LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-18

6.018.திருப்பூவணம் 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - பூவணநாதர். 
தேவியார் - மின்னாம்பிகையம்மை. 
2264 வடியேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றுங்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
6.018.1
சோலைகள் விளங்கும் திருப்பூவணத்தை உகந்தருளியிருக்கும் புனிதராகிய சிவபெருமான் பக்கல், அடியார்களுடைய மனக்கண்முன் கூர்மை பொருந்திய மூவிலைச் சூலமும், நீண்ட சடைமீது அணிந்த பிறையும், நறுமணம் மிக்க கொன்றைப் பூவினால் ஆகிய முடி மாலையும், காதுகளில் கலந்து தோன்றும் குழையும், தோடும், இடிபோல ஒலித்து வந்தயானையின் தோலாகிய போர்வையும், அழகு விளங்கும் முடியும், திருநீறணிந்த அப்பெருமானுடைய திருமேனியும் காட்சி வழங்குகின்றன.
2265 ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட் காரமுத மாகித் தோன்றும்
ஊணாகி யூர்திரிவா னாகித் தோன்றும்
ஒற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேல்
சேணாக வரைவில்லா லெரித்தல் தோன்றுஞ்
செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும்

6.018.2
பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் ஆணும் பெண்ணுமாகிய வடிவும், அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதம் போன்று இனிமை தரும் செயல்களும்,உணவுக்காக ஊர்களில் திரியும் காட்சியும், ஒற்றை வெண்பிறையும், பகைவருடையமும் மதில்களையும் நீண்ட பாம்பினை மலையாகிய வில்லில் நாணாகப் பூட்டிஎரித்த செயலும், இறந்தவருடைய எலும்புகளால் உடம்பில் பொருந்துமாறு பூண்டமாலையும் அரைஞாணும் அடியவர் மனக்கண்களுக்கு விளக்கமாகக் காட்சிவழங்கும்.
2266 கல்லாலின் நீழற் கலந்து தோன்றுங்
கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும்
சூழரவும் மான்மறியுந் தோன்றுந் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும்
ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்

6.018.3
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களுக்கு மனக்கண் முன்னர், அவர் கல்லாலின் நிழலில் அமர்ந்த காட்சியும், மேம்பட்ட மறைகளை ஓதும்சனகர் முதலிய முனிவர் நால்வர்க்கும் வேத நெறிகளைச் சொற்களால் விளக்கியமை போல மோனநிலையிலிருந்து சொல்லிய காட்சியும்,அவர் உடலைச் சுற்றுமாறு அணிந்த பாம்புகளும் ஏந்திய மான் குட்டியும், அறத்தின் உண்மையை உணர்ந்தவன் அல்லாத காலனை ஒறுத்த காட்சியும், தம்மை நினையும் அடியவர்பால் ஐவகை நிறத்தோடு விரும்பி வழங்கும் காட்சியும், யாவரும் அருவருக்கும் புலாலின் சுவட்டினை உடைய எலும்பினாலாகிய அணிகலன்களும் காட்சி வழங்கும்.
2267 படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும்
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும்
நான்மறையி னொலிதோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமும் கீளுந் தோன்றும்
மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்

6.018.4
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களுடைய மனக்கண் முன்னர்ப் படைக்கலமாம் நன்மை நிறைந்த மழுவும், அவர் ஏந்தியமானும், அருகில் இருக்கும் பன்னிரண்டு கைகளை உடைய முருகப்பெருமான் வடிவும், விரைந்து செல்லும் காளையும், அக்காளை வடிவம் எழுதிய கொடியும், நான்மறையின் ஒலியும், முக்கண்களும், உடையாக அமைந்த கீளும் கோவணமும், பற்களை உடைய வெள்ளிய மண்டை ஓட்டு மாலையும், அவரைச் சுற்றிக் காணப்படும் பூதங்களின் மகிழ்வும் காட்சி வழங்கும்.
2268 மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும்
மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும்
இருங்கடல்நஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை
ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்

6.018.5
பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களுடைய மனக்கண் முன்னர்த்தம்மிடம் பேரன்பு கொள்ளும் அடியவர்களுக்கு அவர் அருள் செய்யும்செயலும், அழுக்கற்ற சிவந்த சடையின் மேல் அணிந்த பிறையும், பிச்சை ஏற்கும் அவருக்கு அடியவர்கள் வழக்கமாக இடும் பிச்சையை அவர் ஏற்கும் காட்சியும், பெரிய கடலில் நஞ்சினை உண்டதனால் இருண்ட கழுத்தும், கயல்கள் பாயுமாறு விரைவான கலங்கள் வெள்ளமாக ஆயிரமுகத்தோடு வானிலிருந்து இறங்கிய கங்கை தன்னுள் அடங்குமாறு சிவபெருமான் விரித்த சடையின் அழகும் காட்சி வழங்கும்.
2269 பாராழி வட்டத்தார் பரவி யிட்ட
பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்க ளன்ன
திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன்
உடல்துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்ஈந்த பொற்புத் தோன்றும்

6.018.6
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண்களின் முன்னர் அழகுக் கடலாய் உள்ள தாமரை மலர் போன்ற அழகிய நிறத்தை உடைய திருவடிகளும், அத்திருவடிகளின் மீது பூமண்டலத்திலுள்ளவர்கள் துதித்து அருச்சித்த பல மலர்களும், காட்டிய புகைகளும், ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரை உடைய இராவணனுடைய உடலை அழித்த திருமாலுடைய துன்பம் தரும் தீவினையைப் போக்கி அவருக்குச் சக்கரம் வழங்கிய அழகிய செயலும் காட்சி வழங்கும்.
2270 தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்
தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்

6.018.7
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர் தம் அடியவர்களுக்கு அருள்புரிந்த மேம்பட்ட செயலும், பிரமனுடைய தலை ஒன்றனை நீக்கிய செயலும், மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதியை இடப்பாகமாகக் கொண்ட வடிவும், யானைத்தோலை விரும்பிப் போர்த்திய வனப்பும், செறிந்த சடைமீது கங்கை, பாம்பு, பிறை போன்ற இவற்றை வைத்துப் பொன்போன்ற திருமேனி பொலிந்து தோன்றும் வனப்பும் தோற்றம் வழங்கும்.
2271 செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்
திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும்
நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்றும்
மலைமகளுஞ் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்

6.018.8
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியவர்களின் மனக் கண்முன்னர் அப்பெருமானுடைய செறிந்த வீரக்கழலும், திருவடிகளும், முப்புரங்களை அழித்த வில்லும், நால்வருக்கு உண்மை நெறியை மோனநிலையில் விரித்துரைத்த நுண்மையும், நெற்றிக்கண்ணும், வாகனமாம் காளையும், அடியார்களுடைய மறுபிறவியை நீக்கி அருள் செய்கின்ற கூறுபாடும், பார்வதியின் வடிவும், கங்கையும், புள்ளிகளை உடைய பாம்பும், பிறைச் சந்திரனும் காட்சி வழஙகும்.
2272 அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்
அணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும்
மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றுஞ்
செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்

6.018.9
பொழில் திகழும் பூவணத்து எம்புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்க் கோங்கு அரும்பினை ஒத்த முலையை உடைய பார்வதிக்கு வழங்கிய இடப்பாகமும், இடியைப் போல அழிக்கும் ஆற்றலுடைய மகாவராகத்தினுடைய மணிவயிரக் கோவையைத் தோற்கச் செய்யும் ஒளியை உடைய மருப்பும், வையை நதிக்கரையில் நிற்கும் காட்சியும், உமாதேவி மகிழ்தற்குக் காரணமாக அவர் ஆடிய அழகிய கூத்தும், சிவந்த வானத்தினும் ஒளிமிக்கு விளங்கும், மலைகளைத் தம் திண்மையால் தோற்கடிக்கும் வலிய புயங்களும் காட்சி வழங்கும்.
2273 ஆங்கணைந்த சண்டிக்கும் அருளி யன்று
தன்முடிமேல் அலர்மாலை யளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத் தம்முங்
குழற்கணிந்த கொள்கையொடுகோலந் தோன்றும்
பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்

6.018.10
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியார்களின் மனக்கண் முன்னர்த் தம்மைச் சரணமாக அடைந்து சண்டேச நாயனாருக்கு அருள் செய்து தாம் முடிமேல் சூடிய மாலையை அவருக்கு வழங்கிய காட்சியும், தம்பக்கல் அடைந்துதொண்டு செய்யும் அடியவர்களுக்கு அருள் செய்து அவர்களுடைய பல பிறவிகளையும் போக்கும் தன்மையும், கோங்கு வில்வம் ஊமத்தம் மலர் என்பவற்றை அணிந்த அழகும், பூக்களை அம்புகளாக உடைய மன்மதனுடைய உருவத்தை அழித்த வனப்பும் காட்சி வழங்கும்.
2274 ஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை
மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவந் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை யரக்கர் கோனை
நெறுநெறென அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்

6.018.11
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்பால் அடியவர்களின் மனக்கண் முன்னர்த் தம்மை ஒன்றிய உள்ளத்தோடுதியானிப்பவர் உள்ளத்தில் அவர்கள் தியானித்த அதே வடிவில் இருக்கின்ற காட்சியும், கச்சின்மேல் அணிகலன்களை அணிந்த தனங்களை உடைய பார்வதியை ஒருபாகமாக வைத்து மகிழ்ந்த வடிவமும், நீர் நிறைந்த வடிவுடைய கடலால் சூழப்பட்ட இலங்கையின் மன்னனான இராவணன் உடம்பினை நெறு நெறு என்னும் ஓசை ஏற்படுமாறு நசுக்கிய நிலையும், போரிடும் வடிவத்தை உடைய கூற்றுவனை உதைத்த அழகிய செயலும் காட்சி வழங்கும்.

by C.Malarvizhi   on 21 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.