LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியர் காட்டும் சமூகவியல்

புத்தகம் செய்வோம்

தொல்காப்பிய மரபினை அறியவும் காக்கவும் வேண்டும் மொழி நூலை நெறியாளரும் அந்நெறியில் இதனை நோக்கவும் கற்கவும் முனைந்துள்ளமையால் தொல்காப்பியர் செல்வாக்கினை உணரலாம். தொல்காப்பியம் போன்ற இலக்கண நூலை எழுதியரங்கேற்ற நம்மவர் பாடுபட வேண்டும்.

பொருளியல் வாழ்க்கை

பொருளதிகாரம் என்பது தமிழிலக்கணத்திலேயே சிறந்த பகுதி ஏன்? தமிழுக்கே அது சிறந்த பகுதி வாழ்வியலில் பல்வேறு கூறுகளையும் நன்காரய்ந்துள்ளது. அவ்வகையில் வரையறையும் அமைதியும் செய்து கொண்டவர் தமிழர் என்பதை அது காட்டுகிறது. காக்க பொருளா அடக்கத்தை என்பதற்குப் பொருளியல் வாழ்க்கை போல் காக்க எனக் கூறுமளவு சிறந்தது.

வீரமும் காதலும்

புறத்திணை என்பது போர் முறை பற்றியதாகும். காதலி அஞ்சிய யானைப் புலிகளுக்கு அஞ்சாமல் அவற்றை விரட்ட வேண்டும். காதலியினை பொருட்டு வளர்த்த காளையைத் தழுவி அடக்கவேண்டும். அவ்விளைஞனே வீரனாகி உடன் தன் காதலியைத் தழுவலாம். இளைஞர்க்குப் போர்க் கல்வி வேண்டற்பாலது.

சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடன் என்பதில் சான்றோர் வீரனும் அறிஞனுமாவான் ஏறு தழுவுதல் தொல்காப்பியர் காலக் கலித்தொகையில் இருந்திருக்கலாம் கண்ணன் வழிபாடும் இடைச்சங்க காலத்தே வந்துவிட்டதால் ஏறு தழுவுதலும் அங்கு உள்ளதாகலாம்.

போர் முறையில் வெட்சிப்போர் முதலாவதாகும். வெட்சிப் பூச்சூடி ஆவினத்தைப் பகைவர் நாட்டிலிருந்து பிடித்து வந்து தன் நாட்டிற்கு உரிமையாக்குதல் பாரதம் விராட பருவத்தில் ஒரு மாடு பிடி வருகின்றது. நாட்டில் கிடைக்கும் வீரக்கற்களில் பெரும்பாலானவை எதிரிவளைத்துச் சென்ற ஆவினத்தை மீட்கச் செய்த போரில் வீழ்ந்த வீரர்க்குரியனவேயாகலாம்.

வஞ்சி பகைவர் நாட்டின்மேல் படையெடுத்தல் உழிஞை அரணை முற்றுமையிடுதல் நொச்சி அரண்காத்தல் தும்பை (பூச்சூடி போரிடுதல், வாகை (பூ) வெற்றியடைந்ததோர் சூடுதல் வாகையில் தமிழர் வாழ்வில் வெற்றியையும் இணைத்துள்ளமை எண்ணலாம் பொருளதிகாரத்தின் உயிர்நாடி இவ்வகையே அகத்திணையியல் போர் அரசியல் மறவியல் பற்றியவாகலாம்.

உழிஞை (அரண்) போரில் ஏணியும் சீப்பும் மாற்றுவது பற்றியெல்லாம் எடுத்துரைக்கின்றது. நெருங்கிள்ளி நலங்கிள்ளி அரண் போர் பற்றி பி.ஆறாம் நூற்றாண்டுப் பாடலால் அறியலாம். இப்போர்களில் கருத்துகளை வெற்றிகண்ட அரசன் பகைவரிடம் கொண்ட பொருளையெல்லாம் பலர்க்கும் கொடை செய்து விடுதலையாகும். திருவள்ளுவரோ (இங்கு அரசனை) தென்புலத்தார் முதலிய பதின்ம கொடுத்துப் பதினோராவதாகவே தன்னையும் கூறுகிறார். மற்றது தழிஞசி ஊராண்மை யென்னலாம் பகைவன் நாட்டையும் கைப்பற்றிய பொருளையும் மீண்டும் அவரே கொடுத்து அவரை வாழவைக்கும் சமுதாயப் போக்கு விளங்கிறது.

பாடான்திணை என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவாகலாம் ஆணை விளித்துச் சொன்னதாகலாம் எவ்வழி நல்லவர் ஆடவர் என்ற புறப்பாடல் போல கொடியாம் இறையெனக் கண்­ர் பரப்பாது அரசரும் சான்றோரும் மற்ற தலை மக்கள் வாழும் உயர் வாழ்வினை வற்புறுத்துவது பாடாண் திணையாகும் புறத்துணையியலில் பயன் பாடாண் திணையாகும்.

இருக்கவேண்டிய சிறப்புகள்

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் இதனுள் பரத்தை உறவு காமக்கிழத்தி முதலோர் தொடர்பு ஆகியவற்றை அடக்கலாம். அகத்திணையில் காதலன் காதலி இருவர் வளர்ச்சியிலும் தோழி தாய் பார்ப்பான் பாங்கன் ஆகிய இத்தனை பேரும் ஈடுபட்டுள்ளனர்.

எல்லா வுயிர்க்கும் இன்பமென்பது
தானமர்ந்து வரூஉ மேவற்றாகும்

உயிர் உயிர்த்திருப்பன் இன்பத்திறகுத்தான் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிர் வரை இன்பம் (காம இன்பம்) பொதுவானது அறம்பொருள்கள் மக்கட் இமையோர் தேயத்தும் எறிமேல் வரைப்பினும் என வடவர் சுமேரியர் யவனர் முதலிய இவன் ஒப்பிட்டுக் காண்கிறார் காப்பியர்-

மனித உரிமைகள்

கற்பு வாழ்க்கையாம் குடும்ப வாழ்க்கை வலிவானது இன்ப மயமானது ஒருவித பொறைத்தன்மை விட்டுக் கொடுத்துவாழும் தன்மையும் காணப்பட்டது தலைவியின் குழந்தைகளுடன் மற்ற உரிமைப் பெண்டிரும் கொஞ்சிக் குலாவி வாழ்ந்தனர் மற்ற உரிமைப் பெண்கள் ஓரளவு பாராட்டுதலும் காணலாம். திருமணத்திற்குப்பின் வாழ்க்கை அறம் சிறந்திருந்தது.

ஒரு குழந்தையை வளர்ப்பதில் நற்றாய் செவிலி தோழி அறிவர் சான்றோர் யாவர்க்கும் பங்கு உண்டு நன்னடை நல்கும் வேந்தனும் இவருள் அடங்குவர். மக்கள் மெய் தீண்டியும் சொல்மக்களோடு துவன்றி சிறந்தது பற்றியும் வாழும் குடும்ப வாழ்வு சிறந்திருந்தது. காதலி கைத்தொட்டுச் சமைத்தது வானோர். அமிர்தம் போன்றது. காதலனை இழந்தமை நோக்கும் தபுதார நிலையும் இருந்தது.

சமூகப் பெயர்கள்

சமூகத்தில் தமிழ்ப் பழங்குடிப் பெயர்கள் மட்டுமில்லாமல் ஆதிரையன் போன்ற பார்ப்பான் பெயர்கள் உள்பட பிராமனார் தேவன், நாகன், கௌதமனார், மார்க்கண்டேயனார் முதலியவும் உள்ளன. மக்கட்பெயர்களில் இலக்கியத் தொடர்களைக் கொண்ட ஓரேர் உழவர் போன்றவற்றிற்கு முதலில் வைத்த இயற்பெயர்கள் தெரியவில்லை வினைவலர் என்று தொல்காப்பியர் கூறும் பல்வகைத் தொழில் செய்வோர் குடிப்பெயர்களும் (கொல்லன் மருத்துவன் ஆசிரியர் அறுவை குறமகன் கூலவணிகன் அடங்கியுள்ள காடல் குறமகள் இடையன் குயத்தி முதலிய பெயர்களில் திணைப் பெயர்கள் அடங்கியுள்ளும் மக்கட்பெயரும் பழங்குடி பெயர்களேயாகும் சமூகத்தில் எல்லா பிரிவனருள்ளும் திணை மக்கள் திணைக்குரிய மரபினர் அனைவருள்ளும் சுற்றுணர்ந்த புலவர்களே இருந்துள்ளனர்.

பிராமிக்கு அடிப்படை

கி.மு. 8அல்லது நூற்றாண்டில் எழுத்துப் பழக்கம் இந்தியாவில் வந்துள்ளன என்பதும் வகைக் கருத்து சுமேரியரிடமிருந்து தமிழர்க்கு வந்திருக்கலாம் என்பதும் கருத்து தமிழர் என்ற எழுத்துப்பற்றி எண்ண வருவதால் அதுவே சுமேரிய எழுத்து அது தொல்காப்பியர் காலத்து வழங்கிப் பிற்கால பிராமிக்கு அடிப்படையாகியிருக்க வேண்டுமோ என்றும் சிந்தித்த வாய்ப்புள்ளது தமக்கெனச் சிறப்புடை எழுத்து மையக் குறிப்பிடவே காப்பியர் தமிழிலக்கணத்தில் எழுத்திணை (மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி) முதலில் கொண்டிருக்கலாம் முந்தைய ஆசிரியர்கள் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடுவதால் கி.மு. 2000 வரை பட்ட தமிழர்தம் வாழ்க்கை இலக்கண இலக்கிய வளர்ச்சிகள் தாம் அவர் மனத்துட் கொண்டிருக்கக்கூடும்.

தமிழர் கோத்திரம்

சமூகத்தில் தமிழர் பொருளைத் தேடுதல் அதனைச் செலவழித்துப் பிறரும் தாமும் நுகர்தல் பற்றியும் பொருளியலில் பேசி உள்ளார்.

தொல்காப்பியரின் சமூகவியல் பார்வையில் தமிழர்க்கோர் கோத்திரம் வேண்டுமேனில் ஆத்திரம் கொள்ளாது அது தொல்காப்பிய முனிக் கோத்திரமே எனலாம் மனித வாழ்க்கையின் முழு உருவத்தையும் நூலுள்வடித்தும் வகுத்தும் வழங்கியுள்ள மையால் வடமொழிக்கும் பாணினியம் போன்றது தமிழர்க்குத் தொல்காப்பியம்.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.