LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- மற்ற தமிழ் தொண்டுகள்

புகழ்பெற்ற தமிழ்‌ அறிஞர்‌ ஜி.யு.போப்‌புக்கு அவர் பிறந்த கனடாவின்‌ பிரின்ஸ்‌ எட்வர்ட்‌ தீவில்‌ உள்ள பெடெக்‌ நகரத்தில்‌ சிலை வைக்கிறது கனேடிய தமிழர்‌ பேரவை

பெடெக்‌. பிரின்ஸ்‌ எட்வர்ட்‌ தீவு - ஜூலை 10. 2023 :  புகழ்பெற்ற தமிழ்‌ அறிஞர்‌ ஜி.யு.போப்‌புக்கு அவர் பிறந்த கனடாவின்‌ பிரின்ஸ்‌ எட்வர்ட்‌ தீவில்‌ உள்ள பெடெக்‌ நகரத்தில்‌ சிலை வைக்கிறது கனேடிய தமிழர்‌ பேரவை

கனேடிய மண்ணின்‌ முதல்‌ தமிழறிஞரான ஜி.யு.போப்‌ அவர்களுக்கு. அவரது பிறந்த மண்ணில்‌ அவரது உருவச்சிலை ஒன்றைத்‌ திறந்து வைப்பதன்‌ மூலம்‌ கனடியத்‌ தமிழர்‌ பேரவை வரலாறு ஒன்றைப்‌ படைக்கவுள்ளது. இந்த அற்புதமான நிகழ்வு ஜூலை 15, 2023 அன்று காலை 10.00 மணிக்கு AST (9 AM EST, 6:30 PM IST, 2 PM GMT) நடைபெறவுள்ளது. அரசியல்‌ மற்றும்‌ சமூகத்‌ தலைவர்கள்‌ உட்பட நூற்றுக்‌ கணக்கானோர்‌ அதில்‌ கலந்து கொள்வார்கள்‌ என்றும எதிர்பார்க்கப்படுதிறது.

தமிழ்‌ மொழிக்கு ஜி.யு.போப்‌ அவர்கள்‌ ஆற்றிய பங்களிப்புகள்‌ அசாதாரணமானவை என்பதாலே அவர்‌ தமிழ்‌ அறிஞர்கள்‌ மத்தியில்‌ போற்றப்படும்‌ ஒருவராகக் கருதப்படுதின்றார்‌. இந்த உருவச்சிலை வட அமெரிக்காவில்‌ ஒரு தமிழ்‌ அறிஞருக்காக நிறுவப்படவுள்ள முதலாவது நினைவுச்சின்னமாகும்‌. இது போப்‌ அவர்களின்‌ பணியின்‌ முக்கியத்துவத்தை மேலும்‌ எடுத்துக்காட்டுதிறது. 1968 ஆம்‌ ஆண்டு உலகத்‌ தமிழ்‌ ஆராச்சி மாநாட்டின்‌ போது ஜி.யு.போப்‌ அவர்களை கெளரவிக்கம்‌ வகையில்‌ தமிழக அரசு சென்னையில்‌ அவரது உருவச்சிலை ஒன்றை அமைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

1980 மற்றும்‌ 1990களில்‌ இலங்கையிலிருந்து. பேரழிவைத்‌ தந்த கறுப்பு ஜூலை போன்ற தமிழர்‌ எதிர்ப்புக்‌ கலவரங்களைத்‌ தொடர்ந்து கனடாவிற்க கணிசமான தமிழர்கள்‌ குடிபெயர்ந்த காரணத்தால்‌. இப்போது ஆசியாவிற்கு வெளியே மிகப்பெரிய புலம்பெயர்‌ தமிழ்ச்‌ சமூகமாக காணப்படுகின்றது. தற்போது 300,000 க்கும்‌ அதிகமான தமிழர்கள்‌ கனடாவில்‌ வசிக்கின்றனர்‌. அவர்களில்‌. தொழில்முனைவோர்‌. தொழில்‌ வல்லுநர்கள்‌. கல்வியாளர்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ தலைவர்கள்‌ என அவர்களின்‌ வெற்றியானது. தமிழர்‌ சமூகத்தின்‌ துடிப்பானதும்‌ செழிப்பானதுமான தன்மையை பிரதிபலிக்கிறது. இவைக்கு மேலாக கனடியத்‌ தமிழர்கள்‌ ஒன்று சேர்ந்து ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில்‌ தமிழ்‌ கற்கைகளுக்கான இருக்கையை நிறுவினர்‌.

ஜி.யு.போப்‌ அவர்களின்‌ 200வது பிறந்தநாளை நினைவுகூரும்‌ வகையிலும்‌ தமிழ்‌ மொழிக்கு அவர்‌ ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும்‌ வகையிலும்‌. 2020ல்‌ அவருக்கு நினைவுச்சின்னம்‌ அமைக்க கனடியத்‌ தமிழர்‌ பேரவை உறுதியளித்தது. இருப்பினும்‌. கோவிட்‌-19 தொற்றுநோய்‌ காரணமாக. இத்திட்டத்தை நிறைவு செய்யும்‌ முயற்சிகள்‌ ஜூலை 2023 வரை தாமதமாகின.

"தமிழர்களின்‌ குரலாகச்‌ செயல்படும்‌ அமைப்பாக. இந்த வரலாற்றுச்‌ சிறப்புமிக்க திட்டத்தில்‌ ஈடுபட்டு. ஜி.யு.போப்‌ அவர்கள்‌ நமது மொழிக்கு ஆற்றிய ஈடுணையற்ற பங்களிப்பைப்‌ போற்றும்‌ வகையில்‌ அவருக்கு நினைவுச்‌ சின்னம்‌ அமைப்பது நமது கடமை எனவும்‌ மேலும்‌ இந்த முயற்சி தமிழ்‌ மொழியில்‌ அசாதாரணமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தனிநபருக்கு எங்கள்‌ நன்றியை தெரிவிக்கவும்‌ மேன்மைப்‌ படுத்தவும்‌ ஒரு வாய்ப்பாகும்‌.” என கனடியத்‌ தமிழர்‌ பேரவையின்‌ முன்னாள்‌ தலைவரும்‌ இந்த நினைவுச்‌ சின்னம்‌ அமைக்கும்‌ இட்டத்தின்‌ தலைவருமான இரு. சிவன்‌ இளங்கோ தெரிவித்தார்‌.

ஏப்ரல்‌ 24. 1820 அன்று பிறந்த ஜி.யு.போப்‌ அவர்கள்‌ தனது 19வது வயதில்‌ மிசனரி சேவையில்‌ சேர்ந்து தென்னிந்தியாவிற்குச்‌ சென்றார்‌. மொழிகள்‌ மீதான அவரது ஈர்ப்பு அவரைத்‌ தமிழ்‌ மொழியைக்‌ கற்றுக்கொள்ள வழிவகுத்தது. மேலும்‌ அவர்‌ தென்னிந்தியாவில்‌ இருந்த காலப்பகுதியில்‌ அவருக்கு தமிழ்‌ மொழி மற்றும்‌ தமிழ்ப்‌ பண்பாட்டின்‌ செழுமையையும்‌ வெளிப்படுத்தியது. போப்‌ அவர்கள்‌ தமிழ்‌ இலக்தியத்தில்‌ முக்திய பங்களிப்புக்களை வழங்கும்‌ ஒருவராக மாறினார்‌. அத்துடன்‌ பல முக்தியமான தமிழ்‌ இலக்கியப்‌ படைப்புகளை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்தார்‌. அவர்‌ தமிழிலும்‌ ஆங்கிலத்திலும்‌ பன்னிரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்‌. 1886ல்‌ திருக்குறளை ‘The Sacred Kurral என்ற பெயரில்‌ மொழிபெயர்த்து வெளியிட்டார்‌ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதைத்‌ தொடர்ந்து 1893ல்‌ நானூறு. நான்கு வரிகள்‌ கொண்ட 'நாலடியார்‌' என்னும்‌ தமிழ்‌ நூலையும்‌. 1890ல்‌ திருவாசகத்தையும்‌ மொழிபெயர்த்தார்‌. அதனைத்‌ தொடர்ந்து போப்‌ அவர்கள்‌ இங்கிலாந்தில்‌ உள்ள புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட்‌ பல்கலைக்கழகத்தில்‌ தமிழ்ப்‌ பேராசிரியராகப்‌ பணியாற்றினார்‌. தமிழின்‌ செமுமையான பாரம்பரியத்தை ஆழமாகப்‌ போற்றும்‌ வகையில்‌. தமிழ்‌ அறிஞர்‌ திருவள்ளுவரின்‌ ஞானத்தை உலகம்‌ முழுவதும்‌ அறிமுகப்படுத்துவதில்‌ போப்‌ அவர்களின்‌ திருக்குறள்‌ மொழிபெயர்ப்பு முக்தியப்‌ பங்கு வதித்தன.

அவர்‌ தனது வாழ்நாளில்‌ ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளைக்‌ தமிழ்நாட்டுல்‌ கழித்தார். பிப்ரவரி 11, 1908 அன்று தனது . 88 வயதில்‌ அவர்‌ இம்மண்ணுலகை விட்டு நீங்கினார்‌. ஜி.யு.போப்‌ அவர்களின்‌ உருவச்சிலை திறப்பு விழாவை கனடிய தமிழர்‌ பேரவையின்‌ முகநூல்‌ பக்கத்தில்‌ பார்க்கலாம்‌. ஊடகங்கள்‌ மற்றும்‌ மேலதிக தகவல்களுக்கு. ஜி.யு.போப்‌ உருவச்சிலை இட்டக்‌ குழுவின்‌ தலைவர்‌ இரு. சிவன்‌ இளங்கோ அவர்களை 1-416-707-9104 என்ற இலக்கத்தில்‌ தொடர்பு கொள்ளவும்‌.

கனடிய தமிழர்‌ பேரவை பற்றியது:

கனடிய தமிழர்‌ பேரவை. கனடாவில்‌ உள்ள தமிழ்‌ சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்‌ ஒரு முக்திய அமைப்பாகும்‌. கனடாவிலும்‌ சர்வதேச அளவிலும்‌ தமிழர்களின்‌ உரிமைகள்‌ மற்றும்‌ நலனுக்காக வாதிடும்‌ அதே வேளையில்‌ தமிழ்ப்‌ பண்பாடு. மொழி மற்றும்‌ பாரம்பரியத்தை பாதுகாக்கவும்‌ மேம்படுத்தவும்‌ கனடிய தமிழர்‌ பேரவை செயல்படுதிறது. அத்துடன்‌. கனடிய தமிழர்‌ பேரவை கனடாவின்‌ பன்முகக்‌ கலாச்சாரக்‌ கட்டமைப்பிற்கள்‌ வலுவான தமிழ்‌ அடையாளத்தை வளர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளில்‌ ஈடுபட்டுள்ளது. மற்றும்‌ தமிழ்‌ கனடியர்களிடையே சமூக. கலாச்சார மற்றும்‌ கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்திறது.

Canadian Tamil Congress (CTC) to Unveil Monument Honoring G.U.Pope, Renowned Tamil Scholar, in Bedeque, Prince Edward Island


Bedeque, Prince Edward Island - July 10, 2023 - The Canadian Tamil Congress (CTC) is set to make history with the unveiling of a monument for G.U.Pope, the first Tamil scholar from Canadian soil, in his birthplace. This groundbreaking event will take place on July 23, 2023, at 10 AM AST (9 AM EST, 6:30 PM IST, 2 PM GMT), and is expected to draw hundreds of attendees, including political and community leaders.

G.U.Pope's contributions to the Tamil language were extraordinary, making him a revered figure among Tamil scholars. This monument will be the first-ever built for a Tamil scholar in North America, further highlighting the significance of Pope's work. It is worth noting that the Tamil Nadu Government erected a monument in Chennai in 1968 to honor G.U.Pope during the World Tamil Conference.

The Canadian Tamil community, which experienced significant migration from Sri Lanka in the 1980s and 1990s following the devastating Black July anti-Tamil riots, is now the largest Tamil diaspora outside of Asia, with over 300,000 Tamils residing in Canada. Their success as entrepreneurs, professionals, academics, and political leaders reflects the vibrant and thriving nature of the community. Additionally, Canadian Tamils established the Chair in Tamil Studies at the University of Toronto.

The CTC had committed to constructing a monument for G.U.Pope in 2020, commemorating his 200th birth anniversary and recognizing his immense contributions to the Tamil language. However, due to the COVID19 pandemic, the project completion was delayed until July 2023.

"As an organization that serves as the voice of Tamils, it was our obligation to embark on this historic project and erect a monument in honor of G.U.Pope, acknowledging his unparalleled contributions to our language," said Sivan Ilangko, former president of the Canadian Tamil Congress and Chair of the project. "This initiative is also an opportunity for us o express our gratitude and pay tribute to an individual who made an extraordinary impact on the Tamil language."

Born on April 24, 1820, G.U.Pope joined the missionary service at the age of 19 and moved to South India. His fascination with languages led him to study Tamil, and his time in South India exposed him to the richness of the Tamil language and culture. Pope became a major contributor to Tamil literature, translating numerous important Tamil literary works into English. He authored twelve books, some in Tamil and others in English. Notably, in 1886, he translated and published the Thirukkural as 'The Sacred Kurral,' followed by the translation of 'Naladiyar,' a Tamil book with four hundred quatrains in 1893, and the 'Thiruvasagam' in 1990. Later in his career, Pope served as a Professor of Tamil at the prestigious Oxford University in England.

Pope's translations played a pivotal role in introducing the wisdom of the Tamil bard Thiruvalluva to the rest of the world, enabling a deeper appreciation of Tamil's rich heritage. In Tamil Nadu, where he spent approximately forty years of his life, he was affectionately known as "Pope Ayar." G.U.Pope passed away at the age of 88 on February 11, 1908.


The opening ceremony of the G.U.Pope monument can be viewed on the Canadian Tamil Congress Facebook page. For media inquiries and further information, please contact Sivan Ilangko, Chair of the G.U.Pope Monument Project Committee, at +1-416-707-9104.

 

 

About Canadian Tamil Congress:
The Canadian Tamil Congress (CTC) is a prominent organization representing the Tamil community in Canada. It works to preserve and promote Tamil culture, language, and heritage while advocating for the rights and welfare of Tamils both in Canada and internationally. The CTC engages in various initiatives to foster a strong Tamil identity within the multicultural fabric of Canada and promotes social, cultural, and educational development among Tamil Canadians. For more information, visit www.canadiantamilcongress.ca.

by Swathi   on 10 Jul 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன் பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.