்திடான் ஆகா சம்போல் மருவினன் நிழல்போ லென்னின் மருவினோர்க் காகும்மாட்சி பெருகிய அறிவுண் டென்று பேசிடின் நேசத் தோடும் கருதிட உருவம் வேண்டும் இல்லையேற் கருத லின்றே. 89
எங்கள்நூல் அநாதி யயக இறைவனுண் டென்னு மென்னின் உங்கள்நூல் உரைப்பா ரின்றி ஓதுவ தழகி தாகும் அங்கவன் தன்ஆஆ நூல்கொண் டறிந்தனம் அவனைக் கொண்டே இங்குநூல் அறிந்தோ மென்னில் ஈதோராச் சரிய மாமே. 90
உற்றெழு மரங்க ளாதி உயிரின்றிப் பூத ரூபம் பற்றியிப் பாரின் மீது பாங்கினாற் பலவு மாகிப் புற்றொடு மயிர்கொம் பாதி போலவே தோன்றி மாயும் மற்றுள யோனி கட்குப் பயனென வழங்கு மன்றே. 91
கொண்றிட லாகா தென்றும் கொன்றவை கொண்டு நாளும் தின்றிட லாகு மண்ணோ டொத்திடும் செத்த வெல்லாம ஒன்றிய வாச மூட்டி உண்ணுநீர் வைத்த வர்க்கோ சென்றுநின் றுண்ட வர்க்கோ புண்ணியம் செப்பி டாயே. 92
ஓங்கிய உருவ மோடும் வேதனை குறிப்பி னோடும் தாங்குபா வனைவிஞ் ஞானம் தாமிவை ஐந்துங் கூடிப் பாங்கினாற் சந்தா னத்திற் கெடுவது பந்த துக்கம் அங்கவை பொன்றக் கேடாய் அழிவது முத்தி யின்பம். 93
அழித்திடும் அராக மாதி அகற்றிநல் லறங்கள் பூரித்(து) இழித்திடும் புலன்கள் போக்கி இன்பொடு துன்பம் வாட்டிப் பழித்திடாப் பழுதில் வாழ்க்கை எட்டையும் பாரித் தெல்லாம் ஒழித்திடு ஞான சீலம் சமாதியின் உறுதி யாமே.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.