|
||||||||
தமிழக கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் !! |
||||||||
![]() தமிழகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது ! சென்னையில் உள்ள பல வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைப்பதில்லை. தமிழர் பண்பாட்டு நடுவம் உட்பட பல தமிழ் அமைப்புகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று வணிக நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக பல கடைகள் தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு ஒத்துக் கொண்டனர். இருப்பினும் சில கடைகள் தமிழில் பெயர் பலகை வைக்க எந்த ஆணையும் இல்லை, திமுக ஆட்சியோடு அந்த சட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்று சாக்குபோக்கு சொல்லி வருகிறார்கள். இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக நாம் அரசுக்கு விண்ணப்பம் அளித்தோம். அதில் தமிழில் வணிக நிறுவனங்கள் கட்டாயம் பெயர் பலகை வைக்க மறு ஆணை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டோம். இந்த விண்ணப்பத்திற்கு பதில் அளித்த தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை,தமிழில் பெயர் வைப்பது கட்டாயம் என்றும், அதை ஏற்கனவே மாநகராட்சி அலுவலகம் உறுதி செய்து வருகிறது என்றும் அதனால் மறு ஆணை தேவையில்லை என்றும் பதில் கூறியுள்ளது. இதனால் அனைவருக்கும் நாம் அறிவிப்பது என்னவெனில், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் கட்டாயம் தமிழில் பெயர்வைக்க வேண்டும். அவ்வாறு தமிழில் பெயர் இல்லாத கடைகளின் பெயர் பலகைகளை மாநகராட்சியிடம் புகார் அளித்து நாம் அகற்றலாம் அல்லது தமிழ் அமைப்புகள் தாங்களாகவே முன்வந்தும் அகற்றலாம். இனியும் தமிழில் பெயர் பலகை வைப்பது சட்டமில்லை என்று எவரும் கூற இயலாது. அதற்கான ஆவணத்தை தான் நாம் இங்கு இணைத்துள்ளோம்.
நன்றி:தமிழர் பண்பாட்டு நடுவம் |
||||||||
by Swathi on 05 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|