LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

திருநங்கையாக இருப்பது தவறா?

“நான் ஒரு அரவாணி. பெற்றவர்களாலேயே நிராகரிக்கப்பட்டேன். சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இனத்தில் ஓர் அங்கமாகி, வேதனையுடன் வாழ்கிறேன். கடவுள் என்னை ஏன் இப்படிப் படைத்தார்?”
சத்குரு:
பெண்ணின் கருப்பை, மனித உடல்களைத் தயாரிக்கும் அற்புதமான, அதிசயமான தொழிற்சாலை!
பரவலாக நிலவிவரும் கருத்து போல, ஓரிடத்தில் தெய்வம் உட்கார்ந்துகொண்டு ஒவ்வொரு உயிராகப் படைத்து வெளியே அனுப்பிக் கொண்டு இருப்பதில்லை. ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் அடிப்படைச் சக்தியான உயிர்த்தன்மையே, தத்தமது உடல் தயாரிப்பு வேலையைக் கவனித்துக் கொள்கிறது. இது புரிந்து கொள்ளக் கடினமான, மிகச் சிக்கலான தொழிற்சாலை!
எந்தத் தொழிற்சாலையிலும் குறையுள்ள ஒருசில தயாரிப்புகள் நிகழ்வது உண்டு. கருப்பைத் தொழிற்சாலையிலும் சிலசமயம் தவறுகள் நிகழ்வதுண்டு. எத்தனையோ உயிர்கள், பார்வைக்கோளாறு, கேட்கும் திறன் இன்மை, வளர்ச்சியுறாத மூளை என நம்மிலிருந்து வித்தியாசப்பட்டு இருப்பது நாம் அறியாததல்ல.
ஒற்றைக் கையுடன் ஜனிக்கும் குழந்தை, தலைகள் ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் போன்ற தீவிரத் தவறுகள் படைப்பில் நிகழ்ந்தால், உடனே அதைப் பெரிதுபடுத்துகிறோம்.
உங்கள் நிலையும் இதுபோன்ற ஒன்றுதான். இதை குறைபாடு என்று பார்க்காமல், மாறுபாடு என்று பார்க்கும் பக்குவம் இங்கே வரவில்லை.
உங்களைப் போன்ற அரவாணிகளுக்கு மட்டும்தான் வேதனையான நிலை என்பதில்லை; நம்மிலிருந்து மாறுபட்ட தோற்றத்துடன் எது இருந்தாலும், அதைத் தாழ்த்திப் பார்ப்பது நம் பழக்கமாகிவிட்டது. சரும நிறம் மாறினாலே சமூகம் சமமாகப் பார்க்கத் தயாராக இல்லையே!
பல நூறு ஆண்டுகளாக மாறுபட்ட இனத்தினரைத் தாழ்த்தி, சித்ரவதைக்கு உள்ளாக்கி, அடிமைகளாக நடத்துவது இந்தப் பூமியில் நடந்தேறி இருக்கிறது. நாகரிகம் வளர்ந்துவிட்டதாகப் பறைசாற்றிக் கொள்ளும் இன்றைய தினத்திலும், வேறுபாடு காரணமாக நிகழும் கொடுமைகள் உலகெங்கும் அரங்கேறிக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
மூன்று தலைகளுடன் கடவுள் இருப்பதாகச் சொன்னால், மண்டியிட்டு வழிபடத் தயாராக இருப்பவர்கள், இரண்டு தலைகளுடன் மனித உயிர் வந்தால், அதை மேம்பட்ட தோற்றமாகப் பார்க்கத் தயாராக இல்லை. கல்லெறிந்து காயப்படுத்தவே முனைகிறார்கள்.
உடல் தோற்றம் என்பது ஒருவித வெளிப்பாடுதான். உள்ளிருக்கும் உயிர்த்தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. தங்களின் உயிர்த்தன்மையை உணர்ந்து கொள்ளாதவர்கள்தான் குறைபாடு உடையவர்கள். இதைப் புரிந்து கொண்ட பக்குவத்துடன் சமூகம் இயங்கினாலே போதும்…. எல்லாம் திருந்திவிடும்.

by Swathi   on 28 Mar 2014  0 Comments
Tags: திருநங்கை   தவறு   சத்குரு   Being   Transgender   Wrong   Sadhguru  
 தொடர்புடையவை-Related Articles
இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர் இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர்
பக்தி பற்றி சத்குரு ! பக்தி பற்றி சத்குரு !
ஜப்பானிய ரோபோக்கள்… ஜப்பானிய ரோபோக்கள்…
இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை இமயத்தின் ரகசியங்கள் – ஒரு பார்வை
நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்? நமது பேச்சு எப்படியிருக்க வேண்டும்?
கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை கொடுப்பதற்கு உங்களிடம் எதுவும் இல்லை
“ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் !” “ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் !”
70வது வயதில் 90 கி.மீ ஓட்டம் ! 70வது வயதில் 90 கி.மீ ஓட்டம் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.