LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்

மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்

  தோற்றம் :29 அக்டோபர் 1909                                                              மறைவு: 23 நவம்பர் 1992 (அகவை 83)
பிறந்த ஊர்:திருச்சிற்றம்பலம்                                                             மாவட்டம்: நாகை மாவட்டம்

தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தமிழுக் காகவும் இலக்கியத்துக் காகவும் பணியாற்றிய ஓர் உன்னத ஆளுமை மு. அருணாசலனார். மயிலாடு துறைக்கு அருகில் உள்ள திருச்சிற்றம் பலம் கிராமத்தில் 1909-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின்  கணிதத் துறையில் இளநிலை பட்டம் பெற்ற மு. அருணாசலனார்க்கு தன் 21-வது வயது வரை தமிழியல் சார்ந்து இயங்குவதற்கான களம் உருவாகவில்லை என்பது ஆச்சரியம்!
'**********************************
தமிழும் நட்பும்  
*************************
1931-ல் சென்னை தி.நகருக்குக் குடிபெயர்ந்ததுதான் மு. அருணாசலனாரின் ஆளுமை உருவாக்கத்துக்குக் காரணம். தன் வீட்டருகே குடியிருந்த ரசிகமணியின் நட்பும் ரசனையும் அருணாசலனாரை பெரிதும் வசப்படுத்தியிருந்தன. எனினும் வையாபுரிப் பிள்ளையிடமிருந்துதான் தமிழ்ப் புலமைக்கான பயிற்சி தொடங்குகிறது. அப்போது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த அவரிடமே மாணவராகச் சேர்ந்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.
*****************************************
எட்டு நூற்றாண்டு வரலாறு
***************************************
வையாபுரிப்பிள்ளையிடமிருந்து பதிப்பு நுட்பங்களை உள்வாங்கிக்கொண்ட மு. அருணாசலனார், 1940-ல் முக்கூடற்பள்ளு நூலைப்பதிப்பித்தார். மு. அருணாசலனார்க்கும் சரி, முக்கூடற்பள்ளுவுக்கும் சரி இதுதான் முதற்பதிப்பு! மு. அருணாசலனார் ஊர்ஊராகச் சென்று தேடி அலைந்து 150-க்கும் மேற் பட்ட ஓலைச்சுவடிகளைத் தன் வீட்டில் சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து பல நூல்களைப் பதிப்பித்தார். இதன் தொடர்ச்சி தான் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள்.
'*************************************
தமிழகக் கல்விப் புலத்தில் புற்றீசலாய்ப் பெருகியிருக்கும் மேலோட்டமான இலக்கிய வரலாற்று நூல்களுக்கு மத்தியில் மு.அருணாசலனாரின் வரலாற்று நூல்கள் மிகவும் தனித்துவமானவை. ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனியொரு மனிதராகச் சாதித்துக் காட்டியவர். மு. அருணாசலனார் வரிசையாக ஒவ்வொரு நூற்றாண் டிலும் வெளிவந்த எந்த நூல்களும் விடுபட்டுவிடக் கூடாது என்ற கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.
********************************************
இலக்கணம், சமய இலக்கியம், ஓவியம், சோதிடம், கல்வெட்டு, கணிதம் என்ற பல்துறைச் சார்ந்த நூல்களை இலக்கிய வரலாற்றில் இடம்பெற செய்ததது, முறையான ஆய்வு முறை, கவித்துவ நடை என்று பல்வேறு புதுமைகளைப் புகுத்தி எட்டு நூற்றாண்டுத் தமிழிலக்கிய வரலாற்றை எழுதி பதினொரு தொகுதிகளாக வெளியிட்டார்.
*******************************************
புத்தகத்தில் பெயர் போடாத பதிப்பாளர்!
***********************************************
கவிமணி தேசிக விநாயகத்தின் கவிதைகளைத் தொகுத்து முதன்முதலில் புத்தகமாக வெளியிட்டது மு. அருணாசலனார்தான். 1938-ல் வையாபுரிப்பிள்ளையின் துணையுடன் ‘மலரும் மாலையும்’என்ற நூலாக கவிமணியின் கவிதைகளை வெளியிட்டார் மு. அருணாசலனார்.
*************************************
அந்தப் பதிப்பில் அவர்தான் பதிப்பித்தார் என்பதற்கான எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. ‘புதுமைப் பதிப்பகம், 3, சாம்பசிவம் தெரு, தி.நகர்’ என்கிற பதிப்பக முகவரி இந்நூலின் முன்பக்கத்தில் உள்ளது. இம்முகவரி மு.அருணாசலனாரின் வீட்டு முகவரி. இன்றும் இம்முகவரியில் மு.அருணாசலனாரின் வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
***********************************
வாய்மொழி இலக்கிய ஆய்வாளர் 
***************************************
நாட்டாரியல் துறையில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர் மு. அருணாசலனார். ‘தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பின் முன்னோடி’ என்று ஆய்வாளர்களால் சுட்டப்படுபவர். ‘காற்றிலே மிதந்த கவிதை’ என்ற தலைப்பில் 1943-ல் இவர் எழுதிய நூல்தான் தமிழில் முதலில் வெளியான வாய்மொழிப் பாடல்கள் தொகுப்பு. தமிழ்க் கதைப்பாடல் ஆய்வின் முன்னோடியாகவும் இவரே அறியப்படுகிறார்.
*************************************
1992-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி மு. அருணாசலனார் தனது 83-வது வயதில் காலமானார். ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ் இலக்கியத்துக் காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருந்த இந்த மாபெரும் வரலாற்று ஆளுமையின் பங்களிப்புகள் இனியாவது வகுப்பறைகளில் வாசிக்கப்பட வேண்டும்.

தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தமிழுக்காகவும் இலக்கியத்துக் காகவும் பணியாற்றிய ஓர் உன்னத ஆளுமை மு. அருணாசலனார். மயிலாடு துறைக்கு அருகில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் 1909-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின்  கணிதத் துறையில் இளநிலை பட்டம் பெற்ற மு. அருணாசலனார்க்கு தன் 21-வது வயது வரை தமிழியல் சார்ந்து இயங்குவதற்கான களம் உருவாகவில்லை என்பது ஆச்சரியம்!

தமிழும் நட்பும்

1931-ல் சென்னை தி.நகருக்குக் குடிபெயர்ந்ததுதான் மு. அருணாசலனாரின் ஆளுமை உருவாக்கத்துக்குக் காரணம். தன் வீட்டருகே குடியிருந்த ரசிகமணியின் நட்பும் ரசனையும் அருணாசலனாரை பெரிதும் வசப்படுத்தியிருந்தன. எனினும் வையாபுரிப் பிள்ளையிடமிருந்துதான் தமிழ்ப் புலமைக்கான பயிற்சி தொடங்குகிறது. அப்போது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த அவரிடமே மாணவராகச் சேர்ந்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.

எட்டு நூற்றாண்டு வரலாறு

வையாபுரிப்பிள்ளையிடமிருந்து பதிப்பு நுட்பங்களை உள்வாங்கிக்கொண்ட மு. அருணாசலனார், 1940-ல் முக்கூடற்பள்ளு நூலைப்பதிப்பித்தார். மு. அருணாசலனார்க்கும் சரி, முக்கூடற்பள்ளுவுக்கும் சரி இதுதான் முதற்பதிப்பு! மு. அருணாசலனார் ஊர்ஊராகச் சென்று தேடி அலைந்து 150-க்கும் மேற் பட்ட ஓலைச்சுவடிகளைத் தன் வீட்டில் சேகரித்து வைத்திருந்தார். தொடர்ந்து பல நூல்களைப் பதிப்பித்தார். இதன் தொடர்ச்சி தான் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்கள்.

தமிழகக் கல்விப் புலத்தில் புற்றீசலாய்ப் பெருகியிருக்கும் மேலோட்டமான இலக்கிய வரலாற்று நூல்களுக்கு மத்தியில் மு.அருணாசலனாரின் வரலாற்று நூல்கள் மிகவும் தனித்துவமானவை. ஒரு பல்கலைக் கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனியொரு மனிதராகச் சாதித்துக் காட்டியவர். மு. அருணாசலனார் வரிசையாக ஒவ்வொரு நூற்றாண் டிலும் வெளிவந்த எந்த நூல்களும் விடுபட்டுவிடக் கூடாது என்ற கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.

இலக்கணம், சமய இலக்கியம், ஓவியம், சோதிடம், கல்வெட்டு, கணிதம் என்ற பல்துறைச் சார்ந்த நூல்களை இலக்கிய வரலாற்றில் இடம்பெற செய்ததது, முறையான ஆய்வு முறை, கவித்துவ நடை என்று பல்வேறு புதுமைகளைப் புகுத்தி எட்டு நூற்றாண்டுத் தமிழிலக்கிய வரலாற்றை எழுதி பதினொரு தொகுதிகளாக வெளியிட்டார்.

புத்தகத்தில் பெயர் போடாத பதிப்பாளர்!

கவிமணி தேசிக விநாயகத்தின் கவிதைகளைத் தொகுத்து முதன்முதலில் புத்தகமாக வெளியிட்டது மு. அருணாசலனார்தான். 1938-ல் வையாபுரிப்பிள்ளையின் துணையுடன் ‘மலரும் மாலையும்’என்ற நூலாக கவிமணியின் கவிதைகளை வெளியிட்டார் மு. அருணாசலனார்.

அந்தப் பதிப்பில் அவர்தான் பதிப்பித்தார் என்பதற்கான எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. ‘புதுமைப் பதிப்பகம், 3, சாம்பசிவம் தெரு, தி.நகர்’ என்கிற பதிப்பக முகவரி இந்நூலின் முன்பக்கத்தில் உள்ளது. இம்முகவரி மு.அருணாசலனாரின் வீட்டு முகவரி. இன்றும் இம்முகவரியில் மு.அருணாசலனாரின் வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

வாய்மொழி இலக்கிய ஆய்வாளர்

நாட்டாரியல் துறையில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர் மு. அருணாசலனார். ‘தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பின் முன்னோடி’ என்று ஆய்வாளர்களால் சுட்டப்படுபவர். ‘காற்றிலே மிதந்த கவிதை’ என்ற தலைப்பில் 1943-ல் இவர் எழுதிய நூல்தான் தமிழில் முதலில் வெளியான வாய்மொழிப் பாடல்கள் தொகுப்பு. தமிழ்க் கதைப்பாடல் ஆய்வின் முன்னோடியாகவும் இவரே அறியப்படுகிறார்.

1992-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி மு. அருணாசலனார் தனது 83-வது வயதில் காலமானார். ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ் இலக்கியத்துக் காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருந்த இந்த மாபெரும் வரலாற்று ஆளுமையின் பங்களிப்புகள் இனியாவது வகுப்பறைகளில் வாசிக்கப்பட வேண்டும்.

by Swathi   on 16 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
தமிழ் என்பதை இனி Thamizh என்று எழுதலாமா? தமிழ் என்பதை இனி Thamizh என்று எழுதலாமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.