LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர்

முப்பதை கடந்தப்பின் தான்
வாழ்விற்கே வாசல் திறந்ததெனக்கு..

கனவுகளை
உடைத்து உடைத்துக்
கட்டிக்கொண்ட
கனமான தாலி எனது தாலி..

கன்னம் வலிந்தவள்
கொஞ்சமே வளர்ந்தவள்
கொசுறு கோபக்காரி
கொடுப்பினை அற்ற பாவி
முத்திய வயசாச்சு
முதிர்க்கண்ணி பேராச்சு என
எத்தனை எத்தனை ஊராரின் வர்ணனையில்
வறுபட்டு வறுபட்டு
குறைபட்ட பிறப்பென் பிறப்பு..

மிருகங்களின் நெருப்புப் பார்வையில்
கருகிப்போய்
ஒதுங்கி ஒதுங்கி
பயத்தின் கொடிய பள்ளத்தில் வீழ்ந்ததுண்டு

மிரண்டக் கண்கொண்டு
பார்த்து -
பாவி பெற்ற
வயிற்றை மட்டுமே நொந்ததுண்டு

மனதால்
கொந்திக் கொந்திப் போட்டு
பாதி ஈரப்புண்ணினால்
கருத்துபோனேன்,
களங்கத்தை
துடைக்க துணிந்து மிச்ச ஆசைகளையும்
அறுத்துக் கொண்டேன்;

புத்தாடையில் கண் குத்துமோ
பொலிவு முகத்தை காமம் கொல்லுமா
நிமிர்ந்து நடந்தால் நெஞ்சை கிள்ளுமோ
ஐயோ தலை குனிந்தால்
கோழை எண்ணுமோ என்று
இவ்வுலகைக் கண்டு அஞ்சி அஞ்சி
இத்தனை வருடத்தை
முட்களின்மீதே நடந்துத் தீர்த்தேன்..

அப்பா என்றாலும்
அண்ணா என்றாலும்
தம்பி என்றாலும்
தாத்தா என்றாலும் கூட
அழைத்தவரையெல்லாம் முழுதாக நம்பமுடியாமலே
முப்பது வருடத்தின் மீதேறி
இந்த ஒற்றை தாலி போதுமென
கெட்டியாய்
கட்டிக்கொண்டேன்..

கட்டியவன் யார்
கட்டியவனொரு செந்தாமரைப் போல்
அங்கொன்றுமாய்
இங்கொன்றுமாய்
வீடெரிக்கும் நெருப்பிற்கு மத்தியில்
வீட்டினுள் வெளிச்சமாய்ப் பூக்கும்
கண்ணிய தீயிலிருந்து வந்த ஒருவன்;

இதோ அவன் நடந்தால்
அன்பில் பூ விரிக்கிறான்
அசைந்தால் அழகை
ஓவியமென்கிறான்

குழல்கள் ஆகா
வாசனை என்கிறான்
இந்த குறைபிறப்பை
கோமேதகம்
தங்கம்
தேவதை என்கிறான்..

முத்திப் போனவளுக்கு
மனசெல்லாம் மகிழ்ச்சிப் பாட்டு
உடம்பெல்லாம்
வெட்கத்தின் வெளிச்சம்

நாட்களை தினமொரு ராகத்தில்
பாடிக் கொள்கிறோம்
இரவை
பகலை
இரண்டையும் சலிக்காது தின்றுத்
தீர்க்கிறோம்,

ஆசை
பெருநெருப்பு' அறிவோம்
என்றாலும்

இது ஆசையில்லை
இத்தனை வருடத்து வலி,
மூடியிருந்த பாம்பின் இன்ப விசம்,
சொல்லி சொல்லிக் கொன்ற சமுதாயத்தின்
மீதேறி
பார் எங்களைப் பார்
இந்த முதிர்க் கண்ணனையும்
கன்னியையும் பாரென்று சிரிக்கும்
ஆனந்த சிரிப்பு..

 

- வித்யாசாகர்

by Swathi   on 05 Mar 2015  1 Comments
Tags: காதல் கவிதைகள்   தவறு கவிதைகள்   நெருப்பு கவிதைகள்   வித்யாசாகர் கவிதைகள்   Vidhyasaagar Kavithaigal   Kadhal Kavithaigal     
 தொடர்புடையவை-Related Articles
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
மரணத்தை விழுங்கும் ரகசியம்.. மரணத்தை விழுங்கும் ரகசியம்..
குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்! குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்!
அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர் அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர்
என் அவளுக்கு மட்டும்...  - தண்மதி என் அவளுக்கு மட்டும்... - தண்மதி
உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர் உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர்
இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர் இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர்
வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர் வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர்
கருத்துகள்
27-Jun-2015 21:14:37 ந. ஜெயபாலன், திருநெல்வேலி நகர் said : Report Abuse
வாலிபம் கடந்தாலும்,வலி சுமக்க வைத்த வாழ்வியலின் மீதான வெறி," இது ஆசையில்லை..இத்தனைவருடத்து வலி" வரிகள் மிக அருமை. பாராட்டுக்கள்!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.