LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு

கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு

சியோல், தென்கொரியா, கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021, திருவள்ளுவர் ஆண்டு 2052, தைத்திங்கள் 18-ம் நாள் ஞாயிறன்று (31 சனவரி 2021) இணையவழி இயங்கலையில் நடைபெற்றது. கொரியாவில் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்பட்டு அது தற்பொழுது வெகுவாக  கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேரடி நிகழ்வு தவிர்க்கப்பட்டது.

நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மதுரை தமிழ் சங்கத்தின் இயக்குனர் முனைவர் தா. லலிதா, முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, கவிப்பேரரசு வைரமுத்து, ஊடகவியலாளர் திரு நக்கீரன் கோபால், எழுத்தாளர் ஆதனூர் சோழன், மக்களிசை பாடகி மதுரை சின்னப்பொண்ணு, உலக தமிழ் வர்த்தக அமைப்பின் தலைவர் திரு செல்வகுமார் மற்றும் திரு பாட்சா, மேலாளர், இரசிய அறிவியல் மற்றும் பண்பாட்டு நிலையம் ஆகியோர் வாழ்த்து அனுப்பியிருந்தனர். சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி திரு. காரை செல்வராஜ் கலந்துகொண்டார்.

நிகழ்வில் முதலில் தலைவர்களின் வாழ்த்து செய்தி இடம்பெற்றதது, பின்னர் குழந்தைகள் அவரவர் வீடுகளிலிருந்து நடனம், பாட்டு, ஓவியம் வரைதல், மாறுவேடம் மற்றும் இசைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து காட்டினர். குறிப்பாக உழவர் வேடமிட்டு குழந்தைகள் கலந்துகொண்டது உணவை விளைய வைக்கும் உழவருக்கு பொங்கல் நாளில் நன்றிகூறுவதாய் அமைந்திருந்தது. நேரடியாக கூடி பொங்கல் வைக்க வாய்ப்பில்லாததால் அவரவர் வீட்டில் கோலமிட்டு பொங்கல் வைத்து ல்வேறு இனிப்பு வகைகளை செய்து பொங்கும் பொங்கலை காணொளியாக்கி அனைவருக்கும் பொங்கலோ பொங்கல் சொல்லி மகிழ்ந்தனர்.

பொங்கல் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காரை செல்வராஜ் மக்களின் வாக்குகளைப்பெற அரசியல் பிழைத்தோர் எதிர்கொள்ளும் அறைகூவல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். கொள்கை கோட்பாடுகளுக்கு தேர்தல் அல்லாத முன்னெடுப்புகளில் மக்கள் வெகுவாக வழங்கும் நன்மதிப்பு, தேர்தல் நெருக்கத்தில் சம்மந்தப்பட்ட எளிய மக்களின் சிறிய கோரிக்கைகளுக்கு பொருளாதார உதவியளிப்பது, பணம் மற்றும் உணவு வழங்குதல் ஆகியவற்றை செய்யும் உண்மையில் அரசியலை பிழைப்பாக கருதி செயல்படுவோரால் திசைதிருப்பப்படுகிறது. ஆகையால் பணம் மற்றும் அதிகார பலமில்லாத மக்களின் நன்மை கருதி மட்டும் செயல்படுவோருக்குதான் மிகப்பெரிய அறைகூவல்கள் இருக்கிறதது என்றார். மிகவும் நேர்மையான அரசியலை முன்னெடுப்பவர்களின் குரலுக்கு மக்கள் செவிசாய்ப்பது ஒரு கடினமான நிகழ்வாக மாறிப்போனது என்றார். மேலும் அரசியலில் மக்களுக்கும் அரசியல் இயக்கங்களுக்குமிடையே வாக்குக்குகளைப்பெற பொறிமுறைகளை வகுக்கும் தொழில்முறை மூன்றாம் தரப்பின் வரவும் இங்கு கவனிக்கத்தக்கது. மக்கள் நேர்மையாக உழைக்கும் அரசியல் இயக்கங்களை கண்டறிந்து வாக்களிக்க வேண்டுமென்றார். ஒரு அரசியல் இயக்கத்தில் பணிப்பவராக இருந்தாலும் எவ்வித இயக்கசார்பின்றி ஒரு பொது பார்வையாளராக தமது கருத்தை திரு. கரை செல்வராஜ் முன்வைத்ததை அனைவரும் பாராட்டினார். பின்னர் திரு கரை செல்வராஜ் அவர்கள் சங்கத்தின் தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீட்டர் சகாய டார்சியூஸ் அவர்களின் "சிதறல்கள்" என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டு கவிஞரை பாராட்டினர். தொகுப்பை முழுதும் படித்து புதிய எழுத்தாளரை ஊக்கப்படுத்தினார்.

பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நிகழ்வன்று நிகழ்த்தப்படும் தலைவர் உரையை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் இராமசுந்தரம் நிகழ்த்தினார். கரோனா பெருந்தொற்று காலத்தில் சங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகளை குறிப்பிட்டார். குறித்த காலத்தில் இங்குள்ள தூதரகம் ஆற்றிய பணிகளை நன்றிகூறி பாராட்டினார். மேலும் இங்குள்ள ஆசிய குழந்தைகளுக்கு நிலைத்திருக்கூடிய கட்டணம் குறைவான சர்வதேச ஆரம்பப் பள்ளியை அமைக்க குழு ஏற்படுத்தப்பட்டு பணிகள் நடைபெறும் என்றார். இறுதியாக ஈழதமிழர் துயர் துடைக்க உலகம் உதவிட வேண்டும் என கேட்டுகொண்டார். பாக் நீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை நிறுத்தக்கோரும் தமிழ்நாட்டு மக்களின் குரலை எமது சங்கமும் பொங்கல் திருநாள் - 2021 நிகழ்வில் எதிரொலிக்கிறது என்றார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம், துணைத்தலைவர் ஜா. கிறிஸ்ட்டி கேத்தரின், செயலாளர் முனைவர் கு. இராமன்ம, எதிர்கால ஆளுமைக்குழு தலைவர் முனைவர் செ. அரவிந்த ராஜா,  நிகழ்ச்சிகளுக்கான இணைச்செயலாளர் முனைவர். மோ. பத்மநாபன், தகவல் தொடர்பு செயலாளர் பொறியாளர் பீ. சகாய டார்சியூஸ், அமைப்பாளர்-கலை மற்றும் பண்பாடு திருமதி ப. சரண்யா, தொழில்நுட்ப அமைப்பளார் மு. ஆனந்த், கொள்கை மற்றும் வழிமுறைக்குழு தலைவர் முனைவர் அந்தோணி ஆனந்த், செயல்பட்டுக்குழு தலைவர் முனைவர் பு. பாஸ்கரன், பெண்கள் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ச. காயத்ரி, முனைவர் சத்யா மோகன்தாஸ், திரு ஹரிவேந்தன் ரகுபதி, உணவுத்துறை பொறுப்பாளர் திரு நீ. கோபாலகிருஷ்னன், உறுப்பினர்கள் திருமதி விசயலட்சுமி சுப்பையா, திருமதி விசயலட்சுமி  பத்மநாபன் முனைவர் சி. சோபா மற்றும் திருமதி ப. தீபலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்

by Lakshmi G   on 06 Feb 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.