LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சைவ சித்தாந்த சாத்திரம்

சிவஞான சித்தியார் பகுதி -3

 

பரபக்கம்
8. பட்டாசாரியன் மதம் (181 - 203)
வேதமே யோதி நாதன் இலையென்று விண்ணில் ஏறச் 
சேதமாங் கன்மஞ் செய்யச் சைமினி செப்பும் நூலின் 
நீதியே கொண்டு பட்டா சாரியன் நிகழ்த்தும் நீர்மை 
ஓதநீர் ஞாலத் துள்ளே உள்ளவா றுரைக்க லுற்றாம். 181
உற்றிடுங் காம மாதி குணங்கள்தாம் உயிர்கட் குண்டாம் 
மற்றிவை தருமே யாகின் மறைமொழி வாய்மை யின்றாம் 
கற்றநூல் அளவாற் போதம் கலப்பது கல்வி யின்றேல் 
பெற்றிடும் மழவு மூங்கை என்னவே பேச லாமே. 182
உண்டொரு கடவுள் வேதம் உரைத்திட உயிரின் தன்மை 
கொண்டவன் அல்லன் என்றுங் கூறிடின் உருவங் கூடில் 
பண்டைய உயிரே யாகும படித்தநூ லளவு ஞானம் 
கண்டிடும் உருவ மின்றேல் கருதுவ தில்லை என்றான். 183
தேவரும் முனிவர் தாமும் சித்தரும் நரரும் மற்றும் 
யாவரும் உரைப்பர் வேதம் இயம்பினர் இன்ன ரென்னப் 
போவதன் றென்று நாளும் பரம்பரை புகல்வ தாகும் 
கூவல்நி ரென்னில் கொள்ளேம் மறுமையைக் குறித்த லாலே. 184
உன்னிய அங்க மாறும் மூன்றுப வேதந் தானும் 
தன்னுளே அடக்கி வேறு தங்கிடா வகையைச் சார்ந்து 
முன்னமோர் தோற்ற மின்றி முடிவின்றி நித்த மாகி 
மன்னியோர் இயல்பே யாகி வழங்கிடும் மறைய தென்றான். 185
செய்தியும் நெறியும் மேவுந் தேவரும் பொருளும் எல்லாம் 
எய்திய பன்மை யாலே ஓரியல் பியம்பா தாகும் 
ஐயமில் காலம் மூன்றும் அறிந்தபின் நெஞ்ச கத்தாய் 
மெய்யதாய் வந்து தோன்றி விளங்கிடும் வேத நூலே. 186
தப்பிலா வாகுந் தாது பிரத்தியந் தன்னி னோடே 
ஒப்பிலா தாம்பி ராதி பதிகமாம் உறுப்புங் கொண்டு 
செம்பபுமாம் வேதம் சொன்ன விதிப்படி செய்யச் சேம 
வைப்பதாம் வீடு பாசம் மருவலாம் ஒருவ லாமே. 187
போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வ தின்றி 
ஆக்கவே றொரவ ரின்றி அநாதியாய் அணுக்க ளாகி 
நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி 
ஊக்கமா ருலகம் என்றும் உள்ளதென் றுரைக்க லாமே. 188
நித்தமாய் எங்கு முண்டாய் நீடுயிர் அறிவு தானாய்ப் 
புத்திதான் ஆதி யாய கருவியின் புறத்த தாகிச் 
சுத்தமாய் அருவ மாகித் தொல்லைவல் வினையின் தன்மைக்(கு) 
ஒத்ததோர் உருவம் பற்றிப் புலன்வழி உணர்ந்து நிற்கும். 189
செயல்தரு வினைகள் மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று 
பயனொடு பலியா நிற்கும் பலாலமும் தழையு மெல்லாம் 
வயல்தனின் மருவி நாசம் வந்தபின் பலத்தை வந்திங்(கு) 
இயல்பொருந் தந்தாற் போல என்றும்பின் இயம்பு கின்றான். 190
நீதியா நித்த கன்மம் நிகழ்த்திடச் சுபத்தை நீங்கார் 
தீதிலா இச்சா கன்மஞ் செந்தழல் ஓம்பிச் செய்ய 
ஏதுதான் வேண்டிற் றெல்லாம் எய்தலாஞ் சோம யாகம் 
ஆதிதான் ஆசை வீசி அமைத்திட வீட தாமே. 191
கருதிய கன்மம் ஞானம் இரண்டுங்கா லாகக் கொண்டு 
மருவிட லாகும் வீடு மதிதனை மதித்துச் செய்தி 
ஒருவிடில் பதித னாகும் பதிதனைக் கதியின் உய்க்கத் 
தருவதோர் நெறிதான் இல்லை என்னவுஞ் சாற்றி னானே. 192
பசுப்படுத்(து) யாகம் பண்ணப் புண்ணியம் ஆவ தென்று 
வசிப்பினான் மறைகள் சொன்ன வழக்கினால் வாய்மை யாக 
நசிப்பிலா மந்தி ரங்கள் நவிற்றலின் இன்ப மாகும் 
பசிப்புளான் ஒருவன் உண்ணப் பசியது தீர்ந்த பண்பே. 193
பட்டாசாரியன் மத மறுதலை
வேதஞ் சுயம்புவென வேதந்த வாய்மொழியில் வேறும் பிரமாண முளதேல், 
நீதந்து காணிங்கு மாதுங்க பாரதமும் நேர்கண்ட தாகும் அதுபோல், 
ஓதுஞ் சொலாய்வருத லானுங்க டாதிபட மோவந்தி டாஒருவரா, 
லேதந்த தாமறைக ளாய்வந்த வாய்மொழியும் வேறிந்து சேக ரனதே. 194
உரைதந்தி டானஒருவன் எனிலிந்த வானினிடை ஒலி கொண்டு மேவி உளதாம், 
புரைதந்த வாம்மறைகள் அபிவெஞ்ச மாயொளிர்கை பொருள்தந்த தீப மதுவேல், 
வரை தந்த தாலில்வுரை கபிலன்சொ லாகுமது மறைகின்ற வாறும் வரவும், 
விரைவின்சொ லாயிதனை யெதுகொண்டு மேவுவது விடைகொண்ட தாலுன் உரையே. 195
உருவின்க ணேமருவி வரில்இன்று தேரைஉரை உளதுங்கள் நூலின் மறையும், 
தருகின்ற நாதரவர் இவரென்று நாமமது தரவந்தி டாமை யதனால், 
வருமென்று நேடியெனில் வளர்கின்ற தீவதனில் வருகிந்ற வாடை பலவால், 
ஒருதந்து வாயனவன் இவனென்ற போதிலிவை உளதென்று நீடிய வையே. 196
மறைநின்று நாலுதிசை யவர்ஒன்ற தாகவரும் உரை தந்த வாய்மை அதனால், 
நிறைவென்று நீடுமெனில் வனையுங்க டாதிபல சொலவொன்றி நீடி யுளதாம், 
குறைவின்றி நாடும் மொழி அவைசென்று கூடுவதொர் குணமுண்ட தாகு மலர்தான், 
உறைகின்ற மாலைதனில் உளதென்ற தாகுமெனின் உணர்வின்ற தாழி ஒலியே. 197
உடல்நின்று நாமுணரு மதுகண்ட வாறொருவன் உலகங்க ளேஉ ருவமாய், 
இடைநின்று மாமறைக ளவைஅன்று வாய்மொழிய இவைகொண்டு லோக நெறியின், 
கடனின்று வாழுமது கருதும்பின் ஆணைவழி கருமஞ்செய் காசினி யுளோர், 
திடமென்று சீர்அரச னுரைதங்கும் ஓலைதிரு முகமென்று சூடு செயலே. 198
முடிவின்றி வேதியர்கள் முதல்வந்த மூவர்களும் மொழி யும்சொல் ஆரிய மெனில், 
கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவென் வடகண்ட சாதி கடியா(து), 
ஒடிவின்றி ஓதுவதென் உரைதங்கு வேதமொழி உளதென்று கூறு மவர்தாம், 
அடியின்று தானெனும தறிவின்றி ஈனுமவர் இலையென்ற ஆத ரவதே. 199
அறிகின்ற பான்மைஅவ யவநின்ற தாகில்அணு அழியுங்க டாதி யெனவே, 
செறிகின்ற வாறதிலை யெனின்வந்து சேருமது திடமன்றுகூட வொருவன், 
குறிகொண்டு காரின் முளை வருகின்ற பீசமவை குலையொன்றி வேனி லழியும், 
உறுகின்ற காலமவை உடனின்று போயழியும் உலகென்று நீடி யிலதே. 200
நிறைவெங்கு மாகில்உயிர் நெறிநின்று போய்வருதல் அணைவின்ற தாம் உடலிலே, 
குறைவின்றெ லாமும்உள குடகந்த மாகில் அவை விடநின்ற வாறு குறியா, 
உறைகின்ற மாதவர்கள் உடனின்று போய்வறிதொர் உடல்கொண்டு மீள்வ துணராய், 
மறைதந்த வாய்மைதனில் நிறைவின்றி யேயுலகின் மலைகின்ற தாலுன் உரையே. 201
அழிகின்ற தால்வினைகள் ஆகின்ற வாறெனெர வது மங்கி யான பரிசேல், 
ஒழிவின்றி ஓதநமும் அறவுண்ண நாம் வினைகள் உறுகின்ற வாறதெனலாம், 
கழிகின்ற தாலறிவு வினைதந்தி டாவினைஞர் கருமங்கள் நாடி யுறுவோர், 
பழுதின்றி யேஉதவும் அதுபண்ப தாகஅருள் பரமன்க ணாகும் வினையே. 202
கருமங்கள் ஞானமது வுடன்நின்ற லல்மருவு கதிதங்க லாகு மெனின்நீ, 
தரும் அங்க ராகமுதல் அவைதங்க மேலறிவ தவிரும்பின் வீடும் அணையா, 
பொருள் நின்று தேடிவரு பயன் உண்டு போவினை புரிகின்ற வாற தெனவே, 
திருநின்ற போகம் வளர் அவிசென்று மேவியது செலவுண்டு சூழவ செயலே. 203
9. பிரபாகரன் மதம் (204 - 207)
அருந்தவனாம் சைமினிபண் டாரணநூல் ஆய்ந்தானாய்த் 
யூ¤ருந்தும்உல கிரிற்கொண்டு செப்பியநூல் திறமதனைப் 
பரிந்துபிர பாகரன்பட் டாசானில் வேறாகிப் 
புரிந்துரைசெய் நெறியதனைப் புவனிமிசைப் புகன்றிடுவாம். 204
அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வமெனும் அது தோன்றித், 
தருஞ்செயல்நின் றழியில்பின் பலிப்பிப்ப தாகுமது, 
வருஞ்செயல்ஒன் றின்றியே மண்சிலைபோ லாமுத்தித், 
தருஞசெயலீ தெனவுணர்ந்து தாரணிமேல் அவன் சாற்றும். 205
பிரபாகரன் மத மறுதலை
வேறுபலந் தருவதுதான் வினையென்று வேதங்கள் 
கூறவோர் அபூர்வந்தான் கொடுக்குமெனக் கொண்டவுரை 
மாறுதரு மறையோடு முன்பின்றி வந்ததால் 
தேறியவிண் பூமுடிமேற் சேர்ந்துமணந் திகழ்ந்ததுவாம். 206
ஆநந்தம் கதியென்ன அறிவழிகை வீடென்கை 
ஊனம்பின் உணர்விழந்தோர்க் குளதாகும் உயர்முத்தி 
தானிங்குச் சிவப்பொழியத் தழல்நிற்கு மாறில்லை 
ஞானங்கெட் டுயிர்நிற்கும் எனுமுரைதான் நண்ணாதால். 207
10. சத்தப் பிரமவாதி மதம் (208 - 219)
உரையா னதுமை யலினால் உலகாம் 
புரையோ ருணரும் பொருள்பொய் யிதனை 
விரையா துணரும் அதுவீ டெனவே 
வரையா துரைவா திவகுத் தனனே. 208
பரிணா மம்விவர்த் தநம்மா யம்அதில் 
தருமாம் உலகுள் ளதுசத் தமதே 
பொருளா வதுசொல் நலம்அல் லவெனில் 
மருவா துபொருட் டிறமற் றிலையே. 209
பூமா வெனவே உரையும் பொருளும் 
ஆமாம் பொருளொன் றில்அணைந் திலதால் 
நாம்ஆ தரவெய் துசொல்நன் கருவாய்த் 
தாமாம் பொருள்நெற் பொரிதா னெனவே. 210
சொல்வந் தெழலும் பொருள்தோன் றுதலால் 
சொல்லே பொருளென் றுதுணிந் திடுநீ 
சொல்லும் பொருளும் உடனின் றதெனின் 
சொல்லும் பொருளின் றுசொல்நின் றதுவே. 211
சத்தப் பிரமவாதி மத மறுதலை
உரையா னதுமை யலினால் உலகேல் 
உரையாய் ஒருமை யலும்உள் ளதென 
வரையா துணரும் அதுவண் கதியேல் 
வரையா மறையோ டுமலைந் தனையே. 212
அருவம் உரையா தலின்அவ் வுருவாய் 
மருவும் பரிணா மம்மறந் திடுமாம் 
பருகுந் ததியா னதுபா லதெனில் 
உருவம் அதுவாய் அழியும் உரையே. 213
ஆயம் உடன்அந் தவிவர்த் தநமும் 
மாயவ் வுளதென் றுசொல்எவ் விடமு 
மாய்நின் றமையின் உரையின் நலமும் 
ஆயும் பொருளுக் கறிநா மமதே. 214
உரைபோல் பொருளுக் குருவின் மையினவ் 
உரையே பொருளென் றனைஇன் றரியென் 
உரையே கவிமா லவனுக் குளதாம் 
உரையாய் கவியா கவொர்மா லினையே. 215
நெல்லில் பொரியா வதுநீ டழலில் 
சொல்லில் பொருளொன் றொடுதொக் கிடலால் 
கல்வித் திறமாம் உரைகாட் சியினால் 
மல்லற் பொருள்சா லவளந் தருமே. 216
முன்கண் டபொருள் பெயரா தலினால் 
பின்கண் டபிழம் புணரும் பெயரால் 
நன்கண் டபொருட் கொருநா சமதின்(று) 
என்கண் டனைகா ரணமின் றழிவே. 217
பொருள்இந் திரியம் உணர்வோ டுபுமான் 
இருளின் றியிடும் ஔ¤இத் தனையும் 
மருவும் பொழுதில் வருஞா னமதின் 
ஒருவும் பெயர்அர்த் தம்உதித் திடுமே. 218
அர்த்தம் தௌ¤தற் கொளியா னதுபோல் 
சத்தம் பொருள்தான் அறிதற் குளதாம் 
நித்தம் அதுவன் றுரைநின் றழியும் 
சித்தன் ஒருவன் உரைசெய் தனனே. 219
11. மாயாவாதி மதம் (220 - 252)
நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி, 
ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும், 
மானா மதிகே டனுமாய மாயா வாதி பேயாகித், 
தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம். 220
அறிவாய் அகில காரணமாய் அநந்தா நந்த மாய்அரு வாய்ச், 
செறிவாய் எங்கும் நித்தமாய்த் திகழந்த சத்தாய்ச் சுத்தமாய்க், 
குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதம் தனக்களவாய்ப், 
பிறியா அநுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான். 221
ஒன்றாம் இரவி பலபாண்டத்(து) உண்டாம் உதகத் தங்கங்கே, 
நின்றாற் போல உடல்தோறும் நிகழ்ந்து நிற்கும் பொருள் மேற்கண், 
சென்றாற் போலப் புலன்களுக்குஞ் சிந்தை தனக்குந் தெரிவரிதாம், 
என்றால் காட்சி முதலாய இருமூன் றளவைக் கெட்டாதால். 222
இருளில் பழுதை அரவெனவே இசைந்து நிற்கும் இருங்கதிர்கள், 
அருளப் பழுதை மெய்யாகி அரவும் பொய்யாம் அதுவேபோல், 
மருளில் சகமுஞ சத்தாகி மருவித் தோன்றும் மாசில்லாத் 
தெருளில் சித்தே சத்தாகும் பித்தாம் சகத்தின் செயலெல்லாம். 223
உலகந் தானும் திருவசநத் துண்டாம் இன்றேல் உதியாது 
நிலவி யுண்டேல் அழியாது நிற்ப தாகும் மித்தையால் 
இலகு சுத்தி கனல்சேர இன்றாம் வௌ¢ளி நின்றதாம் 
குலவு சகமும் அவிகாரம் பரமார்த் தத்தில் கொள்ளாதால். 224
தாங்கும் உலகுக் குபாதாநம் சத்தாம் சிலம்பி நூல்தன்பால், 
வாங்கி வைத்துக் காப்பதுபோல் வையமெல்லாம் தன்பக்கல், 
ஓங்க உதிப்பித் துளதாக்கி நிறுத்தி ஒடுக்கத் திலதாக்கும், 
ஆங்கு வந்த வாறதனால் சத்தாம் சகத்தின் அமைவெல்லாம். 225
மன்னும் பிரமந் தனின்வானாய் வானின் வளியாய் அந்தவளி, 
தன்னின் அழலாய் அழலின்பால் சலமாய்ச் சலத்தில் தாரணியாய்ச், 
சொன்ன இதனின் மருந்தாகித் தோற்றும் மருந்தில் அன்னமாய், 
அன்ன மதனில் துவக்காதி ஆறு தாது ஆயினவால். 226
ஆறு தாதுக் களும்கூடி வந்த கோசம் அன்னமயம் 
மாறில் பிராண கோசமயம் மன்னு மதனில் மனோமயந்தான் 
வேறு வரும்விஞ் ஞானமயம் மேவும் அதனின் அதுதன்னில் 
கூறி வரும்ஆ நந்தமயம் கோச மயம்பின் கூடியதால். 227
கோச உருவில் பிரமந்தான் கூடித் தோன்றும் நீடுமொரு 
காசம் மருவும் கடற்தோறும் நின்றாற் போலக் கதிரவன்தன் 
வீசு கிரணம் உருவின்கண் வௌ¤ப்பட்ட டிடுவ ததிற்பற்றும் 
பாசம் அதனுக் கின்றாகும் என்றாற் பரத்திற் பற்றுண்டோ. 228
அலகில் மணிக ளவைகோவை அடைந்த பொழுதின் அங்கங்கே, 
நிலவும் ஒருநூல் பலநிறமாய் நின்றாற் போல நீடுருவம், 
பலவும் மருவு பேதத்தால் பன்மை யாகும் பிரமந்தான், 
குலவு போக போக்கியங்கள் கொள்ளும் போன்று கொள்ளாதால். 229
போற்றும் செயலால் பலநாமம் புனைந்து போக போக்கியத்தில், 
தோற்றும் நனவு கனவினுடன் சுழுத்தி துரியம் எய்தும் இதற்(கு), 
ஏற்ற கரணம் நிரைநிரையே ஈரேழ் நாலொன் றெல்லாமும், 
மாற்றி நிற்கும் கேடின்றி வந்த போகம் மாய்ந்திடல். 230
கருவி யெல்லாம் நானெனவே கருதல் பந்தம் அக்கருத்தை 
ஒருவ முத்தி யுண்டாகும் உள்ளம் வித்தாம் செய்தியினால் 
மருவும் மாயா காரியங்கள் அவித்தை மாய வேமாயை 
பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே. 231
ஆன கன்ம அநுட்டயங்கள் அந்தக் கரண சுத்திதரும் 
ஊன மின்றி அச்சுத்தி ஞான மதனை உண்டாக்கும் 
ஞான மதுதான் பிரமத்தை நானென் றுணர்த்தும் நான்பிறந்தால் 
வான மதிநீர்த் துளக்கமெனக் காணுந் தன்னை மாயையிலே. 232
தானே தானாய் அநுபோகம் தன்னில் தன்னை அநுபவித்திட்(டு) 
ஊனே உயிரே உணர்வேயென் றொன்று மின்றி உரையிறந்து 
வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி 
நானே பிரமம் எனத்தௌ¤யும் ஞானம் பிரம ஞானமே. 233
சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமையுணர்ந்தால் 
போற்றி அதுநீ யானாயென் றறைவ தல்லால் பொருளின்றே 
தேற்று மிதனைத் தௌ¤யாதாச் தௌ¤யப் பஞ்ச ஆதநமேல் 
ஏற்ற இயம நியமாதி யோகம் இருநான் கியற்றுவரால். 234
மாயாவாதி மத மறுதலை
ஏகம் நானென இயம்பி இப்படி அறிந்து முத்தியடை மின்னென, 
மோக மானஉரை சோகம் இன்பொடு முடிந்தி டாதுமல டாகிய, 
பாக மானது கருங்க லின்தசை பறித் தழுங்கரிய குஞ்சியின், 
தாக மார்பசி தவிர்க்க வாயிடை கொடுத்ததென் றுரைசெய் தன்மையே. 235
நீடு வேதம்அள வாக ஏகமெனும் நீதி தான்நிகழ்வ தாகுமேல், 
நாடி ஞாதிருவும் ஞான ஞேயமுடன் நாளு நான்மறையும் ஓதலால், 
ஓடு மாகுமுன(து) ஏகம் ஓதுமிவை ஊன மாகிஉரை மாறுகோள், 
கூடு மாகும்அநு பூதி தானுமது கூடிடாதறிவி லாமையால். 236
நீதியால் ஔ¤கொள் பானு வான(து)அக னீரி லேநிகழு மாறுபோல், 
ஆதி தானுருவ மாய காயமதன் மேவி ஆவதிலை யாகுமாம், 
தீதி லாஅருவ மாதலால் நிழல்கள் சேர வேறிடமி லாமையால், 
ஓதி ஓர்அகலின் நீரி லேயொருவர் காணலால் இலதுன் ஏகமே. 237
வேறு வாயில்புல னோடு மேல்மனமும் மேவி டாதுபிர மாணமு, 
கூறி டாதறிவு தானெ னாஉணர்தல் கோடு நீ முயலின் நாடினாய், 
ஈறி லாதபரம் ஏக மேயென இயம்பு நீ இசையும் ஞானமும், 
பேற தாவதிலை பேத மானஇது பேண வேயுளது பேசிலே. 238
இலகு சோதிமணி எனவும் ஏகமெனின் இதனில் ஏக மது விலகினாய், 
குலவு காசுமொளி அதுவும் நீடிவளர் குணமும் நாடுவதொர் குணியுமாம், 
பலவு மானகுண மொருவும் ஏகமது எனவும் நீபகரில் நிகரிலா, 
உலக மானதனை உதவு மாறதிலை உணர்வு தானுமிலை உணரிலே. 239
புற்றி னேர்பழுதை தொக்க போதுமயிர் புளகமாக அரவிரவிலே, 
உற்ற தாம்அதனை யொக்க வேஉலகு திக்கு மாறுமொரு சத்திலே, 
பெற்ற தாகுமெனின் அப்பி ராந்தியுடை யோரும் அப்பிரம பேதமாய், 
நிற்பர் நீபகரின் முற்றும் ஐயநிலை பெற்றும் இன்பமதி லாததாம். 240
ஓதி யேஉலக மாதனை நீயும்நிரு வசன மாகஉரை செய்வதென், 
பேதை யோய்உளதும் இலதும் அல்லபொருள் பேசு வாரும்உள ரோசொலாய், 
ஆதி யேயுளது வருத லால்இலதி லாவ தின்மைய தணிந்துபோம், 
நீதி யால்உளதி லாமை நேர்வ தெனின் நேர்மை யாகியது நின்றதே. 241
வேற தாகியது போல்இ ருந்தமையில் வௌ¢ளி சுத்தி யெனில் ஐயமே, 
கூற லாம்ஒருப ரத்தொ டொத்தபொருள் கொண்டு விண்டநிலை கண்டனம், 
மாறி டாதுநிலம் நீர தாகி அனல் வாயு வாகிஅவை மாறியும், 
சேறி லாதுவிவ கார மன்றுபர மார்த்த மாயது செறிந்ததே. 242
மாய நூலதுசி லம்பி வாயினிடை வந்த வாறதனை மானவே, 
ஆய தேஉலக மான தும்பிரம மதனி லேயெனில் அடங்கிநின்(று), 
ஏயு மாகுமொரு சித்து மத்துடன்நி லாத தென்றுபின் இயம்பின்நீ, 
பேய னேகடம்மி ருத்தில் வந்தது பிறப்ப தாவதிலை பேசிலே. 243
வேற தாகும்உரு வத்தி லேபரம்வெ ளிப்ப டும்மென விளம்பில்நீ, 
ஊறி லாஉருஅ சத்தி லேபிரமம் உண்டு தானுணர்வி லாததென், 
மாறி வாயுவும னாதி யானவையும் வந்தி டாமையினி லின்றெனில், 
ஈறு தானுடைய தாய தோபிரம மென்கொ லோஇவை இறப்பதே. 244
பற்ற தின்றிஉடல் நின்றி டும்பரமெ னப்ப கர்ந்தனைப ரிந்துடன், 
உற்று டம்புநரை திரைகள் நோய்சிறை உறுப்ப ழிந்திவையு முள்ளபின், 
குற்ற மென்றிதனை விட்டி டாதுவிட வென்ற லும்குலைவு கொண்டிடும், 
பெற்றி கண்டுமொரு பற்ற றும்பரிசு பேச வேஉளது னாசையே. 245
சோதி மாமணிகள் ஊடு போனதொரு நூலு மானநிலை சொல்லிடும், 
நீதி யால்மணிகள் பேத மாகிஒரு நூலின் நின்றமைநி கழ்த்தினாய், 
ஆதி தானொருவ னாகி யேபல அநந்த யோனில் அமர்ந்தவன், 
பேதி யாதநிலை பேசினாய் உலகு பேத மேஇலத பேதமே. 246
ஒத்து நின்றுலின் இன்ப துன்பமவை உற்றும் உற்றிடுவ தின்றெனும், 
பித்த உன்னரையின் உற்ற தேயிலது பெற்ற தின்றிலது பெற்றதேல், 
துய்த்த லென்னுறுதல் சீவ பாவமது சொல்லி னொன்றினுந்தோய் விலாமைநீ, 
வைத்து நித்தமன வாக்கி றந்தபர மென்ன மானமிலை இன்னமே. 247
எங்கும் நின்றிடில் அவத்தை யின்றிடும் இசைந்தி டுங்கரண மென்னில்நீ, 
அங்கு நின்றபரம் எங்கொ ளித்ததது நின்ற தேல்அவை அடங்கிடா, 
இங்கு நின்றதொரு காந்த மானகல் இரும்பு சந்நிதிஇ யங்குநேர், 
தங்கி நின்றதெனில் நீங்கி மீளும்வகை தங்கி டாதுனுரை தப்பதே. 248
இருள்பொ திந்ததொரு பரிதி இவ்வுலகில் இசையில் இன்றுடலம் நானெனும், 
மருள்பொ திந்ததொரு பிரம மிங்குளது மருவி நின்றஉரு ஒருவியே, 
தெருள்பொ திந்து பரம்நானெ னும்தௌ¤வு சென்ற போதுகதி யென்றிடும், 
பொருள்பொ திந்ததெனில் அமல னுக்குமலம் வருத லாலுளது புன்மையே. 249
சுத்த மானதுப ரத்தி னுக்கணைவ தின்று சுத்தமத நாதிநீ, 
வைத்த மாயமுறு சித்(து) அசுத்தமுற மற்ற தற்கு மலம் வைத்தனை, 
ஒத்த சீவன்மல கன்ம மாயையுறு கின்ற காரணமு ணர்ந்திடாய், 
பித்த னேவிறகி னிற்பி றப்பதெரி யென்னில்வே றுபொருள் பெற்றதே. 250
உன்னின் நியும் அநுபோக மென்றபொழு துற்றி டும் துவிதம் மற்றதிங்(கு), 
என்னில் இல்லையெனில் இல்லை நீயுமறி வின்மை கண்டஇடம் உண்மையேல், 
மன்னு மோருணர்வு வந்தி டும்முணர்வெ லாமு மாயையெனில் மாயையே, 
சொன்ன தோர்பிரம மாயி டும்பிரமம் மாயை யாய்அறிவு சோருமே. 251
ஆர ணங்கள் தரு தத்து வம்அசிப தங்க ளின்பொருள் அறிந்திடாய், 
கார ணம்அதுவும் நீயும் என்றிருமை கண்டு வேறதின்மை கருதிடாய், 
நார ணன்பிரம னாலும் நாடரிய நாய கன்கழல்கள் நண்ணிநீ, 
ஏர ணைந்துபொலி சாத நங்கள் கொடு யோக ஞானமும் இயற்றிடே. 252
12. பாற்கரியன் மதம் (253 - 259)
மன்னு மறையின் முடிவென்று மாயா வாதி உடன்மலைந்து 
பின்ன மாகிப் பிரமத்தைப் பேதா பேதம் சாதித்துப் 
பன்னு மொருநூல் அதுவாகப் பாரின் மீது பாற்கரியன் 
சொன்னஇதனை இந்நூலின் அகத்தே தோன்றச் சொல்லுவாம். 253
சித்தே உலகாய்ப் பரிணமித்துச் சீவனாகித் திகழ்ந்த மையால், 
சத்தே யெல்லாம் முத்தியினைள் சாரக் கண்ட ஞானங்கள், 
வைத்தே மொழியும் மாமறைகள் சொன்ன மரபே வந்தக்கால், 
ஒத்தே கெட்டுப் பிரமத்தோ டொன்றாய்ப் போமென் றுரைத்தனனே. 254
பாற்கரியன் மத மறுதலை
இயம்பு கின்றதுல காயி டாதுசட மின்றி நின்றுசட மாகியே, 
முயங்கு கின்றமையில் இலவணத்திரத முழுதுமே கனதை முயல்கைபோல், 
பயந்த தென்னில்அறி யப்ப டும்பொரும் அறிவு மென்றுபல வாகுமோ, 
தியங்கு கின்ற தெனு ரைத்தி டாய்கடின மாதி யாகிவரு சித்தனே. 255
உன்னு கின்றபிர மத்தி லேசிறிதிவ் வுலக மானதென ஓதின்நீ, 
மன்னு கின்றசில கால மோடழியும் அழிய வந்துதவு மாயையால், 
தன்னி லொன்றுமெனில் வருத லோடிறுதி தருத லால்அதுச டத்ததாம், 
உன்னொ டச்சகமும் உண்மை யன்றுசட மென்ன வேஉறுதி மன்னுமே. 256
வித்தெ ழுந்துமர மாய்வி ளைந்தமை விளம்பி னாய் உவமை வேறுநீ, 
நித்த மென்றவுரை பொய்த்து நீடுசட மாய்எ ழுந்தழியும் நின்பரம், 
ஒத்தெ ழும்பொழுது வித்தி னுக்கவனி யுண்டு தாரகமு னக்கெனா, 
பித்த னென்றுல குரைத்தி டும்பிரம மாயி னாய்இவைபி தற்றிலே. 257
சூன கம்கடகம் மோதிரம் சவடி தொடரொ டாரம்மடி தோடுநாண், 
ஆட கந்தருவ தாகும் அப்படிய னைத்து மப்பிசம மாகுமேல், 
நீடும் அப்பணிகள் சௌ¢து ளோர்அவைபு னைந்து ளோர்களை நிகழ்த்திடும், 
நாடி டும்சகமி யற்று வோர் கொடு நடத்து வோர்உளர்ந விற்றிலே. 258
அறிவி னோடுசெயல் மாறில் வீடதனை அணுகொ ணாதவைஇ ரண்டினால், 
உறுதி யானபிர மத்தி னோடழிய ஒன்ற லாமென உரைத்திகாண், 
இறுதி யேல்அதனொ டிசைவ தின்றிசைவ துள்ள தாயிடின்அவ் வின்பமே, 
பெறுதி நீஉடலொ டுயிர்க ளாய்அறிவு பிரியு மாறுசெயல் பெறுவதென். 259
13. நிரீச்சுரசாங்கியன் மதம் (260 - 263)
மூலம் புரியட் டகம்விகிர்தி யாகி மூன்றாய்ப் பிரகிருதி 
தூட சூக்கம் பரமாயச் சுத்த புருடன் சந்நிதியில் 
பாலன் சேட்டை புரிந்துலகம் யோனி பலவாய்ப் பரந்தொடுங்கும் 
சால வென்று நிரீச்சுவர சாங்கி யன்றான் சாற்றிடுமே. 260
நிரீச்சுரசாங்கியன் மத மறுதலை
சுத்தன் அறிவன் புருடனெனில் சூழா தாகும் பிரகிருதி 
பெத்தம் நீங்கி னாலும்பின் பெத்த னாவன் பேரறிவால் 
கத்த மேவும் பிரகிருதி கண்டு கழிக்க மாட்டானேல் 
முத்த னாகான் சுத்தனுக்கு மூலப் பிரகி ருதியிலையாம். 261
புருடன் பிரகி ருதிபெற்றால் போம் சிறிதங் குண்டாகிக், 
குருடன் முதுகின் முதுகின் முடவனிருந் தூர்ந்தாற் போலப் பிரகிருதி, 
இருட னிடத்தே இருந்தியங்கும் கன்மால் இறையன் றிரண்டினையும், 
மருட னுருவாய்ச் சேட்டிப்பித் தறியும் அமலன் அரனேயாம். 262
அறியான் புருடன் பிரகிருதி அசேத நம்கா ரியத்தி னுக்குக், 
குறியாய் நாதன் உளனென்று கூறு முத்தி விவேகமெனில், 
செறிவாம் தளைபோ காதறியில் சேர்த்தோன் வேண்டும் செயலிற்போம், 
நெறியால் பணிசெய் துடற்பாசம் நீக்கிக் கொள்நீ நின்மலனால். 263
14. பாஞ்சராத்திரி மதம் (264 - 301)
ஆதியாய் அருவ மாகி அகண்டபூ ரணமாய் ஞானச் 
சோதியாய் நின்ற மாயன் சுவேச்சையால் உருவு கொண்டு 
நீதியார் கருணை யாலே நீள்கடல் துயின்று நூலும் 
ஓதினா னென்று பாஞ்ச ராத்திரி உரைப்ப னுற்றே. 264
உந்தியில் அயனை ஈன்றும் அவனைக்கொண் டுலகுண் டாக்கி 
அந்தநல் லுலக ழிக்க அரனையும் ஆக்கு வித்துத் 
யூந்திடுஞ் சகத்தி னுக்குத் திதிகர்த்தா தானே யாகி 
வந்திடும் தோற்றம் ஈறும் நிலைமையும் பண்ணும் மாயன். 265
மீன்ஆமை கேழல் நார சிங்கம்வா மனனாய் வென்றி 
ஆனாத இராமர் மூவர் ஆயனாய் அளித்தான் கற்கி 
தானாயும் வருவன் இன்ன மென்றவன் சாற்றித் தேவர் 
கோனாயும் நிற்ப னென்று கூறுவன் குறிப்பி னோடே. 266
ஏழ்கடல் செலுவில் ஏற்றும் இருங்கிரி முதுகில் ஏற்றும் 
தாழ்தலம் முழுதுங் கண்டும் தபநியன் உடல்பி ளந்தும் 
வாழுல களந்தும் மன்னாய் மன்னர்க்கு மன்ன ராயும் 
பாழ்பட உழறப் பாரும் நோக்கும்பின் பரியு மாயே. 267
பொய்கைவாய் முதலை வாயில் போதகம் மாட்டா(து) 
ஐயனே நாதா ஆதி மூலமே என்ற ழைப்ப 
உய்யயாம் பணிமால் ஓல ஓலவென் றோடிச் சென்று 
வெய்யவாய் முதலை வீட்டிக் கரிக்கும்வீ டருளி னானே. 268
அலைகடல் கடைந்தும் வானோர்க் கமுதினை அளித்துந் தீய 
கொலைபுரி அசுரர் தம்மைக் கொன்றுல கங்கள் காத்தும் 
கலைமலி பொருளன் பர்க்குக் கருணையால் உரைத்தும் மிக்க 
தலைமையில் நிற்பன் மாய னென்றும்பின் சாற்றி னானே. 269
மாயையாய் உயிராய் மாயா காரிய மாகி மன்னி 
மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடும் அவனா லன்றி 
மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை 
மாயைபோம் போனால் மாயன் வைகுண்டம் வைப்பனன்றே. 270
பாஞ்சராத்திரி மத மறுதலை
ஆதிதா னாகில் ஆதிக்(கு) அந்தமுண் டாகும் அந்தக் 
கோதிலான் இறைவ னென்று கூறிடும் வேதம் ஞானச் 
சோதியாய் நின்றா னாகில் தோய்ந்திடான் மாயை ஞானத் 
தீதிலா உருவ மென்னில் சேர்ந்திடான் தாதுச் சென்றே. 271
தாதுவா னதுஏ தென்னில் சங்கரன் பலிக்குச் செல்லத் 
தீதிலாக் கோதண் டத்தைத் திறந்தவன் விட்ட போது 
போதுவ துதிர மன்றோ போந்துமூர்ச் சித்து வீழ்ந்தான் 
நாதனார் எழுப்பப் பின்னே நடந்தனன் கிடந்த வன்றான். 272
இச்சையால் உருவங் கொள்வன் அரியெனில் இகழ்வேள் விக்கண் 
எச்சனாய் உண்ணப் புக்கங் கிருந்தஅன் றீச னாலே 
அச்சமார் தலைய றுப்புண் டான்தலை யாக்கிக் கொள்ளான் 
நச்சினார் போற்ற நாதன் நாரணன் தலைகொ டுத்தான். 273
நூலினை உரைத்த வேத நூலினை நுவலும் வண்ணம் 
மால்அருள் செய்தா னென்றாய் மறைநீதி உலகி யற்கை 
சாலவே தெரியாக தாகிக் கிடந்தநாள் சகத்து யார்க்கும் 
ஆலின்கீ ழிருந்து வேதம் அருளினான் அறைந்தான் நூலே. 274
அயன்றனைப் பயந்தா னென்றாய் அரிஅயன் சிரஞ்சே திப்பப் 
பயந்திடான் தலைமால் தானும் படைத்திடான் சிரத்தைக் கிள்ளும் 
சயந்தரும் அரனைத் தந்தான் அயனென்கை தப்பே யன்றோ 
தியங்கிடா துணராய் எல்லாஞ் சிவன்செய லென்று தேர்ந்தே. 275
சீவன்கள் சநநம் போலச் சிலர்வயிற் றுதித்த மாலைத் 
தேவென்றே உலகங் காக்கச் சுவேச்சையாற் சநித்தா னென்பீர் 
பூவன்பின் படைக்க மாட்டா தரனடி போற்ற வேதக் 
கோவந்து முகத்தில் தோன்றிச் சிருட்டியைக் கொடுத்தல் கூறும். 276
நாரணன் அயனை யீன்றும் அயனும்நா ரணனை யீன்றும் 
காரணம் ஒருவ ருக்கங் கொருவர்தாம் இருவ ருக்கும் 
வாரண முரித்த வள்ளல் காரண னென்று மன்ற 
ஆரணம் உரைக்கும் பக்கத் தவர்களும் அடைந்தா ரன்றே. 277
அழிப்(பு)அரி யேவ லென்றாய் அரிதனை யழிக்கும் அன்றங்(கு) 
அழிப்பது தவிர்க்க மாட்டான் அங்கமும் அழித்தே பூண்டான் 
அழிப்(பு)அரி யேவ லென்றபே கறைந்ததும் அழிந்த தன்றோ 
அழித்திடும் அரனே ஆக்கம் நோக்கமும் ஆக்கு வானே. 278
வானம்கீழ் மண்ணு மெல்லாம் மாயனே காப்பா னென்றாய் 
தான்அஞ்சும் கலந்த ரன்தன் உடல்கீண்ட சக்க ரத்தை 
ஆன்அஞ்சும் ஆடு வான்பாற் பெற்றுல களித்த வார்த்தை 
தானெங்கு மாகு மெல்லாம் சங்கரன் காப்பே யாமே. 279
மாலினார் சேலி னாராய் வாரிகள் அடக்கிக் கொண்டன்(று) 
ஆலியா உலக மெல்லாம் அழிப்பவன் நானே என்னச் 
சேலினார் தமைப்பி டித்துச் செலுவினை இடந்து கண்ணைச் 
சூலியார் மேல ணிந்தான் சூலிதா னாகு மன்றே. 280
ஆமையாய் மேருத் தாங்கி அடைகலாய்க் கிடந்த போது 
நாமெனா உலகா தார நாதனென் றகந்தை பண்ண 
ஆமெனா ரன்று மென்னார் அமரரு மானார் பார்த்துத் 
தாமநாள் ஆமையாரைத் தகர்த்தோடு தரித்தா ரன்றே. 281
எழுதலம் இடந்து பன்றி யாய்இருங் கொம்பி லேற்றுத் 
தொழுதுல கிறைஞ்ச நின்ற சோதிநா னென்ற போதன்(று) 
அழுதல மந்து வீழ அருங்கோடு பறித்த தணிந்தான் 
கழுதல மந்த காட்டில் ஆடிடுங் கடவு ளன்றே. 282
இங்கடா வுளனோ மாலென் றிரணியன் தூணை எற்ற 
உங்கடா மோத ரன்றான் உரநர சிங்க மாகி 
எங்கடா போவ தென்னா உடல்பிளந் திறையா னென்ன 
அங்கடா சிம்பு ளாகி யெடுத்தடர்த் தான் அரன்றான். 283
தானமென் றிரந்து செல்லத் தனக்குமூ வடிகொடுப்ப 
வானமும் அளந்து கொண்டு மாபலி தன்னைப் பின்னை 
ஈனமாஞ் சிறையி லிட்டான் இறையன்றொன் றீந்தோன் தங்கட்(கு) 
ஊனஞ்செய் திடுவோர் தாங்கள் உத்தம ரல்ல ராகும். 284
மாயமான் தன்னைப் பொய்ம்மா னெனஅறி யாத ரக்கன் 
மாயையி லகப்பட் டுத்தன் மலைவியைக் கொடுத்தான் தன்னை 
மாயைக்குத் கர்த்தா வென்பை மதிகெட்டபே கவனைக் கொன்று 
நாயனார் தமைப்பூ சித்தான் கொலைப்பாவ நணுகி டாதே. 285
பரசுடன் பிறந்தான் தானும் பத்தனாயப் பரசி னாலே 
அரசறுத் தரனை நோக்கி அருந்தவம் பரிந்தான் அன்று 
பரசிய பரசு ராமன் பலதேவ னுலக மெல்லாம் 
உரைசெயும் உமையாள் கோனை உள்நினைந் தியோகி னின்றான். 286
ஓதிய வாசு தேவர் தமைஉப மணியு தேவர் 
தீதிலா நோக்கஞ் செய்து சிவகரஞ் சிரத்திற் சேர்த்தி 
ஆதிபா லடிமை யாக்க அரிஉடல் பிராணன் அத்தம் 
ஈதெலாம் கொள்நீ என்றங் கிறைஞ்சினார் அறிந்தி டாயே. 287
பின்வரும் பரிதா னாகி அரியென்றாய் பின்பு வந்தால் 
என்வரு மீச னாலென் றறிகிலோம் இவுளி யார்க்கு 
முன்வரும் அவதா ரங்கள் முடிந்தமை அறிந்தா யன்றே 
பொன்வரும் சடையி னான்தன் புகழெங்கும் புக்க தன்றே. 288
கைவரை மூல மேயோ எனக்கரிக் குதவுங் காட்டின் 
மொய்வரை எடுத்தான் மூலம் ஆயிட வேண்டு மோதான் 
ஐயனேமுறையோ என்றால் அரசனோ அங்குச் செல்வான் 
வையகங் காப்பான்செய்கை வழக்கன்றோ ஊர்காப்பான்போல். 289
அன்றியும் ஆனை மாலுக் கடிமையாய் மூல மேயோ 
என்றிடு மதனால் மால்தான் இறைவனென் றியம்ப வேண்டா 
உன்றனக் கடிமை யானார் உன்னையெம் பெருமா னென்றால் 
இன்றுநீ வணங்கு முன்றன் எம்பெரு மானோ நீயே. 290
ஞாலம்உண் டவனால் உண்டார் நல்லமு தமரர் என்றாய் 
வேலைநஞ் செழமா லாதி விண்ணவர் வெந்து சென்ற 
காலமின் றெமக்குக் காவாய் கடவுளே யென்ன நாதன் 
ஆலமுண் டிலனேல் தேவர் அமுதமுண் டிடுவ தெங்கே. 291
அஞ்சியன் றரிதா னோட அசுரனைக் குமர னாலே 
துஞ்சுவித் தொருபெண்ணாலே தாரகன் உடல்துணிப்பித்(து) 
அஞ்சிடப் புரம்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத 
நஞ்சினை யுண்டு மன்றோ நாயகன் உலகங் காத்தான். 292
பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக், 
கூர்த்தஅம் பாலே எய்து கொன்ற சாளே னென்னத், 
தேர்த்தனி லிருந்து மாயை செய்துமால் கொல்லச் செப்பும், 
வார்த்தைநூ லாக்கிக் கொண்டாய் புரங்கொல் நூடல மதித்தி டாயே. 293
மாயைதான் உயிர்க ளாகா துயிர்கள்தாம் மாயை யாகா 
மாயவன் இவைதா னாகான் இவைதானு மாய னாகயா 
ஏயுமாம் அநாதி யாக இறைபசு பாச மென்றே 
தூயவன் கலப்பி னாலே எல்லாமாய்த் தோன்று வன்காண். 294
பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினை அடைய முத்தி 
ஆசற்ற ஆக மங்கள் அறைந்திட அறிவின் றிங்கே 
மாசற்ற மால்மா சாகி மாயையு முறுவ னென்னில் 
கூசிப்பின் கொள்ளார் நல்லோர் உனக்காமிக் குழப்பு நூலே. 295
பிரமம்நா னென்ற போது பிரமனோ டரியுங் கூடிப் 
பரமனார் இகலி டாமே பார்த்திடர் பண்ணி நின்ற 
உரமனார் அழலு ரூபம் தன்னையு முணர மாட்டான் 
கரமனாள் திகிரி ஏற்றான் கடவுளென்றறைவதென்னே. 296
தோரி இறையன் றென்றே சிவமுனி ததீசி யோடே 
போர்புரிந் திகல மாலைப் புக்கவன் பிடித்த டித்து 
மார்பினி லுதைத்து மால்தன் சக்கரம் வயிற்றில் வைத்திட்(டு) 
ஏர்மலி படைப டைத்திட் டரிபட வெறிந்தா னன்றே. 297
சூலிகாண் இறைமால் அல்லன் சூலியைத் தொழுந்துயர் வாசன் 
மாலினார் மார்மி திப்பத் திருமறு மார்ப னாகி 
நூலினார் மார்பன் நோன்றாள் பட்டிடஞ் சுத்த மென்று 
பாலினார் கடலான்ஆங்கே பரிவொடும் திருவை வைத்தான். 298
தவகுண னாய்மால் சென்று தீவியைள் சக்க ரத்தால் 
அவகுணஞ் செய்தன் றோடப் பிருகுவந் தவனைப் பார்த்துச் 
சிவனடய தறியே னாகில் இதுசெய்தோன் செறிகப் பத்துப் 
பவமென மொழிய மாலும் பயப்பட்டுப் பதறி வீழந்தான். 299
பயப்பட்டுப் பரனைநோக்கித் தவம்பண்ணப் பரனும்தோன்றி 
நயத்தஞ்ச லென்று வேண்டிற் றென்னென நார் ணன்தான் 
பெயர்த்தருள் பிருகு சாப மெனஅன்பன் பிருகு வென்ன 
உயர்கொள்நீ பவந்தோ றென்ன ஓமென்றான் உலக நாதன். 300
இப்படிப் பிருகு சாபத் தீரைந்து பிறப்பின் வீழ்ந்து 
மெய்ப்படு துயர முற்று வருபவன் விமலன் அல்லன் 
எப்படி யானுஞ் சொன்னேன் இறைஅரி அல்ல னென்றே 
மைப்படி கண்டன் அண்டன் மலரடி வணங்கி டாயே. 301
சிவஞானசித்தியார் பரபக்கம் முற்றிற்று.

பரபக்கம்

8. பட்டாசாரியன் மதம் (181 - 203)
வேதமே யோதி நாதன் இலையென்று விண்ணில் ஏறச் சேதமாங் கன்மஞ் செய்யச் சைமினி செப்பும் நூலின் நீதியே கொண்டு பட்டா சாரியன் நிகழ்த்தும் நீர்மை ஓதநீர் ஞாலத் துள்ளே உள்ளவா றுரைக்க லுற்றாம். 181
உற்றிடுங் காம மாதி குணங்கள்தாம் உயிர்கட் குண்டாம் மற்றிவை தருமே யாகின் மறைமொழி வாய்மை யின்றாம் கற்றநூல் அளவாற் போதம் கலப்பது கல்வி யின்றேல் பெற்றிடும் மழவு மூங்கை என்னவே பேச லாமே. 182
உண்டொரு கடவுள் வேதம் உரைத்திட உயிரின் தன்மை கொண்டவன் அல்லன் என்றுங் கூறிடின் உருவங் கூடில் பண்டைய உயிரே யாகும படித்தநூ லளவு ஞானம் கண்டிடும் உருவ மின்றேல் கருதுவ தில்லை என்றான். 183
தேவரும் முனிவர் தாமும் சித்தரும் நரரும் மற்றும் யாவரும் உரைப்பர் வேதம் இயம்பினர் இன்ன ரென்னப் போவதன் றென்று நாளும் பரம்பரை புகல்வ தாகும் கூவல்நி ரென்னில் கொள்ளேம் மறுமையைக் குறித்த லாலே. 184
உன்னிய அங்க மாறும் மூன்றுப வேதந் தானும் தன்னுளே அடக்கி வேறு தங்கிடா வகையைச் சார்ந்து முன்னமோர் தோற்ற மின்றி முடிவின்றி நித்த மாகி மன்னியோர் இயல்பே யாகி வழங்கிடும் மறைய தென்றான். 185
செய்தியும் நெறியும் மேவுந் தேவரும் பொருளும் எல்லாம் எய்திய பன்மை யாலே ஓரியல் பியம்பா தாகும் ஐயமில் காலம் மூன்றும் அறிந்தபின் நெஞ்ச கத்தாய் மெய்யதாய் வந்து தோன்றி விளங்கிடும் வேத நூலே. 186
தப்பிலா வாகுந் தாது பிரத்தியந் தன்னி னோடே ஒப்பிலா தாம்பி ராதி பதிகமாம் உறுப்புங் கொண்டு செம்பபுமாம் வேதம் சொன்ன விதிப்படி செய்யச் சேம வைப்பதாம் வீடு பாசம் மருவலாம் ஒருவ லாமே. 187
போக்கொடு வரவு காலம் ஒன்றினில் புணர்வ தின்றி ஆக்கவே றொரவ ரின்றி அநாதியாய் அணுக்க ளாகி நீக்கிடா வினையிற் கூடி நிலமுத லாக நீடி ஊக்கமா ருலகம் என்றும் உள்ளதென் றுரைக்க லாமே. 188
நித்தமாய் எங்கு முண்டாய் நீடுயிர் அறிவு தானாய்ப் புத்திதான் ஆதி யாய கருவியின் புறத்த தாகிச் சுத்தமாய் அருவ மாகித் தொல்லைவல் வினையின் தன்மைக்(கு) ஒத்ததோர் உருவம் பற்றிப் புலன்வழி உணர்ந்து நிற்கும். 189
செயல்தரு வினைகள் மாய்ந்து சிந்தையிற் சேர்ந்து நின்று பயனொடு பலியா நிற்கும் பலாலமும் தழையு மெல்லாம் வயல்தனின் மருவி நாசம் வந்தபின் பலத்தை வந்திங்(கு) இயல்பொருந் தந்தாற் போல என்றும்பின் இயம்பு கின்றான். 190
நீதியா நித்த கன்மம் நிகழ்த்திடச் சுபத்தை நீங்கார் தீதிலா இச்சா கன்மஞ் செந்தழல் ஓம்பிச் செய்ய ஏதுதான் வேண்டிற் றெல்லாம் எய்தலாஞ் சோம யாகம் ஆதிதான் ஆசை வீசி அமைத்திட வீட தாமே. 191
கருதிய கன்மம் ஞானம் இரண்டுங்கா லாகக் கொண்டு மருவிட லாகும் வீடு மதிதனை மதித்துச் செய்தி ஒருவிடில் பதித னாகும் பதிதனைக் கதியின் உய்க்கத் தருவதோர் நெறிதான் இல்லை என்னவுஞ் சாற்றி னானே. 192
பசுப்படுத்(து) யாகம் பண்ணப் புண்ணியம் ஆவ தென்று வசிப்பினான் மறைகள் சொன்ன வழக்கினால் வாய்மை யாக நசிப்பிலா மந்தி ரங்கள் நவிற்றலின் இன்ப மாகும் பசிப்புளான் ஒருவன் உண்ணப் பசியது தீர்ந்த பண்பே. 193
பட்டாசாரியன் மத மறுதலை
வேதஞ் சுயம்புவென வேதந்த வாய்மொழியில் வேறும் பிரமாண முளதேல், நீதந்து காணிங்கு மாதுங்க பாரதமும் நேர்கண்ட தாகும் அதுபோல், ஓதுஞ் சொலாய்வருத லானுங்க டாதிபட மோவந்தி டாஒருவரா, லேதந்த தாமறைக ளாய்வந்த வாய்மொழியும் வேறிந்து சேக ரனதே. 194
உரைதந்தி டானஒருவன் எனிலிந்த வானினிடை ஒலி கொண்டு மேவி உளதாம், புரைதந்த வாம்மறைகள் அபிவெஞ்ச மாயொளிர்கை பொருள்தந்த தீப மதுவேல், வரை தந்த தாலில்வுரை கபிலன்சொ லாகுமது மறைகின்ற வாறும் வரவும், விரைவின்சொ லாயிதனை யெதுகொண்டு மேவுவது விடைகொண்ட தாலுன் உரையே. 195
உருவின்க ணேமருவி வரில்இன்று தேரைஉரை உளதுங்கள் நூலின் மறையும், தருகின்ற நாதரவர் இவரென்று நாமமது தரவந்தி டாமை யதனால், வருமென்று நேடியெனில் வளர்கின்ற தீவதனில் வருகிந்ற வாடை பலவால், ஒருதந்து வாயனவன் இவனென்ற போதிலிவை உளதென்று நீடிய வையே. 196
மறைநின்று நாலுதிசை யவர்ஒன்ற தாகவரும் உரை தந்த வாய்மை அதனால், நிறைவென்று நீடுமெனில் வனையுங்க டாதிபல சொலவொன்றி நீடி யுளதாம், குறைவின்றி நாடும் மொழி அவைசென்று கூடுவதொர் குணமுண்ட தாகு மலர்தான், உறைகின்ற மாலைதனில் உளதென்ற தாகுமெனின் உணர்வின்ற தாழி ஒலியே. 197
உடல்நின்று நாமுணரு மதுகண்ட வாறொருவன் உலகங்க ளேஉ ருவமாய், இடைநின்று மாமறைக ளவைஅன்று வாய்மொழிய இவைகொண்டு லோக நெறியின், கடனின்று வாழுமது கருதும்பின் ஆணைவழி கருமஞ்செய் காசினி யுளோர், திடமென்று சீர்அரச னுரைதங்கும் ஓலைதிரு முகமென்று சூடு செயலே. 198
முடிவின்றி வேதியர்கள் முதல்வந்த மூவர்களும் மொழி யும்சொல் ஆரிய மெனில், கடிவின்றி யேகணித ரவர்கண்ட வாறதுவென் வடகண்ட சாதி கடியா(து), ஒடிவின்றி ஓதுவதென் உரைதங்கு வேதமொழி உளதென்று கூறு மவர்தாம், அடியின்று தானெனும தறிவின்றி ஈனுமவர் இலையென்ற ஆத ரவதே. 199
அறிகின்ற பான்மைஅவ யவநின்ற தாகில்அணு அழியுங்க டாதி யெனவே, செறிகின்ற வாறதிலை யெனின்வந்து சேருமது திடமன்றுகூட வொருவன், குறிகொண்டு காரின் முளை வருகின்ற பீசமவை குலையொன்றி வேனி லழியும், உறுகின்ற காலமவை உடனின்று போயழியும் உலகென்று நீடி யிலதே. 200
நிறைவெங்கு மாகில்உயிர் நெறிநின்று போய்வருதல் அணைவின்ற தாம் உடலிலே, குறைவின்றெ லாமும்உள குடகந்த மாகில் அவை விடநின்ற வாறு குறியா, உறைகின்ற மாதவர்கள் உடனின்று போய்வறிதொர் உடல்கொண்டு மீள்வ துணராய், மறைதந்த வாய்மைதனில் நிறைவின்றி யேயுலகின் மலைகின்ற தாலுன் உரையே. 201
அழிகின்ற தால்வினைகள் ஆகின்ற வாறெனெர வது மங்கி யான பரிசேல், ஒழிவின்றி ஓதநமும் அறவுண்ண நாம் வினைகள் உறுகின்ற வாறதெனலாம், கழிகின்ற தாலறிவு வினைதந்தி டாவினைஞர் கருமங்கள் நாடி யுறுவோர், பழுதின்றி யேஉதவும் அதுபண்ப தாகஅருள் பரமன்க ணாகும் வினையே. 202
கருமங்கள் ஞானமது வுடன்நின்ற லல்மருவு கதிதங்க லாகு மெனின்நீ, தரும் அங்க ராகமுதல் அவைதங்க மேலறிவ தவிரும்பின் வீடும் அணையா, பொருள் நின்று தேடிவரு பயன் உண்டு போவினை புரிகின்ற வாற தெனவே, திருநின்ற போகம் வளர் அவிசென்று மேவியது செலவுண்டு சூழவ செயலே. 203

9. பிரபாகரன் மதம் (204 - 207)
அருந்தவனாம் சைமினிபண் டாரணநூல் ஆய்ந்தானாய்த் யூ¤ருந்தும்உல கிரிற்கொண்டு செப்பியநூல் திறமதனைப் பரிந்துபிர பாகரன்பட் டாசானில் வேறாகிப் புரிந்துரைசெய் நெறியதனைப் புவனிமிசைப் புகன்றிடுவாம். 204
அருஞ்செயலின் அபாவத்தே அபூர்வமெனும் அது தோன்றித், தருஞ்செயல்நின் றழியில்பின் பலிப்பிப்ப தாகுமது, வருஞ்செயல்ஒன் றின்றியே மண்சிலைபோ லாமுத்தித், தருஞசெயலீ தெனவுணர்ந்து தாரணிமேல் அவன் சாற்றும். 205
பிரபாகரன் மத மறுதலை
வேறுபலந் தருவதுதான் வினையென்று வேதங்கள் கூறவோர் அபூர்வந்தான் கொடுக்குமெனக் கொண்டவுரை மாறுதரு மறையோடு முன்பின்றி வந்ததால் தேறியவிண் பூமுடிமேற் சேர்ந்துமணந் திகழ்ந்ததுவாம். 206
ஆநந்தம் கதியென்ன அறிவழிகை வீடென்கை ஊனம்பின் உணர்விழந்தோர்க் குளதாகும் உயர்முத்தி தானிங்குச் சிவப்பொழியத் தழல்நிற்கு மாறில்லை ஞானங்கெட் டுயிர்நிற்கும் எனுமுரைதான் நண்ணாதால். 207

10. சத்தப் பிரமவாதி மதம் (208 - 219)
உரையா னதுமை யலினால் உலகாம் புரையோ ருணரும் பொருள்பொய் யிதனை விரையா துணரும் அதுவீ டெனவே வரையா துரைவா திவகுத் தனனே. 208
பரிணா மம்விவர்த் தநம்மா யம்அதில் தருமாம் உலகுள் ளதுசத் தமதே பொருளா வதுசொல் நலம்அல் லவெனில் மருவா துபொருட் டிறமற் றிலையே. 209
பூமா வெனவே உரையும் பொருளும் ஆமாம் பொருளொன் றில்அணைந் திலதால் நாம்ஆ தரவெய் துசொல்நன் கருவாய்த் தாமாம் பொருள்நெற் பொரிதா னெனவே. 210
சொல்வந் தெழலும் பொருள்தோன் றுதலால் சொல்லே பொருளென் றுதுணிந் திடுநீ சொல்லும் பொருளும் உடனின் றதெனின் சொல்லும் பொருளின் றுசொல்நின் றதுவே. 211
சத்தப் பிரமவாதி மத மறுதலை
உரையா னதுமை யலினால் உலகேல் உரையாய் ஒருமை யலும்உள் ளதென வரையா துணரும் அதுவண் கதியேல் வரையா மறையோ டுமலைந் தனையே. 212
அருவம் உரையா தலின்அவ் வுருவாய் மருவும் பரிணா மம்மறந் திடுமாம் பருகுந் ததியா னதுபா லதெனில் உருவம் அதுவாய் அழியும் உரையே. 213
ஆயம் உடன்அந் தவிவர்த் தநமும் மாயவ் வுளதென் றுசொல்எவ் விடமு மாய்நின் றமையின் உரையின் நலமும் ஆயும் பொருளுக் கறிநா மமதே. 214
உரைபோல் பொருளுக் குருவின் மையினவ் உரையே பொருளென் றனைஇன் றரியென் உரையே கவிமா லவனுக் குளதாம் உரையாய் கவியா கவொர்மா லினையே. 215
நெல்லில் பொரியா வதுநீ டழலில் சொல்லில் பொருளொன் றொடுதொக் கிடலால் கல்வித் திறமாம் உரைகாட் சியினால் மல்லற் பொருள்சா லவளந் தருமே. 216
முன்கண் டபொருள் பெயரா தலினால் பின்கண் டபிழம் புணரும் பெயரால் நன்கண் டபொருட் கொருநா சமதின்(று) என்கண் டனைகா ரணமின் றழிவே. 217
பொருள்இந் திரியம் உணர்வோ டுபுமான் இருளின் றியிடும் ஔ¤இத் தனையும் மருவும் பொழுதில் வருஞா னமதின் ஒருவும் பெயர்அர்த் தம்உதித் திடுமே. 218
அர்த்தம் தௌ¤தற் கொளியா னதுபோல் சத்தம் பொருள்தான் அறிதற் குளதாம் நித்தம் அதுவன் றுரைநின் றழியும் சித்தன் ஒருவன் உரைசெய் தனனே. 219

11. மாயாவாதி மதம் (220 - 252)
நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி, ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும், மானா மதிகே டனுமாய மாயா வாதி பேயாகித், தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம். 220
அறிவாய் அகில காரணமாய் அநந்தா நந்த மாய்அரு வாய்ச், செறிவாய் எங்கும் நித்தமாய்த் திகழந்த சத்தாய்ச் சுத்தமாய்க், குறிதான் குணங்க ளொன்றின்றிக் கூறும் வேதம் தனக்களவாய்ப், பிறியா அநுபூ திகந்தனக்காய் நின்ற தந்தப் பிரமந்தான். 221
ஒன்றாம் இரவி பலபாண்டத்(து) உண்டாம் உதகத் தங்கங்கே, நின்றாற் போல உடல்தோறும் நிகழ்ந்து நிற்கும் பொருள் மேற்கண், சென்றாற் போலப் புலன்களுக்குஞ் சிந்தை தனக்குந் தெரிவரிதாம், என்றால் காட்சி முதலாய இருமூன் றளவைக் கெட்டாதால். 222
இருளில் பழுதை அரவெனவே இசைந்து நிற்கும் இருங்கதிர்கள், அருளப் பழுதை மெய்யாகி அரவும் பொய்யாம் அதுவேபோல், மருளில் சகமுஞ சத்தாகி மருவித் தோன்றும் மாசில்லாத் தெருளில் சித்தே சத்தாகும் பித்தாம் சகத்தின் செயலெல்லாம். 223
உலகந் தானும் திருவசநத் துண்டாம் இன்றேல் உதியாது நிலவி யுண்டேல் அழியாது நிற்ப தாகும் மித்தையால் இலகு சுத்தி கனல்சேர இன்றாம் வௌ¢ளி நின்றதாம் குலவு சகமும் அவிகாரம் பரமார்த் தத்தில் கொள்ளாதால். 224
தாங்கும் உலகுக் குபாதாநம் சத்தாம் சிலம்பி நூல்தன்பால், வாங்கி வைத்துக் காப்பதுபோல் வையமெல்லாம் தன்பக்கல், ஓங்க உதிப்பித் துளதாக்கி நிறுத்தி ஒடுக்கத் திலதாக்கும், ஆங்கு வந்த வாறதனால் சத்தாம் சகத்தின் அமைவெல்லாம். 225
மன்னும் பிரமந் தனின்வானாய் வானின் வளியாய் அந்தவளி, தன்னின் அழலாய் அழலின்பால் சலமாய்ச் சலத்தில் தாரணியாய்ச், சொன்ன இதனின் மருந்தாகித் தோற்றும் மருந்தில் அன்னமாய், அன்ன மதனில் துவக்காதி ஆறு தாது ஆயினவால். 226
ஆறு தாதுக் களும்கூடி வந்த கோசம் அன்னமயம் மாறில் பிராண கோசமயம் மன்னு மதனில் மனோமயந்தான் வேறு வரும்விஞ் ஞானமயம் மேவும் அதனின் அதுதன்னில் கூறி வரும்ஆ நந்தமயம் கோச மயம்பின் கூடியதால். 227
கோச உருவில் பிரமந்தான் கூடித் தோன்றும் நீடுமொரு காசம் மருவும் கடற்தோறும் நின்றாற் போலக் கதிரவன்தன் வீசு கிரணம் உருவின்கண் வௌ¤ப்பட்ட டிடுவ ததிற்பற்றும் பாசம் அதனுக் கின்றாகும் என்றாற் பரத்திற் பற்றுண்டோ. 228
அலகில் மணிக ளவைகோவை அடைந்த பொழுதின் அங்கங்கே, நிலவும் ஒருநூல் பலநிறமாய் நின்றாற் போல நீடுருவம், பலவும் மருவு பேதத்தால் பன்மை யாகும் பிரமந்தான், குலவு போக போக்கியங்கள் கொள்ளும் போன்று கொள்ளாதால். 229
போற்றும் செயலால் பலநாமம் புனைந்து போக போக்கியத்தில், தோற்றும் நனவு கனவினுடன் சுழுத்தி துரியம் எய்தும் இதற்(கு), ஏற்ற கரணம் நிரைநிரையே ஈரேழ் நாலொன் றெல்லாமும், மாற்றி நிற்கும் கேடின்றி வந்த போகம் மாய்ந்திடல். 230
கருவி யெல்லாம் நானெனவே கருதல் பந்தம் அக்கருத்தை ஒருவ முத்தி யுண்டாகும் உள்ளம் வித்தாம் செய்தியினால் மருவும் மாயா காரியங்கள் அவித்தை மாய வேமாயை பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே. 231
ஆன கன்ம அநுட்டயங்கள் அந்தக் கரண சுத்திதரும் ஊன மின்றி அச்சுத்தி ஞான மதனை உண்டாக்கும் ஞான மதுதான் பிரமத்தை நானென் றுணர்த்தும் நான்பிறந்தால் வான மதிநீர்த் துளக்கமெனக் காணுந் தன்னை மாயையிலே. 232
தானே தானாய் அநுபோகம் தன்னில் தன்னை அநுபவித்திட்(டு) ஊனே உயிரே உணர்வேயென் றொன்று மின்றி உரையிறந்து வானே முதலாம் பூதங்கள் மாய மாயா தேமன்னி நானே பிரமம் எனத்தௌ¤யும் ஞானம் பிரம ஞானமே. 233
சாற்றும் மறைதத் துவமசிமா வாக்கி யங்கள் தமையுணர்ந்தால் போற்றி அதுநீ யானாயென் றறைவ தல்லால் பொருளின்றே தேற்று மிதனைத் தௌ¤யாதாச் தௌ¤யப் பஞ்ச ஆதநமேல் ஏற்ற இயம நியமாதி யோகம் இருநான் கியற்றுவரால். 234
மாயாவாதி மத மறுதலை
ஏகம் நானென இயம்பி இப்படி அறிந்து முத்தியடை மின்னென, மோக மானஉரை சோகம் இன்பொடு முடிந்தி டாதுமல டாகிய, பாக மானது கருங்க லின்தசை பறித் தழுங்கரிய குஞ்சியின், தாக மார்பசி தவிர்க்க வாயிடை கொடுத்ததென் றுரைசெய் தன்மையே. 235
நீடு வேதம்அள வாக ஏகமெனும் நீதி தான்நிகழ்வ தாகுமேல், நாடி ஞாதிருவும் ஞான ஞேயமுடன் நாளு நான்மறையும் ஓதலால், ஓடு மாகுமுன(து) ஏகம் ஓதுமிவை ஊன மாகிஉரை மாறுகோள், கூடு மாகும்அநு பூதி தானுமது கூடிடாதறிவி லாமையால். 236
நீதியால் ஔ¤கொள் பானு வான(து)அக னீரி லேநிகழு மாறுபோல், ஆதி தானுருவ மாய காயமதன் மேவி ஆவதிலை யாகுமாம், தீதி லாஅருவ மாதலால் நிழல்கள் சேர வேறிடமி லாமையால், ஓதி ஓர்அகலின் நீரி லேயொருவர் காணலால் இலதுன் ஏகமே. 237
வேறு வாயில்புல னோடு மேல்மனமும் மேவி டாதுபிர மாணமு, கூறி டாதறிவு தானெ னாஉணர்தல் கோடு நீ முயலின் நாடினாய், ஈறி லாதபரம் ஏக மேயென இயம்பு நீ இசையும் ஞானமும், பேற தாவதிலை பேத மானஇது பேண வேயுளது பேசிலே. 238
இலகு சோதிமணி எனவும் ஏகமெனின் இதனில் ஏக மது விலகினாய், குலவு காசுமொளி அதுவும் நீடிவளர் குணமும் நாடுவதொர் குணியுமாம், பலவு மானகுண மொருவும் ஏகமது எனவும் நீபகரில் நிகரிலா, உலக மானதனை உதவு மாறதிலை உணர்வு தானுமிலை உணரிலே. 239
புற்றி னேர்பழுதை தொக்க போதுமயிர் புளகமாக அரவிரவிலே, உற்ற தாம்அதனை யொக்க வேஉலகு திக்கு மாறுமொரு சத்திலே, பெற்ற தாகுமெனின் அப்பி ராந்தியுடை யோரும் அப்பிரம பேதமாய், நிற்பர் நீபகரின் முற்றும் ஐயநிலை பெற்றும் இன்பமதி லாததாம். 240
ஓதி யேஉலக மாதனை நீயும்நிரு வசன மாகஉரை செய்வதென், பேதை யோய்உளதும் இலதும் அல்லபொருள் பேசு வாரும்உள ரோசொலாய், ஆதி யேயுளது வருத லால்இலதி லாவ தின்மைய தணிந்துபோம், நீதி யால்உளதி லாமை நேர்வ தெனின் நேர்மை யாகியது நின்றதே. 241
வேற தாகியது போல்இ ருந்தமையில் வௌ¢ளி சுத்தி யெனில் ஐயமே, கூற லாம்ஒருப ரத்தொ டொத்தபொருள் கொண்டு விண்டநிலை கண்டனம், மாறி டாதுநிலம் நீர தாகி அனல் வாயு வாகிஅவை மாறியும், சேறி லாதுவிவ கார மன்றுபர மார்த்த மாயது செறிந்ததே. 242
மாய நூலதுசி லம்பி வாயினிடை வந்த வாறதனை மானவே, ஆய தேஉலக மான தும்பிரம மதனி லேயெனில் அடங்கிநின்(று), ஏயு மாகுமொரு சித்து மத்துடன்நி லாத தென்றுபின் இயம்பின்நீ, பேய னேகடம்மி ருத்தில் வந்தது பிறப்ப தாவதிலை பேசிலே. 243
வேற தாகும்உரு வத்தி லேபரம்வெ ளிப்ப டும்மென விளம்பில்நீ, ஊறி லாஉருஅ சத்தி லேபிரமம் உண்டு தானுணர்வி லாததென், மாறி வாயுவும னாதி யானவையும் வந்தி டாமையினி லின்றெனில், ஈறு தானுடைய தாய தோபிரம மென்கொ லோஇவை இறப்பதே. 244
பற்ற தின்றிஉடல் நின்றி டும்பரமெ னப்ப கர்ந்தனைப ரிந்துடன், உற்று டம்புநரை திரைகள் நோய்சிறை உறுப்ப ழிந்திவையு முள்ளபின், குற்ற மென்றிதனை விட்டி டாதுவிட வென்ற லும்குலைவு கொண்டிடும், பெற்றி கண்டுமொரு பற்ற றும்பரிசு பேச வேஉளது னாசையே. 245
சோதி மாமணிகள் ஊடு போனதொரு நூலு மானநிலை சொல்லிடும், நீதி யால்மணிகள் பேத மாகிஒரு நூலின் நின்றமைநி கழ்த்தினாய், ஆதி தானொருவ னாகி யேபல அநந்த யோனில் அமர்ந்தவன், பேதி யாதநிலை பேசினாய் உலகு பேத மேஇலத பேதமே. 246
ஒத்து நின்றுலின் இன்ப துன்பமவை உற்றும் உற்றிடுவ தின்றெனும், பித்த உன்னரையின் உற்ற தேயிலது பெற்ற தின்றிலது பெற்றதேல், துய்த்த லென்னுறுதல் சீவ பாவமது சொல்லி னொன்றினுந்தோய் விலாமைநீ, வைத்து நித்தமன வாக்கி றந்தபர மென்ன மானமிலை இன்னமே. 247
எங்கும் நின்றிடில் அவத்தை யின்றிடும் இசைந்தி டுங்கரண மென்னில்நீ, அங்கு நின்றபரம் எங்கொ ளித்ததது நின்ற தேல்அவை அடங்கிடா, இங்கு நின்றதொரு காந்த மானகல் இரும்பு சந்நிதிஇ யங்குநேர், தங்கி நின்றதெனில் நீங்கி மீளும்வகை தங்கி டாதுனுரை தப்பதே. 248
இருள்பொ திந்ததொரு பரிதி இவ்வுலகில் இசையில் இன்றுடலம் நானெனும், மருள்பொ திந்ததொரு பிரம மிங்குளது மருவி நின்றஉரு ஒருவியே, தெருள்பொ திந்து பரம்நானெ னும்தௌ¤வு சென்ற போதுகதி யென்றிடும், பொருள்பொ திந்ததெனில் அமல னுக்குமலம் வருத லாலுளது புன்மையே. 249
சுத்த மானதுப ரத்தி னுக்கணைவ தின்று சுத்தமத நாதிநீ, வைத்த மாயமுறு சித்(து) அசுத்தமுற மற்ற தற்கு மலம் வைத்தனை, ஒத்த சீவன்மல கன்ம மாயையுறு கின்ற காரணமு ணர்ந்திடாய், பித்த னேவிறகி னிற்பி றப்பதெரி யென்னில்வே றுபொருள் பெற்றதே. 250
உன்னின் நியும் அநுபோக மென்றபொழு துற்றி டும் துவிதம் மற்றதிங்(கு), என்னில் இல்லையெனில் இல்லை நீயுமறி வின்மை கண்டஇடம் உண்மையேல், மன்னு மோருணர்வு வந்தி டும்முணர்வெ லாமு மாயையெனில் மாயையே, சொன்ன தோர்பிரம மாயி டும்பிரமம் மாயை யாய்அறிவு சோருமே. 251
ஆர ணங்கள் தரு தத்து வம்அசிப தங்க ளின்பொருள் அறிந்திடாய், கார ணம்அதுவும் நீயும் என்றிருமை கண்டு வேறதின்மை கருதிடாய், நார ணன்பிரம னாலும் நாடரிய நாய கன்கழல்கள் நண்ணிநீ, ஏர ணைந்துபொலி சாத நங்கள் கொடு யோக ஞானமும் இயற்றிடே. 252

12. பாற்கரியன் மதம் (253 - 259)
மன்னு மறையின் முடிவென்று மாயா வாதி உடன்மலைந்து பின்ன மாகிப் பிரமத்தைப் பேதா பேதம் சாதித்துப் பன்னு மொருநூல் அதுவாகப் பாரின் மீது பாற்கரியன் சொன்னஇதனை இந்நூலின் அகத்தே தோன்றச் சொல்லுவாம். 253
சித்தே உலகாய்ப் பரிணமித்துச் சீவனாகித் திகழ்ந்த மையால், சத்தே யெல்லாம் முத்தியினைள் சாரக் கண்ட ஞானங்கள், வைத்தே மொழியும் மாமறைகள் சொன்ன மரபே வந்தக்கால், ஒத்தே கெட்டுப் பிரமத்தோ டொன்றாய்ப் போமென் றுரைத்தனனே. 254
பாற்கரியன் மத மறுதலை
இயம்பு கின்றதுல காயி டாதுசட மின்றி நின்றுசட மாகியே, முயங்கு கின்றமையில் இலவணத்திரத முழுதுமே கனதை முயல்கைபோல், பயந்த தென்னில்அறி யப்ப டும்பொரும் அறிவு மென்றுபல வாகுமோ, தியங்கு கின்ற தெனு ரைத்தி டாய்கடின மாதி யாகிவரு சித்தனே. 255
உன்னு கின்றபிர மத்தி லேசிறிதிவ் வுலக மானதென ஓதின்நீ, மன்னு கின்றசில கால மோடழியும் அழிய வந்துதவு மாயையால், தன்னி லொன்றுமெனில் வருத லோடிறுதி தருத லால்அதுச டத்ததாம், உன்னொ டச்சகமும் உண்மை யன்றுசட மென்ன வேஉறுதி மன்னுமே. 256
வித்தெ ழுந்துமர மாய்வி ளைந்தமை விளம்பி னாய் உவமை வேறுநீ, நித்த மென்றவுரை பொய்த்து நீடுசட மாய்எ ழுந்தழியும் நின்பரம், ஒத்தெ ழும்பொழுது வித்தி னுக்கவனி யுண்டு தாரகமு னக்கெனா, பித்த னென்றுல குரைத்தி டும்பிரம மாயி னாய்இவைபி தற்றிலே. 257
சூன கம்கடகம் மோதிரம் சவடி தொடரொ டாரம்மடி தோடுநாண், ஆட கந்தருவ தாகும் அப்படிய னைத்து மப்பிசம மாகுமேல், நீடும் அப்பணிகள் சௌ¢து ளோர்அவைபு னைந்து ளோர்களை நிகழ்த்திடும், நாடி டும்சகமி யற்று வோர் கொடு நடத்து வோர்உளர்ந விற்றிலே. 258
அறிவி னோடுசெயல் மாறில் வீடதனை அணுகொ ணாதவைஇ ரண்டினால், உறுதி யானபிர மத்தி னோடழிய ஒன்ற லாமென உரைத்திகாண், இறுதி யேல்அதனொ டிசைவ தின்றிசைவ துள்ள தாயிடின்அவ் வின்பமே, பெறுதி நீஉடலொ டுயிர்க ளாய்அறிவு பிரியு மாறுசெயல் பெறுவதென். 259

13. நிரீச்சுரசாங்கியன் மதம் (260 - 263)
மூலம் புரியட் டகம்விகிர்தி யாகி மூன்றாய்ப் பிரகிருதி தூட சூக்கம் பரமாயச் சுத்த புருடன் சந்நிதியில் பாலன் சேட்டை புரிந்துலகம் யோனி பலவாய்ப் பரந்தொடுங்கும் சால வென்று நிரீச்சுவர சாங்கி யன்றான் சாற்றிடுமே. 260
நிரீச்சுரசாங்கியன் மத மறுதலை
சுத்தன் அறிவன் புருடனெனில் சூழா தாகும் பிரகிருதி பெத்தம் நீங்கி னாலும்பின் பெத்த னாவன் பேரறிவால் கத்த மேவும் பிரகிருதி கண்டு கழிக்க மாட்டானேல் முத்த னாகான் சுத்தனுக்கு மூலப் பிரகி ருதியிலையாம். 261
புருடன் பிரகி ருதிபெற்றால் போம் சிறிதங் குண்டாகிக், குருடன் முதுகின் முதுகின் முடவனிருந் தூர்ந்தாற் போலப் பிரகிருதி, இருட னிடத்தே இருந்தியங்கும் கன்மால் இறையன் றிரண்டினையும், மருட னுருவாய்ச் சேட்டிப்பித் தறியும் அமலன் அரனேயாம். 262
அறியான் புருடன் பிரகிருதி அசேத நம்கா ரியத்தி னுக்குக், குறியாய் நாதன் உளனென்று கூறு முத்தி விவேகமெனில், செறிவாம் தளைபோ காதறியில் சேர்த்தோன் வேண்டும் செயலிற்போம், நெறியால் பணிசெய் துடற்பாசம் நீக்கிக் கொள்நீ நின்மலனால். 263

14. பாஞ்சராத்திரி மதம் (264 - 301)
ஆதியாய் அருவ மாகி அகண்டபூ ரணமாய் ஞானச் சோதியாய் நின்ற மாயன் சுவேச்சையால் உருவு கொண்டு நீதியார் கருணை யாலே நீள்கடல் துயின்று நூலும் ஓதினா னென்று பாஞ்ச ராத்திரி உரைப்ப னுற்றே. 264
உந்தியில் அயனை ஈன்றும் அவனைக்கொண் டுலகுண் டாக்கி அந்தநல் லுலக ழிக்க அரனையும் ஆக்கு வித்துத் யூந்திடுஞ் சகத்தி னுக்குத் திதிகர்த்தா தானே யாகி வந்திடும் தோற்றம் ஈறும் நிலைமையும் பண்ணும் மாயன். 265
மீன்ஆமை கேழல் நார சிங்கம்வா மனனாய் வென்றி ஆனாத இராமர் மூவர் ஆயனாய் அளித்தான் கற்கி தானாயும் வருவன் இன்ன மென்றவன் சாற்றித் தேவர் கோனாயும் நிற்ப னென்று கூறுவன் குறிப்பி னோடே. 266
ஏழ்கடல் செலுவில் ஏற்றும் இருங்கிரி முதுகில் ஏற்றும் தாழ்தலம் முழுதுங் கண்டும் தபநியன் உடல்பி ளந்தும் வாழுல களந்தும் மன்னாய் மன்னர்க்கு மன்ன ராயும் பாழ்பட உழறப் பாரும் நோக்கும்பின் பரியு மாயே. 267
பொய்கைவாய் முதலை வாயில் போதகம் மாட்டா(து) ஐயனே நாதா ஆதி மூலமே என்ற ழைப்ப உய்யயாம் பணிமால் ஓல ஓலவென் றோடிச் சென்று வெய்யவாய் முதலை வீட்டிக் கரிக்கும்வீ டருளி னானே. 268
அலைகடல் கடைந்தும் வானோர்க் கமுதினை அளித்துந் தீய கொலைபுரி அசுரர் தம்மைக் கொன்றுல கங்கள் காத்தும் கலைமலி பொருளன் பர்க்குக் கருணையால் உரைத்தும் மிக்க தலைமையில் நிற்பன் மாய னென்றும்பின் சாற்றி னானே. 269
மாயையாய் உயிராய் மாயா காரிய மாகி மன்னி மாயையாற் பந்தஞ் செய்து வாங்கிடும் அவனா லன்றி மாயைபோ காதென் றெண்ணி மாயனை வணங்கப் பின்னை மாயைபோம் போனால் மாயன் வைகுண்டம் வைப்பனன்றே. 270
பாஞ்சராத்திரி மத மறுதலை
ஆதிதா னாகில் ஆதிக்(கு) அந்தமுண் டாகும் அந்தக் கோதிலான் இறைவ னென்று கூறிடும் வேதம் ஞானச் சோதியாய் நின்றா னாகில் தோய்ந்திடான் மாயை ஞானத் தீதிலா உருவ மென்னில் சேர்ந்திடான் தாதுச் சென்றே. 271
தாதுவா னதுஏ தென்னில் சங்கரன் பலிக்குச் செல்லத் தீதிலாக் கோதண் டத்தைத் திறந்தவன் விட்ட போது போதுவ துதிர மன்றோ போந்துமூர்ச் சித்து வீழ்ந்தான் நாதனார் எழுப்பப் பின்னே நடந்தனன் கிடந்த வன்றான். 272
இச்சையால் உருவங் கொள்வன் அரியெனில் இகழ்வேள் விக்கண் எச்சனாய் உண்ணப் புக்கங் கிருந்தஅன் றீச னாலே அச்சமார் தலைய றுப்புண் டான்தலை யாக்கிக் கொள்ளான் நச்சினார் போற்ற நாதன் நாரணன் தலைகொ டுத்தான். 273
நூலினை உரைத்த வேத நூலினை நுவலும் வண்ணம் மால்அருள் செய்தா னென்றாய் மறைநீதி உலகி யற்கை சாலவே தெரியாக தாகிக் கிடந்தநாள் சகத்து யார்க்கும் ஆலின்கீ ழிருந்து வேதம் அருளினான் அறைந்தான் நூலே. 274
அயன்றனைப் பயந்தா னென்றாய் அரிஅயன் சிரஞ்சே திப்பப் பயந்திடான் தலைமால் தானும் படைத்திடான் சிரத்தைக் கிள்ளும் சயந்தரும் அரனைத் தந்தான் அயனென்கை தப்பே யன்றோ தியங்கிடா துணராய் எல்லாஞ் சிவன்செய லென்று தேர்ந்தே. 275
சீவன்கள் சநநம் போலச் சிலர்வயிற் றுதித்த மாலைத் தேவென்றே உலகங் காக்கச் சுவேச்சையாற் சநித்தா னென்பீர் பூவன்பின் படைக்க மாட்டா தரனடி போற்ற வேதக் கோவந்து முகத்தில் தோன்றிச் சிருட்டியைக் கொடுத்தல் கூறும். 276
நாரணன் அயனை யீன்றும் அயனும்நா ரணனை யீன்றும் காரணம் ஒருவ ருக்கங் கொருவர்தாம் இருவ ருக்கும் வாரண முரித்த வள்ளல் காரண னென்று மன்ற ஆரணம் உரைக்கும் பக்கத் தவர்களும் அடைந்தா ரன்றே. 277
அழிப்(பு)அரி யேவ லென்றாய் அரிதனை யழிக்கும் அன்றங்(கு) அழிப்பது தவிர்க்க மாட்டான் அங்கமும் அழித்தே பூண்டான் அழிப்(பு)அரி யேவ லென்றபே கறைந்ததும் அழிந்த தன்றோ அழித்திடும் அரனே ஆக்கம் நோக்கமும் ஆக்கு வானே. 278
வானம்கீழ் மண்ணு மெல்லாம் மாயனே காப்பா னென்றாய் தான்அஞ்சும் கலந்த ரன்தன் உடல்கீண்ட சக்க ரத்தை ஆன்அஞ்சும் ஆடு வான்பாற் பெற்றுல களித்த வார்த்தை தானெங்கு மாகு மெல்லாம் சங்கரன் காப்பே யாமே. 279
மாலினார் சேலி னாராய் வாரிகள் அடக்கிக் கொண்டன்(று) ஆலியா உலக மெல்லாம் அழிப்பவன் நானே என்னச் சேலினார் தமைப்பி டித்துச் செலுவினை இடந்து கண்ணைச் சூலியார் மேல ணிந்தான் சூலிதா னாகு மன்றே. 280
ஆமையாய் மேருத் தாங்கி அடைகலாய்க் கிடந்த போது நாமெனா உலகா தார நாதனென் றகந்தை பண்ண ஆமெனா ரன்று மென்னார் அமரரு மானார் பார்த்துத் தாமநாள் ஆமையாரைத் தகர்த்தோடு தரித்தா ரன்றே. 281
எழுதலம் இடந்து பன்றி யாய்இருங் கொம்பி லேற்றுத் தொழுதுல கிறைஞ்ச நின்ற சோதிநா னென்ற போதன்(று) அழுதல மந்து வீழ அருங்கோடு பறித்த தணிந்தான் கழுதல மந்த காட்டில் ஆடிடுங் கடவு ளன்றே. 282
இங்கடா வுளனோ மாலென் றிரணியன் தூணை எற்ற உங்கடா மோத ரன்றான் உரநர சிங்க மாகி எங்கடா போவ தென்னா உடல்பிளந் திறையா னென்ன அங்கடா சிம்பு ளாகி யெடுத்தடர்த் தான் அரன்றான். 283
தானமென் றிரந்து செல்லத் தனக்குமூ வடிகொடுப்ப வானமும் அளந்து கொண்டு மாபலி தன்னைப் பின்னை ஈனமாஞ் சிறையி லிட்டான் இறையன்றொன் றீந்தோன் தங்கட்(கு) ஊனஞ்செய் திடுவோர் தாங்கள் உத்தம ரல்ல ராகும். 284
மாயமான் தன்னைப் பொய்ம்மா னெனஅறி யாத ரக்கன் மாயையி லகப்பட் டுத்தன் மலைவியைக் கொடுத்தான் தன்னை மாயைக்குத் கர்த்தா வென்பை மதிகெட்டபே கவனைக் கொன்று நாயனார் தமைப்பூ சித்தான் கொலைப்பாவ நணுகி டாதே. 285
பரசுடன் பிறந்தான் தானும் பத்தனாயப் பரசி னாலே அரசறுத் தரனை நோக்கி அருந்தவம் பரிந்தான் அன்று பரசிய பரசு ராமன் பலதேவ னுலக மெல்லாம் உரைசெயும் உமையாள் கோனை உள்நினைந் தியோகி னின்றான். 286
ஓதிய வாசு தேவர் தமைஉப மணியு தேவர் தீதிலா நோக்கஞ் செய்து சிவகரஞ் சிரத்திற் சேர்த்தி ஆதிபா லடிமை யாக்க அரிஉடல் பிராணன் அத்தம் ஈதெலாம் கொள்நீ என்றங் கிறைஞ்சினார் அறிந்தி டாயே. 287
பின்வரும் பரிதா னாகி அரியென்றாய் பின்பு வந்தால் என்வரு மீச னாலென் றறிகிலோம் இவுளி யார்க்கு முன்வரும் அவதா ரங்கள் முடிந்தமை அறிந்தா யன்றே பொன்வரும் சடையி னான்தன் புகழெங்கும் புக்க தன்றே. 288
கைவரை மூல மேயோ எனக்கரிக் குதவுங் காட்டின் மொய்வரை எடுத்தான் மூலம் ஆயிட வேண்டு மோதான் ஐயனேமுறையோ என்றால் அரசனோ அங்குச் செல்வான் வையகங் காப்பான்செய்கை வழக்கன்றோ ஊர்காப்பான்போல். 289
அன்றியும் ஆனை மாலுக் கடிமையாய் மூல மேயோ என்றிடு மதனால் மால்தான் இறைவனென் றியம்ப வேண்டா உன்றனக் கடிமை யானார் உன்னையெம் பெருமா னென்றால் இன்றுநீ வணங்கு முன்றன் எம்பெரு மானோ நீயே. 290
ஞாலம்உண் டவனால் உண்டார் நல்லமு தமரர் என்றாய் வேலைநஞ் செழமா லாதி விண்ணவர் வெந்து சென்ற காலமின் றெமக்குக் காவாய் கடவுளே யென்ன நாதன் ஆலமுண் டிலனேல் தேவர் அமுதமுண் டிடுவ தெங்கே. 291
அஞ்சியன் றரிதா னோட அசுரனைக் குமர னாலே துஞ்சுவித் தொருபெண்ணாலே தாரகன் உடல்துணிப்பித்(து) அஞ்சிடப் புரம்தீ யூட்டிச் சலந்தர னுடல்கீண் டோத நஞ்சினை யுண்டு மன்றோ நாயகன் உலகங் காத்தான். 292
பார்த்தனார் இரதமேறிப் படைதனைப் பார்த்துச் சார்பைக், கூர்த்தஅம் பாலே எய்து கொன்ற சாளே னென்னத், தேர்த்தனி லிருந்து மாயை செய்துமால் கொல்லச் செப்பும், வார்த்தைநூ லாக்கிக் கொண்டாய் புரங்கொல் நூடல மதித்தி டாயே. 293
மாயைதான் உயிர்க ளாகா துயிர்கள்தாம் மாயை யாகா மாயவன் இவைதா னாகான் இவைதானு மாய னாகயா ஏயுமாம் அநாதி யாக இறைபசு பாச மென்றே தூயவன் கலப்பி னாலே எல்லாமாய்த் தோன்று வன்காண். 294
பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினை அடைய முத்தி ஆசற்ற ஆக மங்கள் அறைந்திட அறிவின் றிங்கே மாசற்ற மால்மா சாகி மாயையு முறுவ னென்னில் கூசிப்பின் கொள்ளார் நல்லோர் உனக்காமிக் குழப்பு நூலே. 295
பிரமம்நா னென்ற போது பிரமனோ டரியுங் கூடிப் பரமனார் இகலி டாமே பார்த்திடர் பண்ணி நின்ற உரமனார் அழலு ரூபம் தன்னையு முணர மாட்டான் கரமனாள் திகிரி ஏற்றான் கடவுளென்றறைவதென்னே. 296
தோரி இறையன் றென்றே சிவமுனி ததீசி யோடே போர்புரிந் திகல மாலைப் புக்கவன் பிடித்த டித்து மார்பினி லுதைத்து மால்தன் சக்கரம் வயிற்றில் வைத்திட்(டு) ஏர்மலி படைப டைத்திட் டரிபட வெறிந்தா னன்றே. 297
சூலிகாண் இறைமால் அல்லன் சூலியைத் தொழுந்துயர் வாசன் மாலினார் மார்மி திப்பத் திருமறு மார்ப னாகி நூலினார் மார்பன் நோன்றாள் பட்டிடஞ் சுத்த மென்று பாலினார் கடலான்ஆங்கே பரிவொடும் திருவை வைத்தான். 298
தவகுண னாய்மால் சென்று தீவியைள் சக்க ரத்தால் அவகுணஞ் செய்தன் றோடப் பிருகுவந் தவனைப் பார்த்துச் சிவனடய தறியே னாகில் இதுசெய்தோன் செறிகப் பத்துப் பவமென மொழிய மாலும் பயப்பட்டுப் பதறி வீழந்தான். 299
பயப்பட்டுப் பரனைநோக்கித் தவம்பண்ணப் பரனும்தோன்றி நயத்தஞ்ச லென்று வேண்டிற் றென்னென நார் ணன்தான் பெயர்த்தருள் பிருகு சாப மெனஅன்பன் பிருகு வென்ன உயர்கொள்நீ பவந்தோ றென்ன ஓமென்றான் உலக நாதன். 300
இப்படிப் பிருகு சாபத் தீரைந்து பிறப்பின் வீழ்ந்து மெய்ப்படு துயர முற்று வருபவன் விமலன் அல்லன் எப்படி யானுஞ் சொன்னேன் இறைஅரி அல்ல னென்றே மைப்படி கண்டன் அண்டன் மலரடி வணங்கி டாயே. 301

சிவஞானசித்தியார் பரபக்கம் முற்றிற்று.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.