LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா

நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா

அறிமுகம்:

    உலகின் இயக்கத்தையே இசையின் செயலாய் பார்த்தவன் தமிழன். வாழ்வில் இசையே அடிப்படை என்பதையும் மாபெரும் ஞானத்தை அடைவதற்கு இசையே காரணக்கருவியாக இருக்க முடியும் என்றும் வாழ்ந்து காட்டியவன் தமிழன். நாட்டார் இசை முதல் செவ்விசை வரை அனைத்திலும் இசையின் பல கூறுகளை ஆய்ந்து அறிந்தவன் தமிழன். ஆதிமுதல் இன்று வரை இசையின் மகத்துவத்தை தனிப்பெரும் சிறப்பாய் உலகிற்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கும் பல இனங்களில் தமிழினமும் ஒன்று. ஓர் இனத்தின் அடையாளமான இக்கலைகளின் வழி மக்களின் சிந்தனை வாழ்வியல், பண்பாடு அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்பதே யதார்த்தமும் ஆராய்வின் உண்மையும் கூட. ஒரு பண்பட்ட இனத்தின் அழகியல் அறிவியல் வெளிப்பாடே கலை. கடல் கடந்து உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்கள் மரபுக் கலைகளின் வழியும் சடங்குகளின் வழியும் இன்னமும் ஒன்றியே இருக்கிறார்கள்.

    இன்று கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலரின் தொழில்களும் மாற்றமடைந்திருப்பதைக் காண முடிகிறது. இயந்திரமயமாய் ஓடிக் கொண்டிருக்கும் நம் இயக்கத்தை சற்றே நிறுத்தி கட்டாய ஓய்வெடுக்கச் செய்தது கொரோனா. உடலைக் கவனிக்கவும், உலகம் தன்னை மறுசீரமைத்துக் கொள்ளவும் எடுத்துக் கொண்ட காலமே இச்சூழல் எனலாம். அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்குள்ளாக்கியிருப்பினும் நாட்டுப்புறக் கலைஞர்கள் இன்னமும் வாழ்வாதாரத்தைச் சீர்படுத்த திணறி வருகின்றனர். இந்நிலையில் நாட்டுப்புறவியல் சார்ந்து இயங்கும் உலக அமைப்புகள் கலைஞர்களின் இயல்புநிலை திரும்பும் வரை ஒன்றிணைந்து உதவிட வேண்டும் எனத் திட்டமிட்டு நகர்கிறது.

நோக்கம்:

    உலகெங்கும் முடங்கியுள்ள இந்த கொரோனா சூழல் காலகட்டத்தில் பல்வேறு தொழில்களும் தொழிலாளர்களும் மிகப்பெரிய வாழ்வாதார சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாகத் தமிழ்நாட்டில் மேடைகளையும் மக்கள் கூட்டங்களையும் சார்ந்து இயங்கும் நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் தொழில் முற்றிலும் நசுங்கியுள்ளது. பெற்றோர்களை இழந்து, கணவனால் கைவிடப்பட்டு, பிஞ்சுக் குழந்தைகளுக்கு நல்ல உணவளிக்க முடியாமலும், கை, கால்கள், கண் பார்வை இழந்து மாற்றுத் திறனாளிகளாகவும் திருநங்கைகளாகவும் உள்ள நம் பண்பாட்டின் பாதுகாவலர்கள் தற்போது வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். நாம் என்ன செய்யப் போகிறோம்? ‘பகிர்ந்துண்டு பல்லாண்டு வாழ்’ என்பது அறம் என்பதால், வலைத்தமிழ் இணையத் தொலைக்காட்சியும், அமெரிக்காவின் கொம்பு மரபிசை மையம் மற்றும் இந்தியாவின் வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து பல நாடுகளில் உள்ள கலைக் குழுக்களை ஒருங்கிணைத்தது. கலைஞர்களுக்காக நிகழ்த்தும் நிதி சேர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று இயன்றதை உதவிடும் எண்ணத்தில் தமிழ் மரபுக் கலைகள் நிகழ்த்துக் கலைஞர்களைக் காக்க வேண்டும் கன்ற நோக்கத்தில் ‘நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா’ நடத்த முன்வந்துள்ளது.

நிகழ்வு திட்டமிடல்:

    அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் வலைத்தமிழ் இணையத் தொலைக்காட்சி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த இணையத் தொலைக்காட்சியின் வலையொலி, முகநூல் வழியாக ஜூம் குறுஞ்செயலி மூலம் அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என்பதே திட்டம். அவ்வகையில் ஏராளமான பார்வையாளர்களைக் கடந்து செல்லும் போது சந்தாதாரர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் வழிகிடைக்கப்பெறும் நன்கொடை நிதிகளை பெற குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் தங்களுக்கான பங்கீட்டுத் தொகையாய் எதையும் எதிர்பாராமல் கலைஞர்களின் நலனில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும் என்றெண்ணியதன் விளைவாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்கள் உடன் இணைந்தன. அவ்வகையில் அமெரிக்காவின் எய்ம்ஸ் இந்தியா, இந்தியாவின் குட்ஹோப் பவுண்டேன் தன்னார்வ நிறுவனங்கள் பொறுப்பேற்று நிதி திரட்டுதலில் தங்கள் பணியாற்றி வருகின்றன.

    ஒவ்வொரு நாடும் ஒரு நிகழ்வை படைக்கும் விதமாகவும் குறைந்தது ஓரு மணி நேரம் முதல் அதிகபட்சமாக மூன்று மணி நேரம் வரை என கலை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தற்போது வரையிலும் பனிரெண்டு வார நிகழ்வு முடிந்துள்ளது. கூடுதலாக தென் கொரியா, பஹ்ரைன், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் பிற மாகாணங்களிலிருந்து என எட்டு வாரங்களுக்கு நிகழ்வு தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பங்கேற்பு நாடுகள்:

    ஆஸ்திரேலியா

    அமெரிக்கா

    இங்கிலாந்து

    மலேசியா

    இந்தியா

    சிங்கப்பூர்

கலைக்குழுவும் கலைஞர்களும்:

    உலக நாடுகளில் மரபுக் கலைகளைத் தொடர்ந்து பயிற்சியளித்தும் நிகழ்த்தியும் வருகிற குழுக்களே இந்நிகழ்வில் முக்கிய பங்காற்றின் கலைகளை நிகழ்த்துபவர்கள் மரபுக் கலைஞர்களாய் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மரபை மீறாமல் நிகழ்த்தும் ஒவ்வொருவருமே கலைஞர்கள் தான். மரபுக் கூறுகளை அல்லது முறைமைகளை மையமாய்க் கொண்டு கலைகளை நவீனப்படுத்தும் முயற்சி வரவேற்கத்தக்கதே. உலகளாவிய அளவில் குறிப்பிடத்தக்க சில அமைப்புகளும் கலைக்குழுக்களும் நாட்டுப்புறவியல் சார்ந்த நாட்டுப்புறக் கலைகள் குறித்த சிறந்த முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. அவை:

1. தமிழ் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் - சிங்கப்ப+ர்

2. வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம் - இந்தியா

3. மகூலம் கலைக்கூடம் - சிங்கப்பூர்

4. நியூ ஜெர்சி தமிழ்க் கலைக்குழு – அமெரிக்கா

5. கொம்பு மரபிசை மையம் - வாஷிங்டன்- டி.சி. அமெரிக்கா

6. வட தமிழ்ச் சங்கம் - இங்கிலாந்து

7. ஆஸ்திரேலிய தமிழ்க் கலைகள் மற்றும் பண்பாட்டு வளர்ச்சி மையம் - ஆஸ்திரேலியா

8. இயல் இசை நாடக மன்றம் - மலேசியா

9. முழவு கலைக்குழு – டெலவர் மாநிலம், அமெரிக்கா

10. கோசை நகரான் தமிழர் தொல்லிசைக் கருவியகம் - இந்தியா

    மேற்கண்ட அமைப்புகள் அல்லது குழுக்கள் வெவ்வேறு நாடுகளில் இயங்கி வந்தாலும் நாட்டுப்புறவியல் சாரந்த ஆராய்வுகளில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருப்பதால் இணைந்தே பயணிப்பதை அறிய முடிகிறது. இவ்வமைப்புகளால் ஒவ்வொரு வார நிகழ்விலும் தொழில்முறை மற்றும் பகுதி நேரக் கலைஞர்கள் என இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்த்துநர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் அதீத ஆர்வம் கொண்டு கலைகளில் ஈடுபட்டும் வழி நடத்தியும் வருகின்றனர்.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

    தமிழகத்தில் மாசி முதல் ஆவணி வரையிலான காலம் ‘திருவிழாக் காலம்’ ஆகும். இம்மாதங்களில் நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளுக்கான வாய்ப்புகள் அதிகம். மரபுக் கலைகளின் வழி வருவாய் ஈட்டி தம் வாழ்வாதாரத்தை சீர்படுத்திக் கொள்ள முயலும் அத்தனை நாட்டார் கலைஞர்களுக்கும் இதுவே பணிகாலமாகக் கருதப்படுகிறது. இச்சூழலில் எதிர்பாராத கோவிட்-19 தொற்று காரணமாக ஊரடங்கு தொடர்ந்து இன்னமும் கலைகள் நிகழ்த்தப்படவில்லை. ஏற்கனவே வறுமை, கடன் தொல்லை, இடைத்தரகர்களின் ஏமாற்று என பல்வேறு சிக்கல்களைத் தாங்கி நகரும் இவர்களுக்கு இணையவழி வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது. வலைத்தமிழ் இணையத் தொலைக்காட்சியும், வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையமும் மற்றும் கொம்பு மரபிசை மையமும் மரபை மறந்துவிடா வண்ணம் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஜூலை 31 அன்று முதல் நிகழ்வு நடத்தப்பட்டது. அன்று முதல் இறுதியாய் நடந்து முடிந்த பனிரெண்டாவது வார நிகழ்வு வரையிலும் வேறுபட்ட கலைகள் பல நிகழ்த்தப்பட்டன.

அவைகள் பின்வருமாறு:

1. கட்டியங்காரன்

2. பறையாட்டம்

3. ஒயிலாட்டம்

4. சாட்டைக்குச்சி ஆட்டம்

5. கரகாட்டம்

    -ஆட்டக் கரகம் 

    -தோண்டிக் கரகம்

    -அடுக்குக் கரகம்

    -கரகமும் பரதமும்

    -கரகமும் மரக்கால் ஆட்டமும்

6. தெருக்கூத்து (இராவணன், பீமன், தூியோதன் மேலும் பல)

7. கொக்களிக் கட்டை ஆட்டம் (மரக்கால்)

8. சிலம்பாட்டம்

9. மல்லர் கம்பம்

10. காவடியாட்டம்

11. பொய்க்கால் குதிரை ஆட்டம்

12. மாடாட்டம்

13. மயிலாட்டம்

14. புலியாட்டம்

15. கழியலாட்டம்

16. கிழவன் கிழத்தி ஆட்டம்

17. தொல் இசைக் கருவிகளின் இசை முழக்கம் (கொம்பு, சங்கு, கொம்பு தாரை, எக்காளம் மேலும் பல)

18. நாட்டுப்புற இசை முழக்கம்

-தனித்தலில் இசைத்தல்

-தவில், நாதஸ்வரம், பம்பை, உறுமி இணைந்து இசைத்தல்

19. பறை இசை முழக்கம்

    -பறையில் கருநாடக இசை

    -தவிலும் பறையும்

    -குழலும் பறையும்

20. நாட்டுப்புறப் பாடல்கள்

    -எசப்பாட்டு

    -தாலாட்டு

    -சங் நீல உத்தமன்

    -வாழ்வாதார நிதிதிரட்டு பாடல்

21.. குறவஞ்சி நடனம்

22. பம்பை ஆட்டம்

பயனாளர்கள் தேர்வும் விதிமுறைகளும்:

    நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா கலைஞர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஓவ்வொரு நாட்டுப்புறக் கலைஞரும் உலகிற்கு தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தி அதன்மூலம் நிதி திரட்டுதலை மையமாக எதிர்நோக்கியுள்ளனர். கலை நிகழ்ச்சிகளின் வழி திரட்டப்படும் நிதி முறையாகக் குழு அமைத்து பயனாளர்களுக்குச் சென்று சேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங்களில் வாழும் 500 கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. உணவு பொருட்களாகவும்இ மளிகைப் பொருட்களாகவும் மற்றும் கணிசமான தொகை மருத்துவச் செலவுக்காகவும் வழங்கப்பட உள்ளது. அரசால் பதிவு செய்யப்பட்ட கலைஞர்களின் பட்டியல் 40-ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக இருப்பினும்இ உலக நாடுகளின் தமிழர் மரபுசார் அமைப்புகள் தங்களால் இயன்ற பங்களிப்பினை முதல் கட்டமாக செய்ய முன்வந்துள்ளது. சில விதிமுறைகளை உருவாக்கி நாட்டுப்புறக் கலைஞர்களின் பயனாளர்களைத் தேர்வு செய்யவும்இ பயனடைபவர்களாக யார் இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டு இவ்விதிகளை உருவாக்கியுள்ளது. அதனடிப்படையில் பின்வரும் கலைஞர்கள் முன்னுரிமை பெற்றவர்களாவர்.

1. தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிற இக்கலைவிழாவில் கலந்து கொண்டு (குறைந்தபட்சம் ஒரு நிகழ்விலாவது) தமக்கான கலை பங்களிப்பைச் செய்த கலைஞர்கள்

2. மாற்றுத்திறனாளி கலைஞர்கள் (பாலின வேறுபாடின்றி)

3. ஆதரவற்ற விதவைகள்இ கணவனால் கைவிடப்பட்டவர்கள்இ மூன்று பெண் குழந்தைகள் உள்ளவர்கள்இ பெற்றோர்கள் இல்லாத பெண் கலைஞர்கள் மற்றும் 50 வயதிற்கும் மேற்பட்ட பெண் கலைஞர்கள்.

4. தாய் அல்லது தந்தையை இழந்து வாழும் கலைஞர்கள்இ வயது முதிர்ந்த ஆண் கலைஞர்கள்இ தம்மால் இயன்றளவு மரபுக் கலைகளைப் பாதுகாக்க தொடர்ந்து இயங்கிக் கொண்டும்இ கலை வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டும் வரும் கலைஞர்கள்

5. பொருளாதாரத்தில் பின்தங்கியஇ வறுமையில் வாடும் அனைத்து விதமான கலைஞர்களுக்கும்.

 

கலைப் பயணத்தின் நீட்சி:

    மரபுக் கலைகளின் ஆணி வேராய்த் திகழும் தமிழகக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும்இ இணையக் கலைவிழாவின் வழி நிதி திரட்டவும் துவங்கிய இக்கலைப்பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் சூழலை உலகே அனுபவித்துக் கடந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகளால் பாதாளத்திற்குச் சென்ற பல துறைகளும் மீண்டெழத் தொடங்கியிருப்பினும்இ நாம் கவனம் கொள்ள வேண்டியவர்களும் இங்கேதான் இருக்கிறார்கள். தமிழர் மரபுக்கலைகள் வழி தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்து வரும் நாட்டுப்புற நிகழ்த்துக்கலைஞர்கள் கொடை விழாக்களில் நம்மின் உளநோய் தீர்க்கும் மருத்துவர்களாய்த் திகழ்கிறார்கள். கொக்கரை எக்காளம் சேமக்களம் நமரி துத்தேரி தூரிகை கொம்பு தாரை இசைக்கிண்ணம் துடி பிரம்மதாளம் சங்கு பறை பலகை தவண்டை கொட்டுத்தவில் என இன்னமும் காதில் கேட்டிராத மரபு இசைக்கருவிகளை மீட்டெடுத்து உலகிற்கு அறம் கூற இணையம் வழி நினைவுபடுத்த தொடங்கியிருக்கிறோம். ஒவ்வொரு கலைஞரும் வெறுமனே கலைத்தொழிலை மட்டும் நம்பியிருத்தல் கூடாது. அது தொடர்புடைய பிற தொழில்களையும் கற்றுத் தெரிந்திருக்க வேண்டும். மாறிவரும் சூழலுக்கேற்ப தொழில் காலம் அல்லாத பிற மாதங்களிலும்இ நவீன வளர்ச்சிக்கேற்பவும் தன்னைத் தகவமைத்துக் கொண்டு கலைத்தொழில்களைச் செய்ய முன்வர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

ஒருங்கிணைப்பு:

    நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா என்கிற தலைப்பில் தொடர்ந்து நடைபெறவும்இ இப்படியான சிந்தனைகளை நடைமுறையில் சாத்தியமாக்கவும் இரவு பகல் பாராது உழைத்தவர்கள் பலர். இவற்றில் இணையவழி நிகழ்வில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படாமலும்இ காட்சிப்படுத்த வேண்டிய நிகழ்வுகள் சரியாக பார்வையாளர்களைச் சென்று சேர்ப்பதற்கும் பெருமளவு மெனக்கெட்டார்கள். அதன் செயல்பாட்டாளர்களாக இவர்களைக் குறிப்பிட முடியும்.

1. ச. பார்த்தசாரதிஇ நிறுவனர்இ வலைத்தமிழ் இணையத் தொலைக்காட்சிஇ அமெரிக்கா.

2. திருமதி. ஹேமாமாலினி சந்தன்ராஜ்இ செயலர்இ வாகை நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம்இ மதுரை

3. சிவசங்கரன்இ கொம்பு மரபிசை மையம்இ வாஷிங்டன் டிசிஇ அமெரிக்கா

நிகழ்வு மற்றும் தொழில்நுட்ப பொறுப்பு:

    இந்நிகழ்வு குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இனிதே நடந்தேறிட சமூக ஊடகங்களில் அக்கலைநிகழ்வைத் தெரிவிக்க கணினி மற்றும் ஒலிஇ ஒளிப்பதிவு பணிகள் இன்றியமையாததாகிறது. அவ்வகையில் வலையொலிஇ முகநூல்இ புலனம் வழி பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டு ரசிக்கும்படி விளப்பரப் போஸ்டர்கள்இ காணொளிக் காட்சிகள் மற்றும் நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைப்புகள் ஆகிய பணி செய்து நிகழ்வு மற்றும் தொழில்நுட்ப பொறுப்புக்களை மேற்பார்வையிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்களே.

1. இ. பிரசன்னாஇ தலைவர்இ வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம்இ மதுரைஇ இந்தியா

2. கோ. கலைவாணன்இ நிர்வாக மேலாளர்இ வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம்இ மதுரைஇ இந்தியா

நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் ஆவணமாக்கம் :

    முன் கள ஆய்வும்இ கள ஆய்வுத் தகவல் சேகரிப்பும்இ நிகழ்த்துதல்களை உற்று நோக்கி அதன் உட்கூறுகளை அறிய முயலுவதும்இ தகவல்களைத் தொகுப்பதும் மற்றும் அதை ஆவணப்படுத்துதலுமே நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களின் அடிப்படை பணி. பண்பாட்டின் அடையாளங்களாய் விளங்கும் நாட்டுப்புறக் கலைகளையும் அக்கலைகளை நிகழ்த்தக்கூடிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதுமே இக்கொரோனா சூழலில் முக்கிய ஒன்றாகக் கருதும் நிலை உள்ளது. அவ்வகையில் கலைகள்இ கலைஞர்கள் தேர்வுஇ இணையவழி அவை நிகழ்த்தப்படும் செயற்கைச் சூழல்இ இவற்றை ஒருங்கிணைத்துஇ தொகுத்து ஆவணமாக்குதல் கட்டாயமாகும். பிற்காலத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கும் யாவர்க்கும் இரண்டாம்நிலைத் தரவுகள் ஏராளமாய் கிடைத்திடும் வகையில் அவை ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அவ்வகையில் இக்கலைநிகழ்வுகளைப் பதிவு செய்து ஆவணப்படுத்தியர்வகளில் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்கள் எனலாம்.

 

1. முனைவர் சே. செந்திலிங்கம்இ ஆய்வாளர்இ வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம்இ மதுரைஇ இந்தியா

2. பேரா. மு. வெண்ணிலாஇ ஆய்வாளர்இ வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம்இ மதுரைஇ இந்தியா

வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பட்டு ஆய்வு மையம்:

    இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் வாகை நாட்டுப்புறவியல் மற்றும் மரபு பண்பாட்டு ஆய்வு மையம் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் மைய நோக்கங்கள் மற்றும் திட்டங்களாகப் பின்வருவனவற்றைக் காணலாம்:

    தமிழர் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பற்றிய கள ஆய்வுகளைத் தகுந்த பேராசிரியர்களின் துணைகொண்டு மேற்கொள்ளுதல்

பிற அமைப்புகளோடும் ஆய்வாளர்களோடும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளுதல்

ஆய்விகளின் வழி பெறப்படும் நிகழ்த்துகலைகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவற்றை நிகழ்த்தும் கலைஞர்களின் தகவல்கள் அனைத்தையும் ஆவணப்படுத்துதல்இ மின்னிலக்கமயமாக்குதல்

    தொகுக்கப்பட்ட தகவல்களை ஆய்வுக்காகவும்இ கற்பித்தலுக்காகவும் பயன்படும் நோக்கில் புதிய இணையத் தரவுத் தொகுப்புப் பெட்டகம் (தமிழ்நாடுஇ இந்தியஇ உலக அளவில் பரவியுள்ள தமிழர் நாட்டுப்புறக் கலைகள் மற்றும் கலைஞர்கள் தொடர்பான தரவுத் தொகுப்பு) ஒன்றை உருவாக்குதல்

    நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் தொடர்பான கலைச்சொற்களை நூலாக்கம் செய்தல்இ மின்னியல்மயமாக்குதல்இ ஆங்கில மொழிபெயர்ப்புஇ மின்னூல்கள் மற்றும் குறுஞ்செயலிகள் உருவாக்கம்.

    நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் மற்றம் கருவிகள்இ அலங்காரம் ஆகியவற்றில் தொன்மையில் பெரிய மாற்றங்களைப் புகுத்தாமல் நவீனப்படுத்துதல்.

    தமிழர் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளை உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் வகையில் பாடத்திட்டங்களை உருவாக்குதல்.

    தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களை நியமித்தல் அனைத்து நாடுகள்இ இந்தியாவில் உள்ள பள்ளிஇ கல்லூரிகளில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பயிற்றுவித்தல்.

    நவீனப்படுத்தல் நோக்கில் உலகத்தரம் வாய்ந்த கலைக்குழுவை உருவாக்குதல்இ உள்நாட்டில் மேடை சார்ந்த நிகழ்வுகளிலும் அயல்நாடுகளில் அனைத்துக் கலைநிகழ்வுகளிலும் கலந்து கொள்ளச் செய்தல்இ நாட்டுப்புற நிகழ்த்துக்கலைப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை முன்வைத்து வாகை நாட்டுப்புறவியல் மற்றம் மரபு பண்பாட்டு ஆய்வு மையம் இயங்கிவருகிறது. அந்தவகையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும்இ 2019 ஜீன் மாதமும் சிங்கப்பூரிலிருந்து மாணவர்கள் வருகை தந்து தங்கியிருந்துஇ மரபுக் கலைகளான பறையாட்டம்இ கரகாட்டம்இ ஒயிலாட்டம்இ பொய்க்கால் குதிரை மற்றும் வீதி நாடகப்பயிற்சி உள்ளிட்ட கலைகளைக் கற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து இணையவழி வகுப்புகள்இ கலைநிகழ்வுகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியும் பயணித்து வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

by   on 06 Nov 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.