LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-13

6.013.திருப்புறம்பயம் 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர். 
தேவியார் - கரும்பன்னசொல்லம்மை. 
2212 கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்
கொடுங்கோளூர் தண்வளவி கண்டியூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
நலமாகு மொற்றியூ ரொற்றி யாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
பழையாறும் பாற்குளமுங் கைவிட் டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.1
கொடிகள் கட்டப்பட்ட மாட வீடுகளைக் கொண்ட நீண்ட தெருக்களை உடைய கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், வளவி, கண்டியூர், கூத்து நிகழ்த்தும் சிறந்த மருகல் இவற்றில் நாளும் தங்கி அழகிய ஒற்றியூர் ஒற்றிவைக்கப்பட்டது என்னும் பொருளைத் தருதலில் அதனை நீங்கி சூரியன் மறையும் மாலையிலே வண்டுகள் ஒலிக்கும் பழனம், பாசூர், பழையாறு, பாற்குளம் என்னும் இவற்றை நீங்கி இன்று திருநீறு அணிந்த மேனியராய்ப் பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவர எங்களுடைய ஊர் புறம்பயம் என்று கூறி எம்பெருமானார் சென்று விட்டார்.
2213 முற்றொருவர் போல முழுநீ றாடி
முளைத்திங்கள் சூடிமுந் நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல உறங்கு வேன்கை
ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணு கின்றார்
மற்றொருவ ரில்லைத் துணையெ னக்கு
மால்கொண்டாற் போல மயங்கு வேற்குப்
புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.2
தவம் முற்றிய ஒருவரைப்போல உடல் முழுதும் திருநீறு பூசி, பிறைசூடி, முந்நூல் அணிந்து ஒற்றுவதற்கு வந்த ஒருவர் போலப் பொய் உறக்கம் கொண்ட என்கையிலிருக்கும் ஒளி பொருந்திய வளையல்களை ஒன்றொன்றாக எண்ணுகின்றார். எனக்கு இவரன்றித் துணைவர் வேறு யாரும் இல்லை. இவருடைய செயலைக் கண்டு பித்துப்பிடித்தவரைப் போல மயங்குகின்ற என்னிடத்தில் 'எங்களுடைய ஊர் திருப்புறம்பயம்' என்று கூறிப் பாம்பினைக் கச்சாக அணிந்த எம்பெருமான் பூதங்கள் தம்மைச்சூழ என்னைவிடுத்துப் போய் விட்டார்.
2214 ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்
திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.3
தீங்கு தருகின்ற விடத்தை நுகர்ந்த, மாலையின் செந்நிறத்தை உடைய பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய தோளின் மீது மேலாடையாக அணிந்து, ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்து வந்து 'திருவே! உணவு இடு' என்று கூற, உணவு கொண்டுவர உள்ளே சென்றேன். உணவுகளோடு யான் மீண்டு வரக்குழம்போ சோறோ ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூதங்கள் சூழப் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2215 பன்மலிந்த வெண்தலை கையி லேந்திப்
பன்முகில்போல் மேனிப்ப வந்த நாதர்
நென்மலிந்த நெய்த்தானஞ் சோற்றுத் துறை
நியமந் துருத்தியும் நீடூர் பாச்சில்
கன்மலிந் தோங்கு கழுநீர்க் குன்றங்
கடனாகைக் காரோணங் கைவிட் டிந்நாள்
பொன்மலிந்த கோதையருந் தாமு மெல்லாம்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.4
பல்மிக்க வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பனிபொழியும் மேகம் போன்று திருநீற்றால் வெள்ளிய மேனியை உடைய வஞ்சகராகிய எம் தலைவர், நெல் மிக விளையும் நெய்த்தானம், சோற்றுத்துறை, நியமம், துருத்தி, நீடூர், பாச்சிலாச் சிராமம், கற்கள் மிக்க உயர்ந்த கழுக்குன்றம், கடற்கரையிலமைந்த நாகைக்காரோணம் என்ற தாம் உகந்தருளியிருந்த திருத்தலங்களை விடுத்து, இன்று பொலிவுமிக்க தம் தேவிமாரோடு கூடியதாம் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2216 செத்தவர்தந் தலைமாலை கையி லேந்திச்
சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை யுரிவை மூடி
மடவா ளவளோடு மானொன் றேந்தி
அத்தவத்த தேவர் அறுப தின்மர்
ஆறுநூ றாயிரவர்க் காடல் காட்டிப்
புத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.5
இறந்தார் தலைமாலையைக் கையிலெடுத்துத் தலையில் சூடிச் சிவந்த மேனியில் பெரிய தலையை உடைய யானைத் தோலைப் போர்த்துப் பார்வதி பாகராய், மானைக் கையில் ஏந்தி, ஆறுநூறாயிரத்து அறுபது தேவர்கள் தம் கூத்தினைக் காணுமாறு அருள் செய்து, புலித்தோலை இடையில் கட்டிக் கையில் புத்தகம் ஒன்றனை ஏற்றுப் புறம்பயம் நம் ஊர் என்று எம்பெருமான் போயினார்.
2217 நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி
நல்லபுலி யதள்மேல் நாகங் கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாகப்
பராய்த்துறையே னென்றோர் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியுங் கொட்டத்
துண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலுஞ் சூடிப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.6
விடம் அடைந்த கழுத்தினராய், நீறு பூசி, பெரிய புலித்தோல் மேல் பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டு, செம்பஞ்சு போன்ற மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகராய்ப் பவளம் போன்ற சிவந்த மேனியை உடைய எம்பெருமான் யான் உறங்கும் இடத்து வந்து துடியை ஒலித்து என்னை விழிக்கச் செய்து 'யான் பராய்த்துறை ஊரினேன்' என்றார்'. யான் திடுக்கிட்டு எழுந்திருந்தேன். பின் அவர் என் குறிப்பறிந்து மெய் தீண்டிச் செய்தனவற்றைச் சொற்களால் எடுத்துக்கூறும் ஆற்றல் இல்லேன். தம் சிவந்த சடையில் கங்கையைச் சூடி அப்பெருமான் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2218 மறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி
மறைக்காட்டே னென்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு
திருமுண்ட மாஇட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.7
ஒருகையில் மான் குட்டியை ஏந்தி, மற்றொரு கையில் மழுப்படையை ஏந்தி, 'யான் மறைக்காட்டில் உள்ளேன்' என்று இனிய சொற்களைப்பேசி, விளங்கிய திண்ணிய தோள்கள் மீது திருநீற்றைப் பூசி, நெற்றியில் திரிபுண்டரமாகத் திருநீறணிந்து, சுருண்ட கூந்தலை உடைய மகளிர்பின் சென்று, தம் கண்கள் கரிந்து நீர் சொரியுமாறு அவர்களை நெடுநேரம் அசையாமல் நோக்கி, புள்ளிகள் பொருந்திய பாம்புகளை இறுகக் கட்டிக் கொண்டு பூதங்கள் சூழ எம்பெருமானார் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2219 நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
நிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு
கொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொட்டியுங்
குடமூக்கி லங்கொழியக் குளிர்தண் பொய்கை
நல்லாளை நல்லூரே தவிரே னென்று
நறையூரில் தாமும் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.8
ஓரிடத்தில் தங்காமல் பல ஊர்களும் பிச்சை ஏற்றலைக் கருதிச் சென்று, வளையலை வரிசையாக அணிந்த மகளிர் பிச்சை வழங்க, அதனோடு அவர்களுடைய அடக்கம் என்ற பண்பினையும் கைக்கொண்டு, தம் வாகனமாகக் கொலைத் தொழில் செய்யும் காளையையும், வாச்சியங்களான கொக்கரையையும் கொடுகொட்டியையும் குடமூக்கு என்னும் தலத்தில் விடுத்து, நல்லாளை, நல்லூர், நறையூர் இவற்றில் தங்குபவரைப் போலக் கூறிக் கொண்டு, மகளிரை நிறையழிக்கும் கோலமுடைய நம் பெருமானார் பூதம் சூழப் 'புறம்பயம் நம் ஊர்' என்று போயினார்.
2220 விரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு
வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாக மாக
ஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.9
நறுமணம் கமழும்திருநீற்றைப் பூசி ஓர் ஆமையோட்டினை அணிகலனாகப்பூண்டு, காதில் சங்கத் தோட்டினை அணிந்து, இடக்கையிலேவீணையை ஏந்திக் கங்கை தங்கும்சடை மீது பிறையைநாற்றிசையும் அதன் ஒளிபரவுமாறு வைத்து, மகிழ்ந்த,செந்தீ நிறத்துப் பெருமானார், மேகலையை இடையில்அணிந்த உமைபாகராய், பிறர் அணுகுதற்கரியசுடுகாட்டில் கூத்தாடுதலை விரும்பிய தலைவராய், மேம்பட்டகாளையை இவர்ந்து, பூதம் சூழப் 'புறம்பயம் நம் ஊர்'என்று போயினார்.
2221 கோவாய இந்திரனுள் ளிட்டா ராகக்
குமரனும் விக்கினவி நாய கன்னும்
பூவாய பீடத்து மேல யன்னும்
பூமி யளந்தானும் போற்றி சைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடி யாடிப்
பாரிடமுந் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்கப்
புறம்பயம்நம் மூரென்று போயி னாரே.
6.013.10
தேவர் தலைவனானஇந்திரன் உள்ளிட்டவரும், முருகனும், இடர்களையும்விநாயகனும், தாமரையின் மேல் உள்ள பிரமனும்,உலகங்களை அளந்த திருமாலும் வணங்கி வாழ்த்துச்சொல்லுமாறு இனிய பாடல்களைப் பாடி, அவற்றிற்கு ஏற்பஆடி, வண்டு ஒலிக்கும் கொன்றைப் பூவினை அணிந்ததாமும் தம் பூதங்களுமாய்ப் 'புறம்பயம் நம் ஊர்' என்றுபெருமான் போயினார்.

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.