LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஆறாம் திருமுறை-89

6.089.திருவின்னம்பர் 
திருத்தாண்டகம் 
திருச்சிற்றம்பலம் 
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர். 
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை. 
2963 அல்லிமலர் நாற்றத் துள்ளார் போலும்
அன்புடையார் சிந்தை அகலார் போலுஞ்
சொல்லின் அருமறைகள் தாமே போலுந்
தூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்
வில்லிற் புரமூன் றெரித்தார் போலும்
வீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.1
இன்னம்பர்த் தலத்துத் தான்தோன்றி யீசனாராகிய சிவபெருமானாரே அக இதழ்களையுடைய மலர்களின் நறுமணத்துள் நிலவி இன்பந்தருபவரும், தம்மாட்டு அன்புடையார் சிந்தையை விட்டு அகலாதவரும், தாமே சொற்களையுடைய அரிய வேதங்கள் ஆனவரும், வீட்டுநெறிக்கு வழியாகும் மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் தொழிலினரும், வில்லால் புரமூன்றையும் எரித்தவரும், மிக்க இருளும் மிக்க ஒளியும் ஆனவரும், இரவில் கூத்து ஆட வல்லவரும் ஆவார்.
2964 கோழிக் கொடியோன்தன் தாதை போலும்
கொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும்
உள்குவா ருள்ளத்தி னுள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்
அடைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்குந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.2
இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே கோழிக்கொடியோனாகிய முருகனுக்குத் தந்தையாரும், பூங்கொம்பு போன்ற உமாதேவியை உடலின் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும், ஊழியின் நிகழ்ச்சிகளுக்குத் தலைவரும், தம்மை நினைப்பவர் உள்ளத்தில் தாம் நீங்காமல் உள்ளவரும், சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களையுடைய தேரினை ஊர வல்லவரும், தம்மை அடைந்தவரிடத்து அன்புடையவரும், எழுவகைப் பிறவிகளுக்கும் தாமே காரணரும் ஆவார்.
2965 தொண்டர்கள் தம்தகவி னுள்ளார் போலும்
தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்
பத்தர்கள் தம்சித்தத் திருந்தார் போலும்
கண்டம் இறையே கறுத்தார் போலும்
காமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.3
இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே, தொண்டர்களுடைய மெய்யன்பினிடத்துத் திகழ்பவரும், தூய ஞானநெறிக்குப் பற்றுக்கோடாய் நின்றவரும், பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும், பக்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும், கண்டம் சிறிது கறுத்தவரும், மன்மதனையும் இயமனையும வெகுண்டு ஒறுத்தவரும், முடி மாலையணிந்த சடைமுடியவரும் ஆவார்.
2966 வானத் திளந்திங்கட் கண்ணி தன்னை
வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன் றுடையார் போலும்
ஒளிநீறு பூசு மொருவர் போலும்
தானத்தின் முப்பொழுதுந் தாமே போலும்
தம்மிற் பிறர்பெரியா ரில்லார் போலும்
ஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.4
இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே வானில் திகழும் பிறைச்சந்திரனாகிய கண்ணியைத் தம் வளரும் சடைமேல் வைத்து மகிழ்ந்த வலியவரும், ஊன் பொருந்திய சூலம் ஒன்றை உடையவரும், ஒள்ளிய திருநீற்றைப் பூசும் ஒருவரும், முச்சந்தி நேரங்களிலும் வழங்கப்படும் அருக்கியம் முதலியவற்றை ஏற்று அருள்பவரும், தம்மினும் பெரியர் பிறர் இல்லாதவரும், பன்றியினது கொம்பு மார்பில் விளங்க அணிந்தவரும் ஆவார்.
2967 சூழுந் துயரம் அறுப்பார் போலும்
தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்
ஆடலுகந்த அழகர் போலும்
தாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு
தன்மை யளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பு மறுப்பார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.5
இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே, வந்து வளைத்துக்கொள்ளும் துயரங்களை நீக்குபவரும், படைப்பு அழிப்புக்களைச் செய்து நிற்பவரும், ஆழ மிக்க கடலிடத்துத் தோன்றிய நஞ்சை உண்டவரும், கூத்து ஆடுதலை விரும்பும் அழகரும், தாழ்ந்த மனத்தினை உடைய அடியேனையும் அடிமைகொண்டு ஞானமளித்த தலைவரும், ஏழுவகையாகவும் பிறத்தலை அறுத்தெறிபவரும் ஆவார்.
2968 பாதத் தணையுஞ் சிலம்பர் போலும்
பாரூர் விடையொன் றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்
பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்
வேடம் பரவித் திரியுந் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.6
இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே, திருவடிகளில் கட்டப்பட்ட சிலம்பினரும், பூமிமேல் நடக்கும் ஓர் இடபத்தை ஊர்தியாக உடையவரும், பூதப்படையைச் செயற்படுத்தும் புனிதரும், புகலூரைப் பொருந்திய புராணரும், வேதங்களின் பொருளாய் விளங்குபவரும், திருநீறு, கண்டிகை, சடை, முதலியவை எங்கே காணப்படினும், அங்கேயெல்லாம் தம்மை ஏத்தி இறைஞ்சி நிற்கும் தொண்டர் துன்பப்படா வண்ணம் காத்து நின்றாரும் ஆவார்.
2969 பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்
பத்தர்கள்தம் சித்தத் திருந்தார் போலும்
கல்லாதார் காட்சிக் கரியார் போலும்
கற்றவர்கள் ஏதங் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்
பொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்
எல்லாரு மேத்தத் தகுவார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.7
இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானாரே, பற்கள் நிறைந்த தலையோட்டில் உணவு ஏற்று உண்பவரும், பத்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும், மெய்ந்நூல்களைக் கல்லாதவரால் காணப்படாதவரும், அவற்றைக் கற்பவரின் துன்பங்களைக் களைபவரும், கொடுமைமிகும் பூதப்படையினரும், அலைமோதுங் கடல் ஏழும் குலமலை ஏழும் தாமே ஆனவரும், எல்லாரும் ஏத்துதற்குக் காரணமான அருளினரும் ஆவார்.
2970 மட்டு மலியுஞ் சடையார் போலும்
மாதையோர் பாக முடையார் போலும்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்
காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்
ஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்
எட்டுத் திசைகளுந் தாமே போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.8
இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவபெருமானாரே, பூக்களின் தேன்மிகும் சடையினரும், உமையை ஒரு பாகத்திலுடையவரும், துன்பம், பிணிகளைத் தவிர்ப்பவரும், இயமன் உயிருக்கு இறுதி கண்டவரும், எப்பொழுதும் கூத்தாடுந் தலைவரும், நிலம், நீர், தீ, வளி, ஆகாசம் ஆம் ஐம்பூதங்கள் ஆனவரும், எட்டுத் திசைகளும் தாமே ஆனவரும் ஆவார்.
2971 கருவுற்ற காலத்தே யென்னை ஆண்டு
கழற்போது தந்தளித்த கள்வர் போலும்
செருவிற் புரமூன்றும் அட்டார் போலும்
தேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
மலரடிகள் நாடி வணங்க லுற்ற
இருவர்க் கொருவராய் நின்றார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.9
இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவபெருமானாரே நான் கருவாய்ப் பொருந்திய காலத்திலேயே மெய்யுணர்வைப் பெறும் அவாவை என்பால் உண்டாக்கிப் பின் திருவடித் தாமரைகளைத் தந்து காத்த கள்வரும், போரில் பகைவர்புரம் மூன்றையும் அழித்தவரும், தேவர்க்கும் தேவராம் செல்வரும், கூடியபின் பிரியாத மைந்தரும், தம்முடைய மலரடிகளை விரும்பி வணங்கிய பிரமனுக்கும் திருமாலுக்கும் ஒப்பற்ற தலைவராய் நின்றவரும் ஆவார்.
2972 அலங்கற் சடைதாழ ஐய மேற்று
அரவம் அரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொன் றுடையார் போலும்
வான்தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை
விறலழித்து மெய்ந்நரம்பால் கீதங் கேட்டன்
றிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்
இன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.
6.089.10
இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானார் கொன்றை மாலையணிந்த சடை தாழப் பிச்சை ஏற்க வல்லவரும், பாம்பினை இடையில் கட்டவல்லவரும், வலக்கையில் மழுப்படை ஒன்றை உடையவரும், தருக்கினால் உயர்ந்த தக்கனுடைய வேள்வியைச் சிதைத்தவரும், கயிலை மலையை எடுத்த அளவில் தனது வெற்றி பற்றி மகிழ்ந்த இராவணனது அவ்வெற்றியை அழித்துப் பின் அவன் தன் உடல் நரம்பால் எழுப்பிய இசையைக் கேட்டு அவற்கு ஒளிவாளைக் கொடுத்தவரும் ஆவார்.

by C.Malarvizhi   on 23 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.