LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

தாய்க்காக கோவில் கட்டிய தமிழர் !!

துறையூர் - ஆத்தூர் சாலையில், தனது தாயின் மீது கொண்ட அன்பினால் அவருக்கு கோவில் கட்டியுள்ளார் துறையூரைச் சேர்ந்த சி.சுரேஷ்குமார்.


இவரது தாய் தனபாக்கியம் இவர் கடந்த 2007 ம் ஆண்டு உயிரிழந்தார். தாயின் மீது அளவு கடந்த அன்பை செலுத்தி வந்த இவர். தனது தாய்க்காக கோவில் கட்டவேண்டுமென்று கருதினார்.


தனது கனவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அவர் துறையூர்-ஆத்தூர் சாலையில் உள்ள இடுகாடு அருகே 2.75 ஏக்கர் பரப்பளவில் தனது தாய்க்காக கோவில் எழுப்பியுள்ளார். 


இந்த கோவிலில் தேசிய விருது பெற்ற கும்பகோணம் ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்ட சுமார் நான்கு அடி உயரமுள்ள தன் தாயின் வெண்கலச் சிலையை வைத்துள்ளார். தாயின் சிலையின் முன்பு தனது தாய் பூமியில் வாழ்ந்த 64 ஆண்டுகளை குறிக்கும் விதமாக 64 அடி உயர கிரானைட் கல் தூணும், அதன் மீது தாய் தனது குழந்தைக்கு பாலூட்டுவது போன்ற சிலையும் வைத்துலல்ர். தாய் சிலை பீடத்துக்கு கீழே மிகப்பெரிய மீன் தொட்டி கட்டி அதை அனைவரும் காணும் விதமாக தாயின் கோவிலைச் சுற்றி நடைமேடையும், பூங்காவையும் நிறுவியுள்ளார். 


இந்த கோவிலின் உள்பகுதியில் தியான மண்டபம் உள்ளது.அனைத்து மதத்தினரும் விழாக்கள் நடத்தவும், அன்னதானம் செய்யவும் இடம் இலவசமாக அளிக்கப்படும்.


நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், ஓய்வுக்காக அமர கல்லால் ஆன இருக்கைகளும், அவர்கள் வாசிக்க அனைத்து செய்தித்தாள்களும் வாங்கி வைக்கப்படுகிறது. 


"மாற்றுத்திறனாலிகளே தங்கள் தாயை போற்றுகிறபோது என்னை குறையின்றி இவ்வுலகுக்கு கொண்டு வந்த எனது தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த கோவிலை கட்டியிருக்கிறேன் என்கிறார் சுரேஷ்குமார்.


தன்னை ஈன்ற பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் பாசக்கார குழந்தைகள் பெருகி வரும் இந்த சமூகத்தில். சுரேஷ்குமார் கட்டியிருக்கும் இந்த தாய் கோவில்.... ஒவ்வொரு தாய்க்கும் பெருமை சேர்க்கும் என்றால் அது மிகை ஆகாது. 

Donation
by Swathi   on 10 May 2014  8 Comments
Tags: Mother Temple India   Mother Temple   Thai Kovil   Thai Kovil Thuraiyur   Mother Temple Tamilnadu   தாய் கோவில்   தாய் கோவில் துறையூர்  
 தொடர்புடையவை-Related Articles
தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !! தாய்க்கு கோயில் கட்டுகிறார் ராகவா லாரன்ஸ் !!
தாய்க்காக கோவில் கட்டிய தமிழர் !! தாய்க்காக கோவில் கட்டிய தமிழர் !!
கருத்துகள்
26-Sep-2016 06:52:48 Anbu said : Report Abuse
தாயினும் மேலான தெய்வம் யாரும் இல்லை, அந்த உயர்ந்த மனிதன் என் மூத்த சகோதரன் .
 
10-Jul-2015 01:47:59 குருமூர்த்தி..ர.ரெ said : Report Abuse
நல்ல செயல் நானும் என் தாய் தந்தை நினைவாக என்னால் முடிந்த உதவிகளை என் ஊர் மக்களுக்கு செய்வேன்
 
08-Apr-2015 02:25:20 manju said : Report Abuse
really u r great
 
28-Mar-2015 22:35:20 logesh said : Report Abuse
உங்கள் தாய் இன் மீது கொண்ட அன்பை கண்டு வியக்கிறேன்
 
25-Mar-2015 03:04:30 அண்ணாமலை.G said : Report Abuse
20-03.2015 அன்று என் வாழ்வில் மறக்கமுடியாத நாள் அது உங்களை சந்தித்தது,தாய் கோயிலை தரிசித்தது.இந்த சமுகத்தில் கண்டிப்பாக தாயின் அன்பையும் தேவையும் புரிந்துகொள்ள இது உதவும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் என்றென்றும் வளமுடனும் மிக்க நலமுடனும் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்
 
11-Feb-2015 00:40:03 ராஜபெருமாள் said : Report Abuse
சொல்வதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை தமிழே தலை வணங்குகிறேன்.நம் பாரத தாய் வாழ்க வாழ்க
 
07-Nov-2014 20:40:42 ரவி முத்துசாமி said : Report Abuse
நல்ல செயல். எனது கனவும் அதுவே. இதே போல எனது ஊர் தாய் தந்தை பெயரில் அறக்கட்டளை தொடங்கி எனது ஊர் பஞ்சாயத்தை சுற்றி உள்ள கிராங்களுக்கு நற்பணி செய்ய தொடங்கி உள்ளேன்.
 
01-Nov-2014 00:14:08 manivannan said : Report Abuse
He is really great man......
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.