LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சைவ சித்தாந்த சாத்திரம்

சிவஞான சித்தியார் பகுதி -6

 

சுபக்கம்
ஐந்தாஞ் சூத்திரம் (231 -239)
பொறிபுலன் கரண மெல்லாம் புருடனால் அறிந்தான் மாவை 
அறிதரா அவையே ஆன்மாக்க ளனைத்து மெங்கும் 
செறிதரும் சிவன்ற னாலே அறிந்திடும் சிவனைக் காணா 
அறிதரும் சிவனே யெல்லாம் அறிந்தறி வித்து நிற்பன். 231
இறைவனே அறிவிப் பானேல் ஈண்டறி வெவர்க்கும் ஒக்கும் 
குறைவதி கங்கள் தத்தம் கன்மமேற் கோமான் வேண்டா 
முறைதரு செயற்குப் பாரும் முளரிகட் கிரவி யும்போல் 
அறைதரும் தத்தங் கன்மத் தளவினுக் களிப்பன் ஆதி. 232
அறிந்திடும் ஆன்மா வொன்றை ஒன்றினால் அறித லானும் 
அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும் 
அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே 
அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவ னன்றே. 233
கருவியால் பொருளால் காட்டால் காலத்தால் கருமந் தன்னால் 
உருவினால் அளவால் நூலால் ஒருவரா லுணர்த்த லானும் 
அருவனாய் உண்மை தன்னில் அறியாது நிற்ற லானும் 
ஒருவனே எல்லாத் தானும் உணர்த்துவன் அருளி னாலே. 234
கருவியும் பொருளும் காட்டும் காலமும் கன்மந் தானும் 
உருவமும் அளவும் நூலும் ஒருவரு முணர்த்த லின்றி 
அருவனா யுலக மெல்லாம் அறிந்தவை யாக்கி வேறாய் 
ஒருவனே உயிர்கட் கெல்லாம் உயிருமாய் உணர்த்தி நிற்பன். 235
இறைவன்தன் சந்நி திக்கண் உலகின்றன் சேட்டை யென்னும் 
மறைகளும் மறந்தாய் மாயை மருவிடான் சிவன வன்கண் 
உறைதரா தசேத னத்தால் உருவுடை உயிர்கட் கெல்லாம் 
நிறைபரன் சந்நி திக்கண் நீடுணர் வுதிக்கு மன்றே. 236
உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக 
இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக 
அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து 
நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன். 237
தெரிந்துகொண் டொரோவொன் றாகச் சென்றைந்து புலனும் பற்றிப், 
புரிந்திடும் உணர்வி னோடும் போகமுங் கொடுத்தி யோனி, 
திரிந்திடு மதுவுஞ் செய்து செய்திகண் டுயிர்கட் கெல்லாம், 
விரிந்திடும் அறிவுங் காட்டி வீட்டையும் அளிப்பன் மேலோன். 238
அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித் 
தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை 
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்(கு) 
இருளினை ஔ¤யா லோட்டும் இரவியைப் போல ஈசன். 239
ஆறாஞ் சூத்திரம் (240 -248)
அறிவுறும் பொருளோ ஈச னறிவுறா தவனோ வென்னின் 
அறிபொருள் அசித்த சத்தாம் அறியாத தின்றாம் எங்கும் 
செறிசிவம் இரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும் 
நெறிதருஞ சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாயே. 240
ஆவதாய் அழிவ தாகி வருதலால் அறிவு தானும் 
தாவலால் உலகு போகம் தனுகர ணாதி யாகி 
மேவலால் மலங்க ளாகி விரவலால் வேறு மாகி 
ஓவலால் அசத்தாம் சுட்டி உணர்பொரு ளான வெல்லாம். 241
மண்தனில் வாழ்வும் வானத் தரசயன் மாலார் வாழ்வும் 
எண்தரு பூத பேத யோனிகள் யாவு மெல்லாம் 
கண்டஇந் திரமா சாலம் கனாக்கழு திரதங் காட்டி 
உண்டுபோல் இன்றாம் பண்பின் உலகினை அசத்த மென்பர். 242
உணராத பொருள்சத் தென்னின் ஒருபய னில்லைத் தானும் 
புணராது நாமும் சென்று பொருந்துவ தின்றாம் என்றும் 
தணவாத கரும மொன்றும் தருவது மில்லை வானத்(து) 
இணரார்பூந் தொடையு மியாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும். 243
தத்துவம் சத்(து) அசத்துச் சதசத்து மன்றென் றாலென் 
உய்த்துணர்ந் துண்டோ இன்றோ என்றவர்க் குண்டென் றோதில் 
வைத்திடும் சத்தே யாகும் மனத்தொடு வாக்கி றந்த 
சித்துரு அதுஅ சித்தாம் மன்த்தினால் தேர்வ தெல்லாம். 244
அறிபொருள் அசித்தாய் வேறாம் அறிவுறாப் பொருள்சத்தென்னின் 
அறிபவன் அறியா னாகில் அதுஇன்றுபயனு மில்லை 
அறிபவன் அருளி னாலே அந்நிய மாகக் காண்பன்
அறிபொரு ளறிவாய் வேறாய் அறிவரு ளுருவாய் நிற்கும். 245
பாவிப்ப தென்னிற் பாவம் பாவகங் கடத்திற் பாவம் 
பாவிக்கும் அதுநா னென்னில் பாவகம் பாவங் கெட்டுப் 
பாவிப்ப தென்னிற் பாவம் பாவனை இறந்து நின்று 
பாவிக்கப் படுவ தாகும் பரம்பரன் அருளி னாலே. 246
அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும் 
உன்னிய வெல்லாம் உள்நின் றுணர்த்துவன் ஆத லானும் 
என்னதி யானென் றோதும் இருஞ்செருக் கறுத்த லானும் 
தன்னறி வதனாற் காணும் தகைமையன் அல்லன் ஈசன். 247
ஒன்றெனு மதனால் ஒன்றென் றுரைப்பதுண் டாகை யாலே 
நின்றனன் வேறாய்த் தன்னின் நிங்கிடா நிலைமை யாலே 
பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமையன் அறிவி னுள்ளே 
என்றுநின் றிடுத லாலே இவன்அவ னென்ன லாமே. 248
சாதனவியல்
ஏழாஞ் சூத்திரம் (249 -252)
அனைத்துஞ்சத் தென்னின் ஒன்றை அறிந்திடா தசத்தா லென்னின், 
முனைத்திடா தசத்துச் சத்தின் முன்னிருள் இரவி முன்போல், 
நினைப்பதிங் கசத்தே யென்னில் சத்தின் முன்நிலாமை யானும், 
தனைக்கொடொன் றுணர்த லானும் தானசத் துணரா தன்றே. 249
சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்தும் அசத்து மன்று 
நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடும் இரண்டின் பாலும் 
ஒத்துட னுதித்து நில்லா துதியாது நின்றி டாது 
வைத்திடுந் தோற்றம் நாற்றம் மலரினின் வருதல் போலும். 250
சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால் அசத்தஞ் ஞானம் 
ஒத்துறா குற்ற மெல்லாம் உற்றிடு முயிரின் கண்ணே 
சத்துள போதே வேறாம் சதசத்தும் அசத்து மெல்லாம் 
வைத்திடும் அநாதி யாக வாரிநீர் லவணம் போலும். 251
அறிவிக்க அறித லானும் அழிவின்றி நிற்ற லானும் 
குறிபெற்ற சித்தும் சத்தும் கூறுவ துயிருக் கீசன் 
நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்பன் அன்றே 
பிறிவிப்பன் மலங்க ளெல்லாம் பின்னுயிர்க் கருளினாலே. 252
எட்டாஞ் சூத்திரம் (253-291 )
மன்னவன்தன் மகன்வேட ரிடத்தே தங்கி 
வளர்ந்(து)அவனை அறியாது மயங்கி நிற்பப் 
பின்னவனும் என்மகன்நீ என்றவரிற் பிரித்துப் 
பெருமையொடும் தானாக்கிப் பேணு மாபோல் 
துன்னியஐம் புலவேடர் சுழலிற் பட்டுத் 
துணைவனையும் அறியாது துயருறும்தொல் லுயிரை 
மன்னும்அருட் குருவாகி வந்(து)அவரின் நீக்கி 
மலம்அகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்.
253
உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம் 
உயரும்விஞ் ஞானகலர் பிரளயா கலர்சகலர் 
நிரையின்மலம் மலங்கன்மம் மலங்கன்ம மாயை 
நிற்கும்முத லிருவர்க்கு நிராதார மாகிக் 
கரையில்அருட் பரன்துவிதா சத்திநிபா தத்தால் 
கழிப்பன்மலம் சகலர்க்குக் கன்ம வொப்பில் 
தரையில்ஆ சான்மூர்த்தி ஆதார மாகித் 
தரித்தொழிப்பன் மலம்சதுர்த்தா சத்திநிபா தத்தால்.
254
பலவிதம்ஆ சான்பாச மோசனந்தான் பண்ணும் 
படிநயனத் தருள்பரிசம் வாசகம்மா னதமும் 
அலகில்சாத் திரம்யோக மௌத்தி ராகி 
அநேகமுள அவற்றினௌத் திரிஇரண்டு திறனாம் 
இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தால் 
இயற்றுவது கிரியைஎழிற் குணட்மண்ட லாதி 
நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதிதான் இன்னும் 
நிர்ப்பீசம் சபீசமென இரண்டாகி நிகழும்.
255
பாலரொடு வாலீசர் விருத்தர்பனி மொழியார் 
பலபோகத் தவர்வியாதிப் பட்டவர்க்குப் பண்ணும் 
சீலமது நிர்ப்பீசம் சமயா சாரம் 
திகழ்சுத்தி சமயிபுத் திரர்க்கு நித்தத்(து) 
ஏலுமதி காரத்தை இயற்றித் தானும் 
எழில்நிரதி காரையென நின்றிரண்டாய் விளங்கும் 
சாலநிகழ் தேகபா தத்தி னோடு 
சத்தியநிர் வாணமெனச் சாற்றுங் காலே.
256
ஓதியுணர்ந் தொழுக்கநெறி இழுக்கா நல்ல 
உத்தமர்க்குச் செய்வதுயர் பீசமிவர் தம்மை 
நீதியினால் நித்தியநை மித்திககா மியத்தின் 
நிறுத்திநிரம் பதிகார நிகழ்த்துவதும் செய்து 
சாதகரா சாரியரும் ஆக்கி வீடு 
தருவிக்கும் உலோகசிவ தருமிணியென் றிரண்டாம் 
ஆதலினான் அதிகாரை யாம்சமயம் விசேடம் 
நிருவாணம் அபிடேகம் இவற்றனங்கு மன்றே.
257
அழிவிலாக் கிரியையினான் ஆதல்சத்தி மத்தான் 
ஆதல்அத்து வாசுத்தி பண்ணிமல மகற்றி 
ஒழிவிலாச் சிவம்பிரகா சித்தற்கு ஞானம் 
உதிப்பித்துற் பவந்துடைப்பன் அரன்ஒருமூ வர்க்கும் 
வழுவிலா வழிஆறாம் மந்திரங்கள் பதங்கள் 
வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள் 
கழிவிலா துரைத்தமுறை யொன்றினொன்று வியாத்தி 
கருதுகலை சத்தியின்கண் சத்திசிவன் கண்ணாம்.
258
மந்திரங்கள் முதல் ஐந்தும் கலைஐந்தின் வியாத்தி 
மருவும்மந் திரமிரண்டு பதங்கள் நாலேழ் 
அந்தநிலை யெழுத்தொன்று புவனம் நூற்றெட்(டு) 
அவனிதத் துவமொன்று நிவிர்த்திஅயன் தெய்வம் 
வந்திடுமந் திரம்இரண்டு பதங்கள் மூவேழ் 
வன்னங்கள் நாலாறு புரம்ஐம்பத் தாறு 
தந்திடும்தத் துவங்கள்இரு பத்து மூன்று 
தரும்பிரதிட் டாகலைமால் அதிதெய்வம் தானாம்.
259
வித்தையின்மந் திரமிரண்டு பதம்நா லைந்து
விரவும்எழுத் தேழுபுரம் இருபத் தேழு 
தத்துவமு மோரேழு தங்குமதி தெய்வம் 
தாவில்உருத் திரனாகும் சாந்தி தன்னில் 
வைத்தனமந் திரமிரண்டு பதங்கள்பதி னொன்று 
வன்னமொரு மூன்றுபுரம் பதினெட் டாகும் 
உத்தமமாம் தத்துவமும் ஒருமூன் றாகும் 
உணரில்அதி தேவதையும் உயரீச னாமே.
260
சாந்தியா தீதகலை தன்னின்மந் திரங்கள் 
தாம்மூன்று பதமொன்(று)அக் கரங்கள்பதி னாறு 
வாய்ந்தபுரம் மூவைந்து தத்துவங்க ளிரண்டு 
மருவும்அதி தேவதையும் மன்னுசதா சிவராம் 
ஏய்ந்தமுறை மந்திரங்கள் பதினொன்று பதங்கள் 
எண்பத்தொன் றக்கரங்கள் ஐம்பத்தொன் றாகும் 
ஆய்ந்தபுரம் இருநூற்றோ டிருபத்து நாலாம் 
அறிதருதத் துவம்முப்பத் தாறுகலை ஐந்தே.
261
மூன்றுதிறத் தணுக்கள்செயும் கன்மங் கட்கு 
முன்னிலையாம் மூவிரண்டாம் அத்து வாவின் 
ஆன்றமுறை அவைஅருத்தி அறுத்துமல முதிர்வித்(து) 
அரும்பருவம் அடைதலுமே ஆசா னாகித் 
தோன்றிநுக ராதவகை முற்செய் கன்மத் 
துகளறுத்தங் கத்துவாத் தொடக்கறவே சோதித்(து) 
ஏன்றஉடற் கன்மம்அந பவத்தினால் அறுத்திங்(கு) 
இனிச்செய்கன் மம்மூல மலம்ஞானத் தால்இடிப்பன்.
262
புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் 
புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம 
அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் 
அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும் 
சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத 
சிரப்பொருளை மிகத்தௌ¤ந்தும் சென்றால் வைசத் 
திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம் 
செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்.
263
இம்மையே ஈரெட்டாண் டெய்திஎழி லாரும் 
ஏந்திழையார் முத்தியென்றும் இருஞ்சுவர்க்க முத்தி 
அம்மையே யென்றமுத்தி ஐந்து கந்தம் 
அறக்கெடுகை யென்றும்அட்ட குணமுத்தி யென்றும் 
மெய்ம்மையே பாடாணம் போல்கைமுத்தி யென்றும் 
விவேகமுத்தி யென்றும்தன் மெய்வடிவாம் சிவத்தைச் 
செம்மையே பெறுகைமுத்தி யென்றும்செப் புவர்கள் 
சிவனடியைச் சேருமுத்தி செப்புவதிங் கியாமே.
264
ஓதுசம யங்கள் பொருளுணரு நூல்கள் 
ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள் 
யாதுசம யம்பொருள்நூல் யாதிங் கென்னில் 
இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி 
நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண 
நின்றதியா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல் 
ஆதலினால் இவையெல்லாம் அருமறைஆ கமத்தே 
அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்.
265
அருமறையா கமமுதனூல் அனைத்தும்உரைக் கையினான் 
அளப்பரிதாம் அப்பொருளை அரனருளால் அணுக்கள் 
தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளிவில் 
தர்க்கமொடுத் தரங்களினாற் சமயம்சா தித்து 
மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம் 
மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே தாங்கம் 
சுருதிசிவா கமம்ஒழியச் சொல்லுவதொன் றில்லை 
சொல்லுவார்த் மக்கறையோ சொல்லொ ணாதே.
266
வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள் 
வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள் 
ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ ரிண்டும் 
ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம் 
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும் 
நிகழ்த்தியது நீள்மறையி னொழிபொருள்வே தாந்தத் 
தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம் பிறநூல் 
திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த மாகும் .
267
சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச் 
செனனமொன்றி லேசீவன் முத்த ராக 
வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி 
மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து 
முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று 
மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப் 
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் 
பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன பிராந்தி.
268
இறைவனா வான்ஞான மெல்லா மெல்லா 
முதன்மைஅனுக் கிரகமெல்லா மியல்புடையான் இயம்பு 
மறைகளா கமங்களினான் அறிவெல்லாந் தோற்றும் 
மரபின்வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கும் 
முறைமையினால் இன்பத்துன் பங்கொடுத்த லாலே 
முதன்மையெலாம் அறிந்துமுயங் கிரண்டு போகத் 
திறமதனால் வினைஅறுக்குஞ் செய்தி யாலே 
சேரும்அனுக் கிரகமெலாம் காணுதும்நாம் சிவற்கே.
269
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்ர மார்க்கம் 
தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும் 
நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம் 
நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் 
சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்பிய 
சாரூப்பிய சாயுச்சிய மென்றுசதுர் விதமாம் 
முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி 
முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபத மென்பர்.
270
தாதமார்க் கம்சாற்றிற் சங்கரன்தன் கோயில் 
தலம்அலகிட் டிலகுதிரு மெழுக்கும் சாத்திப் 
போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி 
புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித்
தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமும் 
செய்துதிரு வேடங்கண் டால்அடியேன் செய்வ(து) 
யாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும் 
இயற்றுவதிச் சரியைசெய்வோர் ஈசனுல கிருப்பர்.
271
புத்திரமார்க் கம்புகலில் புதியவிரைப் போது 
புகையொளிமஞ் சனம்அமுது முதல்கொண் டைந்து 
சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானாம் 
சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த 
பத்தியினால் அருச்சித்துப் பரவிப் போற்றிப் 
பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி 
நித்தலும்இக் கிரியையினை இயற்று வோர்கள் 
நின்மலன்தன் அருகிருப்பர் நினையுங் காலே.
272
சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும் 
சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள் 
அகமார்க்க மறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங் 
கணைந்துபோய் மேலேறி அலர்மதிமண் டலத்தின் 
முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி 
முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள் 
உகமார்க்க அட்டாங்க யோக முற்றும் 
உழத்தல்உழந் தவர்சிவன்தன் உருவத்தைப் பெறுவர்.
273
சன்மாக்கம் சகலகலை புராண வேத 
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து 
பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம் 
பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும் 
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான 
ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம் 
பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப் 
பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் தானே.
274
ஞானநூல் தனையோதல் ஓது வித்தல் 
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா 
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் 
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை 
ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம் 
ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம் 
ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை 
அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம்.
275
கேட்டலுடன் சிந்தித்தல் தௌ¤த்தல் நிட்டை 
கிளத்தலென ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம் 
வீட்டையடைந் திடுவர்நிட்டை மேவி னோர்கள் 
மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்(கு) 
ஈட்டியபுண் ணியநாத ராகி இன்பம் 
இனிதுநுகர்ந் தரனருளால் இந்தப் பார்மேல் 
நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால் 
ஞானநிட்டை அடைந்தவர் நாதன் தாளே.
276
தானம்யா கம்தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள் 
சாந்திவிர தம்கன்ம யோகங்கள் சரித்தோர் 
ஈனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப்பளவின் மீள்வர் 
ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர் 
ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம் 
ஒடுங்கும்போ தரன்முன்நிலா தொழியின்உற்ப வித்து 
ஞானநெறி அடைந்தடைவர் சிவனை அங்கு 
நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற் றாளே.
277
சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் 
திலமளவே செய்திடினும் நிலமலைபோல் நிகழ்ந்து 
பவமாயக் கடலின்அழுந் தாதவகை எடுத்துப் 
பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத் 
தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச் 
சரியைகிரி யாயோகந் தன்னினும்சா ராமே 
நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி 
நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே.
278
ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம் 
நல்லஆ கமஞ்சொல்ல அல்லவா மென்னும் 
ஊனத்தா ரென்கடவர் அஞ்ஞா னத்தால்
உறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தான் 
ஆனத்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போல் 
அஞ்ஞானம் விடப்பந்தம் அறும்முத்தி யாகும் 
ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம் 
இறைவனடி ஞானமே ஞான மென்பர்.
279
சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய 
சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல் 
ஆரியனாம் ஆசாவந் தருளால் தோன்ற 
அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத் 
தூரியனாம் சிவன்தோன்றும் தானுந் தோன்றும் 
தொல்லுலக மெல்லாம்தன் னுள்ளே தோன்றும் 
நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும் 
நின்றநிலை யெல்லாம்முன் நிகழ்ந்து தோன்றும்.
280
மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிபாதம் 
மேவுதலும் ஞானம்விளைந் தோர்குருவின் அருளால் 
புக்கனுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள் 
பூதலத்தில் புகழ்சீவன் முத்த ராகித் 
தக்கபிரி யாப்பிரிய மின்றி ஓட்டில் 
தபனியத்தில் சமபுத்தி பண்ணிச்சங் கரனோ(டு) 
ஒக்கவுறைந் திவர்அவனை அவன்இவரை விடாதே 
உடந்தையாய்ச் சிவன்தோற்ற மொன்றுமே காண்பர்.
281
அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே 
அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து 
குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும் 
கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில் 
பிரியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப் 
பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த் தோன்றி 
நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி 
நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதார னாயே.
282
புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும் 
புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே 
நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்து
ஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி 
எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான் 
எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக் 
கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம் 
கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன்.
283
ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு 
நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை 
சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச் 
செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை 
கோலமிலை புலனில்லை கரண மில்லை 
குணமில்லை குறியில்லை குலமு மில்லை 
பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப் 
பாடலினொ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்.
284
தேசமிடம் காலம்திக் காசனங்க ளின்றிச் 
செய்வதொன்று போல்செய்யாச் செயலதனைச் செய்தங்(கு) 
ஊசல்படு மனமின்றி உலாவல் நிற்றல் 
உறக்கமுணர் வுண்டிபட் டினியிருத்தல் கிடத்தல் 
மாசதனில் தூய்மையினின் வறுமை வாழ்வின் 
வருத்தத்தில் திருத்தத்தில் மைதுனத்தில் சினத்தின் 
ஆசையினின் வெறுப்பின்இவை யல்லாது மெல்லாம் 
அடைந்தாலும் ஞானிகள்தாம் அரனடியை அகலார்.
285
இந்நிலைதான் இல்லையேல் எல்லா மீசன் 
இடத்தினினும் ஈசனெல்லா விடத்தினினும் நின்ற 
அந்நிலையை அறிந்தந்தக் கரணங்கள் அடக்கி 
அறிவதொரு குறிகுருவின் அருளினால் அறிந்து 
மன்னுசிவன் தனையடைந்து நின்றவன்ற னாலே 
மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத் 
துன்னியசாக் கிரமதனில் துரியா தீதம் 
தோன்றமுயல் சிவானுபவம் சுவானுபூ திகமாம்.
286
சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் 
சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள் 
பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின் 
பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ 
ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள்அரி வையரோ(டு) 
அனுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர் 
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும் 
நுழைவர்பிறப் பினின்வினைகள் நுங்கி டாவே.
287
கருவிகழிந் தாற்காணா ரொன்றுமெனிற் காணார் 
காணாதார் கன்னிகைதான் காமரசங் காணாள் 
மருவிஇரு வரும்புணர வந்த இன்பம் 
வாயினாற் பேசரிது மணந்தவர்தாம் உணர்வர் 
உருவினுயிர் வடிவதுவும் உணர்ந்திலைகாண் சிவனை 
உணராதார் உணர்வினால் உணர்வதுகற் பனைகாண் 
அருள்பெறின்அவ் விருவரையும் அறிவிறந்தங் கறிவர் 
அறியாரேற் பிறப்பும்விடா தாணவமும் அறாதே.
288
பன்னிறங்கள் அவைகாட்டும் படிகம்பால் உள்ளம் 
பலபுலன்கள் நிறங்காட்டும் பரிசுபார்த் திட்(டு) 
இந்நிறங்கள் என்னிறம்அன் றென்று தன்றன் 
எழில்நிறங்கண் டருளினால் இந்நிறத்தின் வேறாய்ப் 
பொய்ந்நிறஐம் புலன்நிறங்கள் பொய்யெனமெய் கண்டான் 
பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை 
முன்னிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி 
முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்னீங்கா முறைபோல்.
289
எங்குந்தான் என்னினாம் எய்த வேண்டா 
எங்குமிலன் என்னின்வே றிறையு மல்லன் 
அங்கஞ்சேர் உயிர்போல்வன் என்னின் அங்கத்(து) 
அவயவங்கள் கண்போலக் காணா ஆன்மா 
இங்குநாம் இயம்புந்தத் துவங்களின் வைத்தறிவ(து) 
இறைஞானந் தந்துதா ளீதல்சுட ரிழந்த 
துங்கவிழிச் சோதியும்உட் சோதியும்பெற் றாற்போல் 
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிவன் காணே.
290
பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப் 
படும்பொழுது நீங்கிஅது விடுமபொழுதிற் பரக்கும் 
மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும் 
அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும் 
நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும் 
நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி 
ஆசையொடும் அங்குமிங்கு மாகிஅல மருவோர் 
அரும்பாச மறுக்கும் வகை அருளின்வழி யுரைப்பாம்.
291
ஒன்பதாஞ் சூத்திரம் (292 - 303)
பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும் 
பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே 
நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத 
நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின் 
ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்(று) 
அறிந்தகல அந்நிலையே யாகும் பின்னும் 
ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க 
உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெலா மோட.
292
வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் 
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம் 
நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம் 
நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே 
காதலினால் நான்பிரம மென்னு ஞானம் 
கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண்(டு) 
ஓதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம் 
ஒன்றாகச் சிவன்இயல்பின் உணர்ந்திடுவன் காணே.
293
கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில் 
கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் உயிர்கள் 
மரணங்கொண் டிடஉறங்கி மயங்கிமூர்ச் சிக்க 
வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச் 
சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி 
தவிராது மலமிதுவும் பசுஞான மாகும் 
அரணங்க ளெரித்தவன்தன் அடியைஅறி விறந்தங்(கு) 
அறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே.
294
சிவனைஅவன் திருவடிஞா னத்தாற் சேரச் 
செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லாம் 
அவனையணு காவென்றும் ஆத லானும் 
அவனடிஅவ் வொளிஞான மாத லானும் 
இவனுமியான் துவக்குதிர மிறைச்சி மேதை 
என்புமச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ 
அவமகல எனையறியேன் எனும்ஐய மகல 
அடிகாட்டி ஆன்மாவைக் காட்ட லானும்.
295
கண்டிடுங்கண் தனைக்காணா கரணம் காணா 
கரணங்கள் தமைக்கான உயிருங் காணா 
உண்டியமர் உயிர்தானுந் தன்னைக் காணா(து) 
உயிர்க்குயிராம் ஒருவனையுங் காணா தாகும் 
கண்டசிவன் தனைக்காட்டி உயிருங் காட்டிக் 
கண்ணாகிக் கரணங்கள் காணமல் நிற்பன் 
கொண்டானை உளத்திற்கண் டடிகூடிற் பாசம் 
கூடாது கூடிடினும் குறித்தடியின் நிறுத்தே.
296
குறித்தடியின் நின்(று)அட்ட குணமெட்டுச் சித்தி 
கோகனதன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம் 
வெறுத்துநெறி அறுவகையும் மேலொடுகீ ழடங்க 
வெறும்பொயென நினைந்திருக்க மேலொடுகீ ழில்லான் 
நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வர்க்கு 
நினைப்பரியான் ஒன்றுமிலான் நேர்படவந் துள்ளே 
பொறுப்பரிய பேரன்பை அருளியதன் வழியே 
புகுந்திடுவன் எங்குமிலாப் போகத்தைப் புரிந்தே.
297
கண்டஇவை யல்லேன்நான் என்றகன்று காணாக் 
கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த 
தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே 
சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி 
விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால் 
விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும் 
பண்டைமறை களும்அதுநா னானே னென்று 
பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே.
298
அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும் 
அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்(டு) 
அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி 
ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்தர்ச் சித்(து) 
அஞ்செழுத்தாற் குண்டலியின் அனலை யோம்பி 
அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் வழிநின்(று) 
அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன் 
அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே.
299
நாட்டுமித யந்தானும் நாபியினில் அடியாய் 
ஞாலமுதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய் 
மூட்டுமோ கினிசுத்த வித்தைமல ரெட்டாய் 
முழுவிதழ்எட் னக்கரங்கள் முறைமையினின் உடைத்தாய்க் 
காட்டுகம லாசனமேல் ஈசர்சதா சிவமும் 
கலாமூர்த்த மாம்இவற்றின் கண்ணாகுஞ் சத்தி 
வீட்டைஅருள் சிவன்மூர்த்தி மானாகிச் சத்தி 
மேலாகி நிற்பன்இந்த விளைவறிந்து போற்றே.
300
அந்தரியா கந்தன்னை மத்திசா தனமாய் 
அறைந்திடுவர் அதுதானும் ஆன்மசுத்தி யாகும் 
கந்தமலர் புகையொளிமஞ் சனம்அமுது முதலாக் 
கண்டனஎ லாம்மனத்தாற் கருதிக் கொண்டு 
சிந்தையினிற் பூசித்துச் சிவனைஞா னத்தால் 
சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க 
வந்திடும்அவ் வொளிபோல மருவிஅர னுளத்தே 
வரவரவந் திடுவன்பின் மலமான தறுமே.
301
புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டில் 
பூமரத்தின் கீழுதிர்ந்த போதுகளுங் கொண்டு 
சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தா லங்குச் 
சிந்திக்கும் படிஇங்குச் சிந்தித்துப் போற்றி 
அறமபாவங் கட்குநாம் என்கடவே மென்றும் 
ஆண்டவனைக் கண்டக்கால் அகம்புறமென் னாதே 
திறம்பாதே பணிசெய்து நிற்கை யன்றோ 
சீரடியார் தம்முடைய செய்தி தானே.
302
இந்தனத்தின் எரிபாலின் நெய்பழத்தின் இரதம் 
எள்ளின்க ணெண்ணெயும்போல் எங்குமுளன் இறைவன் 
வந்தனைசெய் தெய்விடத்தும் வழிபடவே அருளும் 
மலமறுப்போ ரான்மாவின் மலரடிஞா னத்தாற் 
சிந்தனைசெய் தர்ச்சிக்க சிவன்உளத்தே தோன்றித் 
தீஇரும்பைச் செய்வதுபோற் சீவன் தன்னைப் 
பந்தனையை அறுத்துத்தா னாக்கித்தன் னுருவப் 
பரப்பெல்லாங் கொடுபோந்து பதிப்பனிவன் பாலே.
303
பயனியல்
பத்தாஞ் சூத்திரம் (304 - 309)
இவனுலகில் இதமகிதம் செய்த வெல்லாம் 
இதமகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும் 
அவனிவனாய் நின்றமுறை ஏக னாகி 
அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம் 
சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றும் 
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் 
பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற் 
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே.
304
யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதியான் என்னும் 
இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத் 
தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே 
தனையளித்து முன்நிற்கும் வினையொளித்திட் டோடும் 
நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி 
நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம் 
ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பி னல்லால் 
ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே.
305
இந்திரிய மெனைப்பற்றி நின்றேஎன் வசத்தின் 
இசையாதே தன்வசத்தே எனையீர்ப்ப திவற்றைத் 
தந்தவன்ற னாணைவழி நின்றிடலால் என்றும் 
தானறிந்திட் டிவற்றினொடுந் தனையுடையான் தாள்கள் 
வந்தனைசெய் திவற்றின்வலி அருளினால் வாட்டி 
வாட்டமின்றி இருந்திடவும் வருங்செயல்க ளுண்டேல் 
முந்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள் 
மூளாஅங் காளாகி மீளா னன்றே.
306
சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத் 
தானாக்கித் தலைவன்அவர் தாஞ்செய்வினை தன்னால் 
நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய் 
நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன் 
உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே 
உள்நின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும் 
நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும் 
நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் தானே.
307
நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும் 
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும் 
நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும் 
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின் 
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே 
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானங் 
கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் 
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பார்.
308
அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும் 
ஔடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா 
எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக்(கு) 
இருவினைகள் சென்றணையா முற்செய்வினை இங்குத் 
தங்கிப்போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த 
சக்கரமும கந்தித்துச் சுழலு மாபோல் 
மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா 
மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே.
309
பதினொராஞ் சூத்திரம் (310 - 321)
காயமொழிந் தாற்சுத்த னாகி ஆன்மாக் 
காட்டக்கண் டிடுந்தன்மை யுடைய கண்ணுக்(கு) 
ஏயும்உயிர் காட்டிக்கண் டிடுமா போல 
ஈசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவன் இத்தை 
ஆயுமறி வுடையனாய் அன்பு செய்ய 
அந்நிலைமை இந்நிலையின் அடைந்தமுறை யாலே 
மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீ ழிருப்பன் 
மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே.
310
பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே 
பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க 
வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம் 
வாச்சியவா சகஞானம் வைந்தவத்தின் கலக்கம் 
தருஞானம் போகஞா திருஞான ஞேயம் 
தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகும் 
திருஞானம் இவையெலாங் கடந்தசிவ ஞானம் 
ஆதலாற் சீவன்முத்தர் சிவமேகண் டிருப்பர்.
311
அநாதிஉடல் ஒன்றினைவிட் டொன்றுபற்றிக் கன்மால் 
ஆயழிந்து வருதலால் அந்த மில்லை 
பினாதியருள் பெற்றவர்கள் நித்தவுரு வத்தைப் 
பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே இதுவும் 
இனாதுநிலை இதுதானுங் காய முண்டேல் 
இருங்கன்ம மாயைமல மெல்லா முண்டாம் 
மனாதிதரு முடலாதி காரியத்தால் அநாதி 
மலம்அறுக்கும் மருந்தற்றால் உடன்மாயுங் காணே.
312
தெரிவரிய மெய்ஞ்ஞானம் சேர்ந்த வாறே 
சிவம்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த னாகும் 
உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமும் 
ஔ¢ளெரியின் ஔ¤முன்னர் இருளுந் தேற்றின் 
வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி 
மாயாதே தன்சத்தி மாய்ந்து காயம் 
திரியுமள வும்உளதாய்ப் பின்பு காயஞ் 
சேராத வகைதானுந் தேயு மன்றே.
313
ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும் 
அடையின்அந்த ஆன்மாவும் அழியுமெனிற் செம்பிற் 
காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக் 
கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே 
தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால் 
தான்சுத்த னாயிருக்கை முத்திஅரன் தாளைப் 
பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன் 
புகுதஇருள் போம்அடியிற் பொருந்தமலம் போமே.
314
நெல்லினுக்குத் தவிடுமிகள் அநாதி யாயே 
நெல்லைவிட்டு நீங்கும்வகை நின்றநிலை நிகழ்த்தீர் 
சொல்லியிடில் துகளற்ற அரிசியின்பா லில்லை 
தொக்கிருந்து மற்றொருநெல் தோன்றி டாவாம் 
மெல்லஇவை விடுமறவே இவைபோல அணுவை 
மேவுமல முடல்கன்மம் அநாதிவிட்டே நீங்கும் 
நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை 
நணுகிநிற்கு மாதலால் நாசமுமின் றாமே.
315
எவ்விடத்தும் இறையடியை இன்றியமைந் தொன்றை 
அறிந்தியற்றி யிடாஉயிர்க ளிறைவன் றானும் 
செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து 
சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன் 
இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா 
இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும் 
அவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லால்நாம் 
அரன்டியை அகன்றுநிற்ப தெங்கே யாமே.
316
எங்குந்தான் நிறைந்துசிவன் நின்றா னாகில் 
எல்லாருங் காணவே வேண்டுந்தா னென்னில் 
இங்குந்தான் அந்தகருக் கிரவிஇரு ளாகும் 
ஈசனருட் கண்ணில்லார்க் கொளியாயே யிருளாம் 
பங்கந்தா னெழும்பதுமம் பக்குவத்தை யடையப் 
பதிரிஅலர்த் திடுவதுபோல் பருவஞ்சே ருயிர்க்குத் 
துங்கஅரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே 
சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே.
317
சென்றணையும் நிழல்போலச் சிவன்நிற்ப னென்னில் 
சென்றணையும் அவன்முதலி சிவத்தைஅணைந் தொன்றாய் 
நின்றதுயிர் கெட்டென்னில் கெட்டதணை வின்றாம் 
நின்றதேற் கேடில்லை அணைந்துகெட்ட தென்னில் 
பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ 
பொன்றுகையே முத்தியெனில் புருடன்நித்த னன்றாம் 
ஒன்றியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னின் 
ஒருபொருளாம் அதிபதியோ டுயிர்பொருளொன் றன்றே.
318
செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச் 
செம்பொனுடன் சேரும்மலஞ் சிதைந்தாற் சீவன் 
நம்பனுடன் கூடுமெனிற் பொன்போ லல்லன் 
நற்குளிகை போலஅரன் நணுகுமலம் போக்கி 
அம்பொனடிக் கீழ்வைப்பன் அருங்களங்க மறுக்கும் 
அக்குளிகை தானும்பொன் னாகா தாகும் 
உம்பர்பிரா னுற்பத்தி யாதிகளுக் குரியன் 
உயிர்தானுஞ் சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே.
319
சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில் 
சிவனருட்சித் திவன்அருளைச் சேருஞ்சித் தவன்றான் 
பவங்கெடுபுத் திமுத்தி பண்ணுஞ்சித் திவற்றிற் 
படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து மிவன்றான் 
அவன்றானே அறியுஞ்சித் தாதலினா லிரண்டும் 
அணைந்தாலு மொன்றாகா தநந்நியமாக யிருக்கும் 
இவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி 
இதுஅசித்தென் றிடில்அவனுக் கிவனும்அசித் தாமே.
320
இரும்பைக்காந் தம்வலித்தாற் போல்இயைந்தங் குயிரை 
எரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத்தா னாக்கி 
அரும்பித்திந் தனத்தைஅன லழிப்பதுபோல் மலத்தை 
அறுத்தமலன் அப்பணைந்த உப்பேபோ லணைந்து 
விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோல் அடக்கி 
மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னாகிக் 
கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக் 
கட்டியைஒத் திருப்பன்அந்த முத்தியினிற் கலந்தே.
321
பன்னிரண்டாஞ் சூத்திரம் (322 -328)
செங்கமலத் தாளிணைகள் சேர லொட்டாத் 
திரிமலங்கள் அறுத்தீசன் நேசரொடுஞ் செறிந்திட்(டு) 
அங்கவர்தந் திருவேடம் ஆலயங்க ளெல்லாம் 
அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப் பாடி 
எங்குமியாம் ஒருவர்க்கு மௌ¤யோ மல்லோம் 
யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித் 
திங்கள்முடி யார்அடியார் அடியே மென்று 
திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை யோரே.
322
ஈசனுக்கன் பில்லார் அடியவர்க்கன் பில்லார் 
எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும்அன் பில்லார் 
பேசுவதென் அறிவிலாப் பிணங்களைநாம் இணங்கிற் 
பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர் விடுநீ 
ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்(டு) 
அவர்கருமம் உன்கரும மாகச் செய்து 
கூசிமொழிந் தருள்ஞானக் குறியில் நின்று 
கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே.
323
அறிவரியான் தனையறிய யாக்கை யாக்கி 
அங்கங்கே உயிர்க்குயிராய் அறிவுகொடுத் தருளால் 
செறிதலினால் திருவேடம் சிவனுருவே யாகும் 
சிவோகம்பா விக்கும்அத்தாற் சிவனு மாவர் 
குறியதனால் இதயத்தே அரனைக் கூடும் 
கொள்கையினால் அரனாவர் குறியொடுதாம் அழியும் 
நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுவ ரென்றால் 
நேசத்தால் தொழுதிடுநீ பாசத்தார் விடவே.
324
திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச் 
சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே 
உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும் 
உளனெங்கும் இலன்இங்கும் உளனென் பார்க்கும் 
விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல் 
மந்திரத்தின் வந்துதித்து மிகுஞ்சுரபிக் கெங்கும் 
உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி 
ஒழுகுவது போல்வௌ¤ப்பட் டருளுவன்அன் பர்க்கே.
325
ஞானயோ கக்கிரியா சரியை நாலும் 
நாதன்தன் பணிஞானி நாலினிக்கும் உரியன் 
ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன் 
யோகிகிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி 
ஆனஇரண் டினுக்குரியன் சரியையினில் நின்றோன் 
அச்சரியைக் கேஉரியன் ஆதலினால் யார்க்கும் 
ஈனமிலா ஞானகுரு வேகுருவும் இவனே 
ஈசனிவன் தான்என்றும் இறைஞ்சி ஏத்தே.
326
மந்திரத்தான் மருந்துகளால் வாய்த்தவியோ கத்தால் 
மணிஇரத குளிகையினால் மற்றும் மற்றும் 
தந்திரத்தே சொன்னமுறை செய்ய வேத 
சகலகலை ஞானங்கள் திரிகால ஞானம் 
அந்தமிலா அணிமாதி ஞானங்க ளெல்லாம் 
அடைந்திடும்ஆ சான்அருளால் அடிசேர் ஞானம் 
வந்திடுமற் றொன்றாலும் வாரா தாகும் 
மற்றவையும் அவனருளால் மருவு மன்றே.
327
பரம்பிரமம் இவனென்றும் பரசிவன்தா னென்றும் 
பரஞானம் இவனென்றும் பராபரன்தா னென்றும் 
அரன்தருஞ்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும் 
அருட்குருவை வழிபடவே அவனிவன்தா னாயே 
இரங்கியவா ரணம்யாமை மீன்அண்டம் சினையை 
இயல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் பார்த்தும் 
பரிந்திவைதா மாக்குமா போல்சிவமே யாக்கும் 
பரிசித்தும் சிந்தித்தும் பார்த்தும் தானே.
328
சிவஞானசித்தியார் சுபக்கம் முற்றிற்று

சுபக்கம்

ஐந்தாஞ் சூத்திரம் (231 -239)
பொறிபுலன் கரண மெல்லாம் புருடனால் அறிந்தான் மாவை அறிதரா அவையே ஆன்மாக்க ளனைத்து மெங்கும் செறிதரும் சிவன்ற னாலே அறிந்திடும் சிவனைக் காணா அறிதரும் சிவனே யெல்லாம் அறிந்தறி வித்து நிற்பன். 231
இறைவனே அறிவிப் பானேல் ஈண்டறி வெவர்க்கும் ஒக்கும் குறைவதி கங்கள் தத்தம் கன்மமேற் கோமான் வேண்டா முறைதரு செயற்குப் பாரும் முளரிகட் கிரவி யும்போல் அறைதரும் தத்தங் கன்மத் தளவினுக் களிப்பன் ஆதி. 232
அறிந்திடும் ஆன்மா வொன்றை ஒன்றினால் அறித லானும் அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறித லானும் அறிந்திடுந் தன்னை யுந்தான் அறியாமை யானுந் தானே அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவ னன்றே. 233
கருவியால் பொருளால் காட்டால் காலத்தால் கருமந் தன்னால் உருவினால் அளவால் நூலால் ஒருவரா லுணர்த்த லானும் அருவனாய் உண்மை தன்னில் அறியாது நிற்ற லானும் ஒருவனே எல்லாத் தானும் உணர்த்துவன் அருளி னாலே. 234
கருவியும் பொருளும் காட்டும் காலமும் கன்மந் தானும் உருவமும் அளவும் நூலும் ஒருவரு முணர்த்த லின்றி அருவனா யுலக மெல்லாம் அறிந்தவை யாக்கி வேறாய் ஒருவனே உயிர்கட் கெல்லாம் உயிருமாய் உணர்த்தி நிற்பன். 235
இறைவன்தன் சந்நி திக்கண் உலகின்றன் சேட்டை யென்னும் மறைகளும் மறந்தாய் மாயை மருவிடான் சிவன வன்கண் உறைதரா தசேத னத்தால் உருவுடை உயிர்கட் கெல்லாம் நிறைபரன் சந்நி திக்கண் நீடுணர் வுதிக்கு மன்றே. 236
உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி ஐந்து நலமிகு தொழில்க ளோடும் நாடகம் நடிப்பன் நாதன். 237
தெரிந்துகொண் டொரோவொன் றாகச் சென்றைந்து புலனும் பற்றிப், புரிந்திடும் உணர்வி னோடும் போகமுங் கொடுத்தி யோனி, திரிந்திடு மதுவுஞ் செய்து செய்திகண் டுயிர்கட் கெல்லாம், விரிந்திடும் அறிவுங் காட்டி வீட்டையும் அளிப்பன் மேலோன். 238
அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித் தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சத்தி யில்லை மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்(கு) இருளினை ஔ¤யா லோட்டும் இரவியைப் போல ஈசன். 239

ஆறாஞ் சூத்திரம் (240 -248)
அறிவுறும் பொருளோ ஈச னறிவுறா தவனோ வென்னின் அறிபொருள் அசித்த சத்தாம் அறியாத தின்றாம் எங்கும் செறிசிவம் இரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும் நெறிதருஞ சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாயே. 240
ஆவதாய் அழிவ தாகி வருதலால் அறிவு தானும் தாவலால் உலகு போகம் தனுகர ணாதி யாகி மேவலால் மலங்க ளாகி விரவலால் வேறு மாகி ஓவலால் அசத்தாம் சுட்டி உணர்பொரு ளான வெல்லாம். 241
மண்தனில் வாழ்வும் வானத் தரசயன் மாலார் வாழ்வும் எண்தரு பூத பேத யோனிகள் யாவு மெல்லாம் கண்டஇந் திரமா சாலம் கனாக்கழு திரதங் காட்டி உண்டுபோல் இன்றாம் பண்பின் உலகினை அசத்த மென்பர். 242
உணராத பொருள்சத் தென்னின் ஒருபய னில்லைத் தானும் புணராது நாமும் சென்று பொருந்துவ தின்றாம் என்றும் தணவாத கரும மொன்றும் தருவது மில்லை வானத்(து) இணரார்பூந் தொடையு மியாமைக் கெழுமயிர்க் கயிறும் போலும். 243
தத்துவம் சத்(து) அசத்துச் சதசத்து மன்றென் றாலென் உய்த்துணர்ந் துண்டோ இன்றோ என்றவர்க் குண்டென் றோதில் வைத்திடும் சத்தே யாகும் மனத்தொடு வாக்கி றந்த சித்துரு அதுஅ சித்தாம் மன்த்தினால் தேர்வ தெல்லாம். 244
அறிபொருள் அசித்தாய் வேறாம் அறிவுறாப் பொருள்சத்தென்னின் அறிபவன் அறியா னாகில் அதுஇன்றுபயனு மில்லை அறிபவன் அருளி னாலே அந்நிய மாகக் காண்பன்அறிபொரு ளறிவாய் வேறாய் அறிவரு ளுருவாய் நிற்கும். 245
பாவிப்ப தென்னிற் பாவம் பாவகங் கடத்திற் பாவம் பாவிக்கும் அதுநா னென்னில் பாவகம் பாவங் கெட்டுப் பாவிப்ப தென்னிற் பாவம் பாவனை இறந்து நின்று பாவிக்கப் படுவ தாகும் பரம்பரன் அருளி னாலே. 246
அன்னிய மிலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும் உன்னிய வெல்லாம் உள்நின் றுணர்த்துவன் ஆத லானும் என்னதி யானென் றோதும் இருஞ்செருக் கறுத்த லானும் தன்னறி வதனாற் காணும் தகைமையன் அல்லன் ஈசன். 247
ஒன்றெனு மதனால் ஒன்றென் றுரைப்பதுண் டாகை யாலே நின்றனன் வேறாய்த் தன்னின் நிங்கிடா நிலைமை யாலே பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமையன் அறிவி னுள்ளே என்றுநின் றிடுத லாலே இவன்அவ னென்ன லாமே. 248

சாதனவியல்
ஏழாஞ் சூத்திரம் (249 -252)
அனைத்துஞ்சத் தென்னின் ஒன்றை அறிந்திடா தசத்தா லென்னின், முனைத்திடா தசத்துச் சத்தின் முன்னிருள் இரவி முன்போல், நினைப்பதிங் கசத்தே யென்னில் சத்தின் முன்நிலாமை யானும், தனைக்கொடொன் றுணர்த லானும் தானசத் துணரா தன்றே. 249
சத்தசத் தறிவ தான்மாத் தான்சத்தும் அசத்து மன்று நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடும் இரண்டின் பாலும் ஒத்துட னுதித்து நில்லா துதியாது நின்றி டாது வைத்திடுந் தோற்றம் நாற்றம் மலரினின் வருதல் போலும். 250
சுத்தமெய்ஞ் ஞான மேனிச் சோதிபால் அசத்தஞ் ஞானம் ஒத்துறா குற்ற மெல்லாம் உற்றிடு முயிரின் கண்ணே சத்துள போதே வேறாம் சதசத்தும் அசத்து மெல்லாம் வைத்திடும் அநாதி யாக வாரிநீர் லவணம் போலும். 251
அறிவிக்க அறித லானும் அழிவின்றி நிற்ற லானும் குறிபெற்ற சித்தும் சத்தும் கூறுவ துயிருக் கீசன் நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்பன் அன்றே பிறிவிப்பன் மலங்க ளெல்லாம் பின்னுயிர்க் கருளினாலே. 252

எட்டாஞ் சூத்திரம் (253-291 )
மன்னவன்தன் மகன்வேட ரிடத்தே தங்கி வளர்ந்(து)அவனை அறியாது மயங்கி நிற்பப் பின்னவனும் என்மகன்நீ என்றவரிற் பிரித்துப் பெருமையொடும் தானாக்கிப் பேணு மாபோல் துன்னியஐம் புலவேடர் சுழலிற் பட்டுத் துணைவனையும் அறியாது துயருறும்தொல் லுயிரை மன்னும்அருட் குருவாகி வந்(து)அவரின் நீக்கி மலம்அகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்.253
உரைதரும்இப் பசுவர்க்கம் உணரின் மூன்றாம் உயரும்விஞ் ஞானகலர் பிரளயா கலர்சகலர் நிரையின்மலம் மலங்கன்மம் மலங்கன்ம மாயை நிற்கும்முத லிருவர்க்கு நிராதார மாகிக் கரையில்அருட் பரன்துவிதா சத்திநிபா தத்தால் கழிப்பன்மலம் சகலர்க்குக் கன்ம வொப்பில் தரையில்ஆ சான்மூர்த்தி ஆதார மாகித் தரித்தொழிப்பன் மலம்சதுர்த்தா சத்திநிபா தத்தால்.254
பலவிதம்ஆ சான்பாச மோசனந்தான் பண்ணும் படிநயனத் தருள்பரிசம் வாசகம்மா னதமும் அலகில்சாத் திரம்யோக மௌத்தி ராகி அநேகமுள அவற்றினௌத் திரிஇரண்டு திறனாம் இலகுஞா னங்கிரியை யெனஞான மனத்தால் இயற்றுவது கிரியைஎழிற் குணட்மண்ட லாதி நிலவுவித்துச் செய்தல்கிரி யாவதிதான் இன்னும் நிர்ப்பீசம் சபீசமென இரண்டாகி நிகழும்.255
பாலரொடு வாலீசர் விருத்தர்பனி மொழியார் பலபோகத் தவர்வியாதிப் பட்டவர்க்குப் பண்ணும் சீலமது நிர்ப்பீசம் சமயா சாரம் திகழ்சுத்தி சமயிபுத் திரர்க்கு நித்தத்(து) ஏலுமதி காரத்தை இயற்றித் தானும் எழில்நிரதி காரையென நின்றிரண்டாய் விளங்கும் சாலநிகழ் தேகபா தத்தி னோடு சத்தியநிர் வாணமெனச் சாற்றுங் காலே.256
ஓதியுணர்ந் தொழுக்கநெறி இழுக்கா நல்ல உத்தமர்க்குச் செய்வதுயர் பீசமிவர் தம்மை நீதியினால் நித்தியநை மித்திககா மியத்தின் நிறுத்திநிரம் பதிகார நிகழ்த்துவதும் செய்து சாதகரா சாரியரும் ஆக்கி வீடு தருவிக்கும் உலோகசிவ தருமிணியென் றிரண்டாம் ஆதலினான் அதிகாரை யாம்சமயம் விசேடம் நிருவாணம் அபிடேகம் இவற்றனங்கு மன்றே.257
அழிவிலாக் கிரியையினான் ஆதல்சத்தி மத்தான் ஆதல்அத்து வாசுத்தி பண்ணிமல மகற்றி ஒழிவிலாச் சிவம்பிரகா சித்தற்கு ஞானம் உதிப்பித்துற் பவந்துடைப்பன் அரன்ஒருமூ வர்க்கும் வழுவிலா வழிஆறாம் மந்திரங்கள் பதங்கள் வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள் கழிவிலா துரைத்தமுறை யொன்றினொன்று வியாத்தி கருதுகலை சத்தியின்கண் சத்திசிவன் கண்ணாம்.258
மந்திரங்கள் முதல் ஐந்தும் கலைஐந்தின் வியாத்தி மருவும்மந் திரமிரண்டு பதங்கள் நாலேழ் அந்தநிலை யெழுத்தொன்று புவனம் நூற்றெட்(டு) அவனிதத் துவமொன்று நிவிர்த்திஅயன் தெய்வம் வந்திடுமந் திரம்இரண்டு பதங்கள் மூவேழ் வன்னங்கள் நாலாறு புரம்ஐம்பத் தாறு தந்திடும்தத் துவங்கள்இரு பத்து மூன்று தரும்பிரதிட் டாகலைமால் அதிதெய்வம் தானாம்.259
வித்தையின்மந் திரமிரண்டு பதம்நா லைந்துவிரவும்எழுத் தேழுபுரம் இருபத் தேழு தத்துவமு மோரேழு தங்குமதி தெய்வம் தாவில்உருத் திரனாகும் சாந்தி தன்னில் வைத்தனமந் திரமிரண்டு பதங்கள்பதி னொன்று வன்னமொரு மூன்றுபுரம் பதினெட் டாகும் உத்தமமாம் தத்துவமும் ஒருமூன் றாகும் உணரில்அதி தேவதையும் உயரீச னாமே.260
சாந்தியா தீதகலை தன்னின்மந் திரங்கள் தாம்மூன்று பதமொன்(று)அக் கரங்கள்பதி னாறு வாய்ந்தபுரம் மூவைந்து தத்துவங்க ளிரண்டு மருவும்அதி தேவதையும் மன்னுசதா சிவராம் ஏய்ந்தமுறை மந்திரங்கள் பதினொன்று பதங்கள் எண்பத்தொன் றக்கரங்கள் ஐம்பத்தொன் றாகும் ஆய்ந்தபுரம் இருநூற்றோ டிருபத்து நாலாம் அறிதருதத் துவம்முப்பத் தாறுகலை ஐந்தே.261
மூன்றுதிறத் தணுக்கள்செயும் கன்மங் கட்கு முன்னிலையாம் மூவிரண்டாம் அத்து வாவின் ஆன்றமுறை அவைஅருத்தி அறுத்துமல முதிர்வித்(து) அரும்பருவம் அடைதலுமே ஆசா னாகித் தோன்றிநுக ராதவகை முற்செய் கன்மத் துகளறுத்தங் கத்துவாத் தொடக்கறவே சோதித்(து) ஏன்றஉடற் கன்மம்அந பவத்தினால் அறுத்திங்(கு) இனிச்செய்கன் மம்மூல மலம்ஞானத் தால்இடிப்பன்.262
புறச்சமய நெறிநின்றும் அகச்சமயம் புக்கும் புகன்மிருதி வழிஉழன்றும் புகலும்ஆச் சிரம அறத்துறைகள் அவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும் அருங்கலைகள் பலதெரிந்தும் ஆரணங்கள் படித்தும் சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும் வேத சிரப்பொருளை மிகத்தௌ¤ந்தும் சென்றால் வைசத் திறத்தடைவர் இதிற்சரியை கிரியா யோகம் செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர்.263
இம்மையே ஈரெட்டாண் டெய்திஎழி லாரும் ஏந்திழையார் முத்தியென்றும் இருஞ்சுவர்க்க முத்தி அம்மையே யென்றமுத்தி ஐந்து கந்தம் அறக்கெடுகை யென்றும்அட்ட குணமுத்தி யென்றும் மெய்ம்மையே பாடாணம் போல்கைமுத்தி யென்றும் விவேகமுத்தி யென்றும்தன் மெய்வடிவாம் சிவத்தைச் செம்மையே பெறுகைமுத்தி யென்றும்செப் புவர்கள் சிவனடியைச் சேருமுத்தி செப்புவதிங் கியாமே.264
ஓதுசம யங்கள் பொருளுணரு நூல்கள் ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள் யாதுசம யம்பொருள்நூல் யாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்ல தெனும்பிணக்க தின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நின்றதியா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல் ஆதலினால் இவையெல்லாம் அருமறைஆ கமத்தே அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீழ் அடங்கும்.265
அருமறையா கமமுதனூல் அனைத்தும்உரைக் கையினான் அளப்பரிதாம் அப்பொருளை அரனருளால் அணுக்கள் தருவர்கள்பின் தனித்தனியே தாமறிந்த அளிவில் தர்க்கமொடுத் தரங்களினாற் சமயம்சா தித்து மிருதிபுரா ணம்கலைகள் மற்று மெல்லாம் மெய்ந்நூலின் வழிபுடையாம் அங்கம்வே தாங்கம் சுருதிசிவா கமம்ஒழியச் சொல்லுவதொன் றில்லை சொல்லுவார்த் மக்கறையோ சொல்லொ ணாதே.266
வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அநாதிஅம லன்தருநூ ரிண்டும் ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம் நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும் நிகழ்த்தியது நீள்மறையி னொழிபொருள்வே தாந்தத் தீதில்பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம் பிறநூல் திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த மாகும் .267
சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச் செனனமொன்றி லேசீவன் முத்த ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை அறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன பிராந்தி.268
இறைவனா வான்ஞான மெல்லா மெல்லா முதன்மைஅனுக் கிரகமெல்லா மியல்புடையான் இயம்பு மறைகளா கமங்களினான் அறிவெல்லாந் தோற்றும் மரபின்வழி வருவோர்க்கும் வாரா தோர்க்கும் முறைமையினால் இன்பத்துன் பங்கொடுத்த லாலே முதன்மையெலாம் அறிந்துமுயங் கிரண்டு போகத் திறமதனால் வினைஅறுக்குஞ் செய்தி யாலே சேரும்அனுக் கிரகமெலாம் காணுதும்நாம் சிவற்கே.269
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்ர மார்க்கம் தாதமார்க்கம் மென்றுஞ்சங் கரனை யடையும் நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோகம் நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர் சன்மார்க்க முத்திகள்சா லோக்கியசா மீப்பிய சாரூப்பிய சாயுச்சிய மென்றுசதுர் விதமாம் முன்மார்க்க ஞானத்தால் எய்து முத்தி முடிவென்பர் மூன்றினுக்கும் முத்திபத மென்பர்.270
தாதமார்க் கம்சாற்றிற் சங்கரன்தன் கோயில் தலம்அலகிட் டிலகுதிரு மெழுக்கும் சாத்திப் போதுகளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி புனிதற்குப் பலசமைத்துப் புகழ்ந்து பாடித்தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமும் செய்துதிரு வேடங்கண் டால்அடியேன் செய்வ(து) யாதுபணி யீரென்று பணிந்தவர்தம் பணியும் இயற்றுவதிச் சரியைசெய்வோர் ஈசனுல கிருப்பர்.271
புத்திரமார்க் கம்புகலில் புதியவிரைப் போது புகையொளிமஞ் சனம்அமுது முதல்கொண் டைந்து சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானாம் சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த பத்தியினால் அருச்சித்துப் பரவிப் போற்றிப் பரிவினொடும் எரியில்வரு காரியமும் பண்ணி நித்தலும்இக் கிரியையினை இயற்று வோர்கள் நின்மலன்தன் அருகிருப்பர் நினையுங் காலே.272
சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்துவளி இரண்டும் சலிப்பற்று முச்சதுர முதலாதா ரங்கள் அகமார்க்க மறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங் கணைந்துபோய் மேலேறி அலர்மதிமண் டலத்தின் முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள் உகமார்க்க அட்டாங்க யோக முற்றும் உழத்தல்உழந் தவர்சிவன்தன் உருவத்தைப் பெறுவர்.273
சன்மாக்கம் சகலகலை புராண வேத சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம் பதிபசுபா சம்தெரித்துப் பரசிவனைக் காட்டும் நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான ஞேயமொடு ஞாதிருவு நாடா வண்ணம் பின்மார்க்கச் சிவனுடனாம் பெற்றி ஞானப் பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் தானே.274
ஞானநூல் தனையோதல் ஓது வித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள் தியானம் ஒன்றுக்கொன் றுயருமிவை ஊட்டுவது போகம் ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோ ரெல்லாம்.275
கேட்டலுடன் சிந்தித்தல் தௌ¤த்தல் நிட்டை கிளத்தலென ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம் வீட்டையடைந் திடுவர்நிட்டை மேவி னோர்கள் மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்(கு) ஈட்டியபுண் ணியநாத ராகி இன்பம் இனிதுநுகர்ந் தரனருளால் இந்தப் பார்மேல் நாட்டியநற் குலத்தினில்வந் தவதரித்துக் குருவால் ஞானநிட்டை அடைந்தவர் நாதன் தாளே.276
தானம்யா கம்தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள் சாந்திவிர தம்கன்ம யோகங்கள் சரித்தோர் ஈனமிலாச் சுவர்க்கம்பெற் றிமைப்பளவின் மீள்வர் ஈசனியோ கக்கிரியா சரியையினில் நின்றோர் ஊனமிலா முத்திபதம் பெற்றுலக மெல்லாம் ஒடுங்கும்போ தரன்முன்நிலா தொழியின்உற்ப வித்து ஞானநெறி அடைந்தடைவர் சிவனை அங்கு நாதனே முன்னிற்கின் நணுகுவர்நற் றாளே.277
சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் திலமளவே செய்திடினும் நிலமலைபோல் நிகழ்ந்து பவமாயக் கடலின்அழுந் தாதவகை எடுத்துப் பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை அறுக்கத் தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச் சரியைகிரி யாயோகந் தன்னினும்சா ராமே நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே.278
ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராணம் நல்லஆ கமஞ்சொல்ல அல்லவா மென்னும் ஊனத்தா ரென்கடவர் அஞ்ஞா னத்தால்உறுவதுதான் பந்தமுயர் மெய்ஞ்ஞா னந்தான் ஆனத்தா லதுபோவ தலர்கதிர்முன் னிருள்போல் அஞ்ஞானம் விடப்பந்தம் அறும்முத்தி யாகும் ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம் இறைவனடி ஞானமே ஞான மென்பர்.279
சூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல் ஆரியனாம் ஆசாவந் தருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத் தூரியனாம் சிவன்தோன்றும் தானுந் தோன்றும் தொல்லுலக மெல்லாம்தன் னுள்ளே தோன்றும் நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும் நின்றநிலை யெல்லாம்முன் நிகழ்ந்து தோன்றும்.280
மிக்கதொரு பக்குவத்தின் மிகுசத்தி நிபாதம் மேவுதலும் ஞானம்விளைந் தோர்குருவின் அருளால் புக்கனுட்டித் தேநிட்டை புரிந்து ளோர்கள் பூதலத்தில் புகழ்சீவன் முத்த ராகித் தக்கபிரி யாப்பிரிய மின்றி ஓட்டில் தபனியத்தில் சமபுத்தி பண்ணிச்சங் கரனோ(டு) ஒக்கவுறைந் திவர்அவனை அவன்இவரை விடாதே உடந்தையாய்ச் சிவன்தோற்ற மொன்றுமே காண்பர்.281
அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே அறிவுதனை அருளினான் அறியாதே அறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயில் பிரியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப் பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த் தோன்றி நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதார னாயே.282
புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங்கீழ் நூக்கும் புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தி னாலே நண்ணியஞா னத்தினால் இரண்டினையும் அறுத்துஞாலமொடு கீழ்மேலும் நண்ணா னாகி எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான் எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக் கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம் கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன்.283
ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு நன்மையொடு தீமையிலை நாடுவதொன் றில்லை சீலமிலை தவமில்லை விரதமொடாச் சிரமச் செயலில்லை தியானமிலை சித்தமல மில்லை கோலமிலை புலனில்லை கரண மில்லை குணமில்லை குறியில்லை குலமு மில்லை பாலருடன் உன்மத்தர் பிசாசர்குண மருவிப் பாடலினொ டாடலிவை பயின்றிடினும் பயில்வர்.284
தேசமிடம் காலம்திக் காசனங்க ளின்றிச் செய்வதொன்று போல்செய்யாச் செயலதனைச் செய்தங்(கு) ஊசல்படு மனமின்றி உலாவல் நிற்றல் உறக்கமுணர் வுண்டிபட் டினியிருத்தல் கிடத்தல் மாசதனில் தூய்மையினின் வறுமை வாழ்வின் வருத்தத்தில் திருத்தத்தில் மைதுனத்தில் சினத்தின் ஆசையினின் வெறுப்பின்இவை யல்லாது மெல்லாம் அடைந்தாலும் ஞானிகள்தாம் அரனடியை அகலார்.285
இந்நிலைதான் இல்லையேல் எல்லா மீசன் இடத்தினினும் ஈசனெல்லா விடத்தினினும் நின்ற அந்நிலையை அறிந்தந்தக் கரணங்கள் அடக்கி அறிவதொரு குறிகுருவின் அருளினால் அறிந்து மன்னுசிவன் தனையடைந்து நின்றவன்ற னாலே மருவுபசு கரணங்கள் சிவகரண மாகத் துன்னியசாக் கிரமதனில் துரியா தீதம் தோன்றமுயல் சிவானுபவம் சுவானுபூ திகமாம்.286
சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் சருவசங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள் பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலே உயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவ ரன்றோ ஆக்குமுடி கவித்தரசாண் டவர்கள்அரி வையரோ(டு) அனுபவித்தங் கிருந்திடினும் அகப்பற்றற் றிருப்பர் நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலும் நுழைவர்பிறப் பினின்வினைகள் நுங்கி டாவே.287
கருவிகழிந் தாற்காணா ரொன்றுமெனிற் காணார் காணாதார் கன்னிகைதான் காமரசங் காணாள் மருவிஇரு வரும்புணர வந்த இன்பம் வாயினாற் பேசரிது மணந்தவர்தாம் உணர்வர் உருவினுயிர் வடிவதுவும் உணர்ந்திலைகாண் சிவனை உணராதார் உணர்வினால் உணர்வதுகற் பனைகாண் அருள்பெறின்அவ் விருவரையும் அறிவிறந்தங் கறிவர் அறியாரேற் பிறப்பும்விடா தாணவமும் அறாதே.288
பன்னிறங்கள் அவைகாட்டும் படிகம்பால் உள்ளம் பலபுலன்கள் நிறங்காட்டும் பரிசுபார்த் திட்(டு) இந்நிறங்கள் என்னிறம்அன் றென்று தன்றன் எழில்நிறங்கண் டருளினால் இந்நிறத்தின் வேறாய்ப் பொய்ந்நிறஐம் புலன்நிறங்கள் பொய்யெனமெய் கண்டான் பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை முன்னிறைநீர் சிறைமுறிய முடுகி யோடி முந்நீர்சேர்ந் தந்நீராய்ப் பின்னீங்கா முறைபோல்.289
எங்குந்தான் என்னினாம் எய்த வேண்டா எங்குமிலன் என்னின்வே றிறையு மல்லன் அங்கஞ்சேர் உயிர்போல்வன் என்னின் அங்கத்(து) அவயவங்கள் கண்போலக் காணா ஆன்மா இங்குநாம் இயம்புந்தத் துவங்களின் வைத்தறிவ(து) இறைஞானந் தந்துதா ளீதல்சுட ரிழந்த துங்கவிழிச் சோதியும்உட் சோதியும்பெற் றாற்போல் சோதிக்குட் சோதியாய்த் தோன்றிவன் காணே.290
பாசிபடு குட்டத்திற் கல்லினைவிட் டெறியப் படும்பொழுது நீங்கிஅது விடுமபொழுதிற் பரக்கும் மாசுபடு மலமாயை அருங்கன்மம் அனைத்தும் அரனடியை உணரும்போ தகலும்பின் அணுகும் நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும் நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி ஆசையொடும் அங்குமிங்கு மாகிஅல மருவோர் அரும்பாச மறுக்கும் வகை அருளின்வழி யுரைப்பாம்.291

ஒன்பதாஞ் சூத்திரம் (292 - 303)
பாசஞா னத்தாலும் பசுஞானத் தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத் தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின் ஆசைதரும் உலகமெலாம் அலகைத்தே ராமென்(று) அறிந்தகல அந்நிலையே யாகும் பின்னும் ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெலா மோட.292
வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம் நாதமுடி வானவெல்லாம் பாச ஞானம் நணுகிஆன் மாஇவைகீழ் நாட லாலே காதலினால் நான்பிரம மென்னு ஞானம் கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண்(டு) ஓதியுணர்ந் தொன்றொன்றா உணர்ந்திடலாற் பசுவாம் ஒன்றாகச் சிவன்இயல்பின் உணர்ந்திடுவன் காணே.293
கரணங்கள் கெடவிருக்கை முத்தியா மென்னில் கதியாகும் சினைமுட்டை கருமரத்தின் உயிர்கள் மரணங்கொண் டிடஉறங்கி மயங்கிமூர்ச் சிக்க வாயுத்தம் பனைபண்ண வல்விடத்தை அடையச் சரணங்கள் புகுநிழல்போல் தனைஅடையுஞ் சமாதி தவிராது மலமிதுவும் பசுஞான மாகும் அரணங்க ளெரித்தவன்தன் அடியைஅறி விறந்தங்(கு) அறிந்திடர் செறிந்ததுகள் அகற்றி டீரே.294
சிவனைஅவன் திருவடிஞா னத்தாற் சேரச் செப்புவது செயல்வாக்குச் சிந்தை யெல்லாம் அவனையணு காவென்றும் ஆத லானும் அவனடிஅவ் வொளிஞான மாத லானும் இவனுமியான் துவக்குதிர மிறைச்சி மேதை என்புமச்சை சுக்கிலமோ இந்திரியக் கொத்தோ அவமகல எனையறியேன் எனும்ஐய மகல அடிகாட்டி ஆன்மாவைக் காட்ட லானும்.295
கண்டிடுங்கண் தனைக்காணா கரணம் காணா கரணங்கள் தமைக்கான உயிருங் காணா உண்டியமர் உயிர்தானுந் தன்னைக் காணா(து) உயிர்க்குயிராம் ஒருவனையுங் காணா தாகும் கண்டசிவன் தனைக்காட்டி உயிருங் காட்டிக் கண்ணாகிக் கரணங்கள் காணமல் நிற்பன் கொண்டானை உளத்திற்கண் டடிகூடிற் பாசம் கூடாது கூடிடினும் குறித்தடியின் நிறுத்தே.296
குறித்தடியின் நின்(று)அட்ட குணமெட்டுச் சித்தி கோகனதன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம் வெறுத்துநெறி அறுவகையும் மேலொடுகீ ழடங்க வெறும்பொயென நினைந்திருக்க மேலொடுகீ ழில்லான் நிறுத்துவதோர் குணமில்லான் தன்னையொரு வர்க்கு நினைப்பரியான் ஒன்றுமிலான் நேர்படவந் துள்ளே பொறுப்பரிய பேரன்பை அருளியதன் வழியே புகுந்திடுவன் எங்குமிலாப் போகத்தைப் புரிந்தே.297
கண்டஇவை யல்லேன்நான் என்றகன்று காணாக் கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி விண்டகலும் மலங்களெல்லாம் கருடதியா னத்தால் விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும் பண்டைமறை களும்அதுநா னானே னென்று பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே.298
அஞ்செழுத்தால் ஆன்மாவை அரனுடைய பரிசும் அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட்(டு) அஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்தர்ச் சித்(து) அஞ்செழுத்தாற் குண்டலியின் அனலை யோம்பி அணைவரிய கோதண்டம் அணைந்தருளின் வழிநின்(று) அஞ்செழுத்தை விதிப்படிஉச் சரிக்கமதி யருக்கன் அணையரவம் போற்றோன்றும் ஆன்மாவில் அரனே.299
நாட்டுமித யந்தானும் நாபியினில் அடியாய் ஞாலமுதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய் மூட்டுமோ கினிசுத்த வித்தைமல ரெட்டாய் முழுவிதழ்எட் னக்கரங்கள் முறைமையினின் உடைத்தாய்க் காட்டுகம லாசனமேல் ஈசர்சதா சிவமும் கலாமூர்த்த மாம்இவற்றின் கண்ணாகுஞ் சத்தி வீட்டைஅருள் சிவன்மூர்த்தி மானாகிச் சத்தி மேலாகி நிற்பன்இந்த விளைவறிந்து போற்றே.300
அந்தரியா கந்தன்னை மத்திசா தனமாய் அறைந்திடுவர் அதுதானும் ஆன்மசுத்தி யாகும் கந்தமலர் புகையொளிமஞ் சனம்அமுது முதலாக் கண்டனஎ லாம்மனத்தாற் கருதிக் கொண்டு சிந்தையினிற் பூசித்துச் சிவனைஞா னத்தால் சிந்திக்கச் சிந்திக்கத் தர்ப்பணத்தை விளக்க வந்திடும்அவ் வொளிபோல மருவிஅர னுளத்தே வரவரவந் திடுவன்பின் மலமான தறுமே.301
புறம்பேயும் அரன்கழல்கள் பூசிக்க வேண்டில் பூமரத்தின் கீழுதிர்ந்த போதுகளுங் கொண்டு சிறந்தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தா லங்குச் சிந்திக்கும் படிஇங்குச் சிந்தித்துப் போற்றி அறமபாவங் கட்குநாம் என்கடவே மென்றும் ஆண்டவனைக் கண்டக்கால் அகம்புறமென் னாதே திறம்பாதே பணிசெய்து நிற்கை யன்றோ சீரடியார் தம்முடைய செய்தி தானே.302
இந்தனத்தின் எரிபாலின் நெய்பழத்தின் இரதம் எள்ளின்க ணெண்ணெயும்போல் எங்குமுளன் இறைவன் வந்தனைசெய் தெய்விடத்தும் வழிபடவே அருளும் மலமறுப்போ ரான்மாவின் மலரடிஞா னத்தாற் சிந்தனைசெய் தர்ச்சிக்க சிவன்உளத்தே தோன்றித் தீஇரும்பைச் செய்வதுபோற் சீவன் தன்னைப் பந்தனையை அறுத்துத்தா னாக்கித்தன் னுருவப் பரப்பெல்லாங் கொடுபோந்து பதிப்பனிவன் பாலே.303
பயனியல்
பத்தாஞ் சூத்திரம் (304 - 309)
இவனுலகில் இதமகிதம் செய்த வெல்லாம் இதமகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும் அவனிவனாய் நின்றமுறை ஏக னாகி அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம் சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றும் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே.304
யான்செய்தேன் பிறர்செய்தார் என்னதியான் என்னும் இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத் தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே தனையளித்து முன்நிற்கும் வினையொளித்திட் டோடும் நான்செய்தேன் எனுமவர்க்குத் தானங் கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம் ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பி னல்லால் ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே.305
இந்திரிய மெனைப்பற்றி நின்றேஎன் வசத்தின் இசையாதே தன்வசத்தே எனையீர்ப்ப திவற்றைத் தந்தவன்ற னாணைவழி நின்றிடலால் என்றும் தானறிந்திட் டிவற்றினொடுந் தனையுடையான் தாள்கள் வந்தனைசெய் திவற்றின்வலி அருளினால் வாட்டி வாட்டமின்றி இருந்திடவும் வருங்செயல்க ளுண்டேல் முந்தனுடைச் செயலென்று முடித்தொழுக வினைகள் மூளாஅங் காளாகி மீளா னன்றே.306
சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத் தானாக்கித் தலைவன்அவர் தாஞ்செய்வினை தன்னால் நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய் நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன் உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே உள்நின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும் நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும் நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் தானே.307
நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும் நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும் நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும் நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின் ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும்இறை ஞானங் கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பார்.308
அங்கித்தம் பனைவல்லார்க் கனல்சுடா தாகும் ஔடதமந் திரமுடையார்க் கருவிடங்க ளேறா எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும் ஞானிக்(கு) இருவினைகள் சென்றணையா முற்செய்வினை இங்குத் தங்கிப்போம் பாத்திரமும் குலாலன்வினை தவிர்ந்த சக்கரமும கந்தித்துச் சுழலு மாபோல் மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும் எல்லா மலங்களும்பின் காயமொடு மாயு மன்றே.309

பதினொராஞ் சூத்திரம் (310 - 321)
காயமொழிந் தாற்சுத்த னாகி ஆன்மாக் காட்டக்கண் டிடுந்தன்மை யுடைய கண்ணுக்(கு) ஏயும்உயிர் காட்டிக்கண் டிடுமா போல ஈசனுயிர்க் குக்காட்டிக் கண்டிடுவன் இத்தை ஆயுமறி வுடையனாய் அன்பு செய்ய அந்நிலைமை இந்நிலையின் அடைந்தமுறை யாலே மாயமெலாம் நீங்கிஅரன் மலரடிக்கீ ழிருப்பன் மாறாத சிவானுபவம் மருவிக் கொண்டே.310
பரஞானத் தாற்பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் பார்க்க வருஞானம் பலஞானம் அஞ்ஞான விகற்பம் வாச்சியவா சகஞானம் வைந்தவத்தின் கலக்கம் தருஞானம் போகஞா திருஞான ஞேயம் தங்கியஞா னஞ்சங்கற் பனைஞான மாகும் திருஞானம் இவையெலாங் கடந்தசிவ ஞானம் ஆதலாற் சீவன்முத்தர் சிவமேகண் டிருப்பர்.311
அநாதிஉடல் ஒன்றினைவிட் டொன்றுபற்றிக் கன்மால் ஆயழிந்து வருதலால் அந்த மில்லை பினாதியருள் பெற்றவர்கள் நித்தவுரு வத்தைப் பெற்றிருக்கை முத்தியெனிற் பெறும்பதமே இதுவும் இனாதுநிலை இதுதானுங் காய முண்டேல் இருங்கன்ம மாயைமல மெல்லா முண்டாம் மனாதிதரு முடலாதி காரியத்தால் அநாதி மலம்அறுக்கும் மருந்தற்றால் உடன்மாயுங் காணே.312
தெரிவரிய மெய்ஞ்ஞானம் சேர்ந்த வாறே சிவம்பிரகா சிக்குமிங்கே சீவன்முத்த னாகும் உரியமல மௌடதத்தால் தடுப்புண்ட விடமும் ஔ¢ளெரியின் ஔ¤முன்னர் இருளுந் தேற்றின் வருபரல்சேர் நீர்மருவு கலங்கலும்போ லாகி மாயாதே தன்சத்தி மாய்ந்து காயம் திரியுமள வும்உளதாய்ப் பின்பு காயஞ் சேராத வகைதானுந் தேயு மன்றே.313
ஆணவந்தான் அநாதிஅந்த மடையா தாகும் அடையின்அந்த ஆன்மாவும் அழியுமெனிற் செம்பிற் காணலுறுங் களிம்பிரத குளிகைபரி சிக்கக் கழியுஞ்செம் புருநிற்கக் கண்டோ மன்றே தாணுவின்தன் கழலணையத் தவிரும்மலந் தவிர்ந்தால் தான்சுத்த னாயிருக்கை முத்திஅரன் தாளைப் பூணவேண் டுவதொன்று மில்லையெனின் அருக்கன் புகுதஇருள் போம்அடியிற் பொருந்தமலம் போமே.314
நெல்லினுக்குத் தவிடுமிகள் அநாதி யாயே நெல்லைவிட்டு நீங்கும்வகை நின்றநிலை நிகழ்த்தீர் சொல்லியிடில் துகளற்ற அரிசியின்பா லில்லை தொக்கிருந்து மற்றொருநெல் தோன்றி டாவாம் மெல்லஇவை விடுமறவே இவைபோல அணுவை மேவுமல முடல்கன்மம் அநாதிவிட்டே நீங்கும் நல்லசிவ முத்தியின்கட் பெத்தான் மாவை நணுகிநிற்கு மாதலால் நாசமுமின் றாமே.315
எவ்விடத்தும் இறையடியை இன்றியமைந் தொன்றை அறிந்தியற்றி யிடாஉயிர்க ளிறைவன் றானும் செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன் இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும் அவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லால்நாம் அரன்டியை அகன்றுநிற்ப தெங்கே யாமே.316
எங்குந்தான் நிறைந்துசிவன் நின்றா னாகில் எல்லாருங் காணவே வேண்டுந்தா னென்னில் இங்குந்தான் அந்தகருக் கிரவிஇரு ளாகும் ஈசனருட் கண்ணில்லார்க் கொளியாயே யிருளாம் பங்கந்தா னெழும்பதுமம் பக்குவத்தை யடையப் பதிரிஅலர்த் திடுவதுபோல் பருவஞ்சே ருயிர்க்குத் துங்கஅரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே.317
சென்றணையும் நிழல்போலச் சிவன்நிற்ப னென்னில் சென்றணையும் அவன்முதலி சிவத்தைஅணைந் தொன்றாய் நின்றதுயிர் கெட்டென்னில் கெட்டதணை வின்றாம் நின்றதேற் கேடில்லை அணைந்துகெட்ட தென்னில் பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ பொன்றுகையே முத்தியெனில் புருடன்நித்த னன்றாம் ஒன்றியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னின் ஒருபொருளாம் அதிபதியோ டுயிர்பொருளொன் றன்றே.318
செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச் செம்பொனுடன் சேரும்மலஞ் சிதைந்தாற் சீவன் நம்பனுடன் கூடுமெனிற் பொன்போ லல்லன் நற்குளிகை போலஅரன் நணுகுமலம் போக்கி அம்பொனடிக் கீழ்வைப்பன் அருங்களங்க மறுக்கும் அக்குளிகை தானும்பொன் னாகா தாகும் உம்பர்பிரா னுற்பத்தி யாதிகளுக் குரியன் உயிர்தானுஞ் சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே.319
சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில் சிவனருட்சித் திவன்அருளைச் சேருஞ்சித் தவன்றான் பவங்கெடுபுத் திமுத்தி பண்ணுஞ்சித் திவற்றிற் படியுஞ்சித் தறிவிக்கப் படுஞ்சித்து மிவன்றான் அவன்றானே அறியுஞ்சித் தாதலினா லிரண்டும் அணைந்தாலு மொன்றாகா தநந்நியமாக யிருக்கும் இவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி இதுஅசித்தென் றிடில்அவனுக் கிவனும்அசித் தாமே.320
இரும்பைக்காந் தம்வலித்தாற் போல்இயைந்தங் குயிரை எரியிரும்பைச் செய்வதுபோல் இவனைத்தா னாக்கி அரும்பித்திந் தனத்தைஅன லழிப்பதுபோல் மலத்தை அறுத்தமலன் அப்பணைந்த உப்பேபோ லணைந்து விரும்பிப்பொன் னினைக்குளிகை யொளிப்பதுபோல் அடக்கி மேளித்துத் தானெல்லாம் வேதிப்பா னாகிக் கரும்பைத்தே னைப்பாலைக் கனியமுதைக் கண்டைக் கட்டியைஒத் திருப்பன்அந்த முத்தியினிற் கலந்தே.321

பன்னிரண்டாஞ் சூத்திரம் (322 -328)
செங்கமலத் தாளிணைகள் சேர லொட்டாத் திரிமலங்கள் அறுத்தீசன் நேசரொடுஞ் செறிந்திட்(டு) அங்கவர்தந் திருவேடம் ஆலயங்க ளெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப் பாடி எங்குமியாம் ஒருவர்க்கு மௌ¤யோ மல்லோம் யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித் திங்கள்முடி யார்அடியார் அடியே மென்று திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை யோரே.322
ஈசனுக்கன் பில்லார் அடியவர்க்கன் பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும்அன் பில்லார் பேசுவதென் அறிவிலாப் பிணங்களைநாம் இணங்கிற் பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர் விடுநீ ஆசையொடும் அரனடியார் அடியாரை அடைந்திட்(டு) அவர்கருமம் உன்கரும மாகச் செய்து கூசிமொழிந் தருள்ஞானக் குறியில் நின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே.323
அறிவரியான் தனையறிய யாக்கை யாக்கி அங்கங்கே உயிர்க்குயிராய் அறிவுகொடுத் தருளால் செறிதலினால் திருவேடம் சிவனுருவே யாகும் சிவோகம்பா விக்கும்அத்தாற் சிவனு மாவர் குறியதனால் இதயத்தே அரனைக் கூடும் கொள்கையினால் அரனாவர் குறியொடுதாம் அழியும் நெறியதனாற் சிவமேயாய் நின்றிடுவ ரென்றால் நேசத்தால் தொழுதிடுநீ பாசத்தார் விடவே.324
திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச் சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும் உளனெங்கும் இலன்இங்கும் உளனென் பார்க்கும் விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல் மந்திரத்தின் வந்துதித்து மிகுஞ்சுரபிக் கெங்கும் உருக்காண வொண்ணாத பால்முலைப்பால் விம்மி ஒழுகுவது போல்வௌ¤ப்பட் டருளுவன்அன் பர்க்கே.325
ஞானயோ கக்கிரியா சரியை நாலும் நாதன்தன் பணிஞானி நாலினிக்கும் உரியன் ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன் யோகிகிரி யாவான்தான் ஒண்கிரியை யாதி ஆனஇரண் டினுக்குரியன் சரியையினில் நின்றோன் அச்சரியைக் கேஉரியன் ஆதலினால் யார்க்கும் ஈனமிலா ஞானகுரு வேகுருவும் இவனே ஈசனிவன் தான்என்றும் இறைஞ்சி ஏத்தே.326
மந்திரத்தான் மருந்துகளால் வாய்த்தவியோ கத்தால் மணிஇரத குளிகையினால் மற்றும் மற்றும் தந்திரத்தே சொன்னமுறை செய்ய வேத சகலகலை ஞானங்கள் திரிகால ஞானம் அந்தமிலா அணிமாதி ஞானங்க ளெல்லாம் அடைந்திடும்ஆ சான்அருளால் அடிசேர் ஞானம் வந்திடுமற் றொன்றாலும் வாரா தாகும் மற்றவையும் அவனருளால் மருவு மன்றே.327
பரம்பிரமம் இவனென்றும் பரசிவன்தா னென்றும் பரஞானம் இவனென்றும் பராபரன்தா னென்றும் அரன்தருஞ்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும் அருட்குருவை வழிபடவே அவனிவன்தா னாயே இரங்கியவா ரணம்யாமை மீன்அண்டம் சினையை இயல்பினொடும் பரிசித்தும் நினைந்தும் பார்த்தும் பரிந்திவைதா மாக்குமா போல்சிவமே யாக்கும் பரிசித்தும் சிந்தித்தும் பார்த்தும் தானே.328

சிவஞானசித்தியார் சுபக்கம் முற்றிற்று

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.