|
||||||||
திருவிடைமருதூர் உலா |
||||||||
1705. ஆண்டபிள்ளையார் துதி.
சீருலா வான்றோர் செவிக்க ணிடைமரு
தூருலா வேற வொளிதரும்பை - யேருலவப்
பூண்டமா தங்கமதுப் பூங்கொன்றை யாரளித்த
வாண்டமா தங்க மது.
நூல்
1706. கலிவெண்பா.
1 பூமேவு நான்முகத்துப் புங்கவனுஞ் செங்கமல
மாமேவு மார்பமணி மாயவனுங் - கோமேவு
2 மிந்திரனும் வானோரு மேனோரு மின்பமுற
வைந்துதொழி லாற்று மருட்கொண்மூ - வைந்துதொழில்
3 சந்ததமுஞ் செய்துந் தனக்கோர் தொழிலில்லா
னந்த மலையரைய னன்கீன்ற - சுந்தரப்பொற்
4 கன்னி யொருபாற் கலந்தும் விகாரமிலான்
றுன்னியெவற் றுந்தோய்ந்துந் தோய்விலான் - முன்னியமண்
5 ணாதியுரு வெட்டுமத்து வாவுருவோ ராறுமிருண்
மோதிய வைந்தொழிற்கு மூலமாய்ச் - சோதி
6 யுறுமுருவொன் பானுமுற்று மோருருவு மில்லான்
மறுவின்மறை யாதி வகுத்தோன் - பெறுநெறியே
7 யாமுயிர்க்கே யின்ப மருத்தி நெறிதப்பிப்
போமுயிர்க்கே துன்பம் புணர்த்துவோ - னாம
8 விருள்கே வலத்தி னிணர்த்தருவிற் றீயாய்த்
தெருள்சே ரிடையிற்கற் றீயா - யருள்சேருஞ்
9 சுத்தத்திற் காரிரும்பிற் றோய்தீயே - யாய்நிற்போ
னெத்தத் துவங்கட்கு மெட்டாதான் - முத்தன்றன்
10 வாமத்தைப் பூமேவு மாதர்கடொட் டுப்புனைய
நாமத்தைச் செய்விடமுன் னாள்யின்றோ - னேமத்தண்
11 சொல்லமுதைப் பாகுவந்து தோயவைத்தோன் கைப்பகழி
வில்லமர்பூ நாரிதனை மேவவைத்தோ - னல்லற்
12 சிறுவிதியா கத்திற் றினகரற்கு முன்னங்
குறுகியிருள் கூடவைத்த கோமான் - றெறுபசியால்
13 வந்தழுத சேயின் வருத்தந் தெரிந்தமுது
தந்தமடைப் பள்ளி தனைக்கொடுத்தோன் - கந்த
14 மலர்மலரென் றுன்னா மதன்மெய் குளத்து
ளலர்கட் கமலத் தழித்தோன் - பலர்வெருவத்
15 தோற்று தொழினஞ் சுதந்திரமன் றென்றெண்ணாக்
கூற்றுயி ருண்ட குரைகழலான் - சாற்றும்
16 பிரணவத்துண் மேயோர் பிரமன்மா லென்பார்
முரணவிக்குங் கொன்றையந்தார் முன்னோ - னரணவரை
17 மண்வைத்த குக்கி வளைவைத்த செங்கைமால்
கண்வைத்துங் காணாக் கழலினா - னெண்வைத்துக்
18 கண்கை யிடந்துகொலை கண்ணுபு கொள்ளாமல்
வண்கையிடங் கொண்டவசி வாய்ப்படையா - னெண்கவினார்
19 தன்னிரதம் பாதலத்துத் தான்புக் கழுந்தாமன்
மன்னிரத நீர்வேணி வைத்தபிரான் - றுன்னுகணை
20 வாளியெளி தீர்தரப்பின் வாளிலங்கை மன்னனைமுன்
றாளின் விரனுதியாற் றானடர்த்தோ - னாளும்
21 புணரு மடியார் புரிபிழையு மேனோர்
குணமு மிகந்தகுணக் கோமான் - மணமலிபூங்
22 காவின்மயி லேத்தவரு கண்ணரைமா லென்றுநினைத்
தோவினடஞ் செய்கயிலை யோங்கலிடை - மேவிநல
23 மாவித் தகத்து வயங்கா கமமுழுதுந்
தேவிக் குபதேசஞ் செய்தருள - மாவிற்கண்
24 ணன்னமயின் மண்ணுலகை யான்றெரியு மாகாட்டி
யின்னலற நீவிற் றினிதிருக்கு - நன்னயவி
25 சேட தலமுந் தெரித்தருள வேண்டுமெனச்
சூடகச் செங்கைத் துணைகூப்ப - வாடமைத்தோ
26 ணங்காய்நன் றென்று நரையேற்றின் மீமிசைமற்
றங்கா தலியோ டமர்ந்தருளிப் - பங்காளுங்
27 கோதாய்காண் கென்று குவலயமுற் றுந்தெரித்து
மேதா வியர்புகழு மேன்மைபுனை - போதா;ருங்
28 காவிரியுங் கோட்டுவளக் காவிரித்தென் பாற்பொலியும்
வாவி யிடைமருதூர் வாய்மேவ - வோவியநேர்
தலவிசேடம்
29. மின்னையு மாதவனும் வேதனுங் காணாத
தன்னையு நாடிவந்த தன்னைபோற் - பன்னுபுகழ்
30. வாகீசர் போல வருந்தித் தமிழ்நாட்டீ
ரேகீ ரெனவந் திறுத்ததுபோல் - வாகார்
31. திருப்புவன முற்றுஞ் செழுமறைகள் யாவும்
விருப்புமிக நின்றேத்தும் வெள்ளிப் - பொருப்புப்
32. பெருவளவர் நாட்டின் பெரும்புண் ணியத்தா
லொருமருத மாகியவ ணுற்ற - தருமையத
33. னன்னிழற்கண் வானி னரையேற் றிணைநிறுவித்
தன்னிட நீங்காத் தலைவியைப்பார்த் - தின்னகையாய்
34. மேவுறு நன்பூ மிகவுகுத்து விண்ணுலகைப்
பூவுல காக்கும் பொழில்பாராய் - தாவிமிசைப்
35. பொங்கவுரி ஞிப்பொற் பொடிவீழ்த் துபுமண்ணைப்
பங்கமில்பொன் னாக்கும்விட பம்பாரா - யெங்குநின்மெய்க்
36. காமரொளி பாய்தலிற்கார் கால மெனக்கருதி
மாமையினன் காடு மயில்பாராய் - பூமருநஞ்
37. சேயொளியாற் பைந்தழைகள் சேப்புற வேனிலென்று
கூயமருந் தேமாங் குயில்பாராய் - மேயவிரு
38. நம்மேனி யொன்றியென நன்கொருபாற் சேந்தொருபாற்
பைம்மேனி யாமாம் பழம்பாரா - யம்புலிக்
39. கான்முனிதன் மைந்தன்முதற் காணு முழுமுனிவர்
மான்முதனீத் தாற்றிடுத வம்பாராய் - பான்மொழியே
40. யென்றுகாட் டத்தனிகா ணெவ்வுலகு மீன்றளுக்
கொன்றுமகிழ் வாற்க ணுறைதுளிப்ப - வன்றதுமுற்
41. காணுந் திசையோடிக் காருணி யாமிர்தமென்
பூணும் பெயரிலகப் பூண்டதன்மேற் - கோணிலவு
42. சூடியதன் கண்கள் சொரிநீ ரிருகூறா
யோடி வடமேற் குதக்கெதிருங் - கூடுதடத்
43. துட்போய் விழமு னுலர்ந்த சலசரங்கா
னட்பாம் விதிக்கு ந்றுந்தடத்துப் - பெட்பா
44. முருத்திர ராகியெழுந் தொண்மலர்த்தாள் போற்றிப்
பெருத்தசிவ லோகமுற்ற பின்னர்த் - திருத்தவண்வாழ்
45. தண்முனிவர் முன்பு தமிழ்மணக்குஞ் செங்கனிவாய்
வண்முனிவன் வந்துதவ மாமுனிவீர் - கண்ணொருமூன்
46. றுற்றபுகழ்ச் செய்யகரும் புங்கையுறும் பைந்தோகை
பற்றி முயலுமென்றப் பாற்போக - வெற்றி
47. முனிவரரவ் வாறெம் முதல்வியை நோக்கிப்
புனித தவம்புரியும் போது - நனிமகிழ்ந்து
48. தன்னே ரிலாத தலைவியை முன்புகுத்த
வன்னேர் குழலு மவணடைந்து - பொன்னேர்
49. வளவர்பெரு மானாடு மாதவத்த தென்ன
வளவிலா மாதவமங் காற்ற - வுளமகிழ்வுற்
50. றெம்மா லயன்முன்போ லின்றுஞ் செருக்கடைந்தா
ரம்மாவென் றியாரு மதிசயிப்ப - விம்மாநன்
51. மேதினி நின்று வெளிமுகடு மூடுருவச்
சோதியுருக் கொண்டெழுந்து தோன்றினோன் - றீதிலரு
52. ளானேயென் றேத்து மவர்தெளியு மாறுதன்னைத்
தானே யருச்சித்த தம்பிரான் - வானாட
53. ராதியர் காமிகமுன் னாமா கமத்தின்வழி
யோதியருச் சிக்க வுவந்தருள்வோன் - போதியனீர்
54. காகம் படியக் கனகவுரு நல்கிப்பி
னேக வுருத்திரமெய் யெய்தவைத்தோன் - கோகநக
55. மாண்டமல ராதிகொடு மன்னா கமத்தின்வழி
யாண்டமத வேழ மருச்சித்தோன் - பூண்டதவத்
56. தோதை கெழுசீ ருரோமசற்கு வெற்பீன்ற
கோதையொடு காட்சி கொடுத்தபிரான் - மேதை
57. யொருவீர சோழ னொளிரா லயமும்
வெருவா நகரமுஞ்செய் வித்துத் - திருவார்தைத்
58. திங்கட் டிருநாளுஞ் செய்வித்துப் போற்றிசெய
வங்கட் கருணை யருளியகோ - னங்கண்மிரு
59. கண்டு மகன்பணியக் கண்டொரு பாற்பசுமை
கொண்டுமிளிர் காட்சி கொடுத்தகோன் - றண்டாப்
60. புரவுக் குறுமுனியெப் போதுறுமென் றன்னான்
வரவுக் கெதிர்பார்க்கும் வள்ளல் - பரவுற்ற
61. பூசைவினை முற்றுவந்து புண்ணியச்சு கீர்த்திதனக்
காசில்வினை யெச்ச மளித்தபரன் - காசிபன்றான்
62. கண்ணனிள மைக்கோலங் காணத் தவம்புரிய
வண்ணலது காட்டுவித்த வைம்முகத்தோன் - வண்ணக்
63. குமரன் முனிவரொடுங் கூடியரன் றிக்கி
லமர நதியை யமைத்துத் - தமரமிகப்
64. பூசிக்கப் பெற்றோன் புகழிட்ட ரோமன்சு
கேசிக் கினிய கிளர்மதலை - வீசி
65 யனையமகன் கங்கைபுகுந் தாடுறுபோ தந்த
நினையுநதி யோரா நெறிக்கொண் - டினையலென
66 வென்னைப் புரப்பாள்க ணீர்ம்புனல்வா விக்குள்வரக்
கொன்னைக் குழமகனுங் கூடவந்து - முன்னையொரு
67 வாவிபடிந் தையாற்று வாவியிடைச் சொல்லரசர்
மேவியெழுந் தென்ன வெளிவந்து - கூவிவரு
68 மத்தனொடு கூடி யடிபோற்றி யேத்தெடுப்பச்
சித்த மகிழ்ந்தருளிச் செய்தபிரா - னுத்தமச்சீர்
69 வாய்த்த தசரதற்கும் வண்பூவைப் பூவைநிறஞ்
சாய்த்தவுடற் கண்ணனுக்குந் தானுவந்து - பூத்த
70 மதலைபல நல்கி வழிபட்டா ரென்று
மதலைபல நல்கிய வள்ளல் - சுதமில்
71 புகழிரா மன்கணையாற் பூந்தடமொன் றாக்கித்
திகழ வழிபாடு செய்ய - மகிழ்சிறந்தோன்
72 மச்சகந்தி யைப்புணர வந்த வருவருப்பை
மெச்சும் பராசற்கு வீட்டினோ - னச்சமிலா
73 தாசா னிலாட்புணர்ந்த வாசுங் கலைக்குறைவுந்
தேசார் மதிவணங்கத் தீர்த்தருளு - மீச
74 னினைத்தொருதீர்த் தத்தி னிமிமகன்க ண்டப்பு
ணனைத்தவுடன் காயவைத்த நாதன் - வினைத்திறனோ
75 ரைவரு நீர்தோய்ந் தடிபணிய மண்ணளித்த
தெய்வப் பெருமான் சிவபெருமான் - குய்யம்வைத்து
76 வேந்தன் வலற்செகுத்த வெம்பழிக்கும் பாகனைக்கொன்
றேந்துபழிக் கும்பழிச்ச வீறுசெய்தோன் - போந்துதழல்
77 காண்ட வனத்தைக் கலந்தவுயி ரோடுண்ண
வீண்டரின்முற் றும்பரவ வீடழித்தோன் - மாண்ட
78 குறுமுனி கண்களிக்கக் கூற்றாவி மேவி
மறுவி லகோரவுரு வாய்ந்தோ - னுறுசீர்
79 நிருதிதடந் தோயு நியதியரைப் பேய்முற்
கருதியடை யாவண்ணங் காப்போன் - சுருதி
80 நடையார் வருண னறுநீர் படியக்
கடையார்சோத் தீப்படியக் கண்டோ - னடையுங்
81 கிருகலன்கா னீர்மூழ்கிக் கேடிலா முத்திப்
பெருமுழுநீர் மூழ்கவைத்த பெம்மான் - வருமொருதன்
82 றோழன் றடம்படியுந் தூயோரை மற்றவனுந்
தாழ வுயர்த்துந் தனிமுதல்வன் - வாழ்வடைவா
83. னேகாமார்க் கண்டமுனி யீசான நீர்மூழ்கச்
சாகா வரங்கொடுத்த தண்ணளியோன் - வாகான
84. கண்ணன்கூ வத்துக் கருதிமழைக் கோண்மூழ்கக்
கண்ணன் களித்தருளுங் காபாலி - கண்ணுவணம்
85. பண்ணிய தீர்த்தமுதற் பத்துந்தோய் வார்பிறப்பை
மண்ணி யருளு மகாலிங்கம் - புண்ணியமே
86. மேவவளர் கச்சபனா மெய்ம்முனிவன் முன்வாம
தேவவுருக் கொண்டெதிர்ந்த தேவர்பிரா - னோவறமுன்
87. கோதமதீர்த் தந்தோய் குணத்தா லகலிகைக்கு
வாதனைப்பா டாணவுரு மாற்றுவித்தோன் - போதலர்கல்
88. யாணதீர்த் தங்கார்க்கோ டன்படிய முன்பரிச்சித்
தேணறத்தீண் டிக்கொள்பழிக் கீறுசெய்தோ - னீணிலஞ்சே
89. ரந்த நறுந்துறைபுக் காடுநள னுக்குச்சி
வந்த கலியைக்கறுத்து மண்கொடுத்தோ - னந்துமதில்
90. வெள்ளை முழுகவொரு வேதியனைக் கொன்றபழிக்
கள்ளக் கறுப்பகலக் கண்சிவந்தோன் - றள்ளரிய
91. சீர்த்திப் பகீரதனத் தீர்த்தம் படியநலங்
கூர்த்தவான் கங்கை குவலயத்தி - லார்த்துவரச்
92. செய்தோ ரறுப தினோயிரரு முத்தியுல
கெய்தா விருக்க வினிதளித்தோன் - வையகத்துப்
93. பொல்லா னொருவன்வந்தப் பூசத் துறைபடிய
வல்லார் மெய்க்கூற்றவனுக் கஞ்சவைத்தோன் - சொல்லுமந்நீர்
94. வல்லா னெனச்சேடன் வந்தாட மண்சுமக்கும்
வல்லா னெனச்சொல் வலியளித்தோ - னல்லார்
95. திகழத் துறைகந்த தீர்த்தமெனக் கந்தர்
புகழுற்றா டக்கருணை பூத்தோ - னிகழ்வற்ற
96. வத்துறையில் வேந்த னயிரா வதமுனிவன்
வைத்தசா பங்கழுவ வைத்தவருண் - முத்த
97. னொருகோட் டியானை யுவந்தாடித் தன்பே
ரிருகோட் டதற்கிடவுள் ளேய்ந்தோ - னொருவீர
98. சேனன் படியச் செறிபிர மக்கொலைதீர்த்
தீனமிலா வான்கைலை யேற்றினோன் - மானமிகு
99. சித்திர கீர்த்தி செறிந்துபடிந் தர்ச்சிக்கப்
புத்திரனை நல்கும் புகழாளன் - சுத்த
100. மறையோன் கனகதடம் வந்து படியக்
குறையார் குருடொழித்த கோமா - னிறையோனோய்
101 விண்ணுலகை யாளமரர் வேந்தன் முடிதகர்த்து
மண்ணுலகை யாளும் வயவேந்தன் - றண்ணளிசேர்
வரகுணபாண்டியதேவர் வழிபாடு.
102 மன்னன் மதுரை வயங்கு வரகுணத்
தென்னன் பெருங்கானஞ் சென்றொருநாண் - முன்னுகடு
103 மாவேட்டஞ் செய்துவய வாம்பரிமேன் மீள்பொழுதோர்
தீவேட்ட வேதியனச் செல்வழியின் - மேவி
104 மயங்கிக் கிடந்துகன வட்டத் தடியா
லுயங்கிக் கழிய வுணரா - னயங்கெழுசீர்
105 பெற்றதன்னூர் மேவப் பிரமக் கொலைதொடர
வுற்றதெவை யாலு மொழியாம - னற்றவர்சூ
106 ழாலவா யண்ண லடிபோற்ற வக்கடவு
ளேல விடைமருதூர்க் கேகென்னச் - சாலமகிழ்
107 பூத்தனையான் வந்து புகுபோதே யப்பழியைத்
தீர்த்தருளிச் செய்திடவத் தென்னவனு - மாத்தலமா
108 மித்தலத்தை நீங்கே னெனவங் குறைந்திடுநா
ளத்த கொடுமுடி யாவரணம் - வித்தகமாய்ச்
109 செய்துசூ ழென்று திருவாய் மலர்ந்தபடி
செய்துசூழ்ந் துங்கரவு தேரொருவன் - செய்யநுதல்
110 வெண்ணீறு கண்டு விசித்தகடுங் கட்டவிழ்த்து
நண்ணீ றிலாதபொரு ணன்களித்து - மெண்ணிநரி
111 யுள்ளன வெல்லா முடையானைக் கூவியவென்
றெள்ளரிய வாடை யினிதளித்தும் - விள்ளாத்
112 தவளை யரமுழக்கந் தான்செய்த தென்று
திவண்மணிபொன் வாரிச் சிதறி - யுவகையுற்று
113 மெள்ளுண் டவன்வா யிசைத்தமொழி கேட்டனையான்
றள்ளுண்ட வெச்சி றனைநுகர்ந்துங் - கொள்ளா
114 விழிகுலத்தோன் சென்னியவ்வூ ரெல்லைகிடக் கக்கண்
டிழிகணீ ரோடுகரத் தேந்திக் - கழிவுற்
115 றடியேன் றலையுமிவ்வா றாகியிவ்வூ ரெல்லைக்
குடியாமோ வென்றிரக்கங் கொண்டும் - படர்தளிமுற்
116 புன்குல நாய்மலந்தன் பொற்பூங்கை யாலெடுத்து
நன்குறவேம் பிற்குவிதா னஞ்சமைத்து - மன்புமுதிர்
117 பொன்னு நிகராப் புணர்முலைத் தேவிதனை
மன்னு மியற்பகைக்கு மாறாக - முன்னு
118 முயர்மருத வாணா வுவந்தடி யேனுய்ந்
தயர்வறநீ கொள்கென் றளித்தும் - பெயர்வரிதா
119 வின்னும் பலபணிசெய் தின்புறுமக் கோமாற்கு
மன்னுபுகழ் முத்தி வழங்கினோ - னன்னிலைமைத்
120 தொல்லை யுவனாச் சுவன்வயிற்று மாறா;ப்புண்
வல்லை வலஞ்சூழ மாற்றினோன் - வெல்லுமவன்
121 மைந்தன் புறங்கொடுத்த மாற்றானைக் கொன்றபழி
முந்தவலஞ் சூழ்முன் முருக்கினோ - னந்துவசு
122 மான்வந்து சூழ்போது மற்றவன்ற னா;டவனைத்
தான்வந்து சூழத் தலையளித்தோ - னீனந்தீ
123 ரஞ்சத் துவச னடைந்துசூழ் முன்பவற்சூழ்
வஞ்சப் பிரமகத்தி மாய்த்தபிரான் - விஞ்சுபுகழ்ப்
124 பூசத் துறைபடிந்த புண்ணியர்கால் கைப்புனறோய்ந்
தாசற் றிரண்டுயிர்வா னண்ணவைத்தோன் - மாசற்ற
125 நாரத மாமுனிவ னண்ணிவிழாச் சேவிக்க
வாரம் படுகருணை வைத்தபிரான் - வார்மீ
126 னுணங்க லுயிர்பெற் றுருத்திரர்க ளாகி
யிணங்குலகத் தெய்தவரு ளேந்த - லுணங்கன்மீன்
127 கொண்டபொதி யிட்டிகைகள் கொண்ட வொருவனுக்குத்
தண்டலில்பொன் னாகச் சமைத்தபிரா - னண்டர்தொழப்
128 பொன்னுருவத் துட்டான் பொலியுமுரு வொன்றியைத்துத்
தன்னுருவி லாவுருவந் தான்றெரித்தோன் - பன்னுபொரு
129 ளோர்வளவற் கீந்தனையா னொண்பொருள்வீ சிப்பணிக
ளார்தரச் செய்ய வருள்வைத்தோ - னோரு
130 மணங்கனுக்கு மின்னா யவதரிக்கச் செய்தோர்
சுணங்கனுக்கு முத்திதந்த தூயோ - னிணங்குபொடி
131 மெய்ப்பூ சவர்கேட்ப மேவுதிரி யம்பகன்றான்
றைப்பூச மாடத் தகுமென்றோ - னெப்பேது
132 மில்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக
மல்லே ரகமுருகன் வைப்பாக - நல்லார்சேர்
133 தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக
வண்மாந் துறையிரவி வைப்பாக - வெண்மாறா
134 நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக
மன்காழி யேவடுகன் வைப்பாக - முன்காணுந்
135 தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர்
மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக - வுன்னிற்
136 றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக
விடைமருதில் வீற்றிருக்கு மீச னடைதருசீ
137 ரேற்ற வுருத்திரர்க ளேகா தசரும்வந்து
போற்றவருள் செய்த புகழ்ப்பெருமான் - மாற்ற
138 மிணங்குமணி பொன்னாதி யிட்டமர ரென்றும்
வணங்கு மருதவன வாண - னணங்கயர்புற்
139 றோலுடையான் காதில்வளைத் தோடுடையா னீடமர்கல்
லாலுடையான் யாவரையு மாளுடையா - னூலுடையார்
140 நாடுவோன் பற்றாத நாயே னிதயத்துங்
கூடுவோன் பொன்செய் குளிர்மன்றத் - தாடுவோ
141 னோராழித் தேரோ னுதீசித் திசையென்னுஞ்
சீராழி யங்கைமகட் சேருவா - னேராகச்
142 சென்மதியுண் முன்மதியிற் றேய்மதியில் பக்கத்து
நன்மதிகொ டன்வத னத்தொகைகொ - டுன்னுதிதிப்
143 புட்கொடி யைக்கொண்டு பொறிக்கொடி மார்பிற்கொண்மரைக்
கட்கொடி யேற்றிக் களிசிறப்ப - விட்குலவு
144 குன்றுபுரை தோளாருங் கோற்றொடியா ரும்புவனத்
தொன்று பலரு முடனெருங்க - வன்றுமுதற்
145 காலையினு மாலையினுங் காமர்பல தூரியமும்
வேலையினு மார்ப்ப வியன்மறுகின் - மாலைபெற
143 வெற்பு நிகர விளங்குபல வூர்தியினும்
பொற்பு மலிபவனி போந்தருளி - யற்புமுதி
147 ரின்பதா மென்ன வெவருந் தொழச்சேரு
மொன்பதா நாளென்னு மொண்டிருநாண் - மின்பயில்பூண்
148 வாய்ந்த பெருநல மாமுலை யோடியற்று
மேய்ந்த துயினீத் தினிதெழா - வாய்ந்தசெழும்
149 பைம்பொற் றகட்டிற் பலமணியுங் கால்யாத்த
வம்பொற் றிருமண் டபமணுகி - நம்புற்ற
150 வீறுதரு மாகமஞ்சொன் மிக்க விதிப்படியே
கூறு மபிடேகங் கொண்டருளி - நாறுகுழற்
151 பெய்வளைத்தோ ளெங்கள் பெருநல மாமுலைதன்
மைவளையு நீல மலர்நோக்கான் - மெய்வளைத்த
152 பேரழகு நோக்குதலாற் பேதையவணயனக்
காரழகு மேனி கலந்ததென - வீரமலி
153 காத்திர கும்பக் கருமலையிற் கொள்போர்வை
போர்த்தி யிருந்த பொலிவென்னச் - சீர்த்திமிகு
154 பன்முகத்து முள்ள பலவண் ணமுமறையத்
தென்முகத்து வண்ணமெங்குஞ் சேர்ந்ததெனத் - துன்னுபிறர்
155 தப்பார் தருக்கொழிதல் சான்றிதென மால்கொடுத்த
குப்பாய மெய்ப்புனைந்து கொண்டதென - வொப்பேது
156 மில்லாத் திருமேனி யேந்தழகைச் சாந்தமுலைப்
பல்லாருங் கண்டு பசப்பெய்திப் - புல்லாளப்
157 பெட்டாவி மாழ்காமற் பெய்வளைக்கை யம்மைகரும்
பட்டான் மறைத்த படியென்னக் - கட்டார்கொ
158 ளோதிமுடி யாள்சமழ்ப்ப வோங்கற் புதல்விமற்றோர்
பாதியுரு வுங்கவர்ந்த பான்மையெனத் - தீதின்மணம்
159 பொங்குநீ லோற்பலப் பூமலர்த் தாளன்றி
யெங்குநெருக் குற்றே றியவென்னத் - தங்கு
160 மணமாரும் பஞ்ச வடியொளிபாய்ந் தென்னத்
தணவாத் திருச்சாந்து சாத்தி - நிணமலிவாய்
161 வேங்கை கொடுத்தகலை வீக்கு மிடத்தொளிரும்
வேங்கை கொடுத்தகலை வீக்கியே - யோங்குபய
162 னாய்ந்தவொரு பெண்ணுமற்றோ ராணு மனமகிழச்
சாய்ந்து நிமிர்ந்த தனியிடத்து - வாய்ந்தபுனற்
163 பெய்வளை மாதைப் பெருநல மாமுலைதன்
மைவிழிகா ணாமன் மறைத்ததெனக் - கைவல்லா
164 ராற்று மணிமகுட மம்பவள வோங்கன்மிசைத்
தோற்றுகதி ரென்று சொலக்கவித்துப் - போற்றுபுக
165 ழாற்றன்மிகு கண்ணப்ப ரன்பிற் சொலுமுகம
னேற்றுமகிழ் பூத்த வியலிடத்துச் - சாற்றுபுனன்
166 மங்கை யுரைக்குமொழி வந்து புகாதுமையாள்
செங்கை புதவஞ் செறித்ததெனப் - பங்கமிலா
167 மாமணிசெய் தோடும் வயிரஞ் செயுமம்பொற்
றூமகர குண்டலமுந் தொட்டணியா - வேமவரை
168 யொன்று படவிறுகி யோங்கன்மகண் மார்பில்வளர்
குன்றுபட மெல்கிக் குழையிடத்து - நன்றுதரு
169 போகுசுடர்ப் பன்மணியும் பொங்கியெழக் கால்யாத்த
வாகு வலயம் வயக்கியே - மாகவின்செய்
170 கஞ்சக்கண் மாயனயன் கற்பகக்கோ னாதியர்கூற்
றஞ்சச் சிறைவைத்த வவ்விடத்தே - விஞ்சுபுகழ்
171 மின்னுமுல கங்களெலாம் விற்றாலு மீடாகா
மன்னுமணிக் கட்டு வடமணிந்து - பன்னுமுமை
172 வட்ட முலைக்குமணி வாரா மிடத்தண்ட
மட்டினிலா விற்றரள மாலையிட்டு - முட்டரிய
173 தாவின் மணிவீர சங்கிலிம தாணிபல
மேவிய வாயிடைமேன் மேற்புனைந்து - தாவா
174 மடங்கீண்ட தொண்டருத்த மாங்கந்தாங் கக்கல்
லிடங்கீண் டெழுந்த விடத்தே - மடங்காக்
175 கருவி தனக்குக் கருதுபிற வேண்டா
விருமை மணிக்கடக மிட்டுக் - கருது
176 மலரோன் முடிதுணித்த வைவாட் குறையா
யிலகுமிடத் தாழிபல விட்டு - நலமருவு
177 பொன்னுக்குப் பின்னிருந்து பொங்குவெள்ளி தங்கிடத்து
மன்னுதர பந்தம் வயக்கியே - துன்னியொரு
178 பன்றி தொடரமற்றோர் பன்றி தனைத்தொடர்ந்து
சென்ற விடத்துச் சிலம்பணிந்து - நன்றவற்றுட்
179 கொண்டசின மாதி குறையாதே தென்றிசைக்கோன்
கண்ட விடத்துக் கழல்கட்டித் - தண்டாத
180 மாதங்க வுத்தரிய மன்னு மிடத்தொளிசெய்
மாதங்க வுத்தரிய மன்னுவித்துத் - தாதுவிரை
181 தாவாத கொன்றையந்தார் சர்ப்பப் பிராந்தியிட
மோவாதாண் மேவ வுவந்தணிந்து - பூவார்கை
182 கொண்டகருப் புச்சிலையான் கோலத் திருமேனி
யுண்ட கடுங்கூற் றுறையிடத்தே - தண்டலில்பா
183 லேறு கடலலைமா லேய்நீற்றுத் தூளனமே
னாறுதிரி புண்டரநா னத்திலகம் - வீறுகொள
184 விட்டுமதிப் பாதி யெடுத்துமுடி மேற்கவிய
நட்டினது வைத்த நயமென்ன - வெட்டுணையு
185 மாசுசா ராத வயிரமுழுக் கச்செறித்த
தேசு மிகுவா சிகைசேர்த்துப் - பேசுபுக
186 ழிட்டநமக் கோரிளவ லின்றுவரு மென்றுமலர்
மட்டுறுதா ராரூரன் மன்னுவகை - யுட்டுளைய
187 நின்வலப்பா கத்தொருத்தி நீங்கா திருப்பதென்னென்
றென்மலர்வா மத்தா ளிசைத்தூட - நன்மைதிக
188 ழம்மதியை யிவ்வரவு மவ்வரவை யிம்மதியுஞ்
செம்மை யுறவுகொண்டு சீர்படைப்ப - மும்மைப்
189 புவனத்துந் தான்றோய் பொலிவுணர்த்த லேய்ப்பப்
பவளக்காற் கண்ணாடி பார்த்துத் - திவள்பருப்புப்
190 பொங்கல்பான் மூரல் புளியோ தனங்குளஞ்சேர்
துங்கமடை நெய்மிதக்குஞ் சொன்றியளை - தங்கயினி
191 பாகு கருனை பகரும் வறையறுவை
யாகு மிலட்டுகமெல் லாவியப்பம் - போகுசுவை
192 நோலை யடைநன் னுவணை முதற்பலவுஞ்
சோலை யுதவு சுவைக்கனியுங் - காலை
193 யிளநீர் குளநீ ரியன்மோ ரளாய
வளநீர் கனிபிழிந்த மாநீ - ரளவா
194 வெவையுஞ் சுவைதேர்ந் தியலவாய் பூசிக்
குவைகொள்விரைப் பாகடையுங் கொண்டு - நவையரிய
195 மேதகுதூ பந்தீப மிக்க விவைமுதற்செ
யோதுபசா ரங்க ளுவந்தருளிக் - கோதறுசீர்
196. வாய்ந்தவொரு தானும் வயங்கு தனதருளிற்
றோய்ந்தவடி யாருஞ் சொலவந்த - வாய்ந்த
197 வெழுதா மறையு மெழுது மறையும்
வழுவாது கேட்டு மகிழ்ந்து - தொழுவார்
198 நயங்குல வின்ப நறும்பலம்பெற் றுய்ய
வயங்கு மொருகோட்டு மாவுஞ் - சயங்கொள்சத
199 கோடி யரசின் குலந்தழைய வெம்பகையைத்
தேடியவோர் வேல்கொள் செழுங்குருந்தும் -பாடியலா
200 வோட்டை மனத்தக்க னோம்பரணிச் சோதிமகங்
கேட்டை யுற்ச்சிவந்த கேடிலியு - நீட்டுமொரு
201 கைத்தலைநால் வேதங் கமழ்வாய்த் தலையொன்று
வைத்தலைநெய்த் தோரேற்ற வானவனு - நித்தமுந்தன்
202 னாய்மனைசெந் தாமரையே யாக வுறைவாளைத்
தாய்மனை யென்றழைக்கத் தக்கோனுந் - தூயவையை
203 நீரு நெருப்பு நிரம்பு தமிழ்ப்பெருமை
யோரும் படியருள்கொ ளொண்மழவுந் - தீராத்துன்
204 பாய கடலமண ராழ வரையொடலை
மேய கடன்மிதந்த வித்தகனு - மாயவன்கண்
205 காணாக் கமலநடுக் கங்குலினா ரூர்த்தெருவின்
மாணாகப் பூத்துழல வைத்தோனுங் - கோணாது
206 மூகைவாய் பேச முழுப்பேச்சு வாய்மூகை
யாக வியற்றிய வாண்டகையும் - பாகமிலாத்
207 தாதையிரு தாடடிந்து தாயையொரு பாகங்கொ
டாதையிரு தாளடைந்த சான்றவனு - மோதைகெழு
208 கைச்சிலம்பின் றோலுடைத்தன் காற்சிலம்பி னோசைசெவி
வைச்சிலம்பி னுண்டுய்ந்த வானவனும் - பச்சுமைகை
209 யாய்நீர் கரந்த வரியமுடி மேல்வழிய
வாய்நீர் பொழியன்பு மாமுகிலும் - பாய்மை
210 தகவரிந்தூட் டாது தலையிழந்தா னாண
மகவரிந் தூட்டியசீ மானு - நகமறைக
211 ளீன்றதன்வா யென்று மிசைத்தறியா வம்மையெனு
மான்றசொல்லி சைக்க வமைந்தாளுஞ் - சான்றதிரு
212 மங்கலப்பொம் கொண்டுமனை வாய்மொழிசொற் கொள்ளாது
குங்கிலியங் கொண்டுவந்த கொள்கையனும் - வெங்கொடியோன்
213 கோச மறைத்தவாள் கொண்டுதகா தாற்றவுந்த
னேச மறைத்தறியா நீதியனும் - வாசமுறத்
214 தோய்ந்தபுக ழாரூரன் றொண்டத் தொகையுணிலைத்
தாய்ந்தபுகழ் மற்றை யடியாரும் - வாய்ந்த
215 வலர்துழாய் நாறு மகன்றளியைக் கொன்றை
மலர்துழாய் நாறவைத்த மானு - நிலவு
216 முலகுண் டுமிழ்ந்த வொருவனைப்பா லுண்போ
துலகறிய வுண்டுமிழ்ந் தோனு - மிலகுநடங்
217 கண்டே பசிதணிக்குங் காமர் விரதமொன்று
கொண்டே விளங்கு குணத்தவருந் - தண்டேறல்
218 பெய்தவர் பெய்யலர் பேசல ரேயாகச்
செய்தவ ரென்னுமற்றைச் செய்தவருங் - கையிற்
219 குடவளை கொண்டுங் குடவளைக்காய்ப் பாடி
வடவளை கட்டுண்ட மாலு - மிடவளையப்
220 பூமேலெஞ் ஞான்றும் பொலிந்தும்புத் தேளாய்ச்செந்
நாமேல்வெண் மாதுவைத்த நான்முகனு - மாமே
221 வொருசுவர்க்கங் கைக்கொண் டுவந்தயி ராணி
யிருசுவர்க்கம் வைகு மிறையும் - பொருவரிய
222 வெற்பகநா ணப்பொலிந்து வீங்குதோண் மேற்புனைந்த
கற்பக மாலைக் கடவுளரும் - பொற்பகலாத்
223 தேந்தா மரைமலர்த்துஞ் செங்கதிரும் பூவினுக்கு
வேந்தா மதுகுவிக்குவ் வெண்கதிருங் - காந்தாப்
224 பொலிபடைகொண் டாசை புரப்போருஞ் சீர்த்தி
யொலிபடைத்த பூதகணத் தோரு - மலியுமிசை
225 பத்தர்பதி யாழ்கொண்டு பாடுந் தொழிலவருஞ்
சித்த ருரகர்முதற் செம்மையரு - முத்தமமீ
226 தெண்போ தெனவொருவ னெள்ளெச்சி லுண்டவிமற்
றுண்போர் பலரு ளுயர்ந்தோனும் - பண்போ
227 ரணிக்கோவை தீட்டி யகமகிழ்தற் கோர்மும்
மணிக்கோவை சூட்டியகோ மானும் - பிணிக்கோதி
228 லாதிசைவ ராதி யணியா லயத்தொண்டிற்
கேதிலரா காதியற்று மெல்லோரு - நீதிநெறித்
229 தக்கபெருஞ் சீர்ச்சுத்த சைவசித்தாந் தத்திருவின்
மிக்க திருக்கூட்ட மேன்மையரு - மொக்கவரப்
230 பண்பார்கை லாய பரம்பரை மெய்கண்டா
னண்பார்சந் தான நனிதழைக்க - விண்பார்
231 புகழ வருங்குரவர் போரேறு ஞானந்
திகழவரு மானந்தச் செல்வ - னிகழ்வி
232 றுறவுபூண் டோர்பலர்க்குஞ் சூளா மணிமிக்
குறவுபூண் டெவ்வுயிரு முண்மை - பெறவுவக்கு
233 ஞான விநோதனுயர் நாவலர்தம் போரேறு
சான முடையார் தனித்துணைவன் - மானத்
234 திருவா வடுதுறைவாழ் செல்வன் கருணை
மருவா வருநமச்சி வாயன் - பொருவா
235 வரமணியென் றெல்லோரும் வாழ்த்தப் பொலிசுப்
பிரமணிய தேசிகனெம் பெம்மான் - பரவுமுண்மை
236 தாங்குபெருஞ் சித்தாந்த சைவக் குழாங்களென
வோங்குதிருக் கூட்டத் துடன்மேவ - வீங்குசெம்பொற்
237 றேரும் பரியுஞ் சிவிகையும் யானையுமற்
றூரும் பிறவுமுவந் தூர்தருபல் - லோருள்ளு
238 முன்னூர்வோர் பக்கத்து மொய்த்தூர்வோ ரோர்தனக்குப்
பின்னூர்வோ ரம்முறையே பெற்றூரப் - பொன்னூரு
239 மின்பணியும் வேத்திர மென்மலர்க்கை கொண்டசைத்துத்
தன்பணியி னந்தி தலைநிற்பக் - கொன்பரவு
240 வாரி யுடுத்தபெரு மண்ணொருதாட் குள்ளடக்கு
மூரி விடைக்கொடி முன்போத - வேரிவரு
241 மாலவட்டஞ் சாமரைசாந் தாற்றி யொலியன்முதன்
ஞாலவட்டஞ் சொல்பலவு நண்ணிமொய்ப்பக் - கோல
242 முழுவெண் மதியு முடிமேற்கொண் டென்ன
வெழுவெண் குடைமே லிலகப் - பழுதில்
243 பதலை முழவம் படகந் திமிலை
முதல முகிலின் முழங்க - நுதலினொளிர்
244 கண்ணுடையான் வந்தான் கருது மொருபாகம்
பெண்ணுடையான் வந்தான் பிரான்வந்தா - னெண்ணினருக்
245 காய்தந்த வன்பருளி யாட்கொள் பவன்வந்தான்
றாய்தந்தை யில்லா தவன்வந்தான் - பாய்தந்த
246 நல்லா ரணியேக நாயகன்வந் தான்புலமை
வல்லா ரணிமருத வாணன்வந்தான் - புல்லார்
247 நயந்தபுரம் வேவ நகைத்தபிரான் வந்தான்
வயந்தழைவெங் கூற்றுதைத்தான் வந்தா - னயர்ந்தயன்மால்
248 சாவாம னஞ்சுண்ட தம்பிரான் வந்தானெம்
மூவா முழுமுதன் மூர்த்திவந்தான் - றாவாத
249 பொன்னம் பலத்தாடும் புண்ணியன்வந் தானென்று
சின்னம் பலவுமெதிர் சேவிப்ப - வன்னமணி
250 யாத்த வொளிமண் டபநின்று தேவியொடு
மேத்திமறை வாழ்த்த வினிதெழுந்து - தாத்திரிநின்
251 றம்பொன்முடி யண்ட மளாவவெழு கோபுரநற்
பைம்பொன்மணி வாய்தல் பலகடந்து - செம்பொன்மலர்
252 தூற்றியெல் லோருந் தொழநடைக் காவணத்தி
னேற்ற வழியே யெழுந்தருளித் - தோற்றத்
253 தலங்குதிரு வீதி யணுகியம்பொன் வெற்பி
னிலங்கு திருத்தேர்மே லேறி - நலங்கொளரி
254 யாதனத்து மேவமுடி யாரும் புனற்றுறைகண்
டாதரத்து மேவவந்த வன்னமெனச் - சீதநிழல்
255 வாழ்மருத வாழ்க்கை மதித்துறவு கொள்ளவந்த
கேழ்கிளர்செந் தார்ப்பசுங் கிள்ளையெனத் - தாழ்சடைமேன்
256 மின்னு முகிலின் விளக்க முணர்ந்துவந்த
மன்னு கலாப மயிலென்னப் - பொன்னிறங்கைத்
257 தாய்க்கு முனமளித்த தண்ணருள் கண்டுவந்த
கூய்க்குலவு தேமாங் குயிலென்னச் - சேய்க்குமுன
258 மேவுமொரு பெண்கொண்ட மெய்யுறவு கண்டுவந்த
வாவு மிளமட மானென்னத் - தாவாத
259 வொண்டரு வென்றுதனை யுள்கிப் படரவாக்
கொண்டருகு வந்த கொடியென்ன - மண்டு
260 சடையையின மென்று தவக்கருத்திற் கொண்டா
யிடையடைய வந்தமின லென்ன - வுடையதனைக்
261 கோணில் பிரணவ குஞ்சர மென்பதுளம்
பேணி யடைந்த பிடியென்ன - வாணிலவு
262 விண்ணுலக மேயபல மின்னாரும் வாரிதிசூழ்
மண்ணுலக மேய மடவாரு - நண்ணுபெரும்
263 பாதலத்து மேய பலமா தருமாட
மீதலத்துஞ் செய்குன்ற மேனிலத்தும் - பூதலத்துஞ்
264 சோதிமணிச் சாளரத்துஞ் சூழ்பசும்பொன் மன்றிடத்தும்
வீதியிடத் துஞ்சதுக்க மேவிடத்து - மோதிமநேர்
265 மாடமலி சோபான வைப்போ டரமியத்து
மாடகஞ்செய் வேதி யதனிடத்தும் - பாடமையு
266 மின்னென்று சொல்சடையீர் வின்மா ரனையெறித்த
தென்னென்று கேட்க வெழுந்துநிற்ப - தென்னக்
267 குருமுடிக்கா ரோடுறவு கொள்ளவிழைந் தென்னப்
பெருமுடிக்கா ரோதி பிறங்கத் - திருமுடியில்
268 வாழும் பிறைவடிவும் வண்ணமுமொத் தேமென்று
வீழும் பொடிநுதன்மேன் மேல்விளங்கப் - போழுங்
269 கருவிழிச்சேல் கங்கை கலப்பமுயன் றென்னப்
பொருவிலிரு பாலும் புரள - வொருவின்முடி
270 யவ்வாய் மதிநட் பமைந்தவரக் காம்பலெனச்
செவ்வாய் மலர்ந்துசுவைத் தேனூற - வொவ்வா
271 வலக்கணுற வுற்று வயங்குகம லம்போ
னலக்க முகம்பொலிவு நண்ண - நிலக்கண்
272 டனைவேய்கொண் டாங்குறவு தாங்கொளவுற் றென்னப்
புனைவேய் வளைத்தோள் பொலிய - வனையும்
273 வரையைக் குழைத்த வரைகுழைக்கு மாபோல்
விரையக் குவிமுலைகள் விம்மப் - புரையறுதன்
274 கண்ணெதி ராகாக் கணைமதவே ளன்றென்னு
மெண்ணெதி ராகா விடைதுவள வண்ணவரைத்
275 தன்பணியை வெல்லத் தருக்கியெதி ருற்றெனச்செம்
பொன்பணி யல்குல் புடைவீங்க - நன்புவியோ
276 ரெண்ணியறேர் யாத்த வெழிலரம்பை முற்றும்வெலக்
கண்ணியடைந் தாங்குக் கவான்பொலியப் - புண்ணியத்தன்
277 பாடியறேர் மேவப் பழகுதல்போற் றன்பழைய
நீடியறேர் மேவுபத நேர்சிறப்பக் - கூடி
278 யெழுகடலு நாண வெழுந்தபெரு வெள்ள
முழுகு நெடியசடை மோலி - யொழுகழகும்
270 வையமிகழ் தக்கன் மகக்கூற் றவதரித்த
செய்யவிழி நெற்றித் திருவழகு - முய்யப்
280 பகலிரவு செய்யம் பகத்தழகும் வேத
மகலரிய செவ்வா யழகும் - பகரடியார்
281 மெய்த்தசுவைச் சொல்லமுதே வேட்ட செவியழகு
மொய்த்த கருணை முகத்தழகு - மொத்துலகங்
282 காத்தமணி கண்டக் கறுப்பழகு மேருவலி
தேய்த்த தடந்தோட் சிவப்பழகும் - வாய்த்தசிவ
283 ஞானங் குடிகொ ணகுபூண் முலையுழக்குந்
தானமெனு மார்வத் தனியழகு - மானகுநீ
284 ரோடையெனுந் தன்முகத்தி னொண்கணெனும் பூவமைக்குங்
கூடையெனுஞ் செந்தாட் குலவழகும் - வாடையுத
285 வெண்ணுற்ற வில்லோ வெனும்வா சிகையழகு
நண்ணுற்ற புன்மூர னல்லழகுங் - கண்ணுற்றார்
286 மாலானார் கண்ணிமைப்பு மாறினா ரோவியமே
போலானார் நெஞ்சம் புழுங்குவார் - சேலான
287 கண்முத்தஞ் சூடிக் கதிர்த்தமுலை மேற்பழைய
வெண்முத்தம் போக்கி வெதும்புவா - ரொண்மைச்
288 சுரிகுழ றாழ்ந்திடையைச் சூழ வுடுத்த
விரிகலை போக்கி மெலிவார் - பிரிவரிய
289 நன்னா ணெடுகதிரு நாணுமணி கோத்தபல
மென்னாணும் போக்கியுளம் விம்முவார் - பொன்னான
290 கன்று கழன்றகறல் காணா ரிளந்தென்றற்
கன்றுகழ லாதடைதல் கண்டயர்வார் - நன்றுநன்று
291 பொன்செய்த செஞ்சடையார் போற்றியா - நோக்கியதற்
கென்செய்தா ராலென் றிரங்குவார் - மின்செயொரு
292 பங்காட்டி செய்தவமே பாடுற் றதுவீணே
யங்காட்டி நாம்பயில்வ தம்மவென்பார் - செங்காட்டுப்
293 பிள்ளைப் பழிகொண்டார் பெண்பழிக்கு நாணுவரோ
கொள்ளைப் பழிகொள் கொடியரென்பார் - வள்ளைப்
294 பயம்பணையார் கூடற் பழியஞ்சி யாரென்
றியம்பு வதுமுகம னென்பார் - நயம்படரப்
295 பொங்கரவப் பூணுவந்தீர் புன்க ணுதவுமக்குச்
சங்கரென் னும்பேர் தகாதென்பார் - துங்கமிகு
296 வேய்வன மேவல் விரும்பீரெம் பொற்றொடித்தோள்
வேய்வன மேவல் விரும்பீரோ - காயரவின்
297 வாயமுது கொண்டு மகிழ்வீரஞ் செம்பவள
வாயமுது கொண்டு மகிழீரோ - மேயமலர்க்
298 கொங்கைச் சிலம்பு குழைத்தீரெம் மார்பிடங்கொள்
கொங்கைச் சிலம்பு குழையீரோ - பங்கமிலிப்
299 பொற்றேர் விரும்பிப் புண்ர்ந்தீரெம் மல்குலெனும்
பொற்றேர் விரும்பிப் புணரீரோ - கற்றலஞ்சேர்
300 வாழை யடவி மருவினீ ரெங்குறங்காம்
வாழை யடவி மருவீரோ - தாழ்விழியாச்
301 சீத மதியைமுகஞ் சேர்த்தீரெம் பொன்வதனச்
சீத மதியைமுகஞ் சேரீரோ - நாதவரு
302 டாவென்ற வோரன்பர் தம்பாற்சென் றுன்மனையைத்
தாவென்ற தூர்த்தருநீர் தாமலவோ - மாவென்றிப்
303 பூதஞ் செயும்படையீர் பொன்னனையாள் பாலிரத
வாதஞ்செய் தன்புற்றார் மற்றெவரோ - சீதமலர்
304 மட்டார் புனன்மதுரை வாழ்வணிக மின்னார்கை
தொட்டாரும் வேறுமொரு சுந்தரரோ - கட்டார்கொ
305 ளோதியமைப் பாராநீ ரோரரசன் முன்கொடுத்த
மாதினையெவ் வேதுவினுள் வைத்திருப்பீர் - மோது
306 புரத்தை யெரித்ததுமெய் போர்புரித லால்வேள்
புரத்தை யெரித்ததுநீர் பொய்யே - சிரத்தையின்மாற்
307 காழி கொடுத்தநுமை யாதரித்த நாங்கள்கைப்பல்
லாழி யிழப்ப தழகாமோ - வாழ்தேவூர்க்
308 கன்றுக் கிரங்குங் கருணையீர் தீருமெங்கைக்
கன்றுக் கிரங்காவன் கண்மையெவ - னன்றோர்
309 நகரி லமண்சுருக்கி நங்கூறை தீர்த்திந்
நகரி லமண் பெருக்க னன்றோ - புகரில்
310 கருங்குயிலும் பாலடக்கக் கற்றீர் வருத்துங்
கருங்குயிலெம் பாலடக்கக் கல்லீர் - நெருங்குமுலை
311 யுள்ளிடத்தும் வைத்தீ ரொருத்தி கவர்ந்துகொண்டு
தள்ளிடத்து மெம்மைவைத்த றாஞ்சகியீர் - வெள்ள
312 மடக்குந் திறலீரெம் மம்பகம்பெய் வெள்ள
மடக்குந் திறல்சற்று மாளீர் - கடுப்பின்
313 மதிமயங்கா வண்ணமுடி வைத்தீர் பரவெம்
மதிமயங்கா வண்ணம்வைக்க மாட்டீர் - புதியகரு
314 மஞ்சமையு மெங்கண் மணிக்கூந்தற் கட்டவிழ்ப்பீர்
பஞ்சவடிக் காங்கொலெனப் பார்த்தீரோ - வஞ்சம்
315 பயில்கொக் கிறகு படர்சடைவைத் தீர்வெங்
குயில்பற் றிறகெவனீர் கொள்ளீர் - வெயிலின்
316 மணியுடைநும் பூணுணவு மாற்றும் விரத
நணியனகொ றென்ற னடுக்கும் - பிணிதவிர்மெய்
317 யந்திவா னென்றே யமைத்தோ மமைப்பதற்கு
முந்திக் குவிந்த முககமல - நந்திப்
318 பரவு சடைமுகிலைப் பார்த்தவுடன் சொல்லாய்
விரவு குயிலொடுங்கி விட்ட - வுரவிற்
319 றிகம்பரரா நும்மைத் தெரிந்தடைந்த யாமுந்
திகம்பரரே யாகிச் சிறந்தோஞ் - சகம்பரவு
320 மத்திக் கருளி யறங்கொண்டீ ரெங்கண்முலை
யத்திக் கருளி யறங்கொள்ளீர் - பத்தியருக்
321 கேற்று வருவீ ரிடர்க்கடலுண் மூழ்குமெமக்
கேற்று வராமை யியம்புவீர் - போற்றியனும்
322 மேனிதழ லென்றுரைப்பார் மெய்யே யருகடைந்தே
மேனிதழ லாய விதத்தென்பார் - மேனா
323 ளுணங்கன்மீன் றுள்ள வுவந்தீர்நீர் கண்மீ
னுணங்கன்மீ னாக வுவப்பீ - ரிணங்கு
324 மிடைமருதா னந்தத்தே னென்பா ரருளா
வடைவினிம்ப நெய்யென் றறைவோ - முடையவரே
325 கோதை தரினுவப்புக் கூடு மறுக்கின்மிகு
வாதையுறு மென்னுமட வாருளொரு - பேதை
பேதை
326 விடராய வாடவராம் வெவ்வரவம் பற்றத்
தொடரா மதிப்பிஞ்சு தோலா - நடமுடையார்
327 தேறுந் திறத்தமருந் தெய்வமரு திற்பறந்
தேறுஞ் செயலி லிளங்கிள்ளை - மாறுபடு
328 சூர்மாவென் றுள்ளந் துணிந்ததோ நாமறியோ
மூர்மா விவர்ச்சி யுறாதகுயி - றார்மார்
329 படலுடைய மார னவாவியினி தேறத்
திடமருவு றாதவிளந் தென்றல் - படம்விலக்கி
330 யென்மார்பி னில்லா விரண்டு புடைப்பன்னாய்
நின்மார்பி லுற்றமைசொ னீயென்பாள் - பொன்மார்பத்
331 தேறுகைத்தா ரன்ப ரிதயம்போல் வஞ்சமுதன்
மாறு விளையா மனத்தினா - டேற
332 வல்லையே பாலிம் மரப்பாலைக் கூட்டமுலை
யில்லையே யார்கொடுப்பா ரென்றழுவாள் - வல்லா
334 ரெழுதுமொரு பூசையைக்கண் டின்றே கிளிக்குப்
பழுதுவரு மென்றோட்டப் பார்ப்பா - டொழுகுலத்தின்
335 முற்று தமிழ்விரகர் முன்னமணர் வாதம்போ
லுற்றுமுடிக் கப்படா வோதியாள் - பற்று
336 குடியிற் பொலிமாதர் கொண்டநாண் போலக்
கடியப் படாக்குதம்பைக் காதாள் - படியி
337 லடுக்கும்விடங் கொள்ளா வராக்குருளைப் பல்லே
கடுக்கு மெனப்புகலுங் கண்ணாண் - மடுக்குமுயி
338 ரொன்று கழிதரமற் றொன்றுபுகு மூலருடம்
பென்ரு கரையு மெயிற்றடியா - டுன்று
339 வினைபெற்ற மேருவல்லா வெற்பினங்கள் போனாண்
டனையுற் றறியாத் தகையாள் - வனையுங்
340 குழலும்யா ழுங்கைப்புக் கொண்டடீமென் றெண்ணி
யுழலுமா றோர்சொ லுரைப்பா - ளழகு
341 பருவ மிரண்டுட் பருவமே யொப்பப்
பெருக வளைந்த பிணாக்க - டெருவி
342 னெருங்கப் புகுந்து நிறைகல்வி யான்றோர்
சுருங்கச் சொலன்முதலாத் தோற்றி - யொருங்கு
343 பொருள்புணர்த்திப் பாடப் பொலிசெய்யுண் முன்னந்
தெருளுணர்ச்சி சாலாச் சிறியர் - மருள்வகையிற்
344 பாடுகின்ற செய்யுளெனப் பற்பலவாஞ் சிற்பமெலாங்
கூடுகின்ற மாடக் குலமுன்னர் - நீடுபெரு
345 வீடுசிறு வீடென்று மேன்மே லுறவியற்றிக்
கூடு மவர்புனையுங் கோலமென - நாடுவிரற்
346 கோலம் புனைந்து குலாவி யவருவக்குஞ்
சீல மெனவுவக்குஞ் செவ்வியிடைச் - சாலு
347 மருவு முருவு மனலும் புனலு
மிருவுங் கொடையு மிரப்பு - மொருவா
348 விரவும் பகலு மினனு மதியும்
புரவு மழிப்பும் பொருந்திப் - பரவுசிறப்
349 பாணுருவும் பெண்ணுருவு மாலா லமுமமுதுங்
காணு மரவுங் கலைமதியும் - பேணுதிறல்
350 யோகமும் போகமு முள்ளா ருரைபலவு
மேகமு மாய விடைமருதர் - மோகப்
351 பெருந்தேர் நடத்திவரப் பெட்டனைமா ரோடவ்
வருந்தேர் தொழுதற் கடைந்து - திருந்துமனை
352 மார்வணங்கும் போது வணங்கினாண் மான்முதலோர்
நேர்வணங்குந் தெய்வவுரு நேர்கண்டாள் - காரும்
353 வணங்கோதி யன்னை வதனமலர் நேர்பார்த்
திணங்கோ திவர்யாவ ரென்றா - ளணங்கே
354 யிடைமருது வாழீச ரெல்லா வுலகு
முடையர் நமையா ளுடைய - ரிடையறநன்
355 றூரும் விடைகருட னூர விடைகொடுத்தார்
சாருந் தமைப்புணர்ந்து சாத்தனையீன் - றாருங்
356 கொடிபுணரச் செம்பொற் கொடிகொடுத்தார் மூன்று
கடிமதிலும் வேவக் கறுத்த - வடியுடைப்பே
357 ரம்புசுமந் தெய்வ வகத்தியனார் தம்மைக்கொண்
டம்பு கொடுத்த வழகரென - நம்புமிவ
358 ரித்தெருவிற் றேரேறி யேன்வந்தார் சொற்றியென
முத்தமொளிர்ந் தென்ன முகிழ்நகைசெய் - தத்தரிவர்
359 நம்மையெலா மாட்கொண்டு நாம்வேட் டவையளிக்க
வம்மையொடும் வந்தா ரறியென்னச் - செம்மைமயி
360 லப்படியா னானன்றே யையர்முடி யம்புலியென்
கைப்படியு மாறு கரையென்னச் - செப்பும·
361 தந்த விடம்பெயர்ந்தா லந்தோ வுருக்காண
லெந்த விடத்து மிலைகண்டாய் - முந்த
362 முனிதக்கன் சாப முராரிமுத லோருந்
தனிதக்க தென்னத் தகுமோ - வனிதா
363 யெனவதனைக் கூவமன மில்லையெனிற் கைம்மான்
றனையெனக்கு வாங்கித் தருதி - யனையேயென்
364 றோத வி·தென்னென் றுண்ணகைத்தம் மான்முழக்கஞ்
சாத மெவர்செவிக டாமேற்கும் - போத
365 வொருமுழக்கஞ் செய்யி னுதிருமே யண்ட
முருமுழக்கம் யாவுமிதற் கொப்போ - திருவே
366 யடங்குகென மற்றதுவு மப்படியே லாட
றொடங்குமரப் பாவைக்குச் சூட்டத் - தடங்கொளிவர்
367 தோண்மே லணிந்த தொடையா வதுவாங்கென்
றாண்மேற் கலைதொட் டலைத்திடலும் - வாணெடுங்க
368 ணன்னை முனிவாள்போ லாங்கு முனிந்தொருநீ
பின்னையெச்ச தத்தர்தரு பெண்ணல்லை - முன்னைத்
369 தவம்பெரிது வேண்டுவாய் தன்னை யடக்கென்
றவஞ்சிறிது மில்லாதா ளாற்ற - நிவந்த
370 திருத்தேரை யப்பாற் செலுத்துதரங் கண்டு
திருத்தே ரனையொடுமிற் சென்றாள் - பொருத்துசிலை
371 கோட்டாது வண்டுநாண் கூட்டாது வாளியொன்றும்
பூட்டாது வேடேர்ப்பின் போயினான் - மீட்டுந்
பெதும்பை
372 ததும்பு மணிக்குழைதோ டாம்வருடி யாடத்
ததும்புகொடி போலுமொரு தையற் - பெதும்பை
373 யலரும் பருவ மடுத்ததென்று மைந்தர்
பலருமெதிர் பார்க்கவொளிர் பைம்போ - திலகுமெழின்
374 மாட மிசைத்தவழு மாமுகிலின் றோற்றங்கண்
டாடமனங் கொள்ளு மழகுமயி - னீடுகடல்
375 கூடிக் கடைநாள் குடநின்றுந் தேவர்கலந்
தேடிப் புகுதாத தெள்ளமுத - நீடுசண்பை
376 நாட்டிறைவ னாரெண் ணகத்தமண ரைச்செயல்போற்
கூட்டிமுடித்த குழலினாள் - வேட்டுவஞ்ச
377 முந்து களவு முனிவுங் குடிபுகுத
வந்துவந்து பார்க்கும் வரிவிழியா - ணந்து
378 கறியமைத்தார் தள்ளுங் கருவேப் பிலைபோ
லெறிகுதம்பைக் காதி னியலா - ளறிகயத்தின்
379 கொம்பு வெளிப்படன்முற் கூர்முனை தோற்றுதல்போல்
வம்பு முலைதோற்று மார்பினா - ணம்புபல
380 பூமாலை சூடுதற்கும் பூணாரம் பூணுதற்கு
மாமாலை தாக வமைந்துள்ளாள் - காமரசப்
381 பேறுங் குலமாதர் பேணும்பூ ணென்னுநாண்
வீறுஞ் சிறிதரும்பு மெய்யினா - டேறுசிலை
382 வேளா கமத்தின் விதம்புகல்வார் வார்த்தைசற்றுங்
கேளா தவள்போலக் கேட்டமர்வா - டாளாம்
383 பெரும்பகையெண் ணாதுவரை பேர்த்தான்போற் கொங்கை
யிரும்பகையெண் ணாத விடையா - ளரும்புபெருங்
384 காதலுடைத் தோழியர்கள் கைகலந்து சூழ்தரமிக்
காதலுடை வாவி யணைந்தாடிச் - சீதப்
385 பலமலருங் கொய்து பனிமாலை கட்டி
நிலமலரு மாதவிநன் னீழல் - குலவுபளிங்
386 காரப் படுத்தெழின்மிக் காக்கியதா னத்தமர்ந்து
சேரப் படைக்குந் திறல்படைத்தா - னோர்தான்
387 படையா தமைந்த பரிகலநல் கூரு
முடையா தெதிர்ந்தமத வோங்கல் - புடையாருங்
388 கொம்புபட்ட போர்வை கொடுத்த தனியூரு
மம்புவிட்ட தின்மை யதுதெரிந்துஞ் - சம்பு
389 விடாதுவா ழூரும்விதி வீநா ளரசு
படாதுவா ழூருமருட் பற்றுக் - கெடாது
390 பதியே பசுவாய்ப் பயங்கொடுத்த வூரும்
விதியேமே னோக்குதிறம் வெய்ய - கொதிதழலுக்
391 கன்றிப் புனற்கென் றதிசயிப்பச் செய்யூரு
மன்றிமதன் றீக்குவிருந் தாமூரு - நன்றிதரு
392 தண்டீசர்ப் போற்றியடி தாழ்ந்தபின்னும் வேறோருவர்க்
கண்டாய்விற் போற்றவருள் காலூரு - மண்டிப்
393 பிறந்தார் பிறவாத பேரூரு நாளு
மிறந்தா ரிறவாத வூருஞ் - சிறந்தநலத்
394 தாட்டை விரும்பி யடுபுவியு மாடரவு
மோட்டை படாம லுறையூரு - மேட்டைதவிர்
395 கன்னியொரு பாற்கலந்து காலில்கட கம்புனைந்து
மன்னியிட பத்து வரைத்தனுக் கொண் - டுன்னியொரு
396 தம்பத் துதித்தசிங்கந் தான்றருமுட் சாத்தணிவார்
கும்பத் துதித்துக் குலவூரு - நம்புபொறை
397 யாதியடை யானு மரிக்கரிய செங்கமலப்
போதியைய மார்பேற்கப் பூட்டூருஞ் - சோதிமணி
398 வாய்திறந்து பாடி மணியம் மனைகொண்டு
தாதியரோ டாடுஞ் சமயத்தி - லோதி
399 மழையனைய வோரணங்கு வந்து பணிந்து
கழையனைய செஞ்சொற் கனியே - விழையு
400 மொருபாற் பசப்பா யொருபாற் சிவப்பா
யிருபாலு மொன்றி னியையும் - பெருமான்
401 கொடுங்கோளூர் மேய குழகன் கொடுமை
விடுங்கோ ளிலியுமமர் மேலோ - னொடுங்கா
402 விடைச்சுரத்து வாழ்வா னிடைமருத மேயா
னடத்துதிருத் தேரணித்தே நண்ணிற் - றடத்தியெழு
403 சேவிக்க வம்மெனச்சூழ் சேடியர்க ளோடெழுந்தா
ளாவிக் கினியான்மு னண்மினா - டேவியொடு
404 வீற்றிருக்குங் கோலம் விழிகுளிரக் கண்டுவளை
யேற்றிருக்கு மங்கை யிணைகுவித்தா - ளூற்றிருக்கு
405 முள்ளங் குழைய வொருத்தியிவர் பாலமர்ந்தாண்
மெள்ள வவளார் விளம்பென்றாள் - கள்ளமில
406 மாதே யனைத்தும் வருந்தாது பெற்றவணா
மாதேய மற்றவளே யாதாரங் - கோதேயா
407 வன்னையவ ளேயுலகுக் காக்க மெனக்கோடி
பின்னையது நாம்பெற்ற பேறுகா - ணென்ன
408 வெனையு மருகே யிருக்கவைப்பீ ரென்னப்
புனையு மலர்க்குழலார் பூவாய் - நினையுந்
409 தரமோவத் தாயர் தமக்கேயல் லாதப்
புரமேவ யார்க்குப் பொருந்து - முரமேவ
410 நீயருகு மேவுவையே னீடுலகி னாகமெலாம்
போயவர்பூ ணாகிப் பொலியுமே - தூயமன
411 மானக்கஞ் சாறர் மகள்கோதை யன்றிமற்றோர்
தேனக்க கோதைகளுஞ் சென்றேறி - மேனக்க
412 பஞ்சவடி யாமே பரவொருத்தர் கல்லன்றி
விஞ்சவெவர் கற்களுமெய் மேவுமே - துஞ்சு
413 மிருவ ரெலும்பன்றி யெல்லா ரெலும்பும்
பொருவரிய மேனி புகுமே - மருவுசிலை
414 வேடனெச்சி லல்லாது வெங்கா னுழலுமற்றை
வேடரெச்சி லும்முணவாய் மேவுமே - நாடுமறை
415 நாறும் பரிகலம்போன் ஞாலத்தார் மண்டையெலா
நாறும் பரிகலமா நண்ணுமே - தேறுமொரு
416 மான்மோ கினியாய் மணந்ததுபோன் மற்றையரு
மான்மோ கினியாய் மணப்பரே - நான்மறைசொல்
417 வல்லா னவனையன்றி மாலா தியபசுக்க
ளெல்லாம் பிரம மெனப்படுமே - வல்லார்
418 திருவருட்பா வோடுலகிற் சேர்பசுக்கள் பாவுந்
திருவருட்பா வென்னச் செலுமே - பொருவா
419 வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப்
பிரமணிய தேசிகன்போற் பேண - வுரனமையா
420 வெல்லாரு மெய்க்குரவ ரென்று வருவாரே
நல்லாயென் சொன்னாய் நகையன்றோ - சொல்லாதே
421 யோலையிட்ட வள்ளை யொருத்திபோன் மாதவத்தான்
மாலையிட்டாய் கொல்லோ மறவென்ன - மாலை
422 யிடுவேனிப் போதென் றெழலு முருகர்
தொடுமாலை யன்றே சுமக்க - வடுமாறில்
423 வேழஞ் சிதைத்ததுகொன் மேதகுமூக் கோர்மயிற்குத்
தாழவரி வித்துச் சமைந்ததுகொல் - வாழி
424 திருமான் முகத்திற் றிருக்கா யதுகொல்
பொருமானின் கைத்தொடையிற் பூண்பூ - வெருவாத
425 கண்ணப்பர் பாதங் கமழ்செருப்புத் தோயுமென
வெண்ணப் படுவ திதற்குண்டோ - கண்ணன்முழந்
426 தாளில் விசயன்முன்னாட் சாத்தியபூ வோவிந்த
நாளினின்கை மாலை நறியபூ - வாளா
427 விருத்தியென்றா ளெண்ணியது மிப்படியோ வென்று
விருத்தியுற சென்றமன மீட்டாள் - பொருத்தி
428 மடக்கினான் வின்னாண் மதவேள் சினத்தை
யடக்கினான் றேர்ப்பி னடைந்தான் - விடற்கரிய
429 செங்கைநடத் தாரப்பாற் றேர்செலுத்தல் கண்டந்த
நங்கைமனை நோக்கி நடந்தாளோர் - மங்கை
மங்கை
430 திரையிற் பிறவாத தெள்ளமுத மோங்கல்
வரையிற் பிறவா வயிரந் - தரையிற்
431 பிறந்த மதியமைந்தர் பேராசை கொள்ளச்
சிறந்த பசுங்காம தேனு - வுறந்த
432 புரிகுழல் கட்டவிழ்க்கும் போதா டவர்த
மரிய மனமுங்கட் டவிழ்ப்பா - டெரியமுடி
433 செய்துமலர் சேர்த்துச் செருகும்போ தேபனித்தல்
செய்யுயிருஞ் சேர்த்துச் செருகுவாள் - வெய்யவிட
434 முண்டா னுமிழ்ந்தான்கொல் லோவென்று மால்பிரமன்
கண்டா னடுங்குமிரு கண்ணினா - டண்டாமை
435 கொண்டமைந்தர் நெஞ்சங் குடிபுகுந்தா டப்பொன்னாற்
கண்டதிரு வூசலெனுங் காதினா - ளண்டம்
436 வளைத்தாள் கதிர்மதிய மாக்களங்க மாற்றி
முளைத்தா லனைய முகத்தா - டிளைத்தபெருங்
437 காமரச மெல்லாங் கமழ வடைத்தசிறு
தாமச்செப் பென்னுந் தனத்தினா - ணாமமறத்
438 தன்னை யறிந்துபரந் தானேயென் பான்பொருவத்
தன்னை யறிந்து தருக்குவாள் - கொன்னே
439 பெருத்து முலைகணமைப் பின்பு வருத்தத்
திருத்துமெனத் தேர்ந்த விடையாண் - மருத்துப்
440 பொதியமலை நின்றுவரப் போயேற்பாள் பின்ன
ருதியமைதீப் போல்வ துணராண் - மதிய
441 மெழுந்துவரக் கண்டுவப்பா ளீதே வடவைக்
கொழுந்துபொரு மென்றுட் குறியாள் - செழுந்தரளக்
442. கோவை புனைந்து குவட்டருவி யொத்ததென்று
பூவை யொருத்திசொலப் புந்திசெய்வா - டாவிக்
443. கரைகட வாத கடல்போல வன்னை
யுரைகட வாமே யுறைவாள் - வரையின்
444. பகையிந்தி ராணி பணைமுலைதோய் காலந்
தகையினுளங் கொள்ளுந் தகையா - ணகைசெய்
445. மனைமுகப்பி லெண்ணின் மடவாரோ டெய்தி
நினையு நிலாமுற்ற நின்று - புனையு
446. முலைப்பகை யாகி முளைத்த துணர்ந்து
தலைப்பகை கொண்டுசெங்கை தாக்கு - நிலைப்பென்னப்
447. பந்தடித்து முத்தம் பலமுகத்து நின்றுதிரச்
சந்தத் தனத்துமுத்தந் தாம்பிறழ - நந்த
448. விளையாடு போதில் விரும்புதாய் வந்து
வளையாடு செங்கைமட மாதே - யிளைய
449. ரியங்கு தலைமாற்று மெண்ணமோ மேலாய்
வயங்கு துறவுமடி யாதோ - பயங்கொள்
450. கருப்புவில்லி காணிற் கனகமய மான
பொருப்புவில்லி யோடு பொரவோ - விருப்பார்
451. திருமங்கை கண்டறிஞர் செந்நா வகத்த
மருமங்கை யாதன் மதித்தோ - வருமந்த
452. பொன்னே மணியே புறவே பசுமயிலே
மின்னேயிவ் வாடல் விடுகென்ன - வந்நேர
453. மண்டம் புவன மனைத்தும் விளராமற்
கண்டங் கறுத்த கருணையான் - பண்டு
454. வெருவருமா லாதிவிண்ணோர் மெய்வலியெ லாஞ்சிற்
றொருதுரும்பு கொண்டளந்த வும்பன் - பெருவரையைப்
455. பண்டு குழைத்த படிகருதா தம்மைசெங்கை
கொண்டு தழுவக் குழைந்தபிரான் - மண்டுபுலா
456. லேங்கொடுக்க மாட்டாதென் றெங்கட் குரைத்தொருவர்
தாங்கொடுக்கும் போதெல்லாந் தானுண்டா - னீங்கிடுமின்
457. பொன்மேனி மாதர் புணர்திறத்தை யென்றுரைத்துத்
தன்மேனி யோர்பாலோர் தையல்வைத்தான் - பன்மாடக்
458. கூடல் வழுதியடி கொண்டு பலவுயிர்க்குஞ்
சாட லமையாத் தழும்பளித்தா - னாடு
459. மொருவன் றலையை யுகிராற் றடிந்து
பொருவில்கழு வாயெவர்க்கும் பூட்டுந் - திருவ
460. னறிந்தடிமை செய்வார்பொன் னாடை யுடுக்கச்
செறிந்தசிறு தோலுடுக்குஞ் செல்வ - னறந்தழைய
461. வெல்லா முடையா னிறத்தல் பிறத்தலிவை
யில்லானென் றெல்லாரு மேத்தெடுப்பான் - வல்ல
462. விடைமருத வாண னிமைக்குந் திருத்தே
ரடையவணித் தேகண் டணைந்தாள் - புடைவிரவு
463. தையலா ரோடு தடங்கைகுவித் தாண்மாலு
மையலார் மேனி வனப்புணர்ந்தா - ளையோ
464. முளையாத காம முளைத்ததுசெங் கைவில்
வளையா மலர்சொரிந்தான் மார - னிளையா
465. ளுடுக்கை நெகிழ வுறுவளைகை சோர
விடுக்கை யடைந்து மெலிந்தாள் - கடுக்கை
466. புனைவான் கடைக்கண் பொருத்தினான் போல
நினைமூர றோற்றி நெடுந்தேர் - தனையப்பா
467. லுந்தினான் வேளுமுடன் றொன்றுபத்து நூறுமேற்
சிந்தினா னாகிச் செருச்செய்தான் - முந்தித்
468. தலையமைந்த தோழியர்கைத் தாங்கத் தளரு
தலையடைந்தாண் மாளிகையுட் சார்ந்தா - ணிலைநின்று
469. காதள வோடுங் கருங்கண்ணா ரெல்லாருஞ்
சீதள மெல்லாஞ் செயப்புகுந்தார் - போத
470. வவைக்குப் பொறாளா யயர்தல்கண்டு காமச்
சுவைக்குத் தகுதோழி சொல்வா - ளெவைக்குந்
471. தகச்செய்தா னீங்குந் தகாமை செய்தாற் பெண்கா
ணகச்செய்வ தாகு நலமோ - மிகப்படுத்த
472. மாந்தளிரை நீக்கி மகாலிங்க மேயமரு
தாந்தளிரைச் சேர்த்தா லறமுண்டே - காந்த
473. வணிதரளம் போக்கி யமரர்பெரு மான்கண்
மணிபுனையிற் சாந்தம் வருமே - பிணிசெய்
474. பனிநீரைப் போக்கிப் பரமர்சடை மேய
பனிநீரைப் பெய்தல் பயனே - கனிசந்
475. தனம்போக்கி யையர் தவளப் பொடியின்
மனம்போக்கு மின்மறுக்க மாட்டாள் - சினந்த
476. பலமொழியா லென்ன பயன்மருத ரென்னு
நலமொழியே யென்று நவில்வீர் - குலவிசெய்ய
477. வாம்பன் மலரை யகற்றி யமையமரு
தாம்பன் மலரை யணிந்திடீர் - மேம்படிவை
478 யல்லாற் பிறிதுசெய லத்தனையுந் தக்கன்மக
மொல்லாதே யாயதிற மொக்குமே - யெல்லா
479. மறிவீரென் றோத வறைந்தமொழி யெல்லாஞ்
செறிநோய் மருந்தாய்த் திருந்த - வெறியார்
480. தடந்தார்க் குழலியுயிர் தாங்கி யமர்ந்தாள்
விடந்தா னெனப்பொலியும் வேற்கண் - மடந்தைவலி
மடந்தை.
481. முற்றிச் சிலைவேண் முதுசமரா டற்குயர்த்த
வெற்றிக் கொடியின் விளங்குவாள் - பற்றுமல
482 ரைங்கோ லுடையா னரசு நடாத்திக்கொள்
செங்கோ லனையபெருஞ் செவ்வியா - டிங்கட்
483 குடையான் மகுடமெனுங் கொங்கையளன் னானே
யுடையா னெனப்புகறற் கொத்தா - ளிடையா
484 வனைய னினிதமரு மத்தாணி யென்னுந்
தனைநிகரி லல்குற் றடத்தாள் - புனையுங்
485 கிழக்குமுத லெத்திசையிற் கிட்டினுஞ்சோர் வித்தாள்
வழக்கறுக்கும் பார்வை வலியாண் - முழக்கறிவி
486 னேய்ப்பெய் துறாமுனிவ ரெல்லார் தவங்களையும்
வாய்ப்பெய் திடுங்கவவு வாணகையாள் - பார்ப்பினிய
487 வோதியாஞ் சைவலத்தா லொண்முகமரந் தாமரையாற்
கோதியலா மைக்கட் குவளையா - லாதரச்செவ்
488 வாயாங் கழுநீரால் வண்காதாம் வள்ளையா
னேயார் கபோலமெனு நீர்நிலையா - லேயு
489 மதரமாஞ் செங்கிடையா லங்கழுத்தாஞ் சங்கால்
பொதியுமுலை யாம்புற் புதத்தா - லிதமாய
490 வுந்தி யெனுஞ்சுழியா லொத்தமடிப் பாமலையாற்
சந்தி பெறுமுழந் தாண்ஞெண்டா - லுந்துகணைக்
491 காலாம் வராலாற் கருதப் பொலிந்தபுறங்
காலா மொளிர்பொற் கமடத்தா - லேலாவெங்
492 காமவிடாய் பூண்டு கலங்கா டவர்மூழ்கி
யேமமுறும் வாவி யெனப்பொலிவா - டாம
493 மணிநிலா முற்றத் தளவிலார் சூழ
மணிநிலா வெண்ணகையாள் வைகிக் - கணிதமறத்
494 துன்றுபன்மே லண்டத் தொகையுங் கடந்தப்பாற்
சென்று பொலியுந் திருமுடியு - மொன்றுதிற
495 லென்று மதியுமிவை யென்னப் பகலிர
வென்றும் விளைக்கு மிருவிழியு - நன்றமைய
496. மும்மை யுலகு முகப்பவே தாகமங்கள்
செம்மை யுறவிரித்த செவ்வாயு - மம்ம
497. வடுக்கு மிரவு மவிரும் பகலு
முடுக்கும்வளி வீசுமென் மூக்குந் - தடுப்பரிதா
498. யெந்தப் புவனத் தெவர்கூறி னாலும·
தந்தப் பொழுதேயோ ரஞ்செவியு - முந்தவரு
499. காவருநங் கூற்றடங்கு காரா கிருகமென்று
தேவர் பரவுந் திருக்கழுத்து - மேவு
500. பெருந்திசைப்போக் கன்றிப் பிறிதில்லை யென்னப்
பொருந்தி வயங்கும் புயமுந் - திருந்திய
501. விண்ணுலகுங் கீழுலகு மேல்கீழு மாகவைத்து
மண்ணுலக மேயாய் வயங்கரையு - நண்ணு
502. மெழுபா தலமு மிகந்துமால் கண்டு
தொழுமா றிலாத்தாட் டுணையு - முழுதாள்வோன்
503. மன்னு மிடைமருத வாண னருட்பெருமை
யுன்னுந் திறத்தா ளொருத்தியைப்பார்த் - தென்னே
504. யிடைமருதென் றோது மிதன்பெருமை யாரே
யடைய வகுப்பா ரணங்கே - யுடையவரே
505. பேணு மருதின் பெருமை யெவருரைப்பார்
காணுந் தரமில் கயிலைகாண் - பூணுமன்ப
506. ரெல்லாரு நாவரச ரென்ன வடநாட்டிற்
செல்லா திருக்கத் திருந்தியதா - னல்லா
507. யிதுகண்ட நாமற் றெதுகாண்டல் வேண்டு
மதுகண் டவரா யமைந்தேஞ் - சதுர
508. ருருத்திரர்க ளோர்பன் னொருகோடி யாரும்
பொருத்த முறவந்து போற்றுந் - திருத்தகுசீ
509. ரிந்தத் தலமேய தித்தல மான்மியமற்
றெந்தத் தலத்திற் கியைந்துளது - நந்த
510. விழிதலை யொன்றனைக்கை யேந்தியொரு வேந்த
னழிதுயர் பூண்டதெங்கென் றாயா - யிழிதருநாய்க்
511. கட்டந் திருமுற் கலப்பதோ வென்றிறைகை
யிட்ட முடனெடுத்த தெத்தலத்தில் - வட்டமதில்
512. சூழுமது ராபுரியிற் றொட்ட பழிநீக்கி
வாழும் படிபுரிந்த மாத்தலம்யா - தேழுலகும்
513. போற்றுமொரு தன்னுருவைப் பொன்னுருவி னிற்புகுத்தி
யேற்றும் பெருமையுற்ற தெத்தலங்காண் - கூற்றமஞ்சு
514 மிந்தத் தலத்துதிக்க வெத்தவஞ்செய் தோமென்று
சந்தக் குயின்மொழியா டானுரைத்து - நந்தக்
515 களிக்கும் பொழுது கசிந்தார்க்கே யின்ப
மளிக்கும் பிரான்றே ரணுக - வெளிக்கணந்த
516 மாதரொடும் வந்து வணங்கினாள் காண்பார்க்கு
மோத மளிக்கு முகங்கண்டாள் - காதற்
517 றிருத்தோளுங் கண்டா டிருமார்புங் கண்டாள்
பெருத்தாண் மயக்கம் பெருவே - ளுருத்தான்
518 பலகணைதொட் டெய்தானப் பைங்கொடிதான் சோர்ந்து
சிலதியர்மேல் வீழ்ந்து திகைத்தா - ளலமருவா
519 ளென்னை யுடையா னிவள்செய்கை நோக்கானாய்
நன்னயத்தே ரப்பா னடத்தினான் - பின்னைத்
520 தொடர்ந்து செலுமதனன் றோகைமேற் பல்லே
வடர்ந்து செலப்பெய் தகன்றான் - கிடந்தவளாய்ச்
521 சோருங் கருங்குயிலைத் தோழியர்கள் கைத்தாங்கிச்
சாரு மனையிற் றகப்புகுத்தி - நேரு
522 மலரணையின் மேற்கிடத்தி யான்ற பனிநீ
ருலர்தர மேன்மேலு மூற்றிக் - குலவுநறுஞ்
523 சாந்தமுங் கோட்டித் தகுசிவிறிக் காற்றெழுப்பக்
காந்துவது கண்டு கலங்கினாண் - மாந்தளிர்மு
524 னாயவுப சார மனைத்துஞ் செயலொழிமி
னேயமுள தேலென்பா னீவீரென்று - தூய
525 மணிவாய் திறந்தாண் மருதரே யும்மைப்
பணிவாருக் கீதோ பயன்கா - ணணியல்
526 சடைமே லதுகொடுத்தாற் றத்துதிரைக் கங்கை
விடைமேலீர் நும்மை வெறுப்பா - ளடையு
527 மிடத்தோ ளதுகொடுத்தா லெவ்வுலகு மீன்ற
மடப்பாவை கோபநுமை வாட்டு - மடுத்த
528 வலத்தோ ளணியன் மருவ வளித்தாற்
சொலத்தா னொருவருண்டோ சொல்லீ - ருலத்துயர்தோள்
529 வெய்ய சிலையாரூன் மென்றுமிழ்வ தாயிருந்தாற்
செய்ய மணிவாய் திறந்தருள்வீ - ரையரே
530 யார்த்தார் கழைவண் டமைத்தொரு பூத்தொடுக்கப்
பார்த்தா லலவோகண் பார்த்தருள்வீர் - சீர்த்தகதிர்
531 பன்மோதி னீருயிரைப் பாற்றிடுவ லென்றுதலை
கன்மோதி னாலன்றோ கைதருவீர் - நன்மையெனுங்
532 கோளெறிந்த தந்தை கொடுவினையை நோக்கியவன்
றாளெறிந்த போதன்றோ தாரருள்வீ - ராளும்
533 பிரியமுடை யீரென்று பேரருள்செய் வீரென்
றிரியுமுயிர் தாங்கி யிருந்தா - ளரிவை
அரிவை.
534 யிளையான் குடிமாற ரெய்ப்பொழிப்பான் சென்று
முளைவாரும் போதுநிகர் மோகம் - விளைகுழலா
535 டேவர்க்கூ றாக்கினரைத் தேர்வலெனுங் கண்ணப்பர்
கோவச் சிலைநேர் கொள்ளுநுதலாள் - காவற்செய்
536 நெல்லுண்டாள் பாலுண்சேய் நீக்கலற மென்றேற்றார்
கொல்லுண்ட வாள்போற் கொடுங்கண்ணாள் - சொல்லரசர்
537 பேராலப் பூதிப் பெயரா ரமைத்ததடத்
தேராரும் வள்ளை யெனுஞ்செவியாள் - சீரார்
538 கணநாதர் நந்தவனக் கட்சண் பகம்போன்
மணநாறு நாசி வடிவாள் - புணருமருள்
539 வாயிலார் தொன்மயிலை வாரித் துறைப்பவளச்
சேயிலார்ந் ?தோங்குகுணச் செவ்வாயா - ணேயமுற
540 முன்னங்கண் ணப்பர் முறித்தமைத்த கோற்றேனி
லின்னஞ் சுவைகூரு மின்மொழியா - ளன்னம்
541 பயில்கட னாகையதி பத்தர் துறையிற்
பயில்வெண் டரளமெனும் பல்லா - ளியலருளப்
542 பூதியார் முன்னம் புரிந்த தடக்கமலச்
சோதியா மென்னச் சுடர்முகத்தா - ளாதியருட்
543 சம்பந்த மேவவொரு தண்டீச னார்நிறைத்த
கும்பந்தா மென்றேத்து கொங்கையாள் - வம்பவிழ்தா
544 ரானாயர் முன்ன மரிந்தெடுத்துக் கொண்டவே
யேநாமென் றோது மி?ணைத்தோளா - ளானாத
545 மூல ருறையநிழன் முற்றக் கொடுத்துவப்பி
னாலரசின் பத்திரம்போ லல்குலாண் - மேலா
546 யிலகியசம் பந்தரோ டேற்ற வமணர்
குலமெனத் தேயுமருங் குல்லா - ணலவரசாஞ்
547 சிட்ட ரமுதுசெயத் திங்களூர் நாவரசு
தொட்ட கதலித் துடையினா - ளிட்ட
548 மடுத்த வதிபத்த ரங்கை யெடுத்து
விடுத்தவரால் போற்கணைக்கால் வீறாண் - மடுத்தவருட்
549 கண்ணப்பர் கையிற் கலந்ததவ நாய்நாவின்
வண்ணப் பொலிவின் வருபதத்தாள் - வண்ணஞ்
550 சிறக்கு மொருசித் திரமண்டப பத்தி
னிறக்குங் குழலார் நெருங்கப் - பறக்கு
551 மளியினங்கள் பல்ல வளகத் தலம்பக்
களிமயிலிற் சென்று கலந்து - தெளிய
552 விருக்கும் பொழுதோ ரெழில்விறலி வந்து
பருக்குமுலை யால்வளைந்த பண்பின் - முருக்கிற்
553 சிவந்ததா டாழ்ந்து திருமுன்னர் நிற்ப
நிவந்த கருணையொடு நேர்பார்த் - துவந்து
554 வருபாண் மகளே வடித்தகொளை வீணை
யொருவாது கொண்டருட்பே றுற்றார் - திருவாய்
555 மலர்ந்ததிருப் பாட்டனைத்தும் வாய்ப்பப்பா டென்ன
வலர்ந்த முகத்தி னவளு - நலந்தழையும்
556 பத்தர்யாழ்ப் போர்வையப்பாற் பாற்றி யெதிரிருந்து
வைத்த நரப்பு வளந்தெரிந்து - புத்தமுத
557 வெள்ளம் படர்ந்தென்ன வேணுபுர நின்றெங்க
ளுள்ளம் படர்ந்த வொருதமிழும் - பள்ளப்
558 பரவை சுமந்தமணர் பாழியிற்கல் வீழ்த்தா
தரவை யடைந்த தமிழு - முரவங்
559 குரித்தவா ரூர்த்தெருவிற் கூற்றுதைத்த கஞ்சஞ்
சரித்திடச் செய்த தமிழும் - பரித்தவுயிர்
560 தன்னடியே வேண்டத் தருபரமற் கோர்வழுதி
தன்னடி வாங்கித் தருதமிழு - மன்னுபொது
561 வாடி யருளி னமர்தலங்கட் கொவ்வொன்றாப்
பாடி யருளியவெண் பாத்தமிழு - நீடியதோர்
562 பேயேயென் றோதப் பிறங்கியு நம்பெருமான்
றாயேயென் றோதத் தருதமிழு - மாயோர்பா
563 னீங்க லரிய நெடுந்தகைநீங் காதமரு
மோங்கன் மிசையே றுலாத்தமிழுந் - தேங்கரும்பி
564 னுற்றோ தரிதா முறுசுவையோ பற்றறுப்பார்
பற்றோவென் றோதுமிசைப் பாத்தமிழு - முற்றுமருள்
565 பூண்டுவாழ்த் தோறும் புராணன் விருப்புறப்பல்
லாண்டுவாழ்த் தோது மருந்தமிழும் - வேண்டு
566 பிறவுமெடுத் தோதப் பெருமருத வாணற்
குறவு நனிசிறந் தோங்கத் - துறவு
567 சிதைக்கும் விழியாள் சிறந்தமருங் காற்கூற்
றுதைக்குந் திருத்தா ளுடையான் - பதைப்புற்
568 றதிரோதை யிற்பல் லனைத்துங்கொட் டுண்ணக்
கதிரோன் முகத்தறையுங் கையா - னெதிராநின்
569 றெள்ளுந் திறம்படைத்த தென்னென் றொருதலையைக்
கிள்ளுந் திறம்படைத்த கேழுகிரான் - றுள்ளுமொரு
570 மீனவிழி சூன்ற விரலான் றிரிபுரங்கள்
போன வெனப்புரியும் புன்னகையான் - வானம்
571 வழுத்து மிடைமருத வாணன்றேர் தேமாப்
பழுத்து விளங்குமவட் பம்ப - வெழுத்து
572 முலையா ளெழுந்துதிரு முன்ன ரடைந்தாண்
மலையா ளெனுந்தாயை வாமத் - தலையாள்
573 பெருமான் றிருவுருவம் பெட்புற்றுக் கண்டா
டிருமா னொருத்திகொலோ செய்தா - ளருமைப்
574 பெருந்தவ மென்றாள் பெருமூச் சுயிர்த்தாள்
வருந்தமத வேள்விடுக்கும் வாளி - பொருந்தாளாய்
575 நேரே தொழுது நிலாவை வருத்துகவென்
றாரே சுமப்பா ரறைதிரே - பாரறிய
576 வன்றுதேய்த் தாரென் றறைவா ரதைப்புதுக்க
வின்றுதேய்த் தால்வருவ தெப்பழியோ - குன்று
577 குழையக் குழைத்ததிறங் கொள்ளமுலைக் குன்றுங்
குழையக் குழைக்கினன்றோ கூடுங் - கழைமதவே
578 ளங்க மெரித்தீ ரவன்சிலைநா ணம்பாய
வங்க மெரிப்பதனனுக் காற்றீரோ - பொங்குவளி
579 யம்பு புணர வமைத்தீர்தென் காற்றைமத
னம்பு புணர வமைத்திலீ - ரம்பு
580 புணரினது வேறாகிப் போழுமோ மேனி
யுணரி ன·தெவருக் கொப்பாங் - குணமிலா
581 வந்தக் குரண்டத் திறகமைத்தற் காயசடை
யிந்தக் குயிலிறகை யேலாதோ - முந்தத்
582 தனிநீ ரடக்குங் சடாமுடியில் வெய்ய
பனிநீ ரடக்கப் படாதோ - முனிவிடமா
583 மன்ன விருளை யடக்குந் திருக்கண்ட
மின்ன விருளடக்க வெண்ணாதோ - சொன்னமைக்கு
584 வாய்திறவீர் பூம்புகார் வாழ்வணிக ரில்லத்து
வாய்திறவீ ரென்னின் வருந்தேனே - மாயவனார்
585 கண்ணைச் சுமந்த கழற்காலீர் சென்னிமேற்
பெண்ணைச் சுமந்ததென்ன பேதைமைகாண் - மண்ணைமுழு
586 துண்ணும்விடை யீரென் றுரையாடி நிற்கும்போ
தெண்ணு முடையா ரிளநகைசெய் - தண்ணுகன
587 கத்தேரை யப்பாற் கடாவினா ரப்போது
முத்தேர் நகைமாது மூர்ச்சித்தாள் - சித்தம்
588 பருவந் தழிதருங்காற் பாங்கியர்க டாங்கித்
திருவந்த மாளிகையிற் சேர்த்து - மருவந்த
589 பாயற் கிடத்திப் பசுஞ்சாந் தளாய்ப்பனிநீ
ரேயப் பொருத்தியிருந் தெல்லோரு - நேயத்
590 திடைமருத வாண னிடைமருத வாண
னிடைமருத வாண னெனலு - மடையு
591 மரிவை யுயிர்தாங்கி யாற்றியொரு வாறு
பரிவை விடுத்தமர்ந்தாள் பைம்பூட் - டெரிவைமறை
தெரிவை.
592 வாசியான் கண்டம் வதிவதைநூற் றேமணநெய்
பூசிமுடித் தன்ன புரிகுழலாண் - மாசிலொளிப்
593 பாதி மதியம் படர்சடைநீத் திங்கமரு
நீதி யெவனென்னு நெற்றியா - ளாதிநாள்
594 விண்ட கமருள் விடேலென் றொலிதோற்றக்
கொண்ட வடுவகிர்போற் கூர்ங்கண்ணா - ளண்டமுழு
595 தீன்றவொரு பாற்கை யெடுத்தமல ரைந்துளொன்றாய்த்
தோன்ற விளங்குஞ் சுடர்முகத்தா - ளான்ற
596 நெடிய கடற்புகுந்து நீள்வலைவீ சிக்கொள்
கடிய சுறாத்தலைபோற் காதாண் - முடிவிற்
597 குருவடிவங் கொள்ளக் குறித்தடியர் சாத்து
மருமலரே போலுஞ்செவ் வாயா - ளொருவரிய
598 தன்போல் வெறாதுமதன் றன்னாணொன் றேவெறுத்த
கொன்பூ வனைய கொடிமூக்கா - ளன்பர்வரு
599 நாண்முன் குருகாவூர் நன்கமைத்த நீர்நிலையே
காணென் றுரைக்குங் கபோலத்தாள் - யாணரிசை
600 மூட்டு மிருவர் முயன்றமர்தா னத்தழகு
காட்டுங் குழைபோற் கழுத்தினா - ணாட்டுமொரு
601 முத்தென் றுரைக்க முயன்றுதனை யீன்றதா
யொத்த தெனவுரைக்கு மொண்டோளா - ளத்தவுடம்
602 பேத்தமிளிர் பச்சை யினிதளித்த தானத்துப்
பூத்தசெய்ய காந்தள் பொரூஉங்கையாள் - கோத்தபெரு
603 வெள்ளத்துத் தற்றோற்ற மேன்மிதந்த கும்பமென்றே
யுள்ளத் தகும்பொ னொளிர்முலையாள் - வள்ளற்
604 றரத்தின் மரீஇய தனக்குநிழ னல்கான்
மரத்தினிலை போலும் வயிற்றாள் - புரத்தின்
605 மடங்கூர் முனிவர் மடிக்கவிட்ட பாம்பின்
படம்போ லகன்றநிதம் பத்தா - டடங்காமர்
606 வாழ்வளங்கூர் நீலி வனத்தி னிழல்கொடுத்துச்
சூழ்கதலி யென்று சொலுந்துடையா - ளாழ்கடல்சூழ்
607 வையம் புகழ்காஞ்சி வைப்பினிழற் றுஞ்சூதச்
செய்யதளிர் போற்சிவந்த சீறடியாள் - பையரவ
608 வல்குன் மடவா ரளவிலர் தற்சூழ்ந்து
புல்கும் வகையெழுந்து பொம்மன்முலை - மெல்கு
609 மிடைக்கிடுக்கண் செய்ய விலங்குமணிப் பந்தர்
படைத்தநிழ லூடு படர்ந்து - புடைத்த
610 விளமாம் பொதும்ப ரிடைக்கனகத் தாற்செய்
வளமாருங் குன்ற மருவி - யுளமார்
611 விருப்பி னமர்ந்துவளை மின்னாருட் கொங்கைப்
பருப்பதத்தோர் தோழிமுகம் பார்த்துத் - திருப்பதத்தான்
612 முன்ன மரக்கன் முடிகணெரித் தார்பச்சை
யன்னங் கலப்புற் றமரிடத்தார் - சொன்ன
613 வரைகுழைத்தா ராடல் வரம்பில்லை யேனு
முரைசிறக்குஞ் சில்ல வுரைப்பா - மரைமலர்க்கண்
614 விண்டு பணிந்திரப்ப வேதாவைக் காதலனாக்
கொண்டு மகிழ்தல் குறித்தளித்தார் - வண்டு
615 படுமலரோன் றாழ்ந்திரப்பப் பைந்துழா யண்ண
னெடுமகவாய்த் தோன்றுவர நேர்ந்தார் - வடுவின்
616 மலரொன் றெடுத்திட்ட மாரவேண் மேனி
யலர்செந் தழலுக் களித்தார் - பலக
617 லெடுத்துநா டோறுமெறிந் திட்டுவந்தார்க் கின்ப
மடுத்த பெருவாழ் வளித்தார் - கடுத்த
618 சிறுவிதி யென்பவன்முன் செய்புண் ணியத்தைத்
தெறுதொழின்மா பாதகமாச் செய்தா - ருறுதிபெறக்
619 கண்ணியதண் டீசர்புரி கைத்தமா பாதகமா
புண்ணியமே யாகப் பொருத்தினார் - திண்ணியமா
620 வென்றிக் கனக விலங்கல்குழைத் தாரொருபெ
ணொன்றித் தழுவ வுரங்குழைந்தார் - நன்றா
621 மொருபா லொருவடிவ முற்றாரென் னேமற்
றொருபா லொருவடிவ முற்றார் - வெருவாத
622 வெய்ய பகையாம் விடவரவு மம்புலியுஞ்
செய்ய சடாடவியிற் சேரவைத்தார் - வையம்
623 பழிச்சுபெரு வாழ்வு பழிச்சற் களிப்பா
ரிழிச்சுதலை யோடேற் றிரப்பார் - வழுத்துசித
624 நல்லாடை யும்புனைத னாட்டுவார் மற்றுஞ்செங்
கல்லாடை யும்புனைதல் காட்டுவார் - பொல்லாத
625 மாலூரு மூன்றூர் மடிய வளங்கெடுத்தார்
நாலூர் பெருகுவள நன்களித்தார் - மேலா
626 ரருத்தி செயப்பொலியு மையா றிகவா
ரிருத்திய வாறா றிகப்பார் - விருத்தி
627 மணம்வீசு கைதை மலரை மலையார்
மணமி லெருக்கு மலைவார் - குணமாய
628 பொன்னு மணியும் புனையார் நரம்பெலும்போ
டின்னும் பலவு மெடுத்தணிவார் - முன்னமா
629 றேடப் பதங்காட்டார் தேடிப்போ யாரூரன்
பாடற் றலைமேற் பதித்திடுவார் - நாடுமிவ
630 ராட லெவரா லறியப் படுமென்று
நாட லுடையா ணவின்றிடுங்கா - னீடு
631 மலைவந்தா லென்ன மருதர்திருத் தேரத்
தலைவந் ததுகண்டா டாவா - நிலைவந்த
632 வண்ணமடைந் தாரின் மகிழ்ந்தாள் விரைந்தெழுந்தா
ளண்ணன்மணித் தேர்மு னணுகினா - ளெண்ணம்
633 பதிக்குந் திருமுகமும் பாரத்திண் டோளுங்
கதிக்கு மகன்மார்புங் கண்டாள் - விதிக்க
634 முடியா வனப்பு முழுதுந் தெரிந்து
கொடியா யிடைகை குவித்தா - ணெடியானு
635 நான்முகனு மின்னு நணுகருமெய்ப் பேரழகைத்
தான்முகந் துண்ணத் தலைப்பட்டாண் - மான்முகந்தா
636 ளந்தப் பொழுதே யடல்வேள் கழைச்சிலைநாண்
கந்தப் பகழிபல காற்றியது - முந்தத்
637 தடுமாற்றங் கொண்டா டவாமயக்கம் பூண்டா
ணெடுமாற்றம் பேச நினைந்தாள் - கொடுமை
638 மடுத்தசெய லின்மருத வாணரே நும்மை
யடுத்தவெமக் கென்னோ வளித்தீ - ரடுத்தநுமைக்
639 கும்பிட்ட கைம்மலர்கள் கோலவரி வண்டிழத்த
னம்பிட்ட மாமோ நவிலுவீர் - நம்பிநுமைக்
640 கண்ட விழியழகு காட்டுங் கரியழியக்
கொண்டன் மழைபொழிதல் கொள்கைகொலோ - தண்டலின்றிக்
641 காணும் விருப்பங் கடவ நடந்தபதம்
பூணு நடையிழத்தல் பொற்பாமோ - பேணு
642 முமைப்புகழ்ந்த செவ்வா யுறுகைப்பு மேவி
யமைத்தவுணா நீங்க லறமோ - வமைத்தடந்தோள்
643 செய்ய நிறநுந்தோள் சேர நினைந்ததற்குப்
பையப் பசந்த படியென்னே - யையரே
644 வேய்முத்தா நும்மை விரும்பியவென் கொங்கைகட
லாய்முத்தஞ் சூட லடுக்காதோ - வாய்தோ
645 ணிதிய மலையை நினைத்தவெனை யிந்தப்
பொதியமலைக் கால்வருத்தப் போமோ - துதியமைநும்
646 பார்வையடைந் தேற்குப் பனிமதியம் வேறுபட்டுச்
சோர்வையடை யத்தழலாய்த் தோன்றுமோ - நீர்செ
647 யருள்யா வருக்கு மருளாய் முடிய
மருளா யெனக்கு வருமோ - தெருளாமற்
648 காதலித்த தன்றே கருணையீர் நும்மழகின்
காத லொருத்திக்கே காணியோ - வாதலுற
649 வொன்று முரையீ ருரைத்தால் வருபழியென்
னென்று பலவு மெடுத்தோதிக் - கன்று
650 கழலவிழி முத்தங் கழல மனமுஞ்
சுழல விழுந்து துடித்தா - ளழலொருகை
651 யேந்தினா னொன்று மிசையானாய்த் தேர்நடத்த
வேந்தினா ராகி யிகுளையரிற் - போந்தார்
652 விருப்ப வமளி மிசைக்கிடத்தி வெய்ய
வுருப்பந் தவிர்த்திடுத லுன்னிப் - பொருப்பா
653 மிடைமருதின் சீரு மிடைமருத மேவ
லுடையதலச் சீரு முவந்து - புடைவிரவு
654 தீர்த்தப் பெருஞ்சீருஞ் சேவுகைக்கு மாமருத
ரேர்த்தபெருஞ் சீரு மெடுத்தியம்பப் - போர்த்தமயல்
655 வாரிக் கொருபுணையாய் மற்றவைவாய்ப் பச்சற்றே
மூரிக் குழலாண் முகமலர்ந்தாள் - பேரிளம்பெ
பேரிளம்பெண்.
656 ணென்பா ளொருத்தி யிளம்பருவத் தாரனையென்
றன்பா லழைக்க வமைந்துள்ளா - ணன்புவியோர்
657 நாடு கதிருதய நாழிகையைந் தென்னுங்காற்
கூடுமிருட் டன்ன குழலினா - ணீடு
658 கதிருதய மாதல் கருதி யடங்கு
முதிரு மதிபோன் முகத்தாள் - பிதி?ர்வறவெங்
659 கண்ணார்மை தீட்டுகென்று கைகளுக்கோர் வேலையிட
லெண்ணா திருக்கு மிணைவிழியாள் - பண்ணார்பொன்
660 னோலையன்றி வேறுவே றுள்ளனவெ லாமணிதன்
மாலை மறந்த வடிகாதாள் - சாலுமடைப்
661 பையேந் துவமென்று பண்பினுமிழ் காற்சிலர்தங்
கையேந்து செய்ய கனிவாயாண் - மெய்யே
662 முடியவுத்த ராசங்க முன்னுவ தல்லாது
தொடியில் விருப்பமுறாத் தோளாள் - கொடியிடைக்குச்
663 சேர வருத்தந் திருத்தியதா லுட்பெருநாண்
கூர முகஞ்சாய்த்த கொங்கையா - ளாரமுலை
664 தாந்தளர்முற் சோராது தாங்குஞ் சலாகையென
வாய்ந்த வுரோமமணி வல்லியா - டோய்ந்தமையக்
665 கூடுமோர் பேழை குறித்துத் திறக்கவெழுந்
தாடுபாம் பின்படம்போ லல்குலா - ணீடுகண்டை
666 யொன்றேகொள் வீர ரொளிர்கால் பொருவப்பூ
ணொன்றே யுவக்கு மொளிர்தாளாள் - குன்றே
667 யிணையுமுலைத் தோழியரெண் ணில்லார் நெருங்க
வணையுமொரு வாவி யருகே - பிணையுங்
668 குளிர்பந்தர் சூழ்ந்து குலவ நடுவ
ணொளிர்மண்ட பத்தே யுறைந்தாள் - களிகூரச்
669 செவ்வாய் திறந்தாளோர் சேடி முகம்பார்த்தா
ளெவ்வாயும் வாயான்சீ ரேத்தெடுப்பா - ளொவ்வா
670 மருதவ னத்தன் மலைமகட்கு மாற்கு
மொருதவ னத்த னுடையான் - கருது
671 திருத்தவ னம்பன் சிலையெடுத்தான் றேம்ப
விருத்தவ னம்ப னிறைவன் - பெருத்த
672 பருப்பத முள்ளான் பணியார்க்குக் காட்டத்
திருப்பத முள்ளான் சிவன்மால் - விருப்பன்
673 றுருத்தி யிடத்தான் றுணையாக மேய
வொருத்தி யிடத்தா னொருவன் - விருத்தியற
674 லாலங்காட் டத்த னடல்காட்டி னான்வளங்கூ
ராலங்காட் டத்த னருட்பெருமான் - சீல
675 விருப்பத் தவரான் மிகப்புகழ்வான் மேருப்
பொருப்புத் தவரான் புராணன் - கருப்புவயற்
676 கச்சிப் பதியான் கனிந்துருகார் செய்பூசை
யிச்சிப் பதியா னிலையென்பா - னச்சன்
677 வெருவா விடையான் விரியும் படப்பாம்
பொருவா விடையா னுயர்ந்தான் - மருவாரூ
678 ரெற்றம் பலத்தா னெனக்கொண்டா னேத்துதில்லைச்
சிற்றம் பலத்தான் சிவபெருமா - னுற்ற
679 விடைமருத வாணனுல கெல்லா முடையா
னடைய விருப்ப மமைத்த - மிடைசீர்
680 மருதவட்ட மான்மியம்போன் மற்றொன்றுண் டென்று
கருதவட்ட ஞாலத்துக் காணேன் - கருதின்பால்
681 வந்து புகுந்தபதம் வான்பதமெல் லாம்புகுது
முந்துதெரி கண்ணிரண்டு மூன்றாகு - நந்திதனைக்
682 கும்பிட்ட கையிரண்டுங் கூடவொவ்வோர் கைமேவ
நம்பிட்டம் வாய்க்கும்வகை நான்காகும் - பம்பிதனா
683 லித்தலத்து மான்மியமற் றெத்தலத்து மில்லைபயன்
கைத்தலத்து நெல்லிக் கனிகண்டாய் - முத்தலமு
684 நாடு மிதிற்பிறந்த நம்மா தவம்பெரிதாக்
கோடுமினி யென்ன குறையுடையோர் - மாடும்
685 படியெடுத்த பாதமலர் பற்றிநாம் வாழ்தற்
கடியெடுத்த பேறீ தலவோ - தொடிபுனைகை
686 யாவியன்னாய் மேலுலக மாதரிப்பா ரித்தலத்து
மேவி யமர்கை விரும்பாரோ - நாவிகமழ்
687 வாசத் துறைமேலை வானதிதோய் வாரீங்குப்
பூசத் துறைதோய்தல் பூணாரோ - நேசமிக
688 மான்றுற்ற நெஞ்சமின்றி வாழ்சூழ்தல் காதலிப்போர்
தோன்றித் தலமொருகாற் சூழாரோ - வான்றவிண்ணின்
689 முந்திருக்கை வேண்டி முயலுவா ரித்தலத்து
வந்திருக்கை யோர்நாண் மதியாரோ - நந்துதமை
690 வானாடி யம்ப மதிப்பார் மருதாவென்
றேநாடி யோர்கா லியம்பாரோ - மானேயென்
691 றோது மளவி லுடையான்பொற் றேர்வரலு
மாதுபல ரோடு மகிழ்ந்தெழுந்தா - ளோது
692 பெருமான்முன் சென்றுமிகு பெட்பிற் பணிந்தா
ளொருமான் மதித்தபுர வோவித் - திருமலர்மே
693 னான்முகன்றோற் றாத நலமார் திருமேனி
யூன்முகமாங் கண்ணா லுறக்கண்டாண் - மான்முகந்தா
694 டுள்ளி மதவே டொடுத்தான் பலகணைய·
துள்ளி வருந்தி யுயிர்சோர்ந்தாள் - வள்ளலெனச்
695 சொற்ற நமைத்தொழுவார் சோர வருத்துகென்றோ
வுற்ற மதனுக் குயிரளித்தீர் - செற்றகுயில்
696 காதுமெனி னீர்முன் கடிந்ததுபொய் யென்பார்மற்
றேது புகல்வா ரிறையவரே - யோதுவீர்
697 மோது கடல்விடத்தை முன்னடக்கி னீரதற்கம்
மோதுகட லென்னை முனியுமோ - போதுமதன்
698 கைதை மலர்நீர் கடிந்தா லதற்காக
வெய்தெனவந் தென்னுயிரை வீட்டுமோ - பையரவுன்
699 காதன்மதி நுஞ்சடிலக் காட்டிலிருந் தாலென்னை
வேத லியற்ற விதியுண்டோ - மீதார்ந்
700 துறுமலைதீப் போற்கா லுடன்றுவீ சற்கோ
சிறுமுனியை வைத்தழகு செய்தீர் - மறுவிலா
701 வாய்முத்த மென்னை யழலாய்ச் சுடுவதற்கோ
வேய்முத்த மாகி விளங்கினீர் - தாயிற்
702 சிறந்தபிரா னென்றும்மைச் செப்புவார் தீயிற்
சிறந்தபிரா னென்றென்னோ செப்பா - ரறந்தழுவும்
703 வேயிடத்து நீர்முளைத்து மேம்பா டியற்றினந்த
வேயெழுமோ ரோசை வெதுப்புமோ - நாயகரே
704 யேறுநுமைத் தாங்குறினவ் வேற்றின் கழுத்துமணி
மாறுபுரிந் தென்னை வருத்துமோ - தேறும்வகை
705 யந்தி நிறநீ ரடைந்தா லதற்காவவ்
வந்திநிற மென்னை யடர்ப்பதோ - முந்தவொரு
706 வாழை யடிநீர் மருவி னதுகுறித்தவ்
வாழைமுடி யென்னை வருத்துமோ - காழ்பகையின்
707 வாசநீ ரென்னை வருத்துமெனின் மற்றதற்காப்
பூசநீ ராடப் புகுவதோ - மூசு
708 மயக்க மிதுதெளிய மாண்பார்கோ முத்தி
நயக்குங் குருநமச்சி வாயன் - வியக்கும்
709 வரமணியென் றேயறிஞர் வாஞ்சித் திடுஞ்சுப்
பிரமணிய தேசிகன்பாற் பேணித் - திரமடைவே
710 னன்னவனு நீரேயென் றான்றோ ருரைத்தக்கா
லென்ன புரிவே னிறையவரே - யன்னவன்போல்
711 யோகி யெனநீ ருறைந்தீரல் லீர்சிறந்த
போகி யெனவே பொலிந்துள்ளீர் - போகியெனற்
712 கென்னோ வடையாள மென்றானும் பாகத்தாண்
மின்னோ வலங்கரித்த வேறொன்றோ - முன்னவரே
713 விண்ணைக் கடந்தமுடி மேலா னுமைப்போலோர்
பெண்ணைச் சுமந்தமரும் பித்தரா - ரெண்ணேன்
714 வலியவந்து மேல்விழுந்து மார்பி லெழுந்து
பொலியு முலைஞெமுங்கப் புல்வேன் - பொலிய
715 வொருத்தியிடப் பாக முறவைத்தீ ரற்றால்
வருத்தி யதுபுரிய மாட்டேன் - றிருத்தி
716 புரிந்தன்றிப் போகிலீர் போவீரேன் மேன்மேல்
விரிந்தபழி வந்து விளையுந் - தெரிந்தவரே
717 யென்று புகல்போ திடைமருத வாணரவ
ணின்று கடவ நெடுமணித்தேர் - துன்று
718 நிலையுற் றதுதெரிந்து நெட்டுயிர்த்துக் கோடுஞ்
சிலையுற்ற கண்ணிமனைச் சென்றா - ளுலையுற்ற
719 தீயின் வெதும்பித் திகைத்தாண் மருதரரு
ளேயி னுயலாகு மென்றமர்ந்தா - ளாயுமிளம்
720 பேதை முதலாகப் பேரிளம்பெ ணீறாகக்
கோதையெழு வோருங் கொடிமறுகில் - வாதை
721 மயலடைந்து தேம்பி மறுகிச் சுழலுற்
றுயலடையப் போந்தா னுலா.
1705. ஆண்டபிள்ளையார் துதி.
சீருலா வான்றோர் செவிக்க ணிடைமரு தூருலா வேற வொளிதரும்பை - யேருலவப் பூண்டமா தங்கமதுப் பூங்கொன்றை யாரளித்த வாண்டமா தங்க மது.
நூல் 1706. கலிவெண்பா.
1 பூமேவு நான்முகத்துப் புங்கவனுஞ் செங்கமல மாமேவு மார்பமணி மாயவனுங் - கோமேவு
2 மிந்திரனும் வானோரு மேனோரு மின்பமுற வைந்துதொழி லாற்று மருட்கொண்மூ - வைந்துதொழில்
3 சந்ததமுஞ் செய்துந் தனக்கோர் தொழிலில்லா னந்த மலையரைய னன்கீன்ற - சுந்தரப்பொற்
4 கன்னி யொருபாற் கலந்தும் விகாரமிலான் றுன்னியெவற் றுந்தோய்ந்துந் தோய்விலான் - முன்னியமண்
5 ணாதியுரு வெட்டுமத்து வாவுருவோ ராறுமிருண் மோதிய வைந்தொழிற்கு மூலமாய்ச் - சோதி
6 யுறுமுருவொன் பானுமுற்று மோருருவு மில்லான் மறுவின்மறை யாதி வகுத்தோன் - பெறுநெறியே
7 யாமுயிர்க்கே யின்ப மருத்தி நெறிதப்பிப் போமுயிர்க்கே துன்பம் புணர்த்துவோ - னாம
8 விருள்கே வலத்தி னிணர்த்தருவிற் றீயாய்த் தெருள்சே ரிடையிற்கற் றீயா - யருள்சேருஞ்
9 சுத்தத்திற் காரிரும்பிற் றோய்தீயே - யாய்நிற்போ னெத்தத் துவங்கட்கு மெட்டாதான் - முத்தன்றன்
10 வாமத்தைப் பூமேவு மாதர்கடொட் டுப்புனைய நாமத்தைச் செய்விடமுன் னாள்யின்றோ - னேமத்தண்
11 சொல்லமுதைப் பாகுவந்து தோயவைத்தோன் கைப்பகழி வில்லமர்பூ நாரிதனை மேவவைத்தோ - னல்லற்
12 சிறுவிதியா கத்திற் றினகரற்கு முன்னங் குறுகியிருள் கூடவைத்த கோமான் - றெறுபசியால்
13 வந்தழுத சேயின் வருத்தந் தெரிந்தமுது தந்தமடைப் பள்ளி தனைக்கொடுத்தோன் - கந்த
14 மலர்மலரென் றுன்னா மதன்மெய் குளத்து ளலர்கட் கமலத் தழித்தோன் - பலர்வெருவத்
15 தோற்று தொழினஞ் சுதந்திரமன் றென்றெண்ணாக் கூற்றுயி ருண்ட குரைகழலான் - சாற்றும்
16 பிரணவத்துண் மேயோர் பிரமன்மா லென்பார் முரணவிக்குங் கொன்றையந்தார் முன்னோ - னரணவரை
17 மண்வைத்த குக்கி வளைவைத்த செங்கைமால் கண்வைத்துங் காணாக் கழலினா - னெண்வைத்துக்
18 கண்கை யிடந்துகொலை கண்ணுபு கொள்ளாமல் வண்கையிடங் கொண்டவசி வாய்ப்படையா - னெண்கவினார்
19 தன்னிரதம் பாதலத்துத் தான்புக் கழுந்தாமன் மன்னிரத நீர்வேணி வைத்தபிரான் - றுன்னுகணை
20 வாளியெளி தீர்தரப்பின் வாளிலங்கை மன்னனைமுன் றாளின் விரனுதியாற் றானடர்த்தோ - னாளும்
21 புணரு மடியார் புரிபிழையு மேனோர் குணமு மிகந்தகுணக் கோமான் - மணமலிபூங்
22 காவின்மயி லேத்தவரு கண்ணரைமா லென்றுநினைத் தோவினடஞ் செய்கயிலை யோங்கலிடை - மேவிநல
23 மாவித் தகத்து வயங்கா கமமுழுதுந் தேவிக் குபதேசஞ் செய்தருள - மாவிற்கண்
24 ணன்னமயின் மண்ணுலகை யான்றெரியு மாகாட்டி யின்னலற நீவிற் றினிதிருக்கு - நன்னயவி
25 சேட தலமுந் தெரித்தருள வேண்டுமெனச் சூடகச் செங்கைத் துணைகூப்ப - வாடமைத்தோ
26 ணங்காய்நன் றென்று நரையேற்றின் மீமிசைமற் றங்கா தலியோ டமர்ந்தருளிப் - பங்காளுங்
27 கோதாய்காண் கென்று குவலயமுற் றுந்தெரித்து மேதா வியர்புகழு மேன்மைபுனை - போதா;ருங்
28 காவிரியுங் கோட்டுவளக் காவிரித்தென் பாற்பொலியும் வாவி யிடைமருதூர் வாய்மேவ - வோவியநேர்
தலவிசேடம்
29. மின்னையு மாதவனும் வேதனுங் காணாத தன்னையு நாடிவந்த தன்னைபோற் - பன்னுபுகழ்
30. வாகீசர் போல வருந்தித் தமிழ்நாட்டீ ரேகீ ரெனவந் திறுத்ததுபோல் - வாகார்
31. திருப்புவன முற்றுஞ் செழுமறைகள் யாவும் விருப்புமிக நின்றேத்தும் வெள்ளிப் - பொருப்புப்
32. பெருவளவர் நாட்டின் பெரும்புண் ணியத்தா லொருமருத மாகியவ ணுற்ற - தருமையத
33. னன்னிழற்கண் வானி னரையேற் றிணைநிறுவித் தன்னிட நீங்காத் தலைவியைப்பார்த் - தின்னகையாய்
34. மேவுறு நன்பூ மிகவுகுத்து விண்ணுலகைப் பூவுல காக்கும் பொழில்பாராய் - தாவிமிசைப்
35. பொங்கவுரி ஞிப்பொற் பொடிவீழ்த் துபுமண்ணைப் பங்கமில்பொன் னாக்கும்விட பம்பாரா - யெங்குநின்மெய்க்
36. காமரொளி பாய்தலிற்கார் கால மெனக்கருதி மாமையினன் காடு மயில்பாராய் - பூமருநஞ்
37. சேயொளியாற் பைந்தழைகள் சேப்புற வேனிலென்று கூயமருந் தேமாங் குயில்பாராய் - மேயவிரு
38. நம்மேனி யொன்றியென நன்கொருபாற் சேந்தொருபாற் பைம்மேனி யாமாம் பழம்பாரா - யம்புலிக்
39. கான்முனிதன் மைந்தன்முதற் காணு முழுமுனிவர் மான்முதனீத் தாற்றிடுத வம்பாராய் - பான்மொழியே
40. யென்றுகாட் டத்தனிகா ணெவ்வுலகு மீன்றளுக் கொன்றுமகிழ் வாற்க ணுறைதுளிப்ப - வன்றதுமுற்
41. காணுந் திசையோடிக் காருணி யாமிர்தமென் பூணும் பெயரிலகப் பூண்டதன்மேற் - கோணிலவு
42. சூடியதன் கண்கள் சொரிநீ ரிருகூறா யோடி வடமேற் குதக்கெதிருங் - கூடுதடத்
43. துட்போய் விழமு னுலர்ந்த சலசரங்கா னட்பாம் விதிக்கு ந்றுந்தடத்துப் - பெட்பா
44. முருத்திர ராகியெழுந் தொண்மலர்த்தாள் போற்றிப் பெருத்தசிவ லோகமுற்ற பின்னர்த் - திருத்தவண்வாழ்
45. தண்முனிவர் முன்பு தமிழ்மணக்குஞ் செங்கனிவாய் வண்முனிவன் வந்துதவ மாமுனிவீர் - கண்ணொருமூன்
46. றுற்றபுகழ்ச் செய்யகரும் புங்கையுறும் பைந்தோகை பற்றி முயலுமென்றப் பாற்போக - வெற்றி
47. முனிவரரவ் வாறெம் முதல்வியை நோக்கிப் புனித தவம்புரியும் போது - நனிமகிழ்ந்து
48. தன்னே ரிலாத தலைவியை முன்புகுத்த வன்னேர் குழலு மவணடைந்து - பொன்னேர்
49. வளவர்பெரு மானாடு மாதவத்த தென்ன வளவிலா மாதவமங் காற்ற - வுளமகிழ்வுற்
50. றெம்மா லயன்முன்போ லின்றுஞ் செருக்கடைந்தா ரம்மாவென் றியாரு மதிசயிப்ப - விம்மாநன்
51. மேதினி நின்று வெளிமுகடு மூடுருவச் சோதியுருக் கொண்டெழுந்து தோன்றினோன் - றீதிலரு
52. ளானேயென் றேத்து மவர்தெளியு மாறுதன்னைத் தானே யருச்சித்த தம்பிரான் - வானாட
53. ராதியர் காமிகமுன் னாமா கமத்தின்வழி யோதியருச் சிக்க வுவந்தருள்வோன் - போதியனீர்
54. காகம் படியக் கனகவுரு நல்கிப்பி னேக வுருத்திரமெய் யெய்தவைத்தோன் - கோகநக
55. மாண்டமல ராதிகொடு மன்னா கமத்தின்வழி யாண்டமத வேழ மருச்சித்தோன் - பூண்டதவத்
56. தோதை கெழுசீ ருரோமசற்கு வெற்பீன்ற கோதையொடு காட்சி கொடுத்தபிரான் - மேதை
57. யொருவீர சோழ னொளிரா லயமும் வெருவா நகரமுஞ்செய் வித்துத் - திருவார்தைத்
58. திங்கட் டிருநாளுஞ் செய்வித்துப் போற்றிசெய வங்கட் கருணை யருளியகோ - னங்கண்மிரு
59. கண்டு மகன்பணியக் கண்டொரு பாற்பசுமை கொண்டுமிளிர் காட்சி கொடுத்தகோன் - றண்டாப்
60. புரவுக் குறுமுனியெப் போதுறுமென் றன்னான் வரவுக் கெதிர்பார்க்கும் வள்ளல் - பரவுற்ற
61. பூசைவினை முற்றுவந்து புண்ணியச்சு கீர்த்திதனக் காசில்வினை யெச்ச மளித்தபரன் - காசிபன்றான்
62. கண்ணனிள மைக்கோலங் காணத் தவம்புரிய வண்ணலது காட்டுவித்த வைம்முகத்தோன் - வண்ணக்
63. குமரன் முனிவரொடுங் கூடியரன் றிக்கி லமர நதியை யமைத்துத் - தமரமிகப்
64. பூசிக்கப் பெற்றோன் புகழிட்ட ரோமன்சு கேசிக் கினிய கிளர்மதலை - வீசி
65 யனையமகன் கங்கைபுகுந் தாடுறுபோ தந்த நினையுநதி யோரா நெறிக்கொண் - டினையலென
66 வென்னைப் புரப்பாள்க ணீர்ம்புனல்வா விக்குள்வரக் கொன்னைக் குழமகனுங் கூடவந்து - முன்னையொரு
67 வாவிபடிந் தையாற்று வாவியிடைச் சொல்லரசர் மேவியெழுந் தென்ன வெளிவந்து - கூவிவரு
68 மத்தனொடு கூடி யடிபோற்றி யேத்தெடுப்பச் சித்த மகிழ்ந்தருளிச் செய்தபிரா - னுத்தமச்சீர்
69 வாய்த்த தசரதற்கும் வண்பூவைப் பூவைநிறஞ் சாய்த்தவுடற் கண்ணனுக்குந் தானுவந்து - பூத்த
70 மதலைபல நல்கி வழிபட்டா ரென்று மதலைபல நல்கிய வள்ளல் - சுதமில்
71 புகழிரா மன்கணையாற் பூந்தடமொன் றாக்கித் திகழ வழிபாடு செய்ய - மகிழ்சிறந்தோன்
72 மச்சகந்தி யைப்புணர வந்த வருவருப்பை மெச்சும் பராசற்கு வீட்டினோ - னச்சமிலா
73 தாசா னிலாட்புணர்ந்த வாசுங் கலைக்குறைவுந் தேசார் மதிவணங்கத் தீர்த்தருளு - மீச
74 னினைத்தொருதீர்த் தத்தி னிமிமகன்க ண்டப்பு ணனைத்தவுடன் காயவைத்த நாதன் - வினைத்திறனோ
75 ரைவரு நீர்தோய்ந் தடிபணிய மண்ணளித்த தெய்வப் பெருமான் சிவபெருமான் - குய்யம்வைத்து
76 வேந்தன் வலற்செகுத்த வெம்பழிக்கும் பாகனைக்கொன் றேந்துபழிக் கும்பழிச்ச வீறுசெய்தோன் - போந்துதழல்
77 காண்ட வனத்தைக் கலந்தவுயி ரோடுண்ண வீண்டரின்முற் றும்பரவ வீடழித்தோன் - மாண்ட
78 குறுமுனி கண்களிக்கக் கூற்றாவி மேவி மறுவி லகோரவுரு வாய்ந்தோ - னுறுசீர்
79 நிருதிதடந் தோயு நியதியரைப் பேய்முற் கருதியடை யாவண்ணங் காப்போன் - சுருதி
80 நடையார் வருண னறுநீர் படியக் கடையார்சோத் தீப்படியக் கண்டோ - னடையுங்
81 கிருகலன்கா னீர்மூழ்கிக் கேடிலா முத்திப் பெருமுழுநீர் மூழ்கவைத்த பெம்மான் - வருமொருதன்
82 றோழன் றடம்படியுந் தூயோரை மற்றவனுந் தாழ வுயர்த்துந் தனிமுதல்வன் - வாழ்வடைவா
83. னேகாமார்க் கண்டமுனி யீசான நீர்மூழ்கச் சாகா வரங்கொடுத்த தண்ணளியோன் - வாகான
84. கண்ணன்கூ வத்துக் கருதிமழைக் கோண்மூழ்கக் கண்ணன் களித்தருளுங் காபாலி - கண்ணுவணம்
85. பண்ணிய தீர்த்தமுதற் பத்துந்தோய் வார்பிறப்பை மண்ணி யருளு மகாலிங்கம் - புண்ணியமே
86. மேவவளர் கச்சபனா மெய்ம்முனிவன் முன்வாம தேவவுருக் கொண்டெதிர்ந்த தேவர்பிரா - னோவறமுன்
87. கோதமதீர்த் தந்தோய் குணத்தா லகலிகைக்கு வாதனைப்பா டாணவுரு மாற்றுவித்தோன் - போதலர்கல்
88. யாணதீர்த் தங்கார்க்கோ டன்படிய முன்பரிச்சித் தேணறத்தீண் டிக்கொள்பழிக் கீறுசெய்தோ - னீணிலஞ்சே
89. ரந்த நறுந்துறைபுக் காடுநள னுக்குச்சி வந்த கலியைக்கறுத்து மண்கொடுத்தோ - னந்துமதில்
90. வெள்ளை முழுகவொரு வேதியனைக் கொன்றபழிக் கள்ளக் கறுப்பகலக் கண்சிவந்தோன் - றள்ளரிய
91. சீர்த்திப் பகீரதனத் தீர்த்தம் படியநலங் கூர்த்தவான் கங்கை குவலயத்தி - லார்த்துவரச்
92. செய்தோ ரறுப தினோயிரரு முத்தியுல கெய்தா விருக்க வினிதளித்தோன் - வையகத்துப்
93. பொல்லா னொருவன்வந்தப் பூசத் துறைபடிய வல்லார் மெய்க்கூற்றவனுக் கஞ்சவைத்தோன் - சொல்லுமந்நீர்
94. வல்லா னெனச்சேடன் வந்தாட மண்சுமக்கும் வல்லா னெனச்சொல் வலியளித்தோ - னல்லார்
95. திகழத் துறைகந்த தீர்த்தமெனக் கந்தர் புகழுற்றா டக்கருணை பூத்தோ - னிகழ்வற்ற
96. வத்துறையில் வேந்த னயிரா வதமுனிவன் வைத்தசா பங்கழுவ வைத்தவருண் - முத்த
97. னொருகோட் டியானை யுவந்தாடித் தன்பே ரிருகோட் டதற்கிடவுள் ளேய்ந்தோ - னொருவீர
98. சேனன் படியச் செறிபிர மக்கொலைதீர்த் தீனமிலா வான்கைலை யேற்றினோன் - மானமிகு
99. சித்திர கீர்த்தி செறிந்துபடிந் தர்ச்சிக்கப் புத்திரனை நல்கும் புகழாளன் - சுத்த
100. மறையோன் கனகதடம் வந்து படியக் குறையார் குருடொழித்த கோமா - னிறையோனோய்
101 விண்ணுலகை யாளமரர் வேந்தன் முடிதகர்த்து மண்ணுலகை யாளும் வயவேந்தன் - றண்ணளிசேர்
வரகுணபாண்டியதேவர் வழிபாடு.
102 மன்னன் மதுரை வயங்கு வரகுணத் தென்னன் பெருங்கானஞ் சென்றொருநாண் - முன்னுகடு
103 மாவேட்டஞ் செய்துவய வாம்பரிமேன் மீள்பொழுதோர் தீவேட்ட வேதியனச் செல்வழியின் - மேவி
104 மயங்கிக் கிடந்துகன வட்டத் தடியா லுயங்கிக் கழிய வுணரா - னயங்கெழுசீர்
105 பெற்றதன்னூர் மேவப் பிரமக் கொலைதொடர வுற்றதெவை யாலு மொழியாம - னற்றவர்சூ
106 ழாலவா யண்ண லடிபோற்ற வக்கடவு ளேல விடைமருதூர்க் கேகென்னச் - சாலமகிழ்
107 பூத்தனையான் வந்து புகுபோதே யப்பழியைத் தீர்த்தருளிச் செய்திடவத் தென்னவனு - மாத்தலமா
108 மித்தலத்தை நீங்கே னெனவங் குறைந்திடுநா ளத்த கொடுமுடி யாவரணம் - வித்தகமாய்ச்
109 செய்துசூ ழென்று திருவாய் மலர்ந்தபடி செய்துசூழ்ந் துங்கரவு தேரொருவன் - செய்யநுதல்
110 வெண்ணீறு கண்டு விசித்தகடுங் கட்டவிழ்த்து நண்ணீ றிலாதபொரு ணன்களித்து - மெண்ணிநரி
111 யுள்ளன வெல்லா முடையானைக் கூவியவென் றெள்ளரிய வாடை யினிதளித்தும் - விள்ளாத்
112 தவளை யரமுழக்கந் தான்செய்த தென்று திவண்மணிபொன் வாரிச் சிதறி - யுவகையுற்று
113 மெள்ளுண் டவன்வா யிசைத்தமொழி கேட்டனையான் றள்ளுண்ட வெச்சி றனைநுகர்ந்துங் - கொள்ளா
114 விழிகுலத்தோன் சென்னியவ்வூ ரெல்லைகிடக் கக்கண் டிழிகணீ ரோடுகரத் தேந்திக் - கழிவுற்
115 றடியேன் றலையுமிவ்வா றாகியிவ்வூ ரெல்லைக் குடியாமோ வென்றிரக்கங் கொண்டும் - படர்தளிமுற்
116 புன்குல நாய்மலந்தன் பொற்பூங்கை யாலெடுத்து நன்குறவேம் பிற்குவிதா னஞ்சமைத்து - மன்புமுதிர்
117 பொன்னு நிகராப் புணர்முலைத் தேவிதனை மன்னு மியற்பகைக்கு மாறாக - முன்னு
118 முயர்மருத வாணா வுவந்தடி யேனுய்ந் தயர்வறநீ கொள்கென் றளித்தும் - பெயர்வரிதா
119 வின்னும் பலபணிசெய் தின்புறுமக் கோமாற்கு மன்னுபுகழ் முத்தி வழங்கினோ - னன்னிலைமைத்
120 தொல்லை யுவனாச் சுவன்வயிற்று மாறா;ப்புண் வல்லை வலஞ்சூழ மாற்றினோன் - வெல்லுமவன்
121 மைந்தன் புறங்கொடுத்த மாற்றானைக் கொன்றபழி முந்தவலஞ் சூழ்முன் முருக்கினோ - னந்துவசு
122 மான்வந்து சூழ்போது மற்றவன்ற னா;டவனைத் தான்வந்து சூழத் தலையளித்தோ - னீனந்தீ
123 ரஞ்சத் துவச னடைந்துசூழ் முன்பவற்சூழ் வஞ்சப் பிரமகத்தி மாய்த்தபிரான் - விஞ்சுபுகழ்ப்
124 பூசத் துறைபடிந்த புண்ணியர்கால் கைப்புனறோய்ந் தாசற் றிரண்டுயிர்வா னண்ணவைத்தோன் - மாசற்ற
125 நாரத மாமுனிவ னண்ணிவிழாச் சேவிக்க வாரம் படுகருணை வைத்தபிரான் - வார்மீ
126 னுணங்க லுயிர்பெற் றுருத்திரர்க ளாகி யிணங்குலகத் தெய்தவரு ளேந்த - லுணங்கன்மீன்
127 கொண்டபொதி யிட்டிகைகள் கொண்ட வொருவனுக்குத் தண்டலில்பொன் னாகச் சமைத்தபிரா - னண்டர்தொழப்
128 பொன்னுருவத் துட்டான் பொலியுமுரு வொன்றியைத்துத் தன்னுருவி லாவுருவந் தான்றெரித்தோன் - பன்னுபொரு
129 ளோர்வளவற் கீந்தனையா னொண்பொருள்வீ சிப்பணிக ளார்தரச் செய்ய வருள்வைத்தோ - னோரு
130 மணங்கனுக்கு மின்னா யவதரிக்கச் செய்தோர் சுணங்கனுக்கு முத்திதந்த தூயோ - னிணங்குபொடி
131 மெய்ப்பூ சவர்கேட்ப மேவுதிரி யம்பகன்றான் றைப்பூச மாடத் தகுமென்றோ - னெப்பேது
132 மில்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக மல்லே ரகமுருகன் வைப்பாக - நல்லார்சேர்
133 தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக வண்மாந் துறையிரவி வைப்பாக - வெண்மாறா
134 நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக மன்காழி யேவடுகன் வைப்பாக - முன்காணுந்
135 தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர் மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக - வுன்னிற்
136 றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக விடைமருதில் வீற்றிருக்கு மீச னடைதருசீ
137 ரேற்ற வுருத்திரர்க ளேகா தசரும்வந்து போற்றவருள் செய்த புகழ்ப்பெருமான் - மாற்ற
138 மிணங்குமணி பொன்னாதி யிட்டமர ரென்றும் வணங்கு மருதவன வாண - னணங்கயர்புற்
139 றோலுடையான் காதில்வளைத் தோடுடையா னீடமர்கல் லாலுடையான் யாவரையு மாளுடையா - னூலுடையார்
140 நாடுவோன் பற்றாத நாயே னிதயத்துங் கூடுவோன் பொன்செய் குளிர்மன்றத் - தாடுவோ
141 னோராழித் தேரோ னுதீசித் திசையென்னுஞ் சீராழி யங்கைமகட் சேருவா - னேராகச்
142 சென்மதியுண் முன்மதியிற் றேய்மதியில் பக்கத்து நன்மதிகொ டன்வத னத்தொகைகொ - டுன்னுதிதிப்
143 புட்கொடி யைக்கொண்டு பொறிக்கொடி மார்பிற்கொண்மரைக் கட்கொடி யேற்றிக் களிசிறப்ப - விட்குலவு
144 குன்றுபுரை தோளாருங் கோற்றொடியா ரும்புவனத் தொன்று பலரு முடனெருங்க - வன்றுமுதற்
145 காலையினு மாலையினுங் காமர்பல தூரியமும் வேலையினு மார்ப்ப வியன்மறுகின் - மாலைபெற
143 வெற்பு நிகர விளங்குபல வூர்தியினும் பொற்பு மலிபவனி போந்தருளி - யற்புமுதி
147 ரின்பதா மென்ன வெவருந் தொழச்சேரு மொன்பதா நாளென்னு மொண்டிருநாண் - மின்பயில்பூண்
148 வாய்ந்த பெருநல மாமுலை யோடியற்று மேய்ந்த துயினீத் தினிதெழா - வாய்ந்தசெழும்
149 பைம்பொற் றகட்டிற் பலமணியுங் கால்யாத்த வம்பொற் றிருமண் டபமணுகி - நம்புற்ற
150 வீறுதரு மாகமஞ்சொன் மிக்க விதிப்படியே கூறு மபிடேகங் கொண்டருளி - நாறுகுழற்
151 பெய்வளைத்தோ ளெங்கள் பெருநல மாமுலைதன் மைவளையு நீல மலர்நோக்கான் - மெய்வளைத்த
152 பேரழகு நோக்குதலாற் பேதையவணயனக் காரழகு மேனி கலந்ததென - வீரமலி
153 காத்திர கும்பக் கருமலையிற் கொள்போர்வை போர்த்தி யிருந்த பொலிவென்னச் - சீர்த்திமிகு
154 பன்முகத்து முள்ள பலவண் ணமுமறையத் தென்முகத்து வண்ணமெங்குஞ் சேர்ந்ததெனத் - துன்னுபிறர்
155 தப்பார் தருக்கொழிதல் சான்றிதென மால்கொடுத்த குப்பாய மெய்ப்புனைந்து கொண்டதென - வொப்பேது
156 மில்லாத் திருமேனி யேந்தழகைச் சாந்தமுலைப் பல்லாருங் கண்டு பசப்பெய்திப் - புல்லாளப்
157 பெட்டாவி மாழ்காமற் பெய்வளைக்கை யம்மைகரும் பட்டான் மறைத்த படியென்னக் - கட்டார்கொ
158 ளோதிமுடி யாள்சமழ்ப்ப வோங்கற் புதல்விமற்றோர் பாதியுரு வுங்கவர்ந்த பான்மையெனத் - தீதின்மணம்
159 பொங்குநீ லோற்பலப் பூமலர்த் தாளன்றி யெங்குநெருக் குற்றே றியவென்னத் - தங்கு
160 மணமாரும் பஞ்ச வடியொளிபாய்ந் தென்னத் தணவாத் திருச்சாந்து சாத்தி - நிணமலிவாய்
161 வேங்கை கொடுத்தகலை வீக்கு மிடத்தொளிரும் வேங்கை கொடுத்தகலை வீக்கியே - யோங்குபய
162 னாய்ந்தவொரு பெண்ணுமற்றோ ராணு மனமகிழச் சாய்ந்து நிமிர்ந்த தனியிடத்து - வாய்ந்தபுனற்
163 பெய்வளை மாதைப் பெருநல மாமுலைதன் மைவிழிகா ணாமன் மறைத்ததெனக் - கைவல்லா
164 ராற்று மணிமகுட மம்பவள வோங்கன்மிசைத் தோற்றுகதி ரென்று சொலக்கவித்துப் - போற்றுபுக
165 ழாற்றன்மிகு கண்ணப்ப ரன்பிற் சொலுமுகம னேற்றுமகிழ் பூத்த வியலிடத்துச் - சாற்றுபுனன்
166 மங்கை யுரைக்குமொழி வந்து புகாதுமையாள் செங்கை புதவஞ் செறித்ததெனப் - பங்கமிலா
167 மாமணிசெய் தோடும் வயிரஞ் செயுமம்பொற் றூமகர குண்டலமுந் தொட்டணியா - வேமவரை
168 யொன்று படவிறுகி யோங்கன்மகண் மார்பில்வளர் குன்றுபட மெல்கிக் குழையிடத்து - நன்றுதரு
169 போகுசுடர்ப் பன்மணியும் பொங்கியெழக் கால்யாத்த வாகு வலயம் வயக்கியே - மாகவின்செய்
170 கஞ்சக்கண் மாயனயன் கற்பகக்கோ னாதியர்கூற் றஞ்சச் சிறைவைத்த வவ்விடத்தே - விஞ்சுபுகழ் 171 மின்னுமுல கங்களெலாம் விற்றாலு மீடாகா மன்னுமணிக் கட்டு வடமணிந்து - பன்னுமுமை
172 வட்ட முலைக்குமணி வாரா மிடத்தண்ட மட்டினிலா விற்றரள மாலையிட்டு - முட்டரிய
173 தாவின் மணிவீர சங்கிலிம தாணிபல மேவிய வாயிடைமேன் மேற்புனைந்து - தாவா
174 மடங்கீண்ட தொண்டருத்த மாங்கந்தாங் கக்கல் லிடங்கீண் டெழுந்த விடத்தே - மடங்காக்
175 கருவி தனக்குக் கருதுபிற வேண்டா விருமை மணிக்கடக மிட்டுக் - கருது
176 மலரோன் முடிதுணித்த வைவாட் குறையா யிலகுமிடத் தாழிபல விட்டு - நலமருவு
177 பொன்னுக்குப் பின்னிருந்து பொங்குவெள்ளி தங்கிடத்து மன்னுதர பந்தம் வயக்கியே - துன்னியொரு
178 பன்றி தொடரமற்றோர் பன்றி தனைத்தொடர்ந்து சென்ற விடத்துச் சிலம்பணிந்து - நன்றவற்றுட்
179 கொண்டசின மாதி குறையாதே தென்றிசைக்கோன் கண்ட விடத்துக் கழல்கட்டித் - தண்டாத
180 மாதங்க வுத்தரிய மன்னு மிடத்தொளிசெய் மாதங்க வுத்தரிய மன்னுவித்துத் - தாதுவிரை
181 தாவாத கொன்றையந்தார் சர்ப்பப் பிராந்தியிட மோவாதாண் மேவ வுவந்தணிந்து - பூவார்கை
182 கொண்டகருப் புச்சிலையான் கோலத் திருமேனி யுண்ட கடுங்கூற் றுறையிடத்தே - தண்டலில்பா
183 லேறு கடலலைமா லேய்நீற்றுத் தூளனமே னாறுதிரி புண்டரநா னத்திலகம் - வீறுகொள
184 விட்டுமதிப் பாதி யெடுத்துமுடி மேற்கவிய நட்டினது வைத்த நயமென்ன - வெட்டுணையு
185 மாசுசா ராத வயிரமுழுக் கச்செறித்த தேசு மிகுவா சிகைசேர்த்துப் - பேசுபுக
186 ழிட்டநமக் கோரிளவ லின்றுவரு மென்றுமலர் மட்டுறுதா ராரூரன் மன்னுவகை - யுட்டுளைய
187 நின்வலப்பா கத்தொருத்தி நீங்கா திருப்பதென்னென் றென்மலர்வா மத்தா ளிசைத்தூட - நன்மைதிக
188 ழம்மதியை யிவ்வரவு மவ்வரவை யிம்மதியுஞ் செம்மை யுறவுகொண்டு சீர்படைப்ப - மும்மைப்
189 புவனத்துந் தான்றோய் பொலிவுணர்த்த லேய்ப்பப் பவளக்காற் கண்ணாடி பார்த்துத் - திவள்பருப்புப்
190 பொங்கல்பான் மூரல் புளியோ தனங்குளஞ்சேர் துங்கமடை நெய்மிதக்குஞ் சொன்றியளை - தங்கயினி
191 பாகு கருனை பகரும் வறையறுவை யாகு மிலட்டுகமெல் லாவியப்பம் - போகுசுவை
192 நோலை யடைநன் னுவணை முதற்பலவுஞ் சோலை யுதவு சுவைக்கனியுங் - காலை
193 யிளநீர் குளநீ ரியன்மோ ரளாய வளநீர் கனிபிழிந்த மாநீ - ரளவா
194 வெவையுஞ் சுவைதேர்ந் தியலவாய் பூசிக் குவைகொள்விரைப் பாகடையுங் கொண்டு - நவையரிய
195 மேதகுதூ பந்தீப மிக்க விவைமுதற்செ யோதுபசா ரங்க ளுவந்தருளிக் - கோதறுசீர்
196. வாய்ந்தவொரு தானும் வயங்கு தனதருளிற் றோய்ந்தவடி யாருஞ் சொலவந்த - வாய்ந்த
197 வெழுதா மறையு மெழுது மறையும் வழுவாது கேட்டு மகிழ்ந்து - தொழுவார்
198 நயங்குல வின்ப நறும்பலம்பெற் றுய்ய வயங்கு மொருகோட்டு மாவுஞ் - சயங்கொள்சத
199 கோடி யரசின் குலந்தழைய வெம்பகையைத் தேடியவோர் வேல்கொள் செழுங்குருந்தும் -பாடியலா
200 வோட்டை மனத்தக்க னோம்பரணிச் சோதிமகங் கேட்டை யுற்ச்சிவந்த கேடிலியு - நீட்டுமொரு
201 கைத்தலைநால் வேதங் கமழ்வாய்த் தலையொன்று வைத்தலைநெய்த் தோரேற்ற வானவனு - நித்தமுந்தன்
202 னாய்மனைசெந் தாமரையே யாக வுறைவாளைத் தாய்மனை யென்றழைக்கத் தக்கோனுந் - தூயவையை
203 நீரு நெருப்பு நிரம்பு தமிழ்ப்பெருமை யோரும் படியருள்கொ ளொண்மழவுந் - தீராத்துன்
204 பாய கடலமண ராழ வரையொடலை மேய கடன்மிதந்த வித்தகனு - மாயவன்கண்
205 காணாக் கமலநடுக் கங்குலினா ரூர்த்தெருவின் மாணாகப் பூத்துழல வைத்தோனுங் - கோணாது
206 மூகைவாய் பேச முழுப்பேச்சு வாய்மூகை யாக வியற்றிய வாண்டகையும் - பாகமிலாத்
207 தாதையிரு தாடடிந்து தாயையொரு பாகங்கொ டாதையிரு தாளடைந்த சான்றவனு - மோதைகெழு
208 கைச்சிலம்பின் றோலுடைத்தன் காற்சிலம்பி னோசைசெவி வைச்சிலம்பி னுண்டுய்ந்த வானவனும் - பச்சுமைகை
209 யாய்நீர் கரந்த வரியமுடி மேல்வழிய வாய்நீர் பொழியன்பு மாமுகிலும் - பாய்மை
210 தகவரிந்தூட் டாது தலையிழந்தா னாண மகவரிந் தூட்டியசீ மானு - நகமறைக
211 ளீன்றதன்வா யென்று மிசைத்தறியா வம்மையெனு மான்றசொல்லி சைக்க வமைந்தாளுஞ் - சான்றதிரு
212 மங்கலப்பொம் கொண்டுமனை வாய்மொழிசொற் கொள்ளாது குங்கிலியங் கொண்டுவந்த கொள்கையனும் - வெங்கொடியோன்
213 கோச மறைத்தவாள் கொண்டுதகா தாற்றவுந்த னேச மறைத்தறியா நீதியனும் - வாசமுறத்
214 தோய்ந்தபுக ழாரூரன் றொண்டத் தொகையுணிலைத் தாய்ந்தபுகழ் மற்றை யடியாரும் - வாய்ந்த
215 வலர்துழாய் நாறு மகன்றளியைக் கொன்றை மலர்துழாய் நாறவைத்த மானு - நிலவு
216 முலகுண் டுமிழ்ந்த வொருவனைப்பா லுண்போ துலகறிய வுண்டுமிழ்ந் தோனு - மிலகுநடங்
217 கண்டே பசிதணிக்குங் காமர் விரதமொன்று கொண்டே விளங்கு குணத்தவருந் - தண்டேறல்
218 பெய்தவர் பெய்யலர் பேசல ரேயாகச் செய்தவ ரென்னுமற்றைச் செய்தவருங் - கையிற்
219 குடவளை கொண்டுங் குடவளைக்காய்ப் பாடி வடவளை கட்டுண்ட மாலு - மிடவளையப்
220 பூமேலெஞ் ஞான்றும் பொலிந்தும்புத் தேளாய்ச்செந் நாமேல்வெண் மாதுவைத்த நான்முகனு - மாமே
221 வொருசுவர்க்கங் கைக்கொண் டுவந்தயி ராணி யிருசுவர்க்கம் வைகு மிறையும் - பொருவரிய
222 வெற்பகநா ணப்பொலிந்து வீங்குதோண் மேற்புனைந்த கற்பக மாலைக் கடவுளரும் - பொற்பகலாத்
223 தேந்தா மரைமலர்த்துஞ் செங்கதிரும் பூவினுக்கு வேந்தா மதுகுவிக்குவ் வெண்கதிருங் - காந்தாப்
224 பொலிபடைகொண் டாசை புரப்போருஞ் சீர்த்தி யொலிபடைத்த பூதகணத் தோரு - மலியுமிசை
225 பத்தர்பதி யாழ்கொண்டு பாடுந் தொழிலவருஞ் சித்த ருரகர்முதற் செம்மையரு - முத்தமமீ
226 தெண்போ தெனவொருவ னெள்ளெச்சி லுண்டவிமற் றுண்போர் பலரு ளுயர்ந்தோனும் - பண்போ
227 ரணிக்கோவை தீட்டி யகமகிழ்தற் கோர்மும் மணிக்கோவை சூட்டியகோ மானும் - பிணிக்கோதி
228 லாதிசைவ ராதி யணியா லயத்தொண்டிற் கேதிலரா காதியற்று மெல்லோரு - நீதிநெறித்
229 தக்கபெருஞ் சீர்ச்சுத்த சைவசித்தாந் தத்திருவின் மிக்க திருக்கூட்ட மேன்மையரு - மொக்கவரப்
230 பண்பார்கை லாய பரம்பரை மெய்கண்டா னண்பார்சந் தான நனிதழைக்க - விண்பார்
231 புகழ வருங்குரவர் போரேறு ஞானந் திகழவரு மானந்தச் செல்வ - னிகழ்வி
232 றுறவுபூண் டோர்பலர்க்குஞ் சூளா மணிமிக் குறவுபூண் டெவ்வுயிரு முண்மை - பெறவுவக்கு 233 ஞான விநோதனுயர் நாவலர்தம் போரேறு சான முடையார் தனித்துணைவன் - மானத்
234 திருவா வடுதுறைவாழ் செல்வன் கருணை மருவா வருநமச்சி வாயன் - பொருவா
235 வரமணியென் றெல்லோரும் வாழ்த்தப் பொலிசுப் பிரமணிய தேசிகனெம் பெம்மான் - பரவுமுண்மை
236 தாங்குபெருஞ் சித்தாந்த சைவக் குழாங்களென வோங்குதிருக் கூட்டத் துடன்மேவ - வீங்குசெம்பொற்
237 றேரும் பரியுஞ் சிவிகையும் யானையுமற் றூரும் பிறவுமுவந் தூர்தருபல் - லோருள்ளு
238 முன்னூர்வோர் பக்கத்து மொய்த்தூர்வோ ரோர்தனக்குப் பின்னூர்வோ ரம்முறையே பெற்றூரப் - பொன்னூரு
239 மின்பணியும் வேத்திர மென்மலர்க்கை கொண்டசைத்துத் தன்பணியி னந்தி தலைநிற்பக் - கொன்பரவு
240 வாரி யுடுத்தபெரு மண்ணொருதாட் குள்ளடக்கு மூரி விடைக்கொடி முன்போத - வேரிவரு
241 மாலவட்டஞ் சாமரைசாந் தாற்றி யொலியன்முதன் ஞாலவட்டஞ் சொல்பலவு நண்ணிமொய்ப்பக் - கோல
242 முழுவெண் மதியு முடிமேற்கொண் டென்ன வெழுவெண் குடைமே லிலகப் - பழுதில்
243 பதலை முழவம் படகந் திமிலை முதல முகிலின் முழங்க - நுதலினொளிர்
244 கண்ணுடையான் வந்தான் கருது மொருபாகம் பெண்ணுடையான் வந்தான் பிரான்வந்தா - னெண்ணினருக்
245 காய்தந்த வன்பருளி யாட்கொள் பவன்வந்தான் றாய்தந்தை யில்லா தவன்வந்தான் - பாய்தந்த
246 நல்லா ரணியேக நாயகன்வந் தான்புலமை வல்லா ரணிமருத வாணன்வந்தான் - புல்லார்
247 நயந்தபுரம் வேவ நகைத்தபிரான் வந்தான் வயந்தழைவெங் கூற்றுதைத்தான் வந்தா - னயர்ந்தயன்மால்
248 சாவாம னஞ்சுண்ட தம்பிரான் வந்தானெம் மூவா முழுமுதன் மூர்த்திவந்தான் - றாவாத
249 பொன்னம் பலத்தாடும் புண்ணியன்வந் தானென்று சின்னம் பலவுமெதிர் சேவிப்ப - வன்னமணி
250 யாத்த வொளிமண் டபநின்று தேவியொடு மேத்திமறை வாழ்த்த வினிதெழுந்து - தாத்திரிநின்
251 றம்பொன்முடி யண்ட மளாவவெழு கோபுரநற் பைம்பொன்மணி வாய்தல் பலகடந்து - செம்பொன்மலர்
252 தூற்றியெல் லோருந் தொழநடைக் காவணத்தி னேற்ற வழியே யெழுந்தருளித் - தோற்றத்
253 தலங்குதிரு வீதி யணுகியம்பொன் வெற்பி னிலங்கு திருத்தேர்மே லேறி - நலங்கொளரி
254 யாதனத்து மேவமுடி யாரும் புனற்றுறைகண் டாதரத்து மேவவந்த வன்னமெனச் - சீதநிழல்
255 வாழ்மருத வாழ்க்கை மதித்துறவு கொள்ளவந்த கேழ்கிளர்செந் தார்ப்பசுங் கிள்ளையெனத் - தாழ்சடைமேன்
256 மின்னு முகிலின் விளக்க முணர்ந்துவந்த மன்னு கலாப மயிலென்னப் - பொன்னிறங்கைத்
257 தாய்க்கு முனமளித்த தண்ணருள் கண்டுவந்த கூய்க்குலவு தேமாங் குயிலென்னச் - சேய்க்குமுன
258 மேவுமொரு பெண்கொண்ட மெய்யுறவு கண்டுவந்த வாவு மிளமட மானென்னத் - தாவாத
259 வொண்டரு வென்றுதனை யுள்கிப் படரவாக் கொண்டருகு வந்த கொடியென்ன - மண்டு
260 சடையையின மென்று தவக்கருத்திற் கொண்டா யிடையடைய வந்தமின லென்ன - வுடையதனைக்
261 கோணில் பிரணவ குஞ்சர மென்பதுளம் பேணி யடைந்த பிடியென்ன - வாணிலவு
262 விண்ணுலக மேயபல மின்னாரும் வாரிதிசூழ் மண்ணுலக மேய மடவாரு - நண்ணுபெரும்
263 பாதலத்து மேய பலமா தருமாட மீதலத்துஞ் செய்குன்ற மேனிலத்தும் - பூதலத்துஞ்
264 சோதிமணிச் சாளரத்துஞ் சூழ்பசும்பொன் மன்றிடத்தும் வீதியிடத் துஞ்சதுக்க மேவிடத்து - மோதிமநேர்
265 மாடமலி சோபான வைப்போ டரமியத்து மாடகஞ்செய் வேதி யதனிடத்தும் - பாடமையு
266 மின்னென்று சொல்சடையீர் வின்மா ரனையெறித்த தென்னென்று கேட்க வெழுந்துநிற்ப - தென்னக்
267 குருமுடிக்கா ரோடுறவு கொள்ளவிழைந் தென்னப் பெருமுடிக்கா ரோதி பிறங்கத் - திருமுடியில்
268 வாழும் பிறைவடிவும் வண்ணமுமொத் தேமென்று வீழும் பொடிநுதன்மேன் மேல்விளங்கப் - போழுங்
269 கருவிழிச்சேல் கங்கை கலப்பமுயன் றென்னப் பொருவிலிரு பாலும் புரள - வொருவின்முடி
270 யவ்வாய் மதிநட் பமைந்தவரக் காம்பலெனச் செவ்வாய் மலர்ந்துசுவைத் தேனூற - வொவ்வா
271 வலக்கணுற வுற்று வயங்குகம லம்போ னலக்க முகம்பொலிவு நண்ண - நிலக்கண்
272 டனைவேய்கொண் டாங்குறவு தாங்கொளவுற் றென்னப் புனைவேய் வளைத்தோள் பொலிய - வனையும்
273 வரையைக் குழைத்த வரைகுழைக்கு மாபோல் விரையக் குவிமுலைகள் விம்மப் - புரையறுதன்
274 கண்ணெதி ராகாக் கணைமதவே ளன்றென்னு மெண்ணெதி ராகா விடைதுவள வண்ணவரைத்
275 தன்பணியை வெல்லத் தருக்கியெதி ருற்றெனச்செம் பொன்பணி யல்குல் புடைவீங்க - நன்புவியோ
276 ரெண்ணியறேர் யாத்த வெழிலரம்பை முற்றும்வெலக் கண்ணியடைந் தாங்குக் கவான்பொலியப் - புண்ணியத்தன்
277 பாடியறேர் மேவப் பழகுதல்போற் றன்பழைய நீடியறேர் மேவுபத நேர்சிறப்பக் - கூடி
278 யெழுகடலு நாண வெழுந்தபெரு வெள்ள முழுகு நெடியசடை மோலி - யொழுகழகும்
270 வையமிகழ் தக்கன் மகக்கூற் றவதரித்த செய்யவிழி நெற்றித் திருவழகு - முய்யப்
280 பகலிரவு செய்யம் பகத்தழகும் வேத மகலரிய செவ்வா யழகும் - பகரடியார்
281 மெய்த்தசுவைச் சொல்லமுதே வேட்ட செவியழகு மொய்த்த கருணை முகத்தழகு - மொத்துலகங்
282 காத்தமணி கண்டக் கறுப்பழகு மேருவலி தேய்த்த தடந்தோட் சிவப்பழகும் - வாய்த்தசிவ
283 ஞானங் குடிகொ ணகுபூண் முலையுழக்குந் தானமெனு மார்வத் தனியழகு - மானகுநீ
284 ரோடையெனுந் தன்முகத்தி னொண்கணெனும் பூவமைக்குங் கூடையெனுஞ் செந்தாட் குலவழகும் - வாடையுத
285 வெண்ணுற்ற வில்லோ வெனும்வா சிகையழகு நண்ணுற்ற புன்மூர னல்லழகுங் - கண்ணுற்றார்
286 மாலானார் கண்ணிமைப்பு மாறினா ரோவியமே போலானார் நெஞ்சம் புழுங்குவார் - சேலான
287 கண்முத்தஞ் சூடிக் கதிர்த்தமுலை மேற்பழைய வெண்முத்தம் போக்கி வெதும்புவா - ரொண்மைச்
288 சுரிகுழ றாழ்ந்திடையைச் சூழ வுடுத்த விரிகலை போக்கி மெலிவார் - பிரிவரிய
289 நன்னா ணெடுகதிரு நாணுமணி கோத்தபல மென்னாணும் போக்கியுளம் விம்முவார் - பொன்னான
290 கன்று கழன்றகறல் காணா ரிளந்தென்றற் கன்றுகழ லாதடைதல் கண்டயர்வார் - நன்றுநன்று
291 பொன்செய்த செஞ்சடையார் போற்றியா - நோக்கியதற் கென்செய்தா ராலென் றிரங்குவார் - மின்செயொரு
292 பங்காட்டி செய்தவமே பாடுற் றதுவீணே யங்காட்டி நாம்பயில்வ தம்மவென்பார் - செங்காட்டுப்
293 பிள்ளைப் பழிகொண்டார் பெண்பழிக்கு நாணுவரோ கொள்ளைப் பழிகொள் கொடியரென்பார் - வள்ளைப்
294 பயம்பணையார் கூடற் பழியஞ்சி யாரென் றியம்பு வதுமுகம னென்பார் - நயம்படரப்
295 பொங்கரவப் பூணுவந்தீர் புன்க ணுதவுமக்குச் சங்கரென் னும்பேர் தகாதென்பார் - துங்கமிகு
296 வேய்வன மேவல் விரும்பீரெம் பொற்றொடித்தோள் வேய்வன மேவல் விரும்பீரோ - காயரவின்
297 வாயமுது கொண்டு மகிழ்வீரஞ் செம்பவள வாயமுது கொண்டு மகிழீரோ - மேயமலர்க் 298 கொங்கைச் சிலம்பு குழைத்தீரெம் மார்பிடங்கொள் கொங்கைச் சிலம்பு குழையீரோ - பங்கமிலிப்
299 பொற்றேர் விரும்பிப் புண்ர்ந்தீரெம் மல்குலெனும் பொற்றேர் விரும்பிப் புணரீரோ - கற்றலஞ்சேர்
300 வாழை யடவி மருவினீ ரெங்குறங்காம் வாழை யடவி மருவீரோ - தாழ்விழியாச்
301 சீத மதியைமுகஞ் சேர்த்தீரெம் பொன்வதனச் சீத மதியைமுகஞ் சேரீரோ - நாதவரு
302 டாவென்ற வோரன்பர் தம்பாற்சென் றுன்மனையைத் தாவென்ற தூர்த்தருநீர் தாமலவோ - மாவென்றிப்
303 பூதஞ் செயும்படையீர் பொன்னனையாள் பாலிரத வாதஞ்செய் தன்புற்றார் மற்றெவரோ - சீதமலர்
304 மட்டார் புனன்மதுரை வாழ்வணிக மின்னார்கை தொட்டாரும் வேறுமொரு சுந்தரரோ - கட்டார்கொ
305 ளோதியமைப் பாராநீ ரோரரசன் முன்கொடுத்த மாதினையெவ் வேதுவினுள் வைத்திருப்பீர் - மோது
306 புரத்தை யெரித்ததுமெய் போர்புரித லால்வேள் புரத்தை யெரித்ததுநீர் பொய்யே - சிரத்தையின்மாற்
307 காழி கொடுத்தநுமை யாதரித்த நாங்கள்கைப்பல் லாழி யிழப்ப தழகாமோ - வாழ்தேவூர்க்
308 கன்றுக் கிரங்குங் கருணையீர் தீருமெங்கைக் கன்றுக் கிரங்காவன் கண்மையெவ - னன்றோர்
309 நகரி லமண்சுருக்கி நங்கூறை தீர்த்திந் நகரி லமண் பெருக்க னன்றோ - புகரில்
310 கருங்குயிலும் பாலடக்கக் கற்றீர் வருத்துங் கருங்குயிலெம் பாலடக்கக் கல்லீர் - நெருங்குமுலை
311 யுள்ளிடத்தும் வைத்தீ ரொருத்தி கவர்ந்துகொண்டு தள்ளிடத்து மெம்மைவைத்த றாஞ்சகியீர் - வெள்ள
312 மடக்குந் திறலீரெம் மம்பகம்பெய் வெள்ள மடக்குந் திறல்சற்று மாளீர் - கடுப்பின்
313 மதிமயங்கா வண்ணமுடி வைத்தீர் பரவெம் மதிமயங்கா வண்ணம்வைக்க மாட்டீர் - புதியகரு 314 மஞ்சமையு மெங்கண் மணிக்கூந்தற் கட்டவிழ்ப்பீர் பஞ்சவடிக் காங்கொலெனப் பார்த்தீரோ - வஞ்சம்
315 பயில்கொக் கிறகு படர்சடைவைத் தீர்வெங் குயில்பற் றிறகெவனீர் கொள்ளீர் - வெயிலின்
316 மணியுடைநும் பூணுணவு மாற்றும் விரத நணியனகொ றென்ற னடுக்கும் - பிணிதவிர்மெய்
317 யந்திவா னென்றே யமைத்தோ மமைப்பதற்கு முந்திக் குவிந்த முககமல - நந்திப்
318 பரவு சடைமுகிலைப் பார்த்தவுடன் சொல்லாய் விரவு குயிலொடுங்கி விட்ட - வுரவிற்
319 றிகம்பரரா நும்மைத் தெரிந்தடைந்த யாமுந் திகம்பரரே யாகிச் சிறந்தோஞ் - சகம்பரவு
320 மத்திக் கருளி யறங்கொண்டீ ரெங்கண்முலை யத்திக் கருளி யறங்கொள்ளீர் - பத்தியருக்
321 கேற்று வருவீ ரிடர்க்கடலுண் மூழ்குமெமக் கேற்று வராமை யியம்புவீர் - போற்றியனும்
322 மேனிதழ லென்றுரைப்பார் மெய்யே யருகடைந்தே மேனிதழ லாய விதத்தென்பார் - மேனா
323 ளுணங்கன்மீன் றுள்ள வுவந்தீர்நீர் கண்மீ னுணங்கன்மீ னாக வுவப்பீ - ரிணங்கு
324 மிடைமருதா னந்தத்தே னென்பா ரருளா வடைவினிம்ப நெய்யென் றறைவோ - முடையவரே
325 கோதை தரினுவப்புக் கூடு மறுக்கின்மிகு வாதையுறு மென்னுமட வாருளொரு - பேதை
பேதை
326 விடராய வாடவராம் வெவ்வரவம் பற்றத் தொடரா மதிப்பிஞ்சு தோலா - நடமுடையார்
327 தேறுந் திறத்தமருந் தெய்வமரு திற்பறந் தேறுஞ் செயலி லிளங்கிள்ளை - மாறுபடு
328 சூர்மாவென் றுள்ளந் துணிந்ததோ நாமறியோ மூர்மா விவர்ச்சி யுறாதகுயி - றார்மார்
329 படலுடைய மார னவாவியினி தேறத் திடமருவு றாதவிளந் தென்றல் - படம்விலக்கி
330 யென்மார்பி னில்லா விரண்டு புடைப்பன்னாய் நின்மார்பி லுற்றமைசொ னீயென்பாள் - பொன்மார்பத்
331 தேறுகைத்தா ரன்ப ரிதயம்போல் வஞ்சமுதன் மாறு விளையா மனத்தினா - டேற
332 வல்லையே பாலிம் மரப்பாலைக் கூட்டமுலை யில்லையே யார்கொடுப்பா ரென்றழுவாள் - வல்லா
334 ரெழுதுமொரு பூசையைக்கண் டின்றே கிளிக்குப் பழுதுவரு மென்றோட்டப் பார்ப்பா - டொழுகுலத்தின்
335 முற்று தமிழ்விரகர் முன்னமணர் வாதம்போ லுற்றுமுடிக் கப்படா வோதியாள் - பற்று
336 குடியிற் பொலிமாதர் கொண்டநாண் போலக் கடியப் படாக்குதம்பைக் காதாள் - படியி
337 லடுக்கும்விடங் கொள்ளா வராக்குருளைப் பல்லே கடுக்கு மெனப்புகலுங் கண்ணாண் - மடுக்குமுயி
338 ரொன்று கழிதரமற் றொன்றுபுகு மூலருடம் பென்ரு கரையு மெயிற்றடியா - டுன்று
339 வினைபெற்ற மேருவல்லா வெற்பினங்கள் போனாண் டனையுற் றறியாத் தகையாள் - வனையுங்
340 குழலும்யா ழுங்கைப்புக் கொண்டடீமென் றெண்ணி யுழலுமா றோர்சொ லுரைப்பா - ளழகு
341 பருவ மிரண்டுட் பருவமே யொப்பப் பெருக வளைந்த பிணாக்க - டெருவி
342 னெருங்கப் புகுந்து நிறைகல்வி யான்றோர் சுருங்கச் சொலன்முதலாத் தோற்றி - யொருங்கு
343 பொருள்புணர்த்திப் பாடப் பொலிசெய்யுண் முன்னந் தெருளுணர்ச்சி சாலாச் சிறியர் - மருள்வகையிற்
344 பாடுகின்ற செய்யுளெனப் பற்பலவாஞ் சிற்பமெலாங் கூடுகின்ற மாடக் குலமுன்னர் - நீடுபெரு
345 வீடுசிறு வீடென்று மேன்மே லுறவியற்றிக் கூடு மவர்புனையுங் கோலமென - நாடுவிரற்
346 கோலம் புனைந்து குலாவி யவருவக்குஞ் சீல மெனவுவக்குஞ் செவ்வியிடைச் - சாலு
347 மருவு முருவு மனலும் புனலு மிருவுங் கொடையு மிரப்பு - மொருவா
348 விரவும் பகலு மினனு மதியும் புரவு மழிப்பும் பொருந்திப் - பரவுசிறப்
349 பாணுருவும் பெண்ணுருவு மாலா லமுமமுதுங் காணு மரவுங் கலைமதியும் - பேணுதிறல்
350 யோகமும் போகமு முள்ளா ருரைபலவு மேகமு மாய விடைமருதர் - மோகப்
351 பெருந்தேர் நடத்திவரப் பெட்டனைமா ரோடவ் வருந்தேர் தொழுதற் கடைந்து - திருந்துமனை
352 மார்வணங்கும் போது வணங்கினாண் மான்முதலோர் நேர்வணங்குந் தெய்வவுரு நேர்கண்டாள் - காரும்
353 வணங்கோதி யன்னை வதனமலர் நேர்பார்த் திணங்கோ திவர்யாவ ரென்றா - ளணங்கே
354 யிடைமருது வாழீச ரெல்லா வுலகு முடையர் நமையா ளுடைய - ரிடையறநன்
355 றூரும் விடைகருட னூர விடைகொடுத்தார் சாருந் தமைப்புணர்ந்து சாத்தனையீன் - றாருங்
356 கொடிபுணரச் செம்பொற் கொடிகொடுத்தார் மூன்று கடிமதிலும் வேவக் கறுத்த - வடியுடைப்பே
357 ரம்புசுமந் தெய்வ வகத்தியனார் தம்மைக்கொண் டம்பு கொடுத்த வழகரென - நம்புமிவ
358 ரித்தெருவிற் றேரேறி யேன்வந்தார் சொற்றியென முத்தமொளிர்ந் தென்ன முகிழ்நகைசெய் - தத்தரிவர்
359 நம்மையெலா மாட்கொண்டு நாம்வேட் டவையளிக்க வம்மையொடும் வந்தா ரறியென்னச் - செம்மைமயி
360 லப்படியா னானன்றே யையர்முடி யம்புலியென் கைப்படியு மாறு கரையென்னச் - செப்பும·
361 தந்த விடம்பெயர்ந்தா லந்தோ வுருக்காண லெந்த விடத்து மிலைகண்டாய் - முந்த
362 முனிதக்கன் சாப முராரிமுத லோருந் தனிதக்க தென்னத் தகுமோ - வனிதா
363 யெனவதனைக் கூவமன மில்லையெனிற் கைம்மான் றனையெனக்கு வாங்கித் தருதி - யனையேயென்
364 றோத வி·தென்னென் றுண்ணகைத்தம் மான்முழக்கஞ் சாத மெவர்செவிக டாமேற்கும் - போத
365 வொருமுழக்கஞ் செய்யி னுதிருமே யண்ட முருமுழக்கம் யாவுமிதற் கொப்போ - திருவே
366 யடங்குகென மற்றதுவு மப்படியே லாட றொடங்குமரப் பாவைக்குச் சூட்டத் - தடங்கொளிவர்
367 தோண்மே லணிந்த தொடையா வதுவாங்கென் றாண்மேற் கலைதொட் டலைத்திடலும் - வாணெடுங்க
368 ணன்னை முனிவாள்போ லாங்கு முனிந்தொருநீ பின்னையெச்ச தத்தர்தரு பெண்ணல்லை - முன்னைத்
369 தவம்பெரிது வேண்டுவாய் தன்னை யடக்கென் றவஞ்சிறிது மில்லாதா ளாற்ற - நிவந்த
370 திருத்தேரை யப்பாற் செலுத்துதரங் கண்டு திருத்தே ரனையொடுமிற் சென்றாள் - பொருத்துசிலை
371 கோட்டாது வண்டுநாண் கூட்டாது வாளியொன்றும் பூட்டாது வேடேர்ப்பின் போயினான் - மீட்டுந்
பெதும்பை
372 ததும்பு மணிக்குழைதோ டாம்வருடி யாடத் ததும்புகொடி போலுமொரு தையற் - பெதும்பை
373 யலரும் பருவ மடுத்ததென்று மைந்தர் பலருமெதிர் பார்க்கவொளிர் பைம்போ - திலகுமெழின்
374 மாட மிசைத்தவழு மாமுகிலின் றோற்றங்கண் டாடமனங் கொள்ளு மழகுமயி - னீடுகடல்
375 கூடிக் கடைநாள் குடநின்றுந் தேவர்கலந் தேடிப் புகுதாத தெள்ளமுத - நீடுசண்பை
376 நாட்டிறைவ னாரெண் ணகத்தமண ரைச்செயல்போற் கூட்டிமுடித்த குழலினாள் - வேட்டுவஞ்ச
377 முந்து களவு முனிவுங் குடிபுகுத வந்துவந்து பார்க்கும் வரிவிழியா - ணந்து
378 கறியமைத்தார் தள்ளுங் கருவேப் பிலைபோ லெறிகுதம்பைக் காதி னியலா - ளறிகயத்தின்
379 கொம்பு வெளிப்படன்முற் கூர்முனை தோற்றுதல்போல் வம்பு முலைதோற்று மார்பினா - ணம்புபல
380 பூமாலை சூடுதற்கும் பூணாரம் பூணுதற்கு மாமாலை தாக வமைந்துள்ளாள் - காமரசப்
381 பேறுங் குலமாதர் பேணும்பூ ணென்னுநாண் வீறுஞ் சிறிதரும்பு மெய்யினா - டேறுசிலை
382 வேளா கமத்தின் விதம்புகல்வார் வார்த்தைசற்றுங் கேளா தவள்போலக் கேட்டமர்வா - டாளாம்
383 பெரும்பகையெண் ணாதுவரை பேர்த்தான்போற் கொங்கை யிரும்பகையெண் ணாத விடையா - ளரும்புபெருங்
384 காதலுடைத் தோழியர்கள் கைகலந்து சூழ்தரமிக் காதலுடை வாவி யணைந்தாடிச் - சீதப்
385 பலமலருங் கொய்து பனிமாலை கட்டி நிலமலரு மாதவிநன் னீழல் - குலவுபளிங்
386 காரப் படுத்தெழின்மிக் காக்கியதா னத்தமர்ந்து சேரப் படைக்குந் திறல்படைத்தா - னோர்தான்
387 படையா தமைந்த பரிகலநல் கூரு முடையா தெதிர்ந்தமத வோங்கல் - புடையாருங்
388 கொம்புபட்ட போர்வை கொடுத்த தனியூரு மம்புவிட்ட தின்மை யதுதெரிந்துஞ் - சம்பு
389 விடாதுவா ழூரும்விதி வீநா ளரசு படாதுவா ழூருமருட் பற்றுக் - கெடாது
390 பதியே பசுவாய்ப் பயங்கொடுத்த வூரும் விதியேமே னோக்குதிறம் வெய்ய - கொதிதழலுக்
391 கன்றிப் புனற்கென் றதிசயிப்பச் செய்யூரு மன்றிமதன் றீக்குவிருந் தாமூரு - நன்றிதரு
392 தண்டீசர்ப் போற்றியடி தாழ்ந்தபின்னும் வேறோருவர்க் கண்டாய்விற் போற்றவருள் காலூரு - மண்டிப்
393 பிறந்தார் பிறவாத பேரூரு நாளு மிறந்தா ரிறவாத வூருஞ் - சிறந்தநலத்
394 தாட்டை விரும்பி யடுபுவியு மாடரவு மோட்டை படாம லுறையூரு - மேட்டைதவிர்
395 கன்னியொரு பாற்கலந்து காலில்கட கம்புனைந்து மன்னியிட பத்து வரைத்தனுக் கொண் - டுன்னியொரு
396 தம்பத் துதித்தசிங்கந் தான்றருமுட் சாத்தணிவார் கும்பத் துதித்துக் குலவூரு - நம்புபொறை
397 யாதியடை யானு மரிக்கரிய செங்கமலப் போதியைய மார்பேற்கப் பூட்டூருஞ் - சோதிமணி
398 வாய்திறந்து பாடி மணியம் மனைகொண்டு தாதியரோ டாடுஞ் சமயத்தி - லோதி
399 மழையனைய வோரணங்கு வந்து பணிந்து கழையனைய செஞ்சொற் கனியே - விழையு
400 மொருபாற் பசப்பா யொருபாற் சிவப்பா யிருபாலு மொன்றி னியையும் - பெருமான்
401 கொடுங்கோளூர் மேய குழகன் கொடுமை விடுங்கோ ளிலியுமமர் மேலோ - னொடுங்கா
402 விடைச்சுரத்து வாழ்வா னிடைமருத மேயா னடத்துதிருத் தேரணித்தே நண்ணிற் - றடத்தியெழு
403 சேவிக்க வம்மெனச்சூழ் சேடியர்க ளோடெழுந்தா ளாவிக் கினியான்மு னண்மினா - டேவியொடு
404 வீற்றிருக்குங் கோலம் விழிகுளிரக் கண்டுவளை யேற்றிருக்கு மங்கை யிணைகுவித்தா - ளூற்றிருக்கு
405 முள்ளங் குழைய வொருத்தியிவர் பாலமர்ந்தாண் மெள்ள வவளார் விளம்பென்றாள் - கள்ளமில
406 மாதே யனைத்தும் வருந்தாது பெற்றவணா மாதேய மற்றவளே யாதாரங் - கோதேயா
407 வன்னையவ ளேயுலகுக் காக்க மெனக்கோடி பின்னையது நாம்பெற்ற பேறுகா - ணென்ன
408 வெனையு மருகே யிருக்கவைப்பீ ரென்னப் புனையு மலர்க்குழலார் பூவாய் - நினையுந்
409 தரமோவத் தாயர் தமக்கேயல் லாதப் புரமேவ யார்க்குப் பொருந்து - முரமேவ
410 நீயருகு மேவுவையே னீடுலகி னாகமெலாம் போயவர்பூ ணாகிப் பொலியுமே - தூயமன
411 மானக்கஞ் சாறர் மகள்கோதை யன்றிமற்றோர் தேனக்க கோதைகளுஞ் சென்றேறி - மேனக்க
412 பஞ்சவடி யாமே பரவொருத்தர் கல்லன்றி விஞ்சவெவர் கற்களுமெய் மேவுமே - துஞ்சு
413 மிருவ ரெலும்பன்றி யெல்லா ரெலும்பும் பொருவரிய மேனி புகுமே - மருவுசிலை
414 வேடனெச்சி லல்லாது வெங்கா னுழலுமற்றை வேடரெச்சி லும்முணவாய் மேவுமே - நாடுமறை
415 நாறும் பரிகலம்போன் ஞாலத்தார் மண்டையெலா நாறும் பரிகலமா நண்ணுமே - தேறுமொரு
416 மான்மோ கினியாய் மணந்ததுபோன் மற்றையரு மான்மோ கினியாய் மணப்பரே - நான்மறைசொல்
417 வல்லா னவனையன்றி மாலா தியபசுக்க ளெல்லாம் பிரம மெனப்படுமே - வல்லார்
418 திருவருட்பா வோடுலகிற் சேர்பசுக்கள் பாவுந் திருவருட்பா வென்னச் செலுமே - பொருவா
419 வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப் பிரமணிய தேசிகன்போற் பேண - வுரனமையா
420 வெல்லாரு மெய்க்குரவ ரென்று வருவாரே நல்லாயென் சொன்னாய் நகையன்றோ - சொல்லாதே
421 யோலையிட்ட வள்ளை யொருத்திபோன் மாதவத்தான் மாலையிட்டாய் கொல்லோ மறவென்ன - மாலை
422 யிடுவேனிப் போதென் றெழலு முருகர் தொடுமாலை யன்றே சுமக்க - வடுமாறில்
423 வேழஞ் சிதைத்ததுகொன் மேதகுமூக் கோர்மயிற்குத் தாழவரி வித்துச் சமைந்ததுகொல் - வாழி
424 திருமான் முகத்திற் றிருக்கா யதுகொல் பொருமானின் கைத்தொடையிற் பூண்பூ - வெருவாத
425 கண்ணப்பர் பாதங் கமழ்செருப்புத் தோயுமென வெண்ணப் படுவ திதற்குண்டோ - கண்ணன்முழந்
426 தாளில் விசயன்முன்னாட் சாத்தியபூ வோவிந்த நாளினின்கை மாலை நறியபூ - வாளா
427 விருத்தியென்றா ளெண்ணியது மிப்படியோ வென்று விருத்தியுற சென்றமன மீட்டாள் - பொருத்தி
428 மடக்கினான் வின்னாண் மதவேள் சினத்தை யடக்கினான் றேர்ப்பி னடைந்தான் - விடற்கரிய
429 செங்கைநடத் தாரப்பாற் றேர்செலுத்தல் கண்டந்த நங்கைமனை நோக்கி நடந்தாளோர் - மங்கை
மங்கை
430 திரையிற் பிறவாத தெள்ளமுத மோங்கல் வரையிற் பிறவா வயிரந் - தரையிற்
431 பிறந்த மதியமைந்தர் பேராசை கொள்ளச் சிறந்த பசுங்காம தேனு - வுறந்த
432 புரிகுழல் கட்டவிழ்க்கும் போதா டவர்த மரிய மனமுங்கட் டவிழ்ப்பா - டெரியமுடி
433 செய்துமலர் சேர்த்துச் செருகும்போ தேபனித்தல் செய்யுயிருஞ் சேர்த்துச் செருகுவாள் - வெய்யவிட
434 முண்டா னுமிழ்ந்தான்கொல் லோவென்று மால்பிரமன் கண்டா னடுங்குமிரு கண்ணினா - டண்டாமை
435 கொண்டமைந்தர் நெஞ்சங் குடிபுகுந்தா டப்பொன்னாற் கண்டதிரு வூசலெனுங் காதினா - ளண்டம்
436 வளைத்தாள் கதிர்மதிய மாக்களங்க மாற்றி முளைத்தா லனைய முகத்தா - டிளைத்தபெருங்
437 காமரச மெல்லாங் கமழ வடைத்தசிறு தாமச்செப் பென்னுந் தனத்தினா - ணாமமறத்
438 தன்னை யறிந்துபரந் தானேயென் பான்பொருவத் தன்னை யறிந்து தருக்குவாள் - கொன்னே
439 பெருத்து முலைகணமைப் பின்பு வருத்தத் திருத்துமெனத் தேர்ந்த விடையாண் - மருத்துப்
440 பொதியமலை நின்றுவரப் போயேற்பாள் பின்ன ருதியமைதீப் போல்வ துணராண் - மதிய
441 மெழுந்துவரக் கண்டுவப்பா ளீதே வடவைக் கொழுந்துபொரு மென்றுட் குறியாள் - செழுந்தரளக்
442. கோவை புனைந்து குவட்டருவி யொத்ததென்று பூவை யொருத்திசொலப் புந்திசெய்வா - டாவிக்
443. கரைகட வாத கடல்போல வன்னை யுரைகட வாமே யுறைவாள் - வரையின்
444. பகையிந்தி ராணி பணைமுலைதோய் காலந் தகையினுளங் கொள்ளுந் தகையா - ணகைசெய்
445. மனைமுகப்பி லெண்ணின் மடவாரோ டெய்தி நினையு நிலாமுற்ற நின்று - புனையு
446. முலைப்பகை யாகி முளைத்த துணர்ந்து தலைப்பகை கொண்டுசெங்கை தாக்கு - நிலைப்பென்னப்
447. பந்தடித்து முத்தம் பலமுகத்து நின்றுதிரச் சந்தத் தனத்துமுத்தந் தாம்பிறழ - நந்த
448. விளையாடு போதில் விரும்புதாய் வந்து வளையாடு செங்கைமட மாதே - யிளைய
449. ரியங்கு தலைமாற்று மெண்ணமோ மேலாய் வயங்கு துறவுமடி யாதோ - பயங்கொள்
450. கருப்புவில்லி காணிற் கனகமய மான பொருப்புவில்லி யோடு பொரவோ - விருப்பார்
451. திருமங்கை கண்டறிஞர் செந்நா வகத்த மருமங்கை யாதன் மதித்தோ - வருமந்த
452. பொன்னே மணியே புறவே பசுமயிலே மின்னேயிவ் வாடல் விடுகென்ன - வந்நேர
453. மண்டம் புவன மனைத்தும் விளராமற் கண்டங் கறுத்த கருணையான் - பண்டு
454. வெருவருமா லாதிவிண்ணோர் மெய்வலியெ லாஞ்சிற் றொருதுரும்பு கொண்டளந்த வும்பன் - பெருவரையைப்
455. பண்டு குழைத்த படிகருதா தம்மைசெங்கை கொண்டு தழுவக் குழைந்தபிரான் - மண்டுபுலா
456. லேங்கொடுக்க மாட்டாதென் றெங்கட் குரைத்தொருவர் தாங்கொடுக்கும் போதெல்லாந் தானுண்டா - னீங்கிடுமின்
457. பொன்மேனி மாதர் புணர்திறத்தை யென்றுரைத்துத் தன்மேனி யோர்பாலோர் தையல்வைத்தான் - பன்மாடக்
458. கூடல் வழுதியடி கொண்டு பலவுயிர்க்குஞ் சாட லமையாத் தழும்பளித்தா - னாடு
459. மொருவன் றலையை யுகிராற் றடிந்து பொருவில்கழு வாயெவர்க்கும் பூட்டுந் - திருவ
460. னறிந்தடிமை செய்வார்பொன் னாடை யுடுக்கச் செறிந்தசிறு தோலுடுக்குஞ் செல்வ - னறந்தழைய
461. வெல்லா முடையா னிறத்தல் பிறத்தலிவை யில்லானென் றெல்லாரு மேத்தெடுப்பான் - வல்ல
462. விடைமருத வாண னிமைக்குந் திருத்தே ரடையவணித் தேகண் டணைந்தாள் - புடைவிரவு
463. தையலா ரோடு தடங்கைகுவித் தாண்மாலு மையலார் மேனி வனப்புணர்ந்தா - ளையோ
464. முளையாத காம முளைத்ததுசெங் கைவில் வளையா மலர்சொரிந்தான் மார - னிளையா
465. ளுடுக்கை நெகிழ வுறுவளைகை சோர விடுக்கை யடைந்து மெலிந்தாள் - கடுக்கை
466. புனைவான் கடைக்கண் பொருத்தினான் போல நினைமூர றோற்றி நெடுந்தேர் - தனையப்பா
467. லுந்தினான் வேளுமுடன் றொன்றுபத்து நூறுமேற் சிந்தினா னாகிச் செருச்செய்தான் - முந்தித்
468. தலையமைந்த தோழியர்கைத் தாங்கத் தளரு தலையடைந்தாண் மாளிகையுட் சார்ந்தா - ணிலைநின்று
469. காதள வோடுங் கருங்கண்ணா ரெல்லாருஞ் சீதள மெல்லாஞ் செயப்புகுந்தார் - போத
470. வவைக்குப் பொறாளா யயர்தல்கண்டு காமச் சுவைக்குத் தகுதோழி சொல்வா - ளெவைக்குந்
471. தகச்செய்தா னீங்குந் தகாமை செய்தாற் பெண்கா ணகச்செய்வ தாகு நலமோ - மிகப்படுத்த
472. மாந்தளிரை நீக்கி மகாலிங்க மேயமரு தாந்தளிரைச் சேர்த்தா லறமுண்டே - காந்த
473. வணிதரளம் போக்கி யமரர்பெரு மான்கண் மணிபுனையிற் சாந்தம் வருமே - பிணிசெய்
474. பனிநீரைப் போக்கிப் பரமர்சடை மேய பனிநீரைப் பெய்தல் பயனே - கனிசந்
475. தனம்போக்கி யையர் தவளப் பொடியின் மனம்போக்கு மின்மறுக்க மாட்டாள் - சினந்த
476. பலமொழியா லென்ன பயன்மருத ரென்னு நலமொழியே யென்று நவில்வீர் - குலவிசெய்ய
477. வாம்பன் மலரை யகற்றி யமையமரு தாம்பன் மலரை யணிந்திடீர் - மேம்படிவை
478 யல்லாற் பிறிதுசெய லத்தனையுந் தக்கன்மக மொல்லாதே யாயதிற மொக்குமே - யெல்லா
479. மறிவீரென் றோத வறைந்தமொழி யெல்லாஞ் செறிநோய் மருந்தாய்த் திருந்த - வெறியார்
480. தடந்தார்க் குழலியுயிர் தாங்கி யமர்ந்தாள் விடந்தா னெனப்பொலியும் வேற்கண் - மடந்தைவலி
மடந்தை.
481. முற்றிச் சிலைவேண் முதுசமரா டற்குயர்த்த வெற்றிக் கொடியின் விளங்குவாள் - பற்றுமல
482 ரைங்கோ லுடையா னரசு நடாத்திக்கொள் செங்கோ லனையபெருஞ் செவ்வியா - டிங்கட்
483 குடையான் மகுடமெனுங் கொங்கையளன் னானே யுடையா னெனப்புகறற் கொத்தா - ளிடையா
484 வனைய னினிதமரு மத்தாணி யென்னுந் தனைநிகரி லல்குற் றடத்தாள் - புனையுங்
485 கிழக்குமுத லெத்திசையிற் கிட்டினுஞ்சோர் வித்தாள் வழக்கறுக்கும் பார்வை வலியாண் - முழக்கறிவி
486 னேய்ப்பெய் துறாமுனிவ ரெல்லார் தவங்களையும் வாய்ப்பெய் திடுங்கவவு வாணகையாள் - பார்ப்பினிய
487 வோதியாஞ் சைவலத்தா லொண்முகமரந் தாமரையாற் கோதியலா மைக்கட் குவளையா - லாதரச்செவ்
488 வாயாங் கழுநீரால் வண்காதாம் வள்ளையா னேயார் கபோலமெனு நீர்நிலையா - லேயு
489 மதரமாஞ் செங்கிடையா லங்கழுத்தாஞ் சங்கால் பொதியுமுலை யாம்புற் புதத்தா - லிதமாய
490 வுந்தி யெனுஞ்சுழியா லொத்தமடிப் பாமலையாற் சந்தி பெறுமுழந் தாண்ஞெண்டா - லுந்துகணைக்
491 காலாம் வராலாற் கருதப் பொலிந்தபுறங் காலா மொளிர்பொற் கமடத்தா - லேலாவெங்
492 காமவிடாய் பூண்டு கலங்கா டவர்மூழ்கி யேமமுறும் வாவி யெனப்பொலிவா - டாம 493 மணிநிலா முற்றத் தளவிலார் சூழ மணிநிலா வெண்ணகையாள் வைகிக் - கணிதமறத்
494 துன்றுபன்மே லண்டத் தொகையுங் கடந்தப்பாற் சென்று பொலியுந் திருமுடியு - மொன்றுதிற
495 லென்று மதியுமிவை யென்னப் பகலிர வென்றும் விளைக்கு மிருவிழியு - நன்றமைய
496. மும்மை யுலகு முகப்பவே தாகமங்கள் செம்மை யுறவிரித்த செவ்வாயு - மம்ம
497. வடுக்கு மிரவு மவிரும் பகலு முடுக்கும்வளி வீசுமென் மூக்குந் - தடுப்பரிதா
498. யெந்தப் புவனத் தெவர்கூறி னாலும· தந்தப் பொழுதேயோ ரஞ்செவியு - முந்தவரு
499. காவருநங் கூற்றடங்கு காரா கிருகமென்று தேவர் பரவுந் திருக்கழுத்து - மேவு
500. பெருந்திசைப்போக் கன்றிப் பிறிதில்லை யென்னப் பொருந்தி வயங்கும் புயமுந் - திருந்திய
501. விண்ணுலகுங் கீழுலகு மேல்கீழு மாகவைத்து மண்ணுலக மேயாய் வயங்கரையு - நண்ணு
502. மெழுபா தலமு மிகந்துமால் கண்டு தொழுமா றிலாத்தாட் டுணையு - முழுதாள்வோன்
503. மன்னு மிடைமருத வாண னருட்பெருமை யுன்னுந் திறத்தா ளொருத்தியைப்பார்த் - தென்னே
504. யிடைமருதென் றோது மிதன்பெருமை யாரே யடைய வகுப்பா ரணங்கே - யுடையவரே
505. பேணு மருதின் பெருமை யெவருரைப்பார் காணுந் தரமில் கயிலைகாண் - பூணுமன்ப
506. ரெல்லாரு நாவரச ரென்ன வடநாட்டிற் செல்லா திருக்கத் திருந்தியதா - னல்லா
507. யிதுகண்ட நாமற் றெதுகாண்டல் வேண்டு மதுகண் டவரா யமைந்தேஞ் - சதுர
508. ருருத்திரர்க ளோர்பன் னொருகோடி யாரும் பொருத்த முறவந்து போற்றுந் - திருத்தகுசீ
509. ரிந்தத் தலமேய தித்தல மான்மியமற் றெந்தத் தலத்திற் கியைந்துளது - நந்த
510. விழிதலை யொன்றனைக்கை யேந்தியொரு வேந்த னழிதுயர் பூண்டதெங்கென் றாயா - யிழிதருநாய்க்
511. கட்டந் திருமுற் கலப்பதோ வென்றிறைகை யிட்ட முடனெடுத்த தெத்தலத்தில் - வட்டமதில்
512. சூழுமது ராபுரியிற் றொட்ட பழிநீக்கி வாழும் படிபுரிந்த மாத்தலம்யா - தேழுலகும்
513. போற்றுமொரு தன்னுருவைப் பொன்னுருவி னிற்புகுத்தி யேற்றும் பெருமையுற்ற தெத்தலங்காண் - கூற்றமஞ்சு
514 மிந்தத் தலத்துதிக்க வெத்தவஞ்செய் தோமென்று சந்தக் குயின்மொழியா டானுரைத்து - நந்தக்
515 களிக்கும் பொழுது கசிந்தார்க்கே யின்ப மளிக்கும் பிரான்றே ரணுக - வெளிக்கணந்த
516 மாதரொடும் வந்து வணங்கினாள் காண்பார்க்கு மோத மளிக்கு முகங்கண்டாள் - காதற்
517 றிருத்தோளுங் கண்டா டிருமார்புங் கண்டாள் பெருத்தாண் மயக்கம் பெருவே - ளுருத்தான்
518 பலகணைதொட் டெய்தானப் பைங்கொடிதான் சோர்ந்து சிலதியர்மேல் வீழ்ந்து திகைத்தா - ளலமருவா
519 ளென்னை யுடையா னிவள்செய்கை நோக்கானாய் நன்னயத்தே ரப்பா னடத்தினான் - பின்னைத்
520 தொடர்ந்து செலுமதனன் றோகைமேற் பல்லே வடர்ந்து செலப்பெய் தகன்றான் - கிடந்தவளாய்ச்
521 சோருங் கருங்குயிலைத் தோழியர்கள் கைத்தாங்கிச் சாரு மனையிற் றகப்புகுத்தி - நேரு
522 மலரணையின் மேற்கிடத்தி யான்ற பனிநீ ருலர்தர மேன்மேலு மூற்றிக் - குலவுநறுஞ்
523 சாந்தமுங் கோட்டித் தகுசிவிறிக் காற்றெழுப்பக் காந்துவது கண்டு கலங்கினாண் - மாந்தளிர்மு
524 னாயவுப சார மனைத்துஞ் செயலொழிமி னேயமுள தேலென்பா னீவீரென்று - தூய
525 மணிவாய் திறந்தாண் மருதரே யும்மைப் பணிவாருக் கீதோ பயன்கா - ணணியல்
526 சடைமே லதுகொடுத்தாற் றத்துதிரைக் கங்கை விடைமேலீர் நும்மை வெறுப்பா - ளடையு
527 மிடத்தோ ளதுகொடுத்தா லெவ்வுலகு மீன்ற மடப்பாவை கோபநுமை வாட்டு - மடுத்த
528 வலத்தோ ளணியன் மருவ வளித்தாற் சொலத்தா னொருவருண்டோ சொல்லீ - ருலத்துயர்தோள்
529 வெய்ய சிலையாரூன் மென்றுமிழ்வ தாயிருந்தாற் செய்ய மணிவாய் திறந்தருள்வீ - ரையரே
530 யார்த்தார் கழைவண் டமைத்தொரு பூத்தொடுக்கப் பார்த்தா லலவோகண் பார்த்தருள்வீர் - சீர்த்தகதிர்
531 பன்மோதி னீருயிரைப் பாற்றிடுவ லென்றுதலை கன்மோதி னாலன்றோ கைதருவீர் - நன்மையெனுங்
532 கோளெறிந்த தந்தை கொடுவினையை நோக்கியவன் றாளெறிந்த போதன்றோ தாரருள்வீ - ராளும்
533 பிரியமுடை யீரென்று பேரருள்செய் வீரென் றிரியுமுயிர் தாங்கி யிருந்தா - ளரிவை
அரிவை.
534 யிளையான் குடிமாற ரெய்ப்பொழிப்பான் சென்று முளைவாரும் போதுநிகர் மோகம் - விளைகுழலா
535 டேவர்க்கூ றாக்கினரைத் தேர்வலெனுங் கண்ணப்பர் கோவச் சிலைநேர் கொள்ளுநுதலாள் - காவற்செய்
536 நெல்லுண்டாள் பாலுண்சேய் நீக்கலற மென்றேற்றார் கொல்லுண்ட வாள்போற் கொடுங்கண்ணாள் - சொல்லரசர்
537 பேராலப் பூதிப் பெயரா ரமைத்ததடத் தேராரும் வள்ளை யெனுஞ்செவியாள் - சீரார்
538 கணநாதர் நந்தவனக் கட்சண் பகம்போன் மணநாறு நாசி வடிவாள் - புணருமருள்
539 வாயிலார் தொன்மயிலை வாரித் துறைப்பவளச் சேயிலார்ந் ?தோங்குகுணச் செவ்வாயா - ணேயமுற
540 முன்னங்கண் ணப்பர் முறித்தமைத்த கோற்றேனி லின்னஞ் சுவைகூரு மின்மொழியா - ளன்னம்
541 பயில்கட னாகையதி பத்தர் துறையிற் பயில்வெண் டரளமெனும் பல்லா - ளியலருளப்
542 பூதியார் முன்னம் புரிந்த தடக்கமலச் சோதியா மென்னச் சுடர்முகத்தா - ளாதியருட்
543 சம்பந்த மேவவொரு தண்டீச னார்நிறைத்த கும்பந்தா மென்றேத்து கொங்கையாள் - வம்பவிழ்தா
544 ரானாயர் முன்ன மரிந்தெடுத்துக் கொண்டவே யேநாமென் றோது மி?ணைத்தோளா - ளானாத
545 மூல ருறையநிழன் முற்றக் கொடுத்துவப்பி னாலரசின் பத்திரம்போ லல்குலாண் - மேலா
546 யிலகியசம் பந்தரோ டேற்ற வமணர் குலமெனத் தேயுமருங் குல்லா - ணலவரசாஞ்
547 சிட்ட ரமுதுசெயத் திங்களூர் நாவரசு தொட்ட கதலித் துடையினா - ளிட்ட
548 மடுத்த வதிபத்த ரங்கை யெடுத்து விடுத்தவரால் போற்கணைக்கால் வீறாண் - மடுத்தவருட்
549 கண்ணப்பர் கையிற் கலந்ததவ நாய்நாவின் வண்ணப் பொலிவின் வருபதத்தாள் - வண்ணஞ்
550 சிறக்கு மொருசித் திரமண்டப பத்தி னிறக்குங் குழலார் நெருங்கப் - பறக்கு
551 மளியினங்கள் பல்ல வளகத் தலம்பக் களிமயிலிற் சென்று கலந்து - தெளிய
552 விருக்கும் பொழுதோ ரெழில்விறலி வந்து பருக்குமுலை யால்வளைந்த பண்பின் - முருக்கிற்
553 சிவந்ததா டாழ்ந்து திருமுன்னர் நிற்ப நிவந்த கருணையொடு நேர்பார்த் - துவந்து
554 வருபாண் மகளே வடித்தகொளை வீணை யொருவாது கொண்டருட்பே றுற்றார் - திருவாய்
555 மலர்ந்ததிருப் பாட்டனைத்தும் வாய்ப்பப்பா டென்ன வலர்ந்த முகத்தி னவளு - நலந்தழையும்
556 பத்தர்யாழ்ப் போர்வையப்பாற் பாற்றி யெதிரிருந்து வைத்த நரப்பு வளந்தெரிந்து - புத்தமுத
557 வெள்ளம் படர்ந்தென்ன வேணுபுர நின்றெங்க ளுள்ளம் படர்ந்த வொருதமிழும் - பள்ளப்
558 பரவை சுமந்தமணர் பாழியிற்கல் வீழ்த்தா தரவை யடைந்த தமிழு - முரவங்
559 குரித்தவா ரூர்த்தெருவிற் கூற்றுதைத்த கஞ்சஞ் சரித்திடச் செய்த தமிழும் - பரித்தவுயிர்
560 தன்னடியே வேண்டத் தருபரமற் கோர்வழுதி தன்னடி வாங்கித் தருதமிழு - மன்னுபொது
561 வாடி யருளி னமர்தலங்கட் கொவ்வொன்றாப் பாடி யருளியவெண் பாத்தமிழு - நீடியதோர்
562 பேயேயென் றோதப் பிறங்கியு நம்பெருமான் றாயேயென் றோதத் தருதமிழு - மாயோர்பா
563 னீங்க லரிய நெடுந்தகைநீங் காதமரு மோங்கன் மிசையே றுலாத்தமிழுந் - தேங்கரும்பி
564 னுற்றோ தரிதா முறுசுவையோ பற்றறுப்பார் பற்றோவென் றோதுமிசைப் பாத்தமிழு - முற்றுமருள்
565 பூண்டுவாழ்த் தோறும் புராணன் விருப்புறப்பல் லாண்டுவாழ்த் தோது மருந்தமிழும் - வேண்டு
566 பிறவுமெடுத் தோதப் பெருமருத வாணற் குறவு நனிசிறந் தோங்கத் - துறவு
567 சிதைக்கும் விழியாள் சிறந்தமருங் காற்கூற் றுதைக்குந் திருத்தா ளுடையான் - பதைப்புற்
568 றதிரோதை யிற்பல் லனைத்துங்கொட் டுண்ணக் கதிரோன் முகத்தறையுங் கையா - னெதிராநின்
569 றெள்ளுந் திறம்படைத்த தென்னென் றொருதலையைக் கிள்ளுந் திறம்படைத்த கேழுகிரான் - றுள்ளுமொரு
570 மீனவிழி சூன்ற விரலான் றிரிபுரங்கள் போன வெனப்புரியும் புன்னகையான் - வானம்
571 வழுத்து மிடைமருத வாணன்றேர் தேமாப் பழுத்து விளங்குமவட் பம்ப - வெழுத்து
572 முலையா ளெழுந்துதிரு முன்ன ரடைந்தாண் மலையா ளெனுந்தாயை வாமத் - தலையாள்
573 பெருமான் றிருவுருவம் பெட்புற்றுக் கண்டா டிருமா னொருத்திகொலோ செய்தா - ளருமைப்
574 பெருந்தவ மென்றாள் பெருமூச் சுயிர்த்தாள் வருந்தமத வேள்விடுக்கும் வாளி - பொருந்தாளாய்
575 நேரே தொழுது நிலாவை வருத்துகவென் றாரே சுமப்பா ரறைதிரே - பாரறிய
576 வன்றுதேய்த் தாரென் றறைவா ரதைப்புதுக்க வின்றுதேய்த் தால்வருவ தெப்பழியோ - குன்று
577 குழையக் குழைத்ததிறங் கொள்ளமுலைக் குன்றுங் குழையக் குழைக்கினன்றோ கூடுங் - கழைமதவே
578 ளங்க மெரித்தீ ரவன்சிலைநா ணம்பாய வங்க மெரிப்பதனனுக் காற்றீரோ - பொங்குவளி
579 யம்பு புணர வமைத்தீர்தென் காற்றைமத னம்பு புணர வமைத்திலீ - ரம்பு
580 புணரினது வேறாகிப் போழுமோ மேனி யுணரி ன·தெவருக் கொப்பாங் - குணமிலா
581 வந்தக் குரண்டத் திறகமைத்தற் காயசடை யிந்தக் குயிலிறகை யேலாதோ - முந்தத்
582 தனிநீ ரடக்குங் சடாமுடியில் வெய்ய பனிநீ ரடக்கப் படாதோ - முனிவிடமா
583 மன்ன விருளை யடக்குந் திருக்கண்ட மின்ன விருளடக்க வெண்ணாதோ - சொன்னமைக்கு
584 வாய்திறவீர் பூம்புகார் வாழ்வணிக ரில்லத்து வாய்திறவீ ரென்னின் வருந்தேனே - மாயவனார்
585 கண்ணைச் சுமந்த கழற்காலீர் சென்னிமேற் பெண்ணைச் சுமந்ததென்ன பேதைமைகாண் - மண்ணைமுழு
586 துண்ணும்விடை யீரென் றுரையாடி நிற்கும்போ தெண்ணு முடையா ரிளநகைசெய் - தண்ணுகன
587 கத்தேரை யப்பாற் கடாவினா ரப்போது முத்தேர் நகைமாது மூர்ச்சித்தாள் - சித்தம்
588 பருவந் தழிதருங்காற் பாங்கியர்க டாங்கித் திருவந்த மாளிகையிற் சேர்த்து - மருவந்த
589 பாயற் கிடத்திப் பசுஞ்சாந் தளாய்ப்பனிநீ ரேயப் பொருத்தியிருந் தெல்லோரு - நேயத்
590 திடைமருத வாண னிடைமருத வாண னிடைமருத வாண னெனலு - மடையு
591 மரிவை யுயிர்தாங்கி யாற்றியொரு வாறு பரிவை விடுத்தமர்ந்தாள் பைம்பூட் - டெரிவைமறை
தெரிவை.
592 வாசியான் கண்டம் வதிவதைநூற் றேமணநெய் பூசிமுடித் தன்ன புரிகுழலாண் - மாசிலொளிப்
593 பாதி மதியம் படர்சடைநீத் திங்கமரு நீதி யெவனென்னு நெற்றியா - ளாதிநாள்
594 விண்ட கமருள் விடேலென் றொலிதோற்றக் கொண்ட வடுவகிர்போற் கூர்ங்கண்ணா - ளண்டமுழு
595 தீன்றவொரு பாற்கை யெடுத்தமல ரைந்துளொன்றாய்த் தோன்ற விளங்குஞ் சுடர்முகத்தா - ளான்ற
596 நெடிய கடற்புகுந்து நீள்வலைவீ சிக்கொள் கடிய சுறாத்தலைபோற் காதாண் - முடிவிற்
597 குருவடிவங் கொள்ளக் குறித்தடியர் சாத்து மருமலரே போலுஞ்செவ் வாயா - ளொருவரிய
598 தன்போல் வெறாதுமதன் றன்னாணொன் றேவெறுத்த கொன்பூ வனைய கொடிமூக்கா - ளன்பர்வரு
599 நாண்முன் குருகாவூர் நன்கமைத்த நீர்நிலையே காணென் றுரைக்குங் கபோலத்தாள் - யாணரிசை
600 மூட்டு மிருவர் முயன்றமர்தா னத்தழகு காட்டுங் குழைபோற் கழுத்தினா - ணாட்டுமொரு
601 முத்தென் றுரைக்க முயன்றுதனை யீன்றதா யொத்த தெனவுரைக்கு மொண்டோளா - ளத்தவுடம்
602 பேத்தமிளிர் பச்சை யினிதளித்த தானத்துப் பூத்தசெய்ய காந்தள் பொரூஉங்கையாள் - கோத்தபெரு
603 வெள்ளத்துத் தற்றோற்ற மேன்மிதந்த கும்பமென்றே யுள்ளத் தகும்பொ னொளிர்முலையாள் - வள்ளற்
604 றரத்தின் மரீஇய தனக்குநிழ னல்கான் மரத்தினிலை போலும் வயிற்றாள் - புரத்தின்
605 மடங்கூர் முனிவர் மடிக்கவிட்ட பாம்பின் படம்போ லகன்றநிதம் பத்தா - டடங்காமர்
606 வாழ்வளங்கூர் நீலி வனத்தி னிழல்கொடுத்துச் சூழ்கதலி யென்று சொலுந்துடையா - ளாழ்கடல்சூழ்
607 வையம் புகழ்காஞ்சி வைப்பினிழற் றுஞ்சூதச் செய்யதளிர் போற்சிவந்த சீறடியாள் - பையரவ
608 வல்குன் மடவா ரளவிலர் தற்சூழ்ந்து புல்கும் வகையெழுந்து பொம்மன்முலை - மெல்கு
609 மிடைக்கிடுக்கண் செய்ய விலங்குமணிப் பந்தர் படைத்தநிழ லூடு படர்ந்து - புடைத்த
610 விளமாம் பொதும்ப ரிடைக்கனகத் தாற்செய் வளமாருங் குன்ற மருவி - யுளமார்
611 விருப்பி னமர்ந்துவளை மின்னாருட் கொங்கைப் பருப்பதத்தோர் தோழிமுகம் பார்த்துத் - திருப்பதத்தான்
612 முன்ன மரக்கன் முடிகணெரித் தார்பச்சை யன்னங் கலப்புற் றமரிடத்தார் - சொன்ன
613 வரைகுழைத்தா ராடல் வரம்பில்லை யேனு முரைசிறக்குஞ் சில்ல வுரைப்பா - மரைமலர்க்கண்
614 விண்டு பணிந்திரப்ப வேதாவைக் காதலனாக் கொண்டு மகிழ்தல் குறித்தளித்தார் - வண்டு
615 படுமலரோன் றாழ்ந்திரப்பப் பைந்துழா யண்ண னெடுமகவாய்த் தோன்றுவர நேர்ந்தார் - வடுவின்
616 மலரொன் றெடுத்திட்ட மாரவேண் மேனி யலர்செந் தழலுக் களித்தார் - பலக
617 லெடுத்துநா டோறுமெறிந் திட்டுவந்தார்க் கின்ப மடுத்த பெருவாழ் வளித்தார் - கடுத்த
618 சிறுவிதி யென்பவன்முன் செய்புண் ணியத்தைத் தெறுதொழின்மா பாதகமாச் செய்தா - ருறுதிபெறக்
619 கண்ணியதண் டீசர்புரி கைத்தமா பாதகமா புண்ணியமே யாகப் பொருத்தினார் - திண்ணியமா
620 வென்றிக் கனக விலங்கல்குழைத் தாரொருபெ ணொன்றித் தழுவ வுரங்குழைந்தார் - நன்றா
621 மொருபா லொருவடிவ முற்றாரென் னேமற் றொருபா லொருவடிவ முற்றார் - வெருவாத
622 வெய்ய பகையாம் விடவரவு மம்புலியுஞ் செய்ய சடாடவியிற் சேரவைத்தார் - வையம்
623 பழிச்சுபெரு வாழ்வு பழிச்சற் களிப்பா ரிழிச்சுதலை யோடேற் றிரப்பார் - வழுத்துசித
624 நல்லாடை யும்புனைத னாட்டுவார் மற்றுஞ்செங் கல்லாடை யும்புனைதல் காட்டுவார் - பொல்லாத
625 மாலூரு மூன்றூர் மடிய வளங்கெடுத்தார் நாலூர் பெருகுவள நன்களித்தார் - மேலா
626 ரருத்தி செயப்பொலியு மையா றிகவா ரிருத்திய வாறா றிகப்பார் - விருத்தி
627 மணம்வீசு கைதை மலரை மலையார் மணமி லெருக்கு மலைவார் - குணமாய
628 பொன்னு மணியும் புனையார் நரம்பெலும்போ டின்னும் பலவு மெடுத்தணிவார் - முன்னமா
629 றேடப் பதங்காட்டார் தேடிப்போ யாரூரன் பாடற் றலைமேற் பதித்திடுவார் - நாடுமிவ
630 ராட லெவரா லறியப் படுமென்று நாட லுடையா ணவின்றிடுங்கா - னீடு
631 மலைவந்தா லென்ன மருதர்திருத் தேரத் தலைவந் ததுகண்டா டாவா - நிலைவந்த
632 வண்ணமடைந் தாரின் மகிழ்ந்தாள் விரைந்தெழுந்தா ளண்ணன்மணித் தேர்மு னணுகினா - ளெண்ணம்
633 பதிக்குந் திருமுகமும் பாரத்திண் டோளுங் கதிக்கு மகன்மார்புங் கண்டாள் - விதிக்க
634 முடியா வனப்பு முழுதுந் தெரிந்து கொடியா யிடைகை குவித்தா - ணெடியானு
635 நான்முகனு மின்னு நணுகருமெய்ப் பேரழகைத் தான்முகந் துண்ணத் தலைப்பட்டாண் - மான்முகந்தா
636 ளந்தப் பொழுதே யடல்வேள் கழைச்சிலைநாண் கந்தப் பகழிபல காற்றியது - முந்தத்
637 தடுமாற்றங் கொண்டா டவாமயக்கம் பூண்டா ணெடுமாற்றம் பேச நினைந்தாள் - கொடுமை
638 மடுத்தசெய லின்மருத வாணரே நும்மை யடுத்தவெமக் கென்னோ வளித்தீ - ரடுத்தநுமைக்
639 கும்பிட்ட கைம்மலர்கள் கோலவரி வண்டிழத்த னம்பிட்ட மாமோ நவிலுவீர் - நம்பிநுமைக்
640 கண்ட விழியழகு காட்டுங் கரியழியக் கொண்டன் மழைபொழிதல் கொள்கைகொலோ - தண்டலின்றிக்
641 காணும் விருப்பங் கடவ நடந்தபதம் பூணு நடையிழத்தல் பொற்பாமோ - பேணு
642 முமைப்புகழ்ந்த செவ்வா யுறுகைப்பு மேவி யமைத்தவுணா நீங்க லறமோ - வமைத்தடந்தோள்
643 செய்ய நிறநுந்தோள் சேர நினைந்ததற்குப் பையப் பசந்த படியென்னே - யையரே
644 வேய்முத்தா நும்மை விரும்பியவென் கொங்கைகட லாய்முத்தஞ் சூட லடுக்காதோ - வாய்தோ
645 ணிதிய மலையை நினைத்தவெனை யிந்தப் பொதியமலைக் கால்வருத்தப் போமோ - துதியமைநும்
646 பார்வையடைந் தேற்குப் பனிமதியம் வேறுபட்டுச் சோர்வையடை யத்தழலாய்த் தோன்றுமோ - நீர்செ
647 யருள்யா வருக்கு மருளாய் முடிய மருளா யெனக்கு வருமோ - தெருளாமற்
648 காதலித்த தன்றே கருணையீர் நும்மழகின் காத லொருத்திக்கே காணியோ - வாதலுற
649 வொன்று முரையீ ருரைத்தால் வருபழியென் னென்று பலவு மெடுத்தோதிக் - கன்று
650 கழலவிழி முத்தங் கழல மனமுஞ் சுழல விழுந்து துடித்தா - ளழலொருகை
651 யேந்தினா னொன்று மிசையானாய்த் தேர்நடத்த வேந்தினா ராகி யிகுளையரிற் - போந்தார்
652 விருப்ப வமளி மிசைக்கிடத்தி வெய்ய வுருப்பந் தவிர்த்திடுத லுன்னிப் - பொருப்பா
653 மிடைமருதின் சீரு மிடைமருத மேவ லுடையதலச் சீரு முவந்து - புடைவிரவு
654 தீர்த்தப் பெருஞ்சீருஞ் சேவுகைக்கு மாமருத ரேர்த்தபெருஞ் சீரு மெடுத்தியம்பப் - போர்த்தமயல்
655 வாரிக் கொருபுணையாய் மற்றவைவாய்ப் பச்சற்றே மூரிக் குழலாண் முகமலர்ந்தாள் - பேரிளம்பெ
பேரிளம்பெண்.
656 ணென்பா ளொருத்தி யிளம்பருவத் தாரனையென் றன்பா லழைக்க வமைந்துள்ளா - ணன்புவியோர்
657 நாடு கதிருதய நாழிகையைந் தென்னுங்காற் கூடுமிருட் டன்ன குழலினா - ணீடு
658 கதிருதய மாதல் கருதி யடங்கு முதிரு மதிபோன் முகத்தாள் - பிதி?ர்வறவெங்
659 கண்ணார்மை தீட்டுகென்று கைகளுக்கோர் வேலையிட லெண்ணா திருக்கு மிணைவிழியாள் - பண்ணார்பொன்
660 னோலையன்றி வேறுவே றுள்ளனவெ லாமணிதன் மாலை மறந்த வடிகாதாள் - சாலுமடைப்
661 பையேந் துவமென்று பண்பினுமிழ் காற்சிலர்தங் கையேந்து செய்ய கனிவாயாண் - மெய்யே
662 முடியவுத்த ராசங்க முன்னுவ தல்லாது தொடியில் விருப்பமுறாத் தோளாள் - கொடியிடைக்குச்
663 சேர வருத்தந் திருத்தியதா லுட்பெருநாண் கூர முகஞ்சாய்த்த கொங்கையா - ளாரமுலை
664 தாந்தளர்முற் சோராது தாங்குஞ் சலாகையென வாய்ந்த வுரோமமணி வல்லியா - டோய்ந்தமையக்
665 கூடுமோர் பேழை குறித்துத் திறக்கவெழுந் தாடுபாம் பின்படம்போ லல்குலா - ணீடுகண்டை
666 யொன்றேகொள் வீர ரொளிர்கால் பொருவப்பூ ணொன்றே யுவக்கு மொளிர்தாளாள் - குன்றே
667 யிணையுமுலைத் தோழியரெண் ணில்லார் நெருங்க வணையுமொரு வாவி யருகே - பிணையுங்
668 குளிர்பந்தர் சூழ்ந்து குலவ நடுவ ணொளிர்மண்ட பத்தே யுறைந்தாள் - களிகூரச்
669 செவ்வாய் திறந்தாளோர் சேடி முகம்பார்த்தா ளெவ்வாயும் வாயான்சீ ரேத்தெடுப்பா - ளொவ்வா
670 மருதவ னத்தன் மலைமகட்கு மாற்கு மொருதவ னத்த னுடையான் - கருது
671 திருத்தவ னம்பன் சிலையெடுத்தான் றேம்ப விருத்தவ னம்ப னிறைவன் - பெருத்த
672 பருப்பத முள்ளான் பணியார்க்குக் காட்டத் திருப்பத முள்ளான் சிவன்மால் - விருப்பன்
673 றுருத்தி யிடத்தான் றுணையாக மேய வொருத்தி யிடத்தா னொருவன் - விருத்தியற
674 லாலங்காட் டத்த னடல்காட்டி னான்வளங்கூ ராலங்காட் டத்த னருட்பெருமான் - சீல
675 விருப்பத் தவரான் மிகப்புகழ்வான் மேருப் பொருப்புத் தவரான் புராணன் - கருப்புவயற்
676 கச்சிப் பதியான் கனிந்துருகார் செய்பூசை யிச்சிப் பதியா னிலையென்பா - னச்சன்
677 வெருவா விடையான் விரியும் படப்பாம் பொருவா விடையா னுயர்ந்தான் - மருவாரூ
678 ரெற்றம் பலத்தா னெனக்கொண்டா னேத்துதில்லைச் சிற்றம் பலத்தான் சிவபெருமா - னுற்ற
679 விடைமருத வாணனுல கெல்லா முடையா னடைய விருப்ப மமைத்த - மிடைசீர்
680 மருதவட்ட மான்மியம்போன் மற்றொன்றுண் டென்று கருதவட்ட ஞாலத்துக் காணேன் - கருதின்பால்
681 வந்து புகுந்தபதம் வான்பதமெல் லாம்புகுது முந்துதெரி கண்ணிரண்டு மூன்றாகு - நந்திதனைக்
682 கும்பிட்ட கையிரண்டுங் கூடவொவ்வோர் கைமேவ நம்பிட்டம் வாய்க்கும்வகை நான்காகும் - பம்பிதனா
683 லித்தலத்து மான்மியமற் றெத்தலத்து மில்லைபயன் கைத்தலத்து நெல்லிக் கனிகண்டாய் - முத்தலமு
684 நாடு மிதிற்பிறந்த நம்மா தவம்பெரிதாக் கோடுமினி யென்ன குறையுடையோர் - மாடும்
685 படியெடுத்த பாதமலர் பற்றிநாம் வாழ்தற் கடியெடுத்த பேறீ தலவோ - தொடிபுனைகை
686 யாவியன்னாய் மேலுலக மாதரிப்பா ரித்தலத்து மேவி யமர்கை விரும்பாரோ - நாவிகமழ்
687 வாசத் துறைமேலை வானதிதோய் வாரீங்குப் பூசத் துறைதோய்தல் பூணாரோ - நேசமிக
688 மான்றுற்ற நெஞ்சமின்றி வாழ்சூழ்தல் காதலிப்போர் தோன்றித் தலமொருகாற் சூழாரோ - வான்றவிண்ணின்
689 முந்திருக்கை வேண்டி முயலுவா ரித்தலத்து வந்திருக்கை யோர்நாண் மதியாரோ - நந்துதமை
690 வானாடி யம்ப மதிப்பார் மருதாவென் றேநாடி யோர்கா லியம்பாரோ - மானேயென்
691 றோது மளவி லுடையான்பொற் றேர்வரலு மாதுபல ரோடு மகிழ்ந்தெழுந்தா - ளோது
692 பெருமான்முன் சென்றுமிகு பெட்பிற் பணிந்தா ளொருமான் மதித்தபுர வோவித் - திருமலர்மே
693 னான்முகன்றோற் றாத நலமார் திருமேனி யூன்முகமாங் கண்ணா லுறக்கண்டாண் - மான்முகந்தா
694 டுள்ளி மதவே டொடுத்தான் பலகணைய· துள்ளி வருந்தி யுயிர்சோர்ந்தாள் - வள்ளலெனச்
695 சொற்ற நமைத்தொழுவார் சோர வருத்துகென்றோ வுற்ற மதனுக் குயிரளித்தீர் - செற்றகுயில்
696 காதுமெனி னீர்முன் கடிந்ததுபொய் யென்பார்மற் றேது புகல்வா ரிறையவரே - யோதுவீர்
697 மோது கடல்விடத்தை முன்னடக்கி னீரதற்கம் மோதுகட லென்னை முனியுமோ - போதுமதன்
698 கைதை மலர்நீர் கடிந்தா லதற்காக வெய்தெனவந் தென்னுயிரை வீட்டுமோ - பையரவுன்
699 காதன்மதி நுஞ்சடிலக் காட்டிலிருந் தாலென்னை வேத லியற்ற விதியுண்டோ - மீதார்ந்
700 துறுமலைதீப் போற்கா லுடன்றுவீ சற்கோ சிறுமுனியை வைத்தழகு செய்தீர் - மறுவிலா
701 வாய்முத்த மென்னை யழலாய்ச் சுடுவதற்கோ வேய்முத்த மாகி விளங்கினீர் - தாயிற்
702 சிறந்தபிரா னென்றும்மைச் செப்புவார் தீயிற் சிறந்தபிரா னென்றென்னோ செப்பா - ரறந்தழுவும்
703 வேயிடத்து நீர்முளைத்து மேம்பா டியற்றினந்த வேயெழுமோ ரோசை வெதுப்புமோ - நாயகரே
704 யேறுநுமைத் தாங்குறினவ் வேற்றின் கழுத்துமணி மாறுபுரிந் தென்னை வருத்துமோ - தேறும்வகை
705 யந்தி நிறநீ ரடைந்தா லதற்காவவ் வந்திநிற மென்னை யடர்ப்பதோ - முந்தவொரு
706 வாழை யடிநீர் மருவி னதுகுறித்தவ் வாழைமுடி யென்னை வருத்துமோ - காழ்பகையின்
707 வாசநீ ரென்னை வருத்துமெனின் மற்றதற்காப் பூசநீ ராடப் புகுவதோ - மூசு
708 மயக்க மிதுதெளிய மாண்பார்கோ முத்தி நயக்குங் குருநமச்சி வாயன் - வியக்கும்
709 வரமணியென் றேயறிஞர் வாஞ்சித் திடுஞ்சுப் பிரமணிய தேசிகன்பாற் பேணித் - திரமடைவே
710 னன்னவனு நீரேயென் றான்றோ ருரைத்தக்கா லென்ன புரிவே னிறையவரே - யன்னவன்போல்
711 யோகி யெனநீ ருறைந்தீரல் லீர்சிறந்த போகி யெனவே பொலிந்துள்ளீர் - போகியெனற்
712 கென்னோ வடையாள மென்றானும் பாகத்தாண் மின்னோ வலங்கரித்த வேறொன்றோ - முன்னவரே
713 விண்ணைக் கடந்தமுடி மேலா னுமைப்போலோர் பெண்ணைச் சுமந்தமரும் பித்தரா - ரெண்ணேன்
714 வலியவந்து மேல்விழுந்து மார்பி லெழுந்து பொலியு முலைஞெமுங்கப் புல்வேன் - பொலிய
715 வொருத்தியிடப் பாக முறவைத்தீ ரற்றால் வருத்தி யதுபுரிய மாட்டேன் - றிருத்தி
716 புரிந்தன்றிப் போகிலீர் போவீரேன் மேன்மேல் விரிந்தபழி வந்து விளையுந் - தெரிந்தவரே
717 யென்று புகல்போ திடைமருத வாணரவ ணின்று கடவ நெடுமணித்தேர் - துன்று
718 நிலையுற் றதுதெரிந்து நெட்டுயிர்த்துக் கோடுஞ் சிலையுற்ற கண்ணிமனைச் சென்றா - ளுலையுற்ற
719 தீயின் வெதும்பித் திகைத்தாண் மருதரரு ளேயி னுயலாகு மென்றமர்ந்தா - ளாயுமிளம்
720 பேதை முதலாகப் பேரிளம்பெ ணீறாகக் கோதையெழு வோருங் கொடிமறுகில் - வாதை
721 மயலடைந்து தேம்பி மறுகிச் சுழலுற் றுயலடையப் போந்தா னுலா.
|
||||||||
by Swathi on 25 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|