LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-81

6.081.திருக்கோடிகா 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - கோடீசுவரர். 
தேவியார் - வடிவாம்பிகையம்மை. 
2890 கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
கல்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
மதிற்கச்சி யேகம்பம் மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.
6.081.1
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே, நெற்றியிடத்துக் கண் சேர்ந்த இளங்காளையாய், பக்கமலைகளான மதில்கள் சூழ்ந்த கந்தமாதனத்துறைவானாய், பலவகைப் புவனங்களிலும் சென்று பிறத்தற்குக் காரணமாகிய மயக்கத்தை அறுக்கும் மருந்தாய், மதிலாற் சூழப்பட்ட காஞ்சி மாநகரத்து ஏகம்பத்தைமேவியவனாய், தேவருலகிற் சென்று எறிக்கும் விளக்கொளியாய், மீயச்சூரில் நிலைத்து நிற்கும் வேறுபடு தன்மையனாய், மேகத்தினது அழகு சேர்ந்தகண்டத்தனாய் எம் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.
2891 வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையு மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.
6.081.2
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே வண்டுகள் மொய்க்கும்பூக்களணிந்த குழலையுடைய உமாதேவியின் பாகனாய், திருமறைக் காட்டில் வாழும் அழகினனாய், பண்டு செய்த வினையான் வரும் துன்பத்தைத் தீர்ப்பவனாய், வீட்டுலக வழியை யுணர்த்தும் பரமனாய், செண்டு கொண்டு ஆடும் ஆட்டம் போலஎவ்வகை வருத்தமுமின்றிப் பகைவர் புரங்களை அழித்தவனாய், திருவாரூர் மூலட்டானத்தினனாய் விளங்குவான் ஆவான்.
2892 அலையார்ந்த புனற்கங்கைச் கடையான் கண்டாய் 
அடியார்கட் காரமுத மானான் கண்டாய் 
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய் 
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய் 
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய் 
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய் 
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.
6.081.3
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே, அலைகளுடன் கூடிய நீரையுடையகங்கை தங்கும் சடையனாய், அடியார்களுக்கு ஆரமுதாய், மலையில் தோன்றிவளர்ந்த இளமங்கை பார்வதியின் பங்கனாய், வானோர்தம் முடிக்கணியாய்த்தன் திருவடிகளைத்தந்து நின்றவனாய், இலைபோன்ற திரிசூலப்படையினனாய், ஏழுலகுமாய் வியாபித்த எந்தையாய், கொலைத் தொழிலிற் பழகிய யானையது தோலைப் போர்த்துக் கொண்டவனாய் விளங்குவான் ஆவான். 
2893 மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்
பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்
ஐயா றகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.
6.081.4
திருக்கோடிகாவில் விரும்பி உறையும் அழகனே தனக்கு ஒப்பார் யாரும் இலனாய், மயிலாடுதுறையைத் தனக்குப் பொருந்திய இடமாகக் கொண்டு மகிழ்ந்தவனாய், புற்றில் வாழ் அரவுகளை அணிந்த புனிதனாய், பூந்துருத்தியில் பொய்யிலியாய், பற்றற்ற அடியார்க்கு மறைதலின்றி வெளிப்பட்டு நிற்பானாய், ஐயாறு அகலாத ஐயனாய், குற்றாலத்து விரும்பி உறையுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.
2894 வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.
6.081.5
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அடிகளே கச்சுப் பொருந்திய அழகிய முலையாளின் பங்கனாய், மாற்பேற்றைத் தனக்குரிய இடமாகக் கொண்டு மகிழ்ந்தானாய், போர்ச் செயலில் பழகிய பெரிய விடை ஒன்றை ஊர்தியாக உடையானாய், புகலூரை நீங்காத புனிதனாய், கங்கைபொருந்திய நீண்ட ஒப்பற்ற சடையை உடையானாய், நினைக்கும் அடியாருடைய வினைச்சுமையை இறக்கிவைப்பானாய், கூர்மை பொருந்திய மூவிலை வேற்படையை உடையானாய் விளங்குவான் ஆவான்.
2895 கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்
பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.
6.081.6
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே! மணம் கமழும் கொன்றை மலரை அணிந்து விளங்கும் சடையனாய், கண்ணை அப்பிய செயற்கு விண்ணைப் பொருந்துதலை ஈடாகக் கொடுத்தானாய், உலகில் நிறைந்த பல பிறவிகளிலும் பிறத்தலை அறுப்பானாய், பற்றற்ற அடியார்க்குத் துணை நின்றானாய், திருவடிகளில் தங்கிய சிலம்பு மிக்கு ஒலிப்பத் திரிவானாய், தேவர் கூட்டம் வணங்கிப் பரவும் தலைவனாய், மிகுதியான கொடிகள் கட்டப்பட்ட மதில்களையுடைய தில்லையில் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.
2896 உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்
ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்
காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய்
என்நெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.
6.081.7
திருக்கோடிகாவில் விரும்பியுறையும் அழகனே, மான்கன்று பொருந்திய தொருகரதலத்தனாய், ஒற்றியூரைப் பொருந்தி நிற்கும் இடமாக உடையானாய், மூங்கிலசையும் கழுக்குன்றில் அமர்ந்தானாய், காளத்திக்கண் திகழும்கற்பகமாய், பூணூல் கிடந்தசையும் தோள்கள் எட்டுடைய இறைவனாய், என்நெஞ்சைவிட்டு நீங்கா எந்தலைவனாய், காதணி ஆட நடன மாடுங் கூத்தனாய் விளங்குவான் ஆவான்.
2897 படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி யேழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்
குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் தானே.
6.081.8
திருக்கோடிகாவில் விரும்புயுறையும் அழகனே படமெடுத்தாடும் பாம்பினைக் கச்சாகக் கட்டியவனாய், பராய்த் துறையிலும் பாசூரிலும் பொருந்தியவனாய், ஏழுலகுஞ் சென்று ஆங்காங்கே நடனமாடுவானாய், நான் மறையின் பொருளினனாய், எல்லார்க்கும் தலைவனாய் (நாததத்துவனாய்) மதநீர் ஒழுகுங் களிற்றினை உரித்த வீரனாய், கயிலை மலையில் விரும்பி உறைவானாய், குடமாடியாம் திருமாலை இடப்பாகமாகக் கொண்டானாய் விளங்குவான் ஆவான்.

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.