LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021
தலைவர் உரை
 
சியோல், தென்கொரியா, கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021, திருவள்ளுவர் ஆண்டு 2052, தைத்திங்கள் 18-ம் நாள் ஞாயிறன்று (31 சனவரி 2021) தமிழர் திருநாள் - 2021 இணையவழி இயங்கலையில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் நிகழ்வன்று நிகழ்த்தப்படும் தலைவர் உரையில் சங்கத்தின் செயல்பாடுகள், பொதுக்கோரிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் ஆகியவை குறித்த செய்திகள் இடம்பெறும். பொங்கல் 2021 நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட தலைவர் உரை பின்வருமாறு.
 
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு
 
என்கிற வள்ளுவன் வாக்குப்படி தமிழர்களின் அன்பை இந்த உலகிற்கு பரிமாறி முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
எமது பொங்கல் நிகழ்விற்கு வாழ்த்து தெரிவித்திருந்த தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், மதுரை தமிழ் சங்கத்தின் இயக்குனர் திருமதி தா. லலிதா, சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு க. பொன்முடி, கவிப்பேரரசு வைரமுத்து, திரு நக்கீரன் கோபால், எழுத்தாளர் ஆதனூர் சோழன், மக்களிசை பாடகி மதுரை சின்னப்பொண்ணு, சிறப்புரையாற்றிய திரு. காரை செல்வராஜ் மற்றும் உலக தமிழ் வர்த்தக அமைப்பின் தலைவர் திரு செல்வகுமார் மற்றும் திரு பாட்சா, மேலாளர், இரசிய அறிவியல் மற்றும் பண்பாட்டு நிலையம் ஆகியோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!
மானுட வளர்ச்சி, முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் என உலகம் பல கூறுகளை சுற்றி பயணித்திருக்கிறது. பல கொள்ளை நோய்களை வெற்றிகொண்ட உலகம் 2019 இறுதிப்பகுதி முதல் கரோனா பெருந்தொற்றை சுற்றி பயணித்துக்கொண்டிருக்கிறது. தற்பொழுது மருத்துவ அறிவியல் உலகம் இத்தொற்றை திறம்பட கையாண்டு வந்தாலும், தொடக்கம் பல குழப்பங்களும் போதைக்குறைகளையும் நிரம்பியதாக இருந்தது. மருத்துவம்சார் பணியாளர்கள் உயிர்க்கொடை உள்ளிட்ட பல கொடைகளை கொடுத்து பொதுமக்களை காத்துவருகின்றனர். அவர்களுக்கு எமது சங்கம் உள்ளார்ந்த மதிப்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
 
தொடக்கத்தில் சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தொற்று விரைவாக பரவியபொழுது நாம் வாழும் கொரிய தேசம் தமது சிறப்பான செயல்பாடுகள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடைய தகவல்கள் ஊடக இவ்வுலகம் சந்தித்த முதல்நிலை ஐயப்பாடுகளை களைய பெரிதும் உதவியதென்றால் அது மிகையாகாது. குறிப்பாக, கொரிய நோய்தடுப்புத்துறைக்கு எமது சங்கம் உள்ளார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
 
இங்குள்ள இந்திய தூதரகம், தொற்றிலிருந்து இங்குள்ள இந்தியர்களை பாதுகாத்தல், இந்திய சமுக தலைமைகளின் குழுவை ஒருங்கிணைத்து தகவல்களை விரைவாக பரிமாறுதல், முகக்கவசம் வழங்குதல், நம் மக்களின் அவசர வானூர்தி பயணங்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை உரிய அக்கறையுடன் செய்தது. தூதரகத்தின் அனைத்து உறுப்புகளும் இந்த பணியில் பங்காற்றியதை காணமுடிந்தது. குறிப்பாக இப்பணிகளை முன்னின்று வழிநடத்திய கொரியாவிற்கான இந்திய தூதர் மாண்புமிகு ஸ்ரீப்ரியா ரெங்கநாதன், முன்னாள் துணைதூதர் மாண்புமிகு. சதிஷ் குமார் சிவன், முன்னாள் கன்சுலார் சரிங் அஞ்சுக், துணைகன்சுலார் அலுவலர் சஞ்சீப குமார் சின்கா மற்றும் தாய்நாட்டிற்கு சோதனை செயலிகள் உள்ளிட்ட தொற்றை விரைவில் கண்டறியும் உபகரணங்கள் இங்கிருந்து கிடைப்பதற்கு பங்காற்றிய தூதரகத்தின் தொழில்துறை செயலாளர் திருமதி ஜோஸ் அண்ட்ரோ ஹெல்த்தா ஆகியோரின் பணிகள் போற்றத்தக்கது. இதனை தொடர்ந்து முன்னெடுத்துவரும் புதிய அலுவலர்களின் பணிகள் பாராட்டத்தக்கது. முழுமுனைப்புடன் பங்காற்றிய இங்குள்ள பிற இந்திய சமுக அமைப்புககளையும் தன்னார்வலர்களையும் மற்றும் ஒருவருக்கொருவர் உதவிய மக்களையும் எமது சங்கம் பாராட்டுகிறது.
 
எமதுதாய்நாடும் தொடக்கம் முதல் இத்தொற்று மக்களை பெரிதும் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுத்துவருவது பாராட்டத்தக்கது. குறிப்பாக தமிழ்நாடு அரசும் அரசியல் இயக்கங்களும் சிறந்த பங்கற்றிவருகின்றனர். கொள்கை மற்றும் இயங்கியல் முறைகளில் பல துருவங்களாக இயக்கங்கள் நெருக்கடி காலங்களில் மக்களுக்கு எவ்வளவு நெருங்கி தொண்டாற்றமுடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தொற்று காரணமாக விதிக்கப்பட்ட சட்டத்திட்ட கட்டுப்பாடுகளை நடைமுறைபடுத்துவதில் காவல்துறைக்கும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட அன்றாட வாழ்வாதரத்திற்கு உழைக்கும் எளிய மக்களுக்கும் ஏற்பட்ட முரண்பட்டால் விளைந்த பாதிப்புகள் எளிய வருந்தத்தக்கது. வரும்காலங்களில் மக்கள் பொது பாதுகாப்பு சம்மந்தப்பட்ட நோய்த்தொற்று உள்ளிட்டவற்றை செவ்வனே கட்டுப்படுத்த மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளவில் "நாட்டுநல பணித்திட்ட மாணவர் அமைப்பு" போன்ற தனித்த அலகுகளை உருவாக்கி எக்காலத்திலும் உடனடியாக செயலாற்றும் வகையில் அட்டவணைப்படுத்தப்ட்ட பயிற்சிகள் மூலம் அவற்றின் திறன் பராமரிக்கப்படவேண்டும் என மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஆகியோருக்கு கோரிக்கை வைக்கிறது எமது சங்கம். இந்த கோரிக்கைக்கு அனைத்து அரசியல், சமுக மற்றும் மக்கள் நலன் சார் இயக்கங்களும் ஆதரவு வழங்கி நிறைவேற உதவிட வேண்டும் என்று எமது சங்கம் வேண்டி கேட்டுக்கொள்கிறது. இந்த அலகுகள் மூலம் நோய்த்தொற்று காலத்தில் உரிய நடைமுறைகளை சீரியமுறையில் நடைமுறைப்படுத்தி நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட கூறுகளை அதிகம் பாதிக்காமல் காக்கமுடியும்.
 
கடந்த ஆண்டில் எமது சங்கம் முழுமுனைப்புடன் பல்வேறுபணிகளை முன்னெடுத்தது! இக்காலகட்டத்தில் தலையாய பணியான அலுவல்ரீதியான சங்கப்பதிவை தமிழ் மக்களின் உதவியுடன் நிறைவேற்றினோம். நமது சங்கம் கொரியா வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் அரசுசாரா அமைப்புகளை உருவாக்கும் சட்டப்பிரிவு 7-படி கொரியாவின் நடுப்பகுதி மாகாணமான சுங்சியங்புக்தோ மாநில அரசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமகால கொரியாவிற்கு வந்து சென்ற/வசிக்கும் தமிழ் மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது. சங்க பதிவிற்கு அனைத்து வகையிலும் உதவிய கொரியாவாழ் தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
எமது சங்கம் பெருந்தொற்றின் தொடக்ககாலத்தில் தொற்றை கொரிய தேசம் எதிர்கொண்டமுறை, அன்றாட நிலைமைகள் மற்றும் சூழல்கள் ஆகியவற்றை தினசரி அறிக்கையாக தமிழில் கொண்டு வந்து தமிழ்கூறும் நல்லுலகின் பதட்டத்தை குறைத்ததென்றால் அது மிகையாகாது. தொற்று அதிகம் பரவிய வடக்கு கியோங்சான் மாகாணம் தேகு நகர்  உள்ளிட்ட பகுதிகளில் நமது மக்கள் நடுவே நிலவிய சூழலை தூதரகத்தின் பார்வைக்கு எடுத்து சென்று மக்களுக்கு தேவையான தகவல்கள்,  முகக்கவசம், வானூர்தி பற்றிய தகவல்கள் ஆகியவற்றை தந்தது, நடவடிக்கை காமராஜர் தந்த கல்வி என்கிற பெயரில் சிறப்பு வானூர்தி மூலம் தாய்நாட்டிற்கு சென்ற நமது மக்கள் வேலை/கல்வியைத் தொடரும் வகையில் கொரிய திருப்ப உதவியது, நோய் தவிர்க்கும் பாரம்பரிய தமிழ் மூலிகைகளை தருவித்து உதவியது, உயிரிழந்த இரு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய முறையில் இறுதி அஞ்சலி செலுத்த உதவியது உள்ளிட்ட பல பணிகளை நமது சங்கம் செய்தது.
 
தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வாணையத்தால் கோரப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் வெளிநாட்டில் பயின்ற அல்லது ஆராய்ச்சி பட்டறிவு உள்ளோர் எதிர்கொள்ளநேரும் அதீத படிவ தேவைகளை குறைக்குமாறு தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத்தின் அலுவலர் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
 
இணையவெளியில் நமது சங்கம் தனித்தும் உலகளாவிய சங்கங்ககள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியது. தொற்றுசூழலில் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவியது, மாண்புமிகு, பாராளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், ஆய்வாளர்கள் ஒரிசா பாலு மற்றும் நா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் கொரிய-தமிழ் உறவு குறித்த மாநாட்டை நடத்தி  இவ்வுறவை வளர்த்தெடுக்க நினைவுச்சின்னம் அமைப்பது மற்றும் குறித்த ஆய்வுகளை மோற்கொள்ள நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்தது. மதுரை உலகத்தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்திய ஆய்வரங்கின் இறுதியில் கொரிய பல்கலைக்கழகங்களில் தமிழிருக்கை அமைக்க தமிழ் வளர்ச்சித்துறைக்கு வேண்டுகோள் விடுத்தது. தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட கொரிய மொழியிலான திருக்குறள் புத்தகத்தை கொரியாவில் வெளியிட இங்குள்ள இந்திய தூதரகத்தில் வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது உள்ளிட்ட பல பணிகளை நமது சங்கம் செய்திருக்கிறது. நமது சங்கம் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம், அதீத செயல்பாடு உள்ளிட்ட வளர்ச்சி குறைபாடுகளை விரைவில் கண்டறிவது, உதவி மற்றும் பயிற்சி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்படும் தமிழ் இருக்கைகளுக்கு உதவுவது போன்ற செயல்பாடுகளையும் முன்னெடுத்தது. ஆண்டுதோறும் தமிழர் அடையாளம், கொரியா பற்றிய படங்கள் மற்றும் நமது மக்கள் எடுத்த புகைப்படங்கள் அடங்கிய மாத நாட்காட்டி மக்களுக்கு கிடைப்பதை சங்கம் உறுதி செய்யும். இப்பணியை செய்த சங்கத்தின் செயலாளர் இராமன் மற்றும் தொழிநுட்பதுறை பொறுப்பாளர் ஆனந்த் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
 
தூதரகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்திய சமுக தலைமைகளுடனான சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின்பொழுது சங்கத்தின் சார்பில் இந்தியா அரிசி இறக்குமதிக்கு இங்கு  விதிக்கப்படும் அதீத வரிக்கு (513%) கொரிய அரசுடன் பேசி சிறப்பு விலக்கு பெற்று  குறைந்த விலையில் இந்திய மக்களுக்கு இங்கு இந்திய அரிசி கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மேலும் கொரிய விசா பெறுவதற்கு தேவைப்படும் நெஞ்சகநோய்க்கான சான்றிதழை (Tuberclosis Certificate) சென்னையிலுள்ள குறித்த தனியார் மருத்துவமனையில் மட்டும்தான் பெறவேண்டும் என்கிற நடைமுறையை மாவட்ட மருத்துமனைகளில் பெற்றுக்கொள்ளப்படும்  சான்றிதழ்களும் ஏற்றுக்கொள்ளப்படும்படி கொரிய வெளியுறவுத்துறையை வலையுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் மக்களின் அதீத பயணச்செலவு மற்றும் நேரவிரயம் ஆகியவை வெகுவாக குறைக்கப்படும்.
 
கொரிய மக்கள் தொகையில் சுமார் 5 வீதம்பேர் பல்லின சமூகத்தினர். இதில் 90% சதவீதம் ஆசியர்கள். இந்தியா (0.5%, 13,000) உள்ளிட்ட சார்க் நாட்டவர் 2.7%. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் ஆசிய மக்கள் பொருளாதாரம் மற்றும் குடிமைரீதியாக அதிகாரத்தில் அமரும் ஒரு பலம் பெருந்திய சமூகமாக இருக்கிறார்கள். கொரிய அரசு இங்குள்ள பல்லின சமூகத்திற்கு சிறப்பு திட்டங்கள் மூலம் உதவி புரிந்தாலும் பொருளாதாரரீதியாக சர்வதேச பள்ளிகளில் கட்டணம் செலுத்தி குழந்தைகளை கல்வி புகட்டும் அளவிற்கு இங்குள்ள ஆசிய சமூகம் இல்லை. எனவே அவர்கள் குழந்தைகளின் கல்விக்காக விரைவாக தாய்நாட்டிற்கு செல்ல நேர்கிறது. இங்குள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்திய குழந்தைகளுக்கான ஒரு நிலையான ஆரம்பப்பள்ளியை அமைப்பது என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. கொரிய சுற்றுலாத்துறையின் தரவுகளின்படி அதிகபட்சமாக 2019 ஜூலை மாதத்தில் கொரியாவிற்கு வந்து சென்ற 20 வாயதிற்குட்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 739, இதில் பெருமளவு ஆரம்பப்பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் என எடுத்துகொண்டாலும் ஆங்காங்கே விரவி வாழ்வதால் நிலையன பள்ளி அமைப்பை கட்டமைப்பதென்பது  ஒரு கடினமான சத்தியம் குறைவான செயலாகவே இருக்கிறது. எமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் முனைவர் தெய்வேந்திரன் அவர்கள் 2017-இம் ஆண்டு ஆரம்பகட்ட ஒருங்கிணைப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டார். தமிழ் மக்கள் பலர் நமது சங்கம் பள்ளி அமைக்கும் முயற்சியை தொடர்ந்து மோற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.  களநிலைமையின் அடிப்படையில் ஆசியக்குழந்தைகளுக்கான குறைந்த செலவில் கல்வியை வழங்கக்கூடிய நிலைத்திருக்கூடிய ஆரம்ப பள்ளியை அதிக அளவில் இந்திய குழந்தைகள் தென்படும் இடத்தில் அமைக்கும் வழிமுறை பலனளிக்கும் என எமது சங்கம் கருதுகிறது. இந்த முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கும்வண்ணம் சங்கத்தின் சார்பில் குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும்.  மேலும் இந்த முயற்சி கொரிய அரசிற்கு சமர்ப்பிக்கப்படும் சங்கத்தின் வருடாந்திர வேலைத்திட்டத்தில் சேர்க்கப்படும். இந்த வேலைத்திட்டம் உள்ளிட்ட சங்கத்தின் மக்கள்நலன்சார் உலகத்தமிழ் கல்வி குழுமங்கள், சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் உதவியை பெற்றுக்கொள்ளும் வகையில் சங்கத்தின் பன்னாட்டு தொடர்பாளராக புகழ்பெற்ற சிற்ப குடும்ப சேர்ந்தவரும், பன்னாட்டு தமிழரிடையே தொழில் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பை செய்துவருபவரும் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சி. தாமோதரன் செயல்படுவார். இந்த முயற்சிக்கான அடிப்படை பொருண்மியம், பல்வேறு நாடுகளிலிருக்கும் தோழமை தமிழ்ச் சங்கங்கள் சேர்ந்து கலை நிகழ்வுகள், உணவு விழாக்கள் நடத்துவதன்மூலம் கட்டமைக்கப்படும். இந்த முயற்சிக்கு தன்னாலான உதவிகளை செய்ய முன்வந்துள்ள சங்கத்தின் மக்கள் தொடர்பாளர் திருமதி சாந்தி பிரின்ஸ் அவர்களுக்கு சங்கம் தமது உள்ளார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
 
உலகில் தமிழ்  கல்வி, சமூகம் அரசியல் மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்வாங்கி மக்களுக்கு விளக்குவது, தமிழரின் பன்னாட்டு தொடர்புகளை ஆய்வுரீதியாக வெளிகொண்டுவருவது ஆகிய செயல்பாடுகளை தமிழ் இளைஞர்கள் உலகெங்கும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் சுவீடன் நாட்டிலிருந்து செயல்படும் முனைவர் விஜய் அசோகன், மலேசியாவைசேர்ந்த திருமதி பொன்கோகிலம், எமது சங்கத்தின் ஆளுமைப்பணிக்கான இணைச்செயலாலாலர் முனைவர் ஆரோக்கியராஜ் மற்றும் ஐக்கியராஜ்ய தமிழ்த்துறையை நிறுவ உழைக்கும் ஐக்கியராஜ்ய தமிழ்த்துறையின் அமைப்பாளர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களை எமது சங்கம் பாராட்டுகிறது. எமது பொங்கல் நிகழ்வின் முக்கிய பகுதியாக எமது தகவல்தொடர்ப்ய செயலாளர் பொறியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் பீட்டர் சகாய டார்சியூஸ் எழுதிய “சிதறல்கள்” என்ற கவிதை தொகுப்பு நூலும் நமது சிறப்பு அழைப்பாளரால் வெளியிடப்படுகிறது. அவருக்கு சங்கத்தின் பாராட்டுக்கள். எழுத்தாளர்களை ஊக்குவிக்க சங்கம் அணியமாய் இருக்கிறது. இதற்கு உதவிய மூத்த எழுத்தாளர் ஆதனூர் சோழன் அவர்களுக்கும் சிபி பதிப்பகத்திற்கும் நன்றி! உலகெங்கும் தமிழ் கல்வியை கொண்டுசெல்ல பல மூத்தோர்கள் தமது வாழ்நாளை அர்ப்பணித்து வேலைசெய்கின்றனர், அதில் குறிப்பிடத்தக்கவர் பொள்ளாச்சியை சேர்ந்த  தமிழாசிரியர் திரு நடேசன். பல்வேறு தமிழ் கற்கும் செயலிகளையும், வலைத்தளம் மற்றும் புத்தகங்கள் மூலமூம் தன்னுடைய பங்களிப்பை வழங்கி வருகிறார். அவருடைய தமிழ் பாடத்திட்டங்கள் தமிழ் பள்ளியை புலத்தில் உருவாக்க உதவி வருகிறது. அத்துடன் கட்செவி மூலமும் உலகத்தமிழர்களை தொடர்புகொண்டு தமது தமிழ்ப்பணியை வழங்கி உலகத்தமிழ் குழந்தைகளுக்கு உத்வி வருகிறார். அவரை எமது சங்கம் வணங்கி, அவரை பல்லாணடு மேலும் வாழவைக்கவேண்டுமென தமிழ்த்தாயை வேண்டுகிறது.
 
சங்கத்தின் செயற்பாட்டு எல்லைகள் மேற்குறிப்பிட்டவைகளாக இருந்தாலும், உலகம் முழுதும் பரந்துவாழும் தமிழ்சமுகத்தின் அறிவுசார் அங்கம் என்கிற வகையில் உலகில் தமிழ் மக்கள் வாழ்வில் சமாதானமும் அமைதியும் நிலவவேண்டும் என்பதில் எமது சங்கம் அக்கறை கொள்கிறது. மக்களுக்கு ஏற்றத்தாழ்வற்ற வாழ்வு அமைய புத்தர் காட்டியவழி சரியானதென்று அம்பேத்கர் உள்ளிட்ட மேதைகள் கருதினர். இனி போரும் உயிர்பலியும் வேண்டாமென புத்தர் வழியில் வாழ தலைப்பட்டார் மன்னர் அசோகர். சமகாலத்தில் புத்தமும் தமிழருக்கு நீதி சமைக்கவில்லை! இலங்கைத்தீவில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டு எஞ்சியிருப்போர் துயரவாழ்விற்குள் தள்ளப்பட்டு பத்து ஆண்டுகள் கழித்தும் அவர்களுக்கு இந்த உலகம் நீதி வழங்க முன்வரவில்லை. உயிர்பலியெடுக்கும் சண்டைகள் நடைபெறாமலிருக்க உலகம் இராசதந்திர நடவடிக்கைகளை கையாள்கிறது, போர்ச்சூழலில் கூடுமானவரை உயிர்ப்பலியை தடுக்க செஞ்சிலுவை மற்றும் ஐக்கிய நாடுகளின் தொண்டு நிறுவனங்கள் வேலை செய்வதை உறுதிசெய்கிறது. உலகம் இந்த நடைமுறைகள் அனைத்தும் புறந்தள்ளப்படுவதை கண்டுகொள்ளவில்லை. உலகின் இந்த பாராமுக அமைதி தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் கொடுக்கவில்லை, மாறாக இன்று நிரந்தர அடக்குமுறைக்குள் அவர்களை தள்ளியிருக்கிறது. உலகம் வரும்காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைத்து தமிழர் வாழ்வு மீள முழுமனதுடன் உதவ வேண்டும்.மேலும், பாக் நீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்கள் காலம் காலமாக தொடர்ந்து சந்தித்து வரும் அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் உயிரிழப்பும் நிரந்தரமாக தடுக்கப்பட தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நாமும் எதிரொலிக்கிறோம்! மிக்க நன்றி! வாழ்க தமிழ்! 
 
முனைவர் சு. இராமசுந்தரம், தலைவர், கொரிய தமிழ்ச் சங்கம்

by Lakshmi G   on 06 Feb 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.