|
||||||||
தமிழ்மொழி இலக்கண ஆய்வு தொடரவேண்டும்! |
||||||||
''முன்'' என்ற சொல்பற்றி ஒரு ஐயத்தை இரண்டு நாள்களுக்குமுன் முகநூலில் பதிவுசெய்தேன்.
அந்தப் பதிவையொட்டி இதுவரை 90 கருத்துக்கள் தமிழாய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
பழந்தமிழ் இலக்கணங்களில் இதற்கு விடை இருக்கிறதா?
பழந்தமிழ் இலக்கிய வழக்குக்களில் எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றனவா?
இன்றைய எழுத்துத்தமிழ் வழக்கில் எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றனவா?
கருத்தாடல்கள் சிறப்பாகவே அமைந்துள்ளன!
தமிழ் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் ( செம்மொழி இராமசாமி, மொழியியல் பேராசிரியர்கள் திரு. நடனசபாபதி, திரு. இரவிசங்கர் கங்காதரன், திரு. வாசு இரங்கநாதன், திரு. முத்தையா சுப்பிரமணியன்) மட்டுமல்லாமல், மருத்துவர் திரு. இரவீந்திரன் வெங்கடாச்சலம், வேதிப்பொறியியல் துறையைச் சேர்ந்த திரு. இராமசாமி செல்வராசு அவர்கள், வேதியியல் துறையைச் சேர்ந்த திரு. ஜெயபாண்டியன் கோட்டாளம் அவர்கள், கணினியியல் துறையைச் சேர்ந்த திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள் என்று பலதுறை அறிஞர்கள் இந்தக் கருத்தாடலில் பங்கேற்றுவருகின்றனர்!
இருப்பினும் இதுபற்றிய ஒரு முடிவான முடிவுக்கு ... தெளிவான முடிவுக்கு - வர இயலவில்லை! கருத்தாடல் தொடர்கிறது!
இது நமக்கு எடுத்துக்காட்டுவது ... தமிழ்மொழி அமைப்பின் நுட்பங்கள்பற்றிய ஆய்வு முற்றுப்பெறவில்லை! தொல்காப்பியம், நன்னூல் போன்ற பழந்தமிழ் இலக்கணங்கள்மட்டும் போதாது!
தமிழ்மொழி இலக்கணம் மேலும் மேலும் விரிவாக்கப்படவேண்டும்! இலக்கணக் கொள்கைகள் தொடர்ந்து வளப்படுத்தப்படவேண்டும்! பழந்தமிழ் இலக்கண அறிவும் தேவை! இலக்கிய அறிவும் தேவை! மொழியியலும் தேவை! தரவுகள் தேவை!
எல்லாவற்றையும்விட மொழி ஆய்வில் ஆர்வம் தேவை!
பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் இதுபோன்ற கருத்தாடல்களில் , பதிவுகளுக்கு ''விருப்பம்'' மட்டும் இடுகிறார்கள்! தங்கள் கருத்துக்களைப் பதிவிடுவது இல்லை! இந்நிலை மாறவேண்டும்!
-தெய்வ சுந்தரம் நயினார்
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|